• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு நினை சேர்த்தேன் 4

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
அத்தியாயம் 4

"ஆமா! அம்மா சொல்லிருக்காங்க உசிலம்பட்டி பக்கம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. அதுவும் பொம்பள புள்ளைனா பொத்தி பொத்தி வளத்து வச்சிருப்பாங்கன்னு. நீ எப்படி டாக்டர்? நம்பவே முடியல!" என்றான் ஹரிஷ் வம்பிழுத்து.

"எதாவது சொல்லி என்னை டென்ஷன் பண்ணியே ஆகணும் இல்ல உனக்கு?" என்றவள் கோபமாய் பார்க்க,

"ஹே கிண்டல் எல்லாம் பண்ணல. நிஜமா கேட்குறேன். அங்க பசங்களே அவ்வளவா படிக்க மாட்டாங்களாமே? உன் அப்பா இங்க உன்னை படிக்க வச்சதும் இல்லாம சென்னை மாப்பிள்ளை வர பார்த்து... இவ்வளவு தூரம் எப்படி?" என்றான் நிஜமாய்.

"படிக்க ஆசை. படிச்சேன். பிடிச்சது கிடைக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும் தானே? அப்பா முதல்ல ஒத்துக்கல. அப்புறம் என்னை புரிஞ்சிக்கிட்டாங்க. நெக்ஸ்ட் இன்னும் படிக்க தான் ஆசை. பட் அதுக்கு மேல அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்க முடியல. எனக்காக அவங்க யோசிக்கும் போது நானும் அவங்களுக்காக யோசிக்கணுமே! அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன். இங்க வந்து நிக்குறேன்!"

"அதென்ன இங்க வந்து நிக்குறேன். இதை நீ பாசிட்டிவா சொல்றியா இல்ல நெகடிவா சொல்றியா?" என்றான் புருவம் நெரிய.

"உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்கோ. ஆனா இனி உசிலம்பட்டி, அது இதுன்னு சொன்ன..." என்றவள் விரல் நீட்டி எச்சரிக்க,

"ஓகே பளிச்!" என்றதும் தானாய் அவள் கைகளை புடவையை சரி செய்ய,

"ஹாஹா! நான் என்ன சொன்னா என்ன? உனக்கு ஏன் அங்க போகுது உன் புத்தி?" என்றவன் வாயை குறைக்க முடியாது என தெரிந்து தலையணையை தூக்கி அவன்மேல் எறிந்தவள் தூங்க தயாராக,

"தூங்கவா போற?" என்றான் தலையணை கேட்ச் பிடித்து ஓரமாய் வைத்து, கைகளை நெட்டி முறித்து.

"ஆமா! தூங்க தான் போறேன்!" என்றாள் அவளும் அழுத்தமாய்.

"இதென்ன டா சோதனை. இவகிட்ட எப்படி கேட்குறது. என்னனு டாக்டரானா இவ?" தனக்குள் அவன் புலம்பி நிற்க,

"தூக்கம் வருதா என்ன?" என்றான் மீண்டுமாய்.

"ஆமா! அதுவும் பேசிட்டே ரொம்ப தூரம் நடக்க வச்ச இல்ல? அதான் ரொம்ப தூக்கம் வருது!" என்றாள்.

"நிலா!" என்றவன் நிலமை கொஞ்சம் கவலைக்கிடம் தான். மனைவியாய் தன் அறையில். உரிமையாய் தன் அருகில். இப்படி இருப்பவளிடம் நேற்றே விலகி இருக்க முடியவில்லை. இதில் இன்றும். மனம் முழுதும் தாறுமாறாய் சிந்தனை வேறு.

நேற்றாவது ஒரு சிறு தவறான புரிதல். இன்று அவள் புரிந்த பின்னும் இப்படி மறுப்பது தான் அவனை அதிகமாய் யோசிக்கவும் தலை சுற்றவும் வைத்தது.

"ரொம்ப யோசிக்க வேண்டாம். எனக்கு தோணுறதை சொல்றேன்." என்றவள்,

"என்னவோ தோணுது இப்பவே ஏன்னு. நாம நெருங்கின சொந்தம்னாலும் பக்கமா இருந்ததில்ல இவ்வளவு நாளும். இப்ப பக்கமா இருந்தாலும் நெருங்கி தானா வரணும்னு தோணுது!"

"நான் வேணா வரவா?" உடனே அவன் கேட்க,

"புரியாத மாதிரி நடிக்காத! நான் சொல்றது அந்த நெருக்கம் இல்ல."

"புரிஞ்சி மட்டும்... இப்ப என்ன? ஒன்னும் இல்ல அதான?" என்றவனுக்கு,

"இன்னும் புரிஞ்சிக்கணும் நிறைய தெரிஞ்சிக்கணும். எல்லாமே எதிர்பார்க்காம தானா நடக்கனும். ஈஸியா எல்லாம் மூவாகிட்டே இருந்தா சுவாரசியம் இருக்காதே?" என்றாள் கவிதை போல்.

"புரிஞ்சி, தெரிஞ்சி, எதிர்பார்க்காம, தானா, சுவாரசியமா... ஓஹோ!" என்றவன் சொல்லிய விதம் அவளுக்கு புன்னகையை தர,

"நடக்கும். நடக்கும் போது நடக்கட்டும்." என்றவள்,

"நானும் இங்க ஒரு ஹாஸ்பிடல்ல ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன். உன் லீவ் எப்ப முடியுதுன்னு சொன்னா நானும் அப்பவே ஜாயின் பண்ணிக்குறேன்!" என்றாள்.

