• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 13,14,15

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:-13



மெல்லிய தென்றல் தோட்டத்து மலர்கள் மீது தவழ்ந்து வந்து உடல் தழுவ தென்றலின் தாலாட்டில் மதிமயங்கி தலையசைத்த மலர்களை ரசித்தபடி கையில் ஒரு நாவலுடன் அமர்ந்திருந்தாள் பூவினி.அவள் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டிருந்தது. அவள் மீது அன்பை பொழியும் உறவுகளின் மத்தியில் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தாலும் மனதின் ஓரம் ஒரு உறுத்தல்.



இதுவரை நிலவனை அவள் காண நேரவில்லை. காண நேரவில்லை என்பதைவிட அந்தச் சந்திப்பை அவன் தவிர்த்துக்கொண்டிருந்தான்.இவள் வந்த அன்று ஏதோ முக்கியவேலை என்று வரமுடியாது என்றவன்.மறுநாளே தொழில் விடயமாக வெளியூர் கிளம்பிவிட்டான்.அவர்கள் இருவருக்குமான கண்ணாமூச்சியாட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.ஆட்டத்தை முடிக்க இருவருமே முயலவில்லை.



காலில் ஏதோ மிருதுவாக உரசவும் குனிந்து பார்த்தாள்.புஜ்ஜி தான் தனது வாலினால் அவள் கால்களை தடவிக்கொண்டு இருந்தது.புன்னகையுடன் அதை தூக்கி மடியில் வைத்துக்கொண்டாள்.அதுவும் அவளுடன் ஒட்டிக்கொண்டு அவள் மடியில் படுத்துக்கொண்டது.



பூவினிக்கு ஆச்சரியமாக இருந்தது முன்பு தன்னைக்கண்டாலே தலைதெறிக்க ஓடும் இந்த புஜ்ஜி இப்போது இப்படி மாறிவிட்டதே. மெல்ல அதன் பட்டுடலை வருடியபடியே என்னுடைய இந்த பிரிவு உன்னிடம் கூட மாற்றத்தை கொடுத்துவிட்டதே புஜ்ஜிக்கண்ணா.ஆனால் ஒருத்தன் மட்டும் மாறவே இல்லையடா. அவன் திமிர் குறையவே இல்லை.என எண்ணியவளுக்கு முன்னொருசமயம் இந்த புஜ்ஜியை துரத்திக்கொண்டு தான் அவனின் அறைக்குள் நுழைந்ததும் அங்கு நடந்ததும் நினைவு வந்தது.அவள் இதழ்களில் அவளையுமறியாமல் குட்டி முறுவல் பூத்தது.



புஜ்ஜியைக் கூட மயக்கிவிட்டாய் போல?? யாரை மயக்கி கைக்குள் போட்டாலும் உன் ஆசை ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.



பின்னால் இருந்து ஒரு குரல் கடுமையாக ஒலித்தது.இந்தக்குரல் ............இந்தக்குரல். சட்டென திரும்பினாள் பூவினி.



நிலவனே தான் !!!!!!!!!. ஒரு கையை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தபடி உதடுகளை வளைத்து படு அலட்சியமாக அவளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்.நான்கு வருடங்கள் நீண்ட நெடிய நான்காண்டுகள் கழித்து அவனைப்பார்க்கிறாள்.



நான்காண்டுகளுக்கு சற்று அதிக முதிர்ச்சி தெரிந்தது அவனிடம்.ஆனாலும் அந்த முதிர்ச்சி கூட அவனின் கம்பீரத்தை அதிகரித்திருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.முகத்தில் அசாத்திய கடினம்.அவனின் திமிரையும் பிடிவாதத்தையும் உணர்த்துவது போல இறுகியிருந்தன உதடுகளும் தாடையும்.அவளையே வெறித்திருந்த கண்களில் எந்த உணர்வுமே இல்லை.உதடுகளுக்கு மேல கருத்தடர்ந்திருந்த மீசை அவனின் கம்பீரத்தை இன்னும் அதிகப்படுத்தியது.முன்பு அவன் மீசை வைத்திருக்கவில்லை. அவள் கூட கேலி செய்திருக்கிறாள்.



ஏன் அத்தான் உங்களுக்கு மீசை வளரவே வளராதா??



