• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 28

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ரித்விகா கூறியதை வைத்தே அவளுடைய முடிவை ஓரளவுக்கு அனைவரும் யூகித்து இருந்தனர். ஆனால் அதை அவள் வாயாலேயே கூறட்டும் என்று அனைவரும் அமைதி காத்தனர். அவளும் ராகவன் மற்றும் ஆனந்தை ஒருமுறை பார்த்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு வெளியிட்டு பேச ஆரம்பித்தாள்.


ரித்விகா "நான் ஆதியோட வாழ்க்கையில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று யோசிக்கிறேன் அண்ணா. ஏனென்றால் என்னால் அவன் அவனுடைய குடும்பத்தை மட்டும் அல்லாமல் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறான். எனக்கே சில நேரம் இது என்னுடைய சுயநலம் போல் தெரிகிறது யாருமே இல்லாமல் இருந்த என்னை மனைவியாக்கி அழகு பார்த்தவன் ஆதி.


என்னை தங்கை என்று பாசம் புரிந்தவர்கள் நீங்கள் அதனால் தான் உங்கள் இருவரையும் அழைத்து இதை கூறுகிறேன். நான் யாரிடமும் சொல்லாமல் சென்றால் என்னை பற்றி நீங்கள் அனைவரும் மிகவும் வருத்தம் கொள்வீர்கள் என்பது எனக்கு தெரியும். எனக்கு அவர்களைப் பிரிந்து வருவது மிகவும் கடினமான செயல் தான் முக்கியமாக என்னுடைய பேபி அவன் எனக்கு ஒரு பிரண்டாக மட்டுமில்லாமல் என்னுடைய தந்தையாக சிலநேரம் என்னை கவனித்துக் கொள்வான். ஆனால் அதையும் தவறாக நினைக்கிறார்கள் பலர் என்னால் அவர்கள் யாருக்கும் கஷ்டம் வேண்டாம்.


என்னால் அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக இருக்கவும் வேண்டாம். நான் அவர்களுடன் இருந்தால் நிச்சயமாக என்னை ஏற்றுக் கொண்டால் தான் இவர்களும் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். அதே போல் நான் இவர்களை விட்டு பிரிந்து சென்றால் கொஞ்ச நாள் என்னை பற்றி யோசிப்பார்கள் அதன் பிறகு என்னை மறந்து அவர்கள் அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.


நான் இருக்கும் இடம் அவர்கள் யாருக்கும் தெரியக்கூடாது ஆனால் நீங்கள் என்னை பார்க்க விருப்பப்பட்டால் என்னை வந்து பார்த்து செல்லலாம் இதுதான் என்னுடைய முடிவு" என்று கூறினாள்.


ஆனால் அவளுடைய மனது அவளிடம் ஆனால் இவர்கள் அனைவரையும் பிரிந்து இருக்க முடியுமா அது சாத்தியமான விஷயம் என்று கேள்வி கேட்டது அதற்கு அவள் நான் இவர்களுடன் இருந்தால் இவர்களுடைய மகிழ்ச்சியை எடுப்பது போலவே இருக்கும் அதனால் தூரமாக இருந்து கூட இவர்களுடைய மகிழ்ச்சியை பார்த்து வாழ்ந்துவிட்டுப் போய் விடுவேன் என்று அதை சமாதானப் படுத்தினாள்.


அவள் கூறியதைக் கேட்ட ராகவனுக்கும் ஆனந்துக்கும் கோபம் உச்சிக்கு ஏறியது. ஆனால் லக்ஷ்மணன் இருவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு ராகவனை மட்டும் வெளியே அழைத்தான். அவனுடைய சைகையை புரிந்து கொண்ட ராகவன் ஆனந்திடம் "நீ கொஞ்ச நேரம் இவளை பாத்துக்கோ நான் இப்ப வந்துடறேன்" என்று கூறினான்.


அதற்கு ரித்விகா "அண்ணா நான் இப்பொழுது பேசினது நீ யாருகிட்டேயும் சொல்ல கூடாது" என்று கூறினாள். அதற்கு அவன் பல்லை கடித்துக்கொண்டே "கண்டிப்பா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் இந்த என்னுடைய போன் நீயே வச்சுக்கோ" என்று கூறி விட்டு வெளியே வந்தான்.


