• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 21

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சதீஷ் மற்றும் அக்ஷயா பற்றிய கதையை சதீஷ் கூற ஆரம்பித்தான். சதீஷ் முதலாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அவருடைய நண்பர்கள் சிலர் வகுப்பை கட் அடித்து விட்டு வெளியே சுற்றிக் கொண்டிருந்தனர் அவர்கள் மட்டும் செல்லாமல் சும்மா இருந்த சதீசை அழைத்து சென்றனர்.


அவர்கள் அங்கு இங்கு என்று சுற்றி விட்டு மதியம் ஒரு பார்க்கிற்கு ஓய்வெடுக்க சென்றனர் அப்போது அந்த பார்க்கிற்கு அக்ஷயா தன்னுடைய தோழியுடன் வந்தாள். அது அவள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம் அதனால் அன்று ஏதோ ஒரு பரிட்சையை எழுதிவிட்டு தங்களுடைய ஓய்வு நேரத்தை செலவழிப்பதற்கு அந்த பார்க்குக்கு வந்து இருந்தனர்.


பள்ளி சீருடையில் இருந்த இரண்டு பெண்களையும் பார்த்த சதீஷின் நண்பர்கள் அவர்களை வம்பிழுக்க நினைத்தனர் ஆனால் உள்ளே வரும்போதே கையில் ஒரு குச்சிமிட்டாய் வைத்து சுவைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்த அக்ஷயாவை பார்த்த சதீஷ் ஏதோ அவளைவிட்டு கண்ணை எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.


ஆனால் அவள் அதையெல்லாம் கவனிக்க வில்லை தன்னுடைய குச்சி மிட்டாய் உண்ப்பதிலையே குறியாக இருந்தாள். அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஒவ்வொரு இடமாக ரசித்து கொண்டே வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த சதீஷ் மொத்தமாக அந்த கண்களில் விழுந்தான்.


இவன் இப்படி கனவுலகில் இருக்கும்போதே அவனுடைய நண்பர்கள் அவர்கள் இருவரையும் நெருங்கி விட்டிருந்தனர் அதைப் பார்த்தவன். அப்போதுதான் சுயநினைவு அடைந்து ஏதும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்று பயந்து கொண்டே அவர்களிடம் விரைந்து சென்றான்.


ஆனால் அதற்குள் அவனுடைய நண்பன் ஒருவன் "என்ன பாப்பா ரெண்டு பேரும் ஸ்கூலை கட் அடித்துவிட்டு பார்க் வந்து இருக்கீங்களா ஸ்கூலுக்கு தெரிஞ்சா வீட்ல சொல்லி குடுக்க மாட்டாங்க" என்று கேலியாக கேட்டான்.


அவன் கூறியதைக் கேட்ட அக்ஷயாவின் தோழி பயந்து அழுவதற்கு தயாரானாள். ஆனால் அக்ஷயா எதுவும் கூறாமல் தன் தோழியின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டே அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள். அதைப்பார்த்த சதீஷின் இன்னொரு நண்பன் "எதுக்கு இப்படி பார்க்கிறாய்" என்று கேட்டான்.


அக்ஷயா "இல்லை அண்ணா நாங்க ஸ்கூல் கட் அடிச்சுட்டு வரல எக்ஸாம் முடிச்சிட்டு தான் வந்து இருக்கோம் நீங்க சொல்றத வச்சு பார்க்கும்போது நீங்க எல்லாரும் தான் காலேஜ் கட் அடிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு உங்க காலேஜ் தெரிஞ்சா வீட்டுக்கு போன் பண்ணி சொல்ல மாட்டாங்களா அதுவும் இப்படிப் பார்க் வந்து ஸ்கூல் பிள்ளைங்க கிட்ட வம்பு இழுத்தார்கள் அப்படின்னு யாராவது போலீஸ்ல கேஸ் கொடுத்துட்டா உங்க வீட்டில என்ன சொல்லுவாங்க" என்று ஒன்றுமறியாத பச்சைப் பிள்ளை போல் கேட்டாள்.


