• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 05

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,390
440
113
Tirupur
அத்தியாயம் -5


ஒரு வழியாக மாதேஷ்,மலர்,மோகன் ,மீனாட்சி நால்வரும் மலரின் வீட்டை அடைந்தனர். மலரின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்று உபசரித்தனர். “என்ன தம்பி அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்திருக்லாம்ல” என மலரின் சித்தி கேட்க “அவங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு...வரலைன்னு சொல்லிட்டாங்க” என பதில் சொன்னான் மோகன்

.உள்ளே வந்ததும் பேருக்காக கொஞ்ச நேரம் இருந்து விட்டு அருகில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள் மீனாட்சி. மலரின் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி தான் மீனாட்சியின் அம்மா வீடு இருக்கிறது.அவளை தடுக்கவும் முடியாமல் தம்பிக்கு துணையாக இருக்கவும் முடியாமல் மோகன் தடுமாறுவதை பார்த்த மாதேஷ் “அண்ணி மட்டும் தனியா போறாங்க நீங்களும் கிளம்புங்க “ என அனுப்பி வைத்தான்.

அதற்குள் இங்கு விருந்து தயாராக இருக்க “வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம் என்றார்” தர்மலிங்கம்.

“பாஸ்கர் எங்க மாமா....கூடவே வந்தார்.....அப்புறம் ஆளே காணோம் அவரும் வரட்டும்...சேர்ந்து சாப்பிட்றோம்” என தனியாக சாப்பிட கூச்சமாக இருக்க பாஸ்கர் வரட்டும் என்றான் மாதேஷ்.

தர்மலிங்கமே சற்று தயங்கி பின்னர் “அது வந்து மாப்பிள்ளை உங்களுக்கு வாத்துகறி ரொம்ப பிடிக்கும்னு மலரு இப்பதான் சொல்லுச்சு...அதான் வாங்கிட்டு வர அனுப்பி இருக்கோம்.....அவன் வரட்டும்...நீங்க வந்து சாப்பிடுங்க” என்றார் .

“என்னது வாத்து கறியா” என அதிர்ந்த படி மாமனாரை பார்த்தான் மாதேஷ் . ஏனெனில் அவன் சில வருடங்களாகத்தான் இதை சாப்பிடுகிறான்..வேலை பார்க்கும் இடத்தில நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு பழகி கொண்டான். .....வீட்டில் யாருக்கும் தெரியாது...ஆனால் இவருக்கு என யோசித்தவன் அப்போது தான் மலர் சொல்லுச்சு என்று அவர் சொன்னது நியாபகம் வர இவளுக்கு எப்படி தெரியும்..... என யோசித்து கொண்டிருக்க

அந்த நேரத்தில் மலர்விழி சமையல் அறையில் இருந்து வர

அவன் அவளை முறைக்கவும்

உடனே “ஏங்க பசிக்குதா இதோ இட்லி எல்லாம் ரெடி ஆகிடுச்சு...உங்களுக்கு பாதாம்பால் ரெடி பண்ணிட்டு இருக்காங்க என்றவள் உள்ளே திரும்பி அம்மா சீக்கிரம் செய்யுங்க இவருக்கு பசிக்குதாம்” என இவளாகவே அவன் அதற்கு தான் முறைக்கிறான் என நினைத்து அவர்களை அவசரபடுத்தி மேலும் அவனது கோபத்தை அதிகபடுத்தினாள்.

