• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 26

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
நாட்கள் அதன் போக்கில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்க வித்யாவும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். வீட்டில் அனைவரும் புதிதாக வரப்போகும் அந்த புது உயிரை வரவேற்க மகிழ்ச்சியாக இருந்தனர். வித்யாவிற்கு 9 மாதம் தொடங்கி இருந்ததால் அவளுக்கு வளைகாப்பு வைக்க முடிவு செய்தனர்.


அனைவரும் அதை பெரிதாக செய்ய முடிவெடுத்தனர் இதைப் பற்றி பேசுவதற்காக பெரியவர்கள் மற்றும் இளவட்டங்கள் அனைவரையும் விடுமுறை அன்று வரவழைத்திருந்தான் ஆதி. ஆதி கூறியதைப் போல் ஞாயிறு அன்று அனைவரும் அந்த வீட்டில் கூடியிருந்தனர்.


முதலில் பெரியவர்களைப் பார்த்து பேச்சை ஆரம்பித்தான் ஆனந்த் "வித்யாவுக்கு வளைகாப்பு வைக்கலாம் என்று நினைக்கிறோம் கொஞ்சம் பெரிதாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறோம் நீங்கள் அனைவரும் என்ன கூறுகிறீர்கள்" என்று கேட்டான்.


பெரியவர்கள் அனைவருக்கும் இதில் சம்மதம் இருந்ததால் அவர்களும் மகிழ்ச்சியாக இதற்கு சம்மதித்தனர். ஆனால் இதில் லக்ஷ்மணன் ராகவன் மற்றும் அஜித்தாவிற்கு விருப்பமில்லை என்பதை அவர்கள் முகத்தில் இருந்தே உணர்ந்து கொண்ட ரூபன் அவர்கள் அனைவரையும் கேள்வியாக பார்த்தான்.


ரூபன் ஏதோ அவர்களிடம் கேட்க அவர்கள் அருகில் சென்றான் ஆனால் அதற்குள் வித்யா "எனக்கு வளைகாப்பு செய்ங்க அதை நான் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் நீங்கள் கூறுவது போல் பெரிதாக செய்ய வேண்டாம்" என்று கூறினாள்.


ஆதி வித்யாவை கேள்வியாக பார்த்து "ஏன்மா எல்லாருக்கும் ஆசை இருக்கும் இல்ல நீ மட்டும் ஏன் வேண்டாம் என்று சொல்லுற" என்று கேட்டான். அதே கேள்வியைத்தான் அனைவரும் முகத்தில் தாங்கியிருந்தனர்.


அதற்கு வித்யா "நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க நாம எல்லாரும் ஒத்துமையா ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இந்த வளைகாப்பு விஷயத்தினால் நமக்குள் பிரச்சனை வருவதை நான் விரும்பவில்லை" என்று கூறினாள்.


ஆனந்த் "நீ என்ன சொல்ற வித்யா பிரச்சனை வருமா என் பிரச்சனை வரப்போகுது" என்று கேட்டான்.


வித்யா என்ன கூற போகிறாள் என்பதை லட்சுமணன் ராகவன் அஜித்தா ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் பார்த்த வித்யா முகத்தில் ஒரு புன்சிரிப்போடு "எனக்கு அப்புறம் சரண்யா ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல தான் கல்யாணம் ஆச்சு அதே மாதிரி எங்களுக்கு முன்னாடியே ரித்விகா அப்புறம் ஆதிக்கு கல்யாணம் ஆயிற்று. அவர்கள் இருவரும் இன்னும் தாய்மை அடைய வில்லை அதை நம் வீட்டில் உள்ள யாரும் கூற போவதுமில்லை வருந்த போவதுமில்லை ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் தெரியும்.


