அத்தியாயம் – 22
அந்த சாயும் நேரம் வீட்டிற்குள் அவன் நுழைந்ததும் பார்த்தவளின் விழிகள் அசைவற்று நின்றன.......எந்த அசைவும் இல்லாமல் சிலை போல் அவனை பார்த்தபடியே நின்று இருந்தாள். மோகன் தகவல் சொல்லி இருந்தாலும் அவனை நேரில் பார்த்ததும் அவளால் பேச முடியவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் அருவியாக கொட்டி கொண்டி இருந்தது......அவளது கலைந்த தலைமுடியும் சோர்ந்த விழிகளும் அவளின் நிலையை உணர்த்தினாலும் அதை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றவன் பெட்டியை எடுத்து கொண்டு வெளியே வந்தான்.
“வா போகலாம்” என்ற படி அவளை இழுத்து கொண்டு வீட்டை பூட்டிவிட்டு நடந்தான். அவளோ எந்த கேள்வியும் கேட்கவில்லை. அவன் பின்னே நடந்தாள்.
கதவை திறந்த குணவதி திகைத்து போய் நின்றாள். “ஐயோ மலரு...என்னடி இப்படி வந்து நிற்கிற” என அவள் அலற
“அத்தை இப்போ எதுக்கு சத்தம் போடறிங்க......முதல்ல வீட்டுக்குள்ள போங்க” என சாதாரணமாக சொல்லியபடி உள்ளே வந்தவன் “மலரு நீ போய் குளிச்சுட்டு சாப்பிட்டு இரு ...எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு ...நான் போயிட்டு வரேன்” என சொல்லிவிட்டு எழுந்தான்.
அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருக்க குணவதியோ பதட்டத்துடன் “மாப்பிள்ளை என்ன நடந்தது ...ஏன் என் பொண்ணு இப்படி இருக்கா......ஐயோ கடவுளே இதுக்குதான வேண்டாம்னு சொன்னேன் ..... இப்போ அவளே அவ தலையில மண்ணை அள்ளி போட்டுகிட்டாளே......எப்படி வளர்த்த பொண்ணு இப்படி வந்து நிற்கிறாளே” என அரற்றவும்
“ஐயோ அத்தை கொஞ்சம் பேசாம இருக்கீங்களா.....இவ காலில இருந்து சாப்பிடலை... அதான் இப்படி இருக்கா.......முதல்ல அவளுக்கு சாப்பாடு கொடுங்க.....நான் வந்து விபரம் சொல்றேன்” என அதிகாரமாக சொல்லிவிட்டு விறு விறுவென வெளியே சென்று விட்டான்.
இரவில் உறங்காமல் வெகு நேரம் தனது அறையில் சுவற்றை பார்த்த படியே அமர்ந்திருந்தாள். திடீரன கதவு திறக்கும் ஓசை கேட்டதும் திடுக்கிட்டு திரும்பியவள் மாதேஷை பார்த்ததும் திகைத்து போனாள்.
அவனோ முறைத்த படியே உள்ளே வரவும் அவள் உடலில் லேசான நடுக்கம் ஏற்பட என்ன பேசுவது என தெரியாமல் அவனை பார்த்தபடியே நின்று இருந்தாள்.
அவனை அப்போது அவள் எதிர்பார்க்க வில்லை. ஏனனெனில் மதியம் விட்டு சென்றவன் அதற்கு பிறகு வரவே இல்லை. அலைபேசி அழைப்பும் எடுக்க படவில்லை. அதனால் அவன் தன் மீது அளவு கடந்த கோபத்தில் இருக்கிறான்.....தன்னுடன் பேசமாட்டான் .. அதனால் தான் தன்னை இங்கே விட்டு விட்டு போய் விட்டான்..... என அவள் நினைத்திருக்க அதற்கு மாறாக அவன் அறைக்குள் வந்ததும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் அமைதியாக நின்று இருக்க அவனும் அவளை பார்த்தபடியே நின்று இருந்தான்.
