• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிமலனின் நாயகி - 3

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
2 ஒரு கண நிகழ்வு

3. தேடலும் முடிவும்

கவனச் சிதறலில் சிக்கித்தவித்த நிமலன், புதுவிதமாய் உணர்ந்தான். அவன் தாயின் மறைவுக்குப் பின் அவன் மனதில் பெரிதாய் ஒரு வெற்றிடம் தோன்றியிருந்தது. நிறுவனம் கண்ட வெற்றிகளின் போது கூட பெரிய சந்தோஷம் அவனுக்கு இல்லை. பின்புலத்தில் நிலையானதொரு சோகம் அவனை ஆட்கொண்டிருந்த நிலையில் அன்று ஏனோ மனம் மகிழ்ச்சியாய் இருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அவனின் உள்ளுணர்வு ஏதேதோ சொல்ல வந்தது. ஆனால் கேட்பதற்குத்தான் அவனுக்கு அவகாசமில்லை. வேலை பளு அவனை அழுத்தியது. பணிகளில் மூழ்கினான்.

அடுத்து வந்த ஒரு வாரம் முழுக்க தினம்தினம் ஒவ்வொரு முறையும் அந்த ஸிக்னலில் நின்ற போதெல்லாம் அவன் கண்கள் அன்னிச்சையாய் யாரென்றே தெரியாத அந்த மாநிற மங்கையைத் தான் தேடின. அவனுக்கே அது விந்தையாய் இருந்தது. சில முறைகள் தன் மனதுக்கும் கண்களுக்கும் அவளைத் தேடக் கூடாதென்று கட்டளையிட்டும் பார்த்தான். ஆனால் கூடவே இருந்துகொண்டு அவை அவனுக்கு துரோகமே இழைத்தன.

போக்குவரத்து ஸிக்னலில் சில நொடிகள் பார்த்த ஒரு சாதாரண பெண்ணை நினைத்து இந்த முட்டாள் மனம் எப்படி அழற்றுகிறது பார் என்று அவன் மூளை அவன் இதயத்தை எகத்தாளம் செய்தது.

முப்பது வயதில் எதிர்பாலினத்தின் மீது ஈர்க்கப்படுவது வெட்கமாய் இல்லை! நீ என்ன பதின் பருவத்திலா இருக்கிறாய்! வெளி நாட்டில் பருவ வயதில் கூட எந்த பெண் மீதும் வராத சபலம், மிக மிக சாதாரண தோற்றத்தில் இருந்த இவள் மீது எப்படி தோன்றுகிறது உனக்கு? என்றெல்லாம் அவன் பகுத்தறிவுப்பக்க மனசாட்சி கேள்வி கேட்டது.

ஆனால் மறுபுறம் அவளின் நினைவு இம்சைப்படுத்தியது. அவளை மீண்டும் பார்க்க அவா எழுந்தது. அவளின் சோகத்துக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று சிந்தித்தான். அவள் மணமானவளா, எங்கிருக்கிறாள் என்றெல்லாம் அவ்வப்போது எண்ணங்கள் தோன்றின. ஏக்கத்தில் இருந்த அவளை நினைத்து ஏங்க ஆரம்பித்தான் நிமலன்.

அனைத்துக்கும் மேலாய் அந்த பெரிய கலங்கிய விழிகள் அவன் மனத்திரையில் தோன்றித் தோன்றி அவனைப் பாடாய்ப் படுத்தின.

ஒரு வாரத்துக்குப் பிறகு கொஞ்சம் தெளிவடைந்தான் நிமலன். ஒன்று அவள் நினைப்பைத் தூற வீசுவது அல்லது அவளைத் தேடுவது ஆகிய இரண்டில் ஒரு முடிவை எடுத்துவிடுவது என்று முடிவு கட்டிக்கொண்டான்.
அவள் நினைப்பைத் துடைத்தெடுக்க முடியவில்லை அவனால். அவன் மனதை அவள் ஆக்கிரமித்துவிட்டாள் என்பதைத் தெரிந்து கொண்டான் அவன். அதனால் அவளைத் தேடுவதென்று தீர்மானித்தான்.

அன்று அந்த ஷேர் ஆட்டோ நேராகச் சென்ற சாலையில் அடுத்து வந்த 1 வாரமும் தினமும் காலையிலும் பணிக்கிடையிலும் மாலையிலும் இரவிலும் என பரவலான நேரங்களில் தேடினான். இதற்காகவே நிரஞ்சனுடன் காரில் ஒன்றாய்ப் போவதைத் தவிர்த்து தன் காரில் தனியாக வருவதும் சுற்றுவதும் என்றிருந்தான். எந்த பலனும் இல்லை. ஆனால் தன் பணியில் குறை ஏதும் வைக்கவில்லை நிமலன்.

