• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நீயின்றி என்னாவேன் ஆருயிரே 34

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
அனைவரின் வாழ்வும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்க அஜய்க்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவனுடைய காதல் மனைவி அனிதா தேவைப்பட்டாள். திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் சேர்ந்த முடிவு செய்திருந்தது போல் காதல் வானில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தனர்.


அஜய்க்கு திருமணமான முதலே அனிதாவின் காதலின் ஆழத்தை புரிந்துகொள்ள தொடங்கியிருந்தான். தன்னை ஒரு பெண் இவ்வளவு தூரம் காதலிப்பது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவள் இப்போது அவனுடைய மனைவியாக இருப்பது கூடுதல் சந்தோஷமும் வந்தது இதன் மூலமே அவனுக்கே தெரியாமல் திருமணம் ஆன அன்றே மனதால் தன்னுடைய மனைவியை காதலிக்க தொடங்கி விட்டான்.


அனிதாவும் காலையில் எழுந்தது முதல் அவனுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வாள். அவன் வெளியே கிளம்பி சென்ற உடன் தன் அத்தை மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிப்பாள். வீட்டில் இருப்பவர்களுக்கும் அவருடைய பாசம் தெரிந்ததால் அந்த வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது சிலநேரம் ஆதியின் வீட்டிற்கும் அழைத்துச் செல்வான். அப்போது அங்கு வந்து அனைவருடனும் பேசி சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பாள். அவள் சிரிப்பதை அதை தனியாக உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்.


அதை ஒருமுறை பார்த்துவிட்ட லட்சுமணன் அஜய் இடம் சென்று "டேய் மாமா நீ ஒரு ஓல்ட் பீஸ் அப்படிங்கிற எப்பவுமே நிருபித்து கிட்டு இருக்க காதல் செய்து திருமணம் செய் என்று கூறினால் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கூறி விட்டாய் சரி உன்னை காதலிக்கும் பெண்ணை வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அவளையும் தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டு இருக்கிறாய் நீ எல்லாம் நீ எப்பொழுது வளர போகிறாயோ தெரியவில்லை" என்று கலாய்த்து தள்ளிவிட்டான்.


இப்படி இவர்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் சிதம்பரத்தை பற்றிய உண்மை அனைவருக்கும் தெரிந்தது தன்னுடைய தந்தை மோசமானவர் என்பதை அஜய் அறிந்து இருந்தாலும் கருவில் இருக்கும் சிசுவை கொல்லும் அளவிற்கு மோசமானவை என்று எண்ணவில்லை அதனால் அன்று அவன் மனம் மிகவும் சோர்ந்து போயி தான் இருந்தது. அதை புரிந்து கொண்ட அனிதா அன்று இரவு தங்களுடைய அறையில் இருக்கும் போது அவனிடம் பேசி மனதை மாற்ற முடிவு செய்தாள்.


அனிதா "ஏங்க இவ்வளவு சோகமா இருக்கீங்க மாறிவிடுவார் அத்தையின் ஒதுக்கம் மற்றும் உங்கள் இருவரின் ஆதிக்கத்தால் அவர் மிகவும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். அதனால் அவரின் வீட்டு இனி கவலைப்பட வேண்டாம் அவரால் நீ யாருக்கும் எந்தவித பாதிப்பும் வராது. அதனால அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நீங்க பழைய மாதிரி இருங்க கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்" என்று கூறினாள்.


அவள் கூறியதை கேட்ட அஜய் சிறிது சமாதானம் அடைந்தான். பின்பு அவளிடம் "உனக்கு ஏன் என்னை எவ்வளவு பிடித்திருக்கிறது உன்னுடன் பழகிய இந்த சில மாதங்களிலேயே என்னை அறியாமல் உன்னை காதலிக்க வைத்து விட்டாய் உன்னால் மட்டும் எப்படி இவ்வாறெல்லாம் இருக்க முடிகிறது" என்று கேட்டான்.


அவன் காதலிக்க வைத்து விட்டாள் என்று கூறியதை கேட்டு மகிழ்ந்து போன அனிதா அவனைப் பார்த்து எனக்கு உங்களை முதல் முதலாகப் பார்த்தபோதே பிடித்துவிட்டது அது ஏன் என்ற காரணம் எனக்கு தெரியவில்லை.
ஆனால் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அதே மாதிரி உங்களை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக என்னால் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ முடியும் என்ற எண்ணம் வந்ததில்லை மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு விதத்தில் வேறு ஒருவருடன் வாழ்வது இயலாத காரியம் என்பதால் நான் கடைசி வரை இப்படியே இருந்து இருப்பேன்" என்று கூறினாள்.


