• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 19

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
அனைவரும் சரண்யாவிற்கு எதுவும் ஆகவில்லை என்ற சந்தோசத்தில் இருக்க ஆதி மட்டும் இவ்வளவு அலப்பறைகள் நடந்த பிறகும் இன்னும் அங்கு ஆஜராகாமல் இருந்த ரித்விகா லட்சுமணன் அஜித்தா அக்ஷயா மற்றும் சதீஷ் ஆகியோரை காணாமல் ஒரு நிமிடம் துணுக்குற்றான்.


அவனுடைய முகத்தை பார்த்த ராகவன் ஆனந்த் மற்றும் அஜய் கேள்வியாக அவனைப் பார்த்தனர். அவர்களுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவர்கள் மூவரையும் தனியாக வருமாறு கண்களால் அழைத்தான். அப்போது சரியாக சிவா "இந்த ரித்விகா அப்புறம் அக்ஷயா எங்க" என்று கேட்டான்.


தீபன் "எல்லாரும் ஒண்ணா தான் தூங்க போனாங்க அவங்க தூங்கினா ரூம்ல போய் பார்த்தால் தெரியும்" என்று கூறினான்.


அப்போதுதான் ராகவன் மற்றும் ஆனந்த் தங்களுடைய தங்கையைக் காணவில்லை என்பதை உணர்ந்தனர். அதனால் அவர்கள் உள்ளம் கலக்கம் கொண்டது. அப்போது எங்கிருந்தோ ஆதி என்று கூவல் ஓடு ஓடி வந்தாள் ரித்விகா. அவளைப் பார்த்து ஒரு மனம் நிம்மதி அடைந்தாலும் அவளுடைய முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்தவர்கள் அவசரமாக அவள் அருகில் சென்றனர்.


ராகவன் "என்னாச்சு குட்டிமா ஏதாவது பிரச்சனையா இவ்வளவு பதட்டமா இருக்க" என்று கேட்டான்.


அவள் ஆதியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டே" நாங்க எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருந்தோம். நான் ரெஸ்ட் ரூம் போக எழுந்து போன நேரம் யாரோ ரூமுக்குள்ள வந்திருக்காங்க அவங்க அக்ஷயாவ கடத்திட்டு போய் இருக்காங்க இது தெரியாம நான் வெளியே வந்தேன். அப்ப அவளை கடத்திட்டு போனவன் "டேய் ஆதி உன்னுடைய பொண்டாட்டியை காணாமல் நீ கதற வேண்டும் அவள் உனக்கு இனி கிடைக்க வாய்ப்பில்லை" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்ட நான் கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு தெரியாம அப்படியே நின்னுட்டேன் அப்புறமா வெளியே பார்க்கும்போதுதான் அக்ஷயாவ கடத்திட்டு போனது ரிஷி அப்படின்னு தெரிஞ்சது .அவன் நான் என்று நினைச்சு தான் அவளை கடத்திட்டு போய் இருக்கான். அதுமட்டுமில்லாம அவங்கள அஜிதா அக்கா பாலோ பண்ணி போயிட்டு இருக்காங்க இத நான் உன்கிட்ட சொல்ல வரும்போது வழியில் லட்சுமணன் மற்றும் சதீசை பார்த்தேன். அதனால் அவர்களிடம் கூறினேன் அவர்களும் பின்தொடர்ந்து சென்று உள்ளார்கள் இருவரும் அவர்களுடைய ஜிபிஎஸ் ஐ உன்னுடன் கனெக்ட் செய்திருக்கிறார்களாம். தயவு செஞ்சு சீக்கிரம் போய் காப்பாத்து ஆதி" என்று கண்கலங்கி கொண்டே கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்ட ஆதி ராகவன் மற்றும் ஆனந்தை பார்த்து "இங்க இருக்க எல்லாரையும் நீங்க ரெண்டு பேரும் தான் பத்திரமா பாத்துக்கணும் உங்களுக்கு துணையா சந்துரு மற்றும் தீபன் இருப்பாங்க" என்று கூறியவன். சிவா கவின் ஹரிஷ் மற்றும் அஜய் பார்த்து "வாங்க கிளம்பலாம் சீக்கிரம் போய் அவங்கள கூட்டிட்டு வரணும்" என்று கூறினான்.