"விடிஞ்சதும் என் கண்ணுல படாம ஓடிரு. முடிஞ்சா நைட் ஷிப்ட் கேட்டு வாங்கி போ. நானாச்சும் நிம்மதியா தூங்கிக்குவேன்!" என்றவன் அவளுக்கு முதுகுக்காட்டிப் படுத்துக் கொள்ள,

"பரவால்ல! என்ன சொன்னாலும் கேட்டுக்குற!" என சீண்டிப் பார்த்தாள்.

"வேணாம் டி! ஃபீலிங்ஸ்ஸோடா விளையாடாத. திரும்புனேன்னு வையி..." என்றவனின் இலகு தன்மையற்ற ஒரு மாதிரியான குரலில் சுதாரித்தவள்,

"குட் நைட் ராஸ்கல்!" என்று சொல்லி திரும்பிப் படுத்துக் கொள்ள,

"சொல்லு சொல்லு! எவ்வளவு நாளுன்னு நானும் பாக்குறேன்!" என சொல்லிக் கொண்டவன்,

'அடேய் ஹரி! கொஞ்ச நஞ்ச பேரை கெடுத்துக்காம காப்பாத்தவாச்சும் கை காலை சும்மா வச்சுட்டு தூங்கிடு. சிக்கும் போது மொத்தமா வச்சு செஞ்சுக்கலாம். நல்ல பிள்ளையாட்டம் தூங்கிருடா!' என தனக்கு தானே புலம்பிக் கொண்டு உருண்டு புரண்டாலும் அவள்பக்கமே பார்வையை செலுத்தாமல் என நடு இரவில் ஒரு வழியாய் தூங்கிப் போனான்.

இப்படி எல்லாம் எதிர்பார்க்கவில்லை இருவருமே தன் வாழ்க்கை துணை பற்றி. ஆனாலும் இதுவும் ஒரு வித பிடித்தத்தை தான் கொடுத்திருந்தது.

ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டு புரிந்தாலும் புரியாததாய் காட்டி சீண்டிக் கொண்டு என ஒரே நாளில் வாழ்க்கை வெகு அழகாய் வேறொரு கோணத்தில் மாறிய உணர்வு.

பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் இருவருள்ளும் அன்பு துளிர்விட ஆரம்பித்திருக்க, தேன் கூட்டில் கல் எறிந்த கதையாய் முற்றிலும் எதிர்பாராத திருப்பம்.

வெண்மதி விக்கித்து நிற்கும் படி நடக்கும் நாளும் வந்து சேர, அழகாய் சென்று கொண்டிருந்த இவர்களின் நாட்களில் கலங்கம் வரும் காலமும் வெகு அருகில் தான் இருந்தது.

புரிந்து கொள்ள வேண்டியவனுக்கு புரிய வைக்க வழி தெரியாமல் தடுமாறினாள் வாழ்க்கையில் முதல் முறையாய்.

விளைவாய் ஹரிஷ் அவனின் மற்றொரு முகத்தை காணும் நாளும் என இதோ வெண்மதி அவன்முன்.

****************************************

"அட விடு நாராயணா! அவன் எதாவது உளறிட்டு கிடைப்பான். நீ அடுத்து என்னனு பாரு!" ஊர் பெரியவர்களில் ஒருவர் சொல்ல,

"என்ன வார்த்தைய சொல்லிட்டு போறான். அவனுக்கு என்னைய பத்தி தெரியாதாக்கும்? பெரிய இவனாட்டம் பேசுதான். இந்த ஊர்ல தான இருக்கான். அப்படியா தெரியாம போய்ட்டான்?" என ஏக கோபத்தில் சத்தமாய் கூறினார் நாராயணன்.

குருநாராயணனும் மேகலாவும் ஊருக்கு வந்ததும் திருமணத்தில் நடந்த அனைத்தையும் கேள்விபட்டு சென்னைக்கு வராதவர்கள் அனைவரும் வீட்டின் முன்பேயே கூடிவிட்டனர்.

"சரிய்யா உன் தங்கச்சி மவனுக்கு தான குடுத்துருக்க. மனசு விட்டு போகாத"

"அதான! எம்புட்டு பாத்து பாத்து பண்ணுனாலும் ஏமாத்துற பயலுவ ஊர் உலகத்துல இருக்க தான் செய்யுதானுங்க வுடு பார்த்துக்கலாம்." என்று சிலர் குருநாராயணனுக்கு ஆதரவாய் பேச,

"மாப்பிள்ள அவனா ஓடி போனானோ இல்ல இந்த பெரியவரே ஆள் வச்சு எல்லாத்தையும் நடத்திக்கிட்டாரோ யாருக்கு தெரியும்?" என்று குருநாராயணன் முன் வந்து நின்றான் ஒருவன்.

தந்தைவழி உறவு. அவனுக்கு வெண்மதியை கேட்டு அவன் குடும்பத்தினர் வந்திருந்த சமயம் படிப்பில்லை கூடவே தொழில் எதுவும் இன்றி ஊரை சுற்றி வருகிறான். சொத்து இருக்குன்னு இவனை கல்யாணம் பண்ணிக்கவா? " என மறுத்திருந்தாள் வெண்மதி.