அவள் கூறியதை வைத்து அவளின் காதலின் ஆழத்தை அஜய் புரிந்து கொண்டான். இதனால் அவன் உள்ளத்திலும் காதல் பெருக ஆரம்பித்தது. இதற்குமேல் அதை மறைக்க விரும்பாமல் அவளுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்து "அனிதா எனக்கு எப்பவுமே திருமணத்திற்குப் பின்பு என்னுடைய மனைவியை ஆசை தீர காதலிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் சில சமயம் நமக்கு வரப்போகிறவள் நம்மை புரிந்து கொள்வாளா என்ற எண்ணமும் எனக்கு வந்துள்ளது. இன்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்னை புரிந்து கொண்ட அவள் என்னை காதலிக்கிறாள் என்னையும் காதலிக்க வைத்தவள் என் கண்முன்னே என் மனைவியாக இருக்கிறாள் என்ற எண்ணமே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் உன்னை நேசிக்க ஆரம்பித்து நிறைய நாட்கள் ஆகிறது இன்று நானும் என் மனதில் இருக்கும் காதலை உன்னிடம் கூறினேன் இதற்கு மேல் நாம் நம்முடைய வாழ்க்கையை மிகவும் அழகாக வாழலாம்" என்று கூறினான்.


அஜய் கூறியதைக் கேட்ட அனிதா கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. ஏனென்றால் தன்னுடைய காதல் நிறைவேறுமா அல்லது தன்னுடனே மடிந்து போய்விடுமா என்று பல நாட்கள் உள்ளுக்குள்ளேயே அழுது இருக்கிறாள். இப்போது அதெல்லாம் நிறைவேறி தன்னுடைய கணவன் தன் முன்னே இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிய அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.


அஜய்யும் அவளை அணைத்துக்கொண்டான் அன்று அவர்கள் தங்களுடைய வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்கள் அங்கே இல்லறம் நல்லறமாக வலுப்பெற்றது. அதன்பிறகு காதல் பறவைகளாக அவர்களுக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றி வந்தனர் இதெல்லாம் லட்சுமணன் காதிற்கு சென்ற போது அவன் அஜய் மற்றும் அனிதாவை கலாய்த்து ஒரு வழி செய்து விடுவான். ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொண்டதும் இல்லை இப்படி இவர்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக செல்ல ஆரம்பித்தது.


அதேபோல் ரூபன் மற்றும் அஜிதா காதல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றது. திருமணத்திற்கு முன்பு காதல் பறவைகளாக சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்பும் புதுமண தம்பதிகளாக மகிழ்ச்சியாக வலம் வந்தனர். அஜித்தாவின் தந்தை பற்றிய விஷயம் தெரிந்தவுடன் எங்கே தன்னையும் அவ்வாறு நினைத்து விடுவார்களோ என்று எண்ணி மிகவும் பயந்து போனாள். ஆனால் அதற்கு நேர் எதிராக ரூபன் மற்றும் அவர் குடும்பத்தினர் அவளை சமாதானப் படுத்தினார்கள்.


அஜிதாவின் மனநிலையை புரிந்து கொண்ட ரூபன் அவளைப் பார்த்து "கூடிய சீக்கிரம் உன்னுடைய தந்தை பிரிந்து விடுவார் அதனால் அதை நினைத்து நீ கவலைப்பட்டு உன்னை வருத்திக் கொள்ளாதே நாம் எப்போதும் போல் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருப்போம். அதேபோல் பெற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளை யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள் அதனால் அதை நினைத்து கவலைப் படாதே எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக நம்முடைய வாழ்க்கையை வாழலாம்" என்று கூறினான்.


அஜிதா ரூபனை பார்த்து மிகவும் கர்வம் கொண்டாள் ஏனென்றால் தன்னுடைய எண்ணத்தை புரிந்து கொண்டு தனக்கு விளக்கமளித்த கணவன் வாய்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம் ஆனால் தனக்கு வாய்த்திருக்கிறது என்று எண்ணி மிகவும் மகிழ்ந்து போனாள். அதனால் தனது மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தையும் அகற்றி விட்டு பழைய மாதிரி அனைத்து வேலைகளையும் ஈடுபட ஆரம்பித்தால் அதில் அதிக கவனிப்பு ரித்விகாவிற்கு தான் இருந்தது ஏனென்றால் அவள் ஒருநாள் கூட தனக்கு பிறந்த வீட்டு சார்பாக யாருமே இல்லையே என்று எண்ணி கவலைப் படக்கூடாது என்று அனைவரும் பார்த்து பார்த்து செய்தனர்.