அவன் கூறியதை புரிந்துகொண்டவர்கள் சரி என்று தலையசைத்து அவன் கூறியதை போல் செய்தனர் ராகவன் ஆதி இடமிருந்து ரித்விகாவை பிரித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான் அதன் பிறகு அவளிடம் "யாருக்கும் எதுவும் ஆகாது நீ கவலைப்படாம இரு உன் புருஷன் சீக்கிரம் போய் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு கூட்டிட்டு வந்து விடுவான் "என்று நம்பிக்கையாக கூறினான்.


இனி அவன் தன் மனைவியை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் மற்றவர்களை அழைத்துக்கொண்டு லொகேஷன் காட்டிய இடத்திற்கு சென்றான்.


இவர்கள் அங்கு செல்லட்டும் அதற்கு முன் ஏற்கனவே சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம்.


திருமணத்தில் கிட்டத்தட்ட அக்ஷயா மற்றும் ரித்விகா ஒரே மாதிரி ஆடை அணிந்தது ஆதியின் மனைவி யார் என்று அறியாமல் குழம்பி போனான் ரிஷி. அவன் சரண்யா மற்றும் ராகவன் திருமணத்திற்கு முக்கிய காரணம் ஆதி என்பதை அறிந்து மிகவும் கோபத்திற்கு உள்ளானான். அதனால்தான் இந்த கடத்தல் நாடகம். ஆனால் அவன் கடத்தி செல்லும் போது கண்விழித்த அஜித்தா அவன் ரித்விகாவை கடத்திச் செல்கிறான் என்று நினைத்தவள். ஏற்கனவே தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அவளைக் காப்பாற்ற நினைத்தாள் அதனால்தான் யாருமறியாமல் பின் தொடர்ந்து சென்றாள்.


அங்கே லட்சுமணன் மற்றும் சதீஷ் அஜிதாவை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர் சதீஷ் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்த லட்சுமணன் "டேய் உனக்கு ஏற்கனவே அந்த அக்ஷயா பிள்ளையே தெரியுமா ஏற்கனவே நீ ரெண்டு பேரும் ஆனந்த அண்ணாக்கு பொண்ணு பார்க்க போகும் போது ஒருவிதமான லுக்கு விட்டீங்க" என்று கேட்டான்.


அவ்வளவு வெளிப்படையாகவே தெரிந்தது என்று எண்ணிக் கொண்ட சதீஷ் "முதல்ல அவளை காப்பாற்றுவோம். அதன் பிறகு உனக்கு எல்லாத்தையும் சொல்றேன் முதல்ல மூடிட்டு வா அந்த சனியன் புடிச்சவனே எதுக்கு கடத்திட்டுப் போறான் கூட தெரிய மாட்டேங்குது" என்று புலம்பியபடி சென்றான்.


ரிஷி அவளை பக்கத்திலிருந்த ஒரு வீட்டில் கட்டி வைத்தான் அப்போதுதான் மயக்கம் தெளிந்து எழுந்து அக்ஷயா அவனைப் பார்த்து "டேய் லூசு யாருடா நீ எதுக்கு என்ன கடத்திட்டு வந்திருக்க" என்று கேட்டாள்.


அப்போது சரியாக அவர்களுக்கு பின் நுழைந்த அஜித்தா இந்த பேச்சை கேட்க ஆரம்பித்தாள். அக்ஷயா கேட்டதற்கு பதில் கூற ஆரம்பித்தான் ரிஷி "நான் யாருன்னு உனக்கு தெரிய வாய்ப்பில்லை நான்தான் அந்த சரண்யாவுக்கு கணவனா இருக்கவேண்டியது ஆனா இப்போ உன்னோட புருஷன் அவளுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சுட்டான். இன்னைக்கு ஒரு நாள் உன் இங்க வச்சுட்டு நாளைக்கு வேறு இடத்துக்கு மாத்திடுவேன் நீ இல்லாம உன் புருஷன் தினம் தினம் சாகணும்" என்று வில்லத்தனமாக கூறினான்.


