நேசம் - 8
பிடிக்கவில்லை என்றாலும், கடமையேயெனச் சமைத்து உண்டவள் கண்கள் சொருவிக் கொண்டு வந்தது. இப்போதெல்லாம் நித்தரையை தவிர அவள் சந்தோசம் காண்பதற்கு எதுவும் இருந்ததில்லை.
அன்றைய வெப்ப நிலையோ முப்பத்தியொன்று என டீவியின் ஓரம் காட்ட,
"கடவுளே... முப்பத்தி ஒன்டுக்கா இப்பிடி அவியுது? ஊரில முப்பத்தி ஏழு வந்தாலும், இப்பிடி இருக்கிறேலயே!" கையை முகத்துக்கு நேர வைத்து விசிறியவாறு, திரைச்சீலை எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, யன்னல் கதவினை திறந்தவளை தழுவிக் கொண்ட காற்றில், கொஞ்சம் வெப்பம் குறைந்ததைப் போன்றதொரு உணர்வு.
செட்டியில் வந்து தன்னைக் குறுக்கிக் கொண்டவள், கையினை தலகணி போல் வைத்ததும் தான், கொட்டாவியை விட்டவாறு கண் மூடினாள் பெண்ணவள்.
கண் மூடியவள், அயந்து போகும் நேரம் பார்த்து, வீட்டு நம்பர் ஒலித்தது. பதைபதைத்து எழுந்து அமர்ந்தவள்,
"புஸ்... இதுவே? ஒழுங்கா நித்திர கூடக் கொள்ளவிடாது…" முண்டிய எரிச்சலோடு போனை எடுத்துக் காதில் வைத்தவள்,
"ஹலோ" என்றாள். அன்றையது போல் இன்றும் யாரும் பேசவில்லை. அவசரமாக நம்பரை ஆராய்ந்தாள், அன்று வந்த அதே இலக்கம்.
"எடுத்தா கதையுங்கோ... சும்மா எடுத்திட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்?" என்றாள் தூக்கத்தை கலைத்த எரிச்சலில். இவள் எரிச்சல்பட்டால் மாத்திரம் பதில் வந்து விடுமா?
"ஹலோ... ஹலோ..." என்றவள் பதில் வராது போக,
"போனில பிழையா? இல்லாட்டி கதைக்கினம் இல்லையே..." ரிசீவரை பார்த்தவாறு அதன் இடத்தில் வைத்தாள். மீண்டும் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு.
"நல்லா கத்து. எடுத்தோன்ன அப்பிடியே கதைச்சிடுவ" என்றவளுக்கு வந்த தூக்கம் ஓடியே போனது. திறந்திருந்த கதவு வழியே தென்றல் தீண்ட, அதை மூடுவதற்காக வந்தவள், கண்களில் விழுந்தது அந்தக் காட்சி.
ஆம்! வீட்டினை ஒட்டினாற் போலிருந்த, எதிர்க்கட்டிடத்தின் கார் பார்க்கிங் இவள் வீட்டின் கீழ் தான் இருந்தது. இவள் வீடு இரண்டாவது மாடி என்பதால், அந்தக் கராச் தெரியாவிட்டாலும், மேலே உள்ள சீட் தெளிவாகவே தெரியும். அதில் மஞ்சள் நிற பூனைக் குட்டிகள் இரண்டு சண்டை போட்டு விளையாடிக் காெண்டிருந்தது.
ஊரில் இருக்கும்போது அவளும் பூனை வளர்த்திருக்கிறாள் தான். ஆனால் இங்குள்ள பூனையின் முடிகளோ ஒரு பொம்மையின் தோற்றத்தைக் குடுத்தது. அதைப் பிடித்துக் கொஞ்ச வேண்டுமென்ற ஆசையும் கூட எழ, யன்னல் கதவில் சாய்ந்து கொண்டு அதையே பார்த்திருந்தவள் கழுத்தில் திடீரென்று ஏதோ ஊரல் எடுத்தது.
