அத்தியாயம் ..9
"இரவு ஆடையாக
இருளை அணிந்து
இரவின் ராணியாக
உலா வந்தது
வெள்ளிநிலவு.."'!!!!
வினோதகன் தன் குடும்பத்தை வெறுத்துப் பேசுவதைக் கண்டவளுக்கு உள்ளூரே வலியே உண்டானது.. அருமையான குடும்பம் அமைந்து அதில் வாழ்வதற்கு எனக்குக் கொடுப்பினை இல்லை, அவனுக்கு வசதி வாய்ப்புகள் பணம் கொட்டிக் கிடக்கிறது. ஆனாலும் அவனுக்கும் குடும்பத்தோடு வாழ முடியவில்லை ..
இறைவனின் கையில் விளையாடும் பொம்மைகளாக மனிதனைப் படைத்து விட்டார் போல என்று எண்ணியவளுக்கு, அந்த நேரத்தின் இறுக்கத்தைக் குறைத்திட தோன்றியது.
அவனின் இயலாமையால் உண்டான கோபத்தைக் குறைத்திட எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வலுப் பெற, எதாவது செய் என்று உள்ளம் குரல் கொடுக்க மகிழினி தன் மனம் போகும் திசையைக் கண்டு அதிர்ந்துப் போனாள்.
சற்று முன் தெரிந்த ஒருவனின் உள்ளக் குமறலை நீக்கிச் செல்ல தன் மனம் அலைப் பாய்வதைக் கண்டு திடுக்கிட்டாள் மகிழினி.
பார்த்த சில மணித்துளிகளிலே இருவரின் மனம் ஒரு தோழமையில் வந்து சேர்ந்துவிட்டது அறிந்து உள்ளமோ குதூக்கலித்தாலும் அது தொடரும் நட்பின் பந்தமாக இருக்காது என்பது அவள் அறிந்ததே..
ஆனாலும் இந்தச் சில மணித்துளிகள் அவனிடன் கழிக்கும் நிமிடங்களில் மெய்யான அன்பையும் பாசத்தையும் உணர்ந்து அதனுள் மூழ்கித் தொலைந்து விட ஆசைப் பட்டாள் மகிழினி.
எத்தனை ஆண்களின் பார்வையில் துகிலுரித்து புறத்தை பூவாகக் கையாளாமல் கசக்கி எறிந்த பலரில் வலியில் காயமும் உடம்புக்கும் மனதில் வேதனையும் தான் மிஞ்சியது . ஆனால் இவனோட இருக்கும் ஒவ்வொரு நொடியும் உள்ளத்திற்குள் ஒரு இனிமையான மகிழ்ச்சி வெள்ளட்டடோம் ஓடியது.
பார்வையில் கூட ஒரு அசுயைமாக இல்லாமல் ஒரு மனுசியா மதித்துத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவன் கூறுவதைக் கேட்கும்போது நான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கேன் நினைத்து மனதினுள் பெரும் வலியை உணர்ந்தாள் மகிழினி.
ஆனால் அதை மறைத்துக் கொண்டு ''என்ன விகன் சார் கடந்தக் காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் நடப்பதை கோட்டை விட்டுவிடக் கூடாது .. உங்களுக்கு இருக்கும் வசதிக்கு எவ்வளவு ஜாலியாக சுற்றலாம்.. அதைவிட்டு ஞானி மாதிரி வேதாந்தம் பேசிட்டு இருக்கீங்க, எல்லாமே உங்கள் அம்மா மேற்பார்வையில் என்றாலும், எல்லா நேரமும் அவர்கள் என்ன பாடிகார்ட் ஆகவா இருக்காங்க..
என்றோ நடந்ததை நினைத்து வருத்தப்படுவதை விட்டு விட்டு இந்த நொடிகளை அனுபவித்து ரசிங்கள்..
இதோ இந்த இருள் கூட அழகு தான், அந்த வானமும், அதில் மிளிரும் நிலாவும், சுற்றியிருக்கும் இயற்கை ரசித்து மகிழுங்கள். அதை விட வன மோகினியாக இங்கே நான் இருக்கேன் அப்பறம் என்ன வேண்டும் உங்களுக்கு'', என்று வார்த்தையால் சீண்டினாள்.
அவள் எந்தவித தப்பான அர்த்தத்தில் பேசவில்லை .. ஆனால் அவனைச் சிரிக்க வைக்க வேண்டும், இயல்பாக இருக்க தன்னால் ஆன ஒரு பேச்சாகப் பேசினாள் மகிழினி.
