• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நிழல் - 35

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
197
216
43
Salem
தன்னிடம் நைந்தியபடி பேசிய பவளத்தை அலட்சியமாய் பார்த்தவள் அவளிடமே,

"என் பசங்க எங்க.. இப்போ இந்த நிமிஷம் என் பசங்க என்கிட்ட வரணும்.. இல்லைன்னா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.. என் பசங்களை கூட்டிட்டு வர சொல்லுங்க.. ம்ம் சீக்கிரம்.." என்றவளின் குரல் கர்ஜனையாய் வெளிவந்தது.

அவளின் குரலில் இதுவரை இல்லாத கம்பீரம் இருந்தது.. ஏன் பதினான்கு ஆண்டுகள் அடிமையாய் வாழ்ந்த போது கூட இவ்வளவு கம்பீரமும் தெளிவும் அழுத்தமும் இல்லை.. அதை கண்டு பயந்த பவளம் வேகமாய் உள்ளே சென்று பிள்ளைகள் இருவரையும் அழைத்து வந்தாள்.

தன் பிள்ளைகளை பார்த்ததும் அதுவரை இருந்த தைரியம் போய் அழுகை தான் வந்தது.

அவர்களும் தன் தாயை பார்த்து விட்டு வேகமாய் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டனர்.

ஒரு தாய் பிள்ளைகளின் பாசப் போராட்டம் அங்கே இருந்தவர்களுக்கு கண்ணீர் வந்தது.

அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள்.. அவர்களை பார்த்து கிட்டத்திட்ட இருபத்துநான்கு மணி நேரம் ஆயிற்று.. அவளின் வாழ்நாளில் மிகவும் கொடுமையான நாள் என்றால் இது தான்.

இருவரையும் தன்னிடமிருந்து பிரித்தவள் அவர்களின் கண்ணீரை துடைத்தபடி, "ஆது நவி கண்ணா போதும்டா அழாதீங்க.. அம்மா தான் வந்துட்டேன் இல்லை.. என் தங்கங்க இல்லை.." என்று அவளை ஆறுதல் படுத்தினாள்.

தன் கண்ணீரை துடைத்து கொண்டு எழுந்தவள் பவளம் கருணாகரன் முன்பு நின்று அவர்களை கோபக்கனல் தாங்கிய விழிகளால் முறைத்தாள்.

பவளத்திடம் திரும்பியவள், "நீங்கெல்லாம் என்ன ஜென்மம் நீங்களும் ஒரு பொண்ணுங்கறதை மறந்துட்டீங்க இல்லை.. ஒரு பொண்ணுக்கு தான் இன்னொரு பொண்ணோட வலி தெரியும்னு சொல்வாங்க.. ஆனா நீங்க என்னை வலிக்க வலிக்க நான் அழுறதை பாத்து சந்தோஷம் தானே பட்டீங்க.. என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்காம உங்க சந்தோஷம் தான் பெரிசுன்னு பார்த்தீங்க..

ஒரு பொண்ணு கணவனை இழந்தா அந்த புகுந்த வீடு அவளையும் ஒரு பொண்ணாவும் மனுஷியாவும் பார்க்காம எப்படி இப்படி யோசிக்குறீங்க.. உங்களால நான் மனசால செத்தேன்.. உங்க புள்ளையால உடம்பால செத்தேன்.. ஆனா அதை நீங்க இன்னமும் உணரவே இல்லை..

இந்த ஆளோட பேச்சை கேட்டு இப்பவும் என் பிள்ளைங்கள என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறீங்க..

இதுவரைக்கும் உங்க வீட்டுக்கு மருமகளா வந்துட்டேன் அதனால உங்களை பொருத்து போனேன்.. ஆனா எப்போ என் பிள்ளைங்கள என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சீங்களோ அப்பவே நீங்க எங்களுக்கு தேவையில்லை.. உங்களோட சொத்து சுகம் எதுவும் எனக்கும் என் பசங்களுக்கும் தேவையில்லை..

