அத்தியாயம் 3
"ஹே! என்ன பிரீஸ் ஆகி நின்னுட்ட?" என்று பூஜா தலையில் தட்டி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான் ஹரிஷ்.
"நிஜமாவா சொல்றிங்க?" என்ற பூஜா இன்னும் நம்ப முடியாமல் வெண்மதியையும் அவள் கழுத்தினில் இடம் பிடித்திருந்த புது தாலியையும் பார்த்தபடி கேட்க,
"விளையாடுறோம் நினைச்சுட்டியா? நிஜமா தான் டா!" என்ற கௌரி,
"எல்லாம் எதிர்பார்க்காம நடந்து முடிஞ்சுடுச்சு. ரொம்ப அழகா இருக்கால்ல?" என்று வேறு சொல்லி சிரிக்க,
"அது மட்டுமா? உன்னை கட்டிக்க போறவ எங்க குப்பை கொட்டிட்டு இருக்காளோனு சொல்லுவியே! மேடம் யாரு தெரியுமா? வெண்மதி எம்பிபிஎஸ்!" என்று சொல்லி ஹரிஷ் கண்ணடித்து புன்னகைக்க,
"சொல்லிட்டாளா உன்கிட்டயும்?" என்ற கௌரி,
"இந்தா டா காபி!" என வெண்மதியிடம் நீட்டினார்.
அதற்குள் சுதாரித்த பூஜாவும், "ஹேய்! ஸ்டாப் இட் ஸ்டாப் இட்! டேய் ரெண்டு நாள் தானே டா ஊருக்கு போனேன். அதுக்குள்ள கல்யாணமே பண்ணிட்டு நிக்குற? கூட ஒரு வாரம் வரலைனா? என்ன குழந்தையோட என் முன்னாடி வந்துருப்பியா?" என சரமாரியாய் பூஜா கேட்க,
"ஆமா அது மட்டும் தான் இப்ப குறை! அட போ டி!" என்று சொல்லி மேடையில் இருந்து குதித்து மனைவியை முறைத்து என அறைக்கு சென்றான்.
வெண்மதி அத்தை கொடுத்த காபியை கையில் வைத்திருந்தவள் பருகாமல் இருக்க,
"நீங்க ரெண்டு பெரும் இன்னும் பேசிகலையே?" என்றார் கௌரி பூஜா மற்றும் வெண்மதியிடம்.
வெண்மதியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள் முதலில் அதிர்ந்து பின் சுதாரித்து துளியும் தன்னைப் பார்த்து புன்னகை இன்றி சிநேக பாவமும் இல்லாமல் நின்ற பூஜாவை.
"நீங்க குடுத்த ஷாக் அப்படி கௌரி ம்மா. இன்னும் நம்ப முடியலை!" என்று சொல்லி வெண்மதி அருகே வந்த பூஜா,
"எனிவே! கங்கிரட்ஸ்!" என்று சொல்லி பேச்சுக்கு கூட புன்னகை கொடுக்காமல் கடந்து சென்றுவிட, தோள்களை குலுக்கிக் கொண்ட வெண்மதியும் அத்தை அருகே வந்தாள்.
"ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா அத்தை?"
"உனக்கு சமையல் தெரியுமா மதி?" என்று கௌரி கேட்க,
"ரொம்ப தெரியாது. பட் தனியா இருந்தா சாதம், சாம்பார், ரசம்னு தேவைக்கு கொஞ்சமா தெரியும்!" என்றாள்.
"இது போதுமே! போற இடத்துல பொழச்சுக்கலாம்!" என்று சிரித்தார் கௌரி.
"இதுக்கு மேல எங்க போற இடத்துல பொழைக்குறது?" என்று வெண்மதியும் சிரிக்க,
"சப்போஸ் நான் இல்லாத நேரம்... என்னைய கழட்டி விட்டு நீங்க ஊர் சுத்த போற நேரம்..." என்று கிண்டலாய் கௌரி சொல்ல,
"அத்தை! நிஜமா நீங்க என் அப்பா சிஸ்டர் தானா? அமேஸிங். அண்ட் அப்டியே அப்பாக்கு ஆப்போசிட் கூட."