"என்னத்த பேசுத. மறுவாதியா பேசு. அங்க அத்தனை பேர் முன்னு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து அவளை தான் கல்யாணம் பண்ணிருக்கேன்னு நின்னான்!" என்று பெரியவர் ஒருவர் எடுத்து சொல்ல,

"உடனே தங்கச்சி மவன் எங்கருந்து பறந்து வந்தான்?" என்று நக்கலாய் கேட்டான் அவன்.

"அம்புட்டு தான் மரியாதை எல்லாம் உனக்கு!" என்று எழுந்து அவன்முன் கைநீட்டி சிவந்த கண்களுடன் நின்றுவிட்டார் குருநாராயணன்.

"வார்த்தை முக்கியம். பேசுத முன்ன யோசிக்கணும்." என்று அவர் சொல்ல,

"நான் தான் கௌரிக்கு போனப் போட்டேன். அங்க நிலவரம் சரி இல்லாமல் இருக்கவும் கௌரிகிட்ட பேசுன சொன்னதும் அவ புள்ளைய நம்ம மதிக்கு கேட்டு பாருன்னு சொன்னதும் நான் தான்" என்று முன்வந்தார் பெண்மணி.

"என்ன நடந்ததுன்னு தெரியாம தலைய குடுக்காத டா!" என்று கூட்டத்தில் பெரியவர் ஒருவர் சொல்ல,

"எல்லாம் தெரிஞ்சி தான் சொல்லுதேன். பொண்ணு கேட்டு வந்த என் அம்ம அப்பனை அசிங்கப்படுத்தி அனுப்பிட்டு பல வருஷமா பகையா இருந்த தங்கச்சிகிட்ட போய் தலைகுனிஞ்சி ஏன் நிக்கணும்ங்கேன்? எல்லாமே ட்ராமா தான். ஊர் முழுக்க இப்படி சொல்லி நம்ப வச்சு போய் தங்கச்சி வீட்டுல உறவாடியாச்சு!" என்றவன் சட்டையை கொத்தாய் பிடித்துவிட்டார் குருநாராயணன்.

"விடு நாராயணா! விடுங்கேம்ல!" என பலர் வந்து தடுக்க, இன்னும் துள்ளிக் கொண்டு தான் இருந்தான் அவன்.

"உனக்கு என்ன வந்துது? அவர் பொண்ண அவர் தங்கச்சி பையனுக்கு குடுத்தா உனக்கு என்ன? கூட இருந்து இவ்வளவு பேர் பாத்துருக்கோம். அங்க நடந்தத தான் எல்லாரும் சொல்லுததும். நம்பலைன்னா போய் உன் வேலைய பாரு. இன்னும் பேசி நாராயணன் கையால அடி வாங்கிராத. இத்தனை வருஷத்துல தங்கச்சினு என்னைக்காவது பேசி பாத்துருப்பியா இல்ல அந்த கௌரி புள்ள தான் இங்க வந்து பாத்துருக்கியா? சும்மா சடவ கூட்டாம போ!" என அவனை மற்றவர்கள் விரட்டி இருந்தனர்.

"நாராயணா மத்தவங்க பேசுதது இருக்கட்டும். புள்ளைய மறுவீடு கூப்புடனும். நல்ல நாள் பாத்து போய் கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணு. பெரியவங்கள கூட்டிட்டு போ. எவனுக்கும் பதில் சொல்லி ஆவ போறது ஒன்னும் இல்ல!" என்று சொல்ல, குருநாராயணணுமே அதை தான் யோசித்தார்.

மகள் நன்றாய் நலமாய் வாழ்ந்தாள் போதும். யாருக்கு எதை நிரூபித்து என்ன என்று நினைத்தவர் அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் மனைவி சொந்தம் என ஐவர் சேர்ந்து கிளம்பி இருந்தனர் மகளை மறுவீடு அழைக்க.

திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருக்க, அண்ணன் அண்ணி தன் ஊர் சொந்த உறவுகள் என இன்று தன் வீட்டுக்கு வர இருக்க அத்தனை பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார் கௌரி.

இன்று வருபவர்களுடன் ஹரிஷ், வெண்மதி இருவரும் சென்று இரு நாட்களாவது தங்கி இருந்துவிட்டு வர வேண்டும். ஹரிஷ் அதற்கு முடியாது என்று சொல்ல, வெண்மதி கோபமாய் இருக்க, கௌரி தான் கத்திக் கொண்டிருந்தார்.

"ஏன் டா அந்த பொண்ணை பாடா படுத்துற?"

"விடுங்க அத்தை! வரலைனா இருக்கட்டும். நான் மட்டும் போய்ட்டு வர்றேன்!" என சொல்லி வெண்மதி தன் கோபத்தைக் காண்பிக்க,

"என்ன மதி நீயும்?" என்றவர் பயந்து தான் போனார். முதல் நாள் இருவரையும் பார்த்து தான் சந்தோசப்பட்டது என்ன? இன்று இவர்கள் நடந்து கொள்வது என்ன என்று.

