• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு நினை சேர்த்தேன் 2

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
அத்தியாயம் 2

"அப்றம் பூஜானு ஹரி கூட படிச்ச பொண்ணு. பேரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஒரு வருஷம் முன்ன தவறிட்டாங்க. நம்ம வீட்டுல தான் ஒரு வருஷமா தங்கி வேலைக்கு போய்ட்டு இருக்கா. ஹரி பிரண்ட் தான் பூஜா படிப்பை பாதில நிறுத்துற தெரிஞ்சு இவன்கிட்ட சொல்லி இருக்கான். இவனுக்கு இவன் அப்பா நியாபகம் வந்து செண்டிமெண்ட்டா பீல் ஆகி என்னை கூட்டிட்டு போய் பூஜா முன்னாடி நிறுத்தினான். படிக்குறியானு கேட்டு படிக்க வைக்குறதா சொன்னதும் பூஜாக்கு அவ்வளவு சந்தோசம். இப்ப படிப்பு முடிஞ்சு ஒர்க்ல இருக்குறா. இப்ப கசின் மேரேஜ்க்காக கொடைக்கானல் போயிருக்கா. இன்னும் உங்க கல்யாணத்தை சொல்லல. தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா!" என்று சொல்ல சொல்ல கேட்டவளுக்கு எதையும் அவனுடன் சேர்க்க முடியவில்லை.

"அந்த பொண்ணுக்கு எந்த ஊர் அத்தை?" என்று வெண்மதி கேட்க,

"செங்கல்பட்டு தான். சொந்தங்க எல்லாம் இருந்தும் யாரும் ரொம்ப அவளை சேர்த்துக்கல. காசு தான மனுஷங்களுக்கு எல்லாம் தீர்மானிக்குது. ஏதாச்சும் ஃபன்க்ஷன்னா போவா. மத்தபடி ரொம்ப பேச்சு வச்சுக்க மாட்டா. ரெண்டு நாள் ஆச்சு போய். நாளைக்கு வந்து பார்த்து சர்ப்ரைஸ் ஆக போறா!" என்று சொல்ல, ஓஹ் என்று கேட்டுக் கொண்டவளுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

"ஹரி பொறுப்பான பையன் தான். ஆனா கொஞ்சம் வாலு. அதிகமா சேட்டை பண்ணுவான். அவன் அப்பாவோட ரொம்ப கிளோஸ். அப்பாவை மிஸ் பண்ணும் போது அவர் போட்டோ எடுத்து வச்சுட்டு உக்காந்து பேசிட்டு இருப்பான்." என்று ஹரியைப் பற்றிய பேச்சுக்கு கௌரி வந்திருக்க, வெண்மதியும் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

குளித்து முடித்து வந்து மனைவி அருகே எந்தவித தயக்கமும் இன்றி வந்து அமர்ந்த ஹரிஷ் கால்களை ஆட்டிக் கொண்டு அன்னையைப் பார்க்க,

"மதியமா என்ன சாப்பிட்ட?" என்று கேட்டபடி அவனுக்கு தோசை ஊற்ற,

"ஆனியன் தோசை வேணும் ம்மா!" என்று சொல்லி அவர் செய்வதை பார்த்தபடி,

"கோர்ட்க்கு கிளம்பின என்னை புடிச்சு மண்டபத்துல உக்கார வச்சுட்டீங்க. திரும்ப நான் கோர்ட்டுக்கு போய் அங்க கேஸ் முடியவே நாலாகிடுச்சு. அப்புறம் கமிஷனர் சாரை பார்த்து நானே என் கல்யாணத்தை சொல்லி விஷ் வாங்கிட்டு ஸ்டேஷன் போய் வீட்டுக்கு வர இவ்வளவு நேரம்!" என்றான்.

"இப்படி தான் மா பண்ணுவான். நான் கேட்டதுக்கு பதில் வந்துச்சா பார்த்தியா?" என மருமகளிடம் சொல்ல, இன்னுமே அவன்புறம் பார்க்கவில்லை அவள்.

"எங்க சாப்பிட? அதான் சொல்றேனே இவ்ளோ வேலைல..." என்றான் சாப்பிட ஆரம்பித்து.

"சாப்பிடாம எதுக்கு வேலை பார்க்கணும்?" என்ற கௌரி,

"இனி எனக்கு நீ பண்ற ஹாஸ்பிடல் செக்கப் செலவு இருக்காது நமக்கு!" என்று கூறினார்.

"எதுக்கு?" என்றவன் நியாபகம் வந்தவனாய்,

"ஆமா ஏன் எல்லாரும் கிளம்பிட்டாங்க? நாம மறுபடி ஒரு கல்யாணம் வைக்கலாம்!" என்றதும் வெண்மதி அவனை நிமிர்ந்து பார்க்க,

"பயப்படாத! நீ தான் பொண்ணு!" என்றவன்,

"எனக்கு இந்த கல்யாண வீட்டு ஃபீலே வர்ல ம்மா. உன் அண்ணன்கிட்ட சொல்லு. மாப்பிள்ளைக்கு சீர் செய்யணும். வரதட்சணை பேசணும். எவ்ளோ இருக்கு? ஏன் அவரை விட்ட?" என்று கேட்க,

"இப்படி தான் சேட்டை பண்ணுவான். வாய் கொஞ்சம் ஜாஸ்தி. முடிஞ்சா அட்ஜஸ்ட் பண்ணு இல்லைனா வாய்லேயே நாலு போடு!" என்று சொல்லி கௌரி திரும்பிக் கொள்ள, வெண்மதியிடம் என்ன என்று புருவம் உயர்த்தியவன் கண்ணடிக்க, மீண்டும் அதே வார்த்தைகளை உச்சரித்து பல்லைக் கடித்தாள் அவன் கவனத்தில் விழாமல்.

