• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,390
440
113
Tirupur
அத்தியாயம்-- 4


நடுஜாமத்தில் மலர்விழிக்கு நினைவு வர யாரோ தன்னை அழுத்தி கொண்டிருப்பது போல உணர்ந்தவள் பெண்மைக்கே உரிய முன்னெச்சரிக்கை உணர்வோடு வேகமாக நகர முயன்றாள்.ஆனால் அது முடியாமல் போக அவள் உடல் அசைவுரும்போது வெப்பமான மூச்சு காற்று அவள் முகத்தில் பட்டு செல்ல ..... அந்த கதகதப்பு அவளுக்கு ஒருவித இன்ப உணர்வை கொடுத்தது. சட்டென தலையை உயர்த்தி பார்த்தவள் தலையினையில் படுக்க முடியாமல் கையை தலையணையாக மாற்றி அவள் கணவன் உறங்கி கொண்டிருக்க இவளோ அவன் நெஞ்சத்தை மஞ்சமாக கொண்டு அவனது அருகில் சுகமாக உறங்கியது இப்பொழுது மெல்ல புரிந்தது.

வெட்கம் மேலிட வேகமாக எழ முற்பட்டாள். ஆனால் தேக்கு போன்ற அவனின் கைகள் முல்லை கொடி போன்ற அவள் இடுப்பை சுற்றி வளைத்திருக்க..... செய்வதறியாது திகைத்து போனாள்.. காதல் கொண்ட மனமோ அந்த சுகத்தை வேண்டி அவளை எழ விடாமல் செய்ய.... ஆனால் அவன் மனம் அறிந்த பின்பே இல்லறம் என்பதில் உறுதியாக இருந்த அறிவோ அவளை நகர்வதற்கு உசுப்பிவிட தடுமாறிபோனால் அந்த பேதை. அந்த இரவு முழுவதும் அவனது வளைவுக்குள் அவள் இருக்க விடிகாலையில் தான் கண் அசந்தாள் அந்த மான் விழியாள்.

எப்போதும் போல் அதிகாலையிலே கண் விழித்த மாதேஷ் இன்னும் தன் அருகில் மலர்விழி இருப்பதை பார்த்தவன் “இன்னுமா மயக்கம் தெளியலை” என்ற படி அவளை சற்று நகர்த்த அவளோ உருண்டு சென்று கீழே விழுந்தாள்.

“ஹேய்ய்ய்ய் ஹேய் எங்க போற” என அவள் உருளும்போது அவன் கத்த

அந்த சத்தத்தில் கண்விழிக்கவும் மெத்தையில் இருந்து கீழே விழவும் சரியாக இருந்தது. “ஐயோ அம்மாஆஅ” என அவள் அலற

அதற்குள் கட்டிலில் இருந்து எழுந்து வேகமாக அவள் அருகில் வந்தவன் “ஹே ஹே உஸ்ஸ்ஸ்ஸ் கத்தாத ,,,இப்போ எதுக்கு சத்தம் போட்டு ஊற கூப்பிட்ற” என அவள் வாயை பொத்தினான்..

அவளோ அவனை முறைத்து பார்த்தபடி “ என்னை உருட்டி விட்டதும் இல்லாம ஏன் கத்தறனு கேட்கறிங்க” என இடுப்பு, காலில் எல்லாம் வலி ஏற்பட அந்த வேகத்தில் கோபமாக கேட்கவும்

அவனோ “ஹே நான் எங்கடி உன்னை உருட்டி விட்டேன்.....தள்ளுனு சொன்னேன்...நீ என்னடானா கடகடன்னு உருண்டு ஓடற என சிரித்து கொண்டே சொன்னவன், ஒருவேளை போன ஜென்மத்துல ரோடு ரோலரா பிறந்து இருப்பியோ...அதே மாதிரியே உருள்ற.....ஹஹஹா என்ன வேகம்...... என்ன வேகம்.........” என அவன் கிண்டலாக பேசிகொண்டிருக்க

வலியால் அவள் துடித்து கொண்டு நிற்க இவனோ அதை கண்டு கொள்ளாமல் கேலி பேசவும் அவனை முறைத்து கொண்டே நின்றவள் “என்னையா ரோடுரோலர்னு சொல்ற இருடி” என மனசுக்குள் சொல்லிகொண்டே அவன் அசந்த நேரமாக அந்த பக்கம் திரும்பும்போது அவன் முதுகில் கை வைத்து கட்டிலில் தள்ளி விட்டு வேகமாக அங்கிருந்து ஓடினாள் மலர்.

எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி “ஐயோஓஓ !!!!! என அலறியவன் ராட்சஸி பழி வாங்கிட்டாளே” என கத்தியபடியே அவன் மெத்தையில் குப்புற கிடக்க

அறைக்குள் இருந்து மின்னல் வேகத்தில் வெளியில் வந்த மலரால் அதற்கு மேல் சில அடிகள் கூட எடுத்து வைக்க முடியவில்லை. கீழே விழுந்ததில் கால் சுளுக்கி கொள்ள மெதுவாக நடந்து வந்தாள் .

அப்போது “இந்த பால்காரர் எங்க இன்னும் காணோம் என்ற படி சமையல் அறையில் இருந்து வெளிவந்த மீனா எதிரில்... இரவு படுத்திருந்ததில் இப்போது கீழே விழுந்ததில் என புடவை கசங்கி தலைமுடி கலைந்து கிடக்க பதினாறு வயதினிலே சப்பாணி போல் ஒரு காலில் கை ஊனியபடி மலர் நடந்து வர

“ஐயோ மலரு என்னாச்சுடி இப்படி வர” என பதறி கேட்கவும்

அந்த சத்ததை கேட்டு வெளியில் வந்த மலரின் மாமியார் வலி தாங்காமல் அவள் முகத்தை சுருக்கியபடி நின்ற கோலத்தை பார்த்தவர் மனதிற்குள் ஏதோ கற்பனை செய்து கொண்டு நமட்டு சிரிப்புடன் “சரி சரி போய் குளிச்சுட்டு சாமிக்கு விளக்கு ஏத்து” என்றார்.

மலரோ அவரின் முக பாவனையில் சற்று குழம்பி நிற்க

அதற்குள் மீனாட்சி வேகமாக “அத்தை இவ என்னமோ கால் சண்டி சண்டி வந்து நிற்கிறா...நீங்க அதை கண்டுக்காம போய் குளிச்சிட்டு விளக்கு ஏத்துன்னு சொல்றிங்க” என்றவள் மலரிடம் திரும்பி ...”முதல்ல நீ இங்க உட்கார் என்னனு பார்க்கலாம்” என்றாள்.

மலரோ “அக்கா அது வந்து..... வந்து......” என எப்படி சொல்வது என யோசிக்க

அதற்குள் “ஏய் அறிவுகெட்டவளே கல்யாணம் ஆகி ஆறுவருஷம் ஆகிடுச்சு...ஒரு புள்ளைய வேற பெத்திட்டா ...எப்பதான் நீ தெளிவாக போறியோ “ என அவளை திட்டியவர் ... மலரை பார்த்து “நீ என்ன இன்னும் நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்க...சொன்னது காது கேட்கலையா ....போ போய் குளிச்சிட்டு ரெடியாகு” என அவளை விரட்டினார்.

மாமியார் அதட்டல் போட்டதும் கால்களை இழுத்துகொண்டே மலர் குளியல் அறை நோக்கி நடந்தாள்.

“இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இந்த அத்தை என்னைஇப்படி திட்றாங்க....... இந்த வீட்ல எல்லாருக்கும் இலப்பமானவ நான் தான்......மாமியார்னா அதட்டிகிட்டே இருக்கணும்னு ஏதாவது சொல்லி வச்சிருக்காங்களா என்ன?” என புலம்பிகொண்டே தங்களது அறைக்குள் வந்தாள் மீனா.

“என்னடி மீனு செல்லம்....... காலையிலே குஷி மூட்ல இருப்ப போல...பாட்டு எல்லாம் பாடிகிட்டே வர” என குளியல் அறையில் ஷேவ் செய்து கொண்டே மோகன் கேட்கவும்

அவளோ திரும்பி அவனை கோபமாக ஒரு பார்வை பார்க்க

அவனோ அதை சரியாக கவனிக்காமல் “நேத்து ராத்திரி அம்மா ....தூக்கம் போச்சுடி ஹம்மா .... என பாட்டு பாடியவன் எப்படி என் பாட்டு” என கண்ணாடியை பார்த்துகொண்டு அவன் கேட்க

அவளோ கோபத்தில் பற்களை கடித்தபடி “ம்ம்ம் சகிக்களை” என எரிச்சளுடன் சொல்லவும்

அப்போது தான் அவளை கவனித்தவன் “என்னாச்சுடி செல்லம்...கோபமா இருக்க போல.....என சாதரணமாக கேட்டான்.