அவள் கூறியதைக் கேட்ட சதீஷின் நண்பர்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தனர். ஆனால் சதீஷ் மனதிற்குள் "இந்த முட்டக்கண்ணி எவ்வளவு அழகா ஆப்பு வைக்கிறது. அதுவும் அந்த கண்ணை வைத்தேன் அனைவரையும் ஒரு பார்வை பார்க்கிறது எப்பா அந்தப் பார்வையில் மொத்தமாக விழுந்துவிட்டேன்" என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருந்தான்.


அவள் கூறியதை கேட்டு கோபம் கொண்ட ஒருவன் மட்டும் "என்ன சின்ன பிள்ளைங்க நெனச்சு பேசினார் ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்க" என்று எகிறினான்.


அதற்கு சிறிதும் அசராத அக்ஷயா "அண்ணா நீங்க செஞ்சது தப்பு அத முதல்ல ஒத்துக்கோங்க உங்களோட கிண்டல் கேலி எல்லாம் எங்கிட்ட வேண்டாம். அதே மாதிரி எந்த பொண்ணுங்க கிட்டயும் போய் இப்படி பேசிட்டு இருக்காதீங்க எல்லாரும் இத நல்லவிதமா எடுத்துக்குவாங்க சொல்ல முடியாது. ஒரு சிலர் பயந்துபோய் தப்பான முடிவு கூட எடுக்கலாம் நீங்க நினைக்கலாம் இதெல்லாம் சாதாரண விஷயம்தான் அப்படின்னு இப்ப நான் இப்படி பேசுறது நாளை நீங்க இதுக்கு பதில் பேசுறீங்க அதே இது என் பிரண்டு மாதிரி நானும் பயந்து போயிருந்தார் இன்னும் எங்களை கிண்டல் பண்ணி இருப்பீங்க .அது ஒருவிதமான மன அழுத்தத்தை உருவாக்க வாய்ப்பு இருக்கு உங்க வீட்லயும் எல்லாரும் இருக்காங்க அதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க" என்று தன்னுடைய நீண்ட உரையை முடித்துவிட்டு யாருக்கும் காத்திராமல் தன்னுடைய தோழியை அழைத்துக்கொண்டு சென்றாள்.


அவள் என்ன கூறி செல்கிறாள் என்பதை புரியவே அங்கிருந்தவர்களுக்கு சில நேரம் பிடித்தது அதன்பிறகே தங்களுடைய செயல் எவ்வளவு தவறு என்று எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர்.


இவர்கள் அனைவரும் எவ்வாறு இருக்க சதீஷ் அக்ஷயா பின்னாடியே சென்றான் ஹலோ என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றான். ஆனால் அதை அக்ஷயா கவனிக்கவில்லை உடனே "ஓய் முட்டகண்ணி கொஞ்சம் நில்லு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூறினான்.


தன்னை யாரோ முட்டைக்கண்ணி என்று அழைப்பதை கேட்டு கோபமாக திரும்பி அக்ஷயா தன் முன்னே வந்து நின்ன சதீஷின் முகத்தை கேள்வியாக பார்த்தாள். அவளுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் "ஹாய் என்னோட பேரு சதீஷ் உன்னை பார்த்த உடனேயே எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அப்புறமா நீ பேசுனது ரொம்ப நல்லா இருந்துச்சு நான் இப்பதான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறேன். சோ நான் அப்புறம் நீ படித்து முடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணு நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூறி விட்டு நிற்காமல் சென்று விட்டான்.


அக்ஷயா தன்னிடம் வந்து தைரியமாக தன் காதலை கூறிய சதீஷ் நல்ல இடத்தையே அவள் மனதில் பிடித்தான். ஆனால் இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தன் வீட்டில் இருப்பவர்களை மீறி எந்தவித முடிவையும் தான் எடுக்க போவதில்லை என்பதை உறுதி எடுத்துக்கொண்டு அவனை அழைத்தாள்.


ஆனால் அவனோ எப்பொழுதோ தன்னுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு சென்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த அக்ஷயா 'இனி அவனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவரிடம் கூறி விட வேண்டும்' என்று எண்ணிக்கொண்டு தன்னுடைய தோழியை அழைத்துக்கொண்டு வீடு வந்தாள்.