"நீ ரூம்க்கு போ ஹரி." என்று கௌரி இருவரும் சாப்பிட்டதும் தானும் சாப்பிட்டு மகனிடம் சொல்ல,

"ம்ம் ம்மா!" என்றவன், "இங்க வா!" என்றான் வெண்மதியை.

"ஹரி..." என்று அன்னை அழைக்க,

"ம்மா அப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்குறேன்!" என்று சொல்லவும் வெண்மதி நகர,

"அப்பா! உங்க வீட்டம்மா எனக்கு குடுத்தது. உங்களுக்கும் ஓகே தான?" என்று கேட்டு புகைப்படத்தின் மேலே கைவைத்து வருடியவன்,

"எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க ப்பா!" என்று சொல்ல, அவன் குரல் மென்மையை உணர்ந்த வெண்மதி அவனைப் பார்க்க, அவளிடமும் அவன் கண்ணசைக்க, தானும் தொட்டு வணங்கினாள்.

அன்னைக்கு நல்ல மகன் இவன் என்ற முடிவிற்கு வெண்மதி வர சில நிமிடங்கள் போதுமானதாய் இருந்தது.

"ம்மா நீயும் தான். வா!" என்று அழைக்க, அவருமே வந்து கணவரை வணங்கிக் கொள்ள, அன்னை பாதத்தில் விழுந்தவனுடன் தானும் இணைந்து கொண்டாள் வெண்மதி.

"சரி நீ போ!" மகனிடம் கூறிய கௌரி,

"உன் வயசு பசங்க யாராச்சும் இப்ப உன் கூட இருக்கனும். இந்த பூஜா இருந்திருந்தா கூட நல்லா இருந்திருக்கும்!" என்றவர், அனைவரும் இருக்கும் பொழுதே அவன் அறையில் சிலவற்றை வைக்க சொல்லி இருந்தார்.

"இந்த பால் மட்டும் கொண்டு போ டா. நல்லாருக்கணும்." என்று சொல்லி அவளின் கன்னம் வழித்துக் கொடுக்க,

'இதுவேறயா?' என்ற நினைப்புடன் தான் பாலை வாங்கி சென்றாள்.

ஏற்கனவே அதிகம் பேசுவான் என தெரியும். இப்பொழுது அவன் அன்னை சொல்லியதோடு நேரிலும் கண்முன் என இன்றும் பார்த்திருக்க, சிந்தித்தபடி தான் படி ஏறி சென்றாள்.

பாலை கொண்டு வந்து டேபிளில் வைத்தவள் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக் கொண்டாள்.

பால்கனியில் நின்றவன் உள்ளே கேட்ட சிறு சத்தத்தில் எட்டிப் பார்க்க, கதவை திறந்து வைத்து கட்டிலில் அவள்.

புருவம் சுருங்க கண்டவன் கதவை அடைத்துவிட்டு அவளருகில் செல்ல நினைக்க மட்டுமே செய்தான்.

கதவடைக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள், "யூ... யூ... யூ...!" என்று கோபமாய் கத்தியபடி கைகளை அவன்புறம் நீட்டிக் கொண்டு வர, ஒரு நொடி நிஜமாய் பயந்து தான் போனான் ஹரிஷ்.

"பொறுக்கி! பொறுக்கி!. ஃப்ராடு! பண்றதெல்லாம் பண்ணிட்டு உன் அம்மா முன்னாடி என்னமா நடிக்குற? சீட்டர் சீட்டர். உன்னையெல்லாம்..." இன்னும் என்னவெல்லாமோ வார்த்தைகள் வர, அதை வாய்க்குள் அடக்கி கழுத்தை நெரிப்பது போல நெருங்கியே அவனை நோக்கி வர, அதற்குள் சுதாரித்து கைகளைப் பிடித்துவிட்டான் ஹரிஷ்.

"ஓய்! கொஞ்சம் மூச்சு வீட்டுக்க!" அவனிடம் இருந்து கைகளை உருவிக் கொள்ள போராடியவளை எளிதாய் வளைத்து பிடித்து நிறுத்தி இருந்தான்.

"என்ன! என்னென்னவோ சொல்ற. கை வேற நீளுது. என்னனு முதல்ல சொல்லு. பின்னாடி கை வாய் எல்லாம் நீளட்டும்." என்றவன் அவள் கோபப் பார்வையைப் பார்த்து,

"ஆமா என்ன பண்ற நீ? நானே இவ்வளவு சீக்கிரத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களேனு பீல் பண்ணிட்டு இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்த சந்தோசத்துல இருக்கேன். நீ என்ன முறைக்குற? எப்பாஆ! மீச மட்டும் தான் இல்ல. அப்படியே உன் நைனா குரு நார.... ச்சீஈ குருநாராஆஆயணன பாத்த மேனிக்கு இருக்கு" என்றவன்,

"இப்ப கைய விடுவேன். மறுபடியும் அடிக்க வந்த... எனக்கும் தற்காப்பு கலை எல்லாம் தெரியும் நியாபகம் வச்சுக்கோ!" என்றவன் கைகளை விட்டிருந்தான்.