மேடம் இவங்க இனி எங்களை எப்பவும் பாக்க கூடாது.. இவங்ககிட்ட எழுதி கையெழுத்து வாங்கி கொடுங்க.. அப்படி அதை மீறி வந்தாங்கன்னா அடுத்த நிமிஷம் இந்த அகல்யா என் பசங்களுக்காக எந்த எல்லைக்கும் போவேன்.." என்றவள் பிடிவாதமாக அங்கிருந்து பவளத்தின் குடும்பத்தினரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

போகும் போது கருணாகரனை பார்த்தவள் அவனின் அருகே சென்று,

"நீயெல்லாம் மனுசனா.. விருப்பமில்லாத பொண்டாட்டியா இருந்தாலும் அவளோட சம்மதம் இல்லாம தொடக்கூடாதுன்னு நினைக்கிறவன் தான் ஆம்பிளை.. ஆனா நீயெல்லாம் ஆண் ஜென்மத்துக்கே அசிங்கம்.. இனி எப்பவும் என் கண் முன்னாடி வந்துடாத.. அப்படி வந்த அன்னிக்கு தான் உனக்கு கடைசி நாள்..

என் பசங்களை வச்சி என்னை வளைச்சிடலாம்னு நினைச்சியா.. நான் அகல்யா டா.. தன்னம்பிக்கையும் தன்மானமுள்ள அதிகம் உள்ளவன்னு என்னோட பேருக்கு அர்த்தம்.. என் தன்மானத்தை விட்டு உன்கிட்ட இறங்கி போக இந்த அகல்யா உன் வீட்டு வேலைக்காரி இல்லை.. இனி என் பார்வையில பட்டுடாத.." என்றாள் அக்னி பிளம்பாய் அவனை எச்சரித்து விட்டு சென்றாள்.

அவளின் இந்த அவதாரம் கருணாகரனை பின்னடைய செய்தது.. ஆனாலும் அவளின் மேல் உள்ள வஞ்சம் குறையவில்லை.. குள்ளநரி சந்தர்பத்திற்காக காத்திருந்தது.


மனித உரிமை ஆணையத்தில் இருந்த வந்த பெண்ணிடம் அகல்யா மனம் உருக கண்ணீருடன் நன்றி கூறினாள்.

"என்னோட வாழ்நாளில் நீங்க செஞ்ச இந்த உதவிய இந்த உயிர் இருக்கற வரைக்கும் மறக்கமாட்டேன் மேம்.." என்றாள் இருகரம் கூப்பி.

"அய்யோ அதுக்கு நீங்க அவருக்கு தான்மா தேங்க்ஸ் சொல்லனும்.. சரியான நேரத்துல என்னை இங்க வரவச்சது அவரு தானே.." என்றார் சிரித்தபடி.

"யாரை மேம் சொல்றீங்க.." என்றாள் புரியாமல்.

" அது தான்மா அ..." என்று சொல்ல வந்தவரை முழுதாய் சொல்ல விடாமல்

" அது நான் தாண்டா.." என்றபடி வந்தான் ஆதவன்.

அவரிடம் தன் பார்வையை திருப்பி சொல்ல வேண்டாம் என்று தலையாட்டினான்.

அகல்யாவும் ஆதவன் தான் தனக்காக செய்தது என்று நினைத்து சிரித்தபடி, "நீங்க தானா அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.." என்றாள் சிரித்தபடி.


" சரிம்மா கிளம்பலாம் நேரமாச்சு.. மேடம் நீங்களும் கிளம்புங்க.. நான் உங்ககிட்ட அப்புறம் பேசுறேன்.." என்று அவரையும் அனுப்பி வைத்தவன் துவாரகனிடம் சென்று,

"அகல்யாவை நாங்க பாத்துக்கறோம் ப்ரோ.. நீங்க ஒரு நாள் வீட்டுக்கு வாங்க.." என்றபடி அவனை அணைத்து விடை பெற்றான்.