வெளியே வந்த ராகவன் லட்சுமணன் மற்றும் சதீஷ் இடம் "இப்ப என்னடா பண்றது இவள் லூசு மாதிரி இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கா ஆதிக்கு தெரிஞ்சா நம்ம எல்லாரையும் கொன்னே போடுவான். உங்க தாத்தா ஏண்டா வேற வேலையே இல்லாம இப்படி ஒரு வேலை பார்த்திருக்கிறார்" என்று பொரிய ஆரம்பித்தான்.


லட்சுமணன் அவனை அமைதிப்படுத்தி விட்டு "நான் சொல்றதை கேளு நீயும் சரண்யாவும் பேபி கூட போய் தங்கியிரு ஒரு ஒரு மாசம் மட்டும் பொறுத்துக்கோ. நான் இப்பவே இங்க இருந்து கிளம்பி ஆதி அண்ணன் கிட்ட போய் எல்லாத்தையும் சொல்றேன். அண்ணே மத்த எல்லாத்தையும் பார்த்துக்குவான் இப்ப நீ அவள் கூறுவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக வேறு ஏதாவது ஒரு முடிவை தேடுவாள். அதனால் இப்போது அவள் கூறுவது போல் நீ சரண்யாவை கூட்டிக்கொண்டு அவளுடன் சென்று விடு அப்படி அவள் உங்களை அவருடன் தங்க அனுமதித்தால் மட்டுமே அவள் எடுத்த முடிவுக்கு சம்பாதிப்போம் என்று கூறு மற்றதை ஆதி அண்ணனிடம் கூறிய பிறகு பார்த்துக் கொள்ளலாம். அதேபோல் என்னுடைய தாத்தாவை ஆதி அண்ணன் சரியாக கவனிப்பான் நீ அதை நினைத்து கவலைப் படாதே" என்று கூறினான்.


ராகவன் யோசித்துப் பார்க்கும்போது லட்சுமணன் கூறியது சரி எனப்பட்டது அதனால் அவனிடம் "சரிடா நீ சொல்ற மாதிரியே செய்றேன்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.


உள்ளே சென்றவன் ரித்விகாவிடம் "நீ சொல்ற முடிவுக்கு நான் ஒத்துக்குறேன் ஆனா நாம சரண்யாவும் உன் கூட தனியா வீடு எடுத்து தங்கி இருப்போம் அதுக்கு நீ ஒத்துகிட்டா நீ சொல்றது படி எல்லாம் நான் செய்கிறேன் இல்லை என்றால் ஆதி எழுந்து வந்த பிறகு நீ அவனிடம் பேசி முடிவை எடு" என்று கூறினான்.


ஆனந்த் ராகவன் வெளியே செல்லும்போது கண்டிப்பாக இதற்கு ஒரு முடிவு எடுத்து தான் வருவான் என்பதை அறிந்து இருந்ததால் அவன் பெரிதாக எதுவும் காட்டி கொள்ளவில்லை. ரித்விகா ராகவன் கூறியதை ஒரு நிமிடம் யோசித்து பார்த்தாள். பின்பு மனதில் 'இப்போது அண்ணன் கூறுவதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக ஆதியிடம் கொண்டுபோய் நிப்பாட்டி விடுவார்கள். அதன் பிறகு நம்மால் எங்கேயும் செல்ல இயலாது' என்று எண்ணியவள்.


அவனிடம் "நீ சொல்றபடி செய்கிறேன் அண்ணா நீங்க ரெண்டு பேரும் உங்க கூட இருக்கலாம் ஆனால் நீங்கள் இருவரும் நான் தங்கி இருக்கும் இடத்தை எக்காரணம் கொண்டும் யாரிடம் கூறக்கூடாது" என்று உறுதி வாங்கினாள். வெளியே இருந்தவர்களுக்கும் உள்ளே இருந்தவர்களுக்கும் இவள் சம்மதம் கூறியதே பெரிய விஷயமாக இருக்க அப்போது தான் நிம்மதியாக உணர்ந்தனர்.


லட்சுமணன் உள்ளே இருவரையும் பார்த்து கையசைத்து விட்டு சதீசை அழைத்துக்கொண்டு ஆதி இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான். அங்கு அப்போது தான் ஆதி கண் விழித்திருந்தான். இவர்கள் வந்து சேர்ந்த நேரம் தான் ஒரு நர்ஸ் வந்து ஆதி கண்விழித்து விட்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட அஜய் ரூபன் லட்சுமணன் மற்றும் சதீஷ் உள்ளே செல்ல முயன்றனர்.