அதற்கு ஏதும் பேசாமல் உர்ர்ர்ன்று முகத்தை வைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் மீனா..

“என்னாச்சுன்னு கேட்கிறேன்ல......பேசமாட்டேன்கிற” என அவன் மீண்டும் கேட்க

“ம்ம்ம் ஒன்னும் ஆகலை........நான்தான் அறிவுகெட்டவளாச்சே...உங்க குடும்பம் தான் அறிவை மொத்தமா குத்தகைக்கு எடுத்து இருக்கீங்க..... எல்லாம் தெரியும்.....எனக்கு ஒண்ணும் தெரியாது” என சம்பந்தம் இல்லாமல் அவள் பேசவும்

“என்னடா இது சொன்னத சொல்லும் கிளிபிள்ளை ...இன்னைக்கு சொந்தமா டயலாக் எல்லாம் பேசுது” என்றவரே பாதி ஷேவிங் லோசஷடன் அவள் அருகில் வந்தவன்

“என் செல்லக்கிளிக்கு என் மேல் என்னடி கோபம்” என பாடிய படியே அவள் நுனிமூக்கில் ஷேவ் லோஷனை தடவியபடி அவன் கேட்கவும்

“நீங்க ஒன்னும் எனக்கு சோப்பு போடவேண்டாம்......என்கிட்டே பேசாதீங்க” என கோபத்தில் திரும்பி நின்றாள் மீனா.. 1

அவன் நெருங்கி வந்தாலே உருகிவிடும் காதல் மனைவி இன்று சற்று திமிரவும் எதோ நடந்திருகிறது என புரிந்து கொண்ட மோகன் கேலி பேச்சை நிறுத்தி விட்டு அவளை தன் பக்கம் திருப்பி “என்ன மீனு.......என்ன நடந்திச்சு” என பொறுமையாக கேட்டான்.

அவனது பேச்சின் மாற்றத்தை அவளும் புரிந்து கொண்டு நடந்தை விளக்கினாள். “இல்லைங்க நான் பால்காரன் வரலைன்னு பார்க்க போனனா...அப்போ நம்ம மலரு கால நொண்டியபடி எதிர்ல வந்தா.....என்னடி ஆச்சுன்னு கேட்டேன்.....வா நான் ஆயில்மென்ட் போட்டு விடறேன்னு சொன்னேன்....உடனே உங்க அம்மா அங்க வந்து அவளை ஒரு நிமிஷம் பார்த்திட்டு சிரிச்சுகிட்டே நீ போய் குளின்னு அவளை துரத்தினாங்க” என சொல்லி நிறுத்தவும்ம்

“ம்ம்ம் அப்புறம் என அவன் கேட்க

“நான் உடனே வா உனக்கு ஆயில்மென்ட் போட்டு விடறேன் அப்புறம் போய் குளிக்கலாம்னு சொன்னேன் ...உடனே அவங்க உனக்கு அறிவிருக்கா.....ஒரு புள்ளைய வேற பெத்திட்டா இன்னும் தெளிவு இல்லைனு திட்டிட்டாங்க” என பெரிய குற்ற பத்திரிகை வாசித்து நீங்களே சொல்லுங்க......நான் என்ன கேட்டேன் ஆயில்மென்ட் போட்டு விடவானுதான் கேட்டேன்...அதுக்கு போய் இப்படி எல்லாம் பேசறாங்க...அதும் என் தங்கச்சி முன்னாடியே.... அவ என்னை பத்தி என்ன நினைப்பா.......எனக்கு எவ்ளோ அவமானமா போச்சு தெரியுமா?” என கோபமும் ஆத்திரமுமாக அவனிடம் நியாயம் கேட்டாள் மீனாட்சி..

அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டவன் பின்னர் “ஓ இப்போ எங்க அம்மா திட்டினது உனக்கு கோபம் இல்லை... உன் தங்கச்சி முன்னாடி திட்டிடாங்கலே அப்படிங்கிற கோபமா” என அவளின் மன ஓட்டத்தை சரியாக பிடித்தான் அவளின் காதல் கணவன் .

