• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 27

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ரித்விகா அன்று மருத்துவமனையில் இருந்து வந்ததிலிருந்து ஏதோ ஒரு யோசனையிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். இதை அனைவரும் கவனித்தாலும் அவளாக கூறட்டும் என்று பொறுமை காத்தனர். சில நாட்களில் மிகவும் தெளிந்தது போல் பழைய மாதிரி நடமாட ஆரம்பித்தாள். அவள் பழையபடி மாறி விட்டாள் என்பதை ஒரு சிலர் நம்ப ஆதி மற்றும் லட்சுமணன் அதை நம்ப மறுத்தனர். அவள் வெளியே அனைவரிடமும் நடிக்கிறாள் என்பதை அவர்கள் இருவரும் புரிந்து இருந்தனர்.


இப்படியே காலங்கள் உருண்டோட அவளுடைய படிப்பு முடிந்தது. அன்று மாலை கல்லூரியில் அனைவரிடமும் பிரியா விடை பெற்று கிளம்பினாள் ரித்விகா. நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஆரத் தழுவிக்கொண்டு கிளம்பினர் அன்று அவளை அழைக்க லட்சுமணன் மற்றும் ஆதி காரில் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை வைத்தே தன்னிடம் ஏதோ பேச போகிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்தாள் ரித்விகா.


ரித்விகா அமைதியாக காரில் முன் பக்கமாக சென்று அமர்ந்தாள் ஆதி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான் லக்ஷ்மணன் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். கார் கிளம்பிய சிறிது நேரத்தில் லட்சுமணன் "பேபி உனக்கு என்ன பிரச்சனை ஒழுங்கா எங்க கிட்ட சொல்லு எதுவாயிருந்தாலும் சீக்கிரம் சரி பண்ணி விடலாம் அதை விட்டுட்டு நீயா ஏதாவது யோசித்து தவறான முடிவு எடுத்து விடாதே" என்று கூறினான்.


அதற்கு ரித்விகா "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பேபி எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா உங்ககிட்ட சொல்லாம இருப்பேனா நீ தேவையில்லாம யோசிக்கிற அப்படி எல்லாம் எனக்கு எதுவுமே பிரச்சனை இல்லை" என்று கூறினாள்.


ஆதி அவளை பார்த்துக்கொண்டே லட்சுமணனிடம் "அவளிடம் பிரச்சனை செய்தது வெளி ஆட்களாக இருக்க வாய்ப்பு இல்லை கண்டிப்பாக அது நம் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்க வேண்டும். அதுவும் அவர்களிடம் கூறிய விஷயத்தால் இவள் இவ்வாறு இருக்கிறாள். அப்படித்தானே மிஸஸ் ரித்விகா ஆதித்யா கிருஷ்ணன்" என்று அந்த மிஸஸ் என்ற வார்த்தையில் அழுத்தி கூறினான்.


ஆதி தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் தான் குழப்பத்திற்கு காரணம் என்று கூறியதை கேட்டு ஆதிக்கு எப்படி தெரிந்தது என்று ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள் ரித்விகா. ஆனால் சிறிது நேரத்தில் தன்னுடைய முகத்தை மாற்றிக் கொண்டாள் ஏனெனில் ஆதி தன்னிடம் போட்டு வாங்க வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தவள் அவள். ஆனால் அவருடைய அதிர்ச்சி முகத்தை ஆதி மற்றும் லட்சுமணன் நன்றாகவே கவனித்து விட்டனர் அதனால் அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக இந்த பிரச்சினையில் தன் குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்துவிட்டது.


ரித்விகா தன்னுடைய முகத்தை மாற்றி விட்டு "அப்படி எல்லாம் எதுவும் இல்லை நம்ம வீட்ல யாரும் நமக்கு கஷ்டம் கொடுக்க போறா நீ ரெண்டு பேரும் தேவையில்லாமல் யோசிக்கிறேன் நானே இதுக்கு மேல படிக்கவா இல்லை வேலைக்கு சேர வா என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் அந்த குழப்பத்திலேயே எனக்கு பாதி நேரம் சென்று விடுகிறது" என்று கூறினாள்.


