• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நேசம் - 20

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur
அத்தியாயம் -20

.தனது இழப்புகள் அனைத்தயும் இதில் ஈடுகட்டும் எண்ணத்தில் அவன் தீவிரமாக இருந்தான். உணர்வுகள் அவனுள் இருக்க அதற்கு உயிர் கொடுக்க வேண்டியது அவனின் மனைவியாகி போனாள்.எதிர்காலத்தை நோக்கி அவன் எடுத்து வைக்கும் ஒவொவொரு அடிக்கும் சறுக்கல்கள் மட்டுமே முடிவை அமைய அதன் வலி மனதில் அழியா ரணமாய் மாறி போனது. அந்த ரணத்திற்கு மருந்திடும் மயிலிறகாய் அமைந்த இந்த வாய்ப்பை அவன் எந்த காரணத்தை கொண்டும் தவற விடுவதில்லை என்ற முடிவில் இருந்தவன் ஆனால் அதை புரிந்து கொள்ள வேண்டியவளோ அதை உணராமல் மழையோடு விளையாடி கொண்டிருந்தாள்.


“இங்க பாரேன் ...இந்த மலர் வரமாட்டேன்னு அடம்பிடிச்சா ..இப்போ நம்மளவிட அவ தான் நல்லா என்ஜாய் பண்றா “ என தோழிகள் கிண்டல் செய்யவும்

“ம்ம் நானும் சின்ன வயசில இந்த மாதிரி சாப்பிட்டு இருக்கேன்.... அதும் மழையில நனையறது எனக்கு ரொம்ப பிடிக்கும்.....ஆனா கல்யாணத்திற்கு அப்புறம் எல்லாம் விட்டு போச்சு...எங்கும் போறதில்லை ” என அவள் சலிப்புடன் சொல்லவும்

“எப்படி விடாம இருக்கும்...கைலாசத்தை கல்யாணம் பண்ணினா காஷ்மீரும் குளுமனாளியுமா போக முடியும்....... கையில கமண்டலமும், கழுத்தில உதிராட்ச்சமும் தான் தான் மிஞ்சும்......... என கிண்டலாக சொன்னாள் ராஜி.

அதை கேட்டதும் மலரின் முகம் சுண்டிவிட... வேகமாக ஹே அப்படி எல்லாம் சொல்லாதீங்க....நான் ஏதும் அவர்கிட்ட கேட்டுகிறதில்லை....அதான் அவர் செய்யறதில்லை “ என அப்போதும் தன் கணவனை விட்டு கொடுக்காமல் அவள் பேச

உடனே சல்மா “ஆஹா மலரு உன் ஆளை பத்தி பேசினதும் மூக்கை விடச்சுகிட்டு எப்படி கோபம் வருது....உன் பதி பக்தியை கண்டு வியக்கிறோம் குழந்தாய்.....” என ஆசிர்வதிப்பது போல் கை உயர்த்தி போஸ் கொடுக்க உடனே அனைவரும் சிரித்து விட்டனர்.

“என்னப்பா நீயும் கிண்டல் பண்ற” என சிணுங்கலுடன் மலர் கேட்கவும்

“அட சும்மா மலரு....இதெல்லாம் ஒரு விளயாட்டுகாக தான்.....நம்ம இனி அடிக்கடி இங்க வரலாம்...இப்படியே ஜாலியா பேசிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு போலாம் சரியா” என சொல்லி கொண்டு இருக்கும்போதே

அப்போது “ம்க்கும்ம் அதெல்லாம் நடக்கிற காரியாமா ...அதான் அந்த கைலாசம் பீம்பாய் மாதிரி அந்த அண்ணாச்சியை இவளுக்கு அடியாளா வச்சிருக்காரே.....காலேஜ் பெல் அடிகிறதுக்கு முன்னாடி அவர் வந்து நின்றாரு... ஒன்னும் முடியலை......எப்படி மலரு நீ சமாளிக்கிற” என கிண்டலாக ராஜி கேட்க

மலரோ சிரித்துகொன்டே “ இல்லாத காலரை தூக்கி விட்டபடி அதெல்லாம் தானா வரும்” என பெருமையாக சொல்லவும்

“அது எப்படி வரும்” என ஒருத்தி கேட்க

“அது எப்படின்னு இப்போ தெரிஞ்சிடும் பாருங்க....மலரு அங்க பாரு” ...... என்றாள் கார்த்தி.

