நிலவு 1
"ம்மா! என்ன விளையாடுறியா? கைய கட்டி வாயிலயே நாலு போடுவேன்!" மிகத் தீவிரமாய் ஹரிஷ் அன்னை கௌரியிடம் சொல்ல,
"டேய்! இது விளையாடுற நேரம் இல்ல. பாவம் டா. என்ன இருந்தாலும் என் அண்ணனை அப்படி பாக்க முடியல!" கௌரி ஹரிஷின் கன்னம் பிடித்து கெஞ்சினார்.
"அப்டினா பாக்காத! வா வீட்டுக்கு போவோம். உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் ஸ்டேஷன் போறேன். இருக்க வேலைய எல்லாம் விட்டுட்டு தாய் கூப்பிட்டியேனு ஓடியாந்தா எனக்கே விபூதி அடிக்க பாக்குறியே! நல்ல அம்மா. அவர்ட்ட என்னவாவது சொல்லிட்டு வா! போலாம்!" என்றவன் அன்னை கைப் பிடித்து இழுக்க,
"ஹரி ப்ளீஸ் டா. பாவம் அந்த பொண்ணு. நீ கொஞ்சம் மனசு வை டா." மீண்டும் கெஞ்ச,
"ம்மா லூசா நீ? பாவப்பட்டா காசு குடு இல்ல ஊருக்கு பஸ் ஏத்தி விடு. தேவை இல்லாம என்னை கோர்த்து விடாத. இவ்வளவு நாளும் என் அண்ணே அவனே கூப்பிட்டாலும் அந்த ஊர் பக்கம் போக மாட்டேன் அவன் வீட்டு வாசல மிதிக்க மாட்டேன்னு வசனம் பேசிட்டு.. இப்ப மட்டும் அண்ணே பாசம் பொங்குதோ? அதுவும் அந்த ஆளு மீசை இருக்கே... ஷப்பாஆஆ! அவரே இப்படினா பொண்ணு அருக்காணியா தான் இருக்கும்." என்றான் முடிவாய் முடியாது என்று.
"ஹரி கடைசியா கேட்குறேன். நாலு வருஷமா பொண்ணு தேடுறேன். பாழா போன போலீஸ்னு ஒருத்தனும் பொண்ணு தர மாட்டுறான். என் அண்ணே பொண்ணு விதியாலனாலும் வேற வழி இல்லாமனாலும் இப்ப நமக்கு இது ஒரு நல்ல சான்ஸ்." என்ற அன்னையை தீயாய் மகன் முறைக்க,
"டேய்! என் அண்ணே மாதிரி இல்ல டா அவர் பொண்ணு. இப்ப தான் பாத்தேன் சூப்பரா இருக்கா. படிச்சிருந்தாலும் படிக்கலைனாலும் பரவால்ல. நிஜமா இப்படி பொண்ணு கிடைக்காது! உனக்கு வேற வயசு முப்பது தொட போகுது."
"ம்மோவ்!" என்று தன் தலையில் பலமாய் அடித்துக் கொண்டவன்,
"என் சாவுக்கு நீ தான் காரணம்னு எழுதி வச்சுட்டு போய்டுவேன். பொண்ணே கிடைக்காம, இப்ப கிடைச்சத கட்டிக்க சொல்றியே. எனக்கு இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? என்றான் இடுப்பில் ஒரு கை வைத்து மற்றொரு கையால் முகத்தை மூடி.
"இத்தனை வயசுலயும் கல்யாணம் ஆகம இருக்கியே அதுக்கு தான் முதல்ல வெட்கப்படணும் நீ!" கௌரியும் விடாமல் பேசினார். அவனை சம்மதிக்க வைத்தே தீர வேண்டும் என முடிவெடுத்துவிட்டார் தன் அண்ணனை நேரில் பார்த்த பின்பு.
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பின் இன்று தான் தன் அண்ணனை நேரில் கண்டது அதுவும் கலங்கி தவித்த நிலையில்.
கௌரி பாலகிருஷ்ணன் இருவரும் காதல் திருமணம் செய்து வீட்டை எதிர்த்து கௌரியின் சொந்த ஊரான மதுரையை சேர்ந்த உசிலம்பட்டியில் இருந்து சென்னை வந்து இத்தனை வருடங்களில் கணவன் விபத்தில் இறந்து மகனை தனியாய் ஆளாக்கி விட்ட போதிலும் சொந்த ஊருக்கு செல்ல நினைத்ததே இல்லை.