வீட்டிற்கு வந்தவள் தன் தாய் மற்றும் தந்தையை அழைத்தாள். அவர்கள் இருவரும் என்னவென்று கேட்டவாறு அவள் அருகில் வந்து அமர்ந்தனர். இதுவரை எதையும் அவர்களிடம் மறைக்கிறது கிடையாது அக்ஷயா. அதனால் அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் சதீஷ் சொன்னதை கூட ஒரு வரி மாறாமல் கூறினாள்.


அதைக்கேட்டு அவளுடைய தந்தை "எதுவாக இருந்தாலும் உன் படிப்பு முடியட்டும் என்று அந்த பையன் கூறி இருக்கிறான் அல்லவா அதனால் நீ எதைப் பற்றியும் சிந்திக்காமல் உன்னுடைய வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை பற்றி மட்டும் யோசி இனி அந்த பையனை நீ நேரில் சந்தித்தால் மீதியை பார்த்துக்கொள்ளலாம். அதனால் எதை நினைத்தும் வருந்தாதே குழம்பாதே ஒவ்வொருத்தர் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் அதேபோல் இதற்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் அதனால் இப்போது நீ எப்படி மருத்துவராவது என்பதை பற்றி மட்டும் யோசி" என்று அறிவுரை கூறினார்.


அவர் கூறியதில் முற்றிலும் தெளிவடைந்த அக்ஷயா அதன்பின்பு எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தினாள். இங்கோ சதீஷ் அவள் சிறு பெண் அவளுடைய மனதை வீணாக குழப்ப வேண்டாம் என்று எண்ணிக் கொண்டு அவளை அதற்குமேல் சந்திக்காமல் இருந்தான் இப்படியே இவளுடைய பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் முடிந்தது.


தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமான நிலையில் சதீஷ் மற்றும் அக்ஷயா சந்தித்துக்கொள்ளும் நாளும் வந்தது ஆனால் அது நல்லவிதமாக முடியவில்லை.


சதீஷ் அன்று காலை எழுந்த உடனேயே இன்று அக்ஷயாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வர அவளை சந்தித்த பார்க்கிற்கு சென்றான் அங்கே அவன் தேவதை அமர்ந்து ஏதோ கதை புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவள் அருகில் சென்றான்.


சதீஷ் "ஹாய் எப்படி இருக்க எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ணி இருக்க இனி என்ன பண்ண போகிறாய்" என்று கேட்டான்.


சதீஷின் வரவை எதிர்பார்க்காத அக்ஷயா ஒரு நிமிடம் தடுமாறினாலும் அதன் பிறகு சிரித்துக்கொண்டு "ஹாய் எக்ஸாம் நல்லபடியா எழுதி இருக்கேன் டாக்டர் படிக்கணும்னு ஆசைப்படுறேன் நல்ல மார்க் வந்தா நிச்சயமா டாக்டர் படிப்பேன்" என்று கூறினாள்.


சதீஷ் "சரி நான் சொன்னதை பத்தி ஏதாவது யோசிச்சு பார்த்தியா" என்று கேட்டான்.


அக்ஷயா "நான் உங்ககிட்ட அன்னைக்கே சொல்லணும் என்று இருந்தேன் ஏனென்றால் என்னுடைய வாழ்வின் முக்கியமான முடிவுகள் அனைத்தையும் எடுப்பது என்னுடைய பெற்றோர் அவர்கள் தவிர வேறு யாரும் என்னுடைய வாழ்வில் நல்ல முடிவை எடுக்க முடியாது என்பது என்னுடைய கருத்து அதனால் நீங்கள் எது கூறுவதாக இருந்தாலும் என்னுடைய பெற்றோரிடம் பேசிக் கொள்ளுங்கள்" என்று கூறினாள்.


சதீஷ் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஏதோ கூற வர அதற்குள் அன்று அக்ஷயா விடம் வம்பு செய்த அவனுடைய நண்பன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் சதீஷை பார்த்து "பரவால்ல மாப்ள இந்த சரவெடி கவுத்துட்டா போல பக்கத்துல உட்கார்ந்து ஹாயா பேசிக்கிட்டு இருக்க ஒரு வேளை நானும் அன்னைக்கு இப்படி அமைதியா உட்கார்ந்து பேசியிருந்தா இந்த மேடம் பேசியிருப்பார்கள் போல" என்று வார்த்தையில் நஞ்சு கலந்து பேசுவது போல் பேசினான்.