அங்க என்ன என கேட்டுகொண்டே திரும்பியவளின் விழிகள் நிலைகுத்தி போனது. வீரபாண்டி சாமி போல மாதேஷ் வரும் கோலத்தை பார்த்ததும் கைகளில் இருந்த ஐஸ்கிரீம் நழுவ கால்கள் அவளை அறியாமல் நடுங்க ஆரம்பித்தது.

தொலைவில் அவன் வந்து கொண்டிருந்தாலும் அவன் கண்களில் தெரிந்த கோப கனலும் , அவனது அழுத்தமான பாத சுவடுகளும், முகத்தின் இறுக்கமும் இவளுக்கு தெரிய புதிதாக பார்க்கும் தோழிகளே பயத்தில் சிலிர்த்து நிற்க மலரின் நிலைமை சொல்லவும் வேண்டுமா ... அந்த குளிரிலும் அவளுக்கு வேர்த்து கொட்டியது.

அதற்குள் கார்த்திகா “ஆஹா கைலாசம் இப்போ ருத்திர மூர்த்தியாக அவதாரம் எடுத்திட்டார் போல.....மலரு இன்னைக்கு தாண்டவம் கச்சேரி கன்பார்ம்” என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அருகில் வந்துவிட்டான் மாதேஷ்.

அவன் நெருங்கி வந்ததும் மலரின் பாதங்கள் பயத்தில் தானாக பின்னோக்கி செல்ல , அவளது தோழிகளோ கண்களில் பீதியுடன் அவனையே பார்த்து கொண்டு நின்று இருந்தனர்.


அதற்குள் ஒருத்தி கொஞ்சம் சுதாரித்து சார் வாங்க வாங்க.......அது வந்து நாங்க உங்களுக்காக புக்ஸ்” என சொல்லி கொண்டிருக்கும்போதே

அவனோ நிமிர்ந்து அவர்களை பார்க்கவும் அந்த பார்வையின் வீச்சில் அவளின் பேச்சு தானாக தடைபட கைகளை உயர்த்தி அவர்களை பேசவேண்டாம் என்றவன் மலரை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான். அவனது பிடியில் அவளது கை எலும்புகள் உடைவது போன்று வலிக்க துடித்து போனாள் அந்த மான்விழியாள்.



அவளை அழைத்து கொண்டு வீட்டிக்குள் வந்தவன் உள்ளே நுழைந்ததும் தன் பிடியில் இருந்து அவளை உதறிவிட்டு நேராக தன் அறைக்குள் சென்று அப்படியே கட்டிலில் சரிந்தான். அவளின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க வில்லை. மலரோ பயத்திலும், கை வலியிலும் அந்த அறையின் ஓரத்தில் ஒடுங்கி அமர்ந்தவள் .இரவு முழுவதும் இருவரும் அதே மனநிலையில் அப்படியே இருந்தனர்.

மறுநாள் காலை மலர் கொஞ்சம் தெளிவானாள். நான்றாக தூங்கி இருப்பான்......கோபம் குறைந்திருக்கும்....இப்போது நம் காரணத்தை எடுத்து சொன்னால் புரிந்து கொள்ளுவான் என்ற நம்பிக்கையில் அவனிடம் சென்றாள்.

ஆனால் அங்கு இரவு முழுவதும் விழித்திருந்து கண்கள் எல்லாம் சிவந்து வீங்கி இருக்க, மாலை அவளை அழைத்துவரும்போது அவன் முகத்தில் இருந்த அந்த கோபகனல் சற்றும் குறையாமல் அப்படியே இருக்க அதை பார்த்ததும் அவள் நம்பிக்கை சிறிது ஆட்டம் கண்டது. இப்போது பேசலாமா வேண்டாமா என ஒரு நிமிடம் யோசித்தாள்.