அவன் கூறியதை கேட்டு சத்தமாக சிரித்தாள் அக்ஷயா பின்பு "நீ லூசு தான் கன்ஃபார்மா சொல்லுவேன் ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல நீ வேற யாரையோ நினைச்சி என்ன தூக்கிட்டு வந்து இருக்க அதுமட்டுமில்லாம இராகவன் அண்ணா சரண்யா அண்ணியும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப வருஷமா விரும்புறாங்க நீதான் இடையில் வந்தவன். அதனால ஒழுங்கு மரியாதையா எங்கயாவது ஓடிப் போயிரு யாராவது என்ன தேடிட்டு வந்தாங்கன்னா நீ செத்த" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டு தான் எங்கோ தவறு செய்துள்ளோம் என்பதை புரிந்து கொண்ட ரிஷி இன்னும் கோபம் அடைந்தான். அப்போது சரியாக பெரிய கட்டையை வைத்து ரிஷியின் மண்டையிலேயே ஒன்று போட்டால் அஜித்தா அதில் அவன் நிலை தடுமாறினான். அதை பயன்படுத்திக் கொண்டு அக்ஷயா கட்டுகளை அவிழ்த்து விட்டாள். அவன் நிலை சரியாவதற்கு முன்வந்த லட்சுமணன் மற்றும் சதீஷ் அக்ஷயாவை கட்டியிருந்த கயிற்றை எடுத்து ரிஷியை கட்டிப்போட்டனர்.


அக்ஷயாவை பார்த்த சதீஷ் "ஏண்டி முட்ட கண்ணி யாராவது ஏதாவது சொன்னா மட்டும் அந்த முட்ட கண்ண வச்சு நல்ல முறைக்க தெரியுதுல்ல எவனோ ஒருத்தன் அசால்டா கடத்திட்டு வந்து இருக்கான் நீயும் அவன்ட சொகுசா கதை பேசிக்கிட்டு இருக்க. இதே இது வேற யாராவது ஒரு வார்த்தை சொன்னாலும் அவர்களை சும்மா விட்டுவிட்டு தான் மறுவேலை பாப்பியா" என்று பொரிந்து தள்ளினான்.


அவளை முட்ட கண்ணி என்று கூறியதில் கோபமடைந்த அக்ஷயா "யாருடா முட்டக்கண்ணி நீதான் கண்ணு தெரியாத கபோதி உன்ன இப்போ இங்க யார் வர சொன்னா பேசாம உன் வேலைய பாத்துட்டு போ நீ வந்தா தான் என்ன காப்பாத்த முடியும்னு யாருமே சொல்லல எங்களை எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும் என எங்களுக்கு தெரியும்" என்று அவளும் பதிலுக்கு கடுகடுத்தாள்.


இவர்கள் இருவரின் சண்டையை லக்ஷ்மணன் அஜிதாவின் தோளில் கை போட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் சண்டையை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்த அஜித்தா இருவரையும் பார்த்து "அங்க நம்ம எல்லாரையும் காணோம்னு தேட் ஆரம்பிச்சுருப்பாங்க நீங்கள் என்னவென்றால் சின்னப்பிள்ளை மாதிரி சண்டை போட்டு இருக்கீங்க" என்று கூறினாள்.


அதற்கு லட்சுமணன் "அதெல்லாம் ஏற்கனவே தெரிந்திருக்கும் நீ பின்னாடி வந்தது உன் தங்கச்சி பார்த்துட்டா அவதான் எங்க ரெண்டு பேரை அனுப்பி வெச்சா அதனால இப்போ அவளோட புருஷன் உன்னோட அண்ணே அப்புறம் எங்களோட பிரண்ட்ஸ் இப்ப வந்துருவாங்க" என்று கூறினான்.


அப்போது சரியாக ஆதியும் அவருடன் வந்தவர்களும் உள்ளே நுழைந்தனர் இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் நிம்மதி அடைந்தனர் அதன் பிறகு ரிஷியை தங்களுடைய இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு தங்களுடைய இல்லம் வந்து சேர்ந்தனர்.


ஆனால் அக்ஷயா அங்கு வந்தது முதல் அஜிதா செய்த அனைத்து வேலைகளையும் இரு கண்கள் சுவாரசியமாக ரசித்து கொண்டிருந்ததையும் ஆதி வரும்போது அவர்கள் கண்ணில் படாமல் சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை.