அதற்கு லட்சுமணன் "நீ முதலில் ஒரு குட்டி பேபி பெற்றுக் கொடு அதன் பிறகு நீ மேலே படிக்கலாம் எந்தவித பிரச்சினையும் இல்லை" என்று கூறினான்.


லக்ஷ்மணன் கூறியதை கேட்ட ரித்விகா இன்னும் குழம்பி போனாள் அவள் மனதில் நான் இப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தது இவை அனைத்தையும் அவர்கள் இருவரும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர்.
அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு லாரி இவர்களின் காரில் நன்றாக மோதியது கடைசி நேரத்தில் அதை கவனித்த ஆதி வண்டியை திருப்ப முயற்சி செய்து தோற்றான்.


வண்டி எடுத்ததில் மூவருக்கும் அடிபட்டது அதில் லட்சுமணன் பின்னிருக்கையில் இருந்ததால் அவனுக்கு முன் இருக்கையில் உள்ள சீட்டில் மண்டை அடிபட்டு மயக்கம் அடைந்தான். ரித்விகா விற்கும் இதே நிலைமையே ஆனால் அவளுக்கு கொஞ்சம் கூடுதலான அடி கிடைத்தது. ஆதி மட்டும் கொஞ்சம் பலமான அடியில் சிக்கி கொண்டிருந்தான். ஆனால் மூவரும் மயக்கம் அடைந்து இருந்ததால் ஒருத்தரின் நிலமை இன்னொருத்தருக்கு தெரியவில்லை அவர்களை இடித்த லாரியும் நிற்காமல் சென்றுவிட்டது.


இவர்களின் நிலைமையை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் விதியின் செயலால் லட்சுமணன் மற்றும் ஆதி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ரித்விகா வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.


ஆதியின் அலைபேசிக்கு அஜய் தொடர்பு கொண்டான் ஏனென்றால் ரித்விகாவை அழைக்க சென்றவர்கள் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் கவலை அடைந்து போன் செய்தனர் அதை எடுத்த மருத்துவமனையில் உள்ள நபர் பேசுவதற்கு முன் அஜய் முந்திக் கொண்டு "டேய் எங்கடா இருக்க எவ்வளவு நேரம் ஆகுது எப்ப வீட்டுக்கு வருவ" என்று கேட்டான். அதற்கு அந்த நபர் "ஹலோ சார்" என்று கூறினான்.


ஆதியின் மொபைலில் வேறு யாரோ பேசுகிறார்கள் என்பதை உணர்ந்த அஜய் ஹலோ என்றான். அதற்கு அவர் "சார் இந்த போன் வெச்சி இருந்தவரு அப்புறம் அவரு கூட இருந்த இரண்டு பேருக்கும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அவங்கள ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க" என்று மருத்துவமனையின் பெயரை கூறினான்.


போனை வைத்தவுடன் ரூபன் ஐ அழைத்த அஜய் " ரூபா ஆதிக்கும் லக்ஷ்மணன் அப்புறம் ரித்விகாவிற்கும் ஆக்சிடன்ட் ஆகி இருக்கு இப்பதான் போன் வந்துச்சு நாம உடனடியா அந்த ஹாஸ்பிடல் போகணும் ராகவன் சரண்யாவை கூட்டிட்டு மந்த்லி செக்கப் போய் இருக்கான். அதனால நான் ஆனந்தை கூட்டிட்டு உடனே வருகிறேன் நீயும் சீக்கிரம் கிளம்பி வா" என்று கூறி போனை வைத்தான்.


அதேபோல் ஆனந்தை அழைத்த அஜய் நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறி அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றான். அங்கு இவர்கள் சென்றபோது லட்சுமணன் சாதாரண மயக்கத்திலும் ஆதிக்கு சிகிச்சையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதேபோல் ரித்விகாவிற்கும் சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்று எண்ணிக்கொண்டு தங்களது போனை அட்டென்ட் செய்தவரை பார்த்து நன்றி கூறிவிட்டு அமைதியாக வெளியே அமர்ந்தனர். ஆனால் தவறியும் யாரிடமும் கூறவில்லை.


