• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 25

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ரூபன் மற்றும் அஜிதா தங்கள் இல்லம் நோக்கி பயணத்தை துவங்கினர் அஜித்தா ரூபனை மனமார நேசிக்க ஆரம்பித்தாலும் தான் இதுவரை செய்த செயல்களால் அவனிடம் தன்னுடைய காதலை கூறுவதற்கு மிகவும் தயங்கினாள்.


ஆனால் அவளுடைய தயக்கத்தைப் புரிந்து கொண்ட ரூபன் அவனே தன்னுடைய காதலை கூற ஆரம்பித்தான். ரூபன் அஜிதாவை பார்த்து "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா" என்று கேட்டான்.


அதற்கு அஜிதா "என்ன பேசறதகெல்லாம் பெர்மிஷன் கேக்குறீங்க இவ்வளவு நாள் ரெண்டு பேரும் பேசிட்டு தான் இருந்தோம் இப்ப என்ன புதுசா பெர்மிஷன் கேக்குறீங்க" என்று கேட்டாள்.


ரூபன் "அப்ப பேசலாம் அப்படித்தானே" என்று கேட்டான். அதற்கு அதுதான் ஆமா என்று கூறினாள். உடனே ரூபன் பட்டென்று "ஐ லவ் யூ நான் உன்னை காதலிக்கிறேன்" என்று கூறினான்.


அதைக் கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள் ரூபன் தன்னிடம் காதலைச் கூறியது அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தாலும் தான் ஆதி மட்டுமின்றி அனைவருக்கும் செய்த செயலை எண்ணி தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள். தன் காதலை கூறிய பிறகும் அவள் பதில் பேசாமல் இருப்பதை பார்த்த ரூபன் அவளுடைய எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டான். அதனால் அவள் பேசுவதற்கு முன் அவன் பேச ஆரம்பித்தான்.


ரூபன் "இங்க பாரு இன்னும் ஒரு சில விஷயங்களில் நான் சொல்லணும் அதை எல்லாத்தையும் நான் சொல்லி முடித்த பிறகு நீ முடிவை சொல்லு" என்று கூறினான். அதற்கு சம்மதமாக தலையசைத்து அமைதியாக இருந்தாள் அஜித்தா.


அதைப் பார்த்த ரூபன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான் "நான் உன்ன இப்ப காதலிக்க ஆரம்பிக்க வில்லை நான் உன்னை ரொம்ப வருடங்களாகவே காதலிக்கிறேன். உன்னை நான் முதன் முதலில் பார்த்தது ஆதியுடன் தான் அவனிடம் ஏதோ ஒரு பொருளுக்காக அடம் பிடித்து கெஞ்சி கொண்டிருந்தாய். ஆதியும் உன்னை அவனுடன் அழைத்து சென்று உனக்குத் தேவையானவற்றை வாங்கி கொடுத்தான் அப்போது உன்னுடைய முகத்தில் வந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது நடந்த போது நான் உன் அண்ணனுடன் இருந்தேன் ஏனோ உன்னை பற்றி அறிய ஆசை வர நான் உன் அண்ணனிடம் கேட்கும்போது அவள் உன்னை தன்னுடைய தங்கை என்றும் பெயர் அஜிதா என்றும் கூறினான். அன்றே நீ என் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாய்" என்று கூறி அஜித்தா முகத்தைப் பார்த்தான்.


இப்போது தான் அஜித்தா முகம் கொஞ்சம் தெளிந்து இருப்பதை பார்த்த ரூபன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தான். அதை முதலில் ஈர்ப்பு என்று எண்ணி எதுவும் எண்ணாமல் என்னுடைய வாழ்க்கை பாதையில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் வெளியூரில் சென்று படிக்க சென்ற போதுதான் உன்னை எவ்வளவு விரும்பி இருக்கிறேன் என்பதை உணர ஆரம்பித்தேன் அதனால் யாருக்கும் தெரியாமல் உன்னை வந்து பார்த்து சொல்வேன் அது உனக்கும் தெரியாது.


அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது உன்னுடைய தந்தையின் வார்த்தை ஜாலத்தால் நீ ஆதியை காதலிப்பதாக எண்ணிக் கொண்டு இருக்கிறாய் என்பதை அறிந்து கொண்டேன். ஆதி உனக்கு கணவனாக அமைந்தால் நிச்சயமாக உன்னை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற எண்ணத்தில் என்னுடைய காதலை உள்ளுக்குள்ளேயே மறைக்க முடிவு செய்தேன்.


