நேசம் - 1
கண்ணுக்கு எட்டும் தூரம்வரை தெரிந்த அந்தக் கட்டடக் காட்டினையே நீண்ட நேரமாகக் கண்ணாடி யன்னல் மேல் கன்னம் அழுந்தச் சாய்ந்து, பார்த்துக்கொண்டிருந்தாள் மிருதுளா.
அவளும் தான் என்ன செய்வாள்? எத்தனை மணி நேரம் தான் அந்த தாெலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு வாரமா அதனோடு குப்பைக் கொட்டியவளுக்கு சலிப்புத் தட்டவே யன்னலின் அருகே சரணாகதி அடைந்தாள்.
இதுவே அவள் ஊராக இருந்திருந்தால், இப்படி பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இல்லாமல், யன்னல் அருகே நின்று வேடிக்கை பார்த்திருப்பாளா? ஊரை ஓர் உலுக்கு உலுக்கியிருக்க மாட்டாள்.
ஆம்! மிருதுளா என்றால் சேட்டைக்காரி. அப்படித்தான் ஊர் மக்களிடம் பெயர் எடுத்தவள். செய்யும் அத்தனை வேலைகளிலும் குறும்பு இல்லாமல் இருக்காது. இவள் தான் இப்படி என்றால், இவளைப் பின் தொடர ஒரு வானர கூட்டமே இருக்கும். அவர்களுக்கு எல்லாம் தலைவி என்றே இவளைக் கூறலாம்.
அன்று பெரும் மழை. அந்த மழையினால் அந்த ஊரின் பாடசாலை நீரினுள் மூழ்கிப் போகும் அபாயம் இருப்பதாக எச்சரித்து, எல்லா மணவர்களை பாதியிலேயே வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் ஆசிரியர்கள். மழை என்றால் சும்மாவே குத்தாட்டம் போடுபவள், இப்படியொரு சந்தர்ப்பத்தை விடுவாளா...?
வீதி என்றும் இல்லாது குத்தாட்டம் போட்டவளுக்கு கை நீட்டினார்கள் அவளது வானரக் கூட்டம். அவர்களும் அதே பள்ளியில் தான் படிக்கின்றார்கள். இவள் ஏ.எல் கடைசியாண்டு படிக்கிறாள். இவளைவிட அவர்கள் ஒவ்வாெருவரின் வயதும், கூடியது எட்டாவது குறைவாக இருக்கும். ஆனால் ஏனோ தம் வயதினரோடு பழகாது, மிருதுளாக்கா என்று அவளையே சுற்றிச் சுற்றி வருவார்கள் அவர்கள்.
"டேய்... இதுக்கு மேல நிக்கேலாதடா... பள்ளிக்கூடம் அப்பவே விட்டுட்டுது எண்டு அம்மாவுக்குத் தகவல் போயிருக்கும். இதுக்கு மேல நிண்டம்.... தும்புத் தடி அடி தான். வாங்கோடா போவம்." பெற்றவளின் மேல் இருந்த பயத்தில் தன்னோட நின்றவர்களை அழைத்து விட்டு, அவர்களின் வரவை எதிர் பாராமல் ஓடினாள் மிருதுளா.
"டேய் இவா இப்பிடி எண்டு தெரிஞ்சும், இன்னமும் இவாக்கு பின்னால சுத்துறம் பார்... எங்கள சொல்லோணும். இப்ப வீட்ட போய், எங்களால தான் அவா இப்பிடி நனைஞ்சவா எண்டு கதை கதையா சொல்லப் போறா.... அந்தப் புளுகு மூட்டைக் கதைய உண்மை எண்டு நினைச்சு, அவேன்ர அம்மாவும் எங்கட அம்மாட்ட வந்துக் கத்த போறா.... இண்டைக்கு வீட்டில ஒரு பிரளயமே எதிர் பார்க்கலாம்" என்றவாறு பின்னால் ஓடினார்கள் அவர்களும்.
உண்மை தான், பிரச்சினை ஒன்று வந்தால் போதும், எதைப் பற்றியும் சிந்திக்காது தன் கூட்டாளிகளைக் கைக்காட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வாள் மிருதுளா. பாவம் உண்மை சொன்னாலும் சின்னவர்களின் பேச்சை யார் கேட்பார்கள்?
தொப்பலாக நனைந்து வீட்டுக்குள் நுழைந்தளை பார்த்து முறைத்த அன்னையான பரிமளா,
"பள்ளிக்கூடம் அப்பயே விட்டு்ட்டுது எண்டு பக்கத்து வீட்டுப் பொட்ட வந்துட்டாள். உனக்கு இப்பத்தான் விட்டதோ..." நக்கலாகக் கேட்டவருக்கு, அவளது கோலம் கண்டு அடிக்கத் தான் மனம் வந்தது, ஆனால் வந்திருப்பவர்கள் முன் கை நீட்ட முடியாதே?
"அப்பயே விட்டுட்டுது தானம்மா… ஆனா என்னட்ட தான் குடை இல்லையே! அதான் நனையாம மழை நிக்கும் எண்டு ஒதுங்கி நிண்டன். அதால நேரம் போச்சுது." என்றாள் பொய்யாய்.
