• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்!. 36

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 36

"ப்பா!" என மண்டபதிற்கு செல்லும் முன் அனன்யா தந்தையை அழைக்க,

"அனு கூப்பிட்டியா டா?" என வந்து நின்றார் அன்பரசன்.

இன்னும் ஒரு மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நிகழ இருக்க, அதற்கு தயாராகி இருந்த பெண்ணை கனிவாய் கண்டான் அன்பரசன்.

"எப்படிப்பா இருக்கேன்?" என கேட்டவள் முகமும் மனதை போலவே அத்தனை ஜொலித்தது.

அரவிந்த்துடன் திருமணம். நடக்க சாத்தியமே இல்லை என இத்தனை வருடங்களை கடத்தி நகர்ந்து வந்தவளுக்கு இப்படி அனைவரின் சம்மதமும் ஆசீர்வாதமும் கிடைத்திருக்க, மனம் நிறைந்து காத்திருந்தாலள் அரவிந்த்தின் திருமதியாக.

"உனக்கென்ன டா. ரொம்ப அம்சமா இருக்க" என சொல்லி வாஞ்சயாய் அன்பரசன் அவள் தலைவருட, தந்தையை அழைத்த சாதத்திலேயே கனகாவும் அறையின் வெளியில் இருந்து எட்டிப் பார்த்தவர், மகளை இப்படியான ஒப்பனையில் கண்டவர் கால்கள் தன்னைப் போல அறையினுள் வந்தது.

"நாங்க வெளில வெயிட் பண்றோம் மேம்!" என கிளம்பிவிட்டனர் பார்லர் பெண்கள்.

கனகா அறைக்குள் வரவுமே அனன்யாவும் பார்திருந்தவள்,

"ஆசிர்வாதம் பண்ணுங்க!" என இருவரின் காலிலும் விழுந்திருந்தாள்.

"இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இரு டா!" என்று சொல்லி தந்தை எழுப்பிவிட, அனன்யா தாயையும் கண்டாள்.

நான்கு நாட்களில் முதல் நாள் அவரோடு பேசியதோடு சரி. இப்பொழுது வரை அனன்யா பேசிக் கொள்ளவில்லை. கனகாவும் மகளிடம் பேச முயலவில்லை.

இன்றும் அப்படி இருக்க முடியவில்லை அனன்யாவிற்கு. என்ன இருந்தாலும் அன்னை ஆகிற்றே! அதற்கான மரியாதையை இவ்வளவு நாளும் கொடுத்தவள் தானே!

இந்த வீட்டின் மகளாய் இருந்து மற்றொரு வீட்டிற்கு செல்லும் பொழுதும் அப்படி கண்டு கொள்ளாமல் செல்ல முடியவில்லை.

அதற்காக அன்னை மேல் கோபம் இல்லாமலும் இல்லை. அளவுக்கதிமான கோபத்தை வந்த முதல் நாளே காட்டி இருக்க, அன்னை என்ற முறையில் இப்பொழுது ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்ளவும் தயங்கவில்லை அவள்.

மகளை புன்னகை தாங்கிய முகமாய் பார்த்த அன்பரசன்,

"அரவிந்த் உன்னை நல்லா பார்த்துப்பான். நீயும் அதே மாதிரி நடந்துக்கணும். உனக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆனா நீ தெரிஞ்சிக்கவும் நிறைய இருக்கு அனு. அரவிந்த்திற்கான மதிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் எனக்கு முக்கியம். உனக்கு புடிச்ச வாழ்க்கையை தான் வாழ போற! அந்த வாழ்க்கைல எல்லாமே இருக்கும். எல்லாத்தையும் கடந்து வர வேண்டியது இருக்கும். உன்னால கண்டிப்பா முடியும் தான். அரவிந்த் உன் கூட இருக்குற வரை உன்னால எல்லாமே முடியும் தான். ஆனா அப்பாவா உனக்கு எப்பவும் நான் இருப்பேன். உனக்கு சோர்வா இருந்தாவோ இல்ல முடியலைன்னு தோணினாலோ எந்த சூழ்நிலையிலயும் உனக்காக அப்பா இருப்பேன். உனக்கு என் மடில சாஞ்சுக்க தோணினா யோசிக்கவே செய்யாத! அப்பாகிட்ட வந்துடு. புரியுதா?" என சொல்ல, கண்கள் கலங்கியது அனன்யாவிற்கு.