அன்றைக்குப் பிறகு எங்கேயும் அவளை அவனால் பார்க்க முடியவில்லை. கண்மூடித்தனமான தேடலென்று அவன் மூளை அவனைத் திட்டித் தீர்த்தது.

10 நாட்கள் தேடிய பின்பு ஓய்ந்து போனான் நிமலன். மறுநாள் பணிக்குக் கிளம்பவே சோர்வாக உணர்ந்தான். கிளம்பும் முன்னால் தன் அம்மாவின் படத்துக்கு முன் நின்று புலம்பிவிட்டு பணிக்குக் கிளம்பிப் போனான்.
வழக்கமான வேகமும் உற்சாகமும் இல்லாமல் சோர்வான முகத்தோடு கம்பெனிக்குள் பிரவேசித்தான். அலைபேசியை நோண்டிக்கொண்டே மின் தூக்கியில் முதல் தளத்தை அடைந்து தன் கேபின் நோக்கி நீண்ட வராண்டாவில் நடந்து போய்க்கொண்டிருந்தான்.

ஃபோனை நோண்டியபடியே நடந்தவன், அந்த வராண்டாவில் காத்திருக்கும் பகுதியில் இருந்த சோஃபா பக்கம் எதேச்சையாகப் பார்த்தான்.

அவன் தேடி அலைந்துகொண்டிந்த அந்த மாநிறப் பெண், அங்கே அமர்ந்திருந்தாள். அவன் நடை நின்றது. மனம் ஆனந்தக் கூத்தாடியது.
வாட்டமாய் இருந்த அவன் முகம் பிரகாசமானது. தேடல் நிறைவுற்றால் ஆனந்தம் தானே!

4. புயலாகிப் போன முதல் சந்திப்பு! (நாளை)±
 
Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
Very nice episode sis..
Intha nimalanai enakku rombave pidichchirukku.
avanoda thedal oruvaliya mudinjiruchu. ippo aval edhukku vanthurukksa.?
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
458

Super ud sis😍😍 next udku waiting
 
Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
நிமலனோட பக்குவம் அருமை சிஸ்..
வாழ்க்கையோட எதார்த்தத்தை புரிஞ்சிக்கிறான். ஆனா காதல் அதற்கு அப்பாற்பட்டது போல. பார்க்கலாம் அவளைத் தேடி அலைஞ்சி ஒருவழியா பார்த்துட்டான். இனி என்ன நடக்கும்.
 
Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
131
soopper sis..
enakku oru doubt varuthu. ivankalukku aerkanave arimukam irukka.
iva eppadi inka vanthaa.
 
Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
276
Amma idaththai oru manaiviyaith thavira vera yaaralaiyum nirappa mudiyaathu unmai. adhai nimlan unarathu nallaa irukku. kadaisiyaa avan thediyalainjathu avan kaikke vanthuduchu.
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
Amma idaththai oru manaiviyaith thavira vera yaaralaiyum nirappa mudiyaathu unmai. adhai nimlan unarathu nallaa irukku. kadaisiyaa avan thediyalainjathu avan kaikke vanthuduchu.
V true.. தாரத்திடம் தாயின் பகுதிகள் நிச்சயமாகக் கிடைக்கும்!! பார்க்கலாம் இனி என்ன ஆகுமென்று... நிமலனோடு தொடர்ந்து வாருங்கள்..
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
soopper sis..
enakku oru doubt varuthu. ivankalukku aerkanave arimukam irukka.
iva eppadi inka vanthaa.
தெரியல்லையே.. பாக்கலாம்.. என்ன ஆகுதுன்னு.. 😃😃
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
நிமலனோட பக்குவம் அருமை சிஸ்..
வாழ்க்கையோட எதார்த்தத்தை புரிஞ்சிக்கிறான். ஆனா காதல் அதற்கு அப்பாற்பட்டது போல. பார்க்கலாம் அவளைத் தேடி அலைஞ்சி ஒருவழியா பார்த்துட்டான். இனி என்ன நடக்கும்.
காதல் அத்தனைக்கும் அப்பாற்பட்டது தானே.. பாக்கலாம்.. இனி என்ன ஆகுமென்று..
 
Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
Very nice episode sis..
Intha nimalanai enakku rombave pidichchirukku.
avanoda thedal oruvaliya mudinjiruchu. ippo aval edhukku vanthurukksa.?
எனக்கும் நிமலனைப் பிடிச்சிருக்கு.. தெரியல்லயே.. பாக்கலாம்..
 
Top