அதற்கு முன் ரூபன் லக்ஷ்மணனை பார்த்து "நீ ஏன் வந்துட்ட அங்கு என்ன நடந்தது" என்று கேட்டான். அதற்கு லட்சுமணன் நடந்த அனைத்தையும் மொத்தமாக கூறி முடித்தான். இதைக் கேட்ட அனைவரும் வருத்தம் கொள்ள ஆரம்பித்தனர். அதன் பிறகு உள்ளே சென்றவுடன் ஆதியை அனைவரும் பார்த்தனர்.


அனைவரின் முகத்தை வைத்தே ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை ஆதி புரிந்துகொண்டான். கூடவே லட்சுமணன் முகத்தை பார்த்தவன் அவன் ரித்விகாவின் பிரச்சினையை கண்டு கொண்டான் என்பதையும் அறிந்து கொண்டான். அதனால் அனைவரையும் பார்த்து "என்ன பிரச்சனை எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று கூறியவன் லக்ஷ்மணனை பார்த்து நீ ஏதோ பெருசா சொல்ல போற எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு" என்று கூறினான்.


லக்ஷ்மணன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஆதி இடம் கூறி முடித்தான். அனைத்தையும் பொறுமையாக கேட்ட ஆதி அஜய் பார்த்து "வீட்டில் இருந்தவர்களிடம் எனக்கு விபத்து நடந்துவிட்டது என்று கூறி விட்டாயா" என்று கேட்டான்.


அஜய் "ஆமா இப்ப தான் சொன்னேன் எப்படி இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க" என்று கூறினான்.


லக்ஷ்மணனை பார்த்த ஆதி "தாத்தாவை என்னை பார்க்க அனுமதி கொடுக்காத அதுமட்டுமல்லாமல் உன்னுடைய பேபி விஷயத்தில் நீ செய்தது அனைத்தும் சரியே அவளாகவே மீண்டும் நம்மிடம் வருவாள். அதற்கான வழியை நான் கூறுகிறேன் இந்த ஒரு மாதத்தில் அவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிய வேண்டும் நாம் இல்லாமல் அவளால் தனியாக இருக்க இயலாது என்பதை அவள் நன்றாக புரிந்து கொள்வாள் அதனால் நீ கவலைப்படாதே" என்று கூறினான்.


ரூபன் கேள்வியாக ஆதியை பார்த்தான் "அது எப்படிடா ரித்விகா நம்மள தேடி வருவா ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா" என்று கேட்டான். அதற்கு ஆதி "அஜித்தா வந்தவுடன் என்னை பார்க்க வர சொல் அப்பொழுது நீங்களும் உடன் வாருங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன் அதன்படி செய்தால் நிச்சயமாக அனைத்தும் சரியாக நடக்கும்" என்று கூறினான்.


பின்பு ரூபன் இடம் "இந்த விபத்திற்கு மூலகாரணம் ரிஷி மற்றும் கதிர் அவர்கள் இருக்கும் இடத்தை சீக்கிரம் கண்டுபிடித்து நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வா அவர்களை இனி விட்டுவைத்தால் நமக்குத்தான் ஆபத்து" என்று கூறினான்.


அவன் கூறியதை வைத்து ஏதோ ஒரு திட்டத்தை மிகவும் சிறப்பாக தீட்டி உள்ளான் என்று அனைவரும் புரிந்து கொண்டனர். பின்பு ரூபன் ஆதி தன்னிடம் கூறியதை யோசித்து பார்த்தவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து யாருக்கோ சில கட்டளைகளை விதித்தான்.


சரியாக அரை மணி நேரத்தில் அவர்கள் இருவரையும் பிடித்து விட்டார்கள் என்ற செய்தி அவனுக்கு கிடைத்தது. அதை அவன் மற்றவர்களிடம் கூறிக் கொண்டிருக்கும் போது ஆதியின் மொத்த குடும்பமும் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. பரத் ஆர்த்தி கீர்த்தி மற்றும் பெண்கள் அனைவரையும் உள்ளே போக அனுமதித்தான் லட்சுமணன்.