உடனே “ கோவிச்சுகாதீங்க மாப்பிள்ளை எல்லாமே தயாராகிடுச்சு...இப்போ வந்து இந்த புள்ள என்னமா வெறும் டிபன் மட்டும் தானா ...ஏதாவது ஸ்பெஷல ரெடி பண்ணுங்கனு சொல்லுச்சு...அதான் பாதாம் பால் செய்ய கொஞ்சம் லேட்டாகிடுச்சு...இதோ ஐந்து நிமிஷம் மாப்பிள்ளை” என வேகமாக சமையல் அறையில் இருந்து வெளிவந்து அவரிடம் மன்னிப்பு கோரும் வகையில் குணவதி சொல்ல

மாதேஷ் கோபத்தின் உச்ச நிலைக்கே சென்றுவிட்டான். “கடவுளே இவ நமக்கு ஓவர் பில்டப் கொடுத்து அசிங்கபடுத்தராலே” என மனதிற்குள் கருவியபடி அவளை எரித்துவிடும் பார்வை பார்த்தவன் பின்னர் அவரிடம் திரும்பி “அத்தை எனக்கு ஸ்பெஷல் ஏதும் வேண்டாம்.எப்போதும் இருக்கிறதே போதும் “என்றான்.

அவரோ “இதோ அவ்வளவு தான் மாப்பிள்ளை கொஞ்சம் பொறுத்துக்குங்க” என மீண்டும் அவர் பணிவாக சொல்லவும் மாதேஷின் நிலை மிகவும் தர்மசங்கடமாகி விட்டது.

மீண்டும் அவன் முறைக்கவும் “நம்ம ஏதாவது தப்பா சொல்லிட்டமோ” என அவளது சிறுமூளையை தட்டி யோசித்து கொண்டிருக்க அதற்குள் விருந்து தயார் என சொல்லவும் ஒருவழியாக விருந்தை முடித்துவிட்டு “சரி மாமா எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு ..நான் முடிச்சுட்டு மதியம் வந்திடறேன்” என சொல்லிவிட்டு கிளம்பினான் மாதேஷ்..

‘என்ன மாப்பிள்ளை இப்பதான் சாப்பிடிங்க...உடனே கிளம்பறேன்னு சொல்றிங்க...ஒரு அரைமணி நேரம் ஓய்வு எடுத்திட்டு போங்க” என்றவர் மலரிடம் திரும்பி “கண்ணு மாப்பிள்ளையை உன் அறைக்கு அழச்சிட்டு போ” என்றார் தர்மலிங்கம்.

மாதேஷோ வேகமாக “இல்ல மாமா அது வந்து” என மறுத்து பேச

“மாப்பிள்ளை இன்னைக்கு ஒரு நாள் தான” என அவர் ஏதோ சொல்ல வர

அதற்குள் “தம்பி இந்தாங்க பாதாம் பால்” என குணவதி தரவும் வேறு வழியில்லாமல் அதை வாங்கியபடி மலரின் பின்னால் சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும் “ஏய் உனக்கு ஏதாவது அறிவு இருக்கா ? எப்பவும் நீ சொல்றது தான் எல்லாரும் கேட்கணும்....மத்தவங்க சொல்றத கேட்கிற பழக்கமே உனக்கு கிடையாதா...மத்தவங்கள புரிஞ்சுக்கவே மாட்டியா......என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு ...நீ தாங்க மாட்ட” என தன் பெயரை சொல்லி விருந்தில் அவள் பண்ணிய அலம்பலை தாங்க முடியாமல் கொதித்து கொண்டிருந்தவன் அவள் தனியாக சிக்கியதும் ஆதரத்தில் வார்த்தைகள் சரமாக வந்து விழுந்தது.

இதை எதிர்பார்க்காத மலர் ..”.ஏங்க என்னாச்சுங்க...நான் என்ன தப்பு பண்ணினேன்” என புரியாமல் அப்பாவியாக கேட்கவும்

“ஏய் இப்படி முதல்ல பேசாத....முதல் உன் முட்டை கண்ண அந்த பக்கம் திருப்பு....பண்றது எல்லாம் கேடி தனம்.........முகத்த பச்சைபுள்ள மாதிரி வச்சுகிறது....... உங்க வீட்டுக்கு வந்ததும் என்ன ரொம்ப துள்ற...உங்கிட்ட கல்யாணதிற்கு முன்னாடி என்ன சொன்னேன்........ ஏன் என் மனதை வாங்கிற ........ஏண்டி நான் உங்கிட்ட வாத்துகரி வேணும்னு சொன்னனா..... சொன்னனா?” என ஒற்றை விரலை அவள் முன் நீட்டிய படி அவன் முன்னே வர