திடுக்கெனக் குனிந்து பார்த்தாள், யாருடையதோ விரல் பின்னால் இருந்து வர, பயந்து போய்த் திரும்பியவள், அங்கு நின்றவனை கண்டதும், பெருமூச்சினை விட்டவாறு,
"நீங்களே! ஆரோ என்டு பயந்திட்டன். ஏன் இவ்ளோ நாள் வரேல. கோல் வேற எடுத்தன் நீங்கள் எடுக்கிறீங்களே இல்ல…" என வருத்தப்பட,
"தெரியும் மிரு... நான் என்ன செய்ய...? இப்ப வெயில் காலம் மிரும்மா... வெகேஸனுக்கு வேற நாட்டு சனங்கள் முழுக்க நேரம் என்டது இல்லாம வருங்கள். சனம் வந்தா, பத்துரோன்(முதலாளி) விடமாட்டான். குசினிக்க வைச்சு புழிஞ்சு எடுத்துடுவான். இரவு ஒரு மணிக்குத் தான் சனமே ஓயும். பிறகு எங்க இங்க வாரது. ரோட் வற நெருசலா போடும். வீட்ட வர, நாலு மணியாவது செல்லும். பிறகு விடிய எட்டு மணிக்கு வேல, வந்து படுத்து ரெண்டு மணித்தியாலத்தில திரும்ப இறங்கோணும். அதுக்கு அங்கயே படுத்திடலாம் என்டு அங்கயே படுத்துட்டன்..." என்றான் நீளமாக.
"அது எல்லாம் சரி தான், இதைப் போன் போட்டுச் சொல்லலாம் தானே! ஊரு உலகம் தெரியாத இடத்தில வந்திருக்கிறனப்பா... நீங்கள் எங்க வேலை செய்யிறீங்கள் எண்டது கூட எனக்குத் தெரியா… அப்பிடி இருக்கேக்க... உங்கள எங்க போய்த் தேடுவன்? நீங்களும் என்னைப் பற்றி நினைச்சுக் கூடப் பார்க்கேல. அப்பப்பாக்கு கோல் பண்ணி சொல்லுவம் எண்டாலும், போன் என்னட்ட இல்ல.
வீட்டு படி தாண்டினா, எங்க போறது? எப்பிடி போறது? அப்பிடி போனாலும் என்ன கதைக்கிறது? கொஞ்சமும் யோசனை இல்லாத ஆளப்பா நீங்கள். உங்கள நம்பி ஒருத்தி வந்திருக்கிறாளே அவள் என்ன நிலமேல இருப்பாள் என்டு அக்கறையே இல்ல. வாங்கின சாமானும் இன்டையோட முடிஞ்சுது. நாளைக்கு சமைக்க எதுவும் இல்லை..." இத்தனை நாள் மனதுக்குள் புளுங்கியது வார்த்தையாய் கொட்ட,
"என்ன நீர்...? சாமான் முடிஞ்சா என்ன? வீட்ட விட்டு இறங்கின உடனம், முன்னுக்கு பெரிய கடை இருக்கு. அங்க போனா, உமக்கு என்ன தேவையோ, அதை அடுத்தந்து கவுண்டர்ல குடுத்தா சரி…" என்றான் சாதாரணமாய்.
"நான் போறதோ…?" என்று அவள் விழிக்க.
"ம்ம்… இனி நீர் தான் போகோணும். எந்த நாளும் நான் உம்மளோட நிக்கேலாது. ஒன்டொன்டா இனி நீர் தான் பழகோணும்." என்றான்.
"உடனம் எப்பிடியப்பா பழகுவன்? நீங்கள் கூட்டிக்கொண்டு போய், இங்க இப்பிடி என்டு காட்டினா தானே, என்னால புடிக்க ஏலும்..."
"அதுக்கு என்ன? சொல்லித் தந்தா பாேச்சு..." என்றவன் கை எல்லை மீற. ஏற்கனவே தன்னை தவிக்க விட்ட கோபத்தில் இருந்தவள்,
"அங்கால போங்கோ… ஒரு கிழமையா மனிஷின்ர நினைவே வரேல. இப்ப வந்து கொஞ்சுறார்" என்றாள் கோபமாக.
"என்னப்பா நீர்... வேணுமெண்டா செய்தன். வேலை அப்பிடி! கொஞ்ச நாள் பொறுமையா இரும். எல்லாம் சரியாகிடும். இத்தனை நாள் கழிச்சு ஆசையா வந்தா…" முகம் வாடிப் போனவனை பார்க்கையில் பாவமாக, குழந்தையை அழைப்பது போல், கை விரித்து அழைத்தவள் கைகளுக்கு அடங்கிக் கொண்ட குழந்தை, வழக்கமான தன் சேட்டையை ஆரம்பித்திருந்தது.