ஏன்டி... அதனால் உனக்கென்ன பிரச்சனை.???



மீசை இல்லாமல் உங்க முகத்தைப் பார்க்க களிமண் பொம்மை போலவே இருக்குத்தான் மொழு மொழுன்னு.



ஹே ..என் முகம் தானே அது எப்படியிருந்தாலும் எனக்கு கவலையில்லை.



ஆமா ஆமா உங்களுக்கேன் கவலை.தினமும் ஒருதடவையோ இருதடவையோ தான் அந்த கொடுமை உங்களுக்கு மற்ற நேரம் எல்லாம் அந்த கொடுமையை அனுபவிப்பது நாங்கள் தானே.



என்ன கொடுமை????



.அது தான் உங்கள் முகத்தை பார்க்கும் கொடுமை.



அடிங்க்க்க....... இந்த முகத்தை பார்த்து எத்தனை பெண்கள் என்னை சைட் அடிக்கிறாங்க தெரியுமா?? இதில் நான் மீசை வேறு வைத்தால் அவ்ளோ தான் அப்புறம் என் பின்னால் ஒரு கியூவே நிற்கும்.



பார்ரா ......ஏன் அத்தான் அந்த பெண்களுக்கெல்லாம் கண்ணில் கோளாறா என்ன.??



சட்டென முறுவலித்தவன் உனக்கு பொறாமைடி என்று அவள் தலையில் தட்டிவிட்டு சென்றதும் நினைவு வந்தது.அவன் கூறியது சரிதான்.அழுத்தமான உதடுகளுக்கு மேல் கறுத்து அடர்ந்திருந்த மீசை அவன் கவர்ச்சியை பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டுவது உண்மைதான்.தோள்கள் அகன்று......



அவனையே விழி அகற்றாமல் பார்த்திருந்த பூவினி அவனின் ஒரு வேக மூச்சில் சட்டென மீண்டாள். தன் எதிரே முறைத்துக்கொண்டு நிற்கும் அவனைப் பார்த்த போது தான் அவன் கூறியது மனதில் பட்டு கருத்தில் பதிந்தது.அதுவரை தன்னை மறந்து அவனை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டதற்காக தன் மீதே கோபம் கொண்டவள் அதை அவன் மீது திருப்பி



சற்று நிமிர்ந்து அவன் கண்களைப்பார்த்து புரியவில்லை??? என்றாள் ஒற்றைச் சொல்லாக.



நிமிர்ந்து நோக்கிய அவள் விழிகளில் இருந்து தன் பார்வையை விலக்கியபடி குரலில் கடுமையுடன் என்ன புரியவில்லை?? என்றான்.



யாரை மயக்கினேன் என்று புரியவில்லை???



ஹ்ம்ம் அது தான் இந்த குடும்பத்தையே மயக்கி வைத்திருக்கிறாயே. நாலு வருடம் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீ ஜாலியாக படிக்கிறேன் என்ற பெயரில் ஊர் சுற்றிவிட்டு வந்தாலும் நீ வந்தவுடன் ஏதோ இளவரசி போல உன்னை கொண்டாடுகிறார்களே. தூக்கி தலையில் வைக்காதது ஒன்று தான் குறை. போதாதற்கு நான் வேறு உன்னை அவர்கள் போலவே கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீ வந்து ஒரு வாரம் ஆகியும் நான் உன்னை சந்தித்து பேசவில்லையாம் அம்மா தொடங்கி தமிழ் வரையும் என்னை முறைக்கிறார்கள்.



இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நீ என்ன பெரிய இவளா?? நான் எதற்கடி உன்னை வந்து பார்க்கவேண்டும்.அது தான் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போனாயில்லையா?? அப்படியே ஒரேயடியாக அங்கேயே இருப்பது தானே எதற்கு மறுபடியும் இங்கே வந்து என் உயிரை வாங்குகிறாய்.



பொறுத்து பொறுத்து பார்த்த பூவினிக்கு பொறுமை பறக்கவே



எல்லோரும் உங்களைப் போல இருக்க முடியுமா என்ன???.அவர்கள் பாசத்திற்கு அர்த்தம் தெரிந்தவர்கள்.இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அவர்கள் என் மீது பாசம் வைப்பதால் உங்களுக்கென்ன பிரச்சனை???