அவளோ பின்னே நகர்ந்தபடி “இல்லைங்க அது வந்து சாப்பிடுவிங்கனு ” என சொல்ல தொடங்குமுன்

“உனக்கு வேணும்னா நீ வாங்கி சாப்பிட வேண்டியது தான”... என அவன் சொல்லி முடிக்கும் முன்

அவள் “அய்ய..ஒய்” என வாந்தி எடுப்பது போல் முகம் சுளிக்க

அவனோ முறைக்கவும் “இல்லைங்க எனக்கு கவுச்சி எல்லாம் பிடிக்காது. நான் அசைவம் சாப்பிட மாட்டேன்” என மெதுவாக சொன்னாள்.

“என்னது நீ சைவமா?” என்றவன் அவனது வேகம் சற்று மட்டுப்பட “அப்புறம் எதுக்கு உங்க அப்பாகிட்ட வாங்கிட்டு வர சொன்ன” என கேட்டான்.

“உங்களுக்கு பிடிக்கும்னுதான்” என அவள் அவன் முகத்தை பார்க்காமல் தலை குனிந்தபடியே சொல்லவும்

“யார் சொன்னா எனக்கு பிடிக்கும்னு.....எனக்கு அதெல்லாம் பிடிக்காது” என வேகமாக மறுத்தான். 1

“இல்லை உங்களுக்கு பிடிக்கும்...எப்படியும் வாரத்தில ஒரு நாள் நீங்க சாப்பிடுவிங்க” என அவள் உறுதியாக சொல்லவும் பதில் எதுவும் பேசாமல் அவளை அழ்ந்து பார்த்தபடியே நின்றான் மாதேஷ் .

அவன் அமைதியாக தன்னையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்தவள் “என்னங்க நான் சொன்னது சரிதான” என உன்னை பற்றி எனக்கு தெரியும் என்ற தொனியில் புருவத்தை லேசாக உயர்த்தி அவள் கேட்கவும்

“ம்ம்ம் ஆமா” என முதலில் ஆமாம் என்றவன் பின்னர் ..”இல்லை இல்லை...அது வந்து அது எப்பவாவது ப்ரிண்ட்ஸ் கூட” என இழுக்கவும்

“அப்படியா அது மட்டும் தானா இல்லைஆஆஆஅ ஐ ஐ” என அவள் இழுக்க

“ஏய் என்னடி இது அதும் மட்டும்தான்” என வேகமாக சொன்னவன் பின்னர் சில வினாடிகள் சுதாரித்து “ஹேய் உன் மனசில என்ன நினச்சிட்டு இருக்க........என்னை கேள்வி கேட்கிற அளவுக்கு நீ வந்திட்டியா.....நான் தான் உங்கிட்ட கல்யாணத்திற்கு முன்னாடியே சொல்லிருந்தேன் தான ... என்னை பத்தின முடிவ நீ எடுக்காத ......நான் நானகதான் இருப்பேன். இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என்னோட விஷியத்தில் யார் கேள்வி கேட்கிறது ,முடிவு எடுக்கிறதும் எனக்கு பிடிக்காது” என அவளின் முன் தன் தோல்வியை ஒத்துகொள்ள முடியாமல் பழைய நியாபகங்கள் வர கோபத்தில் எரிந்து விழுந்தான்.

அதை கேட்டதும் சில வினாடிகள் அமைதியாக நின்றவள் பின்னர் “ சரி சரி முதல்ல பால குடிச்சு முடிங்க...ஆறிடபோகுது “ என சாதாரணமாக சொன்னாள். .