என்னுடைய தந்தை இருவரையும் பார்த்தவன் அவங்க எல்லாரும் பேசி முடிச்சிட்டு வரட்டும் அதுக்கப்புறம் நீங்க போய் பாருங்க என்று கூறினான். அதனால் அவர்களும் அமைதியாக வெளியே காத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் உள்ளே சென்று பார்த்தபோது மருந்தின் வீரியத்தால் ஆதி நல்ல உறக்கத்தில் இருந்தான். அதனால் பெண்கள் அனைவரும் அவனைப் பார்த்து மௌனமாகக் கண்ணீர் வடித்து விட்டு வெளியே வந்தனர்.


அதன் பிறகு தன்னுடைய தந்தை இருவரை மட்டுமே உள்ளே போக அனுமதித்தான் தாத்தா மற்றும் மாமா உள்ளே செல்ல நினைத்தபோது அவர்கள் இருவரையும் கைநீட்டி தடுத்து விட்டான்.இதை பெண்கள் அனைவரும் கேள்வியாக பார்க்க உள்ளே சென்ற ஆண்கள் இருவரும் கவனிக்கவில்லை அவர்களும் தன்னுடைய அருமை மகனை பார்த்துவிட்டு அவனுக்கு தற்போது எதுவும் இல்லை நன்றாக உள்ளான் என்பதை உறுதி செய்து விட்டு வெளியே வந்தனர்.


அவர்களும் வெளியே வந்த பிறகு தான் தன்னுடைய தந்தையையும் சிதம்பரத்தையும் லக்ஷ்மணன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டனர். தாத்தா மிகவும் கோபமாக "எதுக்காக என்னை உள்ளே போக விட மாட்டேங்கற எனக்கு என்னுடைய பேரனை பார்க்க வேண்டும்" என்று கூறினார்.


ஆனால் அதற்கு சிறிதும் அசராத லட்சுமணன் அவரை பார்த்து "நீங்கதான் ஏற்கனவே சொல்லிட்டீங்க உங்களுக்கு இருந்த பேரப் பிள்ளைகளில் இருவர் ஏற்கனவே இறந்து விட்டார்கள். உங்களைப் பொறுத்த வரைக்கும் நானும் என்னுடைய அண்ணனும் உங்களுடைய பேரப்பிள்ளைகள் கிடையாதே பிறகு எதற்காக என்னுடைய அண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். என்னுடைய அண்ணனின் வாழ்க்கையில் தலையிட வேண்டும்" என்று கேட்டான்.


லக்ஷ்மணன் கூறியதில் இருந்தே இவர் ஏதோ பெரிதாக செய்து உள்ளார் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் ஆனாலும் அவரைப் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது தவறு என்று நினைத்த தமயந்தி லட்சுமணனை பார்த்து "கண்ணா தாத்தா என்ன வேணா தப்பு பண்ணி இருக்கலாம் அதுக்காக இப்படி அண்ணனை பார்க்கவிடாமல் பண்ணுவியா அவருக்கு வழி விடு" என்று கூறினார்.


அதற்கு லட்சுமணன் "கண்டிப்பாக விட மாட்டேன் தேவையில்லாத நிறைய பார்த்து இருக்காரு அவரு இப்போ அண்ணனும் பேபியும் பிரிந்து இருக்காங்க இவரை அங்கிருந்து கிளம்ப சொல்லுங்க பாக்க பாக்க எனக்கு கோவம் ஏறிக்கிட்டே போகுது" என்று கூறினான்.


ஆதியும் ரித்விகாவும் பிரிந்து இருக்கிறார்கள் என்பதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள் அதற்கு காரணம் பாலகிருஷ்ணன் என்று லட்சுமணன் கூறுவதை கேட்டு இன்னும் குழப்பம் அடைந்தார்கள். அதற்குமேல் பொறுக்காத சந்திரா "ஒழுங்கா சொல்லு என்னதான் நடந்துச்சு இவங்க என்ன குழப்பம் பண்ணாங்க" என்று கேட்டார்.


லட்சுமணன் கோபமாக நடந்த அனைத்தையும் கூறினான் ஆனால் ரித்விகாவுடன் ராகவன் தங்க போவதையோ இன்னும் அவள் தங்களை விட்டு பிரிந்து செல்லவில்லை என்பதையும் கூறவில்லை அதனால் அனைவரும் ரித்விகா இவர்களை விட்டு மொத்தமாக பிரிந்து சென்றுவிட்டாள் என்று எண்ணி மிகவும் கலக்கம் அடைந்தார்கள்.


