• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவு 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 3

"கண்ணாக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு மா.. அதனால இனி கிடைக்குற கச்சேரில எல்லாம் பாடுறதை கல்யாணத்துக்கு அப்புறம் நிறுத்திக்கோ.." விசாலாட்சி கூற,

"பார்த்தியா! இதுக்கு தான் சொல்றேன் லதா.. வேண்டாம்.. ஸ்கூலை காப்பாத்த வேற ஏதாவது வழி கிடைக்குதான்னு பார்ப்போம்.." என்று நீலகண்டனும் கூறினார்.

"அங்கிள்! நிலம் உங்க பேர்ல இருக்கலாம்.. ஆனா பட்டா அவங்க பேர்ல இருக்கு.. இதுக்கு என்ன பண்ண முடியும் சொல்லுங்க? நாங்க உங்களை மிரட்டி எல்லாம் லதாவை பொண்ணு கேட்கல.. உங்களோட சிட்டுவேஷன் புரியுது.. எங்களோட சிட்டுவேஷன் உங்களுக்கும் புரியனும்.. நாங்க கண்ணனுக்கு அத்தை மாமா மட்டும் இல்ல.. அம்மா அப்பா ஸ்தானத்துல இருக்கோம்..அவனோட ஜாதகப்படி அவன் விரும்புற பொண்ணு ஜாதகம் அமையலைன்னா கூட பரவாயில்லை.. ஆனா உயிருக்கே ஆபத்து இருக்கும்னும் போது நாங்க என்ன பண்ணட்டும்? கண்ணனுக்கு எந்த பொன்னையும் புடிச்சிருக்கானு எங்களுக்கு தெரியாது ஆனா அவன் விரும்புற பொண்ணு யாரா இருந்தாலும் அதனால அவனுக்கு கெட்டது தான்னு உறுதியா சொல்லும் போது எங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்ற கண்ணபிரான்,

"எங்களை நம்பி உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா கொடுங்க.. மகளா பாத்துக்குறோம்!" என்றார்.

"நானும் அதை தான் சொல்றேன் அய்யா! லதாவை எங்க சொந்த பொண்ணா பார்த்துக்குவோம்.. உங்களுக்கு கவலையே வேண்டாம்!" விசாலாட்சி.

"என் பேத்திக்கு இசைல இருக்க ஆர்வம் தெரிஞ்சும் எவ்வளவு ஈசியா தூக்கி போட சொல்றிங்க? அது தான் பணத்துக்கான மதிப்பு.. எங்களுக்கு பண தேவை.. அதை வச்சு நீங்க உங்க தேவையை நிறைவேத்த பாக்குறீங்க.. தப்பு இல்ல.. ஆனா மனுஷங்க உணர்வுன்னு ஒன்னு இருக்கு.. லதாவோட லட்சியத்தை அழிச்சு தான் நான் என் இடத்தை காப்பாத்தணும்னு எனக்கு தேவை இல்ல!" என்றார் நீலகண்டன் கோபமும் பாவமுமாய்.

"ஒரு நிமிஷம் தாத்தா!" என்ற லதா,

"எனக்கு சம்மதம்.. நீங்க சொன்னதை மட்டும் நிறைவேத்துங்க .. அது போதும் எனக்கு.. நீங்க சொல்ற மாதிரி நான் இனி நடந்துக்குறேன்.."

"லதா!" என நீலகண்டன் அதிர்ச்சியாக,

"தாத்தா! ஒன்னு வேணும்னா இன்னொன்னை இழந்து தான் ஆகணும்!" என்றவள் முடிவில் தெளிவாகிவிட,

அடுத்த ஓரிரு நாட்களில் தான் கண்ணன் வந்து ஸ்வர்ணலதாவை சந்தித்து பேசியது.

இரண்டு மூன்று நிமிடங்கள் தான் இருக்கும்.. வந்தான்.. வந்தவன் திருமணத்தை நிறுத்த கேட்டான்.. காரணமாய் காதல் என்றான்.. சென்றுவிட்டான்.

அவனளவில் யோசித்தவளுக்கு பணம் அதன்பின் பெரிதாய் தெரியவில்லை.. காதலிக்கிறேன்.. எனக்கு நீ வேண்டாம் என்றவனை எப்படி திருமணம் செய்ய முடியும்?