சதீஷ் அவனை தடுப்பதற்கு முன் அவன் இவ்வாறு பேசி முடித்து இருக்க அக்ஷயா அந்த புதியவன் ஏ அடையாளம் கண்டுகொண்டு 'அப்படி என்றால் இவனும் அந்த கூட்டத்தில் ஒருவன் வேண்டுமென்றே என்னை ஏமாற்ற இவ்வாறு செய்திருக்கிறான்' என்று தவறாக புரிந்து கொண்டு சதீஷ் ஒரு பார்வை பார்த்தாள்.

சதீஷ் அவன் நண்பனை தயவுசெஞ்சு சும்மா இருடா என்று அவனை விரட்டி விட்டு அக்ஷயாவை திரும்பிப் பார்த்தான் அவன் ஏதோ கூற வர அவனை கைநீட்டி தடுத்த அக்ஷயா "வேண்டாம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் இனிமே என்னோட லைஃப்ல நீங்க வராமல் இருந்தாலே அது எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று கூறிவிட்டு நிற்காமல் சென்று விட்டாள்.


சதீஷ் தன் பக்க நியாயத்தை அவள் கேட்காமல் செல்கிறாள் என்று கோபத்தில் அன்று முதல் அவளைப் பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அவனுடைய காதல் கொண்ட மனது எப்போதாவது அவளை சந்திக்க தூண்டும் அப்போது எல்லாம் அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்து வந்து கொண்டிருந்தான்.


அக்ஷயாவிற்கு அவனுடைய ஞாபகங்கள் அடிக்கடி வந்தாலும் அன்று அவன் நண்பன் பேசிய வார்த்தைகளும் ஞாபகம் வர சதீஷ் பத்தி சிந்திக்காமலேயே இருந்துவிட்டால் ஆனால் இன்றுவரை அந்த ஒரு விஷயத்தை மற்றும் அவளுடைய பெற்றோரிடம் அவள் இன்றும் கூறவில்லை. அது ஏனென்றால் அவனை தவறாக எண்ணவும் அவளுடைய மனது ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை அதை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அந்த பேதை.


அவர்கள் இருவரும் அறியாதது இப்படி ஆதி மூலமாக அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்பதுதான் என்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தான் சதீஷ்.


நடந்ததில் அவன் தவறு எதுவும் இல்லை என்பதை உணர்ந்த அக்ஷயா மனது நிம்மதி அடைந்தாலும் இப்படித்தான் வேண்டாதவர்கள் கூட நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமா என்று எண்ணி அமைதி காத்தாள். அங்கிருந்த அனைவருக்கும் ஒன்று மட்டும் புரிந்தது இருவர் மேலும் எந்தவித தவறும் இல்லை அவர்களுக்கு யோசிக்க கொஞ்சம் அவகாசம் தேவை ஒழுங்கா யோசித்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணிக்கொண்டு அனைவரும் அமைதியாக இருந்தனர்.


அனைத்தையும் கேட்டு முடித்த லட்சுமணன் சதீஷை பார்த்து "பரவாயில்லடா பார்த்த முதல் நாளே உன்னுடைய லவ்வை சொல்லிவிட்டாய் அதுமட்டுமில்லாம உனக்கு பெருசா எதிரி யாரும் இல்லை கூடவே வச்சு இருக்க சோ நம்ம எதிரிகள் ஸ்டில் புதுசா யாரும் சேர மாட்டாங்க அதுவரைக்கும் நிம்மதி" என்று அவனுடைய கருத்தில் அவன் தெளிவாக இருந்தான்.


ரித்விகா லக்ஷ்மணனை பார்த்து "பேபி அவங்களோட லவ் ஸ்டோரி ல பெருசா எதிரி இல்லை ஆனா உன்னோட லவ்வுல எதிரி இல்லாமலா இருப்பார்கள்" என்று கேட்டாள்.