சில வினாடிகள் அப்படியே செல்ல “உங்க வீட்ல எல்லாம் நின்னுகிட்டே தான் தூங்குவிங்களா” என குரலில் கடுமையும் கண்களில் கேலியுமாக அவன் கேட்கவும்
அவன் பேச்சில் முதலில் அதிர்ந்து ம்ம்ம் ஆமாம் என தலை ஆட்டியவள் பின்பு அவன் கேட்டதின் அர்த்தம் புரிந்து இல்லை என வேகமாக மறுத்து ஆட்ட
“ அப்புறம் இப்படியே தூண் மாதிரி நிக்கிற......ஏண்டி இருக்கிறதே பத்துக்கு பத்து ரூம்.....அதில பாதி அடைச்சுகிட்டு நீ நிக்கிற..... ஒரு மனுஷன் எங்க தாண்டி படுக்கிறது” என கொஞ்சம் அதிகாரமாக கேட்கவும்
“இல்ல ...இல்ல ...அது வந்து என்ற படி தடுமாறியவள் நான் ...என்...நீங்க இங்க படு..... என உலரியவள் வேகமாக சுவற்றோடு ஓட்டி நின்றபடி நீங்க இந்த கட்டில்ல படுங்க” என அவனுக்கு வழி விட்டாள்.
“இதை சொல்றதுக்கு உனக்கு இவ்ளோ நேரமா ... உங்க வீட்ல உன் அறையில படுக்காம வேற எங்க படுக்கிறது........என அவன் கடுகடுக்க சுவற்றோடு ஓட்டி போனாள் அவன் மனையாள்.
பின்னர் அவன் சாவகாசமாக கால் நீட்டி நன்றாக படுத்தவன் மறுபடியும் அப்படியே நிற்காம அந்த விளக்கை அணைச்சுட்டு படு என அவளுக்கு ஆர்டர் போட்டு விட்டு திரும்பி படுத்தான்.
இங்கு மலருக்கோ தலை சுற்றி போனது.....நடப்பது எதுவும் அவளுக்கு புரியவில்லை. “இவர் இங்க வந்திருக்கிறத பார்த்தா என் மேல கோபம் இருப்பது போல தெரியலை என்றவள் அதை நினைக்கும்போதே மனதில் ஒரு சந்தோசம் ஊற்று போங்க ஆனா அதே நேரத்தில் முகத்தை பார்த்தா கடுகடுன்னு தான் இருக்கு என அதற்குள் ஒரு சந்தேகம் முளைக்க ஏண்டி மலரு உன் புருஷன் என்னைக்கு சிரிச்ச முகத்தோட உன்கிட்ட பேசி இருக்கான் ...இப்போ பேசறதுக்கு என அவள் மனசாட்சி இடித்துரைக்கவும் ஆமா ஆமா அதுவும் சரிதான்...இப்போதைக்கு இதை இப்படியே விட்ரலாம்...எதா இருந்தாலும் காலையில பேசிசிக்லாம்..... இதுவரை பேசி கெட்டது போதும்...இனி கொஞ்சநாள் அமைதியா இருக்கணும்” என தனக்குள்ளே சொல்லிக்கொண்டு உறங்குவதற்கு தலையணை பெட்ஷீட் தேட அப்போது ஒரு பொருள் கைபட்டு கீழே விழுந்தது.
“சத்தத்தில் புரண்டு படுத்தவன் ஏண்டி ஒரு மனுஷன நிம்மதியா தூங்க விடமாட்டியா......பெருச்சாளி மாதிரி உருட்டிகிட்டே இருக்க”....... என அவன் திட்டவும்
அவன் பேச்சில் கோபம் வந்தாலும் பதில் சொல்லாமல் தனது கையை தலையணையாக கொண்டு தரையில் படுத்தால் மலர். “என் வீட்லயே என்னை தரையில படுக்க வச்சிட்டான்” என முனகியபடி படுத்தவள் மனதில் ஏதோ ஏதோ எண்ணங்கள் ஓட அப்படியே உறங்கியும் போனாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளின் மீது ஏதோ கனமான பொருள் விழுவது போல் இருக்க அவள் வேகமாக நகர முயற்சிக்க முடியாமல் போனது.
“ஹே யாரு” என அவள் முடிக்கும் முன் அவள் இதழ் சிறைபட அதிர்வில துள்ளி குதித்து எழ முயற்சிக்க “ஏய் குள்ளச்சி நான் தான் ...ஏன் இப்படி அலற” என காதில் ஒரு குரல் கேட்க அவளது சப்த நாடிகளும் சிலிர்த்து போனது.
