• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 20

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ரிசப்ஷன் நல்லபடியாக முடிய பெரியவர்கள் அனைவரும் கலைப்பில் உறங்க சென்று விட்டனர் இளைஞர் பட்டாளங்கள் மட்டும் உறங்காமல் ஏதேதோ கதையளந்து கொண்டிருந்தனர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான் ஆதி அவனுடன் அஜித்தாவை ரசித்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன ரூபன் உடன் வந்தான்.


பெண்கள் அனைவரும் ரூபனை யார் என்று புரியாமல் கேள்வியாக பார்க்க அவன் அனைவரையும் பார்த்து ஒரு புன்னகை செய்தான். ஆதி அனைவரையும் பார்த்து "இவன் என்னோட ஃப்ரெண்ட் ரூபன் ஒரு போலீஸ் ஆஃபீசர் மத்தபடி சொல்றதுக்கு பெருசா ஒன்றும் இல்லை" என்று கூறினான்.


ரூபன் ஆதியை செல்லமாக முறைத்துவிட்டு ரித்விகா அருகில் சென்று நீதான் "ஆதி யோட செல்ல பொண்டாட்டி அப்படித்தானே" என்று கேட்டான்.


அவள் பதில் சொல்வதற்கு முன் லட்சுமணன் "செல்ல பொண்டாட்டி இல்ல தொல்லை பொண்டாட்டி" என்று கூறினான்.


லட்சுமணனை பார்த்து முறைத்த ரித்விகா ரூபனை பார்த்து குறும்பாக கண்ணடித்து "ஆமா மாமா நான்தான் ஆதி யோட பொண்டாட்டி அப்புறம் இது என் அக்கா அஜிதா" என்று அந்த அக்கா மாமாவில் அழுத்தம் கொடுத்து கூறினாள்.


அவள் கூறியதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ ஆதி ராகவன் ஆனந்த் அஜய் மற்றும் லட்சுமணன் நன்றாகவே புரிந்து கொண்டனர். ரூபன் மனதில் 'ஜாடிக்கேத்த மூடி தான்' என்று எண்ணி சிரித்துக் கொண்டான்.


லக்ஷ்மணன் ரித்விகாவிடம் "பேபி எனக்கு ஒரு டவுட் நீ தெரிஞ்சு எல்லார்கிட்டயும் மாட்டி விடுறியா இல்ல உண்மையிலேயே புரியாமல் தான் செய்தியா" என்று கேட்டான்.


ஒரு பாவமான முகத்தை வைத்து இலட்சுமணனை பார்த்த ரித்விகா "நான் என்ன பேபி பண்ணேன்" என்று கேட்டாள்.


ராகவன் தலையில் அடித்துக்கொண்டு "நீ சும்மா சொல்லி இருந்தால் கூட அவனை நம்பி இருப்பான் இப்ப சத்தியமா நம்ப மாட்டான்" என்று கூறினான்.


ரித்விகா லட்சுமணனை அப்படியா என்ற ரீதியில் பார்த்தால் அவளுடைய பார்வையை புரிந்து கொண்ட லட்சுமணன் "கண்டிப்பா பேபி நீ உன்னோட புருஷனுக்கு ரொம்ப உண்மையா இருக்குறேன்னு எல்லாருக்கும் ஆப்பு வைத்து கொண்டிருக்கிறாய் இதெல்லாம் சரி இல்லை பாத்துக்கோ" என்று கூறினான்.


ஆதி மற்றும் அஜய் ரூபனை பார்த்து உண்மையா என்று கேட்டனர். அதற்கு ரூபன் தான் மொத்தமாக பிறகு கூறுவதாக கூறினான். ஆனால் தன்னைப்பற்றி தான் இவர்கள் அனைவரும் பேசுகிறார்கள் என்பதை உணராமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்தாள் அஜித்தா.


அவள் வேறு சிந்தனையில் இருப்பதை பார்த்த அஜய் அவளிடம் வந்து "ஏதாவது பிரச்சனையா ரொம்ப தீவிரமா யோசிச்சுகிட்டு இருக்க" என்று கேட்டான்.