ஹரிஷ் கேட்டுக் கொண்டிருந்தவன் மனைவியை ஓரப் பார்வையில் முறைக்க,

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க. ஹரி நீ போற அவ்வளவு தான். மதி! நீ போய் அவன் ட்ரெஸ் எடுத்து வை!" என்று சொல்ல, மறுப்பு எதுவும் இன்றி தன் அறைக்கு சென்றாள் அவள்.

"என்ன டா?" என்று ஆயாசமாய் அன்னை கேட்க,

"ம்மா! இதெல்லாம் செல்ல சண்டைகள். நான் என்ன விளக்கம் குடுக்க?" என்று சொல்லி சிரித்துவிட்டு மேலே செல்ல, புரியாமல் பார்த்து நின்றது கௌரி. பொறாமையில் நின்றது பூஜா.

"நீ கூப்பிட மாட்டியா உன் வீட்டுக்கு?" என்று வெண்மதி அருகே அவள் தனக்கு எடுத்து வைக்கும் உடைகளை பார்த்தபடி கேட்டான் ஹரிஷ்.

"அது இப்ப என் அம்மா வீடு. மறுவீட்டுக்கு அழைக்க தான் அவங்க வர்றாங்க. பின்ன என்ன நான் தனியா அழைக்குறது?" என்றாள் அவளும் அவனை பாராமலே.

"வரலைனா ஒன்னும் பிரச்சினை இல்ல. எப்ப வர்றிங்களோ அப்ப வந்து என்னை கூப்பிட்டுக்கோ. நான் அதுவரை என் அம்மா வீட்டுலயே இருந்துக்குறேன்!" என்று சாதாரணம் போல வெண்மதி சொல்ல,

"இப்ப நீ அங்க இருந்தா என்ன இங்க இருந்தா என்ன? இங்க கண்ணு முன்னாடி பளிச்சுன்னு சும்மா நிக்கிறதுக்கு அங்கேயே போய் இரு!" என்றவன் சொல்லில் அவள் திரும்பி அவனை முறைத்து புடவையை சரி செய்ய,

"இதுல கொடைக்கானல் எங்களுக்கு பக்கம் தான் போகலாம்னு வேற சொல்ற! அதெல்லாம் ஹனிமூன் கொண்டாடுறவன் போகலாம். வேடிக்கை பார்க்க எவனாவது போவானா? அதுவும் புதுசா கல்யாணம் ஆனவன்!" என அத்தனை பேசினான் ஹரிஷ்.

"இப்ப என்ன பிரச்சனை உனக்கு?" வெண்மதி கேட்க,

"எனக்கென்ன பிரச்சனை? கல்யாணம் ஆகி அஞ்சு நாள் ஆச்சு. வேற என்ன பிரச்சனை!" என்றான் பல்லைக் கடித்து.

"ராஸ்கல்! எப்பவும் இதே பேச்சு தான். போலீசா நீ?" என்றவள்,

"பொறுக்கி! பொறுக்கி" என்று மெதுவாய் சொல்ல,

"சொல்லு சொல்லு! நீ சொல்ல தான் செய்வ. உன்னை விட்டு வச்சிருக்கேன்ல. நீ சொல்ல தான் செய்வ!" என்றான்.

"அது அதுக்குன்னு ஒரு நேரம் இருக்கு. நாள் இருக்கு. புரியாத மாதிரி பேச கூடாது. கல்யாணம் நடந்த மாதிரி இனி என் வாழ்க்கைல எதுவும் அந்த நேரம் நடந்தே ஆகணும்னு நடக்க கூடாதுன்னு நினைக்குறேன். எனக்கு டைம் வேணும்!" என்றாள் நேராய்.

"இப்ப குடுக்க மாட்டேன்னு நான் சொன்னேனா?"

"ஆனா கொடுக்குறேன்னும் சொல்லல. இப்படி புலம்பிட்டே அத்தை முன்னாடி நின்னா என்னை என்னனு நினைப்பாங்க."

"ஒரு போலீஸ்காரனுக்கு சாதாரண மனுஷனா புலம்ப கூட உரிமை இல்லையா? உன்னை எல்லாம் உன் இஷ்டத்துக்கு விட்டா என் காதுல பூ வச்சிடுவ. அதனால நான் நியாபகப்படுத்திட்டே தான் இருப்பேன். நீ எப்பவும் போல முடியாதுன்னு சொல்லிட்டே இரு. நான் இப்படி தான்" என்று ஹரிஷ் சொல்ல,

"ஓஹ்! அவ்வளவு தான. சரி முடியாது. இப்ப கிளம்புங்க. அப்பா இப்ப வந்திடுவாங்க. நாம போறோம் டாட்!" என்றவள் பேச்சினூடே அவனுடைமைகளையும் எடுத்து வைத்திருந்தாள்.

"நான் யாரு! எங்க எப்படி இருந்தவன். இப்டின்றதுக்குள்ள அசிங்கப்படுத்திட்டு போறா!" என்று தலையில் கை வைத்தவன் கார் வரும் சத்தம் கேட்க,

"மீச வந்துடுச்சி போல!" என சொல்லிக் கொண்டு கிளம்ப தயாரானான்.

மேகலா தான் கௌரியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

"வாங்க அண்ணே!" என்று கௌரி அழைத்த போதும் பேசாமல் தான் உள்ளே வந்திருந்தார் குருநாராயணன்.