வைக்கட்டும் தாராளமாக வைக்கட்டும்.ஏன் உன்னை தலையில் தூக்கி வைத்துக்கூட கொண்டாடட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.ஆனால் என்னிடம் இருந்து நீ அதை எதிர்பார்க்காதே.



ஹ்ம்ம் ..உங்களிடம் இருந்து பாசத்தை இன்னும் எதிர்பார்ப்பதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.அத்தோடு உங்கள் பாசத்திற்காக ஏங்குவதற்கு நான் ஒன்றும் பழைய வினியும் அல்ல.என்றாள் கடுப்புடன்.



நல்லது.என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது தான் உனக்கு நல்லது.என்று அலட்சியமாக பதில் கொடுத்தவன்.

ஆ ..அப்புறம் நான் உன்னை சந்தித்து நலம் விசாரித்துவிட்டேன் என்று அனைவரிடமும் சொல்லிவிடு.முக்கியமாக தமிழிடம்.என்று உத்தரவிடும் குரலில் கூறிவிட்டு செல்ல திரும்பியவன் நின்று அவள் முகத்தைப் பார்த்து நமக்கிடையேயான எதையும் யாரிடமும் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். என்றான்.



இவன் பாசையில் இதற்கு பெயர்தான் நலம் விசாரிப்பதுபோல.ஹ்ம்ம்ம்



இந்தளவுக்காவது இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்திருப்பதற்கு நன்றி என்றவள் தொடர்ந்து ஒன்றுமட்டும் சொல்கிறேன் கேளுங்கள்.என்னைப் பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காது. இங்கு யாரும் உங்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கவில்லை.அதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். என்றாள் அழுத்தத்துடன்.



அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களில் சட்டென ஏதோ ஒரு உணர்வு தோன்றி மறைய எதுவும் பேசாது தோளைக்குலுக்கிவிட்டு தன் வழக்கமான வேகநடையுடன் திரும்பிச் சென்றான். செல்லும் அவனையே வெறித்துக்கொண்டு நின்ற பூவினியின் விழிகளில் இருந்து ஒருதுளி நீர்முத்து உருண்டு விழ தாங்க முடியாத வலியுடன் விழிகளை இறுக மூடிக்கொண்டு இருக்கையில் சாய்ந்தாள்.



இத்தனை வருடம் அவள் கற்றுக்கொண்ட மனோதிடம் அவன் எதிரில் கண்ணீர் விடாது தைரியமாக பேச உதவியது.அவன் அகன்ற மறுநொடி கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளம் கரையுடைத்தது.



ஏன்??? ஏன் ?? எனக்கு மட்டும் ஏன் இப்படி?? நான் வந்து அவன் உயிரை எடுக்கிறேனாம். ஹ்ம்ம்..... அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் உயிரை அறுக்கிறதே அது எப்படி அவனுக்கு புரியாமல் போனது?? என்னதான் அவளின் தன்மானம் என்னை வெறுப்பவன் எனக்கும் வேண்டாம் என்று கூறினாலும் அவள் அடிநெஞ்சம் அவன் வேண்டும் வேண்டும் என்று ஊமையாய் கதறுகிறதே.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
ஒத்துக்கொள்ள மனமில்லாவிடிலும் பூவினி இங்கு வரும் போது அவள் நெஞ்சின் ஓரம் குட்டியாய் ஒரு எதிர்பார்ப்பு ஒட்டிக்கொண்டிருந்தது உண்மை.தன்னுடைய இந்தப்பிரிவு ஏதேனும் ஒருவகையில் அவனுக்கு தன் அன்பை காதலை புரியவைத்திருக்காதா?? என்ற சிறு எதிர்பார்ப்பு இருந்தது நிஜம். சில சமயங்களில் உண்மை நேசத்தை உணர்த்துவது பிரிவு தானே.



