• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிமலனின் நாயகி - 2

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
1. கண்டதும் காதல்?!

2. ஒரு கண நிகழ்வு

நிரஞ்சனிடம் விளையாட்டாக ஒவ்வொரு பெண்ணும் அழகி தான் என்று சொல்லி எதிரில் இருந்த ஒருத்தியைப் படபடவென வர்ணித்துவிட்ட நிமலன், வர்ணனை முடிந்த பின்னரே தான் சொன்னவைகளின் உண்மையை உணர்ந்தான்.
எதிரில் ஒரு ஷேர் ஆட்டோவில் கதவோர இருக்கையில் எதிர்ப்புறம் பார்க்க அவள் அமர்ந்திருந்தாள் ஆகையால் நிமலனின் நேர் பார்வையில் பட்டாள்.

ரேஷ்மியை மறுக்க அழகு காரணம் இல்லை, தன்னால் எல்லா பெண்களையும் ரசிக்க முடியும் என்று நிரஞ்சனுக்குக் காண்பிக்கத்தான் மாநிறத்தில் மிகமிகச் சாதாரணமாக இருந்த அந்தப் பெண்ணை அவன் தேர்ந்தெடுத்து அப்படிப் பேசினான். ஆனால் பேசிவிட்ட பின்பு தான் அவள்பால் ஈர்க்கப்பட்டான்.

அவன் கூறியது போலவே தான் அவள் இருந்தாள். இலைப்பச்சையும் கறுப்பும் கலந்தவாறு சாதாரண காட்டன் புடவை அணிந்திருந்தாள் அவள். மாநிறமானாலும் அவள் முகம் திருத்தமாய் இருந்தது. நீளமான நாசி, நடுத்தர அளவிலான உதடுகள், வளைந்த புருவங்கள், அடர்த்தியான சுருள் கூந்தல், பெரிய கண்கள், ஒல்லியான கட்டுடல் மேனி என்றிருந்தாள் அவள். குலோபல் பியூட்டி இண்டெக்ஸ் என்று இப்போதெல்லாம் பெண்ணின் அழகை அளந்து மதிப்பெண் வழங்கும் அமைப்பு வந்துவிட்டதே. முகத்தின் ஸிமிட்ரி படி நூற்றுக்கு இத்தனை என்று மார்க் போடுகிறார்களே.. அவர்களிடம் காட்டினால் நிச்சயமாக 90க்கு மேல் போட்டுவிடுவார்கள் அந்த மாநிற மங்கைக்கு. அப்படி இருந்தாள் அவள்‌.

காதோரம் எடுத்துக்கட்டிப் பின்னிய கூந்தலை முன்னால் விட்டிருந்தாள். ஷேர் ஆட்டோவின் பக்கக்கம்பியில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அரிதாரங்கள் ஏதுமில்லை அவளிடம். ஒரு கையில் ஒற்றை வளையலும், மறு கையில் வாட்சும் கட்டியிருந்தாள். கழுத்தில் இருப்பதே தெரியாதபடி செயினும் காதில் மொட்டுத்தோடும் அணிந்திருந்தாள். மொத்தத்தில் மிகமிகச் சாதாரண தோற்றமாய் அன்றாடம் நாம் பார்க்கும் பெண்களில் ஒருத்தியாய் இருந்தாள் அந்த நங்கை. 27-28 வயதிருக்கலாம் அவளுக்கு! இவை அனைத்தும் நிமலன் நிரஞ்சனிடம் வருணித்து முடித்த பின்பு சொற்ப சில நொடிகளில் கவனித்தவை!

நிமலன் சொன்னதைப் போல் அவள் சோகமாக, சோர்வாக இருந்தாள். அப்பா அம்மாவின் பாதுகாப்பில் அரவணைப்பில் மகிழ்வாய் இருக்கும் சிறுமி ஒருத்தியை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளின் அந்த சாதாரண அழகு நிமலனைக் கவர்ந்தது. ஆனால் அவளிடம் தொக்கி நின்ற சோகமும் களைப்பும் அவளின் அந்த ஏக்கப் பார்வையும் நிமலனை தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டன.