சிறிது நேரத்தில் மருத்துவமனை வந்த ரூபன் அங்குள்ள வரவேற்பில் சென்று "இங்கே ஆக்சிடெண்ட் கேஸ் மூணு பேர் அட்மிட் ஆகி இருக்காங்க எங்க இருக்காங்க" என்று கேட்டான்.


அதற்கு அங்கிருந்த பெண் "சாரி சார் ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு பேர் தான் இருந்தாங்க அவங்களுக்கு ட்ரீட்மென்ட் அங்க நடந்துகிட்டு இருக்கு" என்று ஒரு இடத்தை காட்டினாள்.


இதைக் கேட்ட ரூபன் குழப்பத்தில் அவள் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றான் அங்கே வெளியே அஜய் மற்றும் ஆனந்த் காத்துக்கொண்டிருக்க இவன் அவர்கள் அருகில் சென்று "டேய் ரெண்டு பேர் தான் இங்க அட்மிட் ஆகி இருக்காங்களாம் யாரு இங்கு அட்மிட் ஆகவில்லை" என்று கேட்டான்.


அவன் கேட்ட கேள்வியில் பதறிய அஜய் "லட்சுமணன் அப்புறம் ஆதி இங்கதான் இருக்காங்க அப்புறம் ரித்விகா எங்கே" என்று கேட்டான்.


ஆனந்த் என் தங்கச்சி எங்கடா இருக்கிறாள் உடனே இவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனா இடத்துக்கு போய் விசாரிச்சா தான் ஒரு முடிவு கிடைக்கும் இடத்தை காலி செய்ய நினைத்தான். ஆனால் அதற்குள் ராகவனிடம் இருந்து ஆனந்திற்கு போன் வந்தது. அதை அட்டென்ட் செய்து ஹலோ என்று கூறுவதற்கு முன் ராகவன் "ஆனந்த் சீக்கிரம் கிளம்பி நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு வா ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்று கூறி இவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்து விட்டான்.


ஆனந்த் நடந்ததை மற்ற இருவரிடமும் கூறினான். அதைக்கேட்ட ரூபன் "ஏற்கனவே கொஞ்ச நாளா ரித்விகா கொஞ்சம் குழம்பி போய் தான் இருந்தாள்.ராகவன் சொல்வதை பார்த்தால் ரித்விகா அந்த மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும்.
அதனால் நீ உடனடியாக கிளம்பி அங்கே செல் இன்னும் சிறிது நேரத்தில் சதீஷ் வந்து விடுவான் நானும் இதற்கு யார் காரணம் என்று விசாரித்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்க அனைத்து ஏற்படும் செய்கிறேன்" என்று கூறி விடைபெற்றான்.


ஆனந்த் அஜய் இடம் கூறிவிட்டு ராகவன் சொன்ன இடத்திற்கு கிளம்பி சென்றான் அவன் சென்ற சிறிது நேரத்தில் சதீஷ் இங்கு மருத்துவமனைக்கு வந்து விட்டார் அப்போது சரியாக லக்ஷ்மணன் கண் விழித்து இருந்தான். அவன் கண் விழித்து விட்டதை நர்ஸ் ஒருவர் வந்து கூற அவனைக் காண மற்ற இருவரும் விரைந்து சென்றனர்.


இவர்கள் இருவரையும் பார்த்த லட்சுமணன் "அண்ணாவும் பேபி யும் எப்படி இருக்காங்க அவங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லையே" என்று கேட்டான். அதற்கு அஜய் ஆதி ங்கதான் ஹாஸ்பிடல்ல இருக்கிறான் ஆனால் உன்னுடைய பேபி இந்த மருத்துவமனையில் இல்லை அவர் வேறு ஏதோ ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். அங்கு ஆனந்த் சென்றிருக்கிறான்" என்று கூறினான்.