இப்பொழுதும் அவரே வந்து நீரை கொடுக்க, மேகலா தான் எடுத்து கணவர் கையில் கொடுத்தது.

 

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
"அப்பா!" என்று வேகமாய் இறங்கி வந்தாள் வெண்மதி.

"மதி!" என்று எழுந்தவ உடனே மகளை தோளோடு அணைத்துக் கொள்ள, தந்தை நெஞ்சில் சலுகையாய் சாய்ந்து கொண்டாள் வெண்மதி.

"எப்படி டா இருக்க?"

"அப்படியே தான் இருக்கேன் பா. அதான் பாக்குறீங்களே என்னனு தெரியுது?" மகள் கேட்க,

"அப்படி கேளு மதி. டாக்டர் பொண்ணுகிட்ட பேசுற மாதிரியா பேசுறீங்க?" என்றது மேகலா.

"டாக்டர்னாலும் முதல்ல தன் பொண்ணுன்றது தான் அவருக்கு தோணும். பொண்ணு சந்தோசமா இருக்காளானு தெரிஞ்சிக்க வேண்டாமா?" கௌரி புன்னகையோடு கேட்க,

"இன்னும் சின்ன குழந்தைனு நினைப்பு!" என்று சொல்லி சிரிக்க, தங்கையிடம் இன்னமும் இலகுவாய் பேசிட முடியாமல் ஒதுங்கி நின்றார் குருநாராயணன்.

"சாப்பிட்டுட்டே பேசலாம் வாங்க அண்ணி!"

"மாப்பிள்ளை வரட்டுமே!"

"அவன் வரும் போது வரட்டும்! மதி! நீ அப்பா அம்மாவை சாப்பிட கூட்டிட்டு வா. நான் எடுத்து வைக்குறேன்!" என்று கௌரி உள்ளே செல்ல,

"மதி மா! நிஜமா நீ சந்தோசமா இருக்கியா டா?" என்றார் தந்தை.

"ப்பா! உங்களை அம்மாவை பாக்க முடியலைன்னு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துது. வேற ஒன்னும் இல்லை. கௌரி அத்தை என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்குறாங்க!"

"அப்ப மாப்பிள்ளை? போலீஸ் வேற! ரொம்ப கோவக்காரரா?" அன்னை கேட்க,

"ம்மா! அதெல்லாம் இல்ல. அவன்.... அவங்க கொஞ்சம் டிஃப்பரன்ட். அதிகமா பேசுவாங்க. ஜாலியான பர்சன் தான். அங்க தான வர்றோம். நீங்களே பேசி தெரிஞ்சிக்கோங்க. இப்ப வாங்க சாப்பிடலாம்!" என்று எழுந்து கொள்ள, தனதறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் பூஜா.

வெளியே நடப்பது அனைத்தும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். ஆனாலும் வெளியே வர தோன்றவில்லை. அலுவலகம் கிளம்பி இருந்தவளை குருநாராயணனும் மேகலாவும் பார்க்க,

"பூஜா தானே?" என்றார் குருநாராயணன்.

"உங்களுக்கு பூஜாவை தெரியுமா ப்பா?" ஆச்சர்யமாய் வெண்மதி கேட்க, பூஜாவுக்குமே அதே ஆச்சர்யம் தான்.

"தெரியும் டா. அன்னைக்கு மண்டபத்துல வச்சே கேள்விபட்டேன்." என்றவர்,

"இப்போ பார்த்த உடனே சட்டுனு நியாபகம் வந்தது. நல்லாருக்கியா மா?" என்று கேட்க, மேகலாவும் புன்னகைத்தார் பூஜாவிடம்.

"வெளில போறியா பூஜா?" மேகலா கேட்க,

"ஆபீஸ் கிளம்புறேன் ஆண்ட்டி!" என்றவள் தயக்கமாய் பார்த்தாள்.

"ஆபீஸா? நீயும் தான எங்களோட வர்ற?" மேகலா சொல்ல, பூஜா வெண்மதியை பார்க்க, அவளுமே புரியாமல் தெரியாமல் விழித்தாள்.

"இல்ல ஆண்ட்டி! இன்னொரு நாள் நான் வர்றேன்!" பூஜா சொல்ல,

"நீ தனியா இங்க என்ன பன்ன போற பூஜா? நீயும் மதி மாதிரி தான் எங்களுக்கு" குருநாராயணன்.

"ஆமா மா. கௌரி, மாப்பிள்ளை, வெண்மதி எல்லாரும் வர்றாங்க. நீயும் கண்டிப்பா வரணும்!" என்று சொல்ல,

"எங்க அத்தை பூஜாவை கூப்பிடுறிங்க?" என வந்தான் ஹரிஷ்.

"வாங்க மாப்பிள்ளை!" என்ற மேகலா,

"ஊருக்கு தான் கூப்பிடுறேன். தனியா இங்க பூஜா என்ன பண்ணுவா அதான்!" என்று சொல்ல,

"தனியா ஏன்? அம்மா இங்க தானே இருப்பாங்க?" என்றான் அவன்.

ஊரில் இருந்து வரும் பொழுதே அனைவரும் சொல்லி தான் அனுப்பி இருந்தனர் கௌரியை அழைத்து வர சொல்லி. அப்போதும் மேகலா கணவனைப் பார்திருக்க,

"அதான் சொல்றாங்க இல்ல. கூப்பிடு. கூட்டிட்டு வருவோம்!" என்று அவர் சொல்லி இருந்ததால் தான் இப்பொழுது இவர்கள் சாதாரணமாய் பேசியதே!

