அத்தியாயம் 7
"பிளாக்மேன் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் சாப்பிட வாங்க!"
வயலில் பூச்சி மருந்து தெளித்து கொண்டிருந்தவனை, ஹேமா கத்தி அழைக்க, அங்கு வேலை செய்த கிழடுகள் எல்லாம் இருவரையும் மாறி மாறி பார்க்க, இதை பார்த்த சிவா,
"என்ன பார்வை வேண்டி கிடக்கு? பேசாமல் வேலையை பாருங்க" என சொல்லி செல்ல, அவர்கள் முணுமுணுத்தது காதில் கேட்டாலும் கடந்து சென்றான்.
வந்தவன் கைஅலம்பி அமர, ஹேமாவும் பாத்திரங்களை பிரித்தாள்.
"ஹேமா உன் வாழ்க்கைக்கு ஒரு நல்ல முடிவு நான் எடுத்து இருக்கேன். நான் சொன்னா கேப்பியா?" சிவா பொறுமையாக கேட்டான்.
"ஹாஹா! நீங்க நல்ல முடிவு எடுக்கிறதுனா எனக்கு எதிராக எடுக்கிற முடிவா தான் இருக்கும். இது தெரியாதா எனக்கு? சரி என்னன்னு சொல்லு! முதல் தடவையா ஒன்னு சொல்லுற, கேட்க முடிஞ்சா கேட்கிறேன்" போனால் போகுது என்ற முறையில் அவர் பேச, எப்படியாவது ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் எனப் பேச ஆரம்பித்தான் சிவா.
"இரு இரு! முதல்ல சாப்பிட்டுக்கோ. அப்புறம் என்வாய் சும்மா இருக்காமல் ஏதாவது சொல்லி நீ பாட்டுக்கு கோபப்பட்டு சாப்பிடாமல் போயிட்டன்னா?" எதற்கும் முன் ஜாக்கிரதையாய் இருந்தாள் ஹேமா.
"எனக்கு கோபம் எல்லாம் வராது ஹேமா. அதுலயும் கோபத்தை சாப்பாட்டில் காட்டவே மாட்டேன்"
"ஆஹான்! சரி எதுக்கும் முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம். அப்போதான் எனக்கும் உன்கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்" அவள் பிடியிலேயே நின்றாள்.
இதற்கு மேல் அவளிடம் வாயாட முடியாமல் அவனும் சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை மொபைலை நோண்டி கொண்டும், அவன் சாப்பிடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹ்ம்ம் இப்ப சொல்லு" எனக் கைகழுவி வந்தவனிடம் சொல்ல,
"இல்ல இன்னும் ஆறு மாசத்துக்கு நீ சென்னை போகணும்னு சொன்னல்ல.." எப்படியாவது அவள் ஒத்துக் கொள்ள வேண்டும் என தயங்கி தயங்கி யோசித்து யோசித்து பேசினான்.
"ஆமா அதுக்கென்ன?"
"எப்படியும் அப்ப என்ன பார்க்க முடியாது....."
"ஏன் முடியாது? இதோ பாரு" என அவள் போனை எடுத்து காட்ட, அதில் விதவிதமாய் அவன் கல்யாண வேலைகளில் ஈடுபடுவது, தோட்டத்தில் வேலை பார்ப்பது, வீட்டில் சமைப்பது என நிறைய போட்டோக்கள்.
"அடப்பாவி! உன்ன பச்சப்புள்ள, ஏதோ குறும்புத்தனம் பண்ற, கொஞ்சம் வாய் பேசுவ, இப்படி எல்லாம் நான் நினைச்சிட்டுருந்தா கிரிமினல் ரேஞ்சுக்கு வேலை பார்த்து வச்சிருக்க?" ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு விதமாய் அவன் வேலை செய்யும்போதோ, ஏதோ ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது அவனுக்கே தெரியாமல் எடுத்திருந்திருக்கிறாள் ஹேமா.
"நான் பச்சபுள்ளனு உங்ககிட்ட சொன்னேனா?" எனக் கேட்டவள் "சரி அதை விடு! நீ சொல்ல வந்த மேட்டரை முதல்ல சொல்லு" என்றாள் மொபைலை பிடுங்கியபடியே.