“ம்ம்ம் அது வந்து...வந்து என தடுமாறியவள் இரண்டும் தான்.....நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு... நான் இங்க ஆறு வருஷமா இருக்கேன்...... நேத்து வந்தவ முன்னாடி உங்க அம்மா மாமியார் புத்திய காட்டணுமா” என அவனிடம் சீற

“ சரி...சரி....கோபபடாத .....அம்மா உன்னை திட்றது உனக்கு புதுசா என்ன” என்றவன் சட்டேன மோகன் முகம் பிரகாசம் ஆக “அட மக்கு மக்கு.... அம்மா எதுக்காக அப்படி சொல்லி இருக்காங்கனா” என சொல்ல வந்தவன் சட்டென அருகில் உறங்கி கொண்டிருக்கும் தன மகளை பார்த்தவன் எப்படி சொல்வது என தெரியாமல் திரு திருவென முழிக்க ...... பின்னர் அவள் அருகில் குனிந்து காதில் முணுமுணுக்கவும் அதை கேட்டதும் மீனாட்சி முகம் வெட்கத்தில் சிவக்க “அச்சோ என்னங்க நீங்க” என்றபடி அவனை தள்ளிவிட்டு வெளியில் ஓடினாள்..

மீனாட்சி சென்ற பின் மீண்டும் ஷேவ் பண்ண கண்ணாடி முன் நின்றவன், திடீரென தலைக்கு மேலே பல்பு எரிய “ம்ம்ம் கட்டதுரைக்கே இந்த நிலைமைன்னா அப்போ கைபுள்ள நிலைமை” என நினைத்தவன் “ஆஹா மோகன் செத்தாண்டா சேகரு.......விடாத அமுக்கு” என சொல்லியபடி பாதி ஷேவ் செய்ததோடு மாதேஷின் அறையை நோக்கி ஓடினான்.

“அடிபாவி இப்படி தள்ளிவிட்டு போய்ட்டா..... பார்க்கிறதுக்கு சாதுவா இருக்கானு நினைச்சேன் ...அவளுக்குள்ள இப்படி ஒரு சேது ஒளிஞ்சிருக்கானு தெரியாம போய்டுச்சே....அச்சோ அம்மாஆஅ” என புலம்பியபடி தலைகுப்பிற கிடந்தவன் நிமிர்ந்து படுக்கவும், அவன் தலை முகட்டில் மோகன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“முட்டைகண்ணி இப்படி தள்ளிவிட்டு போயிட்டாளே” என சொல்லிகொண்டே கண்களை உயர்த்தி பார்த்தவன் பாதி ஷேவுடன் மோகனை பார்த்ததும் “டேய் அண்ணா” என வேகமாக எழ முயன்று தலையணை நகர்ந்து விட மீண்டும் அவன் மெத்தையில் சாய்ந்தான்.

“அச்சோ மெதுவா..மெதுவா “என்றபடி அவன் அருகில் சென்று அமர்ந்த மோகன் “டேய் டேய் என்னடா இது......நினைச்சதவிட சேதாரம் அதிகமா இருக்கும் போலவே” என வருத்தபடுவது போல சொல்லவும்

திடிரென்று வந்து மோகன் இப்படி பேச.... புரியாத மாதேஷ் “டேய் அண்ணா என்னடா சொல்ற நீ...நானே இங்க வலியில கஷ்டபட்டுகிட்டு இருக்கேன்...நீ என்னடா உளற “ என வழியில் முகத்தை சுளித்தபடி கேட்டான்.

“என்னடா தம்பி ஒரே நாள்ல இப்படியா.......இத நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லடா.....எங்ககிட்ட ஒப்பாரி வச்சிட்டு இங்க வந்து கச்சேரி பண்ணிருக்க நீ.....பாவம்டா அது சின்ன பொண்ணு.......இப்படிதான் நடந்துகுவியா” என மோகன் குரலில் கோபமும் உதட்டில் நக்கலான சிரிப்புடன் கேட்க

அது புரியாத மாதேஷ் “தான் உருட்டி விட்டதாக இவள் போய் சொல்லி இருப்பாளோ” என நினைத்தவாறு “டேய் அண்ணா அவ தான் இப்படின்னு” என சொல்ல வர

“சரி சரி போதும்...நீ ஒண்ணும் அதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம்..... இப்பதான் உன் பொண்டாட்டிய பார்த்திட்டு வரேன்.......கட்டதுரைக்கே அந்த நிலைமை இருக்கும்போது கைபிள்ளையான உன் நிலைமை.....ம்ம்ம் அதான் உன்னை பார்த்தாலே தெரியதே...இத வேற நீ சொல்லி நான் கேட்கணுமா..... ஹஹஹஹா வென “ மேகன் அவனை பேச விடாமல் இவனாக பேசிகொண்டிருந்தான்.