இதைக்கேட்ட லட்சுமணன் "நான் உடனடியாக என்னுடைய பேபி இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் இல்லை என்றால் கண்டிப்பாக அவர் ஏதேனும் விபரீதமான முடிவை எடுப்பாள் ஆதி சரியாகி எழுந்து வரும் வரை நான் ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறி அவசரமாக கிளம்பினான்.


அவனைப் பிடித்து அமர வைத்த அஜய் மருத்துவரிடம் அவனுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையா என்று விசாரித்துவிட்டு அவர் எந்தவித பிரச்சினையும் இல்லை தாங்கள் அழைத்து செல்லலாம் என்று கூறியவுடன் அவனை டிஸ்சார்ஜ் செய்து சதீஸ் உடன் அனுப்பி வைத்தான். அதன்பிறகு அஜய் ஆதியின் சிகிச்சை முடிவதற்காக காத்துக் கொண்டிருந்தான்.


இங்கே ஆனந்த் ராகவன் சொன்ன மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தான். அங்கு ரித்விகா எதையோ யோசித்து சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அவளை அந்த நிலையில் பார்க்க முடியாத ஆனந்த் ராகவனிடம் "என்னடா ஆச்சு எதனால இப்படி இருக்கா" என்று கேட்டான்.


அதற்கு ராகவன் "நான் சரண்யாவுடன் மாதம்தோறும் வரும் செக்கப் இன்று இருந்ததால் இங்கே வந்தேன். இங்கே வந்து அவளுக்கான செக்கப் முடிந்தவுடன் நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். அப்போது ஒரு பெண்ணிற்கு ஆக்சிடென்ட் ஆகி இருப்பதாகவும் அவளுக்கு சிகிச்சை நடப்பதாகவும் கூறினார்கள். நான் அதை கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே இருந்து அவளுடைய பொருட்களை வெளியே எடுத்து வந்து யாரையோ தேடினார்கள். நான் அந்த இடத்தில் இருந்ததால் என் கையில் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதை பார்த்த போதுதான் தெரிந்தது அந்த பொருள் நம் தங்கை யுடையது என்று அதனால் பதட்டமாக வெளியே காத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் அவருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி பார்க்க வேண்டுமென்றால் சென்று பாருங்கள் என்று கூறினார்கள். நான் உள்ளே வந்தது முதல் அவ்வாறுதான் நான் சரண்யாவை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்ன ஆனது என்று கேட்டதற்கு உன்னை வரச் சொன்னாள் அதனால் தான் உன்னை வர சொன்னேன்" என்று கூறினான்.


ஆனந்த் கேள்வியாகவே பார்க்க ரித்விகா அதை புரிந்து கொண்டு அவர்கள் இருவரையும் தன்னுடைய அருகில் அழைத்தாள். அவர்களும் அவள் அருகில் வந்தனர் சரியாக அந்த நேரத்தில் ரித்விகாவின் அறைக்கு வெளியே சதீஷ் மற்றும் லக்ஷ்மணன் வந்து சேர்ந்தனர் உள்ளே ஏதோ பேச போவது தெரிந்தால் அமைதியாக வெளியே நின்று கேட்க ஆரம்பித்தனர்.


ரித்திகா பேச ஆரம்பித்தாள் "அண்ணா நான் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இருந்தே ஏதோ குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும் அது எதனால் என்றும் அதற்காக நான் ஒரு முடிவு எடுத்து இருக்கிறேன் அது என்ன என்றும் தற்போது கூற விரும்புகிறேன்" என்று கூறினாள்.


அவர்கள் இருவரும் அமைதியாக மேலே கூறுமாறு அவளைப் பார்த்தனர். அவளும் அதை புரிந்து கொண்டு கூற ஆரம்பித்தாள். "அன்னைக்கு நான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு கிளம்பும்போது ஆதியோட தாத்தா என்னை எதிர்பார்த்து என்கிட்ட பேச வந்தாங்க அன்னைக்கு அவங்க பேசியது" என்று அன்றைய நாளை நினைவு கூற ஆரம்பித்தாள்.