கௌரி உடன் பிறந்த அண்ணன் குருநாராயணன் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணனை நேருக்கு நேராய் கண்டபடி பேசி இருக்க, இனி அண்ணனை பார்க்கவே கூடாது எந்த நிலையிலும் என வைராக்கியமாய் இருந்து வந்தவர் அதே அண்ணனை கலங்கி சோர்ந்த முகத்தில் பார்த்ததும் பதறி தான் போனார்.
மகன் ஹரிஷிடமும் அடிக்கடி பேசியதுண்டு அண்ணனைப் பற்றி. விளையாட்டாய் மட்டும் அதை நிறுத்திக் கொள்வான் அவனும்.
இப்பொழுது மகள் திருமணத்துக்காக சென்னை வந்த குருநாராயணன் மண்டபத்தில் பரிதவித்து நின்றிருக்க, சொந்தத்தில் அத்தை ஒருவர் அதை அலைபேசி மூலம் கௌரிக்கு தகவல் கொடுக்க, உடனே கிளம்பி மண்டபத்திற்க்கு வந்துவிட்டார் கௌரி.
உசிலம்பட்டியில் பெரும் செல்வந்தர் குருநாராயணன். மதுரை முழுக்க அவரை அறியாதார் யாரும் இல்லை.
தன் ஒரே மகளுக்கு தேடி ஓடி மாப்பிள்ளை பார்த்து சென்னையில் பணிபுரியும் ஒருவனுக்கு பேசி முடித்து, சென்னையில் தான் திருமணம் என படாடோபமாய் செலவு செய்து அனைவரையும் அழைத்து வந்திருக்க, இங்கே பார்த்து வைக்கப்பட்ட மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் இருந்து வருகிற செய்தி அறிந்து அதிர்ந்து போனார்.
அதுவும் முஹூர்த்தத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் இதை அந்த வீட்டினர் குருநாராயணின் காதிற்கு கொண்டு வர, கொதித்து எழுந்து சட்டையை பிடித்துவிட்டார் மாப்பிளையானவனின் தந்தையை.
பல பேச்சுக்கள், சச்சரவு, சண்டை,விவாதம் என அனைத்தும் நடந்து முடிந்து தவித்து மகளருகே வந்து அமர்ந்துவிட்டார் மிதமாய் ஆரம்பமான இதய வலியோடு.
குருநாராயணின் மனைவி மேகலாவும் அழுது புலம்பி அமர்ந்திருக்க, இந்த நேரத்தில் தான் செய்தி கௌரியை எட்டி இருந்தது.
"மேல படிக்க போறேன்னு சொன்னா. பொம்பள புள்ளைக்கு இதுவே அதிகம்னு சொல்லி எங்க கொண்டு வந்து அவளை விட்ருக்கீங்க!" என்று மேகலா அழ,
"வா ஊருக்கு போவோம்!" என்றார் குரலே வெளிவராமல் குருநாராயணன்.
மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சத்தம் கேட்க பேசும் கணவன் குரல் இப்படி மெலிந்து வர, இன்னும் தாங்க முடியாமல் அழுதார் மேகலா.
"சொந்தங்கள் எல்லாம் ஆளாளுக்கு பேசியபடி அங்கே நின்று கொண்டிருக்க, அங்கே வந்து சேர்ந்த கௌரி, "அண்ணே!" என்று பார்த்ததும் கண்ணீர் வடிய குருநாராயணின் அருகே வர, தங்கையை பார்த்து அதிர்ந்தாலும் பதில் கோபமாகவோ வேகமாகவோ பேசும் நிலையில் இல்லாமல் குனிந்து கொண்டார்.
குருநாராயணன் மேகலா திருமணம் முடிந்த புதிதில் தான் கௌரியும் வீட்டை எதிர்த்து பாலகிருஷ்ணனுடன் வீட்டை விட்டு வந்திருந்தது.
