• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 22

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ரூபன் ஆதிக்கு அழைத்து ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டும் அதனால் அவனை உடனடியாக தங்களுடைய இடத்திற்கு வருமாறு கூறினான். அவன் கூறியதில் இருந்தே ஏதோ முக்கியமான விஷயம் என்பதை உணர்ந்த ஆதி ராகவன் மற்றும் அஜய்யை இருவரையும் அழைத்துக்கொண்டு ரூபனை தேடிச் சென்றான்.


ராகவன் "ஏதாவது பிரச்சினையா இருக்குமோ இல்லனா உடனடியா அவன் வர சொல்ல வேண்டிய அவசியம் என்ன" என்று கேட்டான்.


அஜய் "எதுவாக இருந்தாலும் அங்கே போய் பார்த்தா தெரிஞ்சத போகுது" என்று ராகவனைப் பார்த்து கூறியவன் ஆதியை பார்த்து "நீ எதுக்கு யோசனையா வருகிறாய்" என்று கேட்டான்.


ஆதி "இல்லடா லக்ஷ்மணன் சொன்ன மாதிரி சீக்கிரம் எல்லா பிரச்சினையும் முடிக்க பாக்கணும் ஏன்னா பரத் அப்புறமா சதீஷ் காலேஜ் முடிச்சிடுவான். அதே மாதிரி லக்ஷ்மணன் இனிமேல் பிராக்டீஸ் போற மாதிரி இருக்கும் இந்த மாதிரி அமையும் போது நம்ம வீட்டு பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தவும் செய்யணும் அதுதான் என்ன பன்றதுன்னு யோசனையா இருக்கு" என்று கூறினான்.


ராகவன் "ரித்விகாவை பார்த்துக் கொள்ள அவளுடைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் அவளைப் பற்றி கவலை இல்லை ஆனால் ஆர்த்தி மற்றும் கீர்த்தி இருவரையும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இருவருக்கும் பரத் இருக்கும் வரை எந்தவித பிரச்சனையும் இல்லை அதன் பிறகு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினான்.


அஜய் "ஆர்த்தி மற்றும் கீர்த்தி பற்றி நீ கவலைப்பட வேண்டிய தேவை இல்லை அவர்களைப் பாதுகாக்க ஏற்கனவே ஆள் இருக்கிறார்கள். அது என்ன கதை என்று ரூபனை சந்தித்து விட்டு வரும்போது உனக்கு விரிவாக சொல்கிறேன்" என்று கூறினான்.


ஆதி "அது ஏற்கனவே லட்சுமணன் சொல்லி எனக்கு தெரியும் இருந்தாலும் எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்" என்று கூறினான்.


இவர்கள் இப்படி பேசிக்கொண்டே ரூபன் சந்திக்க கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர். இவர்களைப் பார்த்த ரூபன் அவர்களுக்கு கையசைத்து தான் இருக்கும் இடத்தை தெரிவித்தான்.


இவர்கள் மூவரும் ரூபன் எதிரில் போய் அமர்ந்தனர் ரூபன் மூவரையும் பொதுவாக பார்த்து "அந்த இந்து பொண்ணு நாம நினைக்கிற மாதிரி அவ்வளவு நல்ல பொண்ணு இல்ல அவ இப்போ ஒட்டுமொத்தமாக உங்கள் சந்தோஷத்தை அழிக்க ப்ளான் போடுகிறாள்" என்று கூறினான்.


ராகவன் "ஏன் அப்படி சொல்ற ஏதாவது விஷயம் தெரிஞ்சுதா" என்று கேட்டான்.