சாலையில் வேகவேக பயணத்தைச் சில நொடிகளுக்கு நிறுத்தி வைக்கும் ஸிக்னலில், நிமலனின் வேக வேக வாழ்க்கையும் அன்று அந்த நங்கையால் சில நொடிகளுக்கு நின்று போனது. தான் யாரென்பதே மறந்தாற்போல் உணர்ந்தான் அவன் ஒரு கனம்!
யார் என்ன ஏதும் தெரியாமல் கண்டதும் காதல்வயப்பட்டான்.

காதல் - ஒரு கண நிகழ்வு தானே!!

"என்ன டா.. பேசிக்கிட்டே இருந்த, சட்டுன்னு அமைதி ஆகிட்ட.."

"....."

"நிமலா..." என்று நிரஞ்சனின் குரல் கேட்டு திடுக்கிட்ட நிமலன் சுயநிலைக்கு வரவும் ஸிக்னல் பச்சையாகவும் சரியாய் இருந்தது. அந்தப்பெண் இருந்த ஷேர் ஆட்டோவும் நிமலன் இருந்த காரும் நகரத் துவங்கியது.

அந்த ஸிக்னலில் இருந்து ஷேர் ஆட்டோ நேராக பயணத்தைத் தொடர்வதை மட்டும் கவனித்துக்கொண்டான் நிமலன். அவனது கார் வலப்புறம் திரும்பியது.
கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்த தம்பி அமைதியாகிவிட்டதை கவனிக்காமல் இல்லை நிரஞ்சன். ஆயினும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. 5 நிமிட பயணத்தில் அவர்களின் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானக் கம்பெனி வாயிலுக்கு அவர்களின் மகிழுந்து வந்து சேர, இருவரும் உள்ளே தத்தம் கேபின்களுக்குள் நுழைந்தனர்.

***
நிரஞ்சன்-நிமலன்
அந்த நகரத்தின் மிகப்பெரிய வெற்றிகரமான பானுமதி ரியல் எஸ்டேட் - கட்டுமான கம்பெனியின் சொந்தக்காரர்கள். பானுமதி மறைந்த அவர்களது தாயாரின் பெயர். இந்த நிறுவனத்தைத் துவங்கி உயர்த்தியவர் அவர்களின் காலஞ்சென்ற தந்தை நாவுக்கரசு. அவர் அடிப்படையில் ஒரு சாதாரண மேஸ்திரி.

தன் கடின உழைப்பாலும் திறமையாலும் மனைவி பானிமதியின் ஆதரவாலும் சிறிய அளவில் கம்பெனி துவங்கி ஆலமரம் போல் வளர்த்தார்.

தன் மூத்த மகன் நிரஞ்சனையும் இளைய மகன் நிமலனையும் சிவில் இஞ்சினியர்கள் ஆக்கினார். நிரஞ்சனை இந்தியாவிலும் நிமலனை லண்டனிலும் படிக்க வைத்தார்.
நிரஞ்சன் நம் நாட்டில் படித்தபடியால் இங்கே பிஸினஸ் செய்வதற்குத் தேவையான நீக்கு போக்குகளை தன் தந்தையுடனேயே இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது.
நிமலனோ, லண்டனில் படித்தபடியால், அவனுக்கு கட்டுமானம் தொடர்பான ஆழ்ந்த நடைமுறை புரிதலும் கட்டுமானத்தில் புதிய மெஷினெரீஸ் ரோபாட்டிக்ஸ் பற்றிய அறிவும் உலக அளவிலான கட்டுமான டிரெண்ட் பற்றிய பயிற்சிகளும், ப்ரொஃபஷனலிசமும், இருந்தது.

நிரஞ்சன், நிமலன் இருவருமே எம்.பி.ஏ எனப்படும் வியாபார நிர்வாகத்தில் முதுகலைப் படிப்பும் முடித்தவர்கள்.