இரண்டு நாட்கள் வேலையை முடித்துக் காெண்டு வந்தவன் அவளுடன் தான் இருந்தான். அந்த இரண்டு நாளும், வீட்டினை ஒட்டி இருக்கும், கடை, பார்க் என்று சின்னச் சின்ன இடங்களுக்கு அழைத்துச் சென்று எல்லாவற்றையும் காட்டியும் கொடுத்தான். மூன்றாவது நாள், அவன் போன் அழைக்க, பிரஞ்சில் ஏதோ பேசியவன்,
"மிரு நான் வேலைக்கு வெளிக்கிடுறன். வீட்டுக்குத் தேவையான சாமான் எல்லாம் வேண்டியாச்சு. நாளைக்கு ஞாயிற்று கிழமை. அதால முன் கடை பூட்டி இருக்கும். எதாவது தேவை என்டா இப்பவே கடைக்குப் போய் வாங்கப் பாரும். நான் போட்டு வாரன்." என்றவனை பாவமாகப் பார்த்தவள்,
"இந்த நேரத்தில வெளிக்கிடுறீங்கள். அப்ப இரவுக்கு வரமாட்டீங்களோ?" என்றாள்.
"இல்லையப்பா… ரெண்டு நாளைக்கு வரேலாத வேலை. என்னை நினைச்சு கவலைப்படாதையும். நான் ஒவ்வொரு நாளும் போன் அடிக்கிறன். சரி எனக்கு நேரம் போச்சு இறங்கிறன்…" நெற்றியில் முத்தம் வைத்து விட்டு இறங்கியவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, மீண்டும் அந்த நாலு சுவற்று வாழ்க்கை என்றதும் அழுகை தான் வந்தது.
அவன் சொன்ன இரண்டு நாள் கழிந்து மூன்றாவது நாள் அது. வயிற்றை பிடித்துக்கொண்டு செட்டியில் அமர்ந்திருந்தளுக்கு வயிற்று வலி அடங்குவதைப் போல் தெரியவில்லை.
எழுந்து நடப்பதும், இடுப்பில் கை வைப்பதும், முதுகை வளைப்பதும் என்று என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்தவள் தொடையில் உண்டான பிசுபிசுப்பை அடிக்கடி குளியல் அறை சென்று கழுவி விட்டு வந்து அமர்ந்த மறுநொடி மீண்டும் பாசுபிசுப்பு.
ஏற்கனவே வயிற்று வலி, உடலெங்கும் ரணமாய் வலியினை வாரி இறைத்துக் கொண்டிருந்தது என்றால், இந்தத் தொல்லை வேறு. ஒரு நாப்கின் இருந்தால் அதை வைத்து விட்டாவது பேசாமல் இருக்கலாம். எதுவும் இல்லாமல் என்ன செய்வாள்? ஊர் என்றால் துணியாவது வைக்கலாம். இங்குத் துணிக்கு எங்குச் செல்வது?
ஆம்! இன்று அவள் வீட்டுக்குத் தூரமான நாள். ஊரிலும் இதே போல் தான், வலியில் தரையில் விழுந்து உருளுவாள். பரிமளா ஏதாவது கசாயம் காய்ச்சிக் கொடுத்தால் தான் கொஞ்சமாவது கேட்கும். இங்கு யார் இருக்கிறார்கள் அப்படி செய்ய?
அடிக்கடி ஊர்ந்து வரும் இரத்தத்தை கூட அவளால் கழுல முடியவில்லை. நாப்கின் வாங்க வேண்டும் என்றால், இரண்டு மாடிப்படிகள் இறங்க வேண்டும். அதற்குள் அவளே தொப்பலாக இரத்தத்தில் நனைந்து விடுவாள். படுக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் நெளிந்து கொண்டு நின்றவள் வீட்டான் தொலைபேசி அழைத்தது.
அன்றைய பேச்சின் பின்னர் சியாம் தினமும் ஒரு முறையாவது அழைப்பான். அவன் என்று நினைத்துத்தான் போனை எடுத்தாள்.
"ஹலோ…" என்றவள் குரலில் வலியின் பிரதிபலிப்பு. யாரும் பேசவில்லை.
"இந்தக் கோலா… நம்பர வேற பாத்து துளையேல…ஏற்கனவே வலிக்குது. இந்தத் தொல்லைக்கு அளவில்ல…" முக்கி முக்கிக் கூறியவாறு போனை அதனிடத்தில் வைத்த விட்டு நின்றிருந்த தரையைப் பார்த்தாள்.