இப்பொழுதே கண்ணை கட்டியது சிவாவிற்கு.
"சரி இதெல்லாம் விடு. நீ சென்னை போற இந்த ஆறு மாசமும் என்கிட்ட பேச கூடாது.. என்னை பார்க்க வரக்கூடாது.. நீ லீவுன்னு ஊருக்கு வந்தா கூட, என்னை பார்க்க வர கூடாது. இப்படி எல்லாம் செஞ்சின்னா கண்டிப்பா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன். இது என்மேல சத்தியம்" அதிரடியாய் ஆஃபர் ஒன்றை அறிவித்தான் சிவா.
அவன் சொல்லி முடித்ததும் வாய் மூடாமல் சிரித்தாள் ஹேமா.
"வாவ்! பிளாக்மேன் நீ படம் பார்க்க மாட்டேன்னு சுஜி சொன்னா! நீ பழைய படம் எல்லா ரொம்ப பார்ப்ப போலயே?"
"என்ன சொல்ற? எனக்கு புரியல?"
"ஹான்! அஸ்குபுஸ்கு ஆசை தோசைனு சொல்றேன். இவர் பெரிய தவசி அய்யா சொன்ன சொல் மாறமாட்டாரு. போயா வேலைய பாத்துட்டு. வந்துட்டாரு தள்ளுபடி தர்றதற்கு"
உடனே சரியென சொல்லா விட்டாலும் யோசிக்கவாவது செய்வாள். பார்க்காமல் பேசாமல் இருந்தால் எதுவும் மாறலாம் என நினைத்திருந்தான் சிவா. ஆனால் அவளின் இப்படி ஒரு பதிலில் விழிபிதுங்கி நின்றான்.
"ஆமா உன் விருப்பம் இருந்தா தான் நம்ம கல்யாணம் நடக்கும்னு நீ நெனச்சிட்டு இருக்கியா? என்னையா நீ இன்னும் புரியாத ஆளா இருக்க? ஏதோ என் படிப்புக்காக தான் நம்ம கல்யாணத்தை தள்ளிப் போட்டு இருக்கேன். ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணு! வந்து நம்ம கல்யாணத்தை நான் எப்படி நடத்துறேன்னு மட்டும் பாரு. ஆனா அதுவரைக்கும் என்னை பார்க்காத, பேசாதனு எல்லாம் நீ சொல்லக் கூடாது. அதெல்லாம் நான்தான் முடிவு பண்ணனும். நீ சொன்னாலும் சொல்லாட்டியும், நீ நினைச்சாலும் நினைக்காட்டியும், உன் கல்யாணம் என்னோடதான்னு அந்த கடவுள் எழுதிட்டான் சரியா! சும்மா இதையே போட்டு நினைச்சுட்டு இருக்காம போய் வேலையை பாரு!" என்றவள் நிற்காமல் சென்றாள். சிவா தலைசுற்ற அங்கேயே அமர்ந்தான்.
அப்போதும் சென்றவள் திரும்ப வந்து, "மறந்துட்டேன் பாரு! நேத்து அண்ணாகிட்ட என் லவ்வ சொல்லிட்டேன்".
"ஏய்! என்ன சொல்ற? அர்ஜுன் என்ன சொன்னாரு? உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? நான் நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ ஊரு முழுக்க தம்பட்டம் போடுற?"
"அய்யோ கத்தாத பாஸ். நான் ஒன்னும் உன்னை பத்தி எதுவும் சொல்லல. நீ தான் என்னை கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே. ஒரு அண்ணனா நான் யாரை விரும்புறேன்னு அவனுக்கு தெரியணும். அதான் என்னோட லவ்வை சொன்னன். ஆனால் இன்னும் ரியாக்ஷன் வர்ல. உன்கிட்ட கேட்டா நீயே பேசிக்கோ"
"ஹேமா என்ன பண்ற நீ? அர்ஜுன் என்னை என்ன நினைப்பாரு? கடவுளே!"