துவாரகன் அருகில் வந்த அகல்யா, "அண்ணா ரொம்ப தேங்க்ஸ் ஒரு நாள் அண்ணியையும் பையனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க அண்ணா.. நாங்க கிளம்பறோம்.." என்று அவனை அணைத்து விடைபெற்று ஆதவனுடனும் தன் பிள்ளைகளுடனும் சென்னை கிளம்பினாள்.

சென்னை வந்தவர்கள் அகல்யாவை அவளது வீட்டில் விட்டு விட்டு அவர்களுக்காக தேவையான உணவை வாங்கி கொடுத்து விட்டு நாளை ரூபி வருவாள் என்று சொல்லியவன் அவர்களை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு அகஸ்டினை பார்க்க சென்றான்.

இங்கே மொட்டை மாடியில் வெற்றுத் தரையில் படுத்திருந்த அகஸ்டின் அந்த பௌர்னமி நிலவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.. அதில் அவனவளின் முகமும் பிள்ளைகளின் முகமும் தான் தெரிந்தது.

'ஏன்டி இவ்வளவு லேட்டா என்கிட்ட வந்த.. நீ அனுபவிச்ச வலியும் ரணமும் கேட்ட என்னாலேயே தாங்க முடியலையே.. நீ எப்படி டா தாங்கிட்ட.. என்னை மன்னிச்சிரு தங்கம்.. அப்பா உங்களை லேட் ஆஆ பாத்துட்டேன் இல்லை.. நீங்க உங்க அம்மாவோட இருந்தா சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைச்சேன் டா.. இந்த அப்பாவை மன்னிப்பீங்களா தங்கங்களா..' மனதிற்குள் பேசியவனின் கண்கள் கலங்கியிருந்தது.

சிறிது நேரத்தில் கோபத்தை தத்தெடுத்த அந்த முகத்தில், 'உங்களை இப்படி தவிக்க விட்ட ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன் டா..' மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டான்.

" இனி அவர்களை தனியே விடக்கூடாது.. என்னுடன் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.. ஆனால் அகி ஏற்றுக் கொள்வாளா.. இல்லை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.." என்ற உறுதியுடன் தன் கண்களை துடைத்து விட்டு எழுந்தவன் முன்னே தன் இரு கைகளையும் கட்டியபடி ஆதவன் நின்றிருந்தான்.


" வாடா மச்சான் இப்போ எதுக்கு இப்படி முறைச்சிட்டு இருக்க.. " என்றான் சிரித்தபடி.

" எருமை எருமை இங்கே இருந்தே எல்லா வேலையும் செஞ்சிட்டு என்னை எதுக்கு நாயே அங்க அனுப்புன.."
என்றான் கோபத்துடன்.

"சரி அதை விடு அங்கே என்ன நடந்துச்சி.. உன் தங்கச்சி இப்போ எப்படி இருக்கா.. பசங்க எப்படி டா இருக்காங்க.. அழுதாங்களா டா.." என்று கேட்டவனின் கண்களில் எதிர்பார்ப்பு இருந்தது.

" ஆமா டா அகல்யாவை பார்க்காமா பசங்க ரொம்ப அழுதுருக்காங்கடா.. அகல்யாவை பார்த்ததுக்கு அப்புறம் தான்டா கொஞ்சம் சரி ஆனாங்க.. ஆனா அகல்யாவுக்கு அங்கே எப்படி அந்த தைரியம் வந்ததுன்னு தெரியலே டா.. அய்யோ அம்மா செம்மையா பேசுனா டா.." என்று அங்கே நடந்ததை சந்தோஷமாய் விவரித்தான்.