"ஒஓ... அது தான் நனையாம வந்திருக்கிற போல…" பொய் சொல்கிறாள் என்று பச்சைப்படியாகத் தெரிந்தும், செய்வது அறியாமல் பாெறுமையை இழுத்து வைத்த வினவினார்.
"ஓ... நனையாம ஒதுங்கி நிண்டன் எண்டுட்டு, எப்பிடி நனைஞ்சன் எண்டு தானே இந்தக் கேள்வியா.? எனக்கு மட்டும் நனையோணும் எண்டு ஆசையே என்ன? நானும் மழை நிக்கும் நிக்கும் எண்டு பார்த்தன், அது நிண்ட பாடில்ல... அதான் நனைஞ்சாலும் பரவாயில்ல எண்டு வந்துட்டன். நான் நனைஞ்சதுக்கு நீங்கள் தானம்மா முழுக்கக் காரணம்." பொய் கூறுதும் இல்லாமல், புதிதாய் ஓர் புதிர் போடுபளை கேள்வியாய் பார்த்தவர்,
"ஓ... இண்டைக்கு மழை பெய்யும்... நீ நல்லா நனைஞ்சிட்டு வா எண்டு தான் உனக்குச் சொன்னன் பார்… " என்றார் எரிச்சலாய்.
"ஓம் நீங்கள் தான்… பள்ளிக்கூடம் விட்டு இவ்வளவு நேரமாயும் என்னைக் காணேல எண்டு, அங்க வரை தேடி வந்திடுவீங்கள் எண்டு தான் ஓடி வந்திட்டன்." என்றவளை இதற்கு மேல் பேச விட்டால், தனக்குக் கோபம் வரும் என்பதை தாண்டி, காரியத்தையே கெடுத்து விடுவாள் என்று நினைத்தவர்,
"கதைச்சுக் கொண்டு நிண்டது காணும். ஈரம் உடம்பில ஊறுறதுக்குள்ள போய் உடுப்ப மாத்திக் கொண்டு வா!" விரட்டாத குறையாக அனுப்பி வைக்க. சரியெனத் திரும்பியவள், அப்போதே தான் மூலையின் ஓரமாகப் பாய் ஒன்றில் அமர்ந்திருந்த பெரியவர்களைக் கண்டாள்.
அவர்களையேப் பார்த்தவாறு ஓலைக் கதவின் உள்ளே நுழைந்தவளை எதிர் பார்த்தவாறு பாயில் அமர்ந்திருந்த நான்கு தங்கையரையும் கண்டவள்,
"என்ன விஷயம்....? இதுக்குள்ள எல்லாம் ஒன்டா இருக்கிறீங்கள்... அதுவும் சத்தம் போடாம... என்ன அம்மா அடிச்சு இருத்தி விட்டுட்டுட்டாவோ?" என்றாள் அமைதி என்ற கதைக்கே அர்த்தம் அறியாத தங்கைகளின் அமைதியைக் கண்டு.
"ஊச்... பெருசா கதைக்காத... பேந்து உன்னால எங்களுக்கும் விழும்" என்று அவர்களில் மூத்தவள் எச்சரிக்க.
"அப்ப இதுக்கு முதல் விழேலயே...?" என்றாள் சந்தேகமாக. இல்லை என்பதாக மூவரும் தலையசைக்க,
"அப்ப ஏன் மூன்டு பேரும் இதுக்குள்ளயே இருக்கிறங்கள்?" என்றாள் குகுகுசுத்து.
"பெரியவ கதைக்கினமாம், சின்னவ வாய்ப் பார்க்கக் கூடாதாம்… வந்தவ போற வரைக்கும் சத்தம் வெளியால கேட்கக் கூடாதாம், அப்பிடிக் கேட்டா… அவயல் போன பிறகு, தோளை உரிப்பாவாம்." என்றாள் அவளுக்கு அடுத்ததாகப் பிறந்த தாமரை.
"அது சரி.... பணக்கார வீட்டுக் காத்து, எங்கட வீட்ட ஏன் அடிக்குது? அவேட்ட கடன் ஏதன் வாங்கி போட்டுக் குடுக்கேலயோ என்ன?" என்றாள் அவர்கள் யார் வீட்டு முற்றமும் மிதித்தியாதவர்கள் என்று அறிந்தவளாய்.
"தங்கட வீட்டில ஒரு பொடியன் இருக்காம், அவனுக்குக் கலியாணம் கட்டி வைக்கோணுமாம்... பொம்பிள கேட்டு வந்திருக்கினம் போல..."
"பொம்பிளயோ...! இஞ்ச எந்தப் பொம்புள இருக்காம்? அதுவும் இல்லாம, இவயலுக்கே வயசு எழுவது வரும், இவேன்ர பிள்ளைக்கு வயசு அம்பதாவது வராது." கூறிக் காெண்டிருக்கும் போது தான் நினைவு வந்தவளாய்,
"இவைக்கு தான் பிள்ளைகள் எண்டு ஆருமே இல்லையே தாமரை... பேந்து ஆருக்கு பொம்பிளக் கேட்டு வந்திருக்கினம்" என்றாள்.