பின்னர் அவனிடம் பேசிய ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தவள் “ஏங்க...ஏங்க... நான்... ஏன் .....அங்க” என தடுமாற்றத்துடன் ஆரம்பிக்க அவனோ அவள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் வேகமாக கைகளை உயர்த்தி அவள் பேச்சை தடுத்தான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் “ஏங்க கொஞ்சம் நான் சொல்றத காது கொடுத்து கேளுங்க....எப்போ பார்த்தாலும் நீங்க சொல்றத மட்டும்தான நான் கேட்கிறேன்......இன்னைக்கு மட்டும் நீங்க கேளுங்க...நான் ஏன் அங்க போனனா” என வேகவேகமாக அவள் சொல்ல ஆரம்பிக்க

“ஏய் மரியாதையா பேசாம இங்க இருந்து வெளிய போ” என அவள் மீது எரிந்து விழவும்


மலருக்கு சுருக்கென கோபம் வந்துட்விட “நான் எதுக்கு வெளிய போகணும்...நான் உங்க பொண்டாட்டி....நீங்க எனக்கு தாலி கட்டி இருக்கீங்க...........நான் பேசாம வேற யாரு உங்ககூட பேசுவா....நான் இப்போ உங்ககிட்ட பேசியே ஆகணும்....என்னோட தரப்பு நியாத்தை சொல்லி ஆகணும்”..... என அவன் மனநிலை தெரிந்திருந்தும் அவளும் பிடிவாதமாக நிற்க

அதுவரை கண்களை மூடி படுத்திருந்தவன் அவள் பேசியதை கேட்டதும் விருட்டென எழுந்து “என்னடி சொன்ன ...என்ன வார்த்தைடி சொன்ன......உன்னை கல்யாணம் பண்ணினா நான் என்ன உனக்கு அடிமையா...நீ சொன்னதை எல்லாம் நான் கேட்கனும...நீ பண்றதை எல்லாம் நான் பொருத்துகனுமா” என அவள் தோள்களை பிடித்து உலுக்கியபடி அவன் கர்ஜிக்கவும் நடுங்கி போனாள் அவன் மனைவி.

அவள் தன்நிலையை விளக்கிவிடும் அவசரத்தில் சற்று குரலை உயர்த்த பேச அது அவன் மனதில் ஏற்கனவே கொதித்து கொண்டிருந்த சுவாலைக்கு எண்ணெய் போல் அமைந்து விட பொங்கி எழுந்திவ்ட்டன் மாதேஷ்...... அவனது பேச்சிலும் செயலிலும் உடல் நடுங்க அதிர்ச்சியில் அவள் முகம் வெளிறி போனது.

அவளது நிலையை பார்த்தும் அவனது மனம் லேசாக இலக பிடியை தளர்த்தவும் அவனிடம் இருந்து விலகி சுவற்றுடன் ஒன்டியவள் “இல்லைங்க நான் வந்து” என அவனை சமாதனபடுத்த அவள் முயற்சிக்க

.
அவனோ “போதும் மலர்...இதோடு நிறுத்திக்கோ......என்னால முடியலை......மத்தவங்களோட போட்டி போட்டு தோற்று போயிருந்தா கூட சந்தோஷபட்டிருப்பேன்...ஆனா எனக்குள்ளே போட்டிபோட்டு நானே தோத்து போயிட்டேன்” என சொல்லும்போதே அதுவரை இருந்த அந்த கம்பீர குரல் உடைந்து தடுமாற

அவளோ அவனின் வேதனை கண்டு பதட்டத்துடன் என்னங்க சொல்றீங்க......இல்லைங்க நீங்க தோற்க மாட்டீங்க..... நான் இருக்கிறவரை நீங்க தோர்க்க மாட்டேங்க.......அதுக்காகத்தான் நான்”... என அவசர அவசரமாக அவள் ஏதோ சொல்ல வர

அதற்குள் அவன் “போதும் இதோட நிறுத்திக்கோ ...இன்னும் எத்தனை கதை சொல்ல போற..... ஏண்டி ...ஏன் ...ஏன் இப்படி என்னை உசிரோட கொல்ற.....உலகத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ....உனக்கு நான் தான் கிடைச்சனா ......என்னோட ஆசை, கனவு.லட்சியம் எல்லாத்தையும் உன்னோட பிடிவாதத்தால பொசுக்கிட்டியே......எவ்ளோ ஏமாற்றங்களை கடந்து நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன் தெரியுமா ? ஒவ்வொரு முறையும் சறுக்கிவிழும்போது எல்லாம் அடுத்த முறை எப்படியும் ஜெயிச்சிடலாம்ன்ற நம்பிக்கையில நானும் முயற்சி பண்றேன்......ஆனா உன்னால ...உன்னால” என சொல்லும்போதே அவன் குரல்பிசிற “என் வாழ்கையை மொத்தமா அழிச்சிட்டியே” என நடந்ததை ஏற்று கொள்ள முடியாமல் அவன் குமரிகொண்டிருக்க