இந்த வீட்டில் உள்ள ஒற்றுமை மற்றும் மனைவிகளின் படிப்பிற்காக அவர்கள் கணவர்கள் செய்யும் வேலை. ஆனால் இதையெல்லாம் புதிதாக வருபவர்கள் நினைக்கமாட்டார்கள் வார்த்தைகளால் அவர்கள் இருவரையும் வதைத்து விடுவார்கள். என்னை ஆசிர்வதிக்க வருகிறார்களோ இல்லையோ இவர்கள் இருவரையும் மனம் வருந்த செய்யவே நிறைய பேர் வருவார்கள். அதை நான் விரும்பவில்லை என்னை பொறுத்தவரை இப்போது வீட்டில் இருக்கும் அனைவரும் கலந்துகொண்டு என்னையும் என் குழந்தையையும் ஆசிர்வாதம் செய்தாலே எனக்கு போதும். அதனால் இந்த நிகழ்வை பெரிதாக எடுக்காமல் சிறியதாகவே செய்யுங்கள்" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்ட லட்சுமணன் மற்றும் அஜிதா ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டனர். லக்ஷ்மணன் "ரொம்ப ரொம்ப நன்றி நாங்க இத எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தோம் நீங்க அத அழகா சொல்லிட்டீங்க" என்று கூறியவன் அனைவரையும் பார்த்து "அவங்க சொல்வது முழுக்க முழுக்க உண்மை நாம சந்தோஷமா இருக்கிறது பிடிக்காமல் நிறைய பேர் இருப்பாங்க அவங்க எல்லாருமே இது ஒரு சந்தர்ப்பமாக தான் யூஸ் பண்ணிக்க நினைப்பாங்க அந்த வாய்ப்பை அவங்களுக்கு கொடுக்காம நாமலே வீட்ல வச்சு உண்மையா ஆசீர்வாதம் பண்றவங்கள மட்டும் கூட்டு பங்க்ஷன் வைக்கலாம்" என்று கூறினான்.


அதுவரை பொறுமையாக இருந்த ரித்விகா பேச ஆரம்பித்தாள். "எனக்காக யோசிச்சு இந்த பங்க்ஷன் சின்னதா வைக்கவேண்டாம் யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்குறேன் நீங்க பெருசாவே வையுங்க சொல்றவங்க ஆயிரம் சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க அதெல்லாம் நம்ம காதுல வாங்கினா நமக்கு தான் கஷ்டம்" என்று கூறினாள்.


அவள் கூறியதை கேட்ட பெரியவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். சாரதா பேச ஆரம்பித்தார் "வித்யா சொல்றது உண்மைதான் அதனால நாம வீட்ல வச்சு சின்னதா செஞ்சிடலாம் அதே மாதிரி அன்னைக்கு பக்கத்துல இருக்க ஏதாவது ஒரு ஆசிரமத்துக்கு மதிய சாப்பாடு கொடுத்து விடலாம்" என்று கூறினார்.


அவர் கூறியது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்ததால் யாரும் எதுவும் கூறாமல் அவர் சொன்னதை ஆமோதித்தனர் ரித்விகா மற்றும் சரண்யா சோகமாக இருப்பதை பார்த்த சதீஷ் மற்றும் லட்சுமணன் "ரொம்ப பெருசா வருத்தப்படாதே அப்படி உனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா நீ ரெண்டு பேரும் சீக்கிரம் பிள்ளை பெத்துக்கோ" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டு கடுப்பான ரித்விகா "முதல்ல நீ உன் காதல சக்சஸ் பண்ணிக்க வழியை பாரு அதன் பிறகு எங்களுக்கு அறிவுரை கூறலாம் எங்களுக்கு தெரியும் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென போடா அரை மெண்டல்" என்று கூறிவிட்டு ஆதியின் அருகில் சென்று விட்டாள். சரண்யாவும் அதேபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு ராகவன் அருகில் சென்று விட்டாள்.


சதீஷ் மற்றும் லட்சுமணன் "சைக்கிள் கேப்பல நமக்கு லவ்வு இன்னும் ஓகே ஆகலைன்னு சொல்லிட்டு போகுது பாரு" என்று முணுமுணுத்து விட்டு அவர்களும் அமைதியாக அவர்கள் நண்பர்கள் கூட்டத்தோடு இணைந்து கொண்டனர்.


அவர்களின் முனுமுனுப்பு கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர் சிறிது நேரத்தில் பழைய கலகலப்பான சூழ்நிலை அங்கே உருவானது அதன்பிறகு வளைகாப்புக்கு தேவையான விஷயங்களை விவாதித்து விட்டு அனைவரும் தங்களுடைய வேலைகளை பார்க்க சென்றனர். பெரியவர்கள் ஆதி மற்றும் ராகவனை அழைத்து "அவங்க படிப்பு முடிய போகுது கூடிய சீக்கிரம் நல்ல விஷயத்தை சொல்லுங்க" என்று பொதுவாக கூறிவிட்டு வேலைகளைக் கவனிக்க சென்றனர்.