“ மலர் ஏதோ இவங்க கிட்ட என்னை பத்தி தப்பா உளறி இருக்கிறாள்” என நினைத்த மாதேஷ்...”அடியேஏஏஏஏ உன்னை “..... என மனசுக்குள் கருவி கொண்டிருக்கும்போது

“மாதேஷ் இன்னும் என்ன பண்ற.....கிளம்பியாச்சா “ என்ற தந்தையின் குரலில் இரண்டு தமையன்களும் இருந்த இடத்தில இருந்து சிட்டாக பறந்தனர். ஆம் மாதேஷின் தந்தைக்கு பிள்ளைகள் அனைவருமே பயபடுவார்கள். அதுவும் மோகன் அவர் முகம் பார்த்தே பேசா மாட்டன்.ஆனால் அவருடன் கடையில் அவன் தான் இருப்பான். அவர் எது சொன்னாலும் தலையாட்டல் மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக வரும்.தந்தையோடு ஓரளவு சமமாக அமர்ந்து பேச கூடிய ஒரு ஆள் மாதேஷ் மட்டும் தான்.அதுவும் அவன் படித்து நல்ல வேலையில் அமர்ந்த பின் அவனுக்கு வெளியுலகம் தெரியும் என்பதால் அவனிடம் கலந்து ஆலோசிப்பார் அவனின் தந்தை.. 2

முதல் நாள் தான் திருமணம் முடிந்தது என்பதால் உறவினர்கள் ஒரு சிலர் வீட்டில் இருந்தனர். மாதேஷ் கிளம்பி அறையில் இருந்து வெளியில் வரவும் அதை எதிர்பார்த்தார் போல் இளமஞ்சள் நிறத்தில் பனாரஸ் பட்டுடுத்தி எளிமையான அலங்காரோதொடு அவன் எதிரில் வந்து நின்றாள் மலர்விழி. “என்னங்க இது நல்லா இருக்கா” என ஆவலுடன் கேட்க அவனோ நிமிர்ந்தும் கூட பார்க்காமல் வராண்டாவில் அமர்ந்திருக்கும் உறவினர்களுக்கு நடுவில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனின் ஒதுக்கத்தில் அவளின் முகம் சுருங்க பின்னர் “இது எதிர்பார்த்த ஒன்றுதானே” என தன்னை தானே சமாதானபடுத்தி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அப்போது “மாதேஷ் நீயும் மலரும் விளக்கு ஏத்தி சாமி கும்பிட்டு உங்க மாமியார் வீட்டுக்கு மறுவிருந்துக்கு போயிட்டு வாங்க “ என்றார் அவனின் தந்தை.

“என்னது மாமியார் வீடா...அங்க எதுக்கு” என சாதரணமாக கேட்க நினைத்து அவன் சத்தமாக கேட்டு விட

அப்போது அங்கிருந்த பெரியவர் “ஏண்டா பேராண்டி மாமியார் வீடுன்னு சொன்ன உடனே அலற....பழைய கஞ்சி புளிக்க தான் செய்யும் ..........எல்லாரும் நம்மல மாதிரியே இருப்பாங்களா” ... ....என்னப்பா நான் சொல்றது” என சொல்லி விட்டு அவர் வெடி சிரிப்பு சிரிக்க........

“ஆஹா சொந்தகாரனுக அலப்பறை ஆரம்பிச்சிட்டாங்கலே”..... என மனதிற்குள் புலம்பியவறு மோகன் மலர்விழியை பார்க்க

அவளோ அமைதியாக கல் போல் நின்று கொண்டிருந்தாள்.

“பரவாயில்லையே ரொம்ப நல்லா பொண்ணா இருக்கு” ......என்று நினைத்தபடி தன்னவளை பார்க்க மீனாவின் பார்வையில் சக்தி இருந்தால் அந்த நேரத்தில் அவன் பஸ்பமாகி இருப்பான்.

உடனே மோகன் அவளிடம் “இப்போ இவ எதுக்கு இந்த பார்வை பார்க்கிறா” என யோசித்தவன் சட்டென மீண்டும் தலைக்கு மேல் பல்பு எரிய “அய்யோ இப்படி ஒரு குழப்பம் இருக்கா” என அலறியாவரு மீண்டும் தன் மனைவியை பார்த்தவன் “ இது உங்க வீட்டை சொல்லலை..அவங்களை” என மலர்விழியை அவன் கண்ஜாடை காட்ட

“அவ என் தங்கச்சி...அப்போ இது எனக்கும் தான” என அவள் வாய்க்குள் முனக

மோகனோ “அச்சோ இந்த மாதிரி நேரத்தில் எல்லாம் தெளிவா இருக்காளே எப்படி சமாளிகிறது” என தெரியாமல் முழித்து கொண்டு நின்றான்.