இருளை வெறித்துக் கொண்டிருந்தவன் திரும்பி அவளை முறைத்தான் வினோதகன்.. ''என்ன உன்னுடைய வாடிக்கையாளர்களை தேடுவது மாதிரி என்னைத் தேடுகிறாயா'', என்று சுருக்கென்று கேட்டான் அவன்.
அவன் பேச்சில் உள்ளே சட்டென்று ஏதோ பிறழ்ந்தது. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டவள், என்ன சாரே நான் வாடிக்கையாளாரை தேடிப் போகணும் அவசியமில்லை .. அவர்களே என்னைத் தேடி வருவார்கள், ஏனா என்னுடன் ஒரு முறை வந்து விட்டுப் போனால் திரும்பத் தேடி வருவதே அவர்களின் வாடிக்கை தான் .. ஹாஹா, என்று கசந்த சிரிப்புடன் சொன்னவள், அவர்களின் ஆசை எங்கே தீர்க்கப் படுகிறதோ அங்கே வருவது தானே ..
வனமோகினியா ராட்சஸியா என்ன? அழகு மெழுகு பொம்மையா அவர்களின் உணர்ச்சிகளை இறக்கி விட்டுச் செல்லும் உயிரும் சதையும் உணர்வும் கொண்டவள் என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இத்தொழிலை சாதாரணமாக எடை போட்டு விடாதீங்க.. பல கழிசடைகளின் மனதின் வன்மம்த்தின் அதீத எங்கே காட்டுவது என்று தெரியாமல் எங்களைத் தேடி வருவார்கள்.
அதற்காக அவர்கள் சொல்படி ஆடவிட்டால் பணத்தை கொடுக்கிறோமல என்று கொடூர வார்த்தைகளையும் , அசிங்கமான செய்கைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றவள் தூரத்தில் தெரியும் இருட்டில் சிறு புள்ளியாக வெளிச்சம் எதாவது கிடைக்குமா என்று வெறித்து நோக்கினாள் மகிழினி.
வெறித்தபடியே தன்னை மறந்து தன் கதையை கூறத் தொடங்கினாள் மகிழினி. அந்த நாட்களுக்குள் அவள் இழுத்துச் செல்லப்பட்டு அதனுள் முழ்கினாள் மகிழினி.
இது நானாக விழுந்தப் புதைகுழி.. நாங்கள் பெரும் பரம்பரை சொத்தும் நிலபுலன்கள் வசதி வாய்ப்பு எதுவுமில்லாத சாதாரண மிடில் கிளாஸ் பேமலி தான்.
அப்பா ஒரு ஆபீஸில் கிளார்க், அம்மா வீட்டில் தையல் எந்திரத்தை கட்டிக் கொண்டு இருப்பார்கள், அப்பாவின் அம்மா ரங்கம்மா பாட்டி, அப்பறம் நான் ஒரே பெண்.
பெரிய ஆஸ்தி இல்லை என்றாலும் அவர்களின் இளவரசி நான் தான்.. கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் என்னைத் தங்க தட்டில் வைத்துத் தாலாட்டும் குடும்பம்..
அப்பாவின் செல்லம் அதிகம், பாட்டியோ சொல்லவே வேண்டாம் என்னை யாராவது ஒரு வார்த்தை சொன்னால் போதும், அவர்களைப் பேசியே வசைப் பாடி விடுவார்கள். என் அம்மா அப்பா எவ்வழியோ அவ்வழிதான்.. வாயில்லா பூச்சி.. அவரிடம் எப்பவும் ஒரு அமைதியான மௌனம் மட்டுமே இருக்கும். வம்படியாகப் பேசினாலும் பதில் இருக்காது.
ஆனால் எனக்கென்று வரும்போது பார்த்துப் பார்த்துச் செய்வார்கள் பாட்டி.
ஆனால் பாட்டி கூடத் திட்டுவார்கள் ஊமை ஊரை கெடுக்குமா, பெருச்சாளி வீட்டைக் கெடுக்குமா.. என்று சொல்லியவரோ பேசாமலே கொன்றுவிடுவா உங்க அம்மாகாரி என்று சில நேரங்களில் அம்மாவைப் பற்றி பாட்டி பேசுவது எனக்கு விளங்காது. ஆனால் அது ஏன் எனத் தெரிந்தப் போது என்னால் அந்நிமிடங்களை கடக்க முடியவில்லை..
அப்பா வேலை முடித்து வரும்போதே அழகு ராசத்தி என்ன பண்ணறீங்க வெளியே கேட் திறக்கும் போதே கூப்பிட்டபடியே வருவார் .. கையில் எதாவது பிஸ்கெட், இல்லை ஸ்வீடஸ் எதாவது வாங்கிக் கொண்டு வருவார்.