போதாததிற்கு நீயே திருமணத்தை நிறுத்துவது போல இருக்கட்டும்.. என்னை சொல்ல வேண்டாம்.. என் அத்தை என்னை நம்புகிறார் எனும் வசனம் வேறு!

அப்பொழுது நினைத்தவள் தான் பின் தன் தாத்தாவிடமும் சென்று இந்த திருமணம் சரி வராது நிறுத்த சொல்ல போகிறேன் என்று கூற, அவரும் நிம்மதியாய் உணர்ந்தார்.

கண்ணபிரான் அடுத்த நான்கே நாட்களில் லதாவின் அத்தை மகனிடம் பேசி பணம் பரிமாற்றம் செய்து இடத்தை நீலகண்டன் பெயரில் மாற்றி கொடுத்துவிட, அதற்கு மேல் தான் சொன்னதை செய்யாவிட்டால் நம்பிக்கை துரோகம் ஆகிவிடுமே என பயந்தாள் லதா.

அனாலும் கண்ணனுக்கு பிடிக்காத திருமணம் என்ற நினைவு உறுத்த கையை கீறி, அதில் மீண்டும் சூடு வைத்து என செய்த எல்லாம் அனைவரும் பாவம் என்று சொல்லும்படி தான் இருந்ததே தவிர, அவள் நினைத்த திருமண தடங்கல் என யாரும் அதை நினைக்கவே இல்லை.

அதற்குமேல் நிறுத்தும் வழியும் அவளுக்கு தெரியவில்லை.. சொன்னபடி இடம் வேறு கை மாறி இருக்க, யார் பக்கமும் நிற்க முடியாத நிலை அவளுடையது.

நினைவுகள் நெஞ்சில் வடுவாய் மாறிவிட, புரண்டும் உறக்கம் வராமல் தவித்தவள், எழுந்து சென்று அங்கிருந்த பால்கனியில் நின்று கொண்டாள்.

ஒரு மணியை தாண்டிய நேரம் அது.. பயத்தை கொடுக்காமல் தோட்டத்தில் இருக்கும் முல்லைப் பூக்களின் வாசம் மனதிற்கு இதத்தை கொடுக்க, அது தேவையாய் இருந்தது அந்த நேரம் லதாவிற்கு.

காலை ஆறு மணிக்கு எழுந்த தீப கண்ணன் கீழே விரிக்கப்பட்ட போர்வை தலையணை ஏன அப்படியே இருக்க, அதைப் பார்த்தவன்

'இதை கூட எடுத்து வைக்க முடியாதாமா?' என நினைத்து குளியலறை பக்கம் பார்க்க, அங்கே வெளியில் பூட்டி இருந்தது.

கீழே சென்றிருப்பாளோ? என நினைத்தவன், அதை எடுத்து வைக்காமலே குளியலறை பக்கம் திரும்ப, பால்கனி கதவு திறந்திருப்பதை கண்டு அங்கே சென்றான்.

ஒற்றை சாய்வு நாற்காலியில் கால் இரண்டையும் மடக்கி சேர்த்து பிடித்தபடி அங்கே உறங்கிக் கொண்டிருந்தாள் லதா.

"இங்க என்ன பண்ற?" உறங்குவது தெரிந்தும் சத்தமாய் அவன் கேட்க, அதில் தான் பதறி விழித்தாள்.

"கார்டன்ல யாராச்சும் பார்த்து பிரச்சனை ஆகணுமா? கீழ தூங்க முடியலைன்னா சொல்ல வேண்டியதானே? நானா உன்னை அங்க தூங்க சொன்னேன்?" அவனாய் நினைத்துக் கொண்டு பேச, அதை பார்த்தவள், எதுவும் பேசாது எழுந்து உள்ளே சென்று வேலையை தொடர்ந்தாள்.

"திமிரு வேற!" சொல்லிக் கொண்டு பாத்ரூம் சென்று கதவடைத்துக் கொண்டான்.

இசை எழுப்பிய அலைபேசி அழைப்பின் சத்தத்தில் தலையணையை அதன் இடத்தில் வைத்துவிட்டு மொபைலை கையில் எடுத்தாள் லதா.

