• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிமலனின் நாயகி - 4

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
3. தேடலும் முடிவும்

4. புயலாகிப் போன முதல் சந்திப்பு!

கிட்டத்தட்ட 15 நாட்களாகத் தன் மனதை ஆளும் அதே மங்கை, சற்றும் எதிர்பாராத விதமாகத் தன் கண் முன்னே உட்கார்ந்திருந்ததை நம்பவே முடியவில்லை நிமலனால். இதயம் வேகமெடுத்தது. திடீர் ஆர்வமிகுதியால் ஹார்மோன் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வியர்த்தது. தலை சுற்றுவது போல் இருந்தது. அட்ரீனலின் ஆறு ஆர்பரித்து ஓடியது அவனுக்குள்ளே!

அன்றும் அவள் மிக மிகச் சாதாரணமாகவே வந்திருந்தாள். வெளிர் லாவண்டர் நிறத்தில் அடர்த்தியாக வெள்ளை அல்லி மலர்கள் வரையப்பட்டிருந்த காட்டன் புடவையும் அதற்குத் தகுந்தாற்போல் வெள்ளையும் லாவண்டரும் கலந்தாற்போல் முழங்கைக்குக் கொஞ்சம் மேல் வரையிலான நீளத்தில் ரவிக்கையும் அன்று அவள் அணிந்து வந்திருந்தாள். மிகவும் ஸிம்பிளாக இருந்தாள். தன் முதுகு நீள சுருள் முடியைப் பின்னாமல் ஒரு பெரிய கிளிப் மட்டும் போட்டு விட்டிருந்தாள். கூந்தல் அத்தனை அடர்த்தியாக இருந்தது. பஃப் என்று பலூன் போல் இருந்தது. அவளின் மாநிற முகத்துக்கு அந்த கூந்தல் அழகு செய்தது. சிகரம் வைத்தாற்போல் அந்த பெரிய மை எழுதிய கண்கள் அன்றும் அவனைச் சுண்டி இழுத்தன.

சில வினாடிகளில் அவளைக் கண்களால் அளவெடுத்துவிட்டான் நிமலன். பிறகு தன்னைச் சட்டென்று சுதாரித்துக்கொண்டு அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கத் துவங்கினான்.
அவனது ஷூ சத்தம் கேட்டுத் திரும்பினாள் அவள். அவன் பார்வையைச் சந்தித்தாள். அவளைப் பார்த்த படியே கண்களை அகற்றாமல் அவள் அருகாமையில் சென்று நின்றான் நிமலன். அவனது பார்வையைச் சந்தித்த அவளாலும் அதிலிருந்து விடுபட முடியவில்லையோ என்னவோ, அவளும் அவனைப் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள்.

நிமலன் அவள் அருகில் வந்து நின்றதும், அவள் எழுந்து நின்றாள். அருகருகே இரண்டு பார்வைகளும் மோதிக்கொண்டு தெறித்தன. எக்ஸ் ரே கண்கள் மட்டும் அன்று அந்த ஆஃபீஸில் இருந்தவர்களுக்கு இருந்திருந்தால், அவர்களின் பார்வை மோதலால் தெறித்த காதல் கதிர்வீச்சுகளைப் பார்த்து மலைத்திருப்பார்கள்.
பெருக்கெடுத்த காதலுடன் அவளருகே நின்றிருந்த நிமலனுக்கு அணை கட்டும் விதமாக "இவங்க ஏதோ 2 விஷயமா உதவி கேட்டு வந்திருக்காங்க. நிரஞ்சன் சார் தான் ஊர்ல இல்லையே. அதனால உங்களைப் பாக்க காத்திருக்காங்க நிமலன்" என்று உதவியாளர் வர்ஷினியின் குரல் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பிய நிமலன், வர்ஷினியிடம் தலையை அசைத்துவிட்டு, "வாங்க" என்று சொல்லிவிட்டு தன் கேபினுக்குள் சென்றான்.