சொட்டுச் சொட்டாய் சிதறிக் கிடந்தது இரத்தக்கறைகள். ஐயோ என்று கதறத்தான் தோன்றியது.
இந்தத் தொல்லையால் தானே அவள் படுக்கவே இல்லை. படுத்தால் படுக்கை போய் விடும். வயிற்று வலியோடு தரையினை இனி துடைக்க வேண்டும். அக்கறை அற்ற கணவன்மேல் தான் ஆத்திரம் திரும்பியது.
"இந்தாள் ஒழுங்கா இருந்தா எனக்கு ஏன் இந்தக் கஷ்டம். ஊர்ல மனிஷிய எப்பிடி எல்லாம் தாங்குதுகள். இது இருக்கே… கொஞ்சமும் அக்கறை இல்லை. இருக்கறனோ செத்துட்டனோ என்டு கூடப் பார்க்கறது இல்ல… வரட்டும்!" இந்த நேரத்தில் தான் கோபம் தாராளமாக வருமே. திட்டித் திட்டி, தரையை துடைத்தவள், ஓரமாய் இருந்த ஸ்டூலினை இழுத்து அமர்ந்து கொண்டாள்.
சிறு நிமிடம் கழிந்திருக்கும், வீட்டு கதவு தட்டும் சத்தம். மிரட்சியாய் எழுந்து கதவின் ஓரம் வந்தவள், துவாரத்தின் வழி யாரென எட்டிப் பார்த்தாள்.
யாரென்றே தெரியாத ஆணொருவர் கையில் ஏதோ ஒரு பொதி. பயமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் தட்டினால் திறக்காமல் இருக்க முடியாதே.
காெஞ்சமா திறந்தவளை பார்த்துப் புன்னகைத்தவர்,
"மூசூ மெதம்... ஆ ஷெச்ட் ஷா (வணக்கம் மெடம் இந்தாங்கோ)" எனக் கையில் இருந்த பார்சலை நீட்டினான். அவளுக்கு அவனை யாரென்றே தெரியாது. அவனை என்ன சியாமை தவிர யாரையுமே தெரியாது. வாசல் கதவைத் தட்டி அந்தப் பார்சலை நீட்டினால் எப்படி வாங்குவாள்.? அதை யார் கொடுத்தது எனக் கேட்பதற்கு கூட மொழி தெரியாதே.
வாங்காது விழியினை அவள் உருட்ட,
"தேபேசே வூ மெதன். ஜு வூ திரவாய் (சீக்கிரம் மெடம்... எனக்கு வேலை இருக்கு)" என்றான் அவசரமாய்.
அவன் சொல்வது அவளுக்கே விளங்கவில்லை தான். ஆனால் அவன் படிகளைக் காட்டி சொல்வது அவசரம் என்பது போல் இருக்க. பார்சலை வாங்கினாள்.
பாரம் இல்லை தான். அதனால் பயப்படவில்லை. பாரமாக இருந்தால் தானே குண்டைக் கொண்டு வந்து அவளை மாட்டிவிடுவார்கள்.
நன்றி கூடப் பிரஞ்சில் சொல்லத் தெரியாது, "தங்கியூ" என்று கதவைப் பூட்டிவிட்டு வந்து பார்சலைப் பிரித்தாள். அதில் அவளுக்கு என்ன தேவையோ அது தான் இருந்தது.
யார் கொடுத்து அனுப்பியது என்று யோசிக்கக் கூடத் தோன்றாது ஓடிச்சென்று தன் வேலையினை முடித்துவிட்டு வந்ததன் பின்னர் தான்,
"யாரு குடுத்து விட்டிருப்பினம்? வந்தவன் யாரு?"என்று யோசித்தாள்.
யோசிக்கும் அளவுக்கு அங்கு யாரை அவளுக்குத் தெரியும்?
"இவராத்தான் இருக்கும். ஆனா இவருக்கு எனக்கு ஏலாம வந்ததென்டு எப்பிடி தெரியும். ஒரு வேளை தேதிய நினைவு வைச்சிருப்பாரோ! இருக்கும். இதையாது நினைவு வைச்சிருக்கிறாரே." என்றவாறு கட்டிலில் சென்று படுத்தவள், இருந்த அசதியில் உறங்கிப் போனாள்.