வீட்டிற்கு வந்தவுடன் அனைவரும் அவர்கள் அனைவரும் நலமாக இருப்பதை பார்த்து தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர் அதிலும் அஜிதா திருந்தி விட்டாள் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.


அஜிதா அனைவரையும் பார்த்து தான் செய்த காரியங்களுக்கு மன்னிப்பு கூற நினைக்கும் போது ரித்விகா "அக்கா நீங்களும் இங்கேயே தங்கி விடுகிறீர்களா" என்று கேட்டாள்.


லக்ஷ்மணன் "ஆமாம் என்னோட பேபி சொல்றது கரெக்டு தான் நீயும் இங்கேயே தங்கியிரு" என்று கூறினான்.


அவர்கள் இருவரும் கூறியதை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த அஜித்தா இருவரையும் கேள்வியாக நோக்கினாள் ஆனால் அதற்கு பதில் ஆதி கூறினான் "நீ இப்ப உண்மையை உணர ஆரம்பித்து விட்டாய் இப்போது நீ உன் வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக உன் தந்தையிடம் மாற்றிக் கொள்வாய் அதனால் நீ உன் தந்தையிடம் போன் பண்ணி எங்களை கண்காணிக்க இங்கே தங்குவதாக கூறு வேறு எதையும் கூற வேண்டாம்" என்று கூறினான்.


அஜிதா மனம்தான் மிகவும் நொந்து போனது தான் இவ்வளவு செய்தும் இவர்கள் தன்னுடைய நலனிற்காக பார்த்து பார்த்து செய்கிறார்கள் என்று எண்ணி இனி இவர்கள் வாழ்வில் பிரச்சினை வராமல் உறுதுணையாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு ஆதி கூறியதை போல் செய்தாள்.


அதன்பிறகு அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஆனால் ஆண்கள் மனதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பது புரிந்தது. இரவு சம்பிரதாயங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு மாடியில் ஒன்று சேர்ந்தனர் ஆண்கள் மற்றும் பெண்கள். பெரியவர்கள் மணப்பெண் இருவரையும் தயார் செய்து பல அறிவுரைகளையும் கூறி அனுப்பி வைத்தனர்.


முதலில் ராகவன் அறையில் நுழைந்த சரண்யா அங்கு பார்த்தது நன்றாக இழுத்து போத்தி கொண்டு தூங்கும் ராகவனை தான். அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு தான் வந்தது ஏனென்றால் திருமணத்திற்கு முன்பே அவள் படிப்பு முடியும் வரை தாங்கள் காதலிக்கலாம் என்று கூறியிருந்தான். ஏற்கனவே இருந்த களைப்பு அதுமட்டுமல்லாமல் சாயங்காலம் நடந்த பிரச்சனையில் மிகவும் சோர்வாக இருந்தது படுத்தவுடனே உறங்கிவிட்டான். இவளும் அவனைப் பார்த்துவிட்டு இரவு உடைக்கு மாறி வந்து தூங்கிவிட்டாள்.


அங்கே ஆனந்த அறைக்குள் நுழைந்த வித்யா அவனை சுற்றுமுற்றும் தேடினாள் ஆனால் அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை பின்னாலிருந்து அனைத்த ஆனந்த் அவளைப் பார்த்து "ரெண்டு பேரும் ரொம்ப சோர்வா இருக்கோம் அதனால தூங்குவோம்" என்று கூறினான்.


அவளும் இதைத்தான் அவனிடம் கூற நினைத்தாள் ஆனால் அவன் அவளை பின்னிருந்து அணைத்த பொழுது தன் கணவனின் ஆசையை நிராசையாக வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் தன் நிலையை உணர்ந்த கணவனை காதலாக பார்த்துக் கொண்டே சரி என்று கூறி உடை மாற்றி வந்து தூங்கிவிட்டாள்.


இங்கே மாடியில் மொத்தமாக அனைவரும் படுத்திருந்தனர் பெண்கள் அனைவரையும் நடுவில் படுக்க வைத்துவிட்டு அவர்கள் இருபுறமும் ஆண்கள் படுத்துக்கொண்டனர். படுக்கும் சமயம் லட்சுமணன் ஆதியை பார்த்து "அண்ணா இந்த சதீஷ் பயலும் இந்த அக்சயா பிள்ளையும் சரி இல்லை நீ அவங்க கிட்ட என்ன ஏதுன்னு விசாரி" என்று கூறினான்.