"ஆமா! கல்யாணம் ஆனதும் நைட்டு வேற மாதிரி சண்டை நடக்கும்னுல்ல கேள்விபட்டேன். அது பொய்யா? இதென்ன டா ஹரிக்கு வந்த சோதனை!" என்று தானாய் பேச,

அவன் பிடித்திருந்த பிடியில் கையை நீவிக் கொண்டவள்,

"நடிக்காத. நீயெல்லாம் மனுசனா? போச்சு போச்சு. ஊரெல்லாம் அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன்.. போயும் போயும் உன்கிட்ட போய் மாட்டிருக்கேன் பாரு!" என்றவள்

"இங்க பாரு! எதாவது சொல்லிக்கிட்டு பக்கத்துல வந்த. என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. மரியாதையா போயிரு!" என்று நிஜ கோபத்தோடு அத்தனை ஆவேசமாய் வேறு அவள் பேச, ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை எதுவும் புரியவில்லை சுத்தமாய் அவனுக்கு.

"ஆஹ்ஹ்!" என்று தலையை பிய்த்துக் கொண்டவன்,

"நானே விதவிதமா டார்ச்சர் குடுப்பேன். எனக்கேவா? என்ன சொல்றனு தெளிவா சொல்லி தொலை. கடுப்பானேன்... கன் எடுத்து போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்." என்றவன் மனநிலை முற்றிலும் கடுப்பிற்கு மாறி இருந்தது.

"ஓஹ்! ஆமாமா! அதான் பார்த்தேனே. நீ போலீஸ்ல. அத வச்சு தான் அன்னைக்கு அந்த பேச்சு பேசினியா அந்த பொண்ணுகிட்ட?" என்றாள் வெண்மதி.

"என்னைக்கு?" என்றவன் அவளை ஆராயும் பார்வையாய் கூர்ந்து பார்த்து கணிக்க முயன்றபடி நின்றான் தீவிர பாவனையுடன்.

"அதான் பச்ச பொண்ணை ஏமாத்தி ஹாஸ்பிடல்ல உயிருக்கு போராட விட்டுட்டு ஓடினியே! அன்னைக்கு." என்று சொல்ல,

"லூசா டி நீ? தெளிவா சொல்லு. என்னை முன்னாடி பாத்துருக்கியா? இல்ல யாரோனு நினச்சு என் உசுர வாங்கிட்டு இருக்கியா? பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்க!" என்றான் உச்சபட்ச எரிச்சலில்.

காலையில் பார்த்து தான் இவள் தனக்கு அறிமுகம். அவளுக்கும் அப்படி தான் என நினைத்திருக்க, கூடவே கிராமம் வேறு படித்திருப்பாளோ என்னவோ என்ற கேள்விகள் எல்லாம் தேவையே இல்லை என்பதை போல அவள் படித்தவள் என பார்த்ததும் தெரிந்து புரிந்து முழு மனதுடன் திருமணமும் செய்திருக்க, இங்கே நடப்பத்தில் காவலன் அவனே குழம்பி போனான்.

என்ன தெரியும்
இவளுக்கு என்னை? என்ற கேள்வி மட்டும் தான் அவனுக்கு. மற்றபடி சிறுபயமும் கூட இல்லை. பயப்பட தான் எந்த தவறும் செய்ததில்லை என முழு நம்பிக்கை அவனுக்கு அவன் மேலேயே!

என்னவோ குழப்பம் அவளுக்கு. அது வேறு யாரேனுமாய் கூட இருக்கலாம் தானே? என நினைத்தவனுக்கு அப்போது தான் இன்னொன்று நியாபகம் வர,

"ஆமா! தாலி கட்டும் முன்ன என்கிட்ட என்னவோ சொன்ன தான? சரியா நியாபகம் இல்ல. ஆனா ஏதோ சொன்ன. உன்னை பார்த்ததும் நான் ஆஃப் ஆயிட்டேன். சொல்லு என்ன சொன்ன?" என்று கேட்க, இன்னும் முறைத்தபடி நின்றவளுக்கு இப்பொழுது அவனுக்கு தன்னை தெரியவில்லை என்பதில் தெளிவானது.

"அப்போ உனக்கு என்ன தெரியல? அப்படிதான?" இடுப்பில் கை வைத்து வெண்மதி கேட்க,

"இப்பவும் தெரில டி. சொல்லு தெரிஞ்சுக்கறேன்." என்றான்.

"நடிக்காத! அந்த பொண்ணு இப்ப எங்க?"

"அய்யயய்ய! ஏய்! பாக்க நல்லா பளபளனு சோக்கேஸ் பொம்மை மாதிரி இருக்க. இங்க நல்லா தான இருக்கு?" என்று அவள் நெற்றியை சுட்டிக் காண்பித்தவன்,

"முதல்ல கைய அங்கேருந்து எடு. அதுவும் தனியா பளபளனு தெரிஞ்சு என் கண்ணை கடன் வாங்குது!" என்றான்.