பின்பு இருக்காதா.....சிறிது நேரத்திற்கு முன்பு வரை எண்ணெயில் விழுந் கடுகு போல வார்த்தைகளால் பொரித்து எடுத்து கொண்டிருந்தவன் இப்போது தன்னை வாரி அணைத்து காதலால் கனிந்து பேசும்போது அதை உணர்ந்து கொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது.
“என்னங்க...நீங்க” என அவள் பேச ஆரம்பிக்க
அவனோ பேசவிடாமல் அவள் வாயை அடைத்தவன் “போதும் மலர் மலரு...நம்ம ரொம்ப பேசிட்டோம்...... வாழ்நாள் முழுவதும் பேச வேண்டியதை இந்த கொஞ்ச காலத்தில பேசிட்டோம்........இனியாவது பேச்சை குறைச்சு வாழ்ந்து பார்ப்போம்..ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிப்போம்”... என சொல்லவும்
“அப்போ என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா” என அவள் அதிலே நிற்க
“எனக்கு எப்பவும் உன் மேல கோபம் வந்ததில்லடி...என் மேல தான் எனக்கு கோபம்....சரி சரி அதெல்லாம் காலையில பேசிக்கலாம்....இப்போ நான் நல்ல மூட்ல இருக்கேன்...கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுடி” என சரசமாக பேசிகொண்டே அவளை தழுவ அதற்கு மேல அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவனது கைகளில் அவளது உடல் கொடி போல வளைந்து நெளிய கரைகானத காதலில் இருவரும் கசிந்துருகி கலந்தனர்.
ஒருவாரம் கழித்து உமையவளுக்கு தன்னில் சரிபாதி கொடுத்து சக்தியும் சிவனும் ஒன்றே என்று உலகிற்கு உணர்த்திய அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் இறைவனை வணங்கி விட்டு இருவரும் வெளியே வந்தனர்.
முகம் முழுவதும் புன்னகை நிரம்பி அன்று பூத்த மலர் தன்னுடன் இணைந்து நடந்து வரும் மனைவியை பார்க்க பார்க்க மாதேஷிற்கு பெருமையாக இருந்து. பின்பு இருக்காதா ...பழையதை பற்றி பேசாதே என்று சொன்ன ஒரே காரணத்திற்காக இன்று வரை அவள் அன்று எங்க போனீங்க ..என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எப்போதும் போல நடந்து கொண்டாள். திடீரென அவளை தழுவிய போதும் அவள் வெறுப்பு காட்டவில்லை...காதலையே காட்டினாள். அந்த நொடி தான் தனது தவறை உணர்ந்தான் மாதேஷ்.
“என்னங்க இங்க கொஞ்ச நேரம் உட்காறலாமா” என அவள் கேட்கவும் அந்த படியை பார்த்ததும் அவனுக்கு மோகனுடன் பேசியது நியாபகம் வந்தது.
“உங்களுக்கு வேலை இருந்தா வேண்டாம் ..போலாம்” என அவள் சொல்ல
“இல்லை இல்லை உட்காறலாம்” என்றவன் இருவரும் அமர்ந்தார்கள்.
அவன் அருகில் அமர்ந்தவள் அவன் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டாள். பின்னர் “ஏங்க நான் நிஜமாவே ரொம்ப அதிர்ஷ்டசாலி......எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை. என்னை பாசமா பார்த்துக்கிற புருஷன்” என அவள் சொல்லவும்
மாதேஷோ அதிர்ந்து அவளை பார்க்க
“உங்களை எனக்கு தெரியும்........உங்க மனசில நான் தான் இருக்கேன்...நான் மட்டும் தான் இருக்கேன் ” என சொல்லும்போது அவள் குரலில் தெரிந்த அந்த கர்வம் அவனை சற்று அசைத்து பார்த்தது.. “ஆமாங்க என் காதலை சொல்லும்போது நான் உங்க மனசில இருந்தனானு தெரியாது...ஆனா கல்யாணத்தின் போது உங்க மனசில நான் இருந்தேன்.....உங்க கண்ணுல என் மீதான காதல் தெரிஞ்சுது....நான் இப்போ சொல்றது உங்களுக்கு பைத்தியகாரதனமாக தெரியலாம்......ஆனா அதான் உண்மை” என அவள் அழுத்தமாக சொல்லவும்
“மலரு நானும் உன்கிட்ட அதான் ” என அவன் சொல்ல வருமுன்
அவன் வாயை அடைத்தவள் “வேண்டாம் நீங்க சொல்லி தான் உங்க நேசத்தை நான் புரிஞ்சகனும்னு அவசியம் இல்லை......அது எனக்கு தெரியும்......எனக்கு விளக்கம் சொல்லனும்னு அவசியம் இல்லைங்க........உங்களை நீங்க வருத்திகாதீங்க.......முடிஞ்சத பத்தி பேசவேண்டாம் என அவள் தடுக்கவும் பேச்சின்றி நின்றான் மாதேஷ்........