ரூபன் "அவங்க அப்பா சொன்னது தான் சின்ன வயசுல இருந்தே அவ ஆசைப்பட்ட எல்லாத்தையும் மறுப்பு சொல்லாம வாங்கி கொடுத்து இருக்காங்க .அதனால பிடிவாதம் ரொம்ப இருக்கு இப்ப அவ ஆசைப்பட்ட ஆதியே அவளைத் தேடி போக வேண்டும். அதற்காக அவள் பகடை காயாய் வைக்கப் போவது உங்கள் குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவரை தான். அப்படி அவள் நினைத்ததை செய்து விட்டால் ரித்விகா இந்த குடும்ப நலனுக்காக ஆதியை விட்டு பிரிய கூட தயாராக இருப்பாள். ஏனென்றால் ஏற்கனவே ஆதி மற்றும் லக்ஷ்மணன் இந்த குடும்பத்தை விட்டு பிரிய அவள் தான் காரணம் என்று நினைக்கிறாள். அதை பயன்படுத்திக் கொண்டு அவளை அடைய முயற்சிக்கிறாள்" என்று கூறினான்.


அஜய் "இப்போ நீ என்ன சொல்ல வர முதல்ல இந்த இந்து பிரச்சனையை முடிக்கலாம் என்று சொல்ல வருகிறாயா" என்று கேட்டான்.


ஆதி "இல்லடா இந்து பிரச்சனையை மட்டும் முடித்து விட்டால் நமக்கு அதன் பிறகு பெரிதாக எந்தவித பிரச்சினையும் இருக்காது. அதனால் அவளே நம்மை தேடி வருவதற்கு முன் நாம் அவளைத் தேடி சென்று இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும்" என்று கூறினான்.


ராகவன் "நீ சொல்றது கரெக்ட்டு தான் ஆனா நாம போய் பேசினா புரிந்து கொள்கிற பெண் அவள் அல்ல அதனால் எல்லாவற்றிற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும் அதற்கு முன்பு ரித்விகாவை அவள் நெருங்காமல் பார்க்க வேண்டும்" என்று கூறினான்.


ரூபன் "இதற்கு நான் ஒரு யோசனை சொல்லவா" என்று கேட்டான்.


ஆதி "சொல்லு உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லு அது சரியா வரும் என்றால் அதன் படியே செய்து விடுவோம்" என்று கூறினான்.


ரூபன்" இந்த விஷயத்தை மொத்தமா அஜிதா கிட்ட சொல்லி விடலாம் ஏனென்றால் அவள் இப்போது ரித்விகாவை அவள் உடன்பிறவா தங்கையாக பார்க்கிறாள். ஏற்கனவே அவளால் பிரச்சனைகளை சந்தித்து இருந்ததால் இனி எந்த வித பிரச்சினையும் ரித்விகா விற்கு வரக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருக்கிறாள் .அதனால் இந்த பிரச்சனையை அவளிடம் கூறினால் வேறு எந்த புது பிரச்சினையும் கிளம்பாமல் முடிந்துவிடும் இதில் நாம் பாதுகாப்புக்கு மட்டுமே இருந்தால் கவலை இல்லை அதை மீறி நாம் உள் நுழைந்தால் கண்டிப்பாக பிரச்சனை பெரிதாக வாய்ப்பு உள்ளது" என்று தன்னுடைய கருத்தை கூறினான்.


அஜய் ஆதி மற்றும் ராகவன் அவன் கூறியதை யோசித்து பார்த்தனர் பின்பு ஆதி "நீ சொல்வது சரிதான் ஆனால் அவளுடைய பாதுகாப்பிற்கு நீதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் ஏனென்றால் நாங்கள் தலையீட்டால் அது வேறு மாதிரி சென்றுவிடும் நீ தலையிடுவது ஒரு போலீஸ் அதிகாரியாக தலையிடுவது போலிருக்கும்" என்று கூறினான்.


ராகவன் மற்றவர்களைப் பார்த்து "இந்த விஷயத்தை நாம் வீட்டில் வைத்து பேசுவது சரிவராது அதனால் இங்கிருந்தே அஜிதாவின் அலைபேசி வாயிலாக அனைத்து விஷயங்களையும் பேசி விடுவது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது. நாம் வீட்டில் வைத்து பேசினால் கண்டிப்பாக அது லட்சுமணன் அல்லது மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது அப்படி தெரிந்தால் அவர்கள் மேலும் கலக்கம் அடைவார்கள் அதை தடுக்க நாம் இங்கிருந்தே பேசி விடலாம்" என்று கூறினான்.


