• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிலவோடு நினை சேர்த்தேன் 5

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
அத்தியாயம் 5

குருநாராயணன் திரும்பி பார்த்தார் என்று மற்றவர்கள் நினைக்க வாய்ப்பில்லாமல் அவர் முறைத்துப் பார்த்தார் என தெளிவாய் தெரிந்தது அவரின் பார்வை.

குருநாராயணன், மேகலா, கௌரி, பூஜா என அனைவரும் ஒரே காரில் ஏறிக் கொள்ள,

"நீயும் மாப்பிள்ளையும் பின்னாடி ஏறிக்கோங்க டா" என்ற குரு நாராயணன் அனைவரும் செல்வதற்கு வசதியாய் ஒரு வண்டியை கொண்டு வந்திருக்க,

"அதெல்லாம் வேண்டாம். நீங்க முன்னாடி போங்க. நான் நிலா கூட பின்னாடி நிக்குற வண்டில வர்றேன்!" என்று தனது காரை காட்டினான் ஹரிஷ்.

"தனியாவா? அதெல்லாம் வேண்டாம். பாதை நல்லா இருக்காது. வாங்க ஒரே வண்டில போய்டலாம்!" குருநாராயணன்.

"முடியாது. நான் தனியா தான் வருவேன்!" என்று மீண்டும் அவரோடு போருக்கு நின்றான்.

"நான் இதுக்காகவே பெரிய வண்டியா ஏற்பாடு பண்ணி தான் வந்தேன்!" அழுத்தி கூறி நின்றார் குருநாராயணனும்.

"நானும் இதுக்காக என் காரை சர்வீஸ் பண்ணி விட்ருக்கேன்!" என்று ஹரிஷ் சொல்ல,

"ஒரே இடத்துக்கு ஏன் ரெண்டு கார். அதான் இடம் இருக்கே. அப்பா கூடவே போலாம். வாங்க!" வெண்மதி இடையில் வர,

"அங்க போய் ஒவ்வொண்ணுக்கும் உன் அப்பா காரை எதிர்பார்த்து என்னால இருக்க முடியாது. நான் என்னோடதுல தான் வருவேன்!"

"இவன் வேற! எதாவது ஏழரை கூட்டிட்டே இருப்பான்!" என்று காரில் இருந்தே கூறிய கௌரி,

"அவங்க தனியா வரட்டுமே ண்ணே! புதுசா கல்யாணம் ஆனவங்க!" என்று தயங்கி கேட்டார்.

"அதான் மாப்பிள்ளை சொல்லறாரு இல்ல. அவர் பேசுறதும் சரி தான். நமக்கு பின்னாடியே அவங்க வரட்டும். நீங்க வண்டிய எடுங்க!" என்றார் மேகலாவும்.

"ஹரி! நானும் உன்னோட வர்றேன்!" என பூஜா இறங்கப் பார்க்க, கௌரி தடுக்க வரும் முன், கார் கதவை அறைந்து சாற்றிய ஹரிஷ்,

"பூச்சி! நசுக்கிடுவேன். ஓடிடு. ஹனிமூன் போக விடாமல் உசிலம்பட்டிக்கு ஊரோட கிளம்பிட்டு இப்ப கூடவும் வர்றாளாம்!" என்றவன்,

"கிளம்புங்க எல்லாரும்!" என்று சொல்லி தனது வண்டியை நோக்கி நடந்தான்.

"இவ்வளவு திமிர் அதிகம் தான் உனக்கு. ஏன் என் அப்பா கூட வந்தா என்ன உனக்கு?" வண்டியில் ஏறியதும் வெண்மதி சண்டைக்கு நிற்க,

"எந்த காலத்துல வாங்கின வண்டியோ! என்னோட பிரைவேசி எனக்கு முக்கியம்." என்றவன்,

"லாங் ட்ராவெல்க்கும் சாரீ தானா பளிச்?" என்று சொல்லி அவள் முறைப்பையும் வாங்கிக் கொண்டு தான் வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.

"கொஞ்சம் மேல வச்சா நீ என் தலைக்கு மேல போற. என் அப்பா எவ்வளவு ஆசையா வந்திருப்பாரு எல்லாரும் ஒன்னா போகணும்னு?" இன்னும் கோபம் தீராமல் வெண்மதி பேச,

"யாரு நான் தலைக்கு மேல ஏறினேனா? அப்படியே நீ உக்காத்தி வச்சுட்டு தான் வேற வேலை பார்ப்ப! அட போ டி!" என்றவன்,

"உன் அப்பா உனக்கு அப்பாடக்கர் தான் இல்லைனு சொல்லல. ஆனா புருஷன்ற இடத்துல என்னையும் கொஞ்சம் யோசிச்சு பாரு. எதுவுமில்லாம இருக்கேன். சரி ஓகே! அட்லீஸ்ட் பொண்டாட்டி கூட தனியா ஒரு லாங் ட்ரைவ்னு கூட நான் ஆசைப்பட கூடாதா?" என்றவன் கேள்வி சரி தான் என்பதாலோ என்னவோ ஒரு நொடி வெண்மதி தயங்க,

"வேலிட் பாய்ண்ட்டா இருக்கேன்னு யோசிக்குறியா பளிச்?" என்று கிண்டல் குரலில் ஹரிஷ் கேட்கவும் சுதாரித்தவள்,

"பிராட்! பிராட்! உன்னை தெரியாது? பேசியே அடுத்தவங்களை பேச விடாம பண்ணிடுவ!" என்று முறைத்து,

"போறது என் ஊரு. இந்த மாதிரி ஏதாவது பேர் வச்சு கூப்பிடாம உருப்படியா கூப்பிடு" என்றாள்.

"ஏன்? பளிச்க்கு என்ன? பளிச்சுன்னு தானே இருக்கு? அது வேண்டாம்னா உன் ஊரு உசிலம்பட்டினே கூப்பிடுறேன்!" என்றவன்,

"உசிலம்பட்டி பெண்குட்டி!" என்று வேறு கூப்பிட்டுப் பார்க்க,

"தொலைச்சிடுவேன்!"

"தேடிக்கலாம்!"

"உன்னை எப்படி ஹண்ட்ல் பண்றது? இதுக்கே நான் தனியா டிகிரி பண்ணனும் போல. இப்படி என்னை டென்ஷன் பண்ண தான் தனியா கூட்டிட்டு போறியா?"

"எனக்கு என்ன வேண்டுதலா? ரொமான்ஸ் பண்ணலாம்னா முட்டை கண்ணு வெளில வர்ற அளவுக்கு முறைக்குற. இல்லைனா எனக்கு மட்டும் பேச தெரியாதா என்ன? பிங்க் சாரீல சும்மா தாறுமாறா இருக்க. எதாவது சொல்ல விடுறியா? சும்மா நசநசன்னு வேண்டாத பேச்சா பேசி சீண்டி விடுற!"

"உன்னை...."

"நிலா ப்ளீஸ்! இப்ப என்ன? சாரி சொல்லனுமா? சரி சாரி! கொஞ்சம் ரிலாக்ஸ்டா போலாம். தனியா பாசிட்டிவ்வா ஹாப்பியா ஜாலியா நீயும் நானும். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். ஃபீல் பண்ணிக்குறேனே!" என்றவனின் கொஞ்சல் கெஞ்சல் கலந்த குரலில் விழி விரித்துப் பார்த்தாள் வெண்மதி.

குழம்பி தான் போனாள் வெண்மதி. வீட்டில் கொஞ்சினான். இவள் கோபத்தை அசட்டை செய்து விளையாடினான். மிரட்டலை கூட சிரித்தே சமாளித்தான்.

இப்பொழுதும் கூட அவள் கோபத்தில் இவனும் கோபம் கொள்வான் என இவள் நினைக்க, இங்கே கெஞ்சி கேட்கிறான். மலைப்பாய் இருந்தது ஹரிஷை புரிந்து கொள்வது.

"ஹே! என்ன? அமைதியாகிட்ட?" ஹரிஷ் கேட்க,

"சாங் பிளே பண்ணு!" என்றாள் அமைதியாய்.

"ம்ம் நீயே பண்ணு. ப்ளூடூத் கனெக்ட் பண்ணு உன் போன்ல!"

"ஏன் உன்னோடதை பண்ணு!"

"பண்ணிடுவேன். ஆனா நீ மறுபடியும் காண்டாகிடுவ. சும்மா உன் சாங் செலக்ட்ஷன்ஸ் பாக்கலாம். கனெக்ட் பண்ணு!" என்றான்.

"ஏதாச்சும் வில்லங்கம் புடிச்ச பாட்டா தான் வச்சிருப்பான்.". முணுமுணுத்து அவள் சொல்லி தன்னுடையதை ஆன் செய்தாள்.

*********************************************

'ம்ம்ஹும்ம்! இனியும் இப்படியே விட்டா நமக்கு தான் நஷ்டம் எல்லாம். இதெல்லாத்துக்கு முடிவு கட்டியே ஆகணும். போற இடத்துல வச்சே எதாவது செய்யணும்!' தனக்குள் நினைத்துக் கொண்டு புகையும் மனதை அடக்க வழி தெரியாமல் மேகலாவிற்கும் கௌரிக்கும் இடையே அமர்ந்து வந்தாள் பூஜா.

தான் வருவதாய் சொல்லியும் ஹரிஷ் தன்னை மறுப்பான் என நினைக்கவே இல்லை பூஜா.

சொந்த வீட்டில் தன் குடும்பத்தோடு இருப்பது போல அங்கே ஹரிஷ் கௌரியோடு வாழ்ந்து கொண்டிருக்க, இப்படி இடையில் ஒருத்தி வந்து ஒரே நாளில் தான் அந்த வீட்டில் அந்நியம் ஆகி போவோம் என நினைக்கவே இல்லை பூஜா.

மொத்த உலகமும் என அவளுக்கு ஹரிஷ் தான். தனக்கென பார்த்து பார்த்து செய்தவன் தனக்கில்லை எனும் நிலையை நம்பவே முடியவில்லை அவளால்.

காதல், உரிமை என அனைத்தும் தனக்கு மட்டுமே என ஹரிஷிடம் அவள் நினைத்திருக்க, இங்கே தானே தன் முன்னே தானே அவன் இருக்கிறான் என நினைத்திருந்தவளுக்கு பெரும் அடி தான் ஹரிஷ் திருமணம்.

சுத்தமாய் எதிர்பார்க்காத ஒன்று. கையில் கிடைத்த வைரத்தை தன் அஜாக்கிரதையால் தொலைத்த உணர்வில் பொசுங்கிக் கொண்டிருந்தாள்.

எத்தனை முறை நேசத்தை சொல்ல வந்திருப்பாள்? ஒவ்வொரு முறையும் அவனுக்கு இவளிடம் சண்டை இழுத்து விளையாடவே சேராமல் இருந்திருக்க, தான் சொல்லி இருக்க வேண்டும் என மனம் முழுதும் வலி.

காதலித்த வரை அவள் உணர்வுகள் தவறில்லை தான். கைவிட்டு சென்ற ஒன்றாக நினைத்து ஏங்குவதும் இயற்கை தான்.

ஆனாலும் அந்த இயற்கைக்கு மாறாய் தான் நினைத்தது நடந்தே ஆக அவள் தனக்குள் சபதம் எடுப்பது தான் அவளை எங்கு கொண்டு நிறுத்துமோ?

ஹரிஷின் ஒவ்வொரு அசைவிற்கும் என அவனை ரசித்து நேசித்து அவனோடே இருந்து என அவளுக்கு முழுதும் அவன் தான் என்று நினைத்து இருக்க, வேறொரு பெண்ணை அவன் திருமணம் செய்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை போலும்.

இவளின் சிந்தனையில் துளி கூட அவனிடம் இல்லை என்பதை அவள் அறியாது போனது தான் விதி.

அப்பாவை இழந்து தான் தனித்து தவித்து நின்ற பொழுதில் தன்னை தாங்க அன்னை இருந்தார். அப்படி கூட யாரும் இல்லாமல் இருக்கும் பூஜாவை தான் இருக்கும் பொழுதில் மட்டுமாவது அவன் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள முடிவெடுத்து செய்த செயல்கள் அவளை இவ்வளவு தூரம் கொண்டு வரும் என அறியாமல் போனான்.

அவனை பொறுத்தவரை பூஜா தன்னோடு தன் வீட்டில் தன் குடும்பத்தில் ஒருத்தி. இவ்வளவு இடம் கொடுத்தவன் காதலி மனைவி என்ற இடத்தில் பூஜாவை என்ன திருமணம் நடக்கும் வரை யாரையுமே அந்த இடத்தில் நினைத்து பார்க்கவில்லை தானே?

மாலை கவிழும் நேரம் வீட்டின் முற்றத்தில் கார் நிற்கவுமே உறவுக்கார பெண்மணி ஆரத்தி தட்டோடு வர, அவர்களின் காரின் பின்னோடே நல்ல பிள்ளையாய் மனைவியோடு வந்து சேர்ந்திருந்தான் ஹரிஷ்.

"காசு குடுங்க மாமா. ஆரத்தி சுத்தி இருக்கேன்ல?" என்று கேட்டு வாங்க அந்த பெண் நிற்க,

"உசிலம்பட்டி! வந்த உடனே பாக்கெட்டை காலி பண்ண பாக்குதுங்க பாரு!" என்று சொல்லி பர்சினை எடுக்க, மேலே தெரிந்த ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அந்த தட்டில் வேகமாய் வைத்துவிட்டாள் வெண்மதி.

"ஏய் ஏய்!" என்றவன் வார்த்தைகள், "மாப்பிள்ளை! நீங்க இவ்வளவு நல்லவரா? இன்னும் ரெண்டு ஆரத்தி எடுக்க ஏற்பாடு பண்ணி இருப்போமே?" என்று வாசலில் நின்ற கிழவி சொல்ல,

"நாளைக்கு சாக போற இல்லைனா இன்னைக்கே போட்டு தள்ளி இருப்பேன்!" என்று முணுமுணுத்தவன்,

"ஏன் டி?" என்று மனைவியைப் பார்க்க,

"என் அப்பாவோட மருமகன் எப்படினு ஊருக்கு தெரியணும்ல?" என்று கண் சிமிட்டியவள்,

"உள்ள வாங்க!" என்று அழைக்க,

"போலீஸ்ன்ற பேருக்கு இல்லாத மரியாதை தான் இந்த காசுக்கு இல்ல?" என்றவன் பேச்சை கேட்காதவள் போல உள்ளே சென்றுவிட்டாள் அவன் கைகளை இழுத்து.

"உள்ள வா கௌரி! பூஜா நீயும் வா!" என்று மேகலா அழைக்க, பழைய சிந்தனைகளோடு வீட்டினை பார்த்தபடி நின்ற கௌரி ஒரு பெருமூச்சோடு உள்ளே செல்ல, உறவுகள் எல்லாம் கௌரியை தான் முதலில் நலம் விசாரித்தனர்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஓடி இருக்க, உறவுகள் சூழ்ந்து அவரை இறுக்க,

"இவ்வளவு நாளும் கோமால இருந்தாங்களா? அவ்வளவு அக்கறைனா ஊர்ல வந்து பார்த்து பேசி இருக்கனும். இத்தனை வருஷம் கழிச்சு பாசம் பொங்குதாமா?" என பார்த்து ஹரிஷ் பல்லைக் கடிக்க,

"ஆரம்பிச்சுட்டியா? உனக்கு சிட்டி பத்தி தான் தெரியும். இது கிராமம். இங்க இப்படி தான். இன்னும் உங்க ஊர் மாதிரி காதல் எல்லாம் இங்க சாதாரண விஷயமா மாறல." என்றாள் வெண்மதி.

"தெரியுமே! அதான் சிட்டினா வாய்க்கு வந்ததை பேசுறாங்களே! இவங்க இன்னும் அந்த காலத்துலயே இருப்பாங்களாம். அது தப்பில்ல. நாங்க பண்றது தப்பு. போடிங்..." என்றவன் திரும்பிக் கொள்ள, அவர்களிடம் பேசி முடித்து மகனை அறிந்து அவனருகில் வந்தார் கௌரி.

"ஹரி! உன் மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருக்க. அதை மட்டும் தான் நீ கவனிக்கணும். தேவையில்லாம எதுவும் பேசி வைக்க கூடாது. இவங்களை எல்லாம் நான் பாத்துக்குறேன்!" கௌரி மகனிடம் சொல்ல,

"அதான் பார்த்தேனே நீங்க என்ன பாத்துக்குறீங்கனு. ஆனா நிஜமா எனக்கு டென்ஷன் ஆகுதும்மா!" என்றான் கடுப்பாய்.

"விடு டா. மதி உன்னால மூட்அவுட் ஆகிடாம பாத்துக்கோ நீ. அது போதும்!" என்றவர்,

"நீ போய் அவளை பாரு!" என்று சொல்ல,

"ம்ம்க்கும். அந்த பெருசுங்க கூட சேர்ந்து கும்மி அடிச்சுட்டு இருப்பா. நான் போய் நடுவுல உக்காரணுமா? போங்க ம்மா" என்று சொல்லிக் கொண்டு இருக்க,

"மாப்பிள்ளையை தனியா விட்டுட்டு இங்க என்ன அரட்டை உனக்கு? போய் அவரை கவனி!" என வெண்மதியை அதே நேரம் ஹரிஷிடம் அனுப்பி விட்டிருந்தார் மேகலா.

"இன்னும் கோபமா தான் இருக்காரா த்தை?" என்று வெண்மதி கௌரியிடம் கேட்க,

"ச்ச ச்ச! குளு குளுனு இருக்கேன். இங்க பாரு நிலா! இங்க அம்மாவை பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு தான். அம்மாக்கு ஒண்ணுன்னா நான் உன்கிட்ட தான் கேட்பேன். எனக்கு இது உன் அப்பா அம்மா வீடு அவ்வளவு தான்." என்றவன்,

"ப்ச்! தலைவலிக்குது. உன் ரூம் எங்க?" என்றான்.

"ஹரி என்ன பழக்கம் இது? இப்ப ஏன் மதியை இவ்வளவு பேசுற?" என்று அன்னை கேட்ட பின் தான் தான் பேசியது தனக்கே உரைக்க, திரும்பி மனைவியைப் பார்த்தான்.

"ரைட்ல ஃபர்ஸ்ட் ரூம். வாங்க காட்டுறேன்!" என்று சொல்லி அவள் முன்னே சென்றாள்.

"வேண்டாம் ஹரி. எங்க யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்கு தெரியும். நான் வந்தது ஏன் அண்ணனுக்காக மட்டும் தான். இதை வச்சு நீ அப்நார்மலா மதிகிட்ட பிகேவ் பண்றது எனக்கு பிடிக்கல. அவ்வளவு தான் சொல்லுவேன்!" என்று சொல்லி சென்றுவிட்டார்.

அறை கதவை திறந்து உள்ளே சென்றவள் பின்பக்க கதவை திறந்துவிட்டு காற்று வர வழி செய்தவள்,

"ரெஸ்ட் எடு!" என்று சொல்லி வெளியேற பார்க்க,

"நில்லு நிலா!" என்றவன் அவள் கைகளையும் பிடித்திருந்தான்.

"கோபமா?" என கேட்க,

"ம்ம் நீ பேசும் போது கோபம் வந்துது தான். ஆனா இவ்வளவு நீ டென்ஷன் ஆகியும் நான் பார்த்ததில்லை" என்று சொல்ல, அவள் புரிதலில் சிறு புன்னகை கொடுத்தான்.

"அத்தையை நான் நல்லாவே பார்த்துக்குறேன்!" என்று சொல்லி மீண்டும் கிளம்ப போக, அவன் கையை தான் விடவில்லை.

கேள்வியாய் அவள் திரும்பவும், "உனக்கு புரியுமா தெரில. அம்மா ரொம்ப வைராக்கியம் ஆனவங்க. இந்த ஊர் பக்கமே வர கூடாதுன்னு இருந்தவங்க. சொந்த அண்ணன் பொண்ணை மருமகளா கொண்டு வந்து சொந்த ஊருக்கும் இப்ப வந்திருக்காங்கன்னா அது எனக்காகவும் உன் அப்பாவோட உறவு வேணும்னும் தான். அப்பா இருக்கும் போதும் இல்லாத போதும் யாரையும் தேடாதவங்க. இப்ப அவங்க அண்ணனை தேடறாங்க. என்னால புரிஞ்சிக்க முடியுது. ஆனா அம்மா கடந்து வந்த பாதை..." என்று நிறுத்தியவன்,
 

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
"புரிஞ்சிக்கோ நிலா. அம்மாவை யாரும் எதுவும் பேசிட்டா அவங்க எனக்காக தாங்கிப்பாங்க. ஆனா நான் தாங்கிக்க மாட்டேன். அதனால தான் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். உன்கிட்ட அப்படி பேசினது தப்பு தான். ஐம் சாரி!" என்று கேட்க, இவனின் மற்றொரு முகம் அவளுக்கு பிடித்தத்தை தான் அதிகப்படுத்தி இருந்தது.

"தலைவலி சொன்னியே! காபி வேணுமா?" என்றாள்.