மலர்விழியே அந்த பெரியவர் அப்படி பேசியதும் ஆத்திரத்திலும் ஆற்றாமையிலும் வரும் கோபத்தை அடக்கியவாறு மாதேஷை பார்க்க

அவனோ பதில் சொல்லாமல் சிரித்தபடியே அமர்ந்திருந்தான்.

“ஏம்மா மறுவீட்டு அழைப்புக்கு பொண்ணு வீட்ல இருந்து யாரும் வர மாட்டங்களா? நாமலே போய் விருந்து போடுங்க ....விருந்து போடுங்கனு நிக்கனுமா”... என கேட்டுகொண்டே அங்கு வந்தாள் மாதேஷின் தங்கை உமா. மற்ற இரு பெண்களும் திருமணம் முடிந்ததும் ஊருக்கு சென்று விட்டார்கள்.பெரிய அண்ணன் அதிகம் எதிலும் கலந்து கொள்ள மாட்டார்.

“ஆஹா இவ வேற எரியற நெருப்புல கொஞ்சம் பெட்ரோல ஊத்தாறாலே...இனி அடுத்தது என்ன” என்றபடி தந்தையின் முகத்தை மோகன் பார்க்க

“ஒரே ஊருக்குள்ள இருக்கோம்.....அவங்க வந்தா என்ன ? நம்ம போனா என்ன இரண்டும் ஒண்ணுதானம்மா” என கற்பகம் குடும்ப தலைவியாக பேச

“ம்ம்ம்கும் இதே புது சம்பந்தமா இருந்தா முறையா வந்து அழைச்சிட்டு போயிருப்பாங்க.......இது பழைய சம்பந்தம் தான.....அதான் இரண்டு பொண்ண கொடுத்திட்டோம்... இந்த பழமும் புளிக்கும்னு ஆச்சு......இனி எதுக்கு அங்க போய் நிற்கணும்னு வரலை போல” என மலர்விழியை மேலும் கீழும் இளக்காரமாக பார்த்தபடி சொன்னாள் உமா.

மலர்விழிக்கோ அப்படியே மண்ணில் புதைந்து விட மாட்டோமா என இருந்தது..

“உமா இது பெரியவங்க விஷயம் நீ சும்மா இரு” என சாமிநாதன் ஒரு அதட்டல் போட

“ஆமா இப்படியே என்னை அடக்குங்க.....ஆரம்பித்தில இருந்தே சொன்னேன் .....என் புருஷன் வீட்டு சொந்தத்தில நல்லா படிச்சு வாத்தியார் வேலையில ஒரு பொண்ணு இருக்கு.....ஆஸ்தி அந்தஸ்த்து எல்லாம் நம்மளை விட அதிகம்.ஒரே பொண்ணு.... அழகா இருக்கும்......தம்பிக்கு பார்க்கலாம்னு...எங்க கேட்டிங்க....அதுக்குள்ள தான் இந்த அமுக்குணி ஒரு குண்ட தூக்கி போட்டு எல்லாத்தையும் குழப்பி விட்டுட்டா....அவங்களா இருந்தா இந்நேரம் பெரிய காரோட நம்ம வீட்டுக்கு முன்னாடி நிப்பாங்க....இப்போ பாருங்க ...நம்ம தான் அவங்க வீட்டுக்கு முன்னாடி போய் நிக்க வேண்டியதா இருக்கு.....அனுபவிங்க” என கற்பகத்தின் அருகில் முனகி கொண்டே நின்று இருந்தாள் உமா.

உமாவும் மோசமான பெண் கிடையாது. தனது தம்பிக்கு பெரிய இடத்தில் அழகான படித்த பொண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைபட்டாள். ஏனெனில் இரண்டு அக்கா ஒரு அண்ணன் இவர்களுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது.....உமா மோகன் மாதேஷ் இவர்கள் தான் நான்கு இரண்டு வருட இடைவெளியில் இருந்ததால் படிப்பு மற்ற விஷியங்களில் ஒத்து இருந்தனர்.உமா மாதேஷை விட ஏழு வயது பெரியவள் என்பதால் அவனிடம் அதிக பாசம் இருக்கும்.தான் நினைத்தபடி தனது தம்பி திருமணம் நடக்கவில்லை...ஏன் அவன் நினைத்தபடி கூட அவன் திருமணம் நடக்கவில்லை என்பதால் மலர்விழியின் மேல் கடும் கோபத்தில் இருந்தாள் அவள்.