"க்கா! எப்ப வர்ற? தாத்தா கோவமா இருக்குற மாதிரி சீன் தான்.. உன்னை ரொம்ப தேடுறாரு!" என்று கிருஷ்ணன்.

"தெரியலையே கிருஷ்! இன்னும் யார்கிட்டயும் கேட்கல!" என்றவளுக்கு கஷ்டமாய் இருந்தது.

சொந்த வீட்டிற்கு செல்ல இவ்வளவு பேச வேண்டுமா என்று.

"விசாலாட்சி சித்தி இப்ப தான் போன் பண்ணினாங்க.. விருந்துக்கு கூப்பிட வர சொன்னாங்க.. அதானே முறை.. எனக்கு தான் தெரியல.. நம்ம பெருசும் கோபத்துல சொல்லல.. நல்லவேளை சித்தி கால் பண்ணினாங்க.. நான் ஒரு பத்து மணிக்கா வரவா?" என்றான்.

'எல்லாம் அவங்க இஷ்டம் தானா?' ஒரு நொடி என்றாலும் விசாலாட்சியை இப்படி தான் நினைக்க முடிந்தது லதாவிற்கு.

"க்கா!" என்று கிருஷ்ணன் மீண்டும் அழைக்க,

"கிருஷ்! நீ ஒரு எட்டு மணிக்கு வா.. நான் அதுக்குள்ள ரெடியாகிடுவேன்!" என்றாள்.

"எட்டு மணிக்கேவா?"

"ஆமா! வந்துடு.. இல்லைனா நானே ஆட்டோ புடிச்சி வந்துடுவேன்.."

"க்கா! மாமாகிட்ட கேட்டு சொல்லு க்கா!"

"உனக்கு வர முடியுமா முடியாதா டா?"

"ப்ச்! சரி வர்றேன்!" என்றவன் கண்டு கொள்ளாததை போல அனைத்தையும் கேட்டு நின்ற தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப தயாரானான்.

லதா குளித்து முடித்து கீழே வரும் பொழுது கண்ணன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,

"வா மா.. விளக்கேத்திட்டு வந்து சாப்பிடு!" என்று பாசமாய் அழைத்தார் விசாலாட்சி.

திரும்பி கணவனை லதா பார்க்க,

"கண்ணா!" என்று விசாலாட்சியும் லதா பார்த்ததை வைத்து அழைக்க, உடனே எழுந்து அவளோடு சென்றான் கண்ணன்.

"ஏங்க! லதா வீட்டுல இருந்து அழைச்சுட்டு போக வருவாங்க.. கூட நீங்களும் போய்ட்டு வாங்க..!" என கணவனிடம் கூறிய விசாலாட்சி,

"யசோவும் உங்களோட வருவா கண்ணா.. அவங்களை சாயந்திரமா அனுப்பி விடு.. நீயும் லதாவும் இன்னைக்கு அங்கேயே தங்கிட்டு நாளைக்கு வாங்க.. பெரியவர் கஷ்டப்படுவார் இல்ல.. லதாக்கும் கொஞ்சம் நல்லா இருக்கும்" என்றார்.

"அத்தை! வேலை எவ்வளவு இருக்கு.. ஈசியா வெளில போய் தங்க சொல்றிங்க!" சட்டென கூறிவிட்டான் கண்ணன்.

"கண்ணா! என்ன பேச்சு இது? அது உன் மனைவி பொறந்த வீடு.. அப்படி எல்லாம் பேச கூடாது!" என்றவர் லதாவைப் பார்க்க,

அதிர்ச்சியை உள்ளே வைத்து கணவனை பார்த்த பார்வையின் சாராம்சத்தை அவரால் உணர முடியவில்லை.

"ண்ணா! இதெல்லாம் ஓவர்.. கல்யாணம் ஆன அடுத்த நாளே வேலைக்கு போற யாரும் இன்னும் பூமியில பொறக்கல.. எனக்கு அவ்வளவு பாடம் எடுப்பிங்க அடுத்தவங்க மனசை கஷ்டப்படுத்த கூடாதுன்னு.. இப்போ உங்ககிட்ட இருந்து நான் என்ன கத்துக்கணும்?" என்று யசோதா கேட்க,

தான் பேசியது அதிகமோ என நினைத்து தற்செயலாய் வாசல்புறம் திரும்பிய கண்ணன் அப்போது தான் தன் தவறின் அளவை உணர்ந்தான் எனலாம்.

