• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு தென்றலும்! 38 எபிலாக்

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 38 எபிலாக்


"எல்லாம் எடுதாச்சு தானே அனு?" என அரவிந்த் கேட்க,

"எல்லாமே கார்ல வச்சுட்டேன் த்தான். நீங்க ஒரு டைம் செக் பண்ணிக்கோங்களேன். நான் வர்றேன்!" என்றாள் அனன்யா.

சென்னையில் இருந்து தங்களின் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் இருவரும்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருக்க, நாளை மகிழினி வசந்த்தின் ஐந்தாம் மாத விழாவிற்கு தயாராகி இருந்தனர்.

சென்னையில் அரவிந்த் இருந்த வீட்டில் தான் இப்பொழுது அனன்யா அரவிந்த் இருவரும் தங்கி இருந்து வேலைக்கும் சென்று வருகின்றனர்.

மூன்று மாதங்களில் முதல் முறை திகழ்மதியும் ஆர்யனும் வந்து அவர்களை விட்டு சென்ற பின் பத்து நாட்களிலேயே மகிழினி நல்ல செய்தி கூறி இருக்க, அடுத்த ஒரு மாதத்தில் சென்று அவளைப் பார்த்துவிட்டு தான் வந்திருந்தனர்.

அதன்பின் இப்பொழுது ஐந்தாம் மாத விழாவிற்கு என கிளம்புகின்றனர்.

"இப்ப கிளம்பினா நாம போக விடிஞ்சிடும் அனு. நம்ம வீட்டுக்கே போய்டலாம். அங்க இருந்து மகி வீட்டுக்கு போய்டலாம்!" என அரவிந்த் சொல்ல,

"ஆமா த்தான். அண்ணிகிட்ட நான் தான் அஞ்சு வகை சாதம் செய்ய போறேன்னு சொல்லி இருக்கேன். அதை எல்லாம் செய்யுணுமே!" என அனன்யா சொல்ல,

"எது நீயா?" என்றான் அரவிந்த்.

"த்தான்" என முறைத்தவள்,

"சின்ன சின்ன ஹெல்ப் பண்ணுங்க. நான் முடிச்சிடுவேன்!" என்றாள்.

"அது சரி!" என்றவன் சொன்னதை போலவே அவளுக்கு உதவினான். இல்லை அனன்யா தான் அரவிந்த்திற்கு உதவிக் கொண்டு இருந்தாள் சமைக்க.

"தேவையா டி எனக்கு? அக்காவே அழகா முடிச்சிருப்பாங்க. நீ இருக்கியே!" என்றாலும் சமையல் என்றால் அரவிந்த் சமையல் தான் பெரும்பாலும் என்றானது இவர்கள் இருவரிடத்தில்.

ஆர்யன் அழைக்க, "எல்லாத்தையும் பேக் பண்ணு. கிளம்பிடலாம்!" என சொல்லி ஆர்யன் அழைப்பை ஏற்றான் அரவிந்த்.

"டேய்! என்னவும் ஆர்டர் பண்ணியா?" என கேட்க,

"அய்யோ ஆமா மாமா! உங்க போன் நம்பர் தான் குடுத்தேன். மறந்தே போச்சு!" என அரவிந்த் சொல்ல,

"இங்க நம்ம வீட்டுக்கு கொண்டு வரவானு கேட்குறாங்க அர்வி!" என்றான் ஆர்யன்.

"எப்படியும் அங்க இருந்து அகைன் டிரான்ஸ்போர்ட் பாக்கணுமே மாமா. மகி வீட்டு அட்ரஸ் குடுத்துடுங்க!" என சொல்ல,

"ம்ம்ம் எங்ககிட்ட கேட்க கூடாதுன்னு உன்கிட்ட கேட்டாளா மகி? நான் பார்த்துக்குறேன்!" என்று சொல்லி ஆர்யன் வைக்க, சிரித்தான் அரவிந்த்.

"என்ன த்தான்?" என்றாள் அனன்யா அனைத்தையும் எடுத்து வைத்து.

"மகி ஊஞ்சல் கேட்டா இல்ல? அதை ஆர்யா மாமா வீட்டுக்கு கொண்டு போய்ட்டாங்க போல" என்று சொல்லியபடி அனன்யாவுடன் கிளம்பி இருந்தான் அரவிந்த்.

அனன்யா அரவிந்த் வரும் நேரத்திற்கு முன்னே திகழ்மதி ஆர்யன் வந்து சேர்ந்திருக்க, அன்பரசன் கனகாவுமே அங்கே தான் நின்றனர் இவர்களுக்கு முன்பு.

"அனு!" என திகழ்மதி அனன்யாவை தன்னோடு சேர்த்துக் கொள்ள,

"எப்படி இருக்கீங்க அண்ணி?" என பேசியபடி உள்ளே சென்றனர்.

"அப்பா!" என அன்பரசனைக் கண்டதும் அவர் தோள் சாய்ந்த அனன்யா,

"வாங்க ம்மா!" என கனகாவை கேட்டதோடு திகழ்மதியுடன் சேர்ந்து வேலைகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டாள் அனன்யா.

என்னவென்றால் என்ன எனும் அளவுக்கு தான் கனகாவுடன் ஆன பேச்சு என்றானது அனன்யாவிற்கு. அதில் வருத்தமும் இல்லை. கொஞ்சமும் இப்பொழுது வரை கனகா திருந்தவில்லை எனும் போது அதற்குமேல் அவரிடம் பேசி பயனில்லை என ஒதுங்கியே இருந்தாள்.

மகிழினியை வசந்த்துடன் அமர வைத்து அக்ஷயாவையும் அவர்களிடம் கொடுத்து சந்தனம் குங்குமத்தை கன்னம் நெற்றி கைகள் என மகிழினிக்கு வைத்து வளையல் அணிவித்து சாதமும் முதலில் ஊட்டிவிட என அனன்யாவை தான் முன்னிறுத்தி இருந்தாள் திகழ்மதி.

அடுத்தடுத்து திகழ்மதியில் ஆரம்பித்து ஒவ்வொருவராய் மகிழினிக்கு செய்து முடிக்க,

"அனு! இப்படி வா!" என அழைத்த மகிழினி, அனன்யா என்ன என உணரும் முன்பே அவளை அதே இடத்தில் அமர்த்தி கன்னங்கள் குளிர சந்தனமும் குங்குமமும் வைத்து வளையலையும் அணிவித்து விட்டிருக்க, கண்கள் விரிய தோள்களை குறுக்கிக் கொண்டு அத்தனை சந்தோஷமாய் அரவிந்த்தைக் கண்டாள் அனன்யா.

கண் சிமிட்டிப் புன்னகைத்த அரவிந்த்திற்க்குமே அனன்யாவின் இந்த அழகிய தோற்றமும் பார்வையும் என உள்ளுக்குள் என்னென்னவோ ஆகி இருந்தான்

"அனு பாப்பா! சீக்கிரமே நல்ல செய்தியா சொல்லு!" என வசந்த்தின் தாயார் சொல்ல, அனன்யா கண்கள் முழுதும் அரவிந்த்திடம் தான். அதில் அரவிந்த் தான் கள்ளப் புன்னகை கொடுத்து இன்னும் அவளை களவாடிக் கொண்டான்.

முற்றும்.