அத்தியாயம் 7
"சாரி!" வெண்மதி சொல்ல,
"சொல்லணும்னு முடிவு பண்ணிட்ட தான? அதை முழுசா சொல்லு. என்ன பிரச்சனை?" என்றான் ஹரிஷ்.
"சொல்றேன். ஆனா கோபப்படாம கேட்கணும்!"
"ஏற்கனவே நான் கோவமா தான் டி இருக்கேன். நீ மேட்டருக்கு வா!"
"நீ இப்ப சொன்னல்ல? இந்த கல்யாணத்தை நாம அக்சப்ட் பண்ணிகிட்டோம்னு?"
"ஆமா! என்ன உன்னால அக்சப்ட் பண்ணிக்க முடிலையா? அந்த மீச எதுவும் சொல்லிச்சா?"
"ப்ச்! சொல்றத கேக்குறியா இல்லையா? நான் எவ்வளவு கன்ப்யூஸன்ல இருக்கேன் தெரியுமா?"
"அதை தான் டி கேட்குறேன்.. என்ன கன்ப்யூஸன் உனக்கு? இல்ல நான் தான் அதுக்கு காரணமா? என்னை அவாய்ட் பண்றனா அப்ப நான் தான் எதுவோ உன்னையோ உன் குடும்பத்தையோ ஹர்ட் பண்ற மாதிரி பண்ணிட்டேனோனு எனக்கு கண்பியூஸ் ஆகுது."
"ஹரி ப்ளீஸ்! நான் எங்க அவாய்ட் பண்ணினேன்?" என்றதும் அவன் பேச வர,
"மூச்! நான் பேசுற வரை நீ பேசாத. என்னை டென்ஷன் பண்ற நீ! நான் சொல்ல போற விஷயம் உன்னை ரொம்ப டென்ஷன் பண்ணும். நான் ஏற்கனவே அந்த டென்ஷன்ல இருக்கேன்" என்றவள் கவலையாய் பெருமூச்சுடன் திரும்பி அமர்ந்து முன்பக்கம் பார்க்க,
"பில்டப் மட்டும் குடுக்குறாளே தவிர விஷயத்த ஓபன் பண்ண மாட்றாளே!" என கூறி அவன் முறைக்க,
"உனக்கு எல்லாரையும் பத்தி ஒரு ஒப்பீனியன் இருக்கும்ல? அத சொல்லு" என்றாள் பொதுவாய்.
"நான் நம்மளை பத்தி பேசிட்டு இருக்குறதா நியாபகம்!" என்றான் சாலையில் கவனம் வைத்து.
"சொல்லு ஹரி!"
"இங்க பாரு! நான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தான்! அதுக்காக எல்லா இடத்துலயும் இங்க ஏதும் தப்பிருக்குமோன்ற கண்ணோட்டத்துலேயே என்னால இருக்க முடியாது. அது வேற பேமிலி வேற! நீ கேட்குறது எந்த மாதிரினு சொல்லு!"
"நீ என்னை என்னவா பாக்குற?" என்று அவள் கேட்டதும் அவன் பார்வை சட்டென்று மாற்றம் பெற, இதழ்களில் கூட ஒரு குறுநகை.
நீண்ட நேரம் பதில் வராமல் போகவே அவன்புறம் திரும்பியவள் அவன் குறுகுறு பார்வையில் தான் தான் கேட்ட கேள்வியும் அவன் புரிந்து கொண்ட விதமும் என தன் தலையில் அடித்துக் கொண்டவள்,
"ராஸ்கல் ராஸ்கல்! பொறுக்கி! உன் நினைப்பு இருக்கே!" என்றெல்லாம் பேசி அவனை அடிக்க எதாவது கிடைக்குமா என்று வேறு தேட,
"ஹேய் உசிலம்பட்டி....!" என்றவன் அட்டகாசமாய் சிரித்து வைத்தான்.
இதோ இந்த புரிதல், அவன் பார்வைக்கு அவளின் விளக்கம் இது போதுமே இவர்களின் பிணைப்புக்கு. அந்த சந்தோசமே அவன் சிரிப்பிலும் கண்களிலும் தென்பட, வெண்மதிக்கும் கூட சிறு புன்னகை அவனின் சிரிப்பினில்.