அவளது செய்கையில் பால் குடித்து கொண்டிருந்தவனுக்கு சட்டென்று புரை ஏற

“அச்சோ என்னாச்சு....தொன தொணன்னு பேசிகிட்டே குடிச்சா இப்படிதான்...ஏங்க இப்படி பண்றீங்க” என இதுவரை எதுவுமே நடக்காதது போல் உரிமையாக சொல்லியபடி அவன் உயரத்திற்கு இவள் கை எட்டாமல் போக வேகமாக அருகில் இருக்கும் கட்டிலில் மீது ஏறி அவன் தலைக்கு மேல் நின்று கொண்டு தலையை தட்டி கொடுத்தாள்.

ஏற்கனவே கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவன் இப்போது அருகில் தன்னை விட உயரத்தில் நின்று கொண்டு அவள் இதை சொல்லவும் மேலே நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தவன் கோபத்தில் பல்லை நறநறவென கடித்தபடி வேகமாக அவள் கைகளை பிடித்து கீழே இழுத்தவன் தன் முகத்திற்கு நேராக நிறுத்தி...”ஏய் நீ என்னை சீண்டி பார்க்கணும்னே இந்த மாதிரி செய்யறியா ...... இங்க பாரு இந்த சினிமாவுல காட்ற மாதிரி எனக்கு பிடிச்சத செஞ்சு தராது, என் மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிக்கிறது....... என்னை பத்தி எல்லாமே தெரிஞ்ச மாதிரி சீன போட்ற வேலை எல்லாம் இதோட நிறுத்திடு......அதான் என்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச பண்ணிட்ட ...இன்னும் எதுக்கு இந்த பில்டப் எல்லாம்....நீ சொல்றத் தான் எல்லாரும் கேட்கனும் திமிருடி உனக்கு..... இதுக்கான விளைவுகள் நீ கண்டிப்பா அனுபவிக்க தான் போற” ........ என என்ன பேசுகிறோம்,எதற்காக கோப படுகிறோம் என்று கூட தெரியாமல் அவளை திட்ட வேண்டும் என்பதற்காவே ஆத்திரத்தில் அவன் வார்தைகளை தணலாக கொட்டினான்.

ஆனால் அவளோ அதற்கெல்லாம் அசர ஆள் நான் இல்லை என்பது போல் ...”சரிங்க இனி நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்...நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன்” என பணிவாக கேட்டாள். .

இதை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. திருமணத்திற்கு முன் ஏன் இப்போது வரையிலும் அவன் பேசுவதை மறுத்து பேசியே பழக்கப்பட்டவள் மேலும் இப்போது உடனே சரண்டர் ஆவது போல பேசவும் அவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“ம்ம்ம் அது வந்து...” என அவன் இழுக்க அதற்குள் அவனது அலைபேசி ஒலிக்கவும் எடுத்து காதில் வைத்தவன் “இதோ வந்திட்டேன் மச்சான்.....ஐஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றவன் வேகமாக அறையில் இருந்து வெளியே வந்து பெரியவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் சென்ற பிறகே நிம்மதியாக மூச்சு விட்டாள் மலர்விழி.

அவன் செல்லும் பாதையே பார்த்து கொண்டிருந்தவள் மனமோ நிம்மதி பெருமூச்சுவிட கண்களோ அதற்கு மாறாக கண்ணீரை அருவி போல் கொட்டி கொண்டிருந்தது. எத்தனை மணி நேரங்கள் அப்படியே நின்று இருப்பாள் என்று அவளுக்கு தெரியாது. “காபி குடிக்கிறியா மலரு” என கேட்டு கொண்டே அங்கு வந்த குணவதி கண்ணீரோடு நின்ற மகளை பார்த்ததும் சில வினாடிகள் திகைத்து போனார் . பின்னர் மகளின் அருகில் வந்து அவள் கைகளை பிடிக்க