ஆனால் நானும் ஒரு விஷயம் கவனிக்காமல் விட்டுவிட்டேன் அது என்னவென்றால் ஆதி உன்னை தங்கையாக தான் பார்த்திருக்கிறான். அதை அவன் திருமணம் முடித்து வந்தவுடன் தான் நான் முழுமையாக புரிந்து கொண்டேன். என்னதான் உன்னை மறக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும் என் மனம் என்னுடைய பேச்சைக் கேட்க தயாராக இல்லை அது மீண்டும் மீண்டும் உன்னையே தேடியது அதனால் தொலைதூரம் சென்று வேலை செய்ய ஆரம்பித்தேன். எப்போது ஆதிக்கு திருமணம் முடிந்தது என்ற விஷயம் எனக்கு தெரிந்ததோ அப்போதே உன் தந்தையால் அவனுக்கு பிரச்சினைகள் வரும் என்பதை உணர்ந்து அவனுக்கு உறுதுணையாக அவருடன் இணைந்து கொண்டேன்.


அதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் உன்னையும் நேரில் சந்திக்கலாம் என்னுடைய காதலியும் புரிய வைக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது. நீ செய்யும் செயல்கள் எதுவும் நீயாக செய்யவில்லை என்பதை உணர்ந்து உன்னை வெளிக் கொண்டுவர முடிவு செய்தேன் அதனால்தான் லட்சுமணன் விஷயம் நடக்கும்போது நான் எதுவும் தலையிடவில்லை நான் நினைத்தது போல் நீ மனம் திருந்தினாய். ஆனால் உன்னுடைய குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட வில்லை என்பதை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டோம். ஆகையால் உன்னை அதில் இருந்து வெளிக்கொண்டு வரவே இந்து விஷயத்தில் உன்னை கொண்டு வந்தோம் நாங்கள் நினைத்தது போல் அனைத்தும் சரியாக நடந்தது.


நான் உன்னை விரும்புவது உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் உனக்கு மட்டும்தான் தெரியாது நான் உன்னை உனக்காக மட்டுமே நேசிக்கிறேன். நீ என்னை நம்பி என்னுடன் வாழ்க்கையில் பயணிக்கலாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ இதுவரை செய்த தவறுகளை சுட்டி காட்ட மாட்டேன் இனி நீ தவறுகள் செய்தாலும் என்னுடைய அன்பால் உன்னை மாத்துவேன். அதை விட்டுவிட்டு வார்த்தை என்ற கூரிய வாளால் உன்னை குத்தி கிழிக்க மாட்டேன்" என்று வாக்குறுதி அளித்தான்.


பின்பு "இப்ப நீ உன்னோட முடிவு சொல் உன் மனதில் எதை இருந்தாலும் தயங்காமல் கூறிவிடு ஆனால் கொஞ்சம் எனக்கும் கருணை காட்டு நானும் பாவம் அல்லவா" என்று கூறினான்.


ரூபன் கூறி முடித்தவுடன் அவனை பாய்ந்து அணைத்துக்கொண்டாள் அஜிதா பின்பு நன்றாக கத்தி அழுக ஆரம்பித்தாள். அவளுடைய அழுகை எதற்கு என்று புரிந்துகொண்ட ரூபன் அவளுடைய முதுகை தடவி கொடுத்து ஆறுதல் படுத்தினான். பின்பு அவளுக்கு தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு "இப்ப சொல்லு என்ன முடிவெடுத்து இருக்கா" என்று கேட்டான்.


அஜித்தா அவனுடைய முகத்தை பார்த்து "எனக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நானும் உங்கள ரொம்ப விரும்புறேன். ஆனா நம்மளோட கல்யாணம் குடும்பத்தில் இருக்க பிரச்சனை எல்லாம் சரியான பிறகு தான் ஆதி மாமா அப்புறம் லக்ஷ்மணன் எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்ல இருக்கணும் அது செஞ்சு முடிச்ச பிறகு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூறினாள்.


அவளுடைய கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்ட ரூபன் "நீ எதுக்கும் கவலைப் படாதே இப்பதான் ஒவ்வொரு பிரச்சினையை சரி பண்ணிட்டு வருகிறோம் கூடிய சீக்கிரம் எல்லா பிரச்சனையும் சரி பண்ணிருவோம் அதனால அதை நினைத்து நீ கவலை படாதே" என்று கூறினான்.


அதைக்கேட்ட அஜித்தா மிகவும் மகிழ்ந்து போனாள் இப்படியாக இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்த ஆதி ராகவன் ஆனந்த் மற்றும் அஜய் மிகவும் மகிழ்ந்து போனார்கள். ரூபன் மகிழ்ச்சியாக ஆதியை வந்து அணைத்துக் கொண்டான்.