"எனக்கு அது தெரியாது. அவயல் கதைச்சதக் கேட்ட வரைக்கம் சொல்லீட்டன். எனக்கெண்டா உன்னைத் தான் பொம்பிளக் கேட்டு வந்திருக்கினம் போலக் கிடக்கு" என்றாள் இவளைவிட இரண்டு வயதில் சின்னவள்.
"கிழட்டு வயசில சும்மாக் கிடக்கேலாம, வீடு வீடா திரிஞ்சு எங்கட உயிர வாங்கிறது. பொம்பிளப் பார்க்கிற அளவுக்கு எனக்கு என்ன வயசிப்ப…? அவைய விடு! அம்மா இப்ப என்ன சொல்லுறா…?" என்றாள் தாயின் முடிவு என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ள.
"நான் தான் சொன்னனே… வாய் பார்க்கிறன் எண்டு திரத்தி விட்டுட்டா எண்டு."
"நான் நல்லாப் படிக்கோணும்… அவயல் கேக்கினம் எண்டு, அம்மா மட்டும் ஓம் சொல்லோணும், அவாவையேக் கலியாணம் செய்யுங்கோ எண்டிடுவன்." என்றவள் தைரியத்தை பார்த்தத் தாமரைக்கு சிரிப்புத் தான் வந்தது.
ஆம்! மிருதுளா குழப்படி தான். ஆனால் தாய் சொல்லைத் தட்ட மாட்டாள். தட்ட மாட்டாள் என்பதை விட, தட்டும் தைரியம் அவளுக்கு இல்லை. அந்தளவிற்குக் கண்டிப்பானவர்.
தனி ஒருவளாக நின்று ஐந்துப் பெண் பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும் என்றால், கெடுபுடி இல்லாமல் எப்படி வளர்ப்பது?
நடுத்தரமான குடும்பம் தான் அவளது. தினக் கூலியிலேயே வாழ்க்கை நடத்தி வந்த அவர்கள் வாழ்வைப் பிரட்டிப் போடுவதைப் போல், குடிக்கு அடிமையாகிய அவளது கணவன் ஐந்தாவதளுக்கு ஒரு வயது இருக்கும் போதே இறந்து விட்டார்.
அடுத்த வேளை உணவிற்கே அல்லாடிக் கொண்டிருக்கையில், ஐந்துப் பெண் பிள்ளைகளின் பொறுப்பையும் எப்படி முடிப்பேன் என்று தவித்திருந்தபொழுது தான், சிறுவயதில் அவள் அன்னை செய்த பீடீ சுற்றும் தொழிலைத் தானும் கையில் எடுத்தாள்.
அவளது அன்னைப் பக்கத்திலிருந்து அவர் வேக வேகமாகக் கையில் வைத்து அந்த இலையினை உருட்டுவதை பார்க்கையில், அவளுக்கும் தானும் அதைச் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ, தலையில் நாலு கொட்டு வாங்கி அவரிடம் அதைப் பழகியது இப்போது கைக்கொடுத்தது.
வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றி பிள்ளைகளைச் சோற்றுக்கு குறையில்லாது வளர்த்து வந்தவருக்கு, மூத்தவள் வயதுக்கு வந்ததும் பயம் தொற்றிக் கொண்டது.
பட்டம் பதவியில் இருப்பவர்களுக்கே பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பயம் உண்டாகையில், அவருக்கு ஏற்படுவதில் தவறில்லையே!
"எப்படி உழைத்தாலும், ஒரு ரூபாவை அவரால் சேமிக்க முடியவில்லை. சாப்பாடு, படிப்பு என்று அதற்கே செலவிட சரியாக இருக்கையில், பிள்ளைகளுக்கென்று வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது சந்தேகம் தான். அதனால் படிப்பையாவது நிறைவாய் கொடுப்போம் என்று, அவர்களைப் படி படி என்றே தொல்லை செய்வார் பரிமளா.
அவரது வற்புறுத்தலாலோ அல்லது வீட்டின் நிலையினைக் கருத்தில் காெண்டோ, ஐந்து பேருமே படிப்பில் கெட்டிக்காரர்கள். ஆனால் உலகம் அறிந்திடா வெகுளிகள்!
"ஏன் இப்பப் பல்லைக் காட்டுற…?" என்றாள் அவளது நக்கல் சிரிப்பைக் கண்டு.
"ஒன்டும் இல்ல சாமி... நீ அம்மாட்டயே உன்ர கோபத்த காட்டு" என்றவள் மௌனம் ஆகிவிட,
"கதைக்க மாட்டன் எண்டு நினைக்கிற போல... என்ர வாழ்க்கைய நான் தான் முடிவு பண்ணோணும். அதால கதைச்சு தான் தீருவன்." முடிவோடு இருந்தவள், தானே திருமணத்திற்கு சம்மதிப்பாள் என்று சற்றும் நினைக்கவில்லை.

Last edited: