அத்தியாயம் 6
"பச்சை நிறமே பச்சை நிறமே!" என அவள் பட்டுப் புடவை நிறம் பார்த்து பாடியபடி ஹரிஷ் தயாராக செல்ல, புன்முறுவலுடன் தலைவாரிக் கொண்டாள் வெண்மதி.
இளம்பச்சை வண்ண சட்டையும் வெள்ளை நிற வேஷ்டியும் என வந்தவனை பார்த்து அவள் புன்னகைக்க,
"நீயும் பாடிக்கோ." என்றான் கண்ணாடியில் அவளை நெருங்கி நின்று.
"அவ்ளோ சீன் எல்லாம் இல்ல அங்க!" என வேண்டுமென்றே வெண்மதி சீண்ட,
"கோவிலுக்கு போறோம். அதனால பாக்குறேன். இல்லைனா ரூமை விட்டு வெளில போக முடியாது. உன் அப்பா ஐயனார் மாதிரி ஹால்ல எட்டு போட வேண்டியது தான் நியாபகம் இருக்கட்டும்"
"வாய் வாய்!" என்றவள் அவன் உதட்டை குவித்து அவளருகே முகத்தை மட்டும் கொண்டு வரவும் சட்டென குனிந்து அவன் கைகளுக்குள் அகப்படாமல் தூரமாய் வந்துவிட்டாள்.
"போலாமா?" என்று வேறு புன்னகை முகமாய் கேட்க,
"இம்சை டி நீ!" என்றவன்,
"ஒரு போன் கால் பேசிட்டு வர்றேன். வெயிட் பண்ணு!" என்று மொபைலை கையில் எடுக்க,
"நான் கீழ இருக்கேன். சீக்கிரம் வா!" என்று சொல்லி சென்றாள்.
நீல வண்ண புடவையில் தயாராய் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பூஜா.
வெண்மதியிடம் ஹரிஷை மற்றவர்கள் கேட்க, அவன் வருவதாய் சொல்லிவிட்டு சாப்பிட கைகழுவ மதி செல்ல,
"வெண்மதி!" என்று அழைத்து பின்னே நின்றாள் பூஜா.
"சொல்லு பூஜா!" என்றவள் பூஜா அவளாய் அழைத்து பேசுவது இது தான் முதல்முறை என குறித்துக் கொள்ளவும் தவறவில்லை.
சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா என்பதை போல பார்த்த பூஜா, "எனக்கொரு ஹெல்ப் பண்றியா?" என்று கேட்க,
"என்ன ஹெல்ப்?" என்றாள் நெற்றி சுருங்க.
"ஒன்னும் இல்ல. உன்னால முடிஞ்ச ஹெல்ப் தான்." என்றவள், கேள்வியாய் இன்னும் பார்த்து நின்ற வெண்மதியிடம்,
"நானும் உங்களோட வர்றேன். நீ கௌரிம்மாகிட்ட சொல்லு!" என்று கூற வெண்மதியிடம் இப்பொழுதும் ஒரு ஆராய்ச்சி பார்வை பூஜாவை.
கெஞ்சல் என்று சொல்ல முடியாது கட்டளை என்றும் சொல்ல முடியாது. ஆனாலும் நீ சொல்லி தான் ஆக வேண்டும் என்பதை போன்ற அழுத்தமான குரலும் முக பாவனையும் என வெண்மதியை அப்படி பார்க்க வைத்தது.
"நாங்க பக்கத்துல இருக்கிற குலதெய்வ கோவிலுக்கு தான் போறோம் பூஜா. அரை மணி நேரம் தான் ஆகும். போய்ட்டு வந்து வேணா எல்லாருமா சேர்ந்து வெளில போலாமே!" என்று சாதாரணமாய் தான் கேட்டாள் வெண்மதி.
இப்பொழுது அதே ஆராயும் பார்வை பூஜாவிடம்.