ஆனாலும் இதற்கு பின்னும் தான் சொல்ல வந்ததையும் கேட்க நினைத்ததையும் கூற முடியாமல் தடுமாறிவிட அமைதியாய் அமர்ந்து பாதையை கவனித்தாள்.
"இதை தான் மிஸ் பண்ணினேன் நிலா! இந்த நிலவை தான் மிஸ் பண்ணினேன். நேத்தெல்லாம் நீ என்னை கவனிக்கவே இல்லை. உன் கவனம் முழுசா என்கிட்ட இல்லவே இல்லை. நான் பேசுறதை என்னனு கூட நீ அப்ஸர்ப் பண்ணலை. அது என்னை என்னென்னவோ நினைக்க வச்சுடுச்சு!" என்றான் சிரிப்பினூடே!
"ஓகே! காம்டவுன்! சொல்லு! என்ன தெரியணும். உன்னை என்னவாவும் பாக்கலாம். தப்பில்ல. வேற யாரை சொல்ல வர்ற! ஸ்ட்ரயிட்டா சொல்லு. கோடு போடுறது ரோடு போடுறது எல்லாம் வேண்டாம்" என்றவனை அவளும் அமைதியாய் பார்க்க,
"அம்மாக்கும் உனக்கும் நல்ல பாண்டிங் இருக்கு. நீ சொல்லாமலே எனக்கு தெரியும். உன் அம்மா அப்பா... அவங்களால பிரச்சனைனா அது எனக்கு தெரியாம நடக்க வாய்ப்பில்ல. அப்டினா நீ உன் வீட்டுல வச்சே என்கிட்ட பட்டாசா வெடிச்சிருப்பியே!" என்றவனை மெச்சுதலாய் அவள் மீண்டும் பார்த்தபடி இருக்க,
"போதும் டி! திரும்பு அந்த பக்கமா! ஷை ஆகுது!" என்றவன் பேச்சில்,
"ஷப்பா! எப்படி தான் இப்படி பேசுறியோ! கண்ணை கட்டுது. மூச்சுவிட கூட முடியல" என்றாள் பேச்சை மாற்றி.
"ரூட்டை மாத்துற பார்த்தியா!" என்றவன்,
"ஹ்ம்ம்!" என்று சிந்தித்து, "அவ்வளவு தான்! இவங்க தான் நமக்கு முக்கியம்! இந்த அங்கிள்ல நாம சரியா தான் இருக்கோம். இவங்களை தவிர யாரும் நமக்குள்ள வர கூடாது. அவங்களுக்காக நீ இவ்வளவு யோசிக்கவும் கூடாது. அது ரொம்ப தப்பு. ஸீ நமக்குள்ள ஈஸியா எல்லாம் புரிஞ்சிக்க பேசிக்க முடியுது. தட்ஸ் ரியல்லி வீ ஆர் வெரி லக்கி. இந்த புரிதல் எல்லாம் எல்லாருக்கும் அமைஞ்சிடாது!" என்றவன் வார்த்தைகள் எவ்வளவு உண்மை?
இருவருக்குமான புரிதல் நிஜமாய் தானாய் உருவாகி இருக்கிறதே!
ஆனால் பூஜா! அவளை என்னவென்று சொல்வது இவனிடம்? என வெண்மதி நினைக்கும் பொழுதே கார் திடீரென நின்றிருக்க, நினைவு கலைந்து அவன்புறம் திரும்பினாள் வெண்மதி.
"என்னாச்சு?" நெடுஞ்சாலையில் நிறுத்தி இருந்தவனிடம் இவள் கேட்க, அவள் பக்கம் திரும்பியவன் பார்வை அவளிடம் அவள் கண்களுக்குள் இருக்க,
"பூஜா?" என்று கேள்வியாய் அவன் நிறுத்தவும் அமர்ந்திருந்தவள் பேச்சச்சு சாய்ந்துவிட்டாள்.
அதுவே அவனுக்கு உணர்த்திவிட்டது பூஜா தான் இவளின் கவனச்சிதறளுக்கு காரணம் என்று.
"பட் பூஜா?" என்றவனுக்கு சுத்தமாய் புரியவில்லை இது எந்த மாதிரியான பிரச்சனை என்று.