தாயின் முகத்தை பார்த்ததும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அலைபோல எழும்பி வர...... “அம்மாஆஆஅ”...... என அவள் அந்த வார்த்தையை அழுத்தி உச்சரித்தபடி அவர் தோள் மேல் சாய .... அவர் ஏதும் சொல்லாமல் தன் மகளை தோளோடு அணைத்து கொண்டார். ஆறுதல் வார்த்தைகளால் அவளின் காயத்திற்கு மருந்திட முடியாது என்பது அவருக்கும் தெரியும்.அன்னையின் அணைப்பில் சிறிது நேரம் இருந்தவள் பின்னர் மெதுவாக அவரிடம் இருந்து விலகி “இல்லம்மா அவர் ஏதும் சொல்லலை...நான் தான்” என ஏதோ காரணத்தை அவள் உளற

குணவதியோ “காபி சாப்பிடிறியாம்மா “ என அவர் சாதரணமாக பேசவும்

சில நொடிகள் அங்கு அமைதி நிலவ பின்னர் “ம்ம்ம் சாப்பிட்றேன்மா” என்றாள் மலர்.

“இங்க கொண்டுவரட்டுமா......கீழே வரியா” என அவர் கேட்கவும்

“நான் கீழ வரேன்மா” என்றபடி தாயின் பின்னே நடந்தாள்.

தாய் அறியாத சூழ் இல்லை...மகள் படும் வேதனை அவருக்கு புரியாமல் இல்லை. ஆனால் அதற்கான தீர்வு அவரிடமும் இல்லாத போது பாவம் அவர் என்ன செய்வார். நீயாக தேடிகொண்ட வினை என்ற பெற்ற மகளை பழித்து பேசத்தான் முடியுமா? சில நேரங்களில் மௌனமும் காலமும் மட்டுமே தீர்வாக அமையும்.

மலரோ நினைத்ததை அடைந்துவிட்ட சந்தோஷத்தை வெளிபடுத்த கூட முடியாமல் நடக்கும் நிகழ்வுகள் அவளை அணுஅணுவாக கொல்ல தன் மனதில் நிறைந்தவனை அவன் மனதிற்குள் தன்னை நிலை நிறுத்த அவள் படபோகும் பாட்டை நினைக்கையில் அவள் உடல் சிலிர்த்து போனது.

மனதில் ஏதேதோ நினைத்தவாறு வந்தவள் எதிரில் வந்த தீபாவின் மேல் மோதி நின்றாள் ..2

“ஹே ஒரு மனுஷி நிக்கிறது கூட உனக்கு தெரியலியா....என்ன நேத்து இரவு மயக்கத்தில இருந்து இன்னும் வெளிய வர முடியலை” என அவர்களின் முதல் இரவை சொல்லி அவள் கேலி பண்ண

“கடவுளே இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே....எந்த மாதிரி சூழ்நிலையில நான் இருக்கேன்...இது என்ன உளறிட்டு இருக்கு” என மனதிற்குள் புலம்பியவள் ஹிஹிஹி என மீண்டும் பல்லைகாட்டிவிட்டு அவள் செல்லவும் தீபாவும் விடாமல் அவளை நச்சரிக்க மலரின் வாயில் இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை.

ஆம் மலரின் குணமே அது தான். அமைதியானவள் ஆனால் அழுத்தமானவள்.அதிகம் ஆசைபடமாட்டாள் ஆனால் விருப்பபட்டதை எப்படியும் அடைந்து விடுவாள்.மாதேஷை அடைந்ததும் அப்படிதான்.ஆனால் மாதேஷோ இதற்கு நேர் எதிரானவன்.எப்போதும் எல்லாரிடமும் கலகலப்பாக பேசும் குணம்.கோபமோ சந்தோஷமோ உடனே வெளிபடுத்தி விடுவான். நாணல் போல எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுப்பவன்.இந்த திருமணமே வளைந்து கொடுக்காத மலரின் மன உறுதியும் மாதேஷின் இளகிய மனதாளுமே முடிவானது.