"அதான் சொல்றேனே பிளாக்மேன்! நான் என்னோட லவ்வை மட்டும் தான் சொன்னேன். நீ கவலைபடாத! கோபம் வராதுனு சொல்லிட்டு இப்படி கோபப்படாத.. கூலா இரு ஓகே" என்றவள் வந்த வழி திரும்பி நடக்க, சிவா தன் தலையில் ஓங்கி அடித்து கொள்வதை தவிர என்ன செய்ய?.
உடனே சுஜியை அழைத்து அர்ஜுனிடம் ஹேமா ஏதோ சொல்லியதாக கூறவும், சுஜியும் தனக்கு தெரிந்த விபரங்களை அண்ணனுக்கு கூறினாள்.
மேலும் அவள் படிப்பு முடியும்வரை அர்ஜுன் எதுவும் சொல்லப் போவதில்லை எனவும் கூற சிவாவும்
அதையே நல்லது என எடுத்துக் கொண்டான்
அடுத்தடுத்து வந்த நாட்களிலும் இதே போலவே மதியம் ஹேமா சாப்பாடு எடுத்துக் கொண்டு வர, அவள் பேசிக் கொண்டே இருப்பதும் இவன் அமைதியாக இருப்பதும் வாடிக்கையாய் போனது.
"அண்ணி! சுஜி! சுஜி அண்ணி!" வீடு முழுதும் ஹேமா கத்த,
"அவளை காலையிலே உன் அண்ணா வெளில கூட்டிட்டு போய்ட்டான் டி. நீ ஏன் கத்திட்டு இருக்க?" ரேகா.
"என்னம்மா! நான் ஒருத்தி இருக்கேன். என்னை விட்டுட்டு எங்க ஊர் சுத்த போச்சுதுங்க ரெண்டும்?"
"ஆமாண்டி! புதுசா கல்யாணம் ஆன பொண்ணு, நீயும் வான்னு நாத்தனாரை கூட்டிட்டு தான் போவா பாரு. நாளைக்கு உனக்கு கல்யாணமானா தெரியும் உன் நாத்தனாரை என்ன பாடுபடுத்துவனு"
"அம்மா தாயே! தெரியாம கேட்டுட்டேன். நான் நாளை மறுநாள் சென்னை போகணும் ஞாபகம் இருக்கா இல்லையா? அண்ணி கூட ஷாப்பிங் போலாம்னு நினச்சேன். இப்ப நான் தனியா எப்படி போறது?"
"ஆமாம் இவ தனியா எங்கேயும் போனதில்ல பாரு. போய்ட்டு வாடின்னா.. ரொம்பத்தான்"
"ஷாப்பிங்கு யாராவது கம்பெனி குடுத்தா தான் மா நல்லாருக்கும். நாளைக்கு போலாம்னா எனக்கு பேக்கிங் வேலை இருக்கே!"
"அத்த! அத்த!"
"வா சிவா! நானே உன்னை கூப்பிட்டு விடணும்னு நினச்சேன். ஹேமா! சிவாக்கு குடிக்க எதாவது கொண்டு வா. ஆமா! ஏதோ அக்கௌன்ட்ல பணம் போட்டு விட்டியாமே? மாமா சொன்னாங்க. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?"
"என்னங்க அத்த! கல்யாண செலவு எல்லாமே நீங்களே பாத்துட்டிங்க. நானும் சுஜிக்கு எதாவது செய்யணும் இல்ல? சுஜிக்கு நகை போட்டுக்குறது ரொம்ப பிடிக்கும். அதான் நீயே நல்லா பார்த்து வாங்கிக்கோனு சொல்லி பணம் போட்டு விட்டேன். எப்படினாலும் செய்ய வேண்டியது தானே அத்த!"
"ஆமா ஆமா! அர்ஜுன் எதுவும் வாங்கி கொடுக்க மாட்டான் பாரு உன் தங்கச்சிக்கு"
"அப்படிலாம் இல்ல அத்த! ஆமா சுஜி எங்க?" கேட்டவன் ஹேமா கொடுத்த காபியை வாங்கி குடித்தான்.