"எனக்கு எதுவும் சொல்ல முடியல ஹரி! நான் சொல்ல போறதும் இல்லை. பட் நீ அக்சப்ட் பண்ணனும். சோ அப்ஸர்ப் பண்ணு. நான் சொல்லி நீ தெரிஞ்சிக்க வேண்டாம்"
"ஹேய்! என்ன சொல்ற டி நீ? என்னனு சொன்னா தானே நான் தலையிட முடியும்? இது என்ன ஸ்டேஷனா? சந்தேகத்தோட வாட்ச் பண்ண?"
"நான் சொல்லி நீ அதை சரியா புரிஞ்சிக்க முடியலைன்னா நமக்கு தான் கஷ்டம். நமக்குள்ள அது வேண்டாமே!" என்று வெண்மதி சொல்ல, அது புரிவது போல இருந்தாலும் நம்பிட அத்தனை கடினமாக தான் இருந்தது.
அதற்காக நம்பிடாமலும் இல்லை. சட்டென்று உள்மனம் தன் திருமணத்திற்கு பின் பூஜா, வெண்மதி தொடர் பேச்சுக்கள், செயல்கள் என அனைத்தையும் அலசி எடுக்க, இது எத்தனை கவனமாக கையாள வேண்டிய ஒன்று என்று புரிந்த போது தான் நேற்றைய வெண்மதியின் நிலையும் முழுதாய் புரிந்தது ஹரிஷிற்கு.
"என்னை நம்ப சொல்லல. அதுக்காக சந்தேகத்தோட வாட்ச் பண்ணவும் சொல்லல. ஜஸ்ட் நான் சொல்றது உண்மை தானான்னு தெரிஞ்சுக்க கூட....." என்று வெண்மதி சொல்லி முடிக்கும் முன்,
"ஹே லூசு!" என்றவன், "இங்க வா!" என்று சொல்லி அவனே பக்கம் வந்து மெதுவாய் அவள் தோள்களை அணைத்துக் கொண்டான்.
"எஸ்! ஐ காண்ட் பிலீவ் திஸ்! பட் அதுக்காக நீ உன்னையே கஷ்டபடுத்திக்க வேண்டாம். ஓகே லெட் ஸீ! இது பெரிய ப்ரோப்லேம் எல்லாம் இருக்காது. ஜஸ்ட் சின்ன ஒரு மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங்கா கூட இருக்கலாம்!" என்றவனுக்கு அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும் இல்லாமல் இல்லை.
அவன் அவனோடு தன்னையுமாய் சமாதானப்படுத்த முனைந்தது அத்தனை பெரிய பாரம் நீங்கிய உணர்வு வெண்மதிக்கு.
"என்ன அமைதியாகிட்ட? நான் தான் சொன்னேன்ல.. டென்ஷன் பண்ணிட்டேனா?" வெண்மதி கேட்க, புன்னகை கொடுத்தவன்,
"ஷாக் குடுத்துட்டு கேள்வி வேற! கவனிக்காம விட்டுட்டேனோனு ஒரு சின்ன டிஸப்பாயின்மென்ட்.. வேற ஒண்ணுமில்ல" என்றவன்,
"நீயும் நேத்தெல்லாம் இந்த மைண்ட் செட்ல தான் இருந்திருக்க இல்ல? இது தெரியாம நான் வேற உன்னை படுத்திட்டேன்!" என்றான்.
"எவ்வளவு தான் உணர்வுகளை நாம புரிஞ்சிகிட்டாலும் சில விஷயங்களை கண்ணால பார்த்து காதால கேட்டு உண்மையை தெளிவடைஞ்சுகிட்டா தான் ரிலேஷன்ஷிப்ஸ்குள்ள பிரச்சனை வராது!" என்றாள் வெண்மதி.
"அது சரி! கல்யாணமான ஒரு வாரத்துல இந்த ஆராய்ச்சி தான் ரொம்ப முக்கியம் இல்ல பளிச்! இன்னும் ரெண்டு நாள் தான் லீவ் எனக்கு. போனதும் போற வர்றவன் எல்லாம் ஹனிமூன் முடிஞ்சதானு கேட்பான். ஒரு நாட்டுக்கொட்டானை கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை எவனுக்கு தெரிய போகுது?" என்று பெருமூச்சோடு சொல்ல,
"ஆரம்பிச்சிட்டியா?"