அஜய் "அதெல்லாம் எதுவும் வேண்டாம் நானே என் தங்கையிடம் கூறிக்கொள்கிறேன் இப்போது நாம் கால் செய்து பேசினால் சுற்றி யார் இருந்தாலும் நமக்கு தெரிய வாய்ப்பு கிடையாது. அவர்களும் பிரச்சனையின் தீவிரம் உணராமல் போனால் அது மிகவும் கஷ்டமாகி விடும் அதனால் எதுவாக இருந்தாலும் நேரடியாகவே பேசிக்கொள்ளலாம்" என்று கூறினான்.


ஆதி "சரி நீங்க சொல்ற படியே செஞ்சிடலாம் என்று கூறியவன் ரூபனை பார்த்து நீ இப்போது எங்களுடன் வீட்டிற்கு வா நீ இருந்தால் எங்கள் வீட்டில் உள்ளது எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்" என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.


இவர்கள் அனைவரும் வீடு வந்தபோது வீட்டிலிருந்த அனைவரும் தங்களது வேலைகளில் மூழ்கி இருந்தனர். அஜய் தனியாக ஏதோ செய்து கொண்டிருந்த அஜித்தாவிடம் சென்று "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதனால அங்க வா" என்று கையோடு அழைத்து சென்றான்.


அஜித்தா அஜய் உடன் எதற்கு என்று கேட்காமல் சென்றாள். அங்கு ராகவன் ஆதி மற்றும் ரூபன் இருப்பதை பார்த்து ஏதோ பெரிய விஷயம் என்பதை யூகித்துக் கொண்டு ஆதி இடம் "ஏதாவது பிரச்சினையா மாமா" என்று கேட்டாள்.


ரூபன் நான் சொல்றேன் என்று இந்து பற்றி அனைத்தையும் கூறியவன் அவளைப் பார்த்தான். ரூபன் எதிர்பார்த்ததைப் போல் அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அதே கோபத்துடன் "இப்ப நான் என்ன பண்ணனும் எதுவா இருந்தாலும் என்ன மீறி தான் என்னோட தங்கச்சி கிட்ட வரணும் யார் அவ அவ நினைச்சதெல்லாம் நடந்தால் நாம் அனைவரும் இருப்பதற்கு என்ன பயன்" என்று கோபமாக கேட்டாள்.


ஆதி "அஜி இது கோபப்பட வேண்டிய நேரம் இல்லை எதுவாக இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டும். அவளும் உன்னை விட சிறிய பெண் ஆனால் அவளுடைய பிடிவாத குணத்தால் இப்படி கெட்டவளாக மாறியிருக்கிறாள். அதனால் நிதானமாக செயல்படுத்தி தான் இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் .அதனால் அமைதியாக இரு" என்று கூறினான்.


அஜிதா "சரி மாமா இப்ப நான் என்ன பண்ணனும் அதை சொல்லுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் யாருக்கும் பிரச்சினை வராம இதை செய்து முடிக்க முயற்சி பண்றேன்" என்று கூறினாள்.


அதன் பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பேசி முடித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


அந்தநாள் அவ்வாறே முடிய மறுநாள் காலை கல்லூரிக்கு கிளம்பி சென்ற லட்சுமணன் மற்றும் ரித்விகா தங்களுடைய வழக்கமான அரட்டைகளை அடித்தபடி கல்லூரி வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரும் வந்து இறங்கிய நேரம் இவர்களை எதிர்கொண்டாள் ஊர்மிளா. அந்த ஒரு வருடத்தில் லட்சுமணன் அவள் மனதில் காதலனாக வாழ ஆரம்பித்து இருந்தான். அதனால் அதை இன்றே கூறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை எதிர் கொண்டாள் ஊர்மிளா.