அவன் கேட்டதில் சுயநினைவை அடைந்தவள் "அது வந்து அண்ணா தாத்தா இப்ப வரைக்கும் ஆதியை வீட்டிற்குள் கூப்பிடாமல் இருப்பதற்கு நம்மோட அப்பாதான் என்னமோ பண்ணி இருக்காங்க. அதுமட்டுமில்லாம இதுல வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு அது என்னனு தெரியல" என்று கூறினாள்.


ஆதி "அதற்கான பதிலை நேரம் வரும்போது நானே கூறுகிறேன். இப்போ நேரம் ஆச்சு எல்லாரும் போய் தூங்கு அப்புறம் வீட்ல இருக்கவங்க எல்லாரும் நம்மள திட்ட போறாங்க" என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தான்.


அனைவரும் கிளம்பி சென்ற உடன் ஆதி ரூபனை பார்த்து "நாளைக்கு நம்மளுடைய இடத்துக்கு வந்துவிடு ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்று கூறி அவனை அனுப்பி வைத்துவிட்டு தானும் உறங்குவதற்கு தன்னுடைய அறைக்கு சென்றான்.


அங்கு ஏற்கனவே உறங்கிப் போயிருந்த ரித்விகாவை பார்த்தவன் முகத்தில் புன்னகை ஒட்டிக்கொண்டது. அவனுடைய மனதில் 'எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாய் இருந்தாலும் ஒவ்வொருத்தர் நினைக்கிறது பார்க்கிற பார்வையை வைத்து அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருக்கிறாய் உன் நல்ல மனதிற்காவது தாத்தா சீக்கிரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று எண்ணிக்கொண்டு அவளருகில் அவனும் படுத்தான்.


அவன் வந்ததை ரித்விகா உணர்ந்தாலோ என்னவோ அவனை இறுக அணைத்து அவன் தோளில் சாய்ந்து தூங்கினாள். இருவரும் நிம்மதியாக தூங்கினர். மறுநாள் காலை எந்தவித பதட்டமும் இல்லாமல் விடிந்தது.


காலையில் எப்பொழுதும்போல் பெரியவர்கள் அனைவரும் எழும்பி வந்திருக்க அவர்களுடன் ஆதி ராகவன் ஆனந்த் மற்றும் அஜய் எழுந்து இருந்தனர். சரண்யா மற்றும் வித்யா தவிர வேறு எந்த இளம் பெண்களும் எழுந்திரிக்கவில்லை.


சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக எழுந்து வர லக்ஷ்மணனையும் ரித்விகாவையும் சதீஷ் ஆகிய மூவரை மட்டும் அதுவரை காணவில்லை பொறுத்து பொறுத்து பார்த்த ராகவன் அவர்களை எழுப்ப சென்றுவிட்டான். அப்பொழுதும் அவனால் ஆண்கள் இருவரை மட்டுமே எழுப்ப முடிந்தது.


ராகவன் எழும்பியதில் "இந்த அண்ணாக்கு வேற வேலையே இல்ல" என்று முனகிக்கொண்டே பல் தேய்க்க சென்றான் லட்சுமணன். சதீஷ் ராகவனை பார்த்து பேந்த பேந்த முழித்து விட்டு எழுந்து பிரஷ்ஷாக சென்றான். அவர்கள் இருவரையும் கீழே அழைத்து வந்தவன் ஆதியை பார்த்து "உன் பொண்டாட்டிய உன்னால மட்டும் தான் எழுப்ப முடியும் நான் போனா அங்கு சண்டை வந்துடும் அதனால ஒழுங்கு மரியாதையா போய் எழுப்பிக் கூட்டி வா" என்று கூறினான்.


சரியாக அந்நேரம் ரித்விகா எழுந்து கீழே இறங்கி வந்தாள். அவளை பார்த்த அனைவரும் ஒருவழியா விடிந்து விட்டது அவளுக்கு என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்பிறகு அனைவரும் காலை உணவை முடித்தவுடன் பெரியவர்கள் இவர்கள் அனைவரிடமும் கூறிவிட்டு தங்களுடைய இல்லங்களுக்கு சென்றனர்.