ஏன் டா ஏன் உனக்கு என்னை பிடிக்காமல் போனது.காதல் என்றாலும் ஒருவகைப் பாசம் தானே.சிறுவயதில் இருந்து என் மீது அப்படி பாசத்தை பொழிந்தாயே!!!!!!!!!! உன்னால் எப்படி என்னிடம் இப்படி பேச முடிகிறது?? உன் வார்த்தைகள் என்னை எவ்வளவு தூரம் காயப்படுத்துகிறது என்பது உனக்கு தெரியாதா?? என்னதான் நீ என் இதயத்தை காயம் செய்தாலும் அது நீ தான் வேண்டும் என்று உன்னையே சுற்றுகிறதே நான் என்ன தான்டா செய்வேன்.கோபம் என்ற முக மூடியில் என் மனதை மறைக்கப் பார்க்கிறேன்.ஏன் மறைத்தும் வைத்திருந்தேன்.ஆனால் உன்னைக்கண்ட அந்த நொடியில் அந்த திரை தன்னாலே விலகி காதல் மட்டுமே என் நெஞ்சை ஆக்கிரமிக்கிறதே. என்ன மாயமடா செய்தாய்

தாங்க முடியாத வலியில் இதயம் உருகி கண்ணீர் சொரிய அமர்ந்திருந்தாள் பூவினி.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 14



நாட்கள் அதன் போக்கில் வேகமாய் உருண்டோடியது.வினிக்கா வினிக்கா என்று அவளையே சுற்றி வந்த இளையவர்களோடு சேர்ந்து வினியும் மெல்ல மெல்ல பழைய குறும்புக்கார வினியாக மாறிவிட்டாள்.அதற்காக அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் என்று இல்லை.நெஞ்சின் ஓரம் ஒரு வலி எப்போதும் இருக்கத்தான் செய்தது.இருந்தும் அதை மறைத்து இளையவர்களின் பாசத்திலும் குறும்பிலும் அவள் முயன்று தன்னை மீட்டுக்கொண்டாள்.





அத்தோடு தொழில் பயிற்சி பெற என்று தந்தையோடு அவ்வப்போது அலுவலகம் சென்று வந்ததிலும் அவள் பொழுது உற்சாகமாகவே சென்றது.அந்த ஒரு தடவைக்கு பிறகு அவள் நிலவனை தனியே சந்திக்க நேரவில்லை.மற்றவர்களுக்கு முன் ஒருசில தடவை சந்திக்க நேர்ந்த போது எதுவுமே நடக்காதது போல இயல்பான புன்னகையுடன் நலம் விசாரித்துவிட்டு போனான்.இவளுக்கு தான் பத்திக்கொண்டு வந்தது.எப்படி நடிக்கிறான் என்று.



நிலவனைத் தவிர்த்து தாரணி தமிழ் பையன்கள் என்று அவர்களோடு சேர்ந்து ஆட்டம் போடுவது சிந்துவுடன் தினமும் தொலைபேசியிலோ ஸ்கைபிலோ அரட்டை என்று அவள் வாழ்வு உற்சாகமாகவே சென்றுகொண்டிருந்தது..













நிலவா



ம்ம்.. என்ன தாத்தா ??



இங்க வா இப்படி உட்காருப்பா.எங்கப்பா உன்னை கையிலேயே பிடிக்க முடியல??



கொஞ்சம் வேலை அதிகம் தாத்தா.



எப்ப கேட்டாலும் இதையே சொல்லு.ஆ ..அப்புறம் நாளைக்கு நம்ம திருவிழா நினைவிருக்கில்ல.குடும்பம் மொத்தமும் போகணும். அதனால நாளைக்கும் வேலை அது இதுன்னு எந்த சாக்கும் சொல்லாம கோவிலுக்கு வந்துடனும்.இப்போவே சொல்லிட்டன்.



தாத்தா.. அது வந்து...



எனக்கு எந்த சாக்கும் சொல்லாத நிலவா.உனக்கு இப்போவே சொன்னது நாளைக்கு எந்த வேலை இருந்தாலும் அதை ஒத்திப்போடுவதற்கு தான்.இப்போ போ போய் சாப்பிடு ரொம்ப களைச்சு தெரியுற.என்றவர் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பதைப்போல் கையில் இருந்த பகவத்கீதையில் மூழ்கி விட்டார்.



அதற்கு மேல் அவரிடம் பேசி எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதை உணர்ந்தவனாக ஒரு பெருமூச்சுடன் நகர்ந்தான் நிலவன்.





ஹல்லோ ....



பூக்குட்டி.............



அப்பம்மா............எப்படி இருக்கீங்கள்?? நீங்கள் போய் ஒரு மாதம் ஆகிறதே!!! மறுபடியும் எப்போ வாறீங்கள்??