நேராய் மேகலாவிடம் சென்று பேசி நடந்ததை அறிந்து கொண்ட கௌரி வருந்தி அழ, கௌரிக்கு தகவல் கூறிய அத்தை தான் மேகலாவிடம் கூறியது கௌரிக்கு திருமண வயதில் மகன் இருப்பதாய்.
"அண்ணே சரினு சொல்வாரா அண்ணி?" என்று கௌரி கேட்டதே அவர் விருப்பம் புரிய,
மேகலா தன் கணவனிடம் சென்று கேட்கவும், "உனக்கு அறிவு இருக்கா இல்லையா? இப்ப தான் பட்டு உக்காந்திருக்கோம். அவ பையன் தான்னாலும் அவன் எப்படிபட்டவனோ?" என்று குருநாராயணன் சொல்லும் போதே, கௌரியையும் அவர் மகன் ஹரிஷையும் அறிந்த அந்த சொந்தகார அத்தையானவர் அவனைப் பற்றியும் எடுத்து கூற,
"நம்ம பொண்ணுகிட்ட இனி ஊருக்கு போய் கல்யாணத்துக்குன்னு பேசினா அவ சம்மதிப்பாளா? மேல படிக்கட்டும்னு நாம விட்டாலும் ஊர்க்காரங்க வாய் சும்மா இருக்குமா?" என பேசி பேசியே மேகலா கணவனை கரைத்துவிட, இறுதியில் குருநாராயணனே தங்கையிடம் கேட்டுவிட்டார்.
அடுத்த நொடி யோசிக்காமல் மகனுக்கு அழைத்து மண்டபம் பெயரை சொல்லி வர சொல்லிட, வேலையில் இருந்தவனும் காக்கி உடையில் அப்படியே கிளம்பி வந்திருக்க, அவனைப் பார்த்ததும் பளிச்சென மாறியது மேகலா கண்கள்.
குருநாராயணனுக்கும் பிடித்தம் அதிகமானது அந்த நொடி என்றாலும் அந்த நிலையில் முகத்தை இறுக்கமாய் வைத்தே அவர் நிற்க, அவர்களை அறிமுகப்படுத்தி தனியே அழைத்து வந்து மகனிடம் பேச ஆரம்பித்தார் கௌரி.
எத்தனை வருட கோபம் என்றாலும் ரத்த பந்தம் அவ்வளவு எளிதில் விட்டு போகாதே! அப்படி தான் அண்ணனுக்காக மகனிடம் பேசிக் கொண்டிருந்தார் கௌரி.
இன்னும் எதுவும் தெரிந்திருக்கவில்லை அண்ணன் பெண்ணைப் பற்றி. நேரில் சில நிமிடங்களுக்கு முன் பார்த்த பின் திருப்தி தான் கௌரிக்கு.
"இங்க பாரு ஹரி. லவ்வு கிவ்வுன்னு உன்னை தேடி எவளும் வர போறதில்ல. நீயும் வெட்டி சீன் போட தான் சரிபட்டு வருவ. சொன்னா கேளு." என்றவர்,
"இந்தா இதை மாத்திட்டு வா!" என புதுதுணியைக் கொடுக்க,
"உசிலம்பட்டி!" என பல்லைக் கடித்தவன்,
"ம்மா! ப்ளீஸ் என்னை இப்படி நிக்க வைக்காத. நான் ரொம்ப சீரியஸா சொல்றேன். எனக்கு இது செட்டாகாது. அந்த ஊர்ல இருந்து வந்து... எப்படி சொல்ல?" என்று தலை கோதியவன்,
"கல்யாணம் ம்மா. இப்படி சட்டுனு முன்னாடி நிறுத்தி தாலி கட்டுனு சொன்னா எப்படி கட்ட? உன் அண்ணே அருக்காணிய தள்ளி விட்டா போதும் போலீஸ் மாப்பிள்ளைனு உடனே தலையாட்டி இருக்கலாம். உனக்கு எங்க போச்சு புத்தி?" என்றான்.
"என்ன கௌரி என்ன சொல்றாங்க?" என மேகலா வர,
"ஆஹ் அண்ணி! இதோ ட்ரெஸ் மாத்திட்டு வருவான். நீங்க அவளை..." என்றவர் நினைவு வந்தவராய்,
"ஆமா அவ பேர் என்ன?" என்று கேட்க,
"வெண்மதி!" என்று சிரித்தார் மேகலா.