மோகனிடம் பேசிய பிறகு அவனது தவறுகள் புரிந்தது. ஆனாலும் அதற்காக மலரிடம் சென்று மன்னிப்பு கேட்க அவனது மனம் இடம் தரவில்லை. அவள் தனது நேசத்தை வார்த்தையால் வெளிபடுத்தினாள். இவனோ செயலால் அவளுக்கு உணர்த்த விரும்பினான். அதே நேரத்திள் தனது தவற்றால் அவள் பட்ட துயரத்திற்கு எல்லாம் சேர்த்து அவளை சந்தோஷபடுத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்....... அதனால் தான் அவளிடம் எதுவும் சொல்லாமல் அவளை தன்னவளாக்கி கொண்டான்.... ஆனால் இப்போதோ அவன் மனதில் நினைத்திருந்ததை அவன் மனைவி புரிந்து... அவன் வருத்தபடகூடது என சொல்ல...அதை கேட்டதும் மனதில் கொஞ்சம் ஓட்டி கொண்டிருந்த இருந்த அந்த ஈகோவும் தகர்ந்து போக என் மனைவி என்னை எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறாள் என்ற பெருமிதத்துடன் அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சில் வைத்து கொண்டான்..
சில நாட்கள் கழித்து மாதேஷின் வீட்டில் “இன்னும் என்ன பண்ற நேரமாகுது பாரு ...சீக்கிரம் வா” என அவன் கத்தி கொண்டிருக்க
“இதோ வந்திட்டேன் ...... எப்போ பார்த்தாலும் அவசரம்......கிளம்பி வர வேண்டாமா” என ஒரு பெட்டியோடு அவள் வரவும்
“என்ன மாதேஷ் தம்பி எங்க கிளம்பி இருக்கீங்க?” ....என்றபடி அங்கு வந்தாள் மீனாட்சி.
“அண்ணி மூன்று நாள் லீவு வருது... அதான் நாங்க இரண்டு பேரும்” என்றவன் வாக்கியத்தை முடிக்காமல் “ஆமாம் நம்ம கடைக்கும் லீவு தான .......இந்நேரம் அண்ணா கிளம்பி இருப்பாரே....”..... என கேட்க
“ம்ம்ம்க்கும் என பெருமூச்சு விட்டவள் ......எங்க போறது இன்னும் கும்பகர்ணன் மாதிரி படுத்து தூங்கிட்டு இருக்கார்....அதற்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும்” என்றபடி தனது தங்கையை மேலும் கீழும் அவள் பார்க்க இரவும் கணவன் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஓடிகொண்டிருந்தது.
“ஏங்க மூணு நாளைக்கு லீவு வருது ...... நாம் பக்கத்து வீடு ராஜிக்கா எல்லாம் குடும்பத்தோட ஏற்காடு போறாங்க ..... வேன்ல இடம் இருக்கு...நீங்களும் வரீங்களான்னு கேட்டாங்க......பாப்பா பிறந்தில இருந்து நம்ம சேர்ந்து எங்கும் வெளியே போகலை அதானால் போயிட்டு வரலாம்” என கெஞ்சினால் மீனாட்சி.
“இங்கபாரு மீனாட்சி என் தம்பியும் மலரும் லீவுக்கு வந்து இருக்காங்க.....இப்பதான் பிரச்சனை எல்லாம் முடிஞ்சு ஒன்னு சேர்ந்து இருக்காங்க.....இந்த நேரத்தில் அவங்களை விட்டுட்டு நம்ம மட்டும் வெளியே போறது சரியில்லை.....சின்ன பசங்க அவங்களே வீட்ல இருக்கும்போது நம்ம ஊருக்கு போறது சரிபடாது ...அதெல்லாம் வேண்டாம் ” என மறுத்து விட்டான் மோகன்.