பின்னர் மறுவீட்டு விருந்தை முடித்து விட்டு இரவு அவர்கள் வீட்டில் தங்க சொல்லி மலரின் பெற்றோர் எவ்வளோவோ கெஞ்சியும் மாதேஷ் மறுத்து விட்டான். மலரோ எதுவும் பேசாமல் அவனுடன் கிளம்பி வந்துவிட்டாள்.அன்று இரவு மாதேஷ் அவன் தந்தையிடம் பேசிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட மலர் உறங்கிவிட்டாள்.

பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் அவர்கள் சேலத்தில் தனி குடித்தனம் செல்வதற்கு பொருட்கள் வாங்குவது என அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்ததில் கணவன் மனைவி இருவருக்கும் பேசுவதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.

ஊருக்கு கிளம்பி கொண்டிருக்கும் நேரத்தில் “இங்க பாரு மாதேஷ் எவ்ளோ வேலை இருந்தாலும் வாரம் வாரம் இங்க நம்ம வீட்டுக்கு வந்திட்டு போகணும். அப்புறம் யார் என்ன சொன்னாலும் கேட்காத...... செய்யறதுக்கு முன்னாடி உங்க அப்பாகிட்ட ஒரு முறை சொல்லிட்டு அப்புறம் செய். என்னதான் மத்தவங்க சொன்னாலும் செஞ்சாலும் பெத்தவங்க செய்யற மாதிரி வராது”...என தனது மருமகளை ஓர கண்ணால் பார்த்தபடி கற்பகம் மகனுக்கு அறிவுரை சொல்லி கொண்டிருக்க

“ஏன்ம்மா நான் என்னமோ புதுசா போற மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க..ஐஞ்சு வருஷம் இருந்த ஊர்தான...நீங்க எதோ நான் இப்பதான் போறமாதிரி அட்வைஸ் சொல்லிடு இருக்கீங்க” என அவன் புரியாமல் கேட்கவும்

“ம்ம்கும் உன் கல்யாணம் எப்போ உறுதி ஆச்சோ அப்போ இருந்தே உன் விஷியத்தில எப்போ எது மாறும்னு ஒண்ணுமே புரியலை” என சந்தடி சாக்கில் திருமண நிகழ்வை அவனுக்கு நியாபகபடுத்தவும் அவனது முகம் சுருங்க சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. மலரோ இந்த மூன்று நாட்களாக வாய் திறக்கவில்லை.

“ஏண்டா மாதேஷ் ஊருக்கு போறதுக்கு முன்னாடி திருசெங்கோட்டு மலைக்கு போய் சாமி கும்பிட்டு வந்திடுங்க பூஜைக்கு சொல்லிருக்கேன்”... என்றபடி அங்கு வந்தார் மாதேஷின் தந்தை.

“அதெல்லாம் போயிட்டு வந்தாச்சுப்பா” என அவன் வேகமாக சொல்ல

அவரோ “நேத்து தான நான் சொன்னேன்...நீ எப்போ போன” என அவர் கேட்கவும்

அவனோ “நேத்து தான் நானும் போயிட்டு வந்தேன்ப்பா” என்றான்.

“டேய் இன்னைக்கு உன் பொண்டாட்டிய அழைச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா...அப்புறம் ஊருக்கு கிளம்பலாம்” என அவர் சொல்லவும்

உடனே திரும்பி மலரை பார்த்தவன் “இது உன் வேலையா” என கண்களால் கேட்டான்.