"அப்படி இருந்ததுனால தான் உன் அப்பாவை எதிர்த்து பேசி வீட்டை விட்டு வந்ததும்!" என்று சொல்லி பெருமூச்சு விட்டவர்,
"உன்னை எப்படி வளர்த்தானோ என் அண்ணே. எனக்கு தெரியாது தான். ஆனா என்னை அவன் பொண்ணை பார்த்துக்குற மாதிரி தான் வளர்த்தான். நான் தான் அதிகபிரசங்கித்தனமா உன் மாமா விரிச்ச வலைல சிக்கி இங்க வந்துட்டேன்!" என் அதற்கும் மெல்லிய புன்னகை கொடுத்தார்.
"அம்மா உங்களை பத்தி சொல்லிருக்காங்க. ஆனா அப்பா வாயே திறக்க மாட்டாங்க. கோபமானாலும் பேச மாட்டங்க!" என்ற வெண்மதிக்கு,
"பின்ன! நம்ம ஊர் எப்படினு தான் உனக்கு தெரியுமே! அப்படி ஊர்ல இருந்து லவ் பண்ணி ஊரைவிட்டு வந்து... அவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் குடுத்தேன். அந்த கசப்பு இருக்கும்ல. உன்னை எனக்கு மருமகளா தந்ததே அதிசயம் தான்!"
"சரி சரி! இதை அவனுக்கு குடு. நான் இட்லி ஊத்துறேன்!" என்று சொல்லி அவளை அனுப்பி வைத்துவிட்டார்.
ஹரிஷை தேடி வந்தவள் காபியை அவனருகில் வைத்துவிட்டு திரும்ப,
"ஹெலோ பளிச்!" என்று அழைக்கவும் சட்டென திரும்பியவள் விருவிருவென அவனை நோக்கி வந்து விரல் நீட்டினாள் எச்சரிப்பதை போன்று.
கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே அவள் காபியை வைக்க, அவன் முதலில் பார்த்தது என்னவோ அவள் சேலைக்கு வெளியில் தெரிந்த மறைந்தும் மறையாத இடையினை தான்.
"இன்னொரு முறை உன் கண்ணு அங்க போச்சு!" என்று கோபமாய் சொல்லி விரல் நீட்டி அவள் நிற்க, அவளை சீண்டிப் பார்க்கவே அவன் இதயமும் சுவாரசியம் கொண்டது.
"எனக்கு என்ன தெரியுதோ அதை தான் சொன்னேன். சட்டுனு பேர் வேற நியாபகம் வரல!" என்றான்.
"பொறுக்கி!" என்றவள் முணுமுணுப்புக் கேட்டு வேகமாய் அவன் எழுந்து கொள்ள, இரண்டடி பின்வாங்கினாள்.
"போலீஸ் டி! என்னைக்கு சிக்குறியோ அன்னைக்கு தெரியும்." என்று வெகு அருகே நின்று அவன் சொல்ல,
"என்னவோ காலையில ப்ரூப் பண்றேன்னு சொன்ன? ஒன்னும் காணும்?" என்றாள் அவனை தள்ளி நின்று கிண்டலாய்.
"அடங்கு! நான் மறந்தே போன ஒன்னை வந்து நியாபகப்படுத்தி தோண்ட வச்சிருக்க. தோண்டி எடுக்க வேண்டாமா? ஆமா இவ்வளவு சரியா என்னை நியாபகம் வச்சிருக்கல்ல. அப்ப அந்த பொண்ணுக்காக நீ என்ன செஞ்ச?"