சதீஷ் மனதிற்குள் "அட பாவி பயலே மொத்த கூட்டத்து முன்னாடியும் போட்டு இப்படி உடைத்து விட்டாயே" என்று அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அக்ஷயா அதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக படுத்து தூங்கி விட்டாள்.


ஆதி லக்ஷ்மணனை பார்த்து "இது எனக்கு ஏற்கனவே தெரியும் எதுவாயிருந்தாலும் ரிசப்ஷன் முடிஞ்ச பிறகு இரண்டு பேரும் சொல்லுவாங்க" என்று கூறினான். ஆனால் அவன் கூறிய விதத்தில் கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.


ரித்விகா சும்மா இருக்காமல் லக்ஷ்மணனை பார்த்து "பேபி உன்னுடைய ஆளை கல்யாணத்தில் காணவில்லையே" என்று கேட்டாள்.


ஆதி இடம் கண்டிப்பாக கூறிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சதீஷ் ரித்விகா லட்சுமணனை போட்டு கொடுத்ததை பார்த்து தன்னை அறியாமல் சிரித்து விட்டான். ஏனென்றால் ரித்விகா கூறியதை கேட்ட அனைவரும் எழுந்து அமர்ந்தனர் லக்ஷ்மணன் பதறியடித்து எழுந்தவன் ரித்திகாவை பார்த்து "ஏன் பேபி உன் புருஷனுக்கு இவ்வளவு உண்மையா போட்டுக் கொடுக்கிற" என்று பாவமாக கேட்டான்.


ரித்விகா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் "நீ சொல்லு பேபி ஏன் அவள் வரவில்லை நான்தான் அவளுக்கு பத்திரிக்கை வைத்தேனே" என்று மீண்டும் கேட்டாள்.


இதைப் பார்த்து அனைவரும் தங்களுக்குள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர் இவள் விட மாட்டாள் என்பதை உணர்ந்த லக்ஷ்மணன் "லூசு பேபி அவள் ஃபர்ஸ்ட் இயர் நமக்கு லீவு இருக்கும்போது அவங்களுக்கு முக்கியமான எக்ஸாம் நடந்து கொண்டிருக்கும் அதனால் தான் அவள் வரவில்லை. இதுக்கு மேல நீ எதுவும் கேக்க கூடாது ஒழுங்கா தூங்கு" என்று எழுந்து வந்தவன் அவளை படுக்க வைத்து பெட்ஷீட்டை முழுவதுமாக போர்த்திவிட்டு அவன் படுத்துவிட்டான்.


ஆதி அவனை சந்தேக கண்கொண்டு பார்க்க அங்கும் இங்கும் திரும்பி படுத்து பார்த்த லக்ஷ்மணன். அவன் இன்னும் பார்வையை திருப்பாமல் இருப்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்தான்.


எழுந்தவன் ஆதியை பார்த்து "நான் இன்னும் அவகிட்ட சொல்லல அவளுக்கு என்னை பிடித்திருக்கிறதா என்று தெரிந்து கொண்ட பிறகு உன்னிடம் கூறலாம் என்று இருந்தேன் வேறு எந்த விதமான எண்ணமும் இல்லை உன்னிடம் மறைக்க வேண்டிய எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை அதனால் தயவுசெய்து உன் மனைவியுடன் படுத்து தூங்கு வாயாக" என்று அழுது விடுபவன் போல் கூறினான்.


ஆதி அவன் கூறியதை கேட்டு சிரித்து விட்டு படுத்துவிட்டான் ரித்விகா ஏதோ கேட்க வாய் திறந்த நேரம் ஆதி அவளை தன் கைகளுக்குள் அணைத்து பிடித்து அவள் காதுகளில் "தூங்கு எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்" என்று கூறினான். ரித்விகாவும் எதுவும் பேசாமல் படுத்துவிட்டாள். அனைவரும் மொத்தமாக படுத்து தூங்க ஆரம்பித்து விட்டனர்.