அடுத்து வந்த நாட்களில் சதீஷ் மற்றும் அக்ஷயாவின் திருமண வேலைகள் ஆரம்பமாயின. சதீஷின் வீட்டில் சென்று பார்த்தபோது சதீஷ் அனைவரையும் பார்த்து "இவ்வளவு நாள் நான் எங்கே சென்றேன் எதற்காக சென்றேன் என்று சிறிது கூட யோசிக்காமல் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு உண்மையான பாசம் எல்லாம் என்ன என்று கூட தெரியாது அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பணம் பகட்டான வாழ்க்கை மட்டுமே. அதனால் நீங்கள் அனைவரும் எனக்கு சொந்தமாக இருந்து இந்த திருமணத்தை நடத்தி வையுங்கள்" என்று கூறினான்.


அவன் கூறியதில் அனைவருக்கும் உடன்பாடு இல்லை என்றாலும் அவனுடைய அழுத்தமான தெளிவான முடிவில் அதற்குமேல் வற்புறுத்தாமல் மணமகன் வீட்டு சார்பாக இவர்கள் அனைவருமே இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தனர். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் எதிர்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சி மட்டுமே நிலைத்திருக்க நடந்தது.


இந்த நிகழ்ச்சிகளில் ரித்விகா கலந்து கொண்டாலும் எந்தவித வேலையும் ஒருத்தரும் செய்ய விடவில்லை அதற்கு ஒரு முக்கிய காரணம் அவள் கருவில் சுமந்து கொண்டிருப்பது ஒருவரல்ல இருவர் இந்த இரட்டிப்பான மகிழ்ச்சியில் அனைவரும் அவளை இரண்டு மடங்காக தாங்கினர். அந்த அன்பின் தாக்குதலில் அவள்தான் திக்குமுக்காடி போனாள்.


ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாத ரித்விகா அனைவரையும் பொதுவாக பார்த்து "ஏன்டா எல்லாரும் உங்களோட அன்பு மழையில் இப்படி மூழ்க வைக்கிறீங்க சத்தியமா என்னால முடியல கொஞ்சநேரம் எனக்கு கொஞ்சம் கேப் குடுங்க" என்று கெஞ்சினாள் ஆனால் அதைக் கூட ஒருவரும் மதிக்க வில்லை அவர்கள் வழக்கம்போல் அவளை கவனிக்க தான் செய்தனர். ஒரு சில நேரங்களில் மேல் அவளும் இவர்களை திருத்த முடியாது என்று அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டாள்.


மருத்துவமனையில் லக்ஷ்மணன் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வந்து அவளைப் பார்த்து விட்டு செல்வான். அவன் மட்டுமல்ல மதியம் உணவு இடைவேளையில் ஆதி மற்றொன்றாக வந்துவிடுவார்கள் மற்றபடி அவர்கள் நண்பர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து அவளை பார்ப்பார்கள். இதனால் ரித்விகா எப்பொழுதும் தனிமையை உணர்ந்ததே இல்லை.


இப்படியாக மூன்று மாதங்கள் கடந்து இருந்தது இதற்கிடையே ஹரிஷ் மற்றும் தாரா திருமணமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் நல்ல முறையில் நடந்து முடிந்தது. அதுதான் கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியான செய்தியும் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அதனால் அவளையும் அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது இவ்வளவு நாள் என்னுடைய தங்கை எவ்வாறு கஷ்டப்பட்டு இருப்பாள் என்பதை உணர்ந்து கொண்டாள். அவளும் இப்படித்தானே எனக்கும் இருந்திருக்கும் ஆனால் நான் என்ன கூறினாலும் இங்கு இருக்கிறவர்கள் ஒருவர் காதிலும் அது விழாது அதனால் அமைதியாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்ற ரீதியில் பார்த்து வைத்தாள். அதனால் அவளும் அமைதியாகி விட்டாள்.


அதன்பிறகு ரித்விகாவிற்கு ஏழுஎ மாதங்கள் ஆன நிலையில் வீட்டிலேயே சிறியதாக வளைகாப்பு ஏற்பாடு செய்து மனதில் வஞ்சகமில்லாமல் நல்லெண்ணம் கொண்டவர்கள் மட்டும் அழைத்து சிறப்பாக செய்து முடித்தனர்.