"நான் என்ன செய்யணும்? நீ யாரோ அவ யாரோ தான எனக்கு? எனக்கு வேற வேலை இல்ல?" என்று வெண்மதி கேட்க,
"அதே தான்! யாருனே தெரியாத ஒருத்தியோட டீடெயில்ல கலக்ட் பண்ண கொஞ்சம் டைம் எடுக்கும். இது எனக்கு தேவை இல்லாத வேலை தான். எவனோ எவளோ என்னை சந்தேகப்பட்டிருந்தா போடா வெண்ணைனு போயிட்டே இருந்திருப்பேன். பொண்டாட்டியே போய்ட்டீயே! அதனால தான் இதுவும்.!" என்றவன்,
"ஹோட்டல் மேனேஜர் அந்த ப்ரீத்தி பொண்ணு குடுத்த அட்ரஸ் குடுத்தார். அது ஃபேக். அவரோட பொண்ணுக்கு இந்த பொண்ணை தெரியுமாம். அத வச்சு தான் ப்ரீத்தி கண்சீவா இருக்குறானு இவருக்கு தெரியுமாம்!" என்றவன் லேப்டாப்பிலும் கவனத்தை வைத்தான்.
"நம்புற மாதிரி தான் கதை சொல்ற!"
"உசிலம்பட்டி! அடிச்சேன்னு வையி.... பேச வாய் இருக்காது. என் முன்னாடி என்னை இரிடேட் பண்ற மாதிரி இதுவரை எவனும் பேசினது இல்ல. உன்னை எப்படி விட்டு வச்சுருக்கேன்னு எனக்கே டவுட் ஆகுது. ஆனா சும்மா விட மாட்டேன் டி!" என்று விரல் நீட்டி ஹரிஷ் சொல்லிக் கொண்டு இருக்க, வெண்மதி மொபைலில் அழைப்பு.
"சொல்லு டி!" என எடுத்து பேசியபடி பால்கனி சென்றாள்.
"ப்ரீத்தி! சீக்கிடு!" என்று சொல்லிக் கொண்டு உயர் அதிகாரிக்கு வேலை தொடர்பான மெயில் ஒன்றை அனுப்பி முடித்து லேப்டாப்பை அணைக்க, அலைபேசியை துண்டித்துவிட்டு சிந்தித்தபடி உள்ளே வந்தாள் வெண்மதி.
"அன்னைக்கு நான் பேசினது உன்கிட்ட தானா? ஐ மீன் அந்த பொண்ணுக்கு டிரீட்மென்ட் குடுத்தது நீயா?" சட்டென தோன்றியதை கேட்டான் அவள் உள்ளே வரவும்.
"ம்ம்ம்!" என்றவள் தலை அசைக்க,
"பார்றா! நைஸ்! ஆனா எனக்கு சுத்தமா நியாபகம் இல்ல!" என்றான் நிஜத்தை.
"ஆனா எப்படி உனக்கு என்னை நியாபகம் இருக்கு. ஐ க்னோ நான் கொஞ்சம் ஸ்மார்ட் தான்." என்று ஹரிஷ் தற்பெருமை கொள்ள,
"ஒரு பொண்ணை சூசைட் அட்டம்ட்ல கூட்டிட்டு வந்த பொறுக்கி ஃபேஸ் அவ்வளவு சீக்கிரம் மறக்குமா?" என்றாள் அவன் மூக்கை உடைப்பது போல.
"அடிங்..." என்றவன் துள்ளிக் கொண்டு அருகே வர போக,
"ஆனா சாரி!" என்றவள் வார்த்தைகளில் கண்களின் கூர்மையோடு அவன் நின்றுவிட,
"இப்ப தான் பிரண்ட் கால் பண்ணினா ஊட்டிலேர்ந்து. நீ சொன்ன அதே ஹோட்டல் மானேஜர்கிட்ட அவளும் இப்ப தான் போய் பேசி இருக்கா. நீ சொன்னது உண்மை தான்."
"ஓஹ்! ஸ்பை வச்சு என்னை செக் பண்ற?"
"பின்ன? முன்ன பின்ன தெரியாத உன்னை எப்படி நம்புறது?"
"வாஸ்தவம் தான். ஆனா இனி நம்பனும். அத்தை பையன். அத்தான். இதெல்லாம் தாண்டி உன் புருஷன். சும்மா கடுப்படிச்ச...."
"இன்னும் நீ ப்ரூப் பண்ணல. இது நான் கண்டுபிடிச்சது."