அதற்குள் அலைபேசி ஒலிக்க கோபத்துடன் எடுத்து பார்த்தவன் அடகடவுளே இவனோட தொல்லை தாங்க முடியலை என சலிப்புடன் அலைபேசியை அணைத்தான்.மீண்டும் மீண்டும் அது ஒலிக்கவும் எரிச்சலுடன் காதில் வைத்தவன் எதிர் முனையில்

“டேய் தம்பி தீபாவளிக்கு பிரியாணி போடலாமா? ஆடா..... கோழியா என்ன வேணும் ..... நீ தாண்டா புது மாப்பிள்ளை.....உனக்கு தான் ராஜ மரியாதை.....தங்களுது விருப்பம் என்னவோ அம்மா கேட்க சொன்னாங்க என நிலைமை தெரியாமல் மோகன் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

மாதேஷோ இருக்கும் கோபத்தில் “ம்ம்ம் ஆடும் வேண்டாம் கோழியும் வேண்டாம்....அதான் நான் இருக்கனே......எல்லாருக்கும் இளப்பமா......நீங்க எத சொன்னாலும் தலை ஆடேர்ன்ல.....முதல்ல என்னை போடுங்க” என கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்தவன் சேச்சே நமக்கும் வந்து சேரது எல்லாமே இப்படிதான் இருக்கு என எரிச்சலுடன் முனகியபடியே அறையை விட்டு வெளியே சென்றான்.

மலரோ அப்படியே பிரம்மை பிடித்தவள் போல் நின்று இருந்தால். அவளுக்கு இது போல் நடப்பது புதிதல்ல என்றாலும் ஏனோ இன்று மாதேஷின் கண்களில் தெரிந்த அந்த வலி அவள் இதுவறை காணாத ஒன்று. எப்பொழுதும் பேசும் வார்த்தைகள் தான் என்றாலும் அவனது பேச்சில் கோபமும், ஆத்திரமும் இருக்குமே தவிர வெறுமையும், வேதனையும் இப்பொது தான் பார்க்கிறாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருக்க அப்படியே சிலமணிநேரங்கள் நின்று இருந்தவள் பின்னர் ஒரு முடிவோடு அவன் பின்னே சென்றாள்..

.

அங்கு வரவேற்பு அறையில் தொலைகாட்சி சேனல் மாற்றுவதில் தனது கோபத்தை காட்ட்கொண்டிருந்தவன் முன் சென்று நின்றவள் “நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சிடுங்க.....நான் உங்களுக்கு உதவி செய்யம்னு நினச்சுதான் போனேன் ஆனா நீங்க தான் அதை புரிஞ்சுக்காம ஏதோ ஏதோ “ என நிறுத்திவிட்டு அவன் முகத்தை பார்க்க

அவனோ நிமிர்ந்து அவளை முறைத்தவன் “யாரு நீ .....எனக்கு உதவி செய்யற... நீ திட்டம் போட்டு தான் இப்படி நடந்திருக்கனு எனக்கு தெரியும்.........இப்பவும் நீ நினச்சத தான் சாதிச்சிட்ட .......நீ ஆசைபட்ட மாதிரியே அந்த வாய்ப்பு போய்டுச்சு ..... உன்னோட ஆசை நிறைவேறிடுச்சு...........இப்போ சந்தோசம் தானே ......எல்லாமே உன் விருப்பம் போல செஞ்சிட்டு இதில நீ எனக்கு உதவி பண்றியா.........சாத்தான் வேதம் ஓதறதுனு சொல்வாங்களே இதானா அது.... திட்டம் போட்டு பண்ணிருக்க....இது என்னோட கனவுனு நான் சொன்னதுக்கு அப்புறம் நீ இப்படி பண்ணிருக்க........உன்னை போய் நம்பினேன் பாரு என்னை சொல்லணும்...” ....... என அவன் மனது நொந்து பேசவும்

அவனது வேதனையில் துடிதுடித்து போனவள் “எனக்கு விருப்பம் இல்லைனாலும் உங்களுக்காக நான் போகலாம்னு தான் இருந்தேன்....எனக்கு நீங்க தாங்க எல்லாமே” என அவள் சொல்லி முடிக்குமுன்