"ஆமா பின்ன? போஸ்டர் அடிக்காத குறையா எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்னு ஒவ்வொருத்தர் முன்னாடியும் நின்னு சொல்லி உடனே லீவ் வேணும்னு நின்னு அடம் பிடிச்சு வாங்கிட்டு வந்தேன். என்ன யூஸ்? ஒரு வெஜ் டச் கூட இல்ல"
"ஷ்ஷ்! மூச்! நீ எப்பவுமே இப்படி தானா? ஸ்டேஷன்ல எல்லாம் எப்படி இருப்ப? அக்யூஸ்ட எல்லாம் எப்படி டிரீட் பண்ணுவ?" அவன் சொன்னதை எல்லாம் விடுத்து வெண்மதி கேட்க,
"சரியான கேடி டி நீ? அவ்வளவு நீளமா பேசி இருக்கேன். எவ்வளவு நேக்கா என்னையே டேர்ன் பண்ணி விடுற! மொத்தமா சேர்த்து வச்சுட்டு தான் இருக்கேன். பார்க்க தான போற?" என்றவன் சொல்லில் இதழ்களுக்குள் அடக்கிக் கொண்டாள் புன்னகையை.
அவனிடம் பொறுமையாய் புரிவது போல பொறுப்பை கொடுத்து விட்டதாலோ என்னவோ கொஞ்சம் மனம் நிம்மதியடைந்திருக்க, அவனின் இந்த இயல்பான பேச்சும் கூட அவளுக்கு இதம் கொடுத்திருந்தது.
ஹரிஷுமே அவளை இனி இதை நினைக்க விட வேண்டாம் என்பதை போல தொடர்ந்து அவன் வேலை, அன்றாட நிகழ்வுகள் என பேசியபடி வர, வெண்மதியுமே தன்னைப் பற்றி பகிர்ந்து கொண்டு வந்தாள்.
ஹரிஷ் வெண்மதி வீடு வந்து சேர்ந்த போது அவர்களுக்கு வெகு முன்பே வந்திருந்தனர் கௌரியும் பூஜாவும்.
"டேய் ஹரி! இந்த பூஜாக்கு என்னவோ ஆகிடுச்சு போல. வந்து சாப்பிடாமலே தூங்க போய்ட்டா. எழுப்பினாலும் வேண்டாம் பசி இல்லைனு சொல்லிட்டா. காய்ச்சல் எதுவும் இருக்க போகுது. என்னனு கேளு" என்று கௌரி சொல்ல,
"நீங்க வந்து எவ்வளவு நேரம் ஆகுது ம்மா?" என்றான் ஹரிஷ்.
"ரெண்டு மணி நேரம் இருக்கும். இன்னும் மணி ஒன்பதே ஆகல. வழிலயும் அவ எதுவும் சாப்பிடல"
"சரி விடு ம்மா. பசிச்சா கேட்க போறா. நீ சாப்பிட்டியா?"
"ப்ச்! அது தெரியாதா எனக்கு? அவ தான் பசி தாங்க மாட்டாளே! இவ்வளவு நேரமா ஒரு டீ கூட குடிக்கல. ரூமையும் திறக்கல டா!"
"ஓஹ்!" என்றவன்,
"நீ பாக் கொண்டு ரூம்ல வை நிலா!" என்று சொல்லவும் வெண்மதி தலையசைத்து செல்ல,
"பூஜா!" என்ற ஒரு அழைப்போடு அறை கதவை லேசாய் தட்டவுமே திறந்துவிட்டாள் அவள்.
"என்ன உனக்கு? அம்மா தூங்க வேண்டாமா? சாப்பிடாம என்ன பண்ற? ஹெல்த் இஸ்ஸுஸ் எதுவுமா?" என்று ஹரிஷ் கேட்க, கூடவே கௌரியும்.