"எல்லாம் ஒன்னு தான். டவுட் கிளியர் ஆச்சுல்ல?" என்றவன்,
"உன்னை பக்கத்துல வச்சுட்டு கண்சீவானவள தேடி நான் ஏன் அலையனும்?" என்று முணுமுணுத்தான்.
"எப்பவுமே இப்படி தான் பேசுவியா? வாய் அதிகம் தான் உனக்கு!"
"நான் என் அப்பா மாதிரி. நீ உன் அப்பா அந்த மீச மாதிரியா?"
"இங்க பாரு! அப்பாவை எதாவது சொன்ன."
"அதே திமிரு! அப்ப அங்க இருந்து தான வந்திருக்கும்?" என்றான் அப்போதும்.
"அவரு திமிரா உன்கிட்ட பேசினாரா?"
"பேசி தான் தெரியனுமா? மீசையே சொல்லுதே!"
"வேணாம்!" என்றவள் கோபமாய் முறைக்க,
"திமிரு மட்டும் தான் அங்க இருந்து வந்திருக்கு. மத்தபடி அழகு எல்லாம் உன் அத்தை... அதான் என் அம்மா மாதிரி."
"டேய்!"
"புருஷன்னு அப்பப்ப நியாபகம் வச்சுக்க. இல்ல எப்பவும் மாதிரி இருக்க மாட்டேன். பேசுற வாய்க்கு தான் முதல் பனிஷ்மென்ட்!" என்று சொல்லி கண்ணை மேலும் கீழுமாய் அவளில் அலைபாய விட,
"கண்ணை நோண்டிடுவேன்." என்றாள் பல்லைக் கடித்து.
"நீ இனி சுடிதார் ட்ரை பண்ணு. நான் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுறேன்." என்றவன் தலை கோதி
"சரி சொல்லு. இப்ப நம்புற தான? நான் சுத்தமான யோக்கியன்."
"இருந்துட்டு போ! ஆனாலும் என்னவோ ஒன்னு. நீ சரி இல்லைனு என் மனசு சொல்லுது."
"சொல்லும் டி! கேக்குறவன் கேனையான இருந்தா சொல்லும். நைட்டு சும்மா விட்டேன்ல. சொல்ல தான் செய்யும்." என்றவன் பேச்சில் சிறு மென்னகை அவனுக்கு காட்டாத வகையில் அவளிடம்.
தன் பக்கம் தான் தவறு என புரிந்தாலும் இவனிடம் அதை மென்மையாய் கூறி மன்னிப்பு கேட்க தோன்றவில்லை. அவன் பேச்சும் நடத்தையும் என நேற்றுக்கு இன்று அவன் வித்யாசமாய் தெரிய, எதையும் அவன்முன் வெளிகாட்டாமல் அவனிடமே மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள்.
ஹரிஷ் இப்படி தான். அவன் பேச்சு முதல் அவன் அவனாய் தான் இருக்கிறான் என்றாலும் திருமண பந்தத்தில் தன்னில் பாதியாய் இணைந்தவளிடம் இப்படி வம்புக்கு நிற்பது புதிதாய் தான் இருந்தது.
அவளின் பழிச் சொல்லை அவன் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இதோ ஒரு இரவின் முடிவில் அவள் எண்ணத்தினை தவறு என்று நிரூபித்து இருந்தாலும் அவளின் இந்த மாதிரியான நேர்பட பேச்சில் ஈர்க்கப்பட்டு இருந்தது தான் நிஜம்.
வெண்மதி தான் முழுதாய் அவனிடம் மாறி இருந்தது. தந்தையிடம் காட்டும் பிடிவாதம் இதுவரை வேறு யாரிடமும் அவளிடம் இருந்து வெளிப்பட்டது இல்லை. இதோ முதன்முறையாய் அவனோடு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
**********************************
"நீங்களும் வரலாமே அத்தை?" என வெண்மதி கௌரியிடம் கேட்க,
"இல்ல டா முதல் முதல்ல சேர்ந்து கோவிலுக்கு போறீங்க. நீங்க போய்ட்டு வாங்க. இன்னொரு நாள் சேர்ந்து போலாம்." என்று கூறினார் கௌரி.