ஆக இரு மகன்களையும் சக்திவாய்ந்த காம்போவாக நாவுக்கரசு உருவாக்கிவிட்டார். அவர் போட்ட கணக்கும் வீணாகவில்லை.
நிமலன் தன் படிப்புகளையெல்லாம் முடித்துவிட்டு தாய்நாடு திரும்பிய மறு வருடமே தாயார் பானுமதி உடல் நலக் குறைவால் காலமானார்.

பானுமதியின் உடல்நலக் குறைவுக்குப் பெரிய காரணம் நிரஞ்சனின் முறிந்து போன மண வாழ்வு‌.

மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்ட இவர்களின் குடும்பத்துக்கு ஏற்றவாறு பணக்கார இடத்தில் நன்கு படித்த அழகான ஒரு பெண்ணைத்தான் பார்த்து நிரஞ்சனுக்குக் கட்டிவைத்தனர். ஆனால் மணமான ஒன்றரை ஆண்டிலேயே அந்த பெண் நிரஞ்சனைப் பிரிய முடிவெடுத்துவிட்டாள்.

நிரஞ்சனுக்கும் அவளுக்கும் பிறந்த மகளின் கஸ்டடியையும் நிரஞ்சனுக்கே விட்டுக்கொடுத்துவிட்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு அவள் வெளிநாட்டுக்குப் பறந்துவிட, தன் மகனின் வாழ்வையும் அந்த பெண் குழந்தைதையையும் நினைத்து வேதனைப்பட்டே பானுமதி அம்மையார் போய்ச் சேர்ந்துவிட்டார்.

மனைவி போன கையோடு 8ஆவது மாதத்திலேயே மாரடைப்பில் நாவுக்கரசரும் காலஞ்சென்றுவிட்டார்.

குடும்பத்தில் இரு தூண்களும் அடுத்தடுத்து விழுந்து விட்டதும் பானுமதி ரியல் எஸ்டேட் கம்பெனியும் விழுந்துவிடுமென்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.

புலிக்கு பூனைகளா பிறக்கும்???!!!

நிரஞ்சனும்-நிமலனும் கம்பெனியைக் கையிலெடுத்தனர். தாய் தந்தையைப் பறிகொடுத்த துக்கத்திலும் அவர்களின் உழப்பால் உயர்ந்த கம்பெனியையாவது காப்பாற்ற வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியோடு களமிறங்கினர்.

அப்பாவிடம் கற்ற அனுபவ அறிவை நிரஞ்சனும், வெளிநாட்டில் கற்ற கல்வி அறிவை நிமலனும் பயன்படுத்தி, இரண்டே ஆண்டுகளில் பானுமதி ரியல் எஸ்டேட் அண்ட் கன்ஸ்ரக்‌ஷன் கம்பெனியை இந்திய அளவில் பார்க்கப்படும்படியாக உயிர்த்திவிட்டனர்.

தற்போது நட்சத்திர ஹோட்டல், இரயில் நிலையம், மெடிக்கல் காலேஜ் ஆகிய 3 பெரிய புராஜெக்ட்டுகள் இவர்கள் பாக்கெட்டுக்குள் இருக்கின்றன. கம்பெனி பங்குச் சந்தையிலும் சக்கை போடு போடுகிறது.
இந்த துறையில் நிரஞ்சன் நிமலன் சகோதரர்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுவிட்டனர்.

ஆயினும் நிரஞ்சனின் வாழ்வு கேள்விக்குறியாகவே தொடர்கிறது. பணியாட்களே வீட்டைப் பார்த்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில் அப்பா நாவுக்கரசுவின் நண்பர் திருமுருகன் தன் மகள் ரேஷ்மிக்கு நிமலனைக் கேட்டு வந்தார். நிமலன் விருப்பமில்லை என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட அவரோ ஏமாற்றம் முகத்தில் தெரியும் படி வெளியேறிவிட்டார்.
அதுபற்றி நிரஞ்சன் குறைகூறிக்கொண்டிருந்த போது தான் சாலையில் பார்த்த அந்த மாநிற மங்கை அவன் வாழ்க்கையில் இப்போது குறுக்கிட்டிருக்கிறாள்!