"ஹான்!" என்று கண்களை விரித்தவள் சட்டென தன் இடுப்பில் இருந்த தன் கையை எடுத்துவிட்டு "பொறுக்கி! போகுது பாரு புத்தி. நான் அவளை மாதிரி விஷத்தை குடிப்பேன்னு நினைக்காத. உனக்கு தந்துட்டு நானே உன் ஸ்டேஷன் போய் உக்காந்துக்குவேன்.ராஸ்கல்!" என்றாள் அவனை எதுவும் செய்ய முடியவில்லையே என்று கோபமாய்.

"அடிங்க... இன்னொரு வாட்டி பொறுக்கி, ராஸ்கல்னு வாய்ல வரட்டும். என்ன டி பேச விட்டா ஓவரா பேசுற? யாரு விஷத்தை குடிச்சது? எவன் செத்ததுக்கு நீ என்னை நிக்க....." என்றவனுக்கு நியாபக அடுக்கில் எங்கோ ஒரு பொறிதட்ட,

"ஊட்டி.... அந்த பொண்ணு...." என்றவன் ஆட்காட்டி விரல் கொண்டு நெற்றி அருகே கொண்டு சென்று சிந்தித்தபடி சொல்ல,

"ஹா! இப்ப நியாபகம் வந்துச்சா சாருக்கு? அதுக்குள்ள மறந்தே போச்சா? எத்தனை பொண்ணுங்களை அதுக்கு முன்னாடி பின்னாடினு ஏமாத்திட்டு இருக்கியோ.. பின்ன எங்க நியாபகம் இருக்கும்!" என்றாள் அவன் இன்னும் யோசித்து நிற்க கண்டு.

"ஏ ச்சீ நிறுத்து!" என்றவன் அவள் பேச்சை இப்பொழுது முழுதாய் கேட்டிருக்கவில்லை.

"ஆமா! அந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும்? இப்ப நல்லாருக்கா? உயிரோட தான இருக்கா?" என்று அவளிடமே கேட்க,

"ம்ம்ம்...!" என முறைத்தவள்,

"எவ்வளவு தைரியம் உனக்கு? என்கிட்டயே கேட்குறல? அன்னைக்கு விட்டுட்டு போகும் பொது தெரில. இன்னைக்கு என்ன? என்ன பயந்துட்டியா நான் போலீஸ்க்கு போய்டுவேனோனு?" என்று நக்கலாய் கேட்க,

"ஹே பைத்தியம்! நீ பேசுறதுல பாதியே இப்ப தான் எனக்கு புரியுது. ஆமா நீ அங்க இருந்தியா? அந்த பொண்ணோட பிரண்ட்டா?" என்றான் மீண்டும்.

"பொய் பொய்! வாய திறந்தாலே பொய் தான் சொல்லுவியா? அப்போ அந்த பொண்ணு பத்தி எதுவும் உனக்கு தெரியல.. எப்படியோ போனு கை கழுவி விட்டுட்ட!" என்று வெண்மதி மீண்டும் சொல்ல,

"ப்ச்! உன்கிட்ட கேட்டேன் பாரு. உசிலம்பட்டி!" என்று முறைத்தவன், யாரையோ அழைத்தபடி மீண்டும் பால்கனி பக்கம் திரும்ப,

"எங்க ஓட பாக்குற? யாருக்கு போன் பண்ற? விட்டு ஒழிஞ்சுதுனு நினைச்சது திரும்பவும் தூரத்தினதும் பயம் வந்துட்டா? தப்பிக்க ஆள் சேர்க்குறியா?" அவனை தன் பக்கம் திருப்பி அவள் கேட்க,

"விடு லூசு! நெட்ஒர்க் இருக்காது இங்க!" என்றவன்,

"ராகவ்! நான் ஹரி! இன்ஸ்பெக்டர் ஃபிரம் சென்னை." என்று மொபைலில் பேச ஆரம்பித்தான் இவளை சட்டை செய்யாமல்.

"யாஹ் ஃபைன் ராகவ்! அந்த ஊட்டி சூசைட் அட்டம்ட் கேஸ் என்னாச்சு?" என்று மேலும் பேச, அவனை முறைத்துக் கொண்டே அவன் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தாள் அருகில் நின்று.

"ஓஹ்! ஓகே! யாஹ் நோ ப்ரோப்லேம். பை த வே நான் இங்க வந்ததும் அது மறந்தே போச்சு. இப்ப ஒரு ஹால்ஃப் மெண்டல்கிட்ட மாட்டினதும் தான் நியாபகம் வந்துச்சு. அதான் இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன். எனிவே சாரி அண்ட் தேங்க்ஸ் ராகவ்!" என்று சொல்லி வைத்தவன் நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டு முன் நின்றவளை பல்லைக் கடித்தபடி முறைக்க,
 

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
"என்ன? போன்ல சீன் போட்டா... நீ நல்லவன்னு நான் நம்பிடுவேனா? எப்படில்லாம் உன் அம்மாகிட்ட நடிக்கு...."

"அடிச்சு பல்லை கழட்டினேன்னு வையி... நான் ஏன் டி என் அம்மாகிட்ட நடிக்கணும்? ஆமா அந்த பொண்ணை உனக்கு எப்படி தெரியும் சொல்லு!" என்றவன் தீவிரமாய் கேட்க,

"நீ முதல்ல நான் கேட்டதுக்கு பதில சொல்லு!" என்றதும் முறைத்தவன்,

"அந்த பொண்ணு பேரு ப்ரீத்தி தான? இன்னும் ரெண்டு மாசத்துல அவளுக்கு டெலிவரியாம்!" என்றதும் அவள் அதிர்ச்சியாக,

"அந்த ஹாஸ்பிடல்ல தான் நீயும் இருந்தியா?" என்றான்.