ஒரு நிமிடம் தாமதத்துக்குப் பிறகு உள்ளே அனுப்பப்பட்டாள் அவள்.

நிமலன் இருக்கையில் அமராமல் மேஜையின் முன்னால் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
சிறு புன்னகை உதிர்த்த படி தலையசைத்த அந்த மாநிற மங்கை, "வணக்கம் சார். என் பேர் சித்ரா." என்று சொன்னாள்.
"பேசுவது கிளியா!" என்பது போல் இருந்தது அவள் குரல். அதே நேரம் தீர்க்கமாகவும் இருந்தது.

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று எடுத்த எடுப்பிலேயே தடாலடியாய்க் கேட்டான் நிமலன்.

"சாரி...???!!!" என்று ஏதும் புரியாதவளாய்க் கேட்டாள் அவள்.

"உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டேன்?" என்று மீண்டும் அழுத்தந்திருத்தமாய்க் கேட்டான்.

"இல்ல.."

"யாரையாவது விரும்பறீங்களா?"

"என்ன கேள்வி இதெல்லாம்?"

"விஷயம் இருக்கு. சொல்லுங்க.."

"இல்ல.."

"உஸ்.. அப்பாடா!" என்று நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட நிமலனை விசித்திரமாய்ப் பார்த்தாள் சித்ரா. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.

"தேன்க் யூ அம்மா!" என்று மேலே பார்த்து மகிழ்ச்சியாய்ச் சொன்னான்.

பின்னர் அவளிடம், "எனக்கு உங்களை ரொம்.....ப பிடிச்சிருக்கு! ஐ ஹட் ஃபாலன் ஃபார் யூ! நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? நீங்க ஸிங்கிள்னா கண்ஸிடர் பண்ணலாமே" என்று சட்டென்று கேட்டுவிட்டான் நிமலன்.

பூகம்பம் வந்ததைப்போல் உணர்ந்தாள் சித்ரா. அவனைப் பார்த்து விழித்தாள்.
புயல் வீசுவதைப் போல் இருந்தது அவளுக்கு.

5. பார்க்கத்தான் சாதாரணம்
-வித்யாகுரு
 
Last edited:

Samithraa

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 16, 2022
Messages
94
அடங்கேப்பா..
இவன் என்ன வந்தான் பார்த்தான் லவ் சொல்லிட்டு இருக்கான்.
டேய் நிமலா நான் உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருக்கேண்.
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
அடங்கேப்பா..
இவன் என்ன வந்தான் பார்த்தான் லவ் சொல்லிட்டு இருக்கான்.
டேய் நிமலா நான் உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருக்கேண்.
நானும் தான்... நவ்லவன் நு நினைச்சு ஏமாந்துட்டேன்..
 

Kameswari

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
7
எதிர்பாராத பூகம்பம் தான் 😍 இப்படி தடாலடியாக கேட்டா பொண்ணு என்ன பண்ணுவா? ஒருவேளை உரிமையா அவளோட கஷ்டத்தை தீர்க்கணும்னு நினைக்கிறானோ??
வெயிட்டிங் அடுத்த யூடிக்கு... ❤️❤️❤️
 

Vidya Gururajan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 13, 2024
Messages
54
எதிர்பாராத பூகம்பம் தான் 😍 இப்படி தடாலடியாக கேட்டா பொண்ணு என்ன பண்ணுவா? ஒருவேளை உரிமையா அவளோட கஷ்டத்தை தீர்க்கணும்னு நினைக்கிறானோ??
வெயிட்டிங் அடுத்த யூடிக்கு... ❤️❤️❤️
அடுத்த எபி போட்டாச்சே..
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
அடடா!! இப்படியா மேன், பார்த்ததும் கவிழ்ந்து விழுவது ? பிறகு, ஆண்பிள்ளை கெத்து என்னாவது?
 
Top