லக்ஷ்மணன் நண்பர்கள் மற்றும் ரித்விகா நண்பர்களை பார்த்து அஜய் "ஏண்டா நீங்க யாரும் வீட்டுக்கு போற ஐடியா இல்லையா உங்களை யாரையும் வீட்ல தேட மாட்டாங்களா" என்று கேட்டான்.


தீபன் "வீட்ல எல்லாருக்கும் தெரியும் அண்ணா கழுத கெட்டா குட்டி சுவரு அதே மாதிரி எங்க வீட்ல இல்ல நா இப்படி யாராவது ஒருத்தன் வீட்லதான் கிடப்போம் மேக்ஸிமம் ஆதி அண்ணா வீட்ல தான் இருப்போம் என்று அனைவருக்கும் தெரியும் நாங்க வீட்டுல இல்லாத வரைக்கும் சந்தோஷம்னு நினைச்சுக்கோங்க" என்று கூறினான்.


இதைக்கேட்ட ராகவன் "அவ்வளவு கொடுமையான பண்றீங்க வீட்ல" என்று கேட்டாள்.


சிவா "அப்படி எல்லாம் எதுவும் இல்லை அண்ணா சும்மாவே லீவு என்ஜாய் இங்கே தான் இருப்போம் அதுமட்டுமில்லாம உங்க கல்யாணம் வேற முடிஞ்சிருக்கு அதனால இன்னும் பத்து நாளைக்கு எங்களை யாரும் தேட மாட்டாங்க நீங்க கவலைப் படாதீங்க" என்று கூறினான்.


ஆதி "சரி அப்ப எல்லாரும் வீட்டிலேயே இருந்துக்கோ நாங்க நாலு பேரும் கொஞ்சம் வெளிய வேலை இருக்கு முடிச்சிட்டு மதியம் சாப்பிட வந்து விடுகிறோம் அதுவரைக்கும் இந்த வீட்ல இருக்கற எல்லாரையும் நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும்" என்று கூறினான்.


ஆதி கூறியதைக் கேட்ட லட்சுமணன் "ஆமா கையைக் காலை வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும் அதை விட்டுட்டு ஊர்ல இருக்க எல்லார் கிட்டயும் வம்பிழுத்து பகையை சம்பாதிச்சு வச்சா இப்படித்தான் செக்யூரிட்டி போடணும்" என்று கூறினான்.


அஜய் லக்ஷ்மணன் முதுகில் ஒன்று போட்டுவிட்டு "நீங்க மட்டும் குறைத்து வம்பிழுத்து வைத்து இருக்கீங்க மூடிக்கிட்டு வேலையை பாரு" என்று கூறிவிட்டு ஆதி இடம் "கிளம்பலாமா" என்று கேட்டான்.


லக்ஷ்மணன் முதுகை பிடித்துக்கொண்டே "சரி நீ நாலு பேரும் பாத்து பத்திரமா போயிட்டு வா" என்று கூறிவிட்டு தன்னுடைய பேபியை தேடி சென்றான்.


அவனைப்பார்த்து நால்வரும் சிரித்து விட்டு தங்களுடைய வேலையை கவனிக்க சென்றனர். அவர்கள் வந்து சேர்ந்த இடம் ரிஷி அடைத்து வைக்கப்பட்டிருந்த பங்களாவிற்கு தான் வந்தனர்.


ஆதி மற்றும் ராகவனை பார்த்த ரிஷி கத்த ஆரம்பித்தான் "ஏண்டா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல நான் கல்யாணம் பண்ண வேண்டியவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணி இருக்கா இன்னொருத்தன் அதுக்கு துணை போய் இருக்கான் நீங்கள்லாம் சந்தோஷமா வாழ நான் விட்டுவிடுவேனா உங்களுடைய சந்தோசத்தை அழிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்" என்று அவன் இவர்களிடம் அடைபட்டுக் கிடக்கிறான் என்பதை மறந்து கத்திக் கொண்டிருந்தான்.