"உன்னோட முடிவுகள் எப்பவும் சரியா தான் இருந்திருக்கு. இனி வாழ போற வாழ்க்கைலையும் சரியா தான் இருக்கனும் டா. சட்டுன்னு எந்த முடிவுக்கும் வர கூடாது. அன்னைக்கு அப்பாகிட்ட சொல்லாம ஊருக்கு கிளம்பிட்ட.. அந்த மாதிரியான முடிவுக்கு எப்பவும் இனி வர கூடாது. கிளம்பிட்டேன்னு கால் பண்ணியே அது சந்தோஷம் தான் ஆனா எது பண்ணினாலும் முன்னாடியே யோசிச்சு பண்ணனும் அனுமா. உன்னால முடியாதப்ப உனக்கு யார்கிட்ட ஷேர் பண்ணிக்க தோணுதோ அவங்ககிட்ட பேசு. அது அரவிந்த்தா இருந்தாலும் சரி தான். அப்பாவா இருந்தாலும் சரி தான்" என கூறி புன்னகைக்க, தந்தையை கட்டிக் கொண்டாள் அனன்யா.

மூன்று நாட்களுக்கு முன் அன்னை பேசியதற்கும் இப்பொழுது தந்தை கூறுவதற்குமான வித்தியாசத்தில் கண்கள் கலங்கி வந்தது அனன்யாவிற்கு.

கனகா பார்த்தபடி நின்றவருக்கு சிறு உறுத்தல் தான். ஆனாலும் அமைதியாய் அவர்கள் பேசுவதை கேட்டபடி தான் நின்றார்.

"கிளம்புவோமா அனு?" என கேட்கவும் கண்களை துடைத்துக் கொண்ட அனன்யா,

"ப்பா! இதெல்லாம் நீங்க எனக்கு வாங்கி தந்த நகை தானே?" என போட்டிருந்தவற்றை காட்டவும் அவர் ஆமாம் என தலையசைக்க,

"அம்மாகிட்ட நம்ம அத்தையோட நகை கொஞ்சம் இருக்கு அதை வாங்கி குடுங்க ப்பா!" என்றாள்.

கண்களை விரித்த கனகா பதட்டமாய் கணவனைக் காண, அவரும் முறைத்தபடி மனைவியிடம் திரும்பி இருந்தார்.

"இல்லைங்க. அது அப்போ! உங்க தங்கச்சி இறக்கும் போது பத்திரமா இருக்கட்டும்ன்னு...." என தயங்கி தயங்கி பேசியவர் மகளை கோபமாய் பார்க்கவும் முடியாமல் பாவமாய் நிற்க, கணவன் நின்ற தோரனையில் தானே சென்று எடுத்து வந்து நீட்டினார் மகளிடம்.

"இதை அண்ணிக்கும் மகிக்கும் குடுத்தா சந்தோஷப்படுவாங்க இல்ல ப்பா? அவங்க அம்மா நகைல!" என கேட்டு அனன்யா புன்னகைக்க,

"உன் மனசு போல செய் டா!" என்றார் அன்பரசனும்.

அனன்யா வீட்டினர் மற்றும் அரவிந்த் வீட்டினரும் என மண்டபம் வந்து சேர்ந்திருக்க, மொத்த சொந்தங்களும் அரவிந்த் அனன்யா என இரு வீட்டிற்குமான சொந்தங்களே!

மண்டபம் வந்ததும் தன்னைப் பார்க்க வந்த திகழ்மதி, மகிழினியிடம் அந்த நகைகளை ஒப்படைத்த அனன்யா,

"இந்த நகையை நீங்க வாங்கிகிட்டா அத்தையும் மாமாவும் என்னை ஆசீர்வதிக்குற சந்தோஷம் எனக்கு கிடைச்சிடும் அண்ணி! வாங்கிக்கோங்க ப்ளீஸ்!" என கேட்க,

"உன்னை சின்ன பொண்ணுன்னு நினச்சேன்! நீ என்னையே அழ வைக்குற!" என சொல்லி திகழ்மதி தன் கைகளில் வாங்கி உடனே அணிந்து கொண்டதோடு மகிழினிக்கும் கொடுக்க, செய்தி மகிழினி வழி அரவிந்த் காதுக்களுக்கும் சென்றது.