“போதும் நிறுத்துடிஇஇ” என ஆக்ரோஷமாக கத்தி கொண்டே எழுந்தவன் “இப்படி சொல்லிதான நீ நினைச்சது எல்லாம் சாதிச்சுகிட்ட....அதான் உன் விருப்படிதான் தாலி கட்டிட்டேன்...நீ சொல்றதுக்கு எல்லாம் நான் தலை ஆட்டி தானே ஆகணும்........நீ ஜெயிச்சுட்ட ...அதானால் பேசு...என்ன வேணாலும் பேசு” என வார்தைகளை அவன் தணலாக கொட்டவும்



ஏற்கனவே புரையோடி இருந்த புண்ணில் மேலும் அவனது வார்த்தைகள் மனதை குத்தி கிழிக்க சும்மா வாய்க்கு வந்த படி எல்லாம் பேசாதீங்க என அதுவரை குரலிலும் செயலிலும் பணிவு காட்டியவள் அதே வேகத்தில் நிமிர்ந்து அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்து “நானும் பொறுத்து பொறுத்து போறேன்...நீங்க அளவுக்கு மீறி போசறீங்க.....ஆமாங்க நான் தான் உங்களை விரும்பினேன்....ஆனா கல்யாணம் நீங்களும் சம்மதம் சொல்லிதானே நடந்திச்சு......நான் என்னை உங்களை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணினேனா ....உங்க அப்பா அம்மா என் அப்பா அம்மா எல்லார் முன்னாடியும் நீங்க என்னை கட்டிகிறதுக்கு சம்மதம் சொன்னீங்க.....என்னை பிடிக்காதவரு அப்பவே வேண்டாம்னு சொல்லி இருக்க வேண்டியது தான......உங்க கனவு எல்லாம் என்னாலதான் அழிஞ்சதுன்னு சொல்றீங்களே ...என்கூட மணிகணக்கா போன்ல பேசும்போது அது உங்களு தெரியலியா...என்னை மட்டுமே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க ” என அதுவரை மனதில் அடைத்து வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் அவனது பேச்சில் வெடித்து வெளியே வந்தது.

அதற்குள் “போன்லயும் இந்த கல்யாணம் வேண்டாம்னுதான நான் சொன்னேன்” என அவன் பதிலுக்கு பேசவும்

“வேண்டாம் வேண்டாம்னு சொல்றதுக்கே மாசம் இருபதாயரம் போன் பில் நீங்கதான கட்டினீங்க ..... ஒரு விஷயம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டா அதுக்காக இருபாதியிரம் செலவு பண்ணுவாங்களா ......இரண்டவது அழைப்புலே என் போனை கட் பண்ணிருந்தா பிரச்சனயே இருந்திருக்காதே.....

அப்புறம் அது என்ன உன்னாலதான் எனக்கு எவ்ளோ ஏமாற்றம் ,இழப்பு, அவமானம் அப்டின்னு இப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்களே.....

“அவமானம்னா உங்களுக்கு மட்டும் தான ......அதோட வலிய நீங்க தான் அனுபவச்சு இருக்கீங்களா....ஏன் நாங்க அனுபவிக்கலையா” என சொல்லும்போதே அவளின் அதரங்கள் துடிக்க வார்த்தைகள் எரிமலையாய் வெளிவந்தது. “தன் உசிரைவிட என்னை பெருசா நினச்ச பெத்தவங்க முன்னாடி, பாசத்தயும் அன்பையும் கொட்டி வளர்த்த அண்ணன் முன்னாடி ,சுயமா உழச்சு முன்னேறி எப்படி உய்ரந்திருக்கான் பாரு எங்க அப்பாவ பெருமையா பேசினா ஊரு முன்னாடி நீங்க யாரும் வேண்டாம் எனக்கு மாதேஷ் தான் வேணும்னு நான் சொன்னேன் பாருங்க அப்போ எங்க அப்பா, அம்மா,அண்ணன் பட்ட அவமானத்தைவிடவா நீங்க அந்த வலியை உணர்ந்திருப்பீங்க”......என மூச்சுவிடாமல் பேசியவள் தொடர்ந்து