இன்னைக்கு தாண்டா வயல் அறுவடை முடிஞ்சுது. எல்லாத்தையும் முடிச்சுட்டு நாளை மறுநாள் வந்துடுறேண்டா செல்லம்.



ம்ம்ம் சரி அப்பம்மா.



உன் அத்தான் வந்துட்டானா செல்லம்.



உன் அத்தான் என்றதும் அவள் தன்னை மறந்து நிலவனை நினைத்து அவன் வெளியூர் சென்று முன்தினம் இரவு தான் திரும்பினான் என்று சாந்தா சொன்னது நினைவு வர ம்ம் நேற்று இரவு தான் வந்தார் போல.என்றாள்.



கண்மணி குழப்பத்துடன் நேற்று இரவா?? நீ யாரைச் சொல்கிறாய் ?? என்றார்.



நிலவன் அத்தானை தான்.



சற்று நேரம் மறுமுனையில் மௌனம் நிலவியது.பின் நான் சொன்னது உன் அத்தை பையன் மித்திரனை என்றார் கண்மணி அழுத்தமாக.



பூவினிக்கு சற்று சங்கடமாகிப் போனது.ஓ ...அவர் எங்கே வருகிறார் அப்பம்மா??



உனக்கு தெரியாதா?? உன் வீட்டுக்கு தான்.இன்று மாலை வந்துவிடுவான்.ஒரு மாதம் அங்கே தான் நிற்பான்.அலுவலக விடயமாக ஒரு மாதம் இங்கே வர வேண்டுமாம்.அந்த சாக்கில் மாமா குடும்பத்தையும் பார்த்துப் போகலாம் என்று வருகிறான்.



ஒ ..



உன் அம்மா உன்னிடம் எதுவும் கூறவில்லையா??அவள் எங்கே கூறப்போகிறாள்.அவளுக்குத்தான் நாங்கள் என்றால் இளக்காரம் ஆயிற்றே. இதே அவள் குடும்பத்துபிள்ளை என்றால் இப்படித்தான் சும்மா இருப்பாளா?? வீட்டையே புரட்டிப் போட்டிருக்க மாட்டாள்.கண்மணியின் புலம்பல் எரிச்சலை தந்தாலும் அவர் கூற்றிலும் நிஜாயம் இருப்பதாகப் பட்டது.அதே சமயம் தாயையும் தவறாக கருத முடியவில்லை.அவர் செயலுக்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று தோன்றியது.





அய்யய்யோ ..அப்படி எல்லாம் இல்லை அப்பம்மா.அம்மா கூற வந்தார்கள் தான்.நான் தான் வேறு பிராக்கில் அதை காதில் எடுக்கவில்லை.இன்றைக்கு மாலை சிற்றுண்டி கூட பாதாம் அல்வா பற்றிஸ் ரோல் என்று அசத்தலாக பண்ணி வைத்திருக்கிறார்கள்.இரவுச் சமையலுக்கு சித்தியும் அம்மாவும் சேர்ந்து ஏதோ சிறப்பாக ஆயத்தம் செய்கிறார்கள் என்றால் பாருங்கள்.





சரி சரி நீ ஒன்றும் சிரமப்படாதே.நான் உன் அம்மாவை எதுவும் கூறவில்லை.நாளை மறுநாள் காலையில் அப்பாவிடம் வண்டி அனுப்பச் சொல்லிவிடு.வைக்கிறேன் என்றவரிடம்.



ம்ம் என்றபடி தொலைபேசியை தாங்கியில் வைத்துவிட்டு தாயிடம் சென்றாள்.



அம்மா அப்பம்மா நாளை மறுநாள் வராங்களாம்.வண்டி அனுப்பச் சொன்னாங்கள்.



ம்ம் சரி டா.அப்பாகிட்ட சொல்லிடலாம்.



அம்மா ..

ம்ம்

மித்திரன் இன்று வருகிறார் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை??



ஸ்ஸ்ஸ்..உனக்கு தெரிந்துவிட்டதா.யார் சொன்னது?? உன் அப்பம்மாவா??

ம்ம்ம்

நீங்கள் ஏனம்மா சொல்லவில்லை.??