"நீங்க அவ தயாரானு பாருங்க. நான் இவனை கூட்டிட்டு வர்றேன்!" என்று சொல்லி அனுப்ப பார்க்க,
பெயரைக் கேட்டதுமே, "ஓஹ் நோ!" என முணுமுணுத்து விழி விரித்தவன், அடுத்து நேரம் கடத்தாமல்,
"ம்மா நான் பேசணும்!" என்றான் மேகலா இருக்கும் பொழுதே. அன்னையின் தீவிரம் மட்டுமல்லாது இங்கே அனைத்தும் அவனுக்கு எதிர் என புரிந்து கொண்டான் ஹரிஷ்.
பிடிக்கும் பிடிக்காது வேண்டும் வேண்டாம் என்பதை தாண்டி இப்படி சட்டென்று நிமிடத்தில் தன் திருமணம் என்பதில் தான் அவன் அதிர்ந்தது.
மேகலாவுமே விழித்தார். ஊர் வழக்கப்படி இப்படி திருமணத்திற்கு முன் என பேச வைத்து பழக்கமில்லையே. அது ஒருவகையில் நல்லது தான் என்பதற்கு சாட்சி தான் நின்றிருந்த அந்த திருமணம்.
பேசி அவள் மனதில் ஆசையை வளர்த்திருந்தால்?
இப்பொழுதும் என்ன கூற என விழிக்க, ஓரளவு தெரியுமே கௌரிக்கும் தன் ஊரைப் பற்றி.
இப்பொழுது மாறி இருக்குமோ என்ற நினைவுக்கு மாறாய் தன் அண்ணி விழித்ததே புரிய,
"நீங்க போங்க அண்ணி.. நாங்க வர்றோம்!" என்ற கௌரி,
"இப்ப என்ன டா? கிராமத்துல வளந்த பொண்ணு அவ. இப்ப நீயும் வேண்டாம்னு சொல்லி ஆத்துலயோ கிணத்துலயோ விழுந்து சாகனும். அதான? போ! போய் எவனையாவது புடிச்சு வச்சு முட்டிக்கு கீழ அடி. எனக்கென்ன? என் அண்ணே...!" என்றவர் இரண்டு சொட்டு கண்ணீர் விட,
"எமோஷனல் பிளாக்மயில்!" என்று கூறினாலும், கிராமம் என்ற வார்த்தையோடு அவர் சொன்னது போல புரியாமல் அந்த பெண் எதுவும் செய்துகொண்டால் என்ற எண்ணமும் உறுத்த அமைதியாய் சிந்திக்க, அதை பிடித்துக் கொண்டார் கௌரி.
"ஊர்ல எல்லாம் கல்யாணத்துல தான் பொண்ணு மாப்பிள்ளை பாத்துக்குவாங்க. இப்படி நேர்ல போன்ல எல்லாம் பேச விடமாட்டாங்க. அதான் அண்ணி முழிச்சுட்டு போறாங்க!" என கண்ணீரை துடைக்க,
"ம்மா!" என்றான் திடீரென.
"என்ன டா?" கௌரி கேட்க,
"அப்படி கட்டுக்கோப்பான ஊர்ல இருந்தே அப்பா கூட லவ்ஸ் விட்டு ஊர விட்டு வந்துருக்கியே எவ்ளோ பெரிய கேடியா இருந்திருப்ப நீ?" என்றான் அதையே சிந்தித்தும்.
"இதுவா டா முக்கியம்? இப்ப என்ன பண்ண? அந்த பொண்ணு மட்டும் இப்ப கல்யாணம் பண்ணாம ஊருக்கு போச்சு நிச்சயமா குளமோ ஆறோ...."
"ம்மா ம்மா! அவங்க பன்றாங்களோ இல்லையோ. நீ நல்லா பண்ற. போ வர்றேன்!" என்றான்.
"வந்துடுவ தான?"
"இங்க என்ன பின்னாடி வழியா இருக்கு? ஓடிற மாட்டேன். ஆனா பாரு. என் ஃபியூச்சர் என்ன ஆனாலும் அது உன்னால தான்!" என்றான் நெகடிவாய் மட்டும் நினைத்து.