ரூபன் அஜிதாவை தனியாக அழைத்துச் சென்றான். அஜிதா ரூபன் இடம் "என்ன ஆச்சு எதுக்கு இப்ப என்ன தனியா தள்ளிக் கொண்டு வருகிறாய்" என்று கேட்டாள்.


அவளை தன் கைக்குள் கொண்டு வந்த ரூபன் "வேற எதுக்கு காதல் பண்ண தான்" என்று கூறினான். அதற்கு அவள் அப்படியா என்ற ரீதியில் பார்த்து விட்டு "நீ அப்புறமா பொறுமையா காதல் பண்ணு இப்ப எனக்கு வேலை இருக்கு" என்று கூறி அவனிடமிருந்து நழுவ பார்த்தாள்.


ரூபன் அவளை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டு "வித்யா சொன்ன விஷயத்துக்காக தான் எல்லாரும் மூஞ்சி தூக்கிவிட்டு நின்னுட்டு இருந்தியா" என்று கேட்டான்.


அஜித்தா அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு "ஆமா அதுக்காக தான் அப்படி நின்னுகிட்டு இருந்தோம் ஏன்னா இந்த உலகத்துல நம்ம வீட்டுப் பிரச்சனையே பாக்குறதுக்கு எல்லாருக்கும் நேரம் இருக்கிறது இல்லை. அப்படி இருந்தாலும் தன்னோட வீட்ல எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் அதெல்லாம் பெரிய விஷயமா நினைக்காம அடுத்த வீட்டில நடக்கிற சின்னச் சின்ன விஷயத்தையும் எப்படி பெருசு பண்ணி அவங்க மனச கஷ்டப்படுத்த லாம் அவங்கள அசிங்க படுத்தலாம் அப்படின்னு ஒரு கூட்டமே இருக்காங்க. நம்ம வீட்டு விஷேசம் எந்தவித பிரச்சினையும் இல்லாம சந்தோஷமா நடக்கணும். இந்த வீட்டுக்கு வருகிற அந்த புது வாரிசு மகிழ்ச்சியான நிலைமையில மட்டும் தான் வருமே தவிர யாருடைய மனசுலயும் சின்ன கஷ்டம் கூட இருக்கக் கூடாது.


இதற்காகத்தான் அவ்வளவு யோசித்தோம்
ஆனால் நாங்கள் ஏதாவது கூறினால் அது வேறு மாதிரி பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்துதான் அமைதியாக நின்று கொண்டிருந்தோம். நல்லவேளையாக வித்யா அக்காவே அனைத்தையும் சுலபமாக முடித்து விட்டார்" என்று மகிழ்ச்சியாக கூறினார்.


அவள் கூறியதைக் கேட்டு இன்னும் மகிழ்ச்சி அடைந்த ரூபன் அவளை இறுக அணைத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தான் அதை சற்றும் எதிர்பார்க்காத அஜித்தா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அவளைப் பார்த்து சிரித்து விட்டு ரூபன் அந்த இடத்தை காலி செய்து விட்டான்.


அவள் அப்படியே நிற்பதைப் பார்த்த ரித்விகா என்ன ஆச்சு இந்த அக்காவுக்கு என்று எண்ணிக் கொண்டே அவளைப் பிடித்து உலுக்கினாள். அதில் சுயநினைவு அடைந்த அஜித்தா ரித்விகாவை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு இடத்தைக் காலி செய்தாள். ரித்விகாவும் ஏதாவது யோசனையாக இருந்திருப்பார்கள் என்று எண்ணி அவளுடைய வேலையை பார்க்க சென்றாள்.


இப்படியே அனைத்து விதமான ஏற்பாடுகளும் நடக்க அனைவரும் மிகவும் மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டனர் அதேபோல் அவர்கள் எதிர்பார்த்த வளைகாப்பு நாளும் வந்தது. அன்று யாருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக விசேஷ நடந்து முடிந்தது நல்லுள்ளம் கொண்ட உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் யாருக்கும் எந்தவித சங்கடமும் வரவில்லை. ஆதியின் வீட்டில் இருந்து அவனுடைய அன்னை சித்தி மற்றும் அத்தை வந்திருந்தார்கள். அவர்களும் வந்து மனமார ஆசிர்வதித்து விட்டு உடனடியாக கிளம்பி விட்டார்கள். ஏனெனில் அவர்கள் இங்கு வந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் அது வேறுவிதமான பிரச்சினையை கிளப்பி விடும். அதனால் தன்னுடைய பிள்ளைகளை கண்குளிர பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.