வீட்டின்னுள் நுழைந்த கிருஷ்ணனின் காதில் விசாலாட்சியின் வார்த்தைகள் மகிழ்ச்சியை கொடுத்திருக்க,

"அக்கா ரெண்டு நாள் நம்ம கூட தான் இருக்க போறாங்க!" என நினைத்து அடுத்த அடியை எடுத்து வைக்கும் முன் வார்த்தைகளால் கண்ணனைப் பற்றிய பிம்பத்தை கிருஷ்ணனினுள் உடைத்திருந்தான் கண்ணன்.

கண்ணனைத் தொடர்ந்து அனைவரின் பார்வையும் அங்கே செல்ல, பார்த்த அனைவருக்கும் அங்கே தர்ம சங்கடமான நிலை தான்.

"உள்ள வா டா.. ஏன் நின்னுட்ட?" என சுதாரித்து அழைத்த லதா எதையும் காட்டிக் கொள்ளாமல் இருக்க,

"வா ப்பா.." என்று அழைத்த விசாலாட்சிக்கு சிறு புன்னகையை தான் கொடுக்க முடிந்தது கிருஷ்ணனால்.

"உட்காரு! சாப்பிடலாம்!" என லதா அவனை உபசரிக்க,

"க்கா! வெரிஃபிக்கேஷன் போனும்.. உன்னை ட்ரோப் பண்ணிட்டு கிளம்பனும்!" என்றான் கிருஷ்ணன்.

"என்ன வெரிஃபிக்கேஷன் கிருஷ்? நீ ஃபாரின்ல ஒர்க் பண்ண போறதா இருந்துச்சே.. அதுக்காகவா?" என கண்ணபிரான் பேச்சு கொடுக்க,

"ஆமா சித்தப்பா.. பத்து மணிக்கு கிளம்பனும்.." என்று கூறியவன்,

"க்கா! இந்த டைம் நான் சாப்பிடறது இல்லையே! ப்ளீஸ்!" என்றான்.

"அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறையா வந்திருக்க கிருஷ்ணா.. சும்மா ஃபர்மாலிடினு கூட வச்சுக்கோ.. ரெண்டு இட்லி சாப்பிடேன்.." என்ற விசாலாட்சி வார்த்தையை மறுக்க முடியாமல் அவன் அமர,.

"தப்பா எடுத்துக்காத ப்பா.. கண்ணா ஏதோ நினைப்புல சொல்லி இருப்பான்.." என்ற விசாலாட்சிக்கு மீண்டும் ஒரு புன்னகையை கொடுத்து சாப்பிட்டு எழுந்து கொண்டான்.

கண்ணன் எதுவும் பேசவில்லை.. பேசி சமாதானம் கூறிடும் வார்த்தை அவனுக்கு கிடைக்கவும் இல்லை.

சகோதரி முதல் நாள் வாழ வந்த வீட்டில் அவளுக்கு கிடைக்கும் மரியாதை முக்கியம் தானே? உணர்ந்திருந்தான் கண்ணன் இப்போது.

மன்னிப்பு கேட்டேன் என்று பெயருக்கு கேட்க மனம் இல்லை.. பேச வேண்டும் என்று குறித்துக் கொண்டான் கண்ணன்.

அவனை மன்னிப்பு கேட்க வைக்காமல் மனைவியும் விடப் போவதில்லையே! தனக்கும் வலித்தது தான் என்றாலும் தன் தம்பி நிலை கண்டு வெகுவாய் மனதில் நொடிந்திருந்தாள் லதா.

கண்ணபிரான், யசோதாவோடு லதா கண்ணனும் கிளம்பி இருந்தனர் கிருஷ்ணனுடன் நீலகண்டன் வீட்டிற்கு.
 

Samithraa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 16, 2022
131
64
28
Karur
இவனுக்கு இருக்குறது வாயா இல்ல வேரெதுவுமா.?
 
  • Haha
Reactions: Rithi

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
187
43
Tirupur
இவனுக்கு இருக்குற வாய்க்கு லதா நல்லா வெச்சு செய்யப்போறா...
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
வாய் தான் பிரச்சனைக்கு காரணமே 🤣🤣