பச்சை நிற பட்டு புடவை, தலை கொள்ளும் மல்லிப் பூ, கழுத்து நிறைய தங்க நகைகளோடு கை நிறைந்த தங்க வளையல்கள், இதற்கெல்லாம் மகுடமாய் மனம் நிறைந்த முகமலர்ச்சி என வெண்மதி முகம் பார்த்தவள்,
"அரை மணி நேரத்துல வர்றதுக்கா இவ்வளவு மேக்கப்?" என்று மனதின் புகைச்சல் வார்த்தைகளாய் வந்துவிட, நொடி நேரம் என்றாலும் அதிர்ந்த பாவனை காட்டிய வெண்மதி,
"வாட் டு யூ மீன் பூஜா?" என்று கேட்க,
"பக்கத்துல தானே? அதுக்கு ஏன் இவ்வளவு அலங்காரமும்? அடிக்குற வெயிலுக்கு." என்றவள் சமாளிக்க முயன்றும் முயலாமலும் என, தன் மனக் குமுறலை சேர்த்து எரிச்சலாய் சொல்ல,
"பூஜா!" என்று அழைத்த வெண்மதி குரலில் நேராய் அவள் முகம் பார்க்க,
"ஃப்ரன்க்கா கொஞ்சம் பேசலாமா?" என்றாள் மாறிவிட்ட முக மாறுதலும் குரலும் என.
"மதி! ஹரி வந்துட்டான். என்ன பண்ற?" என்று கௌரி குரல் கேட்க,
"வரேன் த்தை!" என்று குரல் கொடுத்தாள்.
ஏதோ மாயத்தில் இருந்து விடுபட்டவள் போல விழித்த பூஜா தான் பேசியதை எல்லாம் நினைத்து கொஞ்சம் அதிர்ந்து எதுவும் பேசாமல் நகரப் பார்க்க,
"உன்கிட்ட தான் கேட்டேன் பூஜா!" என்று தடுத்திருந்தாள் வெண்மதி.
தன்னை உதாசீனப்படுத்தும் அனைவரின் மேலும் அத்தனை கோபம். காலையில் தன்னுடன் நடந்து வந்த ஹரிஷ் எதுவும் பேசாமலே மௌனமாய் வந்திருக்க, வந்ததும் தான் கேட்டும் உடன் அழைத்து செல்கிறேன் என்று சொல்லாமல் சென்றவனை நினைத்து ஆத்திரம் என மனம் முழுதும் பற்றி எரிய, அதை யாரிடம் காட்ட என தெரியாமல் விழித்து நின்ற நேரம் தானும் கிளம்பி இருந்தால் அழைத்து சென்று தானே ஆக வேண்டும் என கிளம்பியும் விட்டாள்.
ஆனாலும் அறையில் இருந்து அத்தனை எளிமையான அலங்காரமும் கூடவே கண்ணைக் கவரும் சிறு வெட்கமும் கலந்து வந்த வெண்மைதியைப் பார்த்ததும் அந்த நிமிடத்தில் தோன்றியபடி அவளுடன் தனியே வந்து நின்றுவிட்டாள் பூஜா.
கௌரியின் குரலில் தான் தான் செய்து கொண்டிருக்கும் அவசரத்தனம் புரிய, விலக நினைக்கும் நேரம் வெண்மதி வழி மறித்து நின்றாள்.
"உனக்கு என்னை பிடிக்கலையா?" என்று நேராய் வெண்மதி கேட்க, அதிர்ந்து பூஜா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,
"சொல்லு பூஜா! என்னை பிடிக்கலையா இல்ல ஹரிஷை பிடிச்சிருக்கா?" என்று கேட்டு அதிர வைத்திருந்தாள்.
****************************************
ஹரிஷ் கோவிலுக்கு வெண்மதியுடன் சென்று வந்து இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.
மேகலா, கௌரி அருகே அமர்ந்து கதை பேசியபடி வெண்மதி இருக்க, இருவரும் மதிய சமையலுக்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.