வித்யா அவளுடைய வீட்டிற்கு செல்ல இங்கு உள்ளவர்கள் அவ்வப்போது அவளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தனர். ஆனந்த் அவளுக்கு கூறிய பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்பே அவளுடைய வீட்டிற்கு சென்று விட்டான் இப்படியே மகிழ்ச்சியாக எந்தவித தடையுமில்லாமல் சென்று கொண்டிருந்தது.


ஒரு நல்ல நாளில் ஆனந்திற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது அதை அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினர். அந்த குழந்தைக்கு தர்ஷனா என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.


இப்படி இவர்கள் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்ததில் ரிஷி மற்றும் கதிரை கவனிக்க தவறினர். இதுதான் சமயம் என்று எதிர்பார்த்திருந்த அவர்கள் இருவரும் ஆதி இடம் இருந்து தப்பித்து இருந்தனர்.


அவர்கள் இருவரும் தப்பித்து சென்றதை அறிந்த ஆதி மிகவும் கோபம் அடைந்தான் ரூபன் மற்றும் ராகவனை அழைத்து "எப்படிடா இது நடந்துச்சு அவ்வளவு சுலபமா அவனுங்க ரெண்டு பேரையும் தப்பிக்க முடியாது எனக்கு தெரிந்து இது ரொம்ப நாளா அவங்க போட்ட பிளான் மாதிரி தெரியுது" என்று கோபமாகக் கூறினான்.


ரூபன் "நீ சொல்றது சரிதான் நாம வீட்ல குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்த நேரத்துல தப்பிப் போய் இருக்கானுங்க. அதுவும் ரொம்ப சாமர்த்தியமாக சாப்பாடு கொடுக்கும் போது போட முடியாத மாதிரி சாப்பிட்ட சாப்பிட்ட வாந்தி எடுத்திருக்கிறான். அதை கழுவுவதற்கு நம்மாட்கள் உதவி செஞ்சிருக்காங்க அதை பயன்படுத்தி எல்லாம் செஞ்சிட்டு தப்பி போய் இருக்கானுங்க. எவ்வளவோ தேடிப் பார்த்துட்டேன் அவனுக ரெண்டு பேரும் அவங்க வீட்டுக்கும் போல அவங்க ஊருக்கு போகல ரெண்டு பேரும் சேர்ந்து வேற எங்கேயோ போய் இருக்காங்க" என்று கூறினான்.


ராகவன் எனக்கு என்னமோ அவங்க ரெண்டு பேரும் அப்படியே போயிருவாங்கன்னு தோணல கண்டிப்பா நம்ம எல்லாரையும் பழிவாங்குவதற்கு திரும்பி வருவாங்க எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்" என்று கூறினான்.


ஆதி "எல்லாம் சரிதான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்கணும் ஏன்னா முன்னாடி இருந்ததற்கு இப்ப நம்ம மேல ரொம்ப கோவமா இருப்பானுங்க எந்த விஷயம் செய்வதானாலும் பார்த்துதான் நம்மளை பழி வாங்க வருவானுங்க" என்று கூறியவன் "இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் தெரிஞ்சா பயப்பட ஆரம்பிச்சுடுவாங்க" என்று கூறினான்.


ஆனால் இன்றே கூறியிருந்தால் அவன் குடும்பத்தில் இருப்பவர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருப்பார்கள் ஆனால் விதியின் செய்யலை யாரால் மாற்ற இயலும்.


ஆதியின் கூற்றை ஆமோதித்த இருவரும் எதுவும் பேசாமல் இனி செய்ய வேண்டியவற்றை மட்டும் யோசித்துவிட்டு தங்களுடைய இல்லம் நோக்கி வந்தனர். வீட்டிற்குள் நுழையும் போதே தங்களுடைய முகத்தை சரி செய்தவாறே உள்ளே நுழைந்தனர். லட்சுமணன் மற்றும் அஜய் மூவரின் முகத்தை கேள்வியாக நோக்கிவிட்டு பின்பு எதுவாக இருந்தாலும் தங்களிடம் கூறுவார்கள் நீ நினைத்து அமைதி காத்தனர்.