ஹரிஷ் இப்படி சொல்லவும் மேகலா மகளை பார்க்க, பூஜா அங்கே தான் நிற்பதான் கிளம்பவா என பார்த்தாள்.

"சாப்பிட வர சொன்னா இங்க என்ன பண்றிங்க எல்லாரும். பூஜா நீயும் வா. சாப்பிட்டு கிளம்பு!" என்று கௌரி வர,

"கௌரி! சாயந்திரமா எல்லாருமா தான் ஊருக்கு போறோம். எல்லாரும்னா எல்லாரும். நீ, மதி, மாப்பிள்ளை, பூஜா இப்படி எல்லாரையும் கூட்டிட்டு போக தான் வந்திருக்கோம்!" என்றார் மேகலா.

"எல்லாருமா?" என்ற கௌரி இதை எதிர்பார்க்கவில்லை என்பதாய் பார்த்தவர்,

"இல்ல அண்ணி! நீங்க அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போங்க. நாங்க இன்னொரு நாள்..." என்று சொல்ல வர,

"என்ன இன்னொரு நாள் ரெண்டு நாள்னு? மேகலா! எல்லாரும் தான் போறோம். சொல்லு!" என்ற குரு நாராயணன்,

"மதி!" என்று அழைக்க, புரிந்த மகளும்,

"அதான் அப்பா சொல்றாங்களே அத்தை. எல்லாருமா போலாம்!" என்றாள்.

"அதெல்லாம் வேண்டாம்!" என்றது ஹரிஷ்.

"ஏன்? அத்தை வந்தா உன... உங்களுக்கு என்ன?" வெண்மதி பாய்ந்து சண்டை போல வர,

"மதியாதார் தலைவாசல் எங்கம்மா மிதிக்க மாட்டாங்க. எனக்கு தான் வேற வழி இல்ல. அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா போய்ட்டேன்!" என்றவன் பேச்சை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் குருநாராயணன்.

இவ்வளவு பேசுவான் என எதிர்பார்க்கவே இல்லை அவர்.

"என்ன பேசுற நீ?" என ஹரிஷ் காதுக்குள் மதி சீற,

"அடங்கு டி! எனக்கு தெரியும் என்ன பேசணும்னு. அமைதியா நடக்குறதை வேடிக்கை மட்டும் பாரு!" என்றவன்,

"ப்பா! நான் சரியா தான சொன்னேன்? இவ்வளவு நாளும் அம்மாக்கு நான் தான் நான் மட்டும் தான் இருந்தேன். இனியும் அப்படி தான? இவ்வளவு நாள் வராத யாரும் அவங்க பொண்ணுக்காக போனா போகுதுன்ற மாதிரி என் அம்மாவை அழைக்குறதுல எனக்கு உடன்பாடில்ல. அம்மா அவங்க வீட்டுல ராணியாவே இருந்துக்கட்டும். இல்லப்பா?" என தந்தை படம் முன்பு நின்று ஹரிஷ் பேச, மதி பல்லைக்கடித்து அவனை முறைத்து நின்றாள்.

"என்ன டி இது?" மேகலா மகளிடம் கேட்க,

"அவங்க அப்பாகிட்ட இப்படி தான் அடிக்கடி பேசிக்குவார் ம்மா. வேற ஒன்னும் இல்ல!" என்றாள் அவளும்.

"டேய் ஹரி! என்ன பேச்சு இது? அப்பா உன்கிட்ட சொன்னாரா அம்மாவை அனுப்பாதன்னு? எனக்கு தோணும் போது நானே வருவேன். இப்ப நீ கிளம்புற வழிய பாரு. அதிகமா பேசாத!" என்ற கௌரி,

"அவன் கொஞ்சம் அப்படி தான். அதெல்லாம் பெருசா நினைச்சுக்காதீங்க அண்ணே. நான் இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்!" என்று அண்ணனிடம் கூறினார்.

"எல்லாரும் தான் போறோம்னு சொல்றேன்ல!" என அப்போதும் பொதுவாய் குருநாராயணன் கூற,

"அதான் முடியாதுன்றேன்ல!" என அவரோடு மல்லுக்கு நின்றான் ஹரிஷ்.

இன்னும் வந்தவரை வா என்று கூட அவன் அழைக்கவில்லை. அவரும் மாப்பிள்ளை என்று அவனிடம் பேசவில்லை. ஆரம்பமே இப்படி இருக்க திகைத்து தான் நின்றனர் அனைவரும்.

"கௌரி!" என்று மேகலா செய்வதறியாமல் அழைக்க,

"அண்ணி!" என்ற கௌரியும் மகனை கெஞ்சலாய் பார்க்க, முடியாது என்றே தலையசைத்தான் அவன்.

"நான் ஆபீஸ் போட்டுமா?" என இடையே பூஜா கேட்க,

"அதெல்லாம் இல்ல. நாம ஊருக்கு போறோம். நீ போய் உனக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வை!" என்று கட்டளையாய் குருநாராயணன் சொல்ல,

"அதெப்படி நீங்க...." என்று ஹரிஷ் அவர் அருகே வர, கௌரி

"நான் வர்றேன் அண்ணி! நான் வர்றேன். பூஜா ஆபீஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லு டா. ரெண்டு நாள்ல வந்துடலாம்." என்றவர்,

"நீ அவங்கள சாப்பிட கூட்டிட்டு போ மதி!" என்று மருமகளிடம் சொல்லி மகனை தனியே அழைத்து வந்தார்.