ஊர்மிளா திடீரென்று வந்ததை எதிர்பார்க்காத இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி அதன்பின்பு ரித்விகா "ஏதாவது முக்கியமான சொல்லனுமா இவ்வளவு வேகமா வந்து நிற்கிற" என்று கேட்டாள்.


ஊர்மிளா "ஆமா அக்கா லட்சுமணன் அவங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் அதற்காகத்தான் வேகமா வந்தேன்" என்று கூறினாள்.


ரித்விகா இருவரையும் பார்த்து "சரி அப்ப ரெண்டு பேரும் பேசிட்டு கிளாஸ் ரூம் போங்க நான் என்னோட கிளாஸ் ரூம் போறேன்" என்ற இடத்தை காலி செய்தாள்.


லட்சுமணன் "ரித்விகாவிடம் பேபி இடைவேளையில் கேன்டீன் வந்துரு: என்று கூறினான். அதற்கு அவள் சம்மதமாக தலையசைத்துவிட்டு தன்னுடைய வகுப்பறைக்கு சென்றாள். அவள் சென்றதை உறுதிப்படுத்திய லட்சுமணன் ஊர்மிளாவின் புறம் திரும்பினான் "இப்ப சொல்லுங்க என்ன விஷயம் பேசணும் ஏதாவது முக்கியமான விஷயமா" என்று கேட்டான்.


ஊர்மிளா "எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நான் உங்களை உண்மையாக காதலிக்கிறேன். எப்ப இருந்து காதலிக்கிறேன் அப்படின்னு கேட்டா கண்டிப்பா அதற்கான பதில் எனக்கு தெரியல முதல் முதல்ல உங்களையும் ரித்விகா அக்காவையும் தப்பா நினைச்சு உங்களை வந்து திட்டி விட்டேன். அதன் பிறகு உண்மை தெரிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது அப்போதும்கூட யார் என்று தெரியாத உங்களை எதற்காக திட்டினேன் என்று தான் நினைத்தேன்.


அன்று நீங்கள் உங்களுடன் எங்களை சேர்க்க முடியாது என்று கூறியது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதன் பிறகு உங்கள் அண்ணன் ஆதி உங்கள் இருவரையும் புரிந்து வைத்து இருப்பதை அவர் வாயாலேயே கேட்டேன் இவை அனைத்தும் கேட்கும் போது உங்கள் மேல் ஒரு மரியாதை கூடியது. ஆனால் உங்களை யாராவது ரசித்தால் எனக்கு கோபம் வந்தது அது ஏன் என்று என்னை நானே கேள்வி கேட்டபோதுதான் நான் உங்களை காதலிக்கிறேன் என்று பதில் எனக்கு கிடைத்தது இதற்கு மேல் நீங்கள் தான் கூற வேண்டும்" என்று கூறி முடித்தாள்.


அவள் கூறியதைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்து போன லட்சுமணன் வெளியே அவளிடம் "நீ இப்போது தான் முதல் வருடம் படித்து முடித்து இருக்கிறாய். அதனால் ஒழுங்காக உன்னுடைய படிப்பில் கவனத்தை செலுத்து அதேபோல் இன்னும் நீ தெளிவு பெற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. ஒருத்தர் மேல் நமக்கு பொசசிவ்னஸ் வரலாம் ஆனால் அது ஒரு அளவு தான் இருக்க வேண்டும் அந்த அளவை மீறினால் அது விபரீதமான பிரச்சினையை உருவாக்கும். அதனால் நீ உன்னுடைய படிப்பு முடியும் வரை அனைத்தையும் உணர்ந்து தெளிந்து நல்லபடியாக வெளியே வா. அதுவரை நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் அப்பொழுதும் நீ என்மீது காதலோடு இருந்தால் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொள்ளலாம். அதனால் இப்பொழுது உன்னுடைய படிப்பை கவனி" என்று கூறிவிட்டு தன்னுடைய நண்பர்களை பார்க்க சென்று விட்டான்.