அதன்பிறகு அவளை மருத்துவமனை செல்ல யாரும் அனுமதிக்கவில்லை அதனால் அவள் வீட்டிலேயே இருந்து விட்டான் அவளை எந்த வேலையிலும் பெரிதாக ஈடுபட விடாமல் நன்றாக கவனித்துக் கொண்டனர் இப்படியே நாட்கள் யாருக்கும் காத்திராமல் ரெக்கை கட்டி பறந்து சென்றது எட்டு மாதம் கடந்த நிலையில் பெரியவர்கள் சேர்ந்து அவளை சிறு சிறு வேலைகள் செய்ய வைத்தனர். அப்படி என்றால் தான் அவளுக்கு பிரசவத்தின்போது பிரச்சனைகள் இருக்காது என்று அந்த அனுபவம் வாய்ந்த பெண்கள் முடிவு செய்தனர்.


இந்த காலம் சிதம்பரத்திற்கு தான் செய்த தவறுகளை நன்றாக உணர்த்தி இருந்தது ஏனென்றால் வீட்டிலிருந்து அனைவரின் பாராமுகமும் தான் இவ்வளவு செய்தும் தன்னிடம் பேசும் அனைவரையும் பார்த்தவர் ஆரம்பித்தார் ஆனால் பெரிதாக யாரும் இல்லை அதனால் அவரும் காத்திருக்க ஆரம்பித்தார்.


ரித்விகாவிற்கு பிரசவத்திற்கான நாளும் நெருங்கியது ஆனால் யாரும் அவளை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டதால் அவளுக்கு பயம் அவ்வளவாகத் தெரியவில்லை மருத்துவர்கள் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே அவளுக்கு வலி எடுக்க ஆரம்பித்தது. இதனால் அனைவரும் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.


எதற்கும் கலங்காத ஆதி மட்டும் லட்சுமணன் அவளின் கதறலைக் கேட்டு கலங்க ஆரம்பித்தனர் ஒருவன் தன்னுடைய மனைவிக்காக யோசிக்க இன்னொருவன் தன்னுடைய குழந்தையை போல இருப்பவளை தன்னுடைய குழந்தையாகவே நினைத்து யோசித்து கலங்கினான். ஆதி லக்ஷ்மணனை பார்த்து அவனையும் உள்ளே செல்லுமாறு கூற நினைத்தான் ஆனால் அவனுடைய கலங்கிய முகமும் அவனுக்கு அவனுடைய எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்க அமைதியாக அமர்ந்து விட்டான்.


சுற்றியிருந்த யாரும் அவர்களை சமாதானப்படுத்த நினைக்க வில்லை ஏனென்றால் யார் என்ன சமாதானம் கூறினாலும் அவர்கள் இருவரும் சமாதானம் அடைய மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தனர். ஆனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தாயும் பிள்ளைகளும் நல்ல படியாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.


அனைவரின் வேண்டுதல் காரணமாகவோ அல்லது எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் தன் தந்தை மற்றும் சித்தப்பாவின் கலக்கமான முகம் காரணமாக என்று தெரியாமல் பெரிதாக கஷ்டப்படுத்தாமல் இந்த மண்ணுலகில் பிறந்தநாள் ஆதி மற்றும் ரித்விகாவின் இரட்டை புதல்வர்கள். பிள்ளைகளின் அழுகுரல் கேட்ட வெளியே இருந்த அனைவரும் கடவுளுக்கு நன்றி கூறினார்கள்.


ஆளுக்கு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தார்கள் ஊர்மிளா மற்றும் ஜானகி அவர்கள் இருவரையும் அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகமே காட்டிக் கொடுத்தது. ஆனால் அவர்கள் கையில் இருந்த குழந்தைகளை வாங்குவதற்கு ஆதி மற்றும் லக்ஷ்மணன் முன்னே சென்றனர். ஆனாலும் ரித்விகாவின் நிலைமையை அறிய அவர்கள் முகம் பதட்டமாக இருந்ததை உணர்ந்த ஊர்மிளா "அக்காவுக்கு எந்தவித பிரச்சனையும் இல்ல அவங்க நல்லா இருக்காங்க அதனால நீங்க கவலை பட வேண்டாம்" என்று அவர்களின் மனக்கவலையை போக்கினாள்.