ஏனனில் முதல் நாள் இரவு தான் மலர் கோவிலுக்கு போயிட்டு வரலாமா என கேட்க அதற்கு முறைப்பை மட்டுமே பதிலாக தந்தான் அவள் கணவன். மாதேஷ் அர்த்தநாரீஸ்வரர் மீது கொண்டிருந்த நம்பிக்கை மலர் அறிவாள். அதனால் தங்களது புது வாழ்க்கை தொடங்கும் முன் அங்கு செல்ல ஆசைபட்டாள். .ஆனால் மாதேஷோ அதற்கு மறுத்துவிட்டான். இன்று அவனது தந்தை கோவிலுக்கு போங்க என்று சொன்னதும் திரும்பி அவளை முறைத்தான்.

அவளோ “நான் ஏதும் சொல்லலை” என பயத்தில் வாய் விட்டு சொல்லவும்

“அதான் அவன் போயிட்டு வந்திட்டேன் சொல்றான்ல...விடுங்களேன் “ என கற்பகம் சொல்லவும்

“இல்ல கற்பகம் கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து” என அவர் சொல்லும்போதே அவரை முறைக்க அதற்கு மேல் அவர் ஏதும் பேசவில்லை.

பின்னர் உறவினர்கள் எல்லாம் வழியனுப்ப வந்துவிட அந்த பேச்சு அதோடு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

தாய் தந்தையை பார்த்தவுடன் வேகமாக ஓடிசென்று தனது அப்பாவின் கைகளை பாசத்துடன் பற்றியவாறு அவர்கள் அருகில் நின்று கொண்டாள் மலர்விழி.

ஒரு பெண்ணிற்கு மனதிற்கு பிடித்த கணவன்,ஆசைப்பட்ட வாழக்கை என அனைத்தும் நிறைவாக அமைந்தாலும் பெற்றவர்களை பிரிந்து செல்லும்போது அந்த பெண்ணின் மனம் படும் துயரம் வார்த்தைகளால் அளவிட முடியாது.பல போராட்டங்களை நடத்தி நினைத்ததை சாதித்தவள் இன்று ஏனோ அந்த சந்தோசம் எல்லாம் மறைந்து போக மனதின் கலக்கம் முகத்தில் தெரிந்தது. .

தன்னை கண்டது தாய் மடி தேடிய பசு போல் மகள் வந்து ஓட்டி கொள்ள பாசத்தோடு பார்த்தவர் “ஏண்டா கண்ணு எல்லாமே எடுத்து வைச்சாச்சா.....மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ ...உன் உடம்பையும் பத்திரமா பார்த்துக்கோ .....உனக்கு ஏதாவது தேவைபட்டா அப்பாவுக்கு ஒரு போன் போடு...ஓடி வந்திடறேன் என அவர் பேசிகொண்டிருக்க”...அவளோ தரையை பார்த்த படியே தலையை மட்டும் அசைக்க ஆனால் அவரின் கைகளை பற்றி இருந்த மகளின் பிடி இறுக வார்த்தைகள் சொல்லாத பல விஷியங்களை அவளது கை நடுக்கம் அவருக்கு உணர்த்தியது.

சில வினாடிகள் அவருமே மௌனமாக இருக்க பின்னர் அவளை தன் தோளோடு சாய்த்து “உனக்கு எப்பவும் நாங்க இருக்கோம் மலரு.....உன் சந்தோசம் தான் எங்க சந்தோஷம்...... எங்களுக்கு எல்லாமே நீதான கண்ணு “ என பாசத்தை வார்த்தைகளால் வடிக்க அதை கேட்டதும் அவள் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவர் மார்பில் விழுந்து சட்டையை நனைத்தது..

அதை பார்த்ததும் பதறி “என்னடா கண்ணு எதுக்கு அழுகிற...எதா இருந்தாலும் மனச விட்டு பேசுடா” என அவர் கேட்கவும்

“போதும்ப்பா...பேசவேண்டியாது எல்லாமே அளவுக்கு மீறி நான் பேசிட்டேன்........இனி எதுமே இல்லைப்பா” என சொல்லும்போதே தேம்பலும் அழுகையும் வர அதுவரை மற்றவர்கள் எல்லாம் பேசிகொண்டிருக்க தந்தையும் மகளையும் யாரும் கவனிக்கவில்லை. அவளது தேம்பலில் குணவதி திரும்பி பார்க்க மகளை பிரியமுடியாமல் அணைத்து நின்ற கணவரை பார்த்ததும் அவருக்கும் ஆத்திரமும் அழுகையும் வர அந்த இடம் சில மணி நேரம் பாசத்தால் கட்டுண்டு கிடந்தது.