பின்பு இருவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்து வந்தனர். எழுந்து வந்த ரூபனை பார்த்த இலட்சுமணன் "அண்ணா எப்ப வந்த ரொம்ப ஜாலியா இருந்து இருப்பியே" என்று கேட்டவாறு அவன் அருகில் வந்து அமர்ந்தான்.


ரூபன் பதில் சொல்வதற்கு முன் ரித்விகா "ஆமாம் பேபி மாமா ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பாங்க போல மூஞ்சில தவுசன் வாட்டு பல்பு எரியுது என்ன விஷயம்னு கேளு விட்ராத" என்று கூறினாள்.


இவர்கள் தன்னை விட மாட்டார்கள் என்பதை உணர்ந்த ரூபன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். ரித்விகாவிற்கு இந்துவிற்கு இவ்வாறு திருமணம் நடந்தது கஷ்டமாக இருந்தாலும் அவளுடைய கணவன் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தாள். ஆனால் அஜித்தா மற்றும் ரூபன் காதல் வெற்றி அடைந்ததில் மிகவும் மகிழ்ந்து போனாள்.


ஒரு பிரச்சனை முடிந்தது என்று அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க லக்ஷ்மணன் ரூபனை பார்த்து "அது எப்படி அண்ணா வேலை விஷயமாக போறேன்னு சொல்லிட்டு இப்படி லவ் பேர்ட்ஸ் மாதிரி வந்து நிக்கிற" என்று கேட்டான்.


அதற்கு ராகவன் "பின்ன உன்னை மாதிரியா லவ்வ சொல்ல வந்த பிள்ளையை அட்வைஸ் பண்ணி துரத்திவிட்டு இன்னும் நாலு வருஷம் கழிச்சு வா அஞ்சு வருஷம் கழிச்சு வா ன்னு சொல்றதுக்கு உனக்கெல்லாம் நான் வந்தான் பாத்துக்கிட்டே இரு" என்று கூறினான்.


அதற்கு லட்சுமணன் "என் காதல் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அது சேரும் இல்லை என்றால் நான் சேர்த்து வைப்பேன் அப்படி என்னால் முடியவில்லை என்றால் என் அண்ணன் எதற்காக இருக்கிறான்" என்று ஆதியை பார்த்தான்.


அஜய் "உனக்கே நம்பிக்கை இல்லை அதுக்கே சப்போர்ட்டுக்கு ஆள் சேர்கிறாய்" என்று கூறினான்.


ரித்விகா "அதெல்லாம் என்னோட பேபி யோட லவ் சக்ஸஸ் ஆகும் நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம் ஊர்மிளா அவன் மேல உயிரையே வைத்திருக்கிறாள் அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினாள்.


லக்ஷ்மணன் "அப்படி சொல்லு பேபி இவங்க எல்லாருக்கும் என் மேல பொறாமை வா நம்ம வேற ஏதாவது வேலையை பார்ப்போம்" என்று கூறி அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான்.


அவன் அடித்த பிடித்த ஓடுவதை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். ஆதி மட்டும் 'இவன் வாழ்வில் எந்த பிரச்சனையும் வராமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.


அதன்பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் அப்போது ஆதி இனி கொஞ்ச நாளைக்கு எந்தவித பிரச்சினையும் இல்லாம அமைதியா இருக்கலாம். அதன் பிறகு கதிர் மற்றும் ரிஷி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு கடைசியாக மாமாவை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினான்.


அனைவருக்கும் சிறிது ஓய்வு தேவைப்பட்டதால் அவன் கூறியதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இப்படி ரூபன் அஜிதா தங்களுடைய காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்க திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கையை இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.


இப்படியாக ஆறு மாதம் சென்ற நிலையில் வித்யா கருவுற்று இருக்கும் செய்தி அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்து சேர்ந்தது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக அந்த விஷயத்தை கொண்டாட ஆரம்பித்தனர். அனைவரும் ஆனந்த் மற்றும் வித்யாவிற்கு வாழ்த்துக்கள் கூறி கொண்டாடினர் ஆதி மற்றும் ராகவன் ஆனந்த் வேலைகளையும் தங்களுக்கும் கொஞ்சம் விரித்துக் கொண்டு அவனை அவருடைய மனைவியுடன் நேரத்தை செலவழிக்க வைத்தனர்.