அவன் தான் டா.உன்னிடம் சொல்லவே கூடாது.முதன் முறை நேரில் பார்க்கும் போது ஒரு ஆனந்த அதிர்ச்சியாய் இருக்கட்டும் என்று சொன்னான்.அது தான் நானும் உன் அப்பாவும் வாயே திறக்கவில்லை.



ஒ அந்த எருமை செய்த வேலை தானா இது.உங்களிடம் இப்படி சொன்னவன் பாட்டியிடமும் இதை சொல்லியிருக்கலாம்ல.பாட்டி உங்களிடம் குறை பிடித்து கத்துகிறார்.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
மேகலாவுக்கு நடந்தது புரிந்தது.சிறு சிரிப்புடன் உன் அப்பம்மா குணம் தெரிந்தது தானே டா. என்றார்.



ம்ம்ம் ..



சரி அதை விடு நாளை திருவிழாக்கு போகணும் நிஜாபகம் இருக்கில்ல??? என்ன நிற புடவை கட்டப்போற???



என்னது புடவையா?? நானே திருவிழாவுக்கு வாறதா இல்லையானே இன்னும் முடிவு பண்ணல.இதில நீங்கள் புடவை வேற கட்டச் சொல்றீங்கள்.



ஏய் வினி என்ன விளையாடுகிறாயா?? இது நம்ம குடும்ப பூசை தெரியும்ல.எல்லோரும் கண்டிப்பா போயே ஆகணும்.அதுவும் நீ நாலுவருசமா இல்லை.இந்த முறை வந்தே ஆகணும்.



சரி வருகிறேன்.ஆனால் சல்வார் தான் போடுவேன்.



ஏய் ..என்ன அடம் வினி இது..



என்ன என்ன என்ன பிரச்சனை இங்கே ?? என்றபடி வந்தாள் தாரணி.



வந்துட்டாயா நாட்டாமை...என்றாள் வினி நக்கலாக





வா தாரணி உன் அக்கா தான் பிரச்சனை பண்ணுறாள்.நீயே என்னன்னு கேளு.என்று தாரணி காதில் நடந்ததை ஓதினார் மேகலா.



ஹே என்ன வினிக்கா நீங்கள்.எங்கள் தமிழ்ப் பாரம்பரியமே புடவை தானே.அதை உடுத்துவதற்கு ஏன் இந்த தயக்கம் ஹ்ம்ம்??? நீங்கள் கவலைப்படாதீர்கள் பெரியம்மா வினிக்கா கண்டிப்பாய் புடவை கட்டிட்டு நாளைக்கு திருவிழாவுக்கு வருவார்கள்.என்று உறுதி கொடுத்தாள் தாரணி.அவள் கண்ணோரங்கள் வினியை மாட்டி வைத்ததில் குறும்பாய் புன்னகைத்தன.



மவளே என்னையா மாட்டி விடுகிறாய்.இருடி உனக்கும் வைக்கிறேன் ஆப்பு.



சரிம்மா தாரணி இவ்வளவு தூரம் சொல்லுவதால் தாரணி புடவை கட்டினால் நானும் கட்டுகிறேன்.என்றாள் நமட்டுப்புன்னகையுடன் வினி.



உடனே மேகலா அவள் ஒன்றும் உன்னைப்போல இல்லை.அவள் கண்டிப்பாய் கட்டுவாள் என்னம்மா தாரணி என்கவும்.



எதுவும் சொல்லமுடியாமல் பேதி குடித்தவள் போல் முகத்தை வைத்துக்கொண்டு ஹி ஹி என்று சிரித்துவைத்தாள் தாரணி.



மேகலா சரி சரி இருவரும் முதன் முதலில் புடவை உடுத்தப் போகிறீர்கள் என்ன புடவை என்று எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.என்று சொல்லிவிட்டு செல்லவும்.



வினி தாரணியின் முகத்தைப் பார்த்து கலகலவென சிரித்தாள்.அவளோ அழுதுவிடுவாள் போல ஏன் வினிக்கா இந்த கொலைவெறி என்றாள்.



பழிக்கு பழி மகளே.என்னையா மாட்டிவிட்டாய் அனுபவி தங்காய் அனுபவி.என்றவளின் பேச்சில் கடுப்பாகி

பாவி நீயெல்லாம் ஒரு அக்காவாடி வில்லி என்றபடி பக்கத்தில் இருந்த தண்ணீர்க் குவளையை எடுக்கவும் அவள் நோக்கம் அறிந்து ஓடினாள் பூவினி.