இதனால் மிகவும் கோபமடைந்த சரஸ்வதி நேராக தன்னுடைய கணவன் முன்பு நின்று "எதற்காக இப்படி செய்தீர்கள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா அநியாயமாக பிள்ளைகளின் வாழ்வை அழித்து விட்டீர்கள் உங்களுடைய வறட்டு கௌரவத்திற்காக இப்படி எல்லாமா செய்வீர்கள் நான் இதை உங்களிடம் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை" என்று கேட்டார்.


அனைவரும் தன்னை குற்றம்சாட்டுவது பொறுத்துக்கொள்ள முடியாத பாலகிருஷ்ணன் கோபமாக "ஆமா நான் தான் அந்த பொண்ணு கிட்ட போய் சொன்னேன் அந்த பொண்ணு வந்ததிலிருந்து தான் எல்லாமே பிரச்சனை எவ்வளவு சந்தோஷமா இருந்தா நம்ம குடும்பம் இப்ப எப்படி இருக்கு. அதுக்கு அந்த பொண்ணு மட்டும் தான் காரணம் அதனாலதான் அவளை பிரிந்து போக சொன்னேன். அவளும் நான் சொன்னதில் உள்ள உண்மை புரிஞ்சுகிட்டு பிரிந்து போக நினைக்கிறாள் அதனால உங்கள் எல்லாருக்கும் என்ன கஷ்டம் "என்று எதிர்கேள்வி கேட்டார்.


அதுவரை அவரை மிகவும் பெருமையாக பார்த்துக்கொண்டிருந்த குடும்பத்தினர் இன்று அவர் பேசியதை கேட்டது முதல் அவரை மிகவும் கோபமாக பார்த்தனர். மனம் பொறுக்காத தமயந்தி "ஏன் மாமா என்னோட பிள்ளைங்க என்ன தப்பு பண்ணாங்க அந்த பொண்ணு என்ன தப்பு பண்ணிச்சு நடந்த எல்லாமே உங்களுக்கு தெரியும் ஆதி எப்படி கல்யாணம் பண்ணினான் அதே மாதிரி அன்றைக்கு இலட்சுமணன் கடத்திப் போகும் போது நடந்தது எல்லா விசயமும் உங்களுக்கு தெரிஞ்ச பிறகு என்னோட பிள்ளைகளை தண்டிதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஏனென்றால் எங்களுடைய குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தார்கள் அவர்கள் குடும்பத்தோடு ஆனால் இப்போது அதற்கும் பிரச்சனை செய்தால் நாங்கள் என்னதான் செய்வது" என்று மிகவும்வருத்தமாக கேட்டார்.


அவருடைய வருத்தத்தை பிரதிபலிப்பது போல் தான் பெண்கள் அனைவரின் முகமும் இருந்தது. ஹரி கிருஷ்ணன் லட்சுமணனை பார்த்து "நீ செய்தது அத்தனையும் சரிதான் கண்டிப்பாக இதை அனைத்தும் உன்னுடைய அண்ணன் சொல்லி தான் இருப்பார் என்பதும் எனக்கு தெரியும் அதனால் நீங்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஒருபோதும் குறுக்கிட மாட்டோம்" என்று தன்னுடைய தந்தையைப் பார்த்து தெளிவாக கூறினார்.


தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னை ஒதுக்குவதை பார்த்த பாலகிருஷ்ணன் ஒரு நிமிடம் வருத்தமடைந்தார். ஆனால் மறுநிமிடமே அவருடைய ஈகோ மேலெழும்ப நீங்கள் அனைவரும் என்னை என்ன ஒதுக்குவது நான் உங்கள் அனைவரையும் ஒதுக்கி வைக்கிறேன் என்று எண்ணிக்கொண்டு அனைவரையும் கோபமாக முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் பின்னாலேயே சிதம்பரமும் அனைவரையும் முறைத்து விட்டு நகர்ந்தார்.