"உனக்கு நிஜமா என்னை தெரிலையா?" என்றாள் இப்போது குரல் அமைதியாய் புரியாமல்.

அதில் அவனும் கூர்ந்து அவளை கவனித்தவன், "சத்தியமா தெரில. கூட்டத்துல நின்னவங்களை எல்லாம் நியாபகத்துல வச்சுக்க முடியாது!"

"நான் ஒன்னும் கூட்டத்துல இல்ல!" என்றாள் பல்லைக் கடித்து.

"இப்ப என்ன உன் பிரச்சனை? உன்னை எனக்கு தெரிலன்றதா இல்ல அந்த பொண்ணுக்கும் எனக்கும் என்னனா?" என்று கேட்க, அவளே குழம்பிவிட்டாள்.

"பார்த்தியா பார்த்தியா! இப்படி தான் பேசி பேசி டைவேர்ட் பண்ற! இப்ப சொல்ல போறியா இல்லையா?" என்றாள் தெளிந்து.

"ஓகே ஓகே! கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிப்போம். ஷப்பா! கிரிமினல்ஸ் எல்லாம் பாவம் தான். என்ன பாடு படுத்துறா!" என்றவன் பாலை அப்படியே அருந்திவிட்டு அவள்புறம் நீட்ட,

"ம்ம்ம்!" என்று முறைத்தாள்.

"சிரிக்கவே தெரியாதா உனக்கு? காலையில இருந்து இப்ப வர உர்ருனு இருக்க. என்னவோ போ! நமக்கு இதெல்லாம் செட் ஆகாது!" என்றான் கட்டிலில் அமர்ந்து சாவகாசமாய்.

"இப்ப என்ன உனக்கு? அந்த பொண்ணை ஏமாத்தினது நான். அதனால அவ சூசைட் ட்ரை பண்ணிட்டா. அங்க என்னை நீ பார்த்த. அதான?" என்றதும் அவள் அமைதியாய் பார்க்க,

"அரை பைத்தியமே! அவளை நான் ஏமாத்தி அவ சூசைட் ட்ரை பண்ணினா அவ கூடவே நானும் ஹாஸ்பிடல் வருவேனா?" என்று கேட்க, அவளும் புருவம் சுருக்கி யோசித்தாள்.

"நீ தான சொன்ன? நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம் அவளை காப்பாத்தி தாங்கனு?" என்றாள் நியாபகம் வந்தவளாய்.

"கழட்டி விட்டுட்டு ஓடுறவன் ஓட பார்ப்பானா இல்ல அவளை காப்பாத்த ஹாஸ்பிடல் வந்து அவனுக்கு அவனே ஆப்பு வச்சுக்குவானா?" என்றதும் மீண்டும் அதை அவள் சிந்திக்க,

"என்ன! திக்குதிக்குனு திக்குதே திக்குதே!" என்று கிண்டலாய் பாடினான் அவளையும் அவள் அமைதியையும்.

சில நொடிகள் அமைதிக்கு பின், "ஜாப்ல ஜாயின் பண்ணின நேரம் அது. ஒன் வீக் லீவ்ல ஊட்டிக்கு பிரண்ட்ஸ் கூட என்ஜோய் பண்ண வந்தேன். அப்ப ஹோட்டல்ல பக்கத்து ரூம்ல தான் அந்த பொண்ணு இருந்துச்சு. விஷத்த குடிக்குறவ ரூம் டோர் லாக் பண்ணி வைக்கணும்ல. எப்ப டா காப்பாத்த வருவீங்கன்ற மாதிரி குடிச்சதும் அய்யோ அம்மானு சத்தம்!" என்றவன்,

"பிரண்ட்ஸ் முன்னாடி போய்ட்டு இருந்தானுங்க. நான் போன் பேசிட்டு லேட்டா போக... அங்க அது கத்த... கதவை தட்டினேன். திறக்கல. ஆபத்துக்கு பாவம் இல்லைனு நான் ஓங்கி தட்டவும் அதுவும் திறந்துக்குச்சு. அங்க தான் அந்த ப்ரீத்தியை பாத்தேன். கண்ணு உள்ள போய் வாய்ல நுரை தள்ளி கிடந்துச்சு." என்றதும் வெண்மதி நம்பாத பார்வை பார்க்க,

"நீ நம்பலைனாலும் அதான் நிசம்!" என்று முறைத்தவன்,

"அவளை தூக்கிட்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தா... அங்க உன்னை மாதிரியே ஒரு ஹால்ப் மெண்டல் டாக்டர் பொண்ணு அந்த சிட்டுவேஷன்லயும் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணனும், ப்ரோசீஜர் அது இதுன்னு உளறிச்சு!" என்றதும்,

"நீயே போலீஸ் தான? சொல்லி இருக்கலாம்ல?" வேகமாய் கேட்டாள் வெண்மதி.

"மூளையை கழட்டி மூலைல வச்சுட்டியா? அவ தான் அதுக்கு முன்னாடி வாக்குமூலம் குடுக்குற மாதிரி என்னோட நிலைமைக்கு அவன் தான் காரணம் அவனை சும்மா விடாதீங்கனு சொல்லிட்டு ஹாஸ்பிடல்ல மயங்கி தொலைஞ்சுட்டாளே!"