அப்போது மலர்விழ்யின் சித்தப்பா அவரது மகன் பாஸ்கர் மருமகள் தீபா மூவரும் மாதேஷின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவர்களை பார்த்தும் மலர்விழி நிம்மதி பெருமூச்சு விடகிண்டலாக பேசிகொண்டிருந்த உறவினர்கள் எல்லாம் வேகமாக எழுந்து “வாங்க.... வாங்க” என சொல்லவும் “வாங்க சம்பந்தி” என அனைவரையும் வரவேற்றார் சாமிநாதன்.

“மீனாட்சி பெரியவங்களுக்கு தண்ணீர் கொண்டு வா” என கற்பகம் சொல்ல

“இதோ அத்தை” என்றபடி சமையல்அறை நோக்கி சென்றவள் செல்லும் வழயில் “எங்களுக்கும் முறை தெரியும். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்......இப்போ என்ன சொல்றிங்க” என உமாவிடம் சொல்லி கொண்டே உள்ளே சென்றாள் மீனாட்சி. உமாவின் முகம் அவமானத்தில் தொங்கி போனது. 3

“கல்யாண வேலை அலுப்புல இங்க வரதுக்கு கொஞ்சம் நேரமாகிடுச்சு ...தப்பா எடுத்துக்காதீங்க” என வீட்டிற்கு பெரியவரான மலரின் சித்தப்பா கேட்க

“அதனால என்னங்க...இங்கும் எல்லாரும் இப்பதான் எழுந்தாங்க....பரவாயில்லைங்க” என்றார் சாமிநாதன்.

அதற்குள் தீபா மலரின் அருகில் சென்றவள் “என்னடி நேத்து இரவு எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா” என கேட்க

ஏற்கனவே ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்தவள் இதை கேட்டதும் திரும்பி தீபாவை முறைக்க

“என்னடி முறைக்கிற...அப்போ ஏதும் நடக்கலையா...... அது எப்படி நடக்காம இருக்கும்......நீ ஆசைப்பட்டு கட்டிகிட்டவனாச்சே...பதில் சொல்லுடி” என அவளை மேலும் சீண்ட

அவளோ எரிச்சலுடன் “ஹிஹிஹி” என இளிப்பு காட்டியவள் “இதான் பதில்” என சொல்லிவிட்டு மீண்டும் பெரியவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் கவனமானாள். தீபாவோ “வீட்டுக்கு தான வருவ வாடி உன்னை அங்க கவனிச்சிகிறேன்” என சொல்லிவிட்டு மீண்டும் தன் இடத்தில போய் அமர்ந்தாள்.

மலர்விழி வீட்டார் வந்த உடன் வாங்க என மரியாதைக்கு சொல்லிவிட்டு பின்னர் தனது உறவினர்களோடு பேச ஆரம்பித்து விட்டான் மாதேஷ். பாஸ்கரும் மோகனும் பேசிகொண்டிருக்க சம்பந்திகள் பொதுவாக திருமண செலவுகளை விவாதித்து கொண்டிருந்தனர்.

அப்போது “மாமா இப்போ கிளம்பினால் தான் நல்ல நேரம் முடியறதுக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு போக முடியும்” என தீபா சொல்லவும்

உடனே “மாதேஷ் நீயும் உன் மனைவியும் கிளம்புங்க” என்றார் சாமிநாதன் .

“நீங்க எல்லாரும் வாங்க சம்பந்தி....அண்ணன் உங்க எல்லாரையும் அழைச்சிட்டு வர சொன்னாங்க” என்றார் மலர்விழியின் சித்தப்பா.

“நாங்க எங்க சம்பந்தி வரது....... வேலை எல்லாம் அப்படியே இருக்கு...... உங்க பொண்ணையும் மருமகனையும் கூட்டிட்டு போங்க ...வேணா மீனாட்சியும் மோகனையும் கூட அனுப்பி வைக்கிறேன் “ என்றவர் “என்ன மோகன்” என முடிக்கும் முன் “இதோ கிளம்பிட்டோம் மாமா” என வேகமாக மீனாட்சி அவர் முன்னாடி வந்து நிற்கவும் மோகனோ அவசரகுடுகையான தன் மனைவி செய்ததை தடுக்க முடியாமல் முறைத்து கொண்டு நின்றான்.