இப்போது மாதேஷ் கிளம்பி நிற்கவும் அதை பார்த்ததும் மீனாட்சிக்கு காதில் இருந்து புகை வர
அதற்குள் ஏற்றார் போல் “மீனாட்சி பாப்பா அழுகிறா பாரு.....தம்பி தூங்கிட்டு இருப்பான்....... அவங்களுக்கு தொந்தரவா இருக்க போகுது ” என்றபடி அறைக்குள் இருந்து வெளியே வந்த மோகன் பெட்டியோடு நிற்கும் தமையனை பார்த்ததும் “எங்கடா தம்பி கிளம்பிட்ட”.என கேட்டான்.
“மூணு நாள் லீவுக்கு ஏற்காடு போறோம்ண்ணா....அதான்” என்றான் மாதேஷ்.
“என்னது ஏற்காடா....சொல்லவே இல்லை” என மோகன் கேட்க
உடனே மோகனின் அருகில் வந்தவன் “அண்ணா நான் என்ன டூர் போறனா ........ எல்லாருக்கும் சொல்லிட்டு போக.....நாங்க ஹனிமூன் போறோம்ண்ணா...அதை எல்லாம் சொல்லிட்டா போவாங்க” என கிசுகிசுக்கவும்
“போன மாசம் தான போயிட்டு வந்தீங்க ...மறுபடியும் என்னாடா” என மோகன் வேகமாக கேட்க
“அது போனமாசம் ..இது இந்த மாசம்” என மாதேஷ் சிறித்து கொண்டே சொல்ல
மோகனோ திருதிருவென முளித்தபடி மனைவியை பார்க்க அவளோ அவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவள் விருட்டென அறைக்குள் சென்றாள்..
“என்னண்ணா ஏதாவது பிரச்சனயா...மீனாட்சி அண்ணி உங்களை பாசமா பார்த்திட்டு போறாங்க” என கேலியாக கேட்டான் மாதேஷ்.
“ஏண்டா பேசமாட்ட ....இதெல்லாம் உனக்கே நியாமா இருக்கா.....ஆனாலும் மூணு மாசத்தில ஆறு முறை ஹனிமூன் போனது உலகத்திலே நீ ஒருத்தன் தாண்டா..... என பல்லை கடித்தபடி மோகன் சொல்ல
“போங்கண்ணா எனக்கு வெட்க வெட்காம வருது” என மாதேஷ் வெட்க படுவது போல் நடிக்கவும் அவனை கொலைவெறியுடன் பார்த்தான் மோகன்.
“நீ முடிவோடதான் இங்க வந்திருக்க ...ஏண்டா போறது தான் போறீங்க...உங்க வீட்ல இருந்தே கிளம்பி போக வேண்டியது தான......இங்க வந்து கிளம்பி என் வீட்ல கும்மி அடிச்சு விட்டு போற.........இப்போ உள்ள போனா உசிரோட திரும்ப வெளியே வருவானான்னு எனக்கே தெரியலையே” என புலம்பவும்
“அண்ணா எல்லாம் முடிஞ்சதும் சேதாரம் எவ்ளோனு எனக்கு ஒரு மெசேஜ் கொடுங்க” என சிரித்தபடி போகிற போக்கில் மாதேஷ் சொல்லிவிட்டு செல்ல “எல்லாம் என் நேரமடா” என்றபடி மீனாட்சி பின்னால் சென்றான் மோகன்
மூன்று வருடம் கழித்து “ஏண்டி இங்க குழந்தை அழுதுகிட்டு இருக்கு......கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா?” என அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குள் உள்ளே நுழையும் போதே கத்தி கொண்டு வந்தான் மாதேஷ்.