அதன்பிறகு அனைவரும் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருந்தனர் நேரத்திலேயே ரித்விகா அறைக்கு மாற்றப்பட அனைவரும் அவனைக் காணச் சென்றனர். மயக்கத்திலிருந்து வெளியே வந்தவள் அனைவரையும் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு தன் கணவன் மற்றும் பேபி இருவரையும் அருகே அழைத்தாள். அவர்களும் கைகளில் குழந்தையுடன் அவள் அருகே சென்றனர். தன்னால் முடிந்தவரை நால்வரையும் அனைத்து கொண்டவள் "உங்கள் அனைவரையும் விட்டு எங்கும் செல்ல மாட்டேன் அப்படித்தான் நீங்கள் விட்டு விடுவீர்களா அதனால் இனி ஒரு போதும் உங்களுடைய முகத்தில் நான் கலக்கத்தை பார்க்கக்கூடாது" என்று கூறினாள்.


அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு புன்னகைக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு பழைய மகிழ்ச்சி அங்கே வந்திருந்தது அதன் பிறகு அவளுக்கு சுகப் பிரசவமாக இருந்தால் மூன்று நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு கிளம்பும்போது ஆதி ஊர்மிளாவை பார்த்து "இந்த வாரம் ஞாயிறு உனக்கு விடுமுறை தானே இதனால் வீட்டிற்கு வந்து செல்" என்று கூறினான். "கண்டிப்பாக வருகிறேன்" என்று கூறி அனைவருக்கும் விடை கொடுத்தாள்.


ஊர்மிளா இவ்வளவு நாள் எங்கே இருந்தாள் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை இதை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்று முடிவு செய்து அமைதியாக இருந்தனர்.


ரித்விகா வீட்டுக்கு வந்த நாள் ஆதியின் குடும்பத்தில் இருந்த அனைவரும் அவன் வீட்டில்தான் இருந்தனர் சிதம்பரம் மட்டும் தயங்கி வெளியே நின்று கொண்டிருந்தார் அவரைப் பார்த்த ஆதி மற்றும் ரித்திகா தங்கள் கைகளில் இருந்த குழந்தைகளை தூக்கிக்கொண்டு அவர் அருகில் சென்றனர். அவர் இருவரும் தன்னருகில் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்த மற்ற அனைவரும் இவர்கள் இருவரும் ஏதாவது செய்தால் கண்டிப்பாக அதில் காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து அமைதி காத்தனர்.


சிதம்பரம் அருகே சென்று இருவரும் அவருடைய இரு கைகளிலும் தங்களுடைய குழந்தைகளை வைத்தனர் அந்த இரு பிஞ்சுகளும் அவரைப்பார்த்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்த கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வந்தது இருவருக்கும் வலிக்காத மாதிரி நெற்றியில் முத்தம் வைத்தவர் ஆதி மற்றும் ரித்விகா கைகளில் கொடுத்தார்.


அவர்களும் குழந்தைகளை கைகளில் வாங்கிக் கொண்டு அவரையும் ஆதி ஒருகையில் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான். அவர் கண்ணீர் மல்க கைகூப்பி நினைத்தபோது அவருடைய கைகளை பிடித்துக் கொண்ட ஆதி மற்றும் லட்சுமணன் கையை கீழே இறக்கி விட்டனர். பின்பு ஆதி "நீங்கள் செய்த தவறை நீங்கள் உணர்ந்து விட்டது எங்கள் அனைவருக்கும் போதும் அதனால் இன்னும் உங்கள் மேல் தவறு இருப்பதாக நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக அனைவரும் இருப்போம்" என்று கூறினான்.


இன்னும் சகஜ நிலைமைக்கு வராததை உணர்ந்த லட்சுமணன் "மாமா ரொம்ப பீல் பண்ணாத அன்னைக்கு மட்டும் நீ அப்படி பண்ணலேன்னா உன் வீட்டு மகராசி அத்தனை பேரும் என்னை மிரட்டியே சாப்பாடு போடாமல் கொன்று இருப்பார்கள். ஆனால் நீங்கள் செய்த ஒரு காரியத்தால் நான் நிம்மதியாக எந்த வித பிரச்சனையும் இல்லாமல் இங்கு வந்து செட்டில் ஆகிவிட்டேன். அதே மாதிரி இரண்டாவது முறை நீங்கள் செய்த செயல்தான் என்னுடைய மக்கு பேபி அவளால் எங்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாள். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் அப்படி ஏதும் நீங்கள் செய்யாமல் இருந்திருந்தால் கடைசி வரை என் அண்ணன் சன்னியாசி தான்" என்று கூறினான்.