அவன் கூறியதில் உள்ள உண்மையை உணர்ந்த ஊர்மிளா மனதில் "கண்டிப்பாக நான் நன்றாக படித்தேன் ஒரு பக்குவப்பட்ட பெண்ணாக மாரி உங்களிடம் வந்து நம்முடைய காதலை வெற்றியடைய செய்வேன்" என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக தன்னுடைய வேலையை பார்க்க சென்றாள்.


சென்றவள் நேராக தன்னுடைய தோழியான ஜானகியை பார்த்து ஜானு "நான் என்னோட காதலை சொல்லி விட்டேன் அதற்கு அவன் கூறியது" என்று அவன் கூறிய அனைத்தையும் கூறியவள் தான் எடுத்த முடிவையும் கூறினாள்.


இதைக் கேட்ட ஜானகி மிகவும் மகிழ்ந்து போனாள் 'எங்கே தன்னுடைய தோழி காதலை மட்டும் பெரிதாக நினைத்து படிப்பை பாழாக்கிக் கொள்வாளோ என்ற பயத்தில் இருந்தவள் இப்போது மிகவும் நிம்மதி அடைந்தாள் அவளுடைய வாழ்க்கையில் சரியான துணையைத் தேர்ந்தெடுத்து உள்ளாள்' என்று எண்ணி மகிழ்ச்சியாக அவளிடம் "சரி சந்தோசமா இப்ப நம்ம வேலையை பார்ப்போம்" என்று கூறி வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.


லக்ஷ்மணன் மகிழ்ச்சியாக வருவதைப் பார்த்த அவனுடைய நண்பர்கள் அவனிடம் "என்ன டா ரொம்ப சந்தோஷமா வர மாதிரி இருக்கு என்ன விஷயம்" என்று கேட்டார்கள் அதற்கு அவன் "இடைவேளையில் அனைவரும் ஒன்று கூடும் இடத்தில் அனைத்தையும் சொல்கிறேன்" என்று கூறி அவர்களை அழைத்து சென்றான்.


அதன் பிறகு அவர்கள் அவர்கள் வேலையை பார்க்க லட்சுமணன் மற்றும் ரித்திகா மற்றும் அவர்களது நண்பர்கள் அனைவரும் இடைவேளையில் ஒன்றுகூடினர். ரித்விகா லட்சுமணனிடம் "பேபி உன்னோட ஆளு காலையிலேயே உன்னை தேடி வந்தது என்ன விஷயம் லவ் ஓகே ஆயிடுச்சா" என்று கேட்டாள்.


இதைக் கேட்ட அனைவரும் அப்படியா என்ற ரீதியில் லக்ஷ்மணனை பார்த்தனர். அவனுடைய நண்பர்கள் மனதில் அதனால்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தானா என்ற எண்ணமும் வந்தது. அனைவரையும் பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டே ரித்விகாவின் கண்ணம் கில்லி செல்லம் கொஞ்சிய லட்சுமணன் "என் செல்ல பேபி கரெக்டா சொல்லிட்ட அவள் என்னை காதலிப்பதாக கூறிவிட்டாள்" என்று மகிழ்ச்சியாக கூறினான்.


ரித்திகா "நீ என்ன செல்லம் கொஞ்சி அது எல்லாம் போதும் முதல்ல அங்க என்ன நடந்துச்சுன்னு விலாவரியா சொல்லு எனக்கு என்னமோ நீ பதிலுக்கு வேற ஏதோ சொல்லிட்டு வந்த மாதிரி இருக்கு" என்று கேட்டாள்.


லட்சுமணனும் நடந்த அனைத்தையும் ஒன்று மாறாமல் அப்படியே கூறினான். அவன் கூறியதை கேட்டு அனைவரும் அவனுடைய பொறுப்புணர்வை நினைத்து மகிழ்ந்து கொண்டார்கள். அதன் பிறகு அனைவரும் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு தங்களுடைய வகுப்புகளுக்கு கிளம்பி சென்றனர்.