ரித்விகாவை சந்தித்த பாலகிருஷ்ணன் ரித்விகாவை பார்த்து "நீ தயவு செஞ்சு என்னோட பேரன் ஆதியின் வாழ்க்கையில் இருந்து வெளியே போய் விடு எப்ப நீ அவனோட வாழ்க்கையில் வந்தியோ அன்றிலிருந்து எங்கள் குடும்பத்தில் பிரச்சனை தான் முதலில் எங்களுடைய ஒரு பேரன் வீட்டைவிட்டு வெளியே சென்றான் . அடுத்து சிறிது நாளில் இன்னொரு பேரன் பெயர் உன்னோடு ஒன்று தொடர்பு படுத்திப் பேசி அவனையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்தது.


அது மட்டுமல்லாமல் எங்க வீட்டில் உள்ள வாரிசுகள் அத்தனையும் உனக்கு சப்போர்ட் செய்வதாக கூறி உன் பின்னாடியே சுற்றுகிறார்கள். ஏற்கனவே உன்னுடைய இராசியின் பலநால் உன்னுடைய குடும்பத்தை இழந்து நிற்கிறாய். இதில் இப்பொழுது எங்கள் குடும்பமும் பாதிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் உறவுகள் இருந்தும் இல்லாதது போல் இருக்கிறோம். அதையெல்லாம் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.


உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் தனியாக சென்று பிழைத்துக் கொள். உன்னை திருமணம் செய்ததற்கு பலனாக என்னுடைய பேரன் உன்னை படிக்க வைத்து விட்டான். அதனால் இனி எங்கள் வாழ்வில் தொந்தரவு செய்யாமல் உன்னுடைய வாழ்க்கையை நீயே பார்த்துக்கொள். ஆனால் நீ வெளியே செல்வது எக்காரணம் கொண்டும் என்னுடைய பேரனுக்கு தெரியக்கூடாது. தெரிந்தால் அவன் முழுவதுமாக எங்களை வெறுத்து ஒதுக்கி விடுவான். அதேபோல் நீ நன்றாக யோசித்துப் பார் உன்னால் உன்னுடைய கணவனாக இருந்த எங்கள் பேரன் அவனுடைய குடும்பத்தின் பாசத்தை இழந்து நிற்கிறான். எங்கள் வீட்டில் செல்லப்பிள்ளை மற்றும் பொறுப்பான பிள்ளை அவன் தான் ஆனால் இன்று நாங்கள் அவனை பிரிந்து இருப்பதற்கு முழு காரணம் நீ மட்டுமே நீ விலகி சென்றால் உடனடியாக நாங்கள் அவனை ஏற்றுக் கொள்வோம்.


நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் போனதற்கு அவன் என்ன செய்வான் அவருடைய உண்மையான மகிழ்ச்சி குடும்பத்தோடு ஒன்றாக இருப்பதுதான் அதனால் இ நீ இப்பொழுது உன்னுடைய மகிழ்ச்சி மட்டும் தான் பெரிது என்று நினைத்துக்கொண்டு அவருடன் வாழ போகிறாயா இல்லை பிரிந்து சென்று அவனுக்கு இழந்த மகிழ்ச்சி அனைத்தையும் கொடுக்க போகிறாயா" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.


அவள் கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ராகவன் "இப்படி எல்லாம் அவர் வந்து பேசினாரா வயதுக்கு தகுந்த மாதிரி அனுபவம் மற்றும் அறிவு இருக்க வேண்டும் ஒரு சின்னப் பெண்ணிடம் என்ன பேச வேண்டும் என்ன கூறவேண்டும் என்று இல்லாமல் இதற்காக அவர் இவ்வாறு கூறினார்" என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தான்.


ஆனந்த ராகவனை அமைதிப்படுத்தி விட்டு "இதை நீ அன்றே எங்கள் அனைவரிடமும் கூறி இருக்கலாமே இவ்வளவு நாள் மனதில் வைத்து தவித்துக் கொண்டு இருக்கிறாய்" என்று கேட்டான்.