"காலையில வெளில போய்ட்டு வரோம்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் வர்ல"
"ஓஹ் சரி அத்த! மாப்ள சுஜி ஸ்கூல் செர்டிபிகேட்ட எல்லாம் கேட்டாங்க. அதான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்" என்றவன் அதை ரேகாவிடம் கொடுக்க, அவரும் வாங்கி வைத்து கொண்டார்.
"சரிங்க அத்த! நான் வர்றேன்" என்றவன் எழுந்து கொள்ள,
"அட இரு சிவா! சாப்பிட்டு மெதுவாபோலாம். எப்பவும் பாக்குற வயல் தான?"
"இல்ல அத்த! உரம் வாங்க வெளில போறேன்" என சொல்ல, இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்த ஹேமா வழியை கண்டுபிடித்தாள்.
"ம்மா! நான் இவங்களோட போய்ட்டு வரவா? இனி அண்ணி எப்ப வந்து நான் எப்பபோறது?"
"அதுவும் சரிதான். சிவா இந்தா இவ ஏதோ வாங்கணுமாம் கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு போய்ட்டு வந்துடேன். நீயும் அங்கே தானபோற?"
ரேகா சொல்லை தட்ட முடியாமல் அவருக்கு தெரியாமல் ஹேமாவை முறைத்தவன் "சரி அத்த!" என்றதும்,
அவன் பொறுமையை கொஞ்சம் சோதித்து அரைமணி நேரம் கழித்தே கிளம்பி வந்தாள் அவள். இருவரும் வெளியே வரவும் அர்ஜுனின் கார் வந்து நின்றது.
"அண்ணா எப்ப வந்தே?" சுஜி விசாரிக்க ஆரம்பிக்க,
'போச்சு போச்சு! நாம பிளாக்கிய வெறுப்பேத்த லேட்டா கிளம்பினா, உள்ளதும் போயிடும் போலயே?' என தன்னையே நொந்து கொண்டாள் ஹேமா.
அர்ஜுன் சுஜி இருவரும் சிவாவிடம் விசாரித்துக் கொண்டிருக்க "அது சரி! இவ்வளவு காலையில நீங்க எங்க போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டான் சிவா.
"இல்ல மாமா, அன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன் இல்ல! அதான் சுஜியை படிக்க வைக்கிறது பத்தி. அதுக்கு தான் ஒரு காலேஜ்ல போயி அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்தோம்" என அர்ஜுன் கூற,
"ஓஹ் ஆமா மாப்ள. ரொம்ப சந்தோசம். அதுக்குத் தான் சுஜியோட சர்டிபிகேட் எல்லாம் கேட்டீங்களா? அது தர்றதுக்கு தான் வந்தேன்" என பேசிக் கொண்டிருக்க பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள் ஹேமா.
"சரி மாப்பிள்ளை, அப்ப நான் கிளம்புறேன். இன்னொரு நாள் வரேன். உரம் வாங்க வெளிய போக வேண்டி இருக்கு. அப்புறம் ஹேமா எங்கேயோ போனுமாம். நீங்க கூட்டிட்டு போயிட்டு வந்துடுங்க. நீங்க வெளியில போய் இருக்கிறதுனால அத்தை என் கூட அனுப்பி வச்சாங்க. அதான் இப்ப வந்துட்டீங்கல்ல" என சொல்ல சுஜியும் அர்ஜுனும் ஹேமாவை பார்த்தனர்.
ஹேமாவின் முகத்தை பார்த்த அர்ஜுன், "மாமா உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா ஹேமாவ கூட்டிட்டு போயிட்டு வந்துட முடியுமா? ஏன்னா நானும் சுஜியும் இந்த அப்ளிகேஷன் விஷயமா இன்னொருத்தர பார்க்க போக வேண்டியிருக்கு"
அர்ஜுனின் வார்த்தைகளில் ஹேமா முகம் பூவாய் மலர, சிவாவும் சரி என அழைத்துக் கொண்டு அவளுக்கு துணையாய் சென்றான்.
நேசம் தொடரும்..