அவன் கடைசியாக கூறியதை கேட்டு கோபமடைந்த ரித்விகா குழந்தையை ஆதியின் கையில் கொடுத்துவிட்டு பிள்ளை பெற்று மூன்று நாட்கள்தான் ஆகிறது என்பதை மறந்து லட்சுமணன் அருகில் சென்று அவனைக் குனிய வைத்து மோத்தி விட்டாள். பின்பு "யாரு மக்கு நீதான் பேபி மக்கு முட்டாள் பைத்தியம் எல்லாம் நீ ஒருவன் தான் இப்படியே பேசிக்கொண்டு கடைசிவரை நீதான் சன்னியாசியாக போகப் போகிறாய்" என்று கூறினாள்.


அவள் அருகில் வந்த ராகவன் அவள் தலையில் வலிக்கும்படி ஒரு கொட்டு வைத்துவிட்டு "எப்பவுமே இப்படித்தான் ஏதாவது கிறுக்குத்தனம் செய்வாயா அங்கே பேக் உன்னுடைய கணவன் உன்னை முறைத்துக் கொண்டு இருக்கிறான்" என்று கூறினான் லக்ஷ்மணனை அடித்ததற்காக எல்லாம் ஆதி முறைக்க மாட்டான் என்பதில் அவளுக்கு நன்றாக தெரியும் ஆனால் எதற்காக இப்படி முறைக்கிறான் என்று யோசித்தவள் மூளையில் விஷயம் வெளிவர அமைதியாக தலைகுனிந்து அவன் அருகில் சென்று நின்று கொண்டாள்.


அவள் முழித்த முழியைப் பார்த்த அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். பின்பு அனைவரும் மகிழ்ச்சியாக அன்றைய நாளை கழிக்க ஆரம்பித்தார்.


இப்படியே நாட்கள் செல்ல அனைவரும் எதிர்பார்த்த நாளான ஞாயிறும் வந்தது. ஞாயிறு காலையிலேயே அனைவரும் எழுந்து அவரவர் வேலையில் பிஸியாக இருக்க காலை 10 மணி போல் ஊர்மிளா அவள் தோழி ஜானகியுடன் வந்து சேர்ந்தாள். அவளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கவே வந்தவுடன் ஆரம்பிக்க நினைக்காமல் அமைதியாக இருந்தனர்.


அப்போதுதான் எழுந்து வந்த இலட்சுமணன் சதீஷை பார்த்து "டேய் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கூடவே ஒன்னா தூங்கி எனக்கு துணையாய் இருந்த இப்பொழுதெல்லாம் நீ என்னை கண்டு கொள்வதே இல்லை" என்று அவனை கலாய்த்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தான்.


அவனை மேலிருந்து கீழாக பார்த்த சதீஷ் "கீழே உனக்கு தான் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது அதனால் கவலைப்படாதே உனக்கு திருமணம் முடிந்தவுடன் நான் உன்னுடன் தங்கிக் கொள்கிறேன் உன்னுடைய மனைவியை என் மனைவியுடன் தங்கிக்கொள்ள சொல்லலாம்" என்று கூறினான்.


தான் செய்தது தனக்கே திரும்பியதை உணர்ந்த லட்சுமணன் அசடு வழிய சிரித்துவிட்டு "சரி விடு விடு" என்று சமாளித்துவிட்டு அவனுடன் கீழே இறங்கி வந்தான்.


கீழே இறங்கி வந்த போது தான் ஊர்மிளா மற்றும் ஜானகி இருப்பதை லட்சுமணன் கவனித்தான் ஏதோ முக்கியமாக போகிறார்கள் என்பதை உணர்ந்து அவனும் ஆதியின் அருகில் அமர்ந்து கொண்டான்.


ஆதியும் ஊர்மிளாவை பார்த்து "இந்த ஒரு வருடம் நீ எங்கே இருந்தாய் இன்னும் என் தம்பியின் மேல் காதலில் இருக்கிறாயா அப்படி காதலித்துக் கொண்டு இருக்கிறாய் என்றாள் மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை நாங்கள் பார்ப்போம் அதனால் இன்றே தெளிவாக அனைத்தையும் கூறி விடு" என்று கேட்டான்.


அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று அனைவரும் அவளை ஆழமாக பார்ப்பதை புரிந்து கொண்ட ஊர்மிளா லக்ஷ்மணனை ஒரு பார்வை பார்த்துவிட்டு பதில் கூற ஆரம்பித்தாள்.
 
Top