"ம்மா நான் ரெடி!" என்று வேஷ்டி சட்டையில் வந்த ஹரிஷ்,
"டாடி! பிளெஸ் மீ!" என தந்தை படம் முன்பு நின்று கேட்டுக் கொண்டு அன்னை அருகே வர,
"மதி! நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல? அதிகமா பேசுவான். ஆனா ரொம்ப நல்ல பையன்." என்று சொல்லி அன்னை சிரிக்க, மதியும் புன்னகையுடன் அவனை திரும்பிப் பார்த்தாள்.
"பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க!" என்று சொல்லி வழி அனுப்ப,
"ம்மா! மதியம் வெளில சாப்பிட்டுக்குறோம். உங்களுக்கு ஏதாச்சும் வேணும்னா கால் பண்ணுங்க!" என்று சொல்லி ஹரிஷ் பைக்கில் சாவியை வைக்கவும்,
"வெயிட் வெயிட்! நானும் வந்துட்டேன்!" என்று உள்ளிருந்து ஓடி வந்தாள் பூஜா.
"லேட் பண்ணிட்டேனா? போலாமா?" பூஜா கேட்க,
"பூஜா? நீ ஆபீஸ் போகல?" என்றார் கௌரி.
"இல்லையே! லீவ் சொல்லிட்டேன். கோவிலுக்கு போறோம் சொன்னிங்க இல்ல?"
காலையில் "இன்னைக்கு கோவிலுக்கு போனும்னு சொல்லிருக்கேன். ஹரி இப்ப சாப்பிட வந்திருவாங்க பூஜா. நீயும் சீக்கிரம் வந்துடு சாப்பிட!" என்று பொதுவாய் கௌரி சொல்லி இருக்க அது அனைவருக்குமானதாய் நினைத்து கிளம்பி வந்திருந்தாள் பூஜா.
"பூஜா! அது வந்து.... நீ இன்னும் சாப்பிடலையே!" எப்படி கூறுவது என தயங்கி கௌரி நிற்க,
"பரவாயில்ல கௌரி ம்மா. வெளில கூட சாப்பிடுக்கலாம். இல்ல ஹரி?" என்றாள் அவள்.
"ஹே அறிவு அருவியே! கல்யாணம் ஆனவங்க புதுசா தனியா போவாங்கனு உனக்கு தெரியாதா? அம்மா மென்னு முழுங்கி சொல்றாங்க. யோசிக்காம கிளம்புற?" என்று முகத்துக்கு நேராய் ஹரிஷ் கூற, பெரிதாய் அடிவாங்கிய உணர்வு சடுதியில் பூஜாவிற்கு.
"நான் தான் டா அவகிட்ட தப்பா சொல்லிட்டேன். அவ சின்ன பொண்ணு. அவளுக்கு என்ன தெரியும்? சரி நீ கிளம்பு. பூஜா நீ வா டா!" என்று கௌரி அழைக்க,
"மூஞ்சை அப்படி வச்சுக்காத! வா போலாம்!" என்ற ஹரிஷ், கார் சாவி எடுத்து வர, சட்டென வெளிச்சம் பூஜாவின் முகத்தினில்.
"ஹரி அவ எதுக்கு..." என்று கௌரி கேட்க வர,
"இருக்கட்டும் ம்மா. லீவ் வேற சொல்லிட்டா. கோவிலுக்கு தானே?" என்றவன் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
அனைத்தையும் கவனித்து கவனத்தில் வைத்து என பார்த்தபடி நின்றாள் வெண்மதி.
"அவசரகுடுக்கை! நீ பின்னாடி இருந்துக்கோ இல்லை படுத்துக்கோ. நிலா நீ முன்னாடி வா!" என்று முதலிலேயே சொல்லி ஹரிஷ் காரில் ஏற, அவனை முறைத்தபடி வந்து அமர்ந்தாள் பூஜா.