இவ்வளவு நாளில் ஊர்மிளாவிற்கு லக்ஷ்மணன் மேல் காதல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஏனென்றால் அதன் பிறகு லக்ஷ்மணனை சந்திக்க வாய்ப்பு அமையாமல் இருந்தாலும் என்றாவது ரித்விகாவை கல்லூரியிலிருந்து அழைத்துச்செல்ல வரும்போது நாம் அறியாமல் பார்த்துக் கொள்வாள். அதே மாதிரி மிகவும் திறமையாக செயல்பட்டு முதல் மாணவியாக திகழ்ந்தாள். ரித்விகா உடன் நல்ல நட்பையும் உருவாக்கிக் கொண்டாள். அப்படி ஆன பிறகுதான் அந்த குடும்பத்தில் உள்ள பல விஷயங்கள் அவளுக்கு தெரிந்தது. தானும் அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக வாழப் போகிறோம் என்று எண்ணி மிகவும் மகிழ்ந்து போனாள்.


ஜானகி அவளுடைய நிலைமையைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொள்வாள். ஆனால் தன்னுடைய தோழி வாழ்வு நலமாக அமைய வேண்டும் என்று கடவுளிடம் மனமாரப் பிரார்த்தித்து கொள்வாள்.


இப்படியாக அனைவரின் வாழ்வும் எப்பொழுதும் சூழலும் நாட்கள் போல் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது ரிஷி மற்றும் கதிர் மூலம் எந்தவித பிரச்சனையும் வராமல் இருந்ததால் ஆதியும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான். சதீஷ் தன்னுடைய படிப்பை முடித்து நல்ல படியாக ஒரு வேலையில் சேர்ந்து இருந்தான். அக்ஷயா விடம் தன்னுடைய காதலை மறுபடியும் கூற நினைத்தபோது அவள் எதுவாக இருந்தாலும் நான் ஒரு நல்ல வேலையில் அமர்ந்த பிறகு பேசிக் கொள்ளலாம் அதுவரை பொறுமையாக இருக்குமாறு கூறிவிட்டாள். அதனால் அவனும் அமைதியாக தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.


சந்துரு மற்றும் நிஷா தங்கள் காதலிலும் அவர்களது பொறுப்புகளிலும் மிகவும் திறமையாக வளர்ந்து கொண்டிருந்தனர். நிஷாவின் பயத்தை போக்குவதற்காக சந்துரு தன்னுடைய வீட்டில் உள்ள அனைவரிடமும் தன்னுடைய காதல் விஷயத்தை கூறி சம்மதம் வாங்கி இருந்தான் அதை மட்டும் செய்யாமல் தன்னுடைய பெற்றோருடன் நிஷா வீட்டிற்கு சென்று பேசி அவர்களையும் சம்மதிக்க வைத்து இருந்தான். இவர்கள் காதலுக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் திருமணம் வரை வீட்டில் உள்ள அனைவரும் ஒத்துக் கொண்டது மற்ற அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.


இப்படியாக காலங்கள் வேகமாக உருண்டு ஓட தர்ஷனா பிறந்து ஏழு மாதங்கள் ஆகியிருந்தது அப்போது சரண்யா கருவுற்றிருக்கும் நல்ல செய்தியும் கிடைத்தது. இதனால் அந்த வீடு மீண்டும் மகிழ்ச்சி கடலில் திளைக்க ஆரம்பித்தனர்.


ரித்விகா படிப்பை முடித்து லக்ஷ்மணன் வேலைபார்த்த மருத்துவமனையில் பிராக்டிஸ் செய்ய சென்றாள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் மறுபடியும் கல்லூரியில் ஆரம்பித்த கலாட்டாவை எங்கேயும் ஆரம்பித்தனர் ஆனால் வேலையில் அவர்கள் அனைவரும் மிகவும் திறமைசாலிகளாக இருந்ததால் அந்த மருத்துவமனை நிர்வாகம் எதுவும் கூறாமல் இவர்களுடைய சேட்டையை ரசித்தது.


ஒருநாள் லக்ஷ்மணன்இற்கு ஏதோ முக்கியமான ஆப்பரேஷன் இருந்ததால் ரித்விகாவை நாளை வீட்டிற்கு அழைத்து வர முடியவில்லை அதனால் அவன் அவளிடம் "பேபி இன்னைக்கு எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு நீ உன் புருஷனுக்கு போன் பண்ணி வரச்சொல்லி அவன் கூட வீட்டுக்கு போயிரு" என்று கூறினான்.