"நிலா!" என்றவனின் சத்தத்தில் வெண்மதி சலித்துக் கொள்ள,
"அப்பவே போய் அவர் கூட இருன்னு தானே சொன்னேன். என்ன மதி!" என கடிந்து கொண்டார் மேகலா.
"விடுங்க அண்ணி! அவனுக்கு என்னவாம் மதி. போய் பார்த்துட்டு வந்துடு இல்லனா கத்திகிட்டே இருப்பான்!" என்றார் கௌரி.
இத்தோடு மூன்றாவது முறையாக அறையில் இருந்து அழைக்கிறான். "டவல் எங்க வச்ச?", "டிவி ரிமோட் எங்க?" என்ற கேள்விக்கு எல்லாம் நிலா நிலா என்று அவன் கத்தலிட இப்பொழுது கடுப்பாகியவள் பூஜா இருக்கும் அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
"என்ன நினைச்சுட்டு இருக்க நீ? சும்மா சும்மா நிலா நிலான்னு. அம்மா அப்பா எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க. என்ன நினைப்பாங்க?" என்று வந்ததும் அவனிடம் வெண்மதி காய,
"என்ன நினைப்பாங்க?" என்றவன், அவள் சொல்வதன் அர்த்தம் புரிந்ததும்,
"ம்ம்க்கும்! இது வேறயா? அதுக்காக என் பொண்டாட்டிய ரொமான்ஸ் பண்ண கூப்பிடலைனு உன் அப்பா காதுக்குள்ள போய் நான் கூவவா முடியும்?" என்றான் அவனும் கோபமாய்.
"இப்ப என்ன வேணும்?" என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து.
"தண்ணி இல்ல ஜக்ல!" என அவன் காட்ட, மீண்டும் பிரஷர் கூடியது வெண்மதிக்கு.
இன்று முழுதும் அவளுடன் வெளியே சுற்றும் நினைப்பில் அவன் இருந்திருக்க, கோவிலில் இருந்து வந்ததும் அன்னை அருகே சென்று அமர்ந்தவள் தான். அவளாக வருவாள் என இவன் நினைக்க அவள் வருவது போல இல்லை என்றதும் அவனே அழைத்து கேட்கவும் செய்துவிட்டான்.
"வெளில கூட்டிட்டு போ பளிச். இங்க ரொம்ப போர்!" என்று வெளிப்படையாய் கேட்டுவிட, மீண்டும் அவளுக்கு பூஜாவின் நியாபகமும் கோபமும்.
"நான் எங்கேயும் வர்ல. நீ போணும்னா கிளம்பு" என்றாள் பட்டென்று.
"லூசா டி நீ? எனக்கு தெரிஞ்சா நான் போய்க்க மாட்டேனா? உன்னை என்ன வழி காட்டவா கூப்பிடுறேன்? நாட்டுகொட்டான்!" என்றான் அவனும்.
அப்படியே கோபத்தோடு வெளியில் சென்றவளை காரணம் ஆயிரம் சொல்லி இதோ மூன்றாவது முறையாய் அவன் முன் நிற்க வைத்திருக்கிறான்.
ஜக்கை அவன் அவள்முன் நீட்டியபடி இருக்க, சட்டென கோபம் மறைந்து பூஜாவிற்காக இவனை தண்டிப்பது போல தோன்ற அயர்ந்து அமர்ந்துவிட்டாள்.
"மார்னிங் எல்லாம் நல்லா தான இருந்த? கோவில்ல வச்சே நீ சரி இல்ல. என்ன பிரச்சனை உனக்கு?" என்றான் அவனும் இலகுவாக்க.
"ப்ச்! ஏதோ டென்ஷன். யார் மேலயோ கோபம். அதை கொண்டு வந்து உன்கிட்ட காட்டிருக்கேன்!" மறைத்தும் மறைக்காமலுமாய் அவள் சொல்ல,
"என்ன டென்ஷன்? யார் மேல கோபம்?" என்றான் கூர்மையாய் பார்த்து.
பெருசா ஒண்ணுமில்ல என சமாளித்தவள், "சரி இப்ப போலாமா? சாப்பாடு ரெடி. சாப்பிட்டு கிளம்பலாம்!" என தன்மையாய் கேட்க, ஹரியுமே உடனே ஏற்றுக் கொண்டான் எதுவும் கேட்காமல் சிந்தனையோடு.
வெண்மதிக்கு இப்பொழுதும் நினைத்தால் அவ்வளவு கோபம் வந்தது பூஜாவின் மேல். எத்தனை எளிதாய் சொல்லி விட்டாள் என மனம் முழுதும் அதன் தாக்கம் நிரம்பி இருந்தது.
உடனே ஹரிஷிடம் தான் வெண்மதி தன் நியாயத்தை கோபத்தை என கேட்க நினைத்தது.
அதற்கு முன்பே அவள் மூளை உரைத்து உண்மையை சொல்லி இருந்தது அவளுக்கு. பூஜா செய்ததற்கு அவனை ஏன் கோபம் கொள்கிறாய் என்று.
பூஜாவை போல துளி எண்ணம் அவனுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதை இத்தனை நாள் உடன் இருந்து கண்டு கொண்டவளுக்கு அந்த நேரம் மூளை சரியாய் வேலை செய்யவும் இல்லை.
மேகலா வந்து அழைக்கவும் சாப்பிட்டுவிட்டு மௌனமாய் ஹரிஷ் உடன் கோவிலுக்கு சென்றவள் அங்கேயும் அமைதியாய் இருந்துவிட்டு வந்துவிட்டாள்.
வந்தும் இவ்வளவு நேரமும் ஹரிஷையும் கண்டு கொள்ளாமல் இருந்தவளுக்கு இதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
வெண்மதி கேட்டது மிக சாதாரண கேள்வி. கூடவே இருந்த ஒருவன். அனைத்திற்கும் அவனை சார்ந்து இருந்து பழகி இருந்தவள் பூஜா.
ஹரிஷ் இத்தனை நாட்களில் பூஜாவைப் பற்றி கூறி இருந்ததிலும் இப்பொழுது பூஜா நடந்து கொள்வதிலும் என பூஜாவிற்கு தன் மீது கோபம் ஹரிஷ் தன்னுடன் மட்டும் நேரம் செலவழிப்பது என்று தான் நினைத்து அந்த கேள்வியை கேட்டாள் பூஜாவிடம் வெண்மதி.
"சொல்லு பூஜா! என்னை பிடிக்கலையா இல்ல ஹரிஷை பிடிச்சிருக்கா?" என்ற கேள்வியில் அதிகமாய் அதிர்ந்த பூஜா அதை மிதமாய் தான் காட்டி நின்றாள்.
"என்ன சொல்ற நீ? கோவிலுக்கு வர்றேன்னு சொன்னேன். ரொம்ப போரா இருந்துச்சி கேட்டேன். அதுக்கு என்னென்னவோ பேசுற? இப்ப என்ன நான் வர்ல. நீங்களே போய்ட்டு வாங்க போதுமா?" என்று சொல்லி நகரப் பார்க்க,
"உனக்கு என்னை பிடிக்கலனு எனக்கு தெரியும்!" என்று கூறி மீண்டும் நிற்க வைத்திருந்தாள் பூஜாவை வெண்மதி.
"என்ன நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க?" என்று பூஜா கேட்க, அதே நேரம்,
"நிலா!" என அழைத்தான் ஹரிஷ் சத்தமாய்.
"இவன் வேற நிலா நிலானு. போ! உன்னை தான் கூப்பிடுறான். இந்த தாலி கட்டுறதுக்கு முன்ன இருந்த ஹரிஷ் இப்ப இங்க இல்லை" என்று சம்மந்தம் இல்லாமல் பூஜா உளற,
"என்னால தான்னு சொல்றியா?" என்றாள் குழப்பமாய் வெண்மதி.
"இல்லைனு சொல்லுவியா நீ? உன்னால தான் எல்லாம். ஹரி என்னை எப்படி பார்த்துகிட்டான் தெரியுமா? ஆனா இப்ப...." என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்தவள்,
"நான் இருக்க வேண்டிய இடத்துல நீ.... " என்று சொல்ல வந்த வார்த்தையை வாய்க்குள் அடக்கிக் கொண்டு வெண்மதி கழுத்தில் அவள் பார்வை பதிய, அந்த பார்வையும் அவள் வார்த்தையும் புரிந்ததில் விக்கித்து வெண்மதி நின்றிருந்த நேரம் எரிச்சலோடு கிளம்பி இருந்தாள் பூஜா.
அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே கிளம்பி கோவிலுக்கும் சென்று வந்துவிட அந்த வார்த்தைகள் மட்டும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க ஹரிஷ் மேலும் அதை காண்பித்து இருந்தாள்.
"ப்ச்! நிலா!" என்று அவள் தோள்களை உலுக்கிய பின் தான் நினைவுகளில் இருந்து கலைந்து வந்தாள் வெண்மதி.
"என்னனும் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்குற நீ? வெளில கூட்டிட்டு வந்ததோட சரி. என் முகத்தை கூட நீ பார்க்கல. நடந்துட்டே இருக்க. இதுக்கு நீ தனியாவே வந்திருக்கலாம்." ஹரிஷ் சொல்ல, இப்பொழுது ஹரிஷை நின்று நிதானமாய் பார்த்தாள் வெண்மதி.
"சுத்தம்! என்னை சைட்டடிக்கவே இவ்வளவு நாள். இதுல எப்ப எப்படி நான் கிட்ட வந்து..." என்றவன் பேச்சு அவள் பார்வையில் நின்றது.
கொஞ்சமும் அவனுக்கும் பொய்க்கும் பக்கத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. எதையும் நேராய் கேட்டு பழகி இருப்பவன் என அவள் எண்ணங்கள் அவனின் குண நலன்களை யோசித்துக் கொண்டிருக்க,
"நிலா வாட் ஹப்பேன் டு யூ?" என மீண்டும் அவளை ஆராயும் பார்வை பார்க்க வைத்தாள் அவள்.
"ஓஹ் காட்!" என்ற வெண்மதி,
"சாரி!" என்றவள் கண்களை மூடி கைகளைக் கட்டிக் கொள்ள, ஹரிஷ் சுற்றிலும் பார்த்தான்.
அவள் தந்தையின் வயல், தோப்பு என்று தான் சுற்றிக் கொண்டு இருந்தனர்.
"ஓகே வா போலாம்!" ஹரிஷ் அழைக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"என்னவோ உன் மைண்ட் மார்னிங்லேர்ந்து இங்க இல்லவே இல்ல. உனக்கு என்கிட்ட ஷேர் பண்ணவும் முடில." என தான் அறிந்தவற்றை கூறிய ஹரிஷிற்கு சுத்தமாய் இதன் ஆணிவேர் புலப்படவில்லை.
காரணம் அவன் இன்னும் பூஜாவின் மாற்றத்தை உணரவில்லையே!.
"ப்ச்! சாரி!" என்றவள் வெகுவாய் தளர்ந்து போயிருந்தாள்.
இதை யாரிடம் என்னவென்று பகிர்ந்து கொள்ள, ஹரிஷ் நல்லவன் என்றாலும் தான் சொல்வதை நம்ப வேண்டுமே கூடவே அவன் அன்னையும்.
பூஜா இதுவரை வெளிப்படையாய் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை எனும் போது பின் எப்படி தன்னை நம்புவார்கள் என அதிகத்திற்கும் மூளையை கசக்கியவளுக்கு அது சோர்வையே கொடுத்தது.