பெரியவர்கள் அனைவரும் எப்போதுதான் இவர் திருந்த போகிறாரோ என்ற ரீதியில் பார்த்துவிட்டு ஆதி கண்விழிக்க காத்திருக்க ஆரம்பித்தனர். மருத்துவர் வந்து அவனுக்கு பரிசோதித்துவிட்டு நாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறிவிட்டு சென்றார். லக்ஷ்மணன் பெரியவர்கள் அனைவரையும் பார்த்து "நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க நாளைக்கு வீட்டுக்கு போனபிறகு நான் சொல்றேன் எல்லாரும் அங்க வந்து பாருங்க" என்று கூறினான்.


பெரியவர்களும் மனமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். ஏனென்றால் மருத்துவமனையில் கூட்டம் கூட கூடாது என்ற உண்மை அவர்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதனால் அவர்களும் நாளை தங்கள் வீட்டிற்கு வருவதாக கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். கிளம்பும் அனைவரையும் பார்த்து நாளைக்கு நீங்க எல்லாரும் கண்டிப்பா வரணும் ஆதி உங்க எல்லார்கிட்டயும் என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னான்" என்று கூறினான்.


அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் அஜிதா வந்து சேர்ந்தாள். அவள் வரவையே அனைவரும் பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் வந்ததும் அனைவரையும் பார்த்து "என்ன நடந்துச்சு இப்படி அடிபட்டு வந்து நிக்கிறீங்க" என்று கேட்டாள்.


ரூபன் அவளிடம் "எல்லாம் ஆதி சொல்லுவான். அதனால நீ அமைதியா இரு கொஞ்ச நேரத்துல அவன் கண் விழித்து விடுவான் அதன் பிறகு உனக்கு அத்தனையும் தெளிவாக புரியும்" என்று கூறினான். அவன் கூறியதை கேட்ட அஜித்தாவும் அமைதியாக அவர்கள் அருகில் அமர்ந்து விட்டாள்.


ஆதியும் சிறிது நேரத்தில் கண் விழித்தான் கண் விழித்த விஷயம் தெரிந்த உடனே அனைவரும் உள்ளே சென்றனர். ஆதி அஜித்தா ரூபன் மற்றும் அஜய்யை பார்த்து "நீங்கள் அனைவரும் தான் ரித்விகாவை இந்த வீட்டிற்கு அவளாகவே வர வைக்க உதவி செய்யப் போகிறீர்கள்" என்று கூறினான்.


அஜிதா ஒன்றும் புரியாமல் குழம்பி கொண்டிருந்தாள் அதைப் பார்த்த ஆதி நடந்த அனைத்தையும் கூறினான் அவன் கூறி முடித்தவுடன் லட்சுமணன் வெளியே நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான் மொத்தமாக கேட்டா அஜிதா ஆதியை பார்த்து "சொல்லுங்க மாமா நான் என்ன பண்ணனும் எதுவா இருந்தாலும் சொல்லுங்க நான் செய்கிறேன்" என்று கூறினாள்.


ஆதி மூவரையும் பார்த்து "நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கூறினான். அதற்கு அஜய் "எனக்கு பொண்ணு எங்க போய் பார்ப்பாய்" என்று கேட்டான்.


லக்ஷ்மணன் "நீதான் காதலிச்சு கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்ட வீட்ல பாக்குற பொண்ணு தானே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாய். அதெல்லாம் ஏற்கனவே உனக்கு வீட்டில் ஒரு பொண்ணு பார்த்து வைத்திருக்கிறார்களாம். ஒரு வாரம் முன்னாடி தான் விஷயம் தெரிஞ்சது அந்த பொண்ண பத்திய நல்லா விசாரிச்சி முடிச்சாச்சு நல்ல பொண்ணுதான் அதனால நீ அதை பத்தி கவலை பட வேண்டாம் இப்படியாவது கல்யாணம் ஆவதை நினைத்து சந்தோஷப்படு" என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டு அஜய் லட்சுமணனை முறைக்க ஆரம்பிக்க ரூபன் ஆதி இடம் "நாங்க கல்யாணம் பண்ணினா எப்படி எல்லாம் சரியாகும் என்று சொல்லுற" என்று கேட்டான்.


ஆதியும் தன்னுடைய திட்டத்தை தெளிவாக கூறினான். அதைக் கேட்ட அனைவரும் ஆதி என் அருமை பொண்டாட்டி என் பாசத்தை எண்ணி கண்டிப்பாக இந்த திட்டம் நிறைவேறும் என்று மகிழ்ச்சி அடைந்தார்கள் ஆனால் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர்.
 
Top