• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு ஒரு பெண்ணாகி!

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
உலகம் சுற்றும் வாலிபன் என்கிற வெற்றிச் சித்திரத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் படு சூப்பர்! கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னும் பாடல்கள் தாராளம்! மெல்லிசை மன்னரின் ஈடிலா இசையில் அன்றும் இன்றும் என்றும் கேட்டு மகிழத் தக்க ரகம்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய வண்ணப்படம் இதன் வெற்றிக்குப் பாடல்களே பெரிதும் காரணமாய் விளங்கின. கவியரசு கண்ணதாசன் அவர்களும் – கவிஞர் வாலி அவர்களும் எழுதியிருக்கும் சொல்லோவியங்கள் சுகமானவை!



காதல் பாடல்களில் இரண்டு விதங்கள். ஒன்று காதலனும் காதலியும் இணைந்து பாடுபவை. மற்றொன்று காதலனோ அல்லது காதலியோ தனித்துப் பாடுபவை. இவ்வகையில் இரண்டாம் ரகத்தில் பாடல் தேவைப்பட இரண்டு கவிஞர்களும் அள்ளி வழங்கிய முத்துச் சரங்கள் – மோகனப் புன்னகைகள் – மக்கள் திலகத்திற்கு பிடித்துப் போக இதற்காகவே இரண்டு பாடல்களையும் திரையில் இடம் பெறச் செய்தார்.



அவளொரு நவரச நாடகம் – கவியரசு கண்ணதாசன்



நிலவு ஒரு பெண்ணாகி – கவிஞர் வாலி



ஒவ்வொரு முறை எழுதப்படும்போதும் கவிஞனுக்குள்ளே ஒரு கருத்துப் பிரசவம் நடைபெறுகிறது. அவனது கவியாற்றல், கற்பனை வளம், இயற்கையில் பெய்யும் மழையாய் முதலில் இதயத்தில் உருவாகி சொற்களின் வடிவில் வெளிப்படுகிற விந்தை – கவிதை.இந்த சுகானுபவம் கவிஞர்களுக்கே சொந்தம்!!







நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ





நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து
கொடுத்ததெல்லாம் இவள் தானோ

பவளமென விரல் நகமும்
பசும் தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இரு புறமும்
தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீழ்க்கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன்பதத்தில் வார்த்துவைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ……….




http://www.youtube.com/watch?v=F6u_Lsg-Wy8