"இப்ப இல்ல. சரி! வீட்டை சுத்தி காட்ட மாட்டியா? ஸ்ட்ரயிட்டா பெட் ரூம் வந்துட்டோம்!" என்று புன்னகையை அடக்கி அவனும் பேச்சை மாற்ற,

"அதானே பார்த்தேன். திருந்திட்டியோன்னு நினச்சேன். அடங்கவே மாட்டல்ல. பேசாம கொஞ்ச நேரம் அவங்க எல்லாம் கிளம்புற வரை உள்ளேயே இரு. நான் அவங்களை சமாளிச்சுக்குவேன். அப்புறமா வீட்டை பாரு!" என்றவள் தன் கையைப் பார்க்க,

"என்ன பாக்குறது. பழைய காலத்து வீடு. பெயிண்ட் அடிச்சு பட்டி டிங்கரிங் பார்த்து வச்சுட்டா பளேஸ் ஆகிடுமா?" என வம்பிழுக்க, தன் கையை அவன் சாதாரணமாய் பிடித்திருந்ததில் வேகமாய் இழுத்துக் கொண்டவள்,

"சிட்டில தனி வீடு வச்சிருந்தா நீ பெரிய அப்பாடக்கர் ஆகிடுவியா? இங்க இருக்குற வரை இந்த நாலு செவுத்தயே பாரு!" என்று சொல்லி சென்றுவிட, சிரித்தபடி அமர்ந்தான் ஹரிஷ்.

"என்னாச்சு மதி? மாப்பிள்ளை கோவமா போன மாதிரி இருக்கு?" தந்தை வந்து வெண்மதியிடம் கேட்க,

"அதெல்லாம் எதுவுமில்லை ப்பா. இவ்வளவு தூரம் அவர் ட்ரைவ் பண்ணது இல்லையாம். அதான் டையர்டு போல!" என்று சமாளித்தாள்.

"நான் சொன்னேன் தான? எங்க கேட்குறாரு? ஒரே வண்டில வந்துருக்கலாம். வேணும்னே என்கிட்ட மல்லுக்கு நிக்குதது. சரி சரி காபி தண்ணி வேணுமான்னு கேட்டு குடு" என்று சொல்லி சென்றார்.

"பூஜா அந்த ரூம் எடுத்துக்கோ" என்று வெண்மதி சொல்ல,

"பரவால்ல மதி! அவ என்னோடவே இருக்கட்டும். தனியா ஏன்?" என்று தடுத்துவிட்டார் கௌரி.

எதற்கும் வேண்டும் வேண்டாம் என விருப்பு மறுப்புக்கு கூட அவளிடம் யாரும் எதுவும் பேச விடவில்லை.

அதில் இன்னும் தான் தனக்குள் புழுங்கி கோபத்தை வளர்த்துக் கொண்டாள் பூஜா. ஹரிஷின் அடுத்தகட்ட வாழ்க்கை, புதிதாய் வந்திருக்கும் மருமகளின் விருப்பங்கள் என தெரிந்து கொள்ள அவர்களை கவனிக்க ஆரம்பித்திருந்த கௌரியும் பூஜா முன்பை போல இல்லை என்பதை கவனிக்க மறந்திருந்தார்.

இரவு சாப்பிடும் நேரம் தான் அறையில் இருந்து வெளிவந்தான் ஹரிஷ். குருநாராயணன், மேகலாவோடு மேகலாவின் தங்கையும் தங்கை கணவனும் மட்டும் இருக்க, மற்ற உறவுகள் பக்கத்து வீட்டினர் எல்லாம் களைந்து போயிருந்தனர்.

"மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு வை மதி!" மேகலா சொல்ல, அனைவருமே சாப்பிடும் இடத்தில் தான் இருந்தனர்.

கௌரி அருகே பூஜா அமர்ந்திருக்க, அடுத்திருந்த இருக்கையில் ஹரி அமர, அவனருகே குருநாராயணன்.

"சப்பாத்தி வைக்கவா?" மதி கேட்க,

"ம்ம் வை!" என்றவன் நிமிர்ந்து பார்த்து,

"நீ சாப்பிடல?" என்று கேட்க,

"அப்புறமா சாப்பிடுவேன்!" என்றவளை முறைத்தான்.

"நானும் சொன்னேன் டா கேட்கல!" கௌரி சொல்ல,

"ம்மா! மாமனார் வீடு. முதல்முறையா சாப்பிடும் போது பொண்ணு மாப்பிள்ளை தனிதனியா சாப்பிட வைப்பாங்களா?" என்றவன் இப்போது குருநாராயணனை முறைக்க, மேகலா விழித்தார்.

அனைவருமே சொல்ல தான் செய்தனர். வெண்மதி தான் தனக்கு பசிக்கவில்லை என்று முடிவாய் சொல்லி இருந்தாள்.

"மதி!" என்று குருநாராயணன் அழைக்க, அடுத்து தந்தை கணவன் என இருவருக்குள்ளும் முட்டிக் கொள்ளும் முன்,

"இதோ சாப்பிடுறேன் ப்பா!" என்ற மதி ஹரியை முறைத்துக் கொண்டிருக்க, குருநாராயணன் தள்ளி அமர்ந்து கொண்டார் மதிக்கு இடம் கொடுத்து.

"பூச்சி! என்ன சைலன்ட்டா இருக்க?" என்று ஹரிஷ் பூஜாவிடம் பேச, உணவு நேரம் முடிந்து குருநாராயணன் உறங்க செல்ல, கௌரியும் மேகலாவும் அடுப்பறையில் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

மதி ஹரிஷ் பூஜா என தொலைகாட்சி முன் அமர்ந்திருந்தவர்கள்,

"வெளில போலாமா ஹரி?" என்று பூஜா கேட்கவும் மற்ற இருவருமே திரும்பிப் பார்க்க,

"வீட்டுக்குள்ளே இருக்கோமே அதான் கேட்டேன்!" என்றாள்.

"சரி தான்! இதோ மேடம்கிட்ட கேளு! அவங்க தான் கைட் பண்ணனும். எனக்கு இந்த ஊர்ல ஒன்னும் தெரியாது." என்று நக்கலாய் மனைவியைப் பார்க்க,

"என்ன லுக்? கண்ணை நோண்டிடுவேன்!" என்ற மதியின் பேச்சு மெல்லிதாய் என்றாலும் பூஜாவிற்கும் கேட்க தான் செய்தது.

"இது என்ன உங்க சிட்டியா? எட்டு மணிக்கு மேல வெளில போனா காத்து கருப்பு தான் அடிச்சுட்டு போகும்." என கணவனிடம் கூறியவள்,

"மார்னிங் போலாம் பூஜா!" என்று தன்மையாய் அவளிடம் சொல்ல, எதுவும் சொல்லவில்லை பூஜா.

"இன்னுமா நீங்க தூங்க போகல? மணி பதினோன்னு ஆச்சு. பூஜா நீ வா" என்று கௌரி அழைக்க,

"நீங்க போங்க ம்மா. நான் ஹரி கூட இருக்கேன்!" என்றவளை பார்த்து கௌரி தலையில் அடித்துக் கொள்ள,

"சின்ன பசங்க தான. விடு கௌரி!" என்று சொல்லி சென்றார் மேகலா.

"பூச்சி பச்ச பிள்ளை ம்மா!" என்று அன்னையின் செயலில் சிரித்த ஹரிஷ்,

"போலாம் மதி! நானும் டையார்ட்!" என எழுந்து கொண்டு,

"குட் நைட் பூஜா!" பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தவளை கவனிக்காமல் மற்றவர்கள் சென்றிருந்தனர்.

உள்ளே வந்ததும் மெத்தையில் விழுந்த ஹரி, "உசிலம்பட்டி கொஞ்சம் ஜில்லுனு தான் இருக்கு இல்ல. ஏசி இல்லாமலே தூங்கலாம் போல. சம்மர் மாதிரியே இல்லை!" என்று பின்னோடு வந்தவளிடம் சொல்ல,

"ம்ம்ம் தெரியுதா? நான் தான் உன்னை நகரத்தான்னு கிண்டல் பண்ணனும். என் நேரம்!" என்றாள் மதி.

"ஓவரா பேசாத கேர்ள்! அந்த பாட்டில் எடு!" என்று எழுந்து அமர,

"தண்ணி இல்லையே! எடுத்துட்டு வர்றேன்!" என்றவள் வெளியே வர, இன்னும் அப்போது அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்து கொண்டு ஹரிஷ் சென்ற அறையினையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூஜா.

கேள்வியாய் அவளைப் பார்த்தபடி வந்த வெண்மதி, "பூஜா! என்னாச்சு? இன்னும் தூங்க போகலையா?" என கேட்டு அருகே வர,

"ம்ம் போகணும்!" என்றவள் மதியின் முகத்தை பார்க்கவே இல்லை.

"வீடே இருளில் இருக்க, தொலைக்காட்சி கூட அனைக்கப்பட்டிருக்க பூஜா அப்படி அமர்ந்திருந்தது மனதுக்குள் எதுவோ சரியில்லை என்பதாய் இருந்தது வெண்மதிக்கு.

"போய் தூங்கு பூஜா. ட்ராவெல் பண்ண டயர்ட் இருக்குமே!" என்று சொல்ல,

"ம்ம்ம்!" என்றவள் இன்னும் அசையாமல் இருந்ததில் வெண்மதி போய் தண்ணீர் எடுத்து வந்தாள்.

பார்த்த நாளில் இருந்து இன்று வரை ஒரே வீட்டில் இருந்தாலும் இன்னும் பூஜா தானாய் வெண்மதியிடம் பேச்சை வைத்துக் கொள்ளாமல் இருக்க, கூடவே அவளின் முகம் தன்னைப் பார்த்ததும் ஒருவிதமாய் மாறுவது போல தெரிய வெண்மதி பெரிதாய் எடுத்துக் கொள்ளாதது இப்பொழுது ஒவ்வொன்றும் கண்முன் தோன்றியது.

தண்ணீருடன் வெண்மதி வரவும் வேகமாய் எழுந்து அறைக்குள் சென்ற பூஜா, ஒரு நொடி நின்று ஹரிஷ் இருக்கும் அறையை பார்த்துவிட்டே செல்ல, புரியாமல் அதை நினைத்தபடி வந்து தண்ணீரை கொடுத்தாள் ஹரிஷிடம்.

"இவ்வளவு புலம்புறேன். உன் கவனம் இங்கேயே இல்லை இல்ல?" என்ற ஹரிஷ் கேள்வியில்.

"ம்ம்! என்ன சொன்ன?" என்றாள் சாவகாசமாய்.

"சொன்னா மட்டும் செஞ்சிடவா போற?" என்றவன் படுத்துக் கொள்ள, அவனருகே எதிர்ப்பக்கம் பார்த்து படுத்துக் கொண்டாள் வெண்மதி.

"கல் நெஞ்சக்காரி! திரும்ப என்னனு கேட்குறாளா பாரு!" என்று அவள்புறம் திரும்பி படுத்து ஹரிஷ் புலம்ப,

"உனக்கு வேற வேலை இல்லை. எப்பவும் போல எதாவது புலம்பி இருப்ப. அதை கேட்டுட்டு வேற நான் இருக்கணுமா?" என்று திரும்பாமலே சொல்லி முடிக்கும் முன் அவளை பின்னிருந்து அவன் அனைத்திருக்க, எதிர்பாராதவள் விழிவிரிக்க,

"உன் ஊரு கிளைமேட். ம்ம்ம் சாரி. அண்ட் ப்ளீஸ். ப்ச்! இப்படியே தூங்கிடுறேன்! நோ சொல்லாத." என்றவன் பேச்சுக்கள் குறைந்து அடுத்த ஐந்து நிமிடத்தில் உறங்கியும் இருக்க, அவன் மூச்சுக் காற்று இவளை உறங்க அனுமதிக்கவில்லை.

"என்னை என்னவோ பண்ணிட்டு இருக்கான். கேட்டா நான் டிஸ்டர்ப் பன்றேன்னு சொல்றான்!" முனகிக் கொண்டவள் இதழ்கள் வளைந்தது புன்னகையில்.

*********************************************

மாடியில் நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.

நன்றாய் தூங்கி இருந்தாலும் ஐந்து மணிக்கு மேல் தூக்கம் சுத்தமாய் இல்லாமல் போக, எழுந்தவன் நேரே மொட்டை மாடிக்கு வந்துவிட்டான்.

அதுவும் மனைவி தன் தோளில் தூங்கிக் கொண்டிருக்க, பார்த்ததும் கடுப்பானவன் தான்.

"இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. இம்சை பண்ற டி!" என்று வாய்விட்டு முனங்கி மெதுவாய் தன் கைகளைவிட்டு அவளை தலையணையில் தலை சாய்க்க வைத்து அவளறியாமல் அவள் பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு ஓடோடி வந்து இங்கே தான் நிற்கவே செய்தான்.

'முழிச்சிருந்தா தொலைஞ்ச டா நீயி!' என சிரித்தபடி பார்வையை சுற்றிவர வைத்தான்.

சுற்றிலும் வீடுகள் தான். மாடி வீடு என ஆங்காங்கே ஒன்று இரண்டு என இருக்க, மத்தவை எல்லாம் தனி தரை வீடுகள் தான்.

வெண்மதி வீடும் தரை தளம் மட்டும் தான் என்றாலும் அத்தனை விசாலமாய் இருக்க, உடற்பயிற்சி செய்ய என வந்தவன் அப்படியே யோசனையில் சுற்றி பார்த்தபடி நின்றுவிட்டான்.

"இங்க என்ன பண்ற ஹரி?" என்ற கேள்வியில் திரும்பிப் பார்க்க, பூஜா தான் நின்றிருந்தாள்.

"குட் மார்னிங் பூச்சி! சீக்கிரம் எழுந்தாச்சு?"

"எனக்கும் தூக்கமே இல்லை ஹரி. புது இடம் இல்லையா?" அவள் சொல்ல,

"ஹ்ம் சரி தான். ஆனா நான் நல்லா தூங்கிட்டேன். ரொம்ப டிஃப்பரண்ட்டா எல்லாம் தெரில. இங்க ஏர் எவ்ளோ ஃபிரெஷ் பார்த்தியா பூஜா? பீஸ்ஃபுல்லா இருக்கு." என்றவன் கைகளை தூக்கி நெட்டி முறித்தான்.

"ஒரு வாக் போலாமா ஹரி? ரொம்ப நாளாச்சு நாம சேர்ந்து போய்" எதிர்பார்ப்போடு பூஜா கேட்க,

"ஆமால்ல?" என்றவன்,

"சரி நான் நிலா எழுந்துட்டா கூட்டிட்டு வர்றேன். போலாம்!" என்று கிளம்பப் பார்க்க,

"நாம போலாம் ஹரி. தூரம் எல்லாம் வேண்டாம் சும்மா பக்கத்துல மட்டும் போலாம். ப்ளீஸ்!" என்றாள் மறுத்துவிடுவானோ அவளை அழைத்து விடுவானோ எனும் பதட்டம் கொண்டு.

"ஹ்ம் அதுவும் சரி தான். வா போலாம்!" என்றவன், இன்று முழுவதும் வெண்மதியுடன் வெளியில் சுற்றும் எண்ணத்தில் இருக்க, இப்பொழுதே அவளை எழுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்து வந்தான்.

"எழுந்துட்டிங்களா மாப்பிள்ள?" என்று வெளியில் வாசலை திறக்கவும் குருநாராயணன் கேள்வியில் திரும்பினான் ஹரி.

"எதுவும் வேணுமா? மதி எங்க?" என்று அவரே பேசினார்.

"சும்மா பக்கத்துல நடந்துட்டு வரலாம்னு. இன்னும் நேரம் இருக்கே விடிய!" என்றது பூஜா.

எங்கே தன் இந்த ஆசை கூட நடக்காதோ என அவளே பேசினாள்.

"நிலா தூங்குறா. எழுப்ப வேண்டாம். இப்ப வந்திடுவேன்!" என்று சொல்லி ஹரி முன் செல்ல, குருநாராயணன் மனைவியை எழுப்ப சென்றார்.

திரும்பி ஹரிஷ் பூஜா உள்ளே வரும் பொழுது மேகலா, கௌரி இருவரும் சமயலறையில் இருக்கும் சத்தம் கேட்க, அங்கே சென்றனர்.

"பூஜா இப்படி தான் சொல்லாம போறதா? அண்ணே பார்த்ததனால சரியா போச்சு. இல்லைனா பயந்து போயிருப்பேன்." என்றார் கௌரி.

"தூக்கம் வர்லனு சொன்னா ம்மா. அதான் கூட்டிட்டு போனேன். காபி ரெடியா?" என்று ஹரிஷ் கேட்க, மேகலா இருவருக்கும் கொடுத்தார்.

"அப்ப நீ மதி யையும் கூட்டிட்டு போயிருக்கணும் ஹரி. உனக்கு மட்டும் என்ன தெரியும் இந்த ஊரை?" என்று அன்னை கேட்க,

"வாக் போக கூடவா கௌரி ம்மா. அதான் வந்துட்டோமே!" சற்று எரிச்சல் இருந்தாலும் சாதாரணமாய் கூற முயன்றாள் பூஜா.

"விடு கௌரி. அதான் வந்துட்டாங்க இல்ல!" என்றார் மேகலா.

இருந்தாலும் கௌரிக்கு சில விஷயங்கள் கொஞ்சம் உறுத்தலை தான் கொடுத்தது. இப்படி மகனுடன் பூஜா தனியே அதுவும் விடியும் நேரத்தில் கிளம்பி இருந்ததில் சுத்தமாய் உடன்பாடில்லை. அதுவும் வந்திருக்கும் இடத்தில் என்று நினைத்தவர் காரில் அவர்களுடன் வர பூஜா தயாராய் இருந்ததும் நியாபகத்துக்கு வர புரிவது போல பூஜாவிடம் சொல்லி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

"சரி போய் பிரெஷ் ஆகிட்டு மதியையும் கூட்டிட்டு வா. சாப்பிட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க!" கௌரி ஹரிஷிடம் சொல்ல,

"எல்லாரும் போறோமா ம்மா?" என்றாள் பூஜா.

"இல்ல பூஜா. மாப்பிள்ளையும் மதியும் போய்ட்டு வரட்டும். நாம அப்புறமா வெளில போலாம்!" என்றது மேகலா.

பூஜா ஹரிஷ் புறம் எதிர்பார்ப்பாய் திரும்ப,

"கும்பகர்ணி எழுந்தாளானே தெரிலயே!" என்று அன்னை காதருகே சொல்லிவிட்டு அறைக்கு சென்றான் அவன்.

"அவ வந்து காபி குடிச்சிட்டு கிளம்பிட்டு வார்றேன்னு தான் டா ரூம்க்கு போனா!" என்றார் அன்னையும்.

இதோ குளித்து முடித்து புடவையில் தயாராய் இருந்தவள் தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

"குட் மார்னிங் பளிச்!" என்று வந்தவன் கண் பார்வை செல்லும் இடம் தெரிந்ததை போல அவனை பாராமலே சட்டென கைகளை அவள் தளர்த்த,

"உசிலம்பட்டி உஷார் தான்!" என்று கண்ணடித்தான்.

"என்னையும் எழுப்பி இருக்கலாம் தானே?" என்று வெண்மதி கேட்க,

"ம்ம்ம் நானும் நினச்சேன். என் பக்கத்துல இதோ இந்த ஷோல்டர்ல நல்லா ஹாயா சாஞ்சு தூங்கிட்டு இருந்த. பார்த்ததும் பொளீர்னு ஒன்னு வச்சு எழுப்பலாம்னு தான் நினச்சேன்" என்றவன் பேச்சில் அவள் முறைக்க,

"என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற நீ. பார்த்துட்டே இரு!" என்றவன் பேச்சை கேட்டு மீண்டும் கண்ணாடிபுறம் திரும்பிக் கொண்டவள்,

"ரெடியாகிட்டு வா. கோவிலுக்கு போலாம்!" என்றாள்.

நிலவு தொடரும்..
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஒருவழியா பூஜாவோட நடவடிக்கை ஏதோ சரியில்லன்னு கௌரிக்கு புரிஞ்சிடுச்சு🧐

அதே மாதிரி ஹரீஷ்க்கு எப்போ புரியும் இந்த பூஜாவைப் பத்தி 🤔
 
  • Sad
Reactions: MK11

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆத்தாடி இப்போவாவது பூஜா நடவடிக்கை ல மாற்றம் இருக்குறத கௌரி கண்டுபிடிச்சாளே 🤔🤔🤔🤔🤔🤔ஹரிஷ் எப்போ தெரிஞ்சுக்க போறானோ 🤔🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: MK11

MK11

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
49
18
Tamil nadu
ஆத்தாடி இப்போவாவது பூஜா நடவடிக்கை ல மாற்றம் இருக்குறத கௌரி கண்டுபிடிச்சாளே 🤔🤔🤔🤔🤔🤔ஹரிஷ் எப்போ தெரிஞ்சுக்க போறானோ 🤔🤔🤔🤔🤔
😊😊