அதை கேட்டவனின் மனம் குளிர்ந்து போனது.. தன்னவளின் அந்த தெளிவான பேச்சு அகஸ்டினுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

" சரி டாபிக்கை மாத்தாத.. என்ன பிளான் வச்சிருக்க சொல்லு.. இனியும் அகல்யாவும் பசங்களும் தனியா இருக்க கூடாது.. அந்த கருணாகரனோட பார்வை சரியில்லை அகஸ்.. சோ நாம அகல்யாவுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கனும் டா.." என்றான் உறுதியாய்.


" ம்ம் இனி அவங்க என்னோட என் வீட்ல தான்டா இருக்க போறாங்க.. அதுக்கு கூடிய சீக்கிரமா வழி பன்றேன்.." என்றான் இறுதியாய்.



" எது உன் வீட்டுக்கா.. உனக்கு பைத்தியமா டா.. உன் வீட்டுல உன்னையவே வச்சி செய்வாங்க டா.. அதுமட்டும் இல்லாம அகல்யா எப்படி உன்னோட வருவா.." என்றான் கேள்வியாய்.

"அவ வருவா டா பசங்க மனசு வச்சா நான் அவங்களோட இருப்பேன்.. முதல்ல பசங்க மனசுல இடம் பிடிக்கனும்.. அடுத்ததாக அவளோட மனசை ஜெயிக்கணும் ஆதவா.. என் வாழ்நாள் முழுக்க அவளும் பசங்களும் என்னோட இருக்கனும்.. இது என் ஆசையா இல்லை பேராசையா எது வேணாலும் நினைச்சிக்கோ ஆதவ்.. எனக்கு அவங்க வேணும் டா.. என் உயிரா உணர்வா என்னோட அவங்க இருக்கனும் டா.." என்றவனின் குரலில் இருந்த அழுத்தம் ஆதவனுக்கு எதையோ உணர்த்தியது.

ஆனால் என்னவென்று தான் புரியவில்லை.. அதை சொல்லிக் கூடியவனும் தானே வந்து சொல்லப் போவதில்லை..

இதற்கு ஒரே வழி அகஸ்டின் மனதை திறந்து பேச வேண்டும்.. இப்படியே போனால் அவனின் உயிருக்கு கூட ஆபத்து தான்.. என்ன செய்வது முதலில் ரூபினியிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன்.

"ம்ம் சரி மச்சான் நீ சொன்ன மாறி அவங்க உன்னோட இருக்கட்டும்.. இப்போ வாடா தூங்கலாம்.. ஆமா நீ சாப்டியா டா.." என்றான் ஆதுரமாய்.

" எனக்காக எதுவும் வேணாம் டா.. நீ போ நான் பாத்துக்கறேன்.." என்று மீண்டும் நிலவை வெறித்தான்.

கீழே கிச்சனுக்கு சென்றவன் அங்கிருந்த பாலில் அவன் தினமும் போட வேண்டிய மாத்திரையை போட்டவன் அவனுக்கு அதை எடுத்து போனான்.

அவனை வற்புறுத்தி அதை அருந்த வைத்து விட்டு சிறிது நேரம் இருந்தவன் அப்படியே கீழே தரையில் படுத்தான்.

அவனை அப்படியே தூக்கியவன் அவனின் படுக்கையில் படுக்க வைத்தவன் அவனின் நிலை அந்த உயிர் நண்பனுக்கு வலியை கொடுத்தது.

அகஸ்டின் வாழ்வில் இருக்கும் மர்மம் என்ன..? அதை ஏன் தன் நண்பனுக்கு தெரியாமல் பாதுகாக்கிறான்..? அகல்யா அகஸ்டினை ஏற்றுக் கொள்வாளா..? பிள்ளைகள் அவனை ஏற்றுக் கொள்வார்களா..? விடைகளுடன் அடுத்த பாகத்தில்.



நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்த பாகத்தில் பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண பட்டூஸ்க்கு நன்றி.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஒரே சஸ்பென்ஸா இருக்கு அகஸ்டின் வாழ்க்கையே... 🙄🤔🧐