குருநாராயணன் ஹரிஷின் கழுத்தில் மாலையை இட, முகத்தில் புன்னகையே இல்லாமல் அதை வாங்கிக் கொண்டவனை கேள்வியாய் பார்த்தபடி மாலையை அணிவித்துவிட்டார் அவர்.
அருகில் பெண் வந்து அமர்வது தெரிந்தாலும் அந்த பக்கமாய் திரும்பாமல் ஹரிஷ் இருக்க,
"நீயா?" என்ற அதிர்ந்த கேள்வி அருகில் கேட்கவும் ஹரிஷ் திரும்பிப் பார்த்தவன் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியின் மையத்தில் இருந்த சுருக்கங்கள் குறைந்து வர, முடிவில் ஒரு வசீகரிக்கும் புன்னகை.
"நிலாவே தான்!" என்று அவன் உதடுகள் முணுமுணுக்க, அவளின் நீயா என்ற கேள்வியும் காற்றோடு மறைந்து போனது அவனுக்கு.
வெண்மதியின் அதிர்ச்சி விலகும் சமயம் ஹரியின் கரத்தினால் அவள் கழுத்தினில் மூன்று முடிச்சுக்கள் விழுந்திருக்க, செயலற்று அமர்ந்திருந்தாள்.
**************************************
"மதி! நாங்க கிளம்புறோம் டா." என மகளின் கன்னம் தாங்கி மேகலா கூற,
"ம்ம்!" என்றவள் முகத்தில் அத்தனை கோபம்.
"உன் கோபம் புரியுது மதி. ஆனா எல்லாம் உன் நல்லதுக்கு தான்னு சீக்கிரமே உனக்கு புரியும். நம்ம ஊரை தான் உனக்கு நல்லா தெரியுமே? ஒன்னை நாலுன்னு பேசுறவங்க. அப்பாவோட பேர் மரியாதைன்னு எல்லாம் போயிருக்கும். அந்த தம்பியால தான் இப்ப பிரச்சனை இல்லாம முடிஞ்சிருக்கு. இதுக்கே கல்யாணத்துக்கு வராதவங்க எல்லாம் ஊர்ல என்னென்ன கதையை கிளப்பி விட்ருக்காங்களோ?" என்று மேகலா சொல்ல,
"அம்மா ப்ளீஸ்! போதும். நல்லா புரிஞ்சுகிட்டேன். பொண்ணோட மனசு, ஆசை இதெல்லாம் விட ஊர் பேச்சு முக்கியம்னு கல்யாணம் செஞ்சு வச்ச அப்பா, அது சரினு ஜால்ரா தட்டுற அம்மா. தயவு செஞ்சு கிளம்புங்க. இங்க என்னை கல்யாணம் பண்ணினவன் என்னை கொடுமையே படுத்தினாலும் அந்த வீட்டு பக்கம் வந்துட மாட்டேன். போதுமா?" என்றவள் மனம் முழுதும் அத்தனை பாரம்.
"என்ன டா இப்படி பேசுற? எனக்கு நீ முக்கியம் இல்லையா? அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்கார் தெரியும் தான?" என்ற மேகலாவிற்கு மகளின் வார்த்தைகளில் கண்ணீர் வந்துவிட்டது.
"ப்ச்! சாரி ம்மா. அதுக்காக நீங்க செஞ்சது சரினு சொல்ல மாட்டேன். அதுவும் அவன்..." என்று ஹரிஷை நினைத்து பல்லைக் கடித்தாள் வெண்மதி.
"அப்பா விசாரிக்காம எதுவும் பண்ணல மதி. தங்கச்சி பையன்னு எல்லாம் உங்க அப்பா சம்மதிக்கல. நம்ம சொந்தக்காரங்க நிறைய பேர் மாப்பிள்ளையை தெரிஞ்சவங்க தான். அதோட ரொம்ப நாளா பொண்ணு தேடி இருப்பாங்க போல. போன வாரம் தான் மாப்பிள்ளை பிறந்தநாள் முடிஞ்சதாம். இந்த வருஷம் கல்யாணம் நடக்கும்னு ஜாதகத்துல கூட சொல்லி இருந்திருக்காங்க." என்று தனக்கு தெரிந்த ஹரிஷ் விஷயங்களை கூற,