“அதுவரை என்கிட்டே மரியாதையா பேசிகிட்டு இருந்த ஊர் பசங்க எல்லாம் நான் உங்களை பிடிச்சிருக்குனு சொல்லி அதுக்கு நீங்க எனக்கு இவள பத்தி எதுவும் தெரியாதுனு சொன்னதை கேட்டதும் அவங்க எல்லாம் என்னை பார்த்த பார்வை இருக்கே ஐயோ இப்போ கூட அதை என்னால நினச்சு பார்க்க முடியலை. அதைவிடவா நீங்க பெரிய அவமானத்தையும் வலியையும் பட்டிருப்பீங்க......ஏன் உங்க குடும்பத்திலே என்னை எப்படி எல்லாம் ஒவோவோருதரும் பேசினாங்க ...... ஆனா என்னைக்கவது உங்ககிட்ட அதை பத்தி சொல்லி இருப்பனா ......என்னோட வலி எனக்குள்ளே இருக்கட்டும்தானே விட்டுட்டேன்.....என்றவள் தொடர்ந்து

“அது ஏன்னா உங்களுக்கு மட்டும்தான் கனவு ஆசை எல்லாம் இருக்குமா ...எனக்கு இருக்காதா......ஆசைப்பட்ட ஒரே காரணத்திற்காக என்னோட உணர்வுகளை நான் அழிச்சிகிட்டு வாழனுமா? அதோட வலி நானும் அனுபவிச்சிருக்கேன்” என சொல்லும்போதே கதறி அழுதவள் “ஊர்ல என்னை எத்தன பேர் எப்படி எல்லாம் பேசினாங்க.....அத்தனையும் மனசில தாங்கிட்டு அமைதியாதானே இருந்தேன்...... இதெல்லாம் எதுக்காக... நான் உங்களை மனசார காதலிச்சேன்.......என்னோட உயிர் நீங்கதான்னு நம்பினேன்......என்மேல உங்களுக்கு காதல் இல்லாட்டியும் கண்டிப்பா அன்பாவது இருக்கும்னு நினச்சேன்......ஆனா நீங்க என்ன வார்த்தை பேசிட்டிங்க.....

அப்படி என்னங்க நான் பாதகம் பண்ணிட்டேன்......உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க......என்னை உங்களுக்கு பிடிக்களை......என்கூட ஆறு மாசம் குடும்பம் நடத்தி இருக்கீங்க.........உங்க வார்த்தையை மீறி நான் அப்படி என்ன செஞ்சேன்.....என் கண்ணை பார்த்து சொல்லுங்க” என அவள் ஆக்ரோஷமாய் அவன் முன் நிமிர்ந்து நிற்க மாதேஷோ பேச்சற்று நின்றான்.

அவனின் மௌனம் அவளுக்கு மேலும் வேதனை கொடுக்க “எனக்கு தெரியும். காதலும் நேசமும் கட்டாயத்தினால வரதில்லை. ஆனா இரண்டு பேருக்கு நடுவுல யாரோ ஒருத்தருக்கு உண்மையான நேசம் இருந்தா அது இன்னொருத்தர் மனசில காதலுக்கான சுவாசத்தை கண்டிப்பா கொடுக்கும்.என்னோட நேசம் கண்டிப்பா உங்க சுவாசத்தில் காலத்துக்கும் கலந்திருக்கும்.எனக்கும் நம்பிக்கை இருக்கு. நீங்களே என்னை வெறுத்து ஒதுக்கினாலும் நான் உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன்.....நான் வாழனும்...உங்களோட நூறு வருஷம் ஏன் அதுக்கு மேலயும் வாழனும்.....இது சுயநலம்னு நினச்சாலும் எனக்கு அத பத்தி கவலை இல்லை.

ஆனா உங்களுக்கு மட்டும் தான் வலியும் வேதனையும்னு நினைக்காதீங்க......அதுவும் என்னை தாண்டி தான் உங்ககிட்ட வரும்......முதல்ல நான் அனுபவிச்சு தான் அடுத்தது நீங்க அனுபவிப்பிங்க......அது சந்தோஷமா இருந்தாலும் சரி துக்கமா இருந்தாலும் சரி அதிலும் முதல் நான் தான்” என அழுத்தமாக சொல்லிவிட்டு தங்களது அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டாள்.
 
  • Like
Reactions: sumiram