நிச்சயதார்த்தம் அத்தனை சிறப்பாய் நிகழ, அரவிந்த் அனன்யா என ஜோடியாய் மேடையில் மோதிரம் மாற்றிக் கொள்ள, அனன்யாவோடு அரவிந்த்துமே அந்த தருணத்தில் தங்கள் வசமே இல்லை.

இருவருமே தங்களுடைய தங்களுக்கான அந்த நாளை அத்தனை ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

நிச்சயதார்த்தம் சிறப்பாய் முடியும் நேரம் சொந்தங்கள் எல்லாம் சாப்பிட செல்ல, கொஞ்சம் ஓய்வாய் அமர்ந்தனர் அரவிந்த் அனன்யா இருவரும்.

"என்ன சொல்லி அத்தைகிட்ட நகையை வாங்கின?" என அரவிந்த் அனன்யாவிடம் மெதுவாய் கேட்க,

"ஏன் த்தான்?" என்றாள் தன் விரலை அலங்கரித்திருந்த மோதிரத்தை விரும்பி பார்த்தபடி,

"அத்தை முகமே சரி இல்ல. சண்டை எதுவும் போட்டியா?" என்றான்.

"இல்லையே! அப்பா மூலமா தான் வாங்கினேன்!" அவனைப் பார்த்து பளிச்சென புன்னகைத்து கூறினாள் அனன்யா.

"அனு!" என அரவிந்த் முறைக்க, கண் சிமிட்டி தலையை இடவலமாய் அசைத்தவள்,

"நாளைக்கு நமக்கு கல்யாணம் த்தான்!" என்றதில், "உஃப்ப்ப்ப்" என்று தலையை உலுக்கிக் கொண்டான்.

"நாளைக்கு கல்யாணம் தான். எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமான நாள் தான். ஆனா அத்தையை என்ன சொன்ன?" என அதிலேயே அவன் நிற்க, அனன்யா அவனைக் கண்டு இன்னுமே புன்னகைத்தாள் விழிகள் மின்ன.

"சொல்லு அனுமா!" என கெஞ்ச, பக்கென்று சிரித்தவள்,

"என்ன த்தான் வாய்ஸ் உள்ள போகுது?" என்றவள்,

"இன்னைக்கு எதுவுமே நான் பேசல!" என்றதும் அவன் நம்பாமல் பார்க்க,

"வந்த அன்னைக்கு தான் என்னையே சுத்தி சுத்தி வந்தாங்களா..." என ஆரம்பிக்க, 'இவள் தான் என்னவோ பேசியிருக்கிறாள்' என அரவிந்த்தும் அவளை கவனித்தான் சிறு கண்டிப்போடு.

"உங்க அப்பா போன்ல ஏதோ புது வீடுன்னு பேசினதை கேட்டேன் அனு! யாரு அரவிந்த் வாங்கி இருக்கானா?" என தானே முன்வந்து மகளிடம் அனன்யா சென்னையில் இருந்து வந்த தினம் பேச ஆரம்பித்திருந்தார் கனகா.

அதற்கு பதில் எல்லாம் கூறவில்லை அனன்யா. அன்னையிடம் பேசவே விருப்பம் இல்லை என்பதை போல தன் வேலையில் அவள் இருக்க,

"அவன் தான்னு முடிவாகி போச்சு. ஆனாலும் பார்த்து இருந்துக்கோ. மாமனார் மாமியார் தொல்லை இல்லனாலும் ஒண்ணுக்கு ரெண்டு பேர் நாத்தனார்னு இருக்கா. இவன்கிட்ட இருந்து தான் காசை உறிஞ்ச பார்க்கும் ரெண்டும்!" என சொல்லும் பொழுது அனன்யாவின் பொருமை எல்லாம் பறந்து தான் போனது.

"என்னம்மா பிரச்சனை உங்களுக்கு? நானும் பேச கூடாதுன்ணு பாக்குறேன். ரொம்ப பேசுறீங்க?" என கேட்க,

"என்கிட்ட பேசாம எங்க டி போக போற? நாளைக்கே அவன் எதாவது சொன்னா அம்மானு என்கிட்ட தான் நீ வரணும்" என சொல்ல,

"அப்படி கூட உன்கிட்ட நான் வர மாட்டேன் ம்மா. போதுமா! அம்மானு சொல்லவே எனக்கு பிடிக்கல. ஆனா எவ்வளவு பெரிய வேலையை பார்த்துட்டு எவ்வளவு சாதாரணமா இருக்கீங்க? பணமிருந்தா போதும்ல உங்களுக்கு?" என கேட்க,

"நான் என்ன எனக்காகவா..." என கனகா சொல்ல வரும் முன் தடுத்த அனன்யா,

"நான் உனக்கு முன்னாடி செத்து போய்ட்டா நீ தானே அந்த பணத்தை அனுபவிக்கனும்? கூடவே நிறைய பாவத்தையும்." என சொல்ல,

"என்ன டி பேசுற? விட்டா ரொம்ப பேசுற? உன் அப்பா குடுக்குற இடம்" என கனகாவும் கணவனிடம் பேச முடியாத கோபத்தில் பொசுங்கினார்.

"மனசு சுத்தமா விட்டுப் போச்சு ம்மா. அர்வி அத்தானு திகழ் அண்ணியும் வீட்டுக்கு போ. அம்மாகிட்ட பேசு. இப்படி இருக்காதனு அவ்வளவு சொன்னாங்க. ஆனா நீங்க?" என அவள் பேச,

"அப்படி நடிச்சு தான் இந்த கல்யாணம் வரை கொண்டு வந்திருக்காங்க. அவங்களை சொல்லி என்ன பண்ண? நீ தானே புத்தி கெட்டு அவன் பக்கமா போயிருக்க?" என்றார் அப்போதுமே!.

"ஹ்ம்! போதை மருந்து வித்து வாங்கின காசுக்கு என்னை ஒருத்தன்கிட்ட விக்க நினைச்சியே! அவனுக்கு என் அத்தானை நினைச்சு பாரு ம்மா. நான் எங்க இருக்கேன் உங்க நினைப்பு எந்த சக்கடையில இருக்குன்ணு தெரியும்!" என அவள் நேராய் சொல்லியே விட, பேச முடியாத கோபத்தில் மகளை முறைத்து நின்றார் கனகா.

"இப்பவும் அம்மா தானே! என்னை அவ்வளவு தூரம் வளர்த்தவங்க தானேன்னு எனக்கு தோணுது. ஆனா உங்க பொண்ணு நல்லா இருக்கணும்னு உங்களுக்கு தோணல இல்ல?" என்றவள்,

"அர்வி அத்தான் திகழ் அண்ணி மகி தான் இனி என் குடும்பம். அதுக்காக இந்த வீட்டுக்கு வர மாட்டேன்னு இல்ல. இது என் பொறந்த வீடு என் அர்வி அத்தான் வளந்த வீடு. நான் எப்ப வேணா வருவேன். ஆனா இன்னொரு வார்த்தை இவங்களை எல்லாம் என்கிட்ட தப்பா பேச நினச்சா அதுக்கப்புறம் எனக்கு அம்மாவே தேவையில்லைனு சொல்லிவேன்!" என்று சொல்லி கனகாவை திரும்பியும் பார்க்காமல் சென்றிருந்தாள்.

நடந்ததை அரவிந்த் முகம் பார்க்காமல் அவன் அணிவித்த மோதிரத்தைப் பார்த்து அனன்யா சொல்லி முடிக்க, அரவிந்த் அனன்யாவின் முகத்தை தான் பார்த்திருந்தான்.

எப்பொழுதும் போல இப்பொழுதும் அதுவே தான் அவனுக்கு தோன்றி சிறு புன்னகையை முகத்தில் கொண்டு வந்தது 'அர்வி பைத்தியமே!' என.

 
  • Love
Reactions: Vathani

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,284
510
113
Tirupur
எங்க பொண்ணு எவ்ளோ ஸ்கோர் பண்ரான்னு பாருங்க