இப்படி இவர்கள் வாழ்வு எந்தவித மாற்றமும் இல்லாமல் மகிழ்ச்சியாக சென்றது இலட்சுமணன் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் சேர்ந்து விட்டால் அவருடைய நண்பர்களும் அதே மருத்துவமனையில் சேர்ந்து தங்களுடைய பணியை செய்ய ஆரம்பித்தனர். பரத் தன்னுடைய படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தான்.


ஆனால் ரிஷி மற்றும் கதிர் இவர்களை அழிக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருந்தது.


ஒரு நாள் ஆதி அஜய் பார்த்து "எல்லாரும் சேபா தான இருக்காங்க யாருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை அல்லவா" என்று கேட்டான்.


அஜய் யாருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அதனால் நீ கவலை கொள்ளாதே என்று கூறிக் கொண்டிருந்த போதே அங்கு ராகவன் மற்றும் ஆனந்த் வந்து சேர்ந்தனர்.


ராகவன் இருவரையும் பார்த்து "அன்று ஆர்த்தி மற்றும் கீர்த்திக்கு கல்லூரியில் பாதுகாப்பு இருப்பதாக கூறினாய் அல்லவா அது என்ன பாதுகாப்பு உன் தங்கச்சி ரெண்டுபேரும் யாரையாவது விரும்புகிறார்களா" என்று கேட்டான்.


அஜய் "அது எல்லாம் சுட்டுப்போட்டாலும் இரண்டுக்கும் வராது அவங்க ரெண்டு பேருக்கும் பாதுகாப்பா இருக்கிறது அவங்களுக்கு கிடைச்ச ரெண்டு உண்மையான பிரண்ட்ஸ்" என்று கூறினான்.


ஆனந்த் "என்ன சொல்ற பிரண்ட்சா அப்படின்னா அவங்க ரெண்டு பேரையும் ஏன் இன்னும் நாங்க பார்க்கவே இல்லை எங்க கல்யாணத்துக்கு வரவே இல்லை" என்று கேட்டான்.


ஆதி "அவங்க ரெண்டு பேரும் உன்னோட கல்யாணத்துக்கு வரலை அப்பா அவங்க ரெண்டு பேரும் அவங்களோட தாத்தா பாட்டியை பார்ப்பதற்காக ஊருக்கு போயிருந்தாங்க அதனாலதான் அவங்களால வர முடியல" என்று கூறினான்.


ராகவன் "சரி அவங்க ரெண்டு பேரும் எப்படி நீ அவங்க கிட்ட பேசி இருக்கியா உண்மையாவே அவங்க நல்லவங்க தானா இல்ல நடிக்கிறார்களா" என்று கேட்டான்.


அப்போது அங்கு வந்த லக்ஷ்மணன் "ஏன் அண்ணா எல்லாரையும் சந்தேக கண்ணோட்டத்தில்தான் பார்ப்பாயா அவர்கள் இருவரும் நல்லவர்கள்தான் உண்மையைக் கூற வேண்டுமானால் பள்ளியில் இருந்தே கீர்த்தி மற்றும் ஆர்த்தியுடன் பயின்றவர்கள். அவர்களும் இரட்டையர்கள் தான் அவர்களுடைய பெயர் அகிலன் மற்றும் முகிலன் இரண்டும் இரிட்டையர் கூட்டம் என்பதால் பள்ளியில் இருந்தே ஒன்றாக வளர்ந்தார்கள்.


நம் வீட்டில் நடக்கும் பிரச்சனை அனைத்தும் அவர்களுக்கும் தெரியும் அதனால் அவர்கள் இருவரையும் பாதுகாப்பதற்கு இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். ஆனால் அதை காதல் என்று தவறாக நினைத்து விடாதே அவர்கள் நால்வர் இடையே இருப்பது ஒரு உண்மையான நட்பு இந்த காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே காதல் என்று கூறும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் உண்மையான நட்புடன் பழகும் ஆண்களும் பெண்களும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய நட்பு மற்றவர்களுக்கு கேலிப் பொருளாக ஆகிவிடுமோ என்ற பயத்தில் உண்மையான நட்புணர்வு இருந்தாலும் அதை தவிர்த்து அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.


அதனால் நீங்களும் அவர்களுடைய நட்பை தவறாக எண்ணாதீர்கள் என்றுமே இந்த நட்பு காதலாக மாற வாய்ப்பு இல்லை அவர்கள் நால்வர் நட்பு உன்னதமானது எப்படி உங்கள் நட்பு புனிதமானதோ அதே போல் தான் அவர்கள் நட்பும்" என்று கூறி முடித்தான்.