மறுநாள் காலை எந்த வித அவசரமும் இல்லாமல் விடிந்தது மாடியில் உள்ளவர்களை எழுப்ப வந்த பெரியவர்கள் ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டனர் ஏன் என்றால் ஆதி மற்றும் அஜய் தவிர வேறு யாரும் ஒழுங்காக படித்திருக்கவில்லை ரித்விகா ஆதியின் கைவளைகள் இருந்ததால் அவள் அமைதியாக படுத்திருந்தாள் மத்தபடி அனைவரும் தலை ஒரு பக்கமாக கால் ஒருபக்கமாக படுத்திருந்தனர்.


அதைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டவர்கள் அவர்கள் அனைவரையும் எழுப்பி பிரஷ்ஷாக அனுப்பி வைத்தனர். ஆதி தன் மனைவியை தூக்கி கொள்ள அஜய் அஜிதாவை தூக்க சென்றான் அதற்குள் அவளும் விழித்துக்கொள்ள ரித்விகா தவிர அனைவரும் எழுந்தனர் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத லட்சுமணன் ஆதிக்கு தெரியாமல் தண்ணீரை அவளுடைய முகத்தில் தெளித்து விட்டான். ஆனால் அவள் முகத்தை ஆவியின் சட்டை இலேயே நன்றாக துடைத்து விட்டு மீண்டும் தூங்கினாள்.


ஆதி லட்சுமணனை பார்த்து அவ தூங்கிட்டு போகட்டும் நீ சும்மா இரு என்று கூறிவிட்டு அவளை தங்களுடைய அறையில் படுக்க வைத்தான். மணப் பெண் இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி பெரியவர்களை நிம்மதியாக இருக்க வைத்தது.


காலை உணவின் போது அனைவரும் ஒன்று கூடி ரிசப்ஷன் பற்றி விவாதித்தனர். பெண்கள் அனைவரும் ஒரே மாதிரி உடை எடுத்ததால் ஆண்களும் ஒரே மாதிரி எடுத்திருந்தனர். மறுநாள் ரிசப்ஷன் என்பதால் அனைவரும் அந்த வேலைகளில் மூழ்கிவிட ரிசப்ஷன் நாளும் எந்தவித தடங்கலும் இல்லாமல் விடிந்து ரிசப்ஷன் வந்தது.


அதில் இவர்களின் தொழில்முறை தோழர்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர். அஜித்தாவை சுவாரசியமாக பார்த்த கண்களுக்கு சொந்தக்காரன் வந்திருந்தான். அவன் உள்ளே வந்தது முதல் அஜிதாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் தன்னை ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கூட உணராமல் தன் உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தால் அஜிதா.


அஜய் ஆதியை பார்த்து "மச்சான் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூறினான். ஆதி அவனைப் பார்த்து "நீ என்ன பேசணும்னு நினைக்கிறது எனக்கு புரியுது இன்னைக்கு ஒரு நாள் முடியட்டும் நாளைக்கு நமக்கு எதிராக செயல்பட்ட எல்லாரையும் கொஞ்சம் கொஞ்சமா அவங்க வழியிலேயே போய் திருத்த முடிஞ்சா திருத்துவோம் இல்லனா அவர்களுக்கான தண்டனையை கொடுப்போம் நீ கவலைப்படாம போய் வேலையை பாரு" என்று கூறினான்.


அவன் பதிலில் நிம்மதி அடைந்த அஜய் வேலையை பார்க்க சென்றான் அதன் பிறகு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ரிசப்ஷன் கலை கட்டியது இவர்கள் இங்கு சந்தோஷமாக இருக்க அங்கே இந்து கடும் கோபத்தில் இருந்தாள் ஆதி நீ எனக்கு வேணும் அதுக்காக நான் எந்த லெவலுக்கு வேண்டினாலும் இறங்குவேன் இன்னும் கொஞ்ச நாள் நீ ரொம்ப சந்தோஷமா இருக்க அதன் பிறகு நான் உன் வாழ்க்கையில் வருவேன் என்று கத்திக்கொண்டு இருந்தாள்.


ஆனால் அவளுக்கு தெரியவில்லை நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் கடவுள் இருந்து என்ன பயன் என்று.
 
Top