லட்சுமணன் "என் செல்ல பேபி அதெல்லாம் எனக்கு யாரும் இல்ல ஆல்ரெடி எல்லா விஷயத்தையும் விசாரித்து விட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னுடைய ஆளுக்கு புதுசாக என்மேல் எண்ணமும் வந்திருக்கிறது கூடிய விரைவில் நானும் கமிட்டாகி காட்டுகிறேன்" என்று சவால் விட்டான்.


ஆதி லட்சுமணனை பார்த்து "என்னத்த காட்ட போற இப்ப இங்க யாரும் நீ காட்டுகிறத பாக்குற ஐடியா இல்லை அதனால் கொஞ்சம் அமைதியாக இரு" என்று கூறியவன். சதீஷ் மற்றும் அக்ஷயா வை பார்த்து "உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது படிப்பு இருக்கிறது அதனால எதுவாக இருந்தாலும் பொறுமையா யோசிச்சு முடிவு எடுங்க நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நாங்க உறுதுணையாய் இருப்போம்" என்று கூறினான் அதைக்கேட்ட இருவரும் சம்மதமாக தலையசைத்தனர்.


ராகவன் அனைவரையும் பார்த்து "இதுக்கு மேல வேற யாருக்காவது பிளாஷ்பேக் இருக்கா இருந்தா அவங்களும் சொல்லி இரு ஒவ்வொருத்தரா பிளாஷ்பேக் சொல்ல சொல்ல நெஞ்சு வலிக்குது" என்று பாவமாக கூறினான்.


ஆதி "இதுக்கு மேல பிளாஷ்பேக் இவங்க யாருக்கும் இல்லை அதனால நீ கவலை படாதே" என்று கூறினான்.


அஜய் ரித்விகா மற்றும் லட்சுமணன் நண்பர்கள் அனைவரையும் பார்த்து "எல்லாரும் ரெடியாகி வாங்க அவங்க அவங்க வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு வந்தர்றேன்" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்ட அனைவரும் தாங்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று ரெடியாகி தாங்கள் கொண்டுவந்த பொருள்களையும் எடுத்து வந்தனர் அதன் பிறகு அஜய் பெண்கள் அனைவரையும் காரில் ஏற்றுக்கொண்டு அவரவர் வீடுகளில் கொண்டுவிட்டான். ஆண்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தங்களது இல்லம் நோக்கி சென்றனர்.


இப்படியே இவர்களின் விடுமுறை காலம் மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. ஆனால் இங்கோ இந்து இன்னும் தன் தந்தையைக் காணாமல் கொலைவெறியில் தேடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்துவிட்டது ஆதி தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று அந்த கோபத்தில் இவர்களை பழிவாங்க ஒரு திட்டத்தை திட்டிக்கொண்டே இவர்களை சந்திக்க தயாரானாள்.


கல்லூரியில் ஊர்மிளாவை சந்தித்த ரித்விகா "எதற்காக கல்யாணத்துக்கு வரவில்லை அட்லீஸ்ட் ரிசப்ஷன் இருந்துச்சுல்ல அதுக்காகவாவது வந்து இருக்கலாம் அல்லவா" என்று கேட்டாள்.


ஊர்மிலா "ஐயோ அக்கா சாரி மன்னிச்சிடுங்க அந்த ரெண்டு நாளுமே எக்ஸாம் இருந்துச்சு அதனால வர முடியல இதுக்கு மேல என்ன வேலை இருந்தாலும் கண்டிப்பாக வருகிறோம்" என்று கூறினாள்.


ரித்விகா "சரி உன்ன நா ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணுனேன் அதனால்தான் உன்கிட்ட இப்படி பேசிட்டேன் மன்னிச்சிடு எனக்கு வேலை இருக்கு அதனால அப்புறமா பேசலாம்" என்று கூறி விடைபெற்றாள்.


அதன்பிறகு அன்றைய நாள் நல்லபடியாக முடிந்தது இப்படியே நாட்கள் அதன் போக்கில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்க ரூபன் ஆதிக்கு கால் செய்து "ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் அதனால் உடனடியாக கிளம்பி நான் சொல்கிற இடத்திற்கு வா" என்று கூறி போனை வைத்தான்.
 
Top