அவனை பொறுமையாக பார்த்த ராகவன் "அதுக்கு முதல்ல நீ இங்க இருந்து வெளிய போகணும் அதுமட்டுமில்லாம உன்னை பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் சரண்யாவிற்கு தான் உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்புறம் எதுக்காக அவளை தொந்தரவு பண்ண அவங்க அம்மா நீ சொன்ன வார்த்தை எல்லாம் நம்பி ஏமாந்து இருக்கலாம் அதுக்காக ஏதோ நீ கல்யாணம் பண்ண பொண்ண நான் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ண மாதிரி இந்த கத்து கத்துற" என்று கூறினான்.


ஆதி அவனைப்பார்த்து "இனிமே இங்க இருந்து நீ வெளியே போகணும்னா அதுக்கு எங்களுடைய பெர்மிஷன் வேணும் உனக்கு சரியாக ஒரு வாரம் டைம் தருகிறேன் அதற்குள் திருந்தி வாழ வழியை பார் இல்லை என்றால் பின் விளைவுகள் மோசமாக சந்திப்பாய்" என்று எச்சரித்தான்.


ரிஷி கோபமாக தன்னுடைய பற்களைக் கடித்தான் ஆனால் இப்போது இங்கிருந்து தப்பி செல்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்தவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.


அதை பார்த்தவர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான் ரூபன். அவனை பார்த்து அஜய் "டேய் மாப்ள உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் இங்கே வா" என்று அழைத்தான்.


அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்த ரூபன் "நீ கேக்குறதுக்கு முன்னாடி நானே சொல்றேன் நான் உன் தங்கச்சியை லவ் பண்றேன். ஆனால் அது இப்ப இருந்து இல்ல கடந்த நான்கு வருடங்களாக முதலில் அவள் உன் தங்கை என்று எனக்கு தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்து கொண்டேன் ஒரு மனம் நண்பனின் தங்கை என்று கூறினாலும் காதல் கொண்ட இன்னொரு மனம் அதை ஏற்க மறுத்தது அதனால் தான் உன்னிடமிருந்து நான் ஒதுங்கி இருந்தேன்" என்று கூறினான்.


அஜய் ஆனால் ரூபன் "அஜிதா செய்த வேலைகள் அனைத்தும் தெரிந்தால் உனக்கு அவள் மேல் இருக்கும் காதல் மாற வாய்ப்பு இருக்கிறதா" என்று கேட்டான்.


ரூபன் "அவள் செய்தது எல்லாம் எனக்கு தெரியும் அது ஒரு சிறுபிள்ளை செய்யும் தவறை போலவே இப்போது அந்த தவறினால் அவர் மிகப்பெரிய குற்ற உணர்ச்சியை அனுபவித்து வருகிறாள். எனக்கு என்னோட காதலில் எந்தவித சந்தேகமுமில்லை அதுமட்டுமல்லாமல் அவள் உண்மையாக ஆதியை காதலித்து இருந்தால் நானே விட்டுக்கொடுத்து சென்றிருப்பேன். ஆனால் அவள் செய்தது இதோ சிறுவயதிலிருந்து அனைவரும் கூறியதை கேட்டதால் பாசத்தை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விட்டாள் உன்னுடைய அப்பாவுடைய தேவையில்லாத அறிவுரைகள் தான் இவை அனைத்திற்கும் மூல காரணம். அதனால நீ அதை நினைத்து கவலைப்படாதே அதுபோல நானே அவளிடம் என்னுடைய காதலை கூறிக்கொள்கிறேன் எனக்கு உதவி செய்கிறேன் என்று நீ ஏதாவது செய்து விடாதே" என்று கூறினான்.


ஆதி "சரிடா நீ எப்ப தான் அவளை பார்த்த அத முதல்ல சொல்லு" என்று கேட்டான்.