மீனட்சியின் வேகத்தை பார்த்து மற்றவர்கள் சிரிக்க ...”இல்லை மாமா அது வந்து சரி அம்மா வீட்டுக்கு போறோம்னு” என இழுக்கவும்

‘சந்தோஷமா போயிட்டு வாங்க...நானும் அத தான் சொல்லவந்தேன்...மோகன் போய் கிளம்பு” என்றவர் திரும்பி “மலர்விழி நீயும் தயராகுமா” என சொல்லவும் அவளோ ஏதும் பேசாமல் மாதேஷை பார்க்க அவனோ நடப்பது எதுவும் தனக்கு சம்பந்தம் இல்லை என்பது போல உறவினர்களுடன் பேசிகொண்டிருந்தான்.

மருமகளின் பார்வையை பார்த்தும் அவள் மாதேஷின் பதிலுக்காக காத்திருக்கிறாள் என புரிந்து கொண்ட அவனின் தந்தை கண்களில் ஒரு மெச்சுதல் தோன்ற மகனுக்கு ஏற்ற மனைவி தான் என நம்பிக்கை மனதில் வந்தது.

திருமணமாகி ஏழுவருடம் குடும்பம் நடத்திய மீனாட்சி கூட அம்மா வீடு என்றதும் கணவனுக்கு முன் கிளம்ப ஆனால் நேற்று திருமணம் முடித்தவளோ தனது சித்தப்பாவும் தமையனும் வந்து அழைத்த போதும் கணவனின் பதிலுக்காக காத்திருக்கும் அவளின் குணம் அவருக்கு மிகவும் பிடித்து போனது. வேண்டாம் என்று குடும்பமே ஒதுக்க போராடி மருமகளாக உள்ளே நுளைந்த இரண்டாவது நாளிலே அந்த குடும்பத்தின் ஆணிவேரான தனது மாமனாரின் மனதில் இடம்பிடித்தாள் அந்த மான்விழியாள் இல்லை மலர்விழியாள்.

“மாதேஷ் இங்க வா” என மீண்டும் அவர் அவனை அழைக்க

“ம்ம்ம் என்னப்பா” என்றபடி அவரிடம் வந்தான்.

“மறுவீட்டு விருந்துக்கு போகணும் ....சீக்கிரம் கிளம்பு” என சொல்லவும்

“இல்லைப்பா எனக்கு வெளியில கொஞ்சம் வேலை இருக்கு....முடிச்சிட்டு அப்புறம் போறேன் என்றவன் ...... .மலர மட்டும் போக சொல்லுங்க” என்றான் .

“இல்லைங்க மாப்பிள்ளை ...வீட்டுக்கு வரும்போது இரண்டு பேரும்சேர்ந்து தான் வரணும்” என மலரின் சித்தப்பா சொல்ல

“பரவயில்லை சித்தப்பா ...அவங்க வேலை எல்லாம் முடிஞ்சதும் நாங்க வந்திடறோம்” என மலர்விழி தன் கணவனுக்கு ஆதரவாக பேச

“இல்லமா அது வந்து” என அவர் இழுக்கவும்

உடனே “ஏண்டா நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது...இன்னைக்கு என்ன என்ன பெரிய வேலை இருக்கு...நான் தான் பத்து நாள் லீவ்யு போட சொன்னேன்ல” என்றார் அவனின் தந்தை.

“இல்லப்பா கல்யாணத்துக்கு வந்த ப்ரிண்ட்ஸ் எல்லாம் வழியனுப்பனும்.....அதான்” என இழுக்கவும்

“சம்பந்தி நீங்க கிளம்புங்க இவன் வருவான்” என்றவர் மகனிடம் திரும்பி இப்போ நீ இவங்களோட போற ...விருந்து முடிச்சுட்டு அப்புறம் நீ எங்க வேண்டுமனாலும் போ” என அழுத்தமாக கூறவும் அதற்கு மேல் எந்த பதிலும் சொல்லாமல் தலையாட்டியவன் அமைதியாக அவர்களுடன் நடந்தான். அவன் செல்வதை பார்த்து வேகமாக அவன் பின் ஓடினாள் மலர்.

அவன் அருகில் சென்றவள் “ஏங்க சட்டை மாத்திகிறீங்கலா” என மெதுவாக கேட்க

அவனோ திரும்பி கோபத்துடன் அவளை முறைக்கவும் தலையை கீழே போட்டவள் வீடு செல்லும் வரை நிமிரவில்லை
 
  • Like
Reactions: padhusbi