"நான் சொல்லி ஐடி ப்ரூப் காமிச்சாலும் லோக்கல் போலீஸ் எங்கனு கேட்பானுங்க. அதான் உசுர காப்பாத்த உசுர குடுத்து நடிச்சேன். அவளை கல்யாணம் பண்ணனும் காப்பாத்தி குடுன்னு அந்த டாக்டர் பொண்ணுகிட்ட கேட்டேன். உசுருக்கு உத்திரவாதம் குடுத்த பின்னாடி தான் நான் கிளம்புனேன். அதுவும் லோக்கல் போலீஸ்கிட்ட ஃபுல் டீடைல்ஸ் குடுத்து அவங்க சார்ஜ் எடுத்த பின்ன தான் கிளம்புனேன்!" என்றான் தெளிவாய்.

"ஆனா அந்த பொண்ணு ட்ரீட்மென்ட்க்கு ஒத்துக்கல. அடுத்த நாளே டாக்டர்ஸ் நர்ஸ்னு யாருக்கும் சொல்லாம ஓடிடுச்சு." என்றாள் கூடுதல் தகவலாய்.

"இது வேறயா? என்னவோ அதெல்லாம் எனக்கு தெரியாது. இப்ப நீ கேட்கவும் தான் இது நியாபகம் வந்ததே! நான் இப்ப பேசினது ஊட்டில எனக்கு தெரிஞ்சவர் தான். அவர் தான் அந்த ஹோட்டல் எனக்கு சஜஸ்ட் பண்ணவரு. அவர்கிட்ட சொல்லிட்டு வந்தேன். ஆனா திரும்ப கால் பண்ண எனக்கு தோணல."

"அவர் சொல்றபடி பார்த்தா போலீஸ் அந்த பொண்ணை கண்டுபிடிச்சிருக்கனும். பேரெண்ட்ஸ் கூடவோ இல்ல அது லவ் பண்ண பையன் கூடவோ சேர்த்து வச்சு இப்ப டெலிவரிக்கு வெயிட் பண்ணனும்." என்றவன்,

"எவனோ எவளயோ காதலிச்சு எப்படியோ போனதுக்கு நான் வாய் வலிக்க கதை சொல்ல வேண்டியதா இருக்கு!" என்றான் முடிவாய்.

"நீ சொல்றது தான் உண்மைன்னு நான் எப்படி நம்புறது?" வெண்மதி அப்பொழுதும் சந்தேகம் கொண்டு கேட்க,

"இப்ப என்ன? நீ என்னை நம்புனு நான் உன் காலை புடிச்சி கெஞ்சனுமா? ஆளைப் பாரு. ஆமா நீ எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்ச? பெரிசானாலிட்டி பார்த்து தான?" என்கவும் அவள் பார்த்த பார்வையில்,

"ஏதாச்சும் சொல்லி என்னை டேமேஜ் பண்ணிடாத. நான் சொன்னது தான் நிஜம். இல்லைனா வா நாளைக்கே ஊட்டி போலாம். நல்ல பிளேஸ். ஹனிமூன் செலிப்ரீட் பண்ணிட்டு அப்படியே இதையும் விசாரிச்சுட்டு வருவோம்!"

"ம்ம்!" என்றவள் முறைக்க,

"ஆமா மா! தனியா போனா அது வேற! நியூ மேரிட் கப்புள்ஸ் ஊட்டி போனா அது பேரு ஹனிமூன் தான?" என்றவன் மணியைப் பார்த்துவிட்டு,

"சுத்தம்! நடுராத்திரி!" என்று சொல்லிவிட்டு அவளை முறைக்க,

"எனக்கு இன்னும் உன்னை நம்ப முடியல!" என்றாள் மனதில் இருப்பதை.

"தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குறாளே!" சொல்லிக் கொண்டவன்,

"போ மா! போய் தூங்கு! உனக்கெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. நாளைக்கு ப்ரூப் பண்றேன்!" என்றான்.

"இங்கேயா?"

"என்ன இங்கயா? ஆமா! கல்யாணம்னா என்னனு தெரியும் தான? மீசகாரர் எல்லாம் சொல்லி தான பண்ணி வச்சார்?"

"அப்பாவை எதாவது சொன்ன..."

"இவ்வளவு விளக்கம் குடுத்து தூங்குன்னு சொல்லும் போதே நான் டீசென்ட் பாய்னு உனக்கு புரிஞ்சிருக்கணும். சும்மா எல்லாத்துக்கும் ஷாக் லுக் குடுத்து பளபளனு எதையாச்சும் பாக்க வச்சு மனச கலச்சு விடாத."

"நீ என்ன பேசினாலும் எனக்கு என்னவோ உன்னை நம்ப தோணல!"

"நம்பிடாத! காலையில முத பஸ் புடிச்சு உசிலம்பட்டி போய் சேரு!"

"ஆமா! உன் பேர் வெண்மதி!" என்று சொல்லியவன் நக்கலாய் சிரித்து,

"வெண்மதினா என்ன மீனிங் தெரியுமா? தூய்மையான நிலா. இந்த பேரை போய் உனக்கு வச்சிருக்கு பாரேன் மீச!" என்று சொல்ல,

"ஹே!" என்று ஒற்றை விரலை நீட்டிவிட்டால் கோபமாய்.