இப்படி இவர்கள் சந்தோஷமாக அன்றைய நாளை கடத்தி தங்களுடைய இல்லம் வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு வந்தவுடன் லட்சுமணன் காதல் வெற்றி அடைந்ததையும் அதைத்தொடர்ந்து லட்சுமணன் கூறியதையும் அனைவரிடமும் கூறினாள் ரித்விகா. அதைக் கேட்ட அனைவரும் லக்ஷ்மணனின் பொறுப்பான பேச்சை எண்ணி மிகவும் மகிழ்ந்து போயினர்.


லட்சுமணன் அனைவரையும் பார்த்து "ரொம்ப சந்தோஷப் பட்டது போதும் நான் நல்ல விஷயம் பண்ணிட்டு வந்து இருக்கேன் அல்லவா அதனால் எனக்கு ஏதாவது ஸ்பெஷலாக செய்து தரவேண்டும்: என்று கூறினான்.


ராகவன் "ஸ்பெஷலாக தானே பெருசா ஆப்பு ரெடி பண்ணி தரேன் இப்பவே உன்னோட அண்ணன் தங்கச்சி எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தை போன் பண்ணி சொல்லி விடுகிறேன் அதன் பிறகு நீ ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயம் செய்யும் போது ட்ரீட்டு கேட்டு ஒரு தொகை பணத்தை ஆப்பு வைத்தாய் அல்லவா அதே போல் அவர்களும் செய்வார்கள்" என்று கூறினான்.


உடனே பதறிய லட்சுமணன் "நீ எதுவுமே செய்ய வேண்டாம் எனக்கு எதுவும் செஞ்சு தர வேண்டாம் நான் ரூமுக்கு போறேன் ஆள விடு" என்று கூறி விட்டு ஓடிவிட்டான். அவன் ஓடுவதைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.


இப்படியே நாட்கள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க அஜித்தா மற்றும் ரூபன் இந்துவை சந்திக்க கிளம்ப வேண்டிய நாளும் வந்தது.


இந்து அஜய் இடம் "அண்ணா நீ என் கூட வரலாம் இல்ல எதுக்காக இந்த போலீஸ் ஆபீஸர் வருகிறார் நம்மால் அவருக்கு ஏன் வீண் பிரச்சனை" என்று கேட்டாள்.


ஆதி "நாங்க உன்னுடன் வந்தாலும் அது இந்துவிற்கு இன்னும் வசதியாக போய்விடும் இதுவே ரூபன் வந்தால் அவன் ஒரு போலீஸ் ஆபீசராக உனக்கு பாதுகாப்பாகவும் இருப்பான். அதனால் எதை நினைத்தும் கவலைப்படாதே நிம்மதியாக போய் இந்துவிற்கு புரிய வைத்து விட்டு வா" என்று கூறினான். பின் ரூபன் இடம் "அவளுடைய பாதுகாப்பு உன்னுடைய பொறுப்பு உன்னை நம்பி தான் அவளை உன்னுடன் அனுப்புகிறேன்" என்று கூறினான்.


ரூபன் "நீ கவலை படாதே என்னுடைய உயிரானவளை பாதுகாப்பது என்னுடைய கடமை அதனால் அதிலிருந்து நான் எப்பொழுதும் தவற மாட்டேன்" என்று உறுதியளித்தான். அவன் கூறியதை கேட்டபிறகுதான் அனைவருக்கும் ஒரு நிம்மதி வந்தது.


அஜித்தாவும் அனைவரிடமும் தானொரு ப்ராஜெக்ட் விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு ரூபன் உடன் கிளம்பி சென்றாள்.


அவளுக்கு இந்த பயணம்தான் அவள் வாழ்வில் காதலை உருவாக்க போகிறது என்றும் போகும்போது வெறும் போலீஸ் ஆபிசராக உடன் வருபவன் திரும்பி வரும்போது தன்னுடைய காதலனாக வருவான் என்பது அப்போது தெரியாமல் போனது விதியின் செயலோ.
 
Top