"ஏன் டா பிரச்சனை பண்ணிட்டே இருக்க? இவ்வளவு நேரமும் போக மாட்டேன்னு என்கிட்ட பிடிவாதம். இப்ப தேவ இல்லாம என் அண்ணேகிட்ட முறைச்சுகிட்டு நிக்குற. காலைல இருந்து உன்னோட..." என்றவர் மகனை முறைக்க,

"பின்ன என்னம்மா? வா கௌரின்னு உன்னை ஒரு வார்த்தை கூப்பிடுறாரா பாரு. அவர் கூப்பிடாம நீ வர கூடாது." என்றான் அன்னையிடம்.

"அதெல்லாம் சட்டுனு நடந்துடாது ஹரி. முப்பது வருஷம் ஓடி போச்சு. நீ என்ன குழந்தையா? கொஞ்சம் கொஞ்சமா பேசட்டும். இப்படி எல்லாம் நீ இருக்காத. எப்பவும் போல இரு. அதான் அண்ணனே சொல்லிட்டாறே எல்லாரும் தான் போறோம்னு. என் அண்ணே சொன்னா சரியா தான் இருக்கும். நான் பூஜா வர்றோம். அண்ணனுக்கு எப்ப தோணுதோ அப்ப பேசட்டும். நீ மாமான்ற மரியாதையையோட பேசு!" என நீளமாய் வகுப்பெடுக்க,

"உன்னை அப்பாகிட்ட சொல்லி குடுக்கேனா இல்லையா பாரு. இவ்வளவு நாளும் அந்த பேச்சு பேசிட்டு... உன் வீட்டாளுங்கள பார்த்ததும் என்னமா கத விடுற!" என்றவன்,

"பிறந்து வளந்த ஊரை பாக்கனும்னு உனக்கும் ஆச வந்துட்டு. அதனால சும்மா விடுறேன். அந்த ஆளை அப்புறமா பாத்துக்குறேன்" என்று சொல்லி அன்னையுடன் சாப்பிட வந்தான்.

"நீங்க உக்காருங்க அத்தை. நான் பரிமாறறேன்!" என்று கௌரியை மதி சொல்ல,

"நீ அப்பாகிட்ட இரு. சாப்பிடு. நான் லேட்டா தான் சாப்பிடுவேன்." என்றவரை வழுக்கட்டாயமாய் அமர வைத்தாள் வெண்மதி.

"அவளுக்கு சமைக்க ரொம்ப எல்லாம் வராது கௌரி. ஆனா இந்த மாதிரி பரிமாற ரொம்ப ஆசைப்படுவா. வீட்டுலேயும் இப்படி தான்!" என்றார் மேகலா.

"பரிமாற மட்டும் புடிக்கும்?" என்று கேள்வியாய் தன்னருகே நின்று தனக்கு பரிமாறுபவளை ஹரிஷ் கேட்க,

"ராஸ்கல்!" என்று யாரும் அறியாமல் கூறி அவள் நெற்றிக் கண்ணை திறக்கப் பார்க்க,

"இல்ல டி சமைக்க மாட்ட ஆனா பரிமாறுவியா? அதை தான் கேட்டேன். நீ என்ன நினச்ச? நான் எப்பவுமே சிங்கிள் மீனிங்ல தான் பேசுவேன்!" என்றவனை என்ன செய்யலாம் என்பதை போல பார்த்துவிட்டு நகர்ந்தாள் அவள்.

"பூஜா! ஆபீஸ்ல பேசிட்டியா?" என்று மேகலா கேட்க,

"ம்ம் பேசிட்டேன். ஓகே சொல்லிட்டாங்க ஆண்ட்டி!" என்றவள் சந்தோசமாய் தான் சம்மதம் கூறினாள் வெண்மதியின் ஊருக்கு செல்ல.

"பூச்சி! உன்னையெல்லாம்... நானே எதுக்கு போறேன்னு தெரியலையாம். இவ வேற!" என்றவனை,

"சும்மா இரேன் டா." என்று அடக்கினார் கௌரி.

"ம்மா நான் வெளில போறேன். ஊருக்கு போக உங்களுக்கு எதாவது வாங்கணும்னா வாங்க!" என்று ஹரிஷ் அழைக்க,

"எனக்கு என்ன டா. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்." என்று கௌரி சொல்ல,

"ஹரி! நான் வரவா? கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்!" என்றாள் பூஜா.

"சரி வா!" என்றவன்,

"உசிலம்பட்டி உனக்கு?" என்று அனைவரின் முன்பும் சர்வ சாதாரணமாய் கேட்டு வைக்க, எவ்வளவு விரிந்து கொள்ளுமோ அவ்வளவு விரிந்தது வெண்மதியின் கண்கள்.

அதன்பின் தான் தன் வார்த்தையை உணர்ந்தவன் மற்றவர்களைப் பார்க்க, அவர்களுக்கோ அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று புரியாத பார்வையில் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்தனர்.