அவர் கூப்பிடும்போதே நானும் வேகமாக ஓடிக் கட்டிப் பிடிக்க என்னைத் தூக்கிப் போட்டு பிடிக்க நானும் கலகலவென்று சிரிப்பில் மெய்மறந்துப் போவார் அப்பா ராமநாதன்.
அம்மா பார்வதி, அதைத் தூரத்திலிருந்து ரசிப்பார் தவிர எங்கள் பக்கம் நெருங்கவே மாட்டார்கள்… நானும் அம்மா வா என்று கூப்பிட்டாலும் சிறு தலையசைப்புடன் அதே இடத்தை விட்டு நகர மாட்டார்.
அதற்கும் பாட்டி எதாவது முணுமுணுப்பார்கள். இப்படியே நாட்கள் நகரும்போது நானும் பெரிய மனுஷி ஆகவும் பாட்டியின் கட்டுத் திட்டங்கள் அதிகமாயின.
ஏனென்றால் என் அழகு அப்படி.. அதனாலே பாட்டிக்குப் பயம்.. வெளியே வாசலுக்கு வந்தாலே அம்மு உள்ளே போடா குட்டி என்ரு, செல்லக் குரலில் அதட்டுவார்.. அவரின் செயல்பாட்டில் எனக்கு உடன்பாடு இருக்காது.
நான் அப்பா வந்துமே அதற்காகவே பாட்டி பற்றி சொல்வேன். அப்பா பாட்டி என்னை வெளியே போகாதே, பையன்களோட பேசாதே என்று சொல்லிக்கிட்டே இருக்காங்க.. சிறு வயதிலிருந்து அக்கம்பக்கம் பழகின பாபு கிட்டே கூடப் பேசக் கூடாது என்று சொல்கிறார், ஸ்கூல் பஸ்ஸிலோ பள்ளியிலோ யாரிடமும் பேசக் கூடாது என்று சொல்லறாங்க, கண்ணை கசக்கிய மகிழினியைப் பார்த்தார் ராமநாதன் .
நீங்கள் சொல்லுங்கப்பா, நான் என்ன தப்பு பண்ணுகிறேன் என்று கேட்டபடி அவர் முகத்தைப் பார்த்தபடியே நின்றாள் மகிழினி.
''அழகு குட்டி இங்கே வாடா'', என்று அழைத்து அருகிலே மகளே அமர வைத்தவர், பாட்டி அவங்க காலத்தில் இப்படி தான் இருப்பாங்க அதனால சொல்லறாங்க.. அதுவும் சிலது நல்லதுக்கு எடுத்துக்கணும் கண்ணு, அதற்காக சண்டை போடக் கூடாது பாட்டிக்கிட்டே.. வயசானவங்க, ஏதோ அவங்களுக்குத் தெரிந்தை சொல்றாங்க.. உனக்கு அது தப்பா தோனினால் நீ அப்பா கிட்டே சொல்லு,நான் பாட்டிக்கிட்டே அதைப் பற்றி பேசறேன் என்று சொன்னவர், மகளை பற்றி தன் அம்மாவிடம் பேசினார் ராமநாதன்.
அம்மா குட்டியை ரொம்ப அதட்டி எதுவும் சொல்லாதீங்க.. அப்பறம் அவள் குணம் தான் தெரியுமல.. பிடிவாதத்திற்கும் வீம்புக்காகவும் எதாவது செய்வாள் என்று ராமநாதன் சொல்ல..
போடா போக்கத்தவனே, இப்படி பொண்டாட்டி ஒருத்தி வந்து உன் வாழ்க்கையை சீர்யழைத்துப் பத்தாதுனு இப்ப மகளையும் அவ அம்மாகாரி மாதிரி ஆகணும் நினைக்குரீயா.. என்றவர் உள்ளே சமையலறை வாசலில் நின்ற பார்வதிக்குக் கண்ணில் நீர் குளம் கட்டித் தேங்கி நின்றது.
எதுவும் பதிலளிக்காமல் தன் மனைவியை வெறித்த ராமநாதன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.
அம்மாவிடம் பாட்டிக்கு என்ன கோபம் வருத்தம் என்பது எல்லாம் எனக்கு அப்பத் தெரியல, ஆனால் அது தெரிந்தபோது என்னுடைய வாழ்க்கை அந்தரத்தில் ஆடும் பொம்மையாக மாறிப் போனது.