ரூபன் "அதெல்லாம் என்னோட ஆளு கிட்ட சொல்லும்போது தெரிஞ்சுக்கோ சும்மா சும்மா என்னோட காதல் கதையை சொல்ல முடியாது" என்று கூறி முடித்து விட்டான்.


அஜய் "சரி என்னமோ பண்ணி தொலை ஆனா இவனுங்க விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்துக்கோ எனக்கு என்னமோ இவனுங்க அவ்வளவு தான் சும்மா இருப்பார்கள் என்று தோணவில்லை அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே செயல்பட வேண்டும்" என்று கூறினான்.


ஆதி "அதுமட்டுமல்ல அந்த இந்து பற்றி கொஞ்சம் விசாரித்து முடிவெடுப்பது நல்லது ஏனென்றால் அவள் ஏதாவது திட்டம் தீட்ட வாய்ப்பு இருக்கிறது" என்று கூறினான்.


ரூபன் "சரிடா நீங்க சொல்றதெல்லாம் கொஞ்சம் கவனிக்கிறேன் நீங்க எல்லாரும் கொஞ்சம் கவனமாக இருங்கள்" என்று கூறினான்.


அதன் பின்பு அனைவரும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்த போது வீடு முழுவதும் தண்ணீர் காடாக காட்சியளித்தது. இதை கவனிக்காமல் முதலில் சென்ற ராகவன் இந்த தண்ணீரில் வழுக்கி விழுந்தான் விழுவதற்கு முன் பற்று கோலாக அஜய் மற்றும் ஆனந்தை பிடிக்க அவர்களும் தடுமாறி கீழே விழுந்தனர்.


ஆதி மட்டுமே கீழே விழாமல் நின்று கொண்டிருந்தான். கீழே விழுந்த கடுப்பில் எழுந்த மூவரும் "என்னடா நடக்குது இங்க இது வீடா இல்ல இல்ல வேற ஏதுமா" என்று கத்தினான் ராகவன்.


ஆதி வீட்டை சுற்றி நோட்டமிட்டான் அங்கே ஒவ்வொரு பொருளின் பின்னால் ஒவ்வொருவர் மறைந்து இருப்பது தெளிவாக தெரிந்தது அதை தன்னுடைய நண்பர்களுக்கு காண்பித்துக் கொடுத்தான் அதை பார்த்தவர்கள் யாருக்கும் தெரியாமல் அவரவர் பின்னால் சென்று இழுத்து வந்து தண்ணீரில் போட்டனர். கடைசியாக எஞ்சியது ரித்விகா மற்றும் லட்சுமணன் மட்டுமே லக்ஷ்மணனை பிடித்த அஜய் மற்றும் ஆனந்த் "டேய் எங்கள பார்த்தா உங்கள் எல்லாருக்கும் எப்படி தான் தெரியுது எதுக்காக இப்படி வீட்டை அலங்கோலம் ஆக்கி வைத்திருக்கிறார்கள் இவர்களை நம்பி வீட்டை விட்டு விட்டு போனா இப்படி செய்து வைத்திருக்கிறார்களே" என்று கேட்டான்.


லட்சுமணன் அஜயின் இடுப்பில் ஏறிக் கொண்டு "மாமா தயவு செஞ்சி கீழே போட்டு விடாதே இது எதுக்குமே நான் காரணம் கிடையாது. அனைத்துக்கும் காரணம் என்னோட செல்லம் பேபி தான் அவள் தான் முதலில் ஆரம்பித்தாள் என்று நடந்ததை கூற ஆரம்பித்தான். அதாவது அனைவரும் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க சிவா ரித்விகா இடம் தண்ணீர் கேட்டான் அதற்கு அவள் உனக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு என்கிட்ட ஏதாவது கேட்டுட்டே இருக்கே என்று அவன் மேல் தண்ணீரை கொட்டி விட்டால் பதிலுக்கு அவன் வீச அது வேறு யாரு மேலும் பட இப்படியே ஒவ்வொருவராக நனைய ஆரம்பிக்க இந்த வீடு இவ்வாறு ஆகிவிட்டது" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டு இன்னும் கடுப்பானவர்கள் அவனை வலுக்கட்டாயமாக தண்ணீரில் போட்டு புரட்டி எடுத்தனர். கடைசியாக மிஞ்சிய ரித்விகா யார் கண்ணிலும் படாமல் மெதுவாக மாடி அருகில் சென்றாள். அவளை சரியாக பிடித்த ஆதி தூக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் போட்டான்.


அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் கீழே விழும் நேரத்தில் சரியாக ஆதியை பிடித்து இழுத்தாள் அதனால் அவரும் சேர்ந்த விழுந்தான். ஆக மொத்தம் அனைவரும் தண்ணீரில் நனைந்து இருந்தனர் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு உடை மாற்ற சென்றனர்.


அதன் பிறகு மகிழ்ச்சியாக வீட்டை சுத்தம் செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்றாக அனைவரும் ஹாலில் கூடினர். அப்போது ஆதி சதீஷ் மற்றும் அக்ஷயாவை பார்த்து "சரி இப்ப ரெண்டு பேரும் சொல்லு உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா ஏதாவது பிரச்சனை இருக்கா எதுவாக இருந்தாலும் இப்பவே சொல்லிரு பின்னாடி பெருசா எதாவது வந்த பிறகு எங்களால் எதுவும் பண்ண முடியும் அதனால் மறைக்காமல் எல்லாத்தையும் சொல்லு" என்று கூறினான்.


லட்சுமணன் "ஆமாம் சீக்கிரம் சொல்லு நாட்டாமை ரொம்ப நேரம் வெயிட் பண்ண மாட்டார் நீ எந்த பிரச்சனையை சொன்னாலும் அதுக்கு உடனே ஒரு தீர்வு வைத்திருப்பார் அதனால மறக்காம எல்லாத்தையும் சொல்லு" என்று கூறினான்.


அவன் கூறிய விதத்தில் ஒரு சிலர் சிரிக்க ரித்விகா அவனை கொலை செய்யும் அளவுக்கு முறைத்தாள். முறைத்துக் கொண்டே "பேபி என்னோட புருஷன் அதனால குறைச்சு பேசு எனக்கு கோவம் வருது அப்புறமா ஊர்மிளா கிட்ட உன்ன பத்தி தப்பு தப்பா சொல்லி விடுவேன்" என்று கூறினாள்.


லட்சுமணன் "பின்ன என்ன பண்ண சொல்ற எல்லா பிரச்சனையும் கேட்டு புதுசு புதுசா எதிரியை தான் சம்பாதிச்சு வைக்கிறான் உன் புருஷன் அதை அப்போதே முடிச்சு விடனும் அதையும் செய்வது இல்லை என்று கூறியவன் நீ ஊர்மிளா கிட்ட என்ன வேணா சொல்லிக்கோ அவளுக்கு என் மேல நம்பிக்கை இருந்தா தான் அது உண்மையான காதல் இல்லை என்றால் அதற்கு பெயர் வேறு அதனால நீ இப்படி சொல்லி என்ன பயமுறுத்தினான் நான் பயப்பட மாட்டேன்" என்று கூறினான்.


ஆதி "எந்த பிரச்சனையாக இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு தான் செய்யணும் நல்லது செய்யும்போது கண்டிப்பா எதிரிகள் கூடுவது உண்மைதான் ஆனால் யோசிக்காமல் ஏதாவது செய்தால் அது நம் வீட்டில் உள்ள வரை பாதிக்க வாய்ப்புள்ளது அதற்காக தான் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செய்கிறேன் அதனால் நீ கவலைப்படாதே கூடிய விரைவில் அனைத்து பிரச்சனையும் முடித்து விடுகிறேன்" என்று லட்சுமணனை பார்த்து கூறியவன் "சதீஷ் நீ இப்ப சொல்லு" என்று சதீஷை பார்த்து மறுபடியும் கேட்டான்.


சதீஷ் அனைத்தையும் கூற ஆரம்பித்தான். அவன் கூறுவதை அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
 
Top