"உன்னையெல்லாம்...." என்று பல்லைக் கடித்தபடி அவனருகே வந்தவளை,

"வெயிட் வெயிட் வெயிட்!" என்று பின்னால் நகர்ந்தவன்,

"அன்எக்ஸ்பெக்டட்! ப்ளீஸ்!" என்று கண்களை சுருக்க,

"போய் தொலை!" என வாய்க்குள் முனங்கிவிட்டு திரும்பிவிட்டாள்.

"இவளுக்கு பேரை மாத்தணும்!" என்றவன் சட்டென தோன்றியது போல,

"நிலா! கார் சாவி எடுத்துட்டு வா!" என்று வேண்டுமென்றே சத்தமாய் அழைக்க, மீண்டுமாய் பெற்றோர் அனைவரும் அவன் அழைப்பில் விழித்துக் கொண்டனர்.

"வெண்மதினு என் அப்பா எனக்கு பேர் வச்சிருக்கார். நீ அப்படி கூப்பிட்டா மட்டும் போதும்." என்று சொல்லி சாவியை அவனிடம் நீட்ட, உள்ளிருந்து தயாராய் வந்து கொண்டிருந்தாள் பூஜா.

"லாங்கா இருக்கே? வெண்மைனு கூப்பிடவா?" என்றவனை எதுவும் செய்ய முடியவில்லையே என்பதை போல பார்த்தவள் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

"ஏன் டா அவங்களை டென்ஷன் பண்ணிட்டே இருக்க?" பூஜா கேட்டு அருகே வர,

"அதெல்லாம் நீ கண்டுக்கப்படாது. எங்க போகணும் சொல்லு!" என்று சொல்லி காரில் ஏறிக் கொண்டான்.

கௌரி தானும் தனக்கு வேண்டியதை எடுத்து வைக்க செல்ல, ஹாலில் அன்னை தந்தையுடன் அமர்ந்திருந்த வெண்மதி அன்னை மடியில் தலைவைத்துக் கொண்டாள் "தேங்க்ஸ் ப்பா!" என்று கூறி.

"ஏன் டா?" என்று அன்னை கேட்க,

"அப்பா சொல்லாம நீங்க அத்தையை ஊருக்கு கூப்பிட்டிருக்க மாட்டிங்க இல்ல. அதான். அத்தை ரொம்ப நல்லவங்க ம்மா. பாவம். எனக்கு என்னவோ கில்ட்டியா பீல் ஆகுது இவ்வளவு நாளும் அவங்களை நாம கண்டுக்காம விட்டுட்டு இப்ப இப்படி இருக்குறது." என்றாள் வெண்மதி.

"ஏன் மதி? உன் வீட்டுக்காரர் எதாவது சொல்லி காமிச்சாரா? அவங்க அம்மாவை நாம எதுவும் சொன்ன மாதிரி?" என்று பதறி கேட்டார் மேகலா.

"ச்சே! ச்சே! அதெல்லாம் இல்லம்மா. இதை தான் சொல்றேன். அம்மா, பையன் ரெண்டு பேருமே அந்த மாதிரி கேரக்டர்ஸ் இல்ல. அவங்க அவங்க லைஃப்ல ஜாலியா இருந்துட்டு இருக்காங்க!" என்றாள் புன்னகையோடு.

"இங்க உனக்கு எப்படி போகுது? அதை சொல்லு. வீட்டுக்காரர், அத்தை எல்லாம் எப்படி பேசுறாங்க? எப்படி நடந்துக்குறாங்க?"

"ம்மா! அதான் சொன்னேனே! ரெண்டு பேருமே என்னை ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க!"

"இல்ல மாப்பிள்ளை உன்னை உசிலம்பட்டின்னு..." என்று குருநாராயணன் கேட்க,

"அதுவா? நான் கிராமமாம் அவரு சிட்டியாம். அதான் சீன் போடுறாரு!" என்று சொல்லி சிரிக்க, அவள் பேச்சில் பொய்யில்லை என புரிந்தது பெற்றவர்களுக்கு.

நிலவு தொடரும்..
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
இவனுக்கு இருக்கிற வாய்க்கு தாய்மாமனோடு வம்பு பண்ணலன்னா தான் அதிசயம்🤣🤣🤣

இப்ப ஊருக்குப் போய் என்ன வம்பு பண்ணப் போறானோ🧐🤔
 
  • Wow
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
இவனுக்கு இருக்கிற வாய்க்கு தாய்மாமனோடு வம்பு பண்ணலன்னா தான் அதிசயம்🤣🤣🤣

இப்ப ஊருக்குப் போய் என்ன வம்பு பண்ணப் போறானோ🧐🤔
இவனெங்க பண்ண 🤣🤣
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️பூஜா சந்தர்ப்பம் கிடைக்கும் போது நல்லா ஊடாடுறா i🙄🙄🙄🙄🙄🙄குரு நாராயணான் எப்போ தங்கச்சி கிட்ட நேரா பேசுவாரோ 🤔🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️பூஜா சந்தர்ப்பம் கிடைக்கும் போது நல்லா ஊடாடுறா i🙄🙄🙄🙄🙄🙄குரு நாராயணான் எப்போ தங்கச்சி கிட்ட நேரா பேசுவாரோ 🤔🤔🤔🤔🤔🤔
பேச வச்சிடுவோம் 😍