ரித்விகா சரி பேபி நீ பாத்து பத்திரமா வீட்டுக்கு வா நான் ஆதிக்கு போன் பண்ணி வர சொல்றேன் என்று கூறி விட்டு வெளியே வந்தாள். அப்போது அங்கு அவளை எதர்ச்சியாக பார்த்த பாலகிருஷ்ணன் அவளிடம் வந்தார் "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா" என்று கேட்டார் அவளும் அந்த பெரிய மனிதன் தன்னிடம் பேசலாமா என்று அனுமதி கேட்பதில் சங்கடமாக உணர்ந்து தாராளமாக பேசலாம் என்று கூறினாள்.


அவர் பேசப் பேச ரித்விகாவின் முகம் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தது இறுதியாக அவர் கூறி முடிக்கும் போது வேதனையாக அவருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவர் பதிலுக்கு "இனி முடிவு உன் கையில் நீதான் எடுக்க வேண்டும்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


அவர் கூறிய விஷயங்களை யோசித்து யோசித்து முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதே இடத்தில் அமர்ந்து இருந்தாள் ரித்விகா. லக்ஷ்மணன் தன்னுடைய ஆபரேஷன் நல்லபடியாக முடிந்ததில் வீட்டிற்கு கிளம்பலாம் என்று வெளியே வந்தவன். இன்னும் வீட்டிற்கு போகாமல் இருக்கும் ரித்விகாவை கேள்வியாக பார்த்துக்கொண்டே அவளிடம் வந்தான். "என்ன பேபி வீட்டுக்கு போகாம இங்கேயே உட்கார்ந்து இருக்க" என்று கேட்டவாறு அவள் அருகே அமர்ந்தான்.


லக்ஷ்மணன் வரவை சற்றும் எதிர்பார்க்காத ரித்விகா ஒரு நொடியில் தன்னை சரி செய்து கொண்டு "இல்ல பேபி ஒரு குட்டி பாப்பாக்கு ரொம்ப உடம்பு முடியாம தூக்கிட்டுப் போனாங்க அதை பார்க்க பார்க்க என்னோட அம்மா ஞாபகம் வந்துடுச்சு" என்று கூறி கண் கலங்கினாள்.


அவள் பொய் சொல்கிறாள் என்பதை உணர்ந்தாலும் அதற்கு மேல் கேள்விகள் கேட்டு அவளை கஷ்டப் படுத்த விரும்பாமல் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான் லட்சுமணன். வீட்டிற்கு வந்த ரித்விகா எப்பொழுதும் இருப்பது போல் தன்னுடைய வேலைகளை கவனித்துக்கொண்டு வலம் வந்து கொண்டிருந்தாள்.


ஆனால் அவள் ஏதோ ஒரு விஷயத்தை எண்ணி கலங்கி கொண்டிருக்கிறாள் என்பதை அங்கிருந்த அனைவருமே அறிந்திருந்தனர் அந்த அளவிற்கு அவர்கள் அனைவருமே அவளைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் அதைப்பற்றி அவளாக கூறும் வரை தங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்பதும் அனைவரும் அறிந்து இருந்தனர். ஏனென்றால் அனைவருக்கும் கூறும் விஷயமாக இருந்திருந்தால் அவளன்றி அனைவரிடமும் கூறி அதற்கான விளக்கம் கேட்டிருப்பாள். அப்படி அவள் கேட்காமல் இருப்பதால் கண்டிப்பாக அவளாக கூறும் வரை அந்த குழப்பத்தை தீர்க்க முடியாது என்று எண்ணி அமைதி காத்தனர்.


இங்கே ரிஷி மற்றும் கதிர் ஆதியை அழிக்க திட்டம் தீட்டி முடித்திருந்தனர். பல நாட்கள் யாருக்கும் தெரியாமல் பதுங்கியிருந்து திட்டம் தீட்டி அதை வெற்றிகரமாக செயல்படுத்த நான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.


எல்லா நேரத்திலும் நல்லவர்களுக்கு சாதகமாகவே அமையாது என்பது போல் இந்த முறை இவர்கள் திட்டத்தால் ஒரு சில குழப்பங்கள் வரப்போவதை ஆதியும் அவன் நண்பர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


இதோ இதோ என்று அந்த கயவர்கள் எதிர்ப்பார்த்த நாளும் நல்லபடியாக விடிந்தது.
 
Top