தன் கேபினுக்குள் நுழைந்த பின்னரும் நிமலனின் இதயம் படபடப்பதை நிறுத்தவில்லை. காதல் என்ற கெமிக்கல் ரியாக்‌ஷன் அந்த சிவில் இஞ்சினியர் மூளைக்குள் முதன் முறையாக நிகழத் துவங்கியது.

எத்தனையோ பெண்களிடம் ஏற்படாத உணர்வெழுச்சி மிகமிகச் சாதாரணமாயிருந்த இவளிடம் ஏற்பட்டதைப் பற்றி நினைத்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் நிமலன். காதல் எனும் மாயலோகத்துக்குள் முதன் முதலாய் நுழைந்திருப்பவனுக்கு இதெல்லாம் ஆச்சரியமளிப்பதில் என்ன விந்தை!!??

வழக்கமாக கேபினுக்குள் நுழையும் போதே வேலை செய்யத் துவங்கிக்கொண்டே நுழையும் பழக்கமுள்ள நிமலன் அன்று பேயறைந்தவனைப் போல் போனதைப் பார்த்து அவனின் உதவியாட்கள் சஞ்சீவும் வர்ஷினியும் விசித்திரமாய்ப் பார்த்துக்கொண்டனர்.
கேபினுக்குள் நுழைந்து 5 நிமிடங்கள் ஆன பின்னரும் நிமலனிடமிருந்து அழைப்பு வராதிருக்கவே, இவர்களாகவே உள்ளே போயினர்.
சுதாரித்துக்கொண்ட நிமலன் பணியில் இறங்கினான்.

ஆனாலும் எல்லா வேலைகளுக்கிடையிலும் அந்த மாநிற மங்கையும் அவளின் அந்த பெரிய கலங்கியிருந்த கண்களும் அவன் மனத்திரையில் வந்து வந்து காட்சி கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தன. கவனச் சிதறல் ஏற்பட்டுத் தடுமாறினான் நிமலன்!

கவனத்தைச் சிதற அடிக்காத காதலா...?

3. தேடலும் முடிவும்
-வித்யாகுரு
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
கன்னியின் தேகமோ கண்களில் இருந்த சோகமோ கண்டதும் காதலா ????
கண்களில் இருந்து
காணாமல் சென்றாலும்
காட்சியாய் மனதில்
ஆட்சிப் புரிய.....
தேடுதல் தொடங்கட்டும்.... 🤩🤩🤩
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
கன்னியின் தேகமோ கண்களில் இருந்த சோகமோ கண்டதும் காதலா ????
கண்களில் இருந்து
காணாமல் சென்றாலும்
காட்சியாய் மனதில்
ஆட்சிப் புரிய.....
தேடுதல் தொடங்கட்டும்.... 🤩🤩🤩
வார்ரே வா... அருமை அருமை.. நன்றி 😍😍
 
Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
பணக்காரன் ஏழை என்பதையெல்லாம் இந்த கஷ்டங்கள் பார்ப்பதில்லை. அவனவனுக்கு தகுந்தாற் போல தன்னை தகவமைத்து கொள்கிறது.
மிகப்பெரும் பணக்காரனான நிமலனுக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது.
பார்க்காலம், அவளைத் தேடி அவள் துயர் துடைப்பானா என்று
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
458

3. தேடலும் முடிவும்! (நாளை)
-வித்யாகுரு
அக்கா யூடி சூப்பர் ❤️❤️
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
பணக்காரன் ஏழை என்பதையெல்லாம் இந்த கஷ்டங்கள் பார்ப்பதில்லை. அவனவனுக்கு தகுந்தாற் போல தன்னை தகவமைத்து கொள்கிறது.
மிகப்பெரும் பணக்காரனான நிமலனுக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கிறது.
பார்க்காலம், அவளைத் தேடி அவள் துயர் துடைப்பானா என்று
Correct than.. kashtangal universal.. thank you 💕💕
 
Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
Enakku antha pennai vida nimalanai thaan mikavu pidikkirathu..
army start panniduveno :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
131
Sis, very nice epi.
neenka underline pandra line ellaam unarnthu padikka mudiyuthu. super sis
 
Top