"சும்மா ஒரு வார்த்தை சொன்னாலே கோவம் வருது. ஆனா நீ மட்டும் என் மேல என்ன வேணா பழி போடலாம். நான் பார்த்துட்டு இருக்கணுமா?" என்ற அவன் கேள்வியில் அமைதியாகிவிட்டாள்.

"இங்க தான் தூங்கணும். சும்மா சும்மா டென்ஷன் ஆகாத உடம்புக்கு நல்லதில்ல. சரி சொல்லு. என்ன படிச்சிருக்க? படிச்சிருக்க தான?"

"ப்ச்! எம்பிபிஎஸ்!"

"எம்பி?"

"எம்பிபிஎஸ்!" என்றாள் பல்லைக் கடித்து.

"யூ மீன் டாக்டர்?" ஆச்சர்யம் கொண்டு அவன் கேட்க, அவள் முறைத்து ஆம் என தலையசைக்க,

"உசிலம்பட்டில டாக்டர்ஸ் எல்லாம் உருவாக்குறாங்களா? நம்ப முடியலையே!" என்றான் இன்னும் அதிர்ச்சி விலகாமல்.

"ரொம்ப பேசாத! உன் அப்பா அம்மாக்கும் உசிலம்பட்டி தான்! அப்படி பார்த்தா நீயும் அதே உசிலம்பட்டில பொறந்து தான் இந்த பொசிஷன்ல இருக்க!"

"சரி தான். ஆனா அந்த உசிலம்பட்டி எந்த திசையில இருக்குனு கூட நான் பார்த்ததில்ல. நீ அங்கருந்து வந்து டாக்டர்னு சொல்றியே. அதான் நம்ப முடியல!"

"ஏய்! அதான் சொல்றேன்ல? என்ன நம்ப முடியல நம்ப முடியல? நம்பாட்டி போ டா!" என்றே சொல்லிவிட,

"கோவம் வருதா? கோவம் வருதா? எனக்கும் நான் நடந்ததை சொல்லி நீ என்னை நம்பல நம்பலனு சொல்லும் பொது இப்படி தான் தூக்கி போட்டு மிதிக்கணும் தோணுச்சு." என்றான் அவள் வார்த்தையை கொண்டே அவளை மடக்கி.

அதற்கு மேல் பேச விரும்பாமல் முணுமுணுவென அவனை திட்டிக் கொண்டு பெட்சீட்டை உதறி எடுத்து கட்டிலில் படுத்துக் கொள்ள,

"என்னை கீழ படு சோஃபால படுன்னு எல்லாம் நீ சொல்ல கூடாது. இது என் ரூம்!" என்றவன் கட்டிலில் குதித்து அமர்ந்து இன்னொரு புறம் படுத்துக் கொள்ள,

"இவனை!" என கோபமாய் கண்களை மூடி திறந்தாள்.

"உனக்கு தூக்கம் வருதா?" ஹரிஷ் கேட்க, அவள் பதில் சொல்லவில்லை.

"உசிலம்பட்டி டாக்டர். உங்களை தான். தூக்கம் வருதா?" என்றான் அவள்புறம் திரும்பி அவள் காதுக்கு அருகில் சத்தமாய்.

"அய்யோ!" என எழுந்து அமர்ந்தவள்,

"ஏன் படுத்துற? என்ன வேணும் உனக்கு?" என்று கடுப்பாய் கேட்க,

"என்ன கேட்டாலும் கிடைக்குமா?" என்றவன் பார்வையில்,

"பொறுக்கி பொறுக்கி! இதுக்கு தான் உன்னை நம்பவே தோணல!" என்றவள் இழுத்து மூடி படுத்துக் கொள்ள,

"பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெரியாம மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கிட்டு இருக்க. ஒருநாள் இல்ல ஒருநாள் மாட்டுவ. அப்ப இருக்கு உனக்கு!"

"நான் பாட்டு சிவனேனு தான் நேத்து வரை என் ரூம்ல தூங்கிட்டு இருந்தேன். இழுத்து வச்சு கல்யாணம் பண்ணிவிட்டு கொடுமை... எதுக்கு? இப்படி பக்கத்துல தூங்குறவள நான் வெறிக்க வெறிக்க பார்க்கவா?" என அமர்ந்து தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவன்,

'பரவால்ல! அழகா இருக்கா.

டாக்டராம். டேய் ஹரிஷ்! நாமளும் வெளில சொல்லிக்கலாம் டா டாக்டர் புருஷன்னு!' என பெருமைப்பட்டுக் கொண்டவன்,

"நிலா! நிலா!" என்று அழைத்துப் பார்க்க, அவள் அசைந்தாள் இல்லை.

"அதுக்குள்ள தூங்கிட்டாளா?" என்றவன் உருண்டு புரண்டு படுத்தும் சுத்தமாய் உறக்கம் வரவில்லை.

நேற்று வரை இல்லாத மாற்றமாய் பக்கத்தில் இருப்பவள் ஏகத்திற்கும் அவனை அவன் மனதை அவன் பார்வையை என மாற்றி வைத்திருந்தாள்.

அடுத்த நாள் காலை வெண்மதி எழுந்து கொள்ளும் பொழுது ஹரி அங்கே இல்லை.