நாட்கள் ஓடியன நானும் பெரிய மனுசி ஆனேன்.. என் அம்மா பொற்ச்சிலை போல பேரழகு.. அவர்களைக் கொண்டு நானும் அழகின் சிலையாக வடிவமாக இருப்பதால் போகும் வரும் பாதையில் எல்லாம் வெறித்து நோக்கவதும் கூட்டம் நெரிசலில் தெரியாமல் கைபடுவது எதைச்சையாக இருப்பதாக எண்ணிக் கொண்டேன்.. அது அவர்களின் வக்கிரத்தின் உச்சம் என்பதை அறியவில்லை.
நான் பதினொராம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளிக்கு வசதியான ஒருவன் படிக்க வந்தான். மகேந்திரன் அவன் பெயர், அவன் பார்க்க உயரமா திடகாத்திரமான ஆளா வயதிற்கு மீறிய வளர்ச்சியுடனும் முகமோ மிகவும் வசீகரமான தோற்றத்தில் இருந்தால் என் வகுப்பு மாணவிக்களுக்கெல்லாம் அவனிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்று அவனைத் தேடித் தேடிப் போவார்கள்.
படிப்பு விளையாட்டு பேச்சு திறமை என ஆல் ரவுண்டராக அவன் இருப்பதைக் கண்டு எனக்குள் ஒரு பொறாமை. இத்தனை நாட்கள் அங்கே நான் தான் ராணியாக எல்லாரிடமும் எனக்கான நட்பா இல்லை அழகுக்குக் கிடைத்த அங்கீகாரமா படிப்பா எதுவோ.. ஆனால் அவன் வந்ததும் எல்லாம் தலைகீழாக மாறியதும் என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவனை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வலுப்பெற்றது.
அன்றைக்கு அவனே என்னிடம் ஹாய் மகிழினி என்று பேச்சில் இனிமையும் கன்னத்தில் குழி விழுந்த சிரிப்புடன் என்னிடம் பேச வந்தான்.
அவன் பார்வையில் என்னுடன் உரையாட ஆர்வத்தைக் கண்டு இவனை எதிலாவது கீழே இறக்க வேண்டும் எனக்குள் இருக்கும் ஒரு மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.
ஏன் என்று அப்பப் புரியவில்லை .. எல்லாரும் அவனைச் சுற்றிக் கொண்டு இருக்க அவனோ என்னிடம் பேசணும் விரும்பினான். ஆனால் நானோ அவனிடம் பேசாமல் பிடிக்காமல் செல்வதைப் போல முகத்தை சுருக்கினேன்.. என் முகம் சுருங்கியதும் அவனோ ஏன் மகிழினி என்னிடம் பேச மாட்டாயா… எல்லாரும் என்னிடம் புதுசா படிக்க வந்தால் தேடி வந்துப் பேசுகிறார்கள், நீயேன் என்னை ஒதுக்கிற மாதிரி விலகிப் போற என்ற கேள்வியை எழுப்பி என்னிடம் பதிலுக்காகக் காத்திருந்தான்.
என்னுடைய அந்த வயதுக்குரிய துடுக்கத்தனமும், பிடிவாத குணத்தால் உன்னிடம் பேச எனக்கு என்ன இருக்கு.. நீ பெரிய இவனா இருக்கலாம் ஆனால் எனக்கு உன்னிடம் பேசப் பிடிக்கல முகத்திலடித்ததுப் போல சொல்லவும் அவனுடைய முகம் இறுகிப் போனது.
தானாக வந்துப் பேசியதற்கு நல்ல செருப்படி என்று நினைத்தவன், உனக்கு இஷ்டமில்லை என்றால் ஓகே..
நான் பிரண்டா பேசலாம் நினைச்சேன்.. நீயும் படிப்பில் என்னை மாதிரி நன்றாகப் படிப்பதால் உன்னை தோழியாக நினைத்துப் பேச வந்தேன். ஆனால் நீ படிப்பில் முதலவதாக வந்தும் பேச்சில் திமிர் அதிகமாக இருக்கு என்றவன், விருட்டென்று அவ்விடத்தை விட்டு விலகிப் போனான் மகேந்திரன்.
அவன் போனதும் தான் பேசியது அதிகப்படியானது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளலாமல் அவனை எந்த விசயத்திற்காகவது டீஸ் பண்ணிக்கிட்டே இருந்தேன்.
அப்படி ஒரு நாள் அவனை மட்டம் தட்டி எதையோ சொல்ல அவன் மனதில் வஞ்சம் என்ற நஞ்சுவை விதைத்தேன் என்பதை அப்போது அறியவில்லை. அதை அறிந்தபோது என் வாழ்வு திசைமாறிப் போயிருச்சு.. என்றாள் மகிழினி.