அவன் கூறியதை கேட்ட ஆதி மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க ராகவன் "இரு கைகளையும் எடுத்து அவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு அய்யா தெய்வமே தெரியாமல் கேட்டுவிட்டேன் அவர்கள் காதல் செய்கிறார்களா என்று தான் கேட்டேன் காதல் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை இதற்கு மேல் உன்னுடைய விளக்கம் கேட்டால் நிச்சயமாக நான் சன்னியாசி ஆகி சென்று விடுவேன் மன்னித்துவிடு" என்று கூறினான்.


லக்ஷ்மணன் "சரி அண்ணா பிழைத்து போ ஆனால் என்ன ஆனாலும் நீ சன்னியாசியாக மாற முடியாது ஏனென்றால் நீ ஏற்கனவே சம்சாரி ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது இல்லை நீ சன்னியாசியாக தான் போகப் போகிறாய் என்று கூறினால் இப்போதே கூறிவிடு நான் சரண்யாவிடம் கூறிவிடுகிறேன்" என்று கூறினான்.


அவன் கூறியதைக் கேட்டு பதறிய ராகவன் "டேய் ஏன்டா என் வாழ்க்கைக்கு உலை வைக்கணும் அப்படின்னா வரிஞ்சி கட்டிக்கிட்டு வந்து விடுவாயே தயவு செய்து என்னை விட்டுவிடு" என்று கூறி அந்த இடத்தை காலி செய்து சென்று விட்டான்.


அவன் சென்றதைப் பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டது. அஜய் பார்த்த லட்சுமணன் "மாமா எப்ப நீ கல்யாணம் பண்ண போற உன்னுடைய கூட்டத்தில் நீ மட்டும் தான் இன்னும் சிங்கிளாக சுற்றிக் கொண்டு இருக்கிறாய் எப்போது மிங்கிளாக போகிறாய்" என்று கேட்டான்.


அஜய் "இன்னும் சிறிது காலம் இப்படி மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அதன்பிறகு பொருமையாக கல்யாணம் செய்து கொள்ளலாம்" என்று கூறினான்.


ஆதி "ஏன்டா காதல் பன்னி கல்யாணம் பண்ற ஐடியால இருக்கியா" என்று கேட்டான்.


அஜய் "அட போடா ஏற்கனவே அவ்வளவு பேரும் காதல் பண்ணி ஈழுத்து வச்ச பிரச்சினை போதாதா இதுல நான் வேற புதுசா காதல் பண்ணி பிரச்சினையை கொண்டு வரணுமா அதெல்லாம் நமக்கு செட்டாகாது வீட்ல யாராவது ஒருத்தங்க பார்க்க சொல்லி கல்யாணம் பண்ண வேண்டி தான்" என்று கூறினான்.


லட்சுமணன் "மாமா உனக்கு செட்டாகாது என்று சொல்லு அதை விட்டுட்டு பிரச்சனை அதை சமாளிக்க முடியாது அப்படின்னு சும்மா சொல்லிக்கிட்டு இருக்காதே" என்று காலை வாரினான்.


அஜய் "நீ என்ன வேணா சொல்லிக்கோ ஆனா எனக்கு காதல் எல்லாம் வேண்டாம் பா நான் இப்படியே சந்தோஷமா இருக்கிறேன் கல்யாணம் பண்ணிட்டு அந்த பொண்ண நா காதல் பண்ணிக்கிறேன்" என்று கூறினான்.


ஆனந்த் "நீ சொல்வது உண்மைதான் அஜய் திருமணம் முடிந்து காதல் செய்வது அழகானது ஏனென்றால் அந்த ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் உரிமையானவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பை பொழியலாம் ஆனால் திருமணத்திற்கு முன்பு செய்யும் காதல் ஒரு சிலருக்கு மட்டுமே வெற்றி அடைகிறது வெற்றி அடைந்தவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களா இல்லையா என்பதைவிட தோல்வியடைந்தவர்கள் தங்களுடன் ஆரம்பிக்கும் புது உறவை ஏற்றுக்கொள்ள தயங்கித் தான் போகிறார்கள் அதனால் உன்னுடைய கருத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை" என்று அவனுடைய கருத்தைக் கூறினான்.


அனைவருமே ஆனந்த் கூறிய கருத்தை ஆமோதித்தனர். அதன் பிறகு நாட்கள் ரெக்கை இல்லாமல் பறக்க ரிஷி மற்றும் கதிர் இவர்களை அழிக்க தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.
 
Top