நேற்று அவன் கூறிய செய்திகள் அனைத்தும் உண்மை போலவும் அவன் கற்பனை போலவும் என அவளுக்குள் குழப்பத்தை விதைக்க, எதற்குள்ளும் அவனை நிற்க வைக்க முடியவில்லை.

ஹரி சொல்வது உண்மை தான் என்பதை போல அந்த பெண் மருத்துவம் முடியும் முன்பே சொல்லிக் கொள்ளாமள் மருத்துவமனையில் இருந்து சென்றது உறுத்த,

மறுபுறம் ஏன் அவனை தேடி அவள் செல்லும் அவசரத்தில் சொல்லாமல் சென்றிருக்க கூடாது என்று தோன்றியது.

ஹரியைப் பற்றி எதுவும் தெரியாமல் அவனை நேற்றுப் பார்த்ததும் அதிர்ந்து கெட்டவன் என்ற இடத்தில் பொருத்தி வைத்திருக்க, நேற்று முழுதும் அவன் பேச்சுக்கள் அவன் அன்னையிடம், தன்னிடம் என நினைக்கையில் அப்படி முழுதாய் தவறானவனாய் நினைக்க முடியவில்லை.

காவல்துறை என்றாலே சிடுசிடுவென்று தான் இருப்பார்கள் என்பதற்கு மாறாய் இதுவரை அவனை கடுங்கோப முகமாய் இன்னும் பார்க்கவில்லை.

அவன் பேச்சுக்களின் மூலம் அவனது சுபாவமே இது தான் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.

எழுந்து குளித்து முடித்து கீழே வரும் பொழுதே பேச்சு சத்தம் கேட்க, கேள்வியோடு சமையலறை சென்றாள் வெண்மதி.

"வா மதி! இப்ப தான் உன்னை பேசிட்டு இருந்தேன்!" என்று கௌரி சொல்ல, பார்வை முழுதும் அவர் அருகில் நின்றவள்மேல் தான் வெண்மதிக்கு.

"யாருன்னு தெரியுதா? நேத்து சொன்னேனே பூஜா. இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி வந்தா!" என்றவரை, பூஜாவும் புரியாமல் பார்த்தாள்.

"பூஜா! உனக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்னு சொன்னேன்ல. அது இவ தான் வெண்மதி!" என்றதும், பூஜா யார் இவள் என்பதை போல விழிக்க,

"தெளிவா சொல்லுங்க ம்மா! வெண்மதி ஃப்ரம் உசிலம்பட்டி. நௌ வெண்மதி ஹரிஷ். இல்ல மிஸ்ஸஸ் ஹரிஷ்! அப்படி சொன்னா தான தெரியும்?" ஜாக்கிங் சென்று அப்போது தான் உள்ளே வந்த ஹரிஷ் வெண்மதி அருகே நின்று சொல்லவும் அதிர்ந்து பூஜா விழிக்க,

"சொல்ல வந்தேன். அதுக்குள்ள குறுக்க வந்துட்ட." என மகனிடம் கூறிய கௌரி,

"நேத்து தான் மேரேஜ் ஆச்சு பூஜா. என் அண்ணன் பொண்ணு தான் வெண்மதி!" என்றவர் நடந்ததை சொல்ல இன்னும் அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தாள் பூஜா.

நிலவு தொடரும்..
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரெண்டும் சரியான ஜோடிங்க தான் 🤣🤣
வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா போகும் 🤩

பூஜாவோட அதிர்ச்சிக்கு காரணம் ஹரியை ஒருதலையா காதலிச்சாளோ? 🧐

வீட்டுக்குள்ளேயே வில்லியை வளர்த்திருக்கான் போல 🤣🤣

இனி நடக்குதுன்னு பார்ப்போம் 😍
 
  • Love
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
ரெண்டும் சரியான ஜோடிங்க தான் 🤣🤣
வாழ்க்கை ரொம்ப சுவாரசியமா போகும் 🤩

பூஜாவோட அதிர்ச்சிக்கு காரணம் ஹரியை ஒருதலையா காதலிச்சாளோ? 🧐

வீட்டுக்குள்ளேயே வில்லியை வளர்த்திருக்கான் போல 🤣🤣

இனி நடக்குதுன்னு பார்ப்போம் 😍
ஹரிஷ்க்கு இருக்குற வாய்க்கு அவன் வாழ்க்கை எல்லாம் ஜெகஜோதியா தான் போகும் 🤣🤣

ஆத்தி! அப்படிலாம் கதையை கரெக்ட்டா கெஸ் பண்ண கூடாது. ஐம் பாவம் 😷🤣🤣🤣

நாளைக்கே பார்ப்போம் 😊😊

நன்றி sis❤️❤️❤️
 
  • Haha
Reactions: Kameswari

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
😄😄😄😄😄😄😄😄நல்ல ஜோடி பொருத்தம் எப்போ டாக்டரம்மா போலீஸ்க்காரண நம்பி குடும்பம் நடத்துமோ 🙄🙄🙄🙄🙄🙄🙄சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
 
  • Love
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
😄😄😄😄😄😄😄😄நல்ல ஜோடி பொருத்தம் எப்போ டாக்டரம்மா போலீஸ்க்காரண நம்பி குடும்பம் நடத்துமோ 🙄🙄🙄🙄🙄🙄🙄சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵🩵
Than u😊