“இதோ வந்திட்டேன்................. உங்களுக்கும் உங்க பையனுக்கு எல்லாத்திலும் அவசரம் தான்... நீங்க வர நேரம்...அதான் கிரீன் டீ போட்டு, நீங்க குளிக்க டவல் எல்லாம் எடுத்து வச்சிடலாம்னு உள்ள போனேன்...அதுக்குள்ள உங்க பையன் கத்தி ஊரை கூப்பிட்றான்....கொஞ்சம் கூட பொறுமை இல்லை”... என சலித்து கொண்டே வந்தாள் மலர்....ஆம் இவர்களின் நேசத்தின் சுவாசத்தில் பூத்த புது மலர் இந்த குட்டி இளவரசன் மித்ரன். பயங்கிற சுட்டி.....இப்போது அழுது கொண்டிருப்பதும் அவன்தான்.
“உங்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்.....முதல்ல குழந்தையை கவனி...எனக்கு தேவையானதை நான் பார்த்துகிறேன்னு ..... நீ திருந்தவே மாட்டியா “என சொல்லும்போது குரலில் லேசான சலிப்பு இருந்தாலும் முகத்தில் பெருமிதம் நிறைந்திருந்தது.
இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான். எந்த ஒரு பெண்ணும் குழந்தை பிறந்த பின்பு அந்த குழந்தைக்குதான் முழு கவனிப்பும் இருக்கும்.....கணவர் இரண்டாம்பட்சம் ஆகிவிடுவார். ஆனால் மலரோ அதற்கு நேர் மாறாக இருந்தாள். இப்போதும் மாதேஷிற்கு தேவையானதை செய்து விட்டுதான் குழந்தையை கவனிப்பாள். இதை அவனும் அறிவான். அதில் அவனுக்கு சிறிது கர்வமும் உண்டு..
“சரி சரி எல்லார்த்துக்கும் ஒரு சாக்கு சொல்லு.... அவனுக்கு பசிக்கும் போல இருக்கு...ஏதாவது சாப்பிட கொடு என்றவன் “என்னடா தங்கம்...எதுக்கு அழகிறீங்க...அம்மா இப்போ சாப்பாடு கொண்டு வருவாங்க....நீங்க சமத்தா சாப்பிடுவீங்களாம்” என கொஞ்சி கொண்டு இருக்கும்போதே பால் பாட்டிலை அவன் கைகளில் திணித்தவள் “இதை அவனுக்கு கொடுங்க...உங்களுக்கு டின்னர் ரெடி பண்றேன்” என சொல்லிவிட்டு சென்றாள்.
“ஏன் மலரு டாக்டர் தான் பால் கொடுக்க வேண்டாம்னு சொன்னாருல்ல.....அப்புறம் எதுக்கு கொடுக்கிற” என அவன் சத்தம் போட
“இங்க பாருங்க அவன் இட்லி சரியா சாப்பிடலை ...அதனால பால் கொடுத்தேன்..... அதனால் ஒன்னும் தப்பில்லை” என்றாள் .....
“ஏண்டி நான் சொல்றது தான் கேட்க மாட்டேன்கிற...டாக்டர் சொல்றதையும் கேட்க மாட்டியா.....நீ நினச்சத தாண்டி செய்யற ...உன்னை எல்லாம் திருத்த முடியாது. முதல் பலி ஆடு நானு...இப்போ என் மகனா?” என வேகமாக கேட்டவன் அதற்கு பின்பே தான் சொன்னதின் அர்த்தம் பிடிபட நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க அவளோ அதை கண்டு கொள்ளாமல் “ஆமா எப்போ பார்த்தாலும் என்னையே குறை சொல்லுங்க” என்றபடி தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்...கண்களில் காதல் ததும்பி நிற்க இமைக்காமல் தன் மனைவியை பார்த்து கொண்டிருந்தான் அந்த காதல் கணவன்.
ஆம் சில வார்தைகளை எப்போதும் போல் மாதேஷ் சொல்லிவிட்டு பின்னர் வருத்தபடுவான். ஆனால் மலரோ அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. அவனை அப்படியே ஏற்று கொண்டாள். அவனோடு வாழும் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்கிறாள். அதை அவனும் உணர்ந்திருந்தான்.
ஒவ்வொரு நாளும் அவன் மீது கொண்ட நேசத்தையே சுவாசித்து அவனது ஒவ்வொரு அனுவிலும் கலந்து கரைந்து நிறைந்திருந்தாள். மாசில்லாத தனது காதலால் அவன் மனதை வென்று என்றும் அவன் இதயத்தில் முடிசூடா ராணியாக இருக்கிறாள் இந்த மான்விழியாள்.....
நன்றி.!!