"அதெல்லாம் எதுவும் இல்ல. அப்ப பசி தெரில. அதான். சரி வா சாப்பிடலாம்!" என்றவள் அவனுக்கு முன் வெளியே வர,
"ம்மா! நாங்க சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு தூங்குங்க. காலையில பார்க்கலாம்!" என்று சொல்லி ஹரிஷ் அறைக்கு திரும்ப,
"என்ன ஹரி! நாங்களும் தானே கூட வந்தோம்? சாப்பிடுற நேரம் எங்களுக்கும் கால் பண்ணி இருந்தா ஒன்னா சாப்பிட்டு இருக்கலாமே?" என்ற பூஜாவின் கேள்வியில் விழிகள் சுருங்க அவள்புறம் திரும்பினான்.
"ப்ச்! என்ன பூஜா நீ? நாம எவ்வளவு சீக்கிரம் வந்துட்டோம்? அவன் செல்ப் டிரைவிங் வேற! பசிச்சிருக்கும். நின்னு சாப்பிட்டு வந்திருப்பாங்க. இது ஒரு கேள்வியா? நீ இவ்வளவு நேரமும் பசிக்கலனு வேற சொல்லிட்டு இருந்த. பின்ன எப்படி சாப்பிட்டிருப்ப?" என்றபடி கௌரி அவளை கூட்டி செல்ல, கூர்மையான பார்வையோடு அவளை கவனித்தவன் எதுவும் கூறாமலே அறைக்கு சென்றான்.
*******************************************
"நான் வேணா ட்ராப் பண்ணவா பளிச்?" என்ற கணவன் கச்சிதமாய் காக்கி சட்டையில் தயாராய் நிற்க, இன்று தான் பார்ப்பதை போல நின்று நிதானமாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மதி.
இரு புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டவன் "இன்னைக்கு தான் பாக்குற மாதிரி அப்படி பாக்குற? கல்யாணத்தன்னைக்கே இப்படி தான வர வச்சீங்க?"
"ஆனா நான் அன்னைக்கு இந்த கோலத்துல பாக்கலையே? என்ன இருந்தாலும் இந்த டிரஸ் மாட்டினதும் கொஞ்சம் கெத்தா தான் தெரியுற" என்றாள் உதட்டை சுழித்து.
அவளின் ரசனையான பார்வையில் அவனுக்குமே ஒரு புன்னகை.
"நடிக்காத உசிலம்பட்டி. ஊட்டில என்னைக்கோ பார்த்த என்னை இன்னைக்கு வரைக்கும் நியாபகம் வச்சிருக்க. அப்ப சைட் அடிச்சிருக்க தானே?" என்றான் கண்ணடித்து.
"ஆசை தான். அப்பவே நாலு அறை சப்சப்புன்னு குடுக்க முடியலையேனு ஒரு ஆதங்கம். அதான் மைண்ட்ல நீ ரிஜிஸ்டர் ஆகிட்ட போல. உனக்கெல்லாம் அவ்வளவு சீன் இல்ல" என்றவள்,
"அச்சோ! டைம் ஆச்சு.. உன்னோட பேசினாலே இதான்!" என்றவள் வேகவேகமாய் ஐலைனரை எடுத்து கண்களுக்கு அருகில் கொண்டு செல்ல,
"நல்லா தான் நடிக்குற.. ஆனா நான் அப்படி எல்லாம் இல்ல. தினமுமே பார்த்துட்டு சைட் அடிச்சுட்டு தான் இருக்கேன். ஒவ்வொரு நாளும் நேத்துக்கு விட இன்னைக்கு அழகா தெரிஞ்சிகிட்டு போற. என்ன எழவு வியாதியோ எனக்கு!" என்றவன் அறியாமல் மென்னகையை அவள் கண்ணாடியோடு மறைக்க,
"ஆனா தினமும் அந்த பளிச் மட்டும்...." என்றதும் உடனே அவன்புறம் திரும்பியவள் ஐலைனர் கொண்டே அடுத்தடுத்து அவன் கைகளில் அடிக்க,
"அவுச்!" என்று கைகளை இழுத்துக் கொண்டவன்,
"சொல்ல விடு டி! வேற யார்கிட்ட இதை நான் புலம்ப? பளிச்னு இருக்கு. வேற ட்ரெஸ்க்கு மாறிடு அதான் உனக்கு என்கிட்ட நல்லதுன்னு சொல்லியும் நீ புடவையை தவிர மாத்திக்க மாட்டுற. அப்ப உனக்கும் சம்திங் சம்திங் தானே?" என்று சொல்லவும் மீண்டுமே அடித்தவள்,