பின்னரே தாயின் அருகில் சென்றவள் அவர் கைகளை எடுத்து தன் கைபிடிக்குள் வைத்துகொண்டு சில வினாடிகள் கழித்து அவள் கண்களில் இருந்து விழும் கண்ணீர் முத்துகள் அவர் கைளில் பட அவரோ “மலரூஊஊஉ....” என அவளை இறுக அணைக்கவும் அந்த அணைப்பில் சிறிது நேரம் இருந்தவள் பின்னர் விலகி “அம்மா என்னை மன்னிச்டும்மா....ரொம்ப வேதனை படுத்திட்டேன் உங்களை”.... என சொல்லவும் “அப்படி எல்லாம் சொல்லாத மலரு...எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை...நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்” என அவர் சொல்லவும் சில வினாடிகள் தாயை பார்த்து கொண்டிருந்தவள் சட்டென்று அவர் கன்னத்தில் ஒரு முத்தம் இட அந்த தாயின் மனமோ ஒரு நிமிடம் நின்று துடித்தது.

ஆம் மலர் எப்போதும் தவறு செய்து விட்டாள் என்றாள் அதை வார்த்தையால் ஒத்துகொள்ள மாட்டாள். தாய் திட்டி முடித்ததும் அவரின் அருகில் சென்று அவரது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு ஓடி விடுவாள். அந்த முத்ததிலே அவளது தவறை குணவதி மறந்துவிடுவார். ஆனால் இவை எல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன் நடந்தது. அதற்கு பின்னர் வார்த்தைகளின் சதிராட்டமே தவிர கனிவான பேச்சுக்கும் பாசமான முத்தத்திற்கும் அங்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. பல வருடங்களுக்கு பின் மீண்டும் தனது மகள் தங்களுக்கு திரும்ப கிடைத்துவிட்டால் என பெருமிதத்தில் அந்த தாயின் உள்ளம் குளிர்ந்து போய் நின்றது.

அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அவள் காரில் சென்று அமர அது வரை அவளையே கவனித்து கொண்டிருந்த மாதேஷிற்கு இன்று ஏனோ அவள் புதுமையாக தெரிந்தாள்.

மலர் அழுது அவன் பார்த்தது இல்லை.....திருமண குழப்பத்தின் போதும் பிடிவாதமும் அழுத்தமாக இருப்பாளே தவிர உணர்ச்சிகளை வெளிபடுத்த மாட்டாள். சில நேரங்களில் மாதேஷும் கடுப்பாகி விடுவான். ஆனால் இன்று பிறந்த வீட்டை விட்டு பிரியும் தவிப்பா, இல்லை தன் எதிர்கால வாழ்க்கையை நினைத்து பயமா என ஏதோ ஒன்று அவள் மனதை ஆட்டுவிக்க கலங்கி போய் நின்றாள் அந்த மான்விழியாள்..

ஆறுமாதத்திற்கு முன்பு இங்கு இருப்பவர்கள் அனைவரும் இதே போல கலங்கி நிற்க ஆனால் மலர்விழி மட்டும் எதற்கும் அசராமல் உறுதியாக நின்றது அவன் கண் முன் வந்தது.

காரில் பயணத்தில் அவள் அமைதியாக அமர்ந்திருக்க அருகில் இருந்தவனின் மனமோ அந்த அமைதியின் ஆரம்ப அரிசுவடியை நோக்கி சென்றது.