அதற்கு ரித்விகா கண்களில் கண்ணீர் கோர்க்க "நான் என்ன அண்ணா செய்வது அவர் கூறுவதும் ஒருவகையில் உண்மைதான். ஆனால் அதற்காக என்னால் அதை விட்டு பிரிந்து செல்லவும் முடியவில்லை ஆனால் அவருடன் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் என்னுடைய சுய நலத்தால் அவனுடைய மகிழ்ச்சியை பாழாக்கி கொண்டிருக்கிறானோ என்ற எண்ணமும் வருகிறது. நான் என்ன செய்வது இதை உங்கள் யாரிடம் கூறினாலும் கண்டிப்பாக அது ஆதியின் காதிற்கு சென்றுவிடும். அப்படி மட்டும் சென்றால் நிச்சயமாக அவனுடைய கவனிப்பு வேறு மாதிரியாக இருக்கும் அதனால் இன்னும் பிரச்சனைகள் பெரிதாக வரும் அதற்கு பயந்துதான் யாரிடமும் கூறவில்லை" என்று கூறினாள்.


அவள் கூறியதை வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்தாள் லக்ஷ்மணன் உச்சகட்ட கோபத்தில் இருந்தான். ஆனால் அவனுடைய பேபி என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று முழுவதுமாக தெரிந்து கொண்டு தன் அண்ணனிடம் அனைத்தையும் கூற வேண்டும் என்று அமைதி காத்து கொண்டு இருந்தான். லக்ஷ்மணனின் அமைதியில் சதீஷ் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று அவன் கேட்டுக் கொண்டிருந்தான் ஆனால் அவனுக்கும் உள்ளுக்குள்ள கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.


ரித்திகா தன்னுடைய கண்ணீரை துடைத்துவிட்டு இருவரையும் நோக்கினாள் "உங்கள் இருவரிடமும் நான் இப்போது ஒரு சத்தியம் வாங்க போகிறேன் நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன் அந்த முடிவுக்கு நீங்கள் இருவரும் கண்டிப்பாக துணை நிற்க வேண்டும்" என்று கூறினாள்.


ராகவன் அவளைப் பார்த்து "என்ன காரணம் என்று நீ கூறினால் மட்டுமே நாங்கள் சத்தியம் செய்வோம் இல்லையென்றால் நாங்கள் செய்ய மாட்டோம்" என்று கூறினான். அதற்கு ஆனந்தும் ஆமா என்று கூறினான்.


ரித்விகா "நான் காரணம் கண்டிப்பாக கூற மாட்டேன். ஆனால் நீ சத்தியம் செய்யவேண்டும் என்னை நீங்கள் இருவரும் உங்களுடைய தங்கையாக நினைத்தால் நிச்சயமாக சத்தியம் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் மட்டுமே நான் எடுத்திருக்கும் முடிவை பற்றி கூறுவேன் அப்படி நீங்கள் செய்தால் மட்டுமே நான் எடுத்திருக்கும் முடிவை பற்றிக் கூறுவேன்" என்று அழுத்திக் கூறினாள்.


ராகவன் மற்றும் ஆனந்த் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக வாசலைப் பார்த்த ராகவன் லட்சுமணன் மற்றும் சதீஷ் இருப்பதை கவனித்து விட்டான். அவர்கள் இருவரையும் பார்க்க லக்ஷ்மணன் சத்தியம் செய் என்று சைகையால் கூறினான். அதை புரிந்துகொண்ட ராகவன் ஆனந்த் இடமும் அவர்கள் இருவரை காண்பித்துவிட்டு ரித்விகாவிடம் திரும்பி "சரி நாங்க சத்தியம் செய்கிறோம் அதுக்கப்புறம் நீ உன்னோட முடிவு என்னவென்று கூறு ஆனால் நீ தவறாக எந்த முடிவையும் எடுத்து இருக்க மாட்டாய் என்று நம்புகிறோம்" என்று கூறினான்.


ரித்விகா அதை அப்புறமாக பார்த்துக் கொள்ளலாம் என்று சத்தியம் வாங்குவதற்காக கைகளை நீட்டினாள். அவர்கள் இருவரும் ஏதோ பெரிதாக கூற போகிறாள் என்பதை உணர்ந்து கொண்டு ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே சத்தியம் செய்தனர்.
 
Top