ஏய் நில்லுடி அக்கா என்றபடி அவளை பிடிக்கத்துரத்தினாள் தாரணி.



வினி வாயிலைத்தாண்டி முற்றத்தில் இறங்கவும் அவளைப் பிடிக்க முடியாது கையில் இருந்த குவளை நீரை அவளை நோக்கி எத்தினாள் தாரணி. வினி வேகமாக விலகவும் அவள் பின்னே கையில் ஒரு சூட்கேசை இழுத்தபடி உள்ளே நுழைந்த உருவத்தின் முகத்தில் பட்டு தெறித்து வழிந்தது தண்ணீர்.விளையாட்டு வேகத்தில் இருவருமே எதிரே ஒருவன் வந்ததையே கவனிக்கவில்லை.



நடந்து விட்ட சம்பவத்தின் விளைவில் இருவருமே திகைத்து நின்றுவிட்டனர்.பூவினிக்கு வந்தவன் யாரென்று புரிய சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.ஒரு கணம் என்ன நடந்ததென்று அறியாமல் திகைத்து விழித்த தாரணி தன்னையே கோபத்துடன் முறைத்துக்கொண்டு நின்றவனின் பார்வையை சந்தித்ததும் அய்யோ நானில்ல என்றபடி உள்ளே ஓடி மறைந்தாள்.அவள் செய்கையைக் கண்டு அவன் இதழ்களில் சட்டென ஒரு இளநகை அரும்பியது.



கலகலவென்று வாய்விட்டு சிரித்த பூவினி



வாங்க தலை..வாங்க

உங்களுக்கு மட்டும் தான் ஆனந்த அதிர்ச்சி கொடுக்கத் தெரியுமா?? எப்படி இருந்திச்சு நம்ம வரவேற்பு என்றாள் கெத்தாக.



அவளை நோக்கி திரும்பியவன் விரிந்த முறுவலுடன் மாமாவின் பேச்சை வைத்து நீதான் வாலுன்னு நினைசுட்டிருந்தன்.ஆனா உன் கூட இருக்கிற எல்லாமே வாலாய் தான் இருக்கும்னு இப்போதான் புரியுது.இருந்தாலும் யாருக்குமே கிடைத்திருக்காத இப்படியொரு அரிய வரவேற்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே என்றான்.



அந்த கணம் பூவினிக்கு அவனை பிடித்துவிட்டது.நடந்ததை இலகுவாக எடுத்து அவன் பேசிய விதம் அவளைக் கவர்ந்தது.



அட பரவாயில்லையே !! ஓவர் சீன் பார்ட்டியா இருப்பீங்கன்னு நினைச்சன்.நீங்களும் நம்மளப் போல தான்னு நிரூபிச்சிட்டீங்க.என்றவள் முறுவலுடன் உள்ளே வாங்க முதலில் எங்கள் நாட்டுக்கு உங்களை வரவேற்கிறோம்.அப்புறம் எங்க வீட்டுக்கும். என்றாள்.



அவனும் முறுவலுடன் நன்றி நன்றி என்றபடி அவளுடன் நடந்தான்.



அதுவரை காரினுள் இருந்து அவர்களையே பார்த்திருந்த பத்மனும் புன்னகையுடன் அவர்களைப் பின் தொடர்ந்தார்.







அம்மா ..மிஸ்டர் ஆனந்த அதிர்ச்சி வந்தாச்சு என்றாள் வினி சத்தமாக



கோபத்துடன் அவளை முறைத்து நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு போய் சர்பிரைஸ் கொடுக்கணும்னு நினைச்சன் பாரு எனக்கு இது தேவைதான் என்று அவன் முணுமுணுக்கவும்



வினி என்ன பழக்கம் இது.அவன் உன்னைவிட பெரியவன் அவனிடம் இப்படியா பேசுவது மரியாதையாக பேசு என்று கண்டித்தபடி வந்த மேகலா அவன் நின்ற கோலத்தைப் பார்த்து சட்டென ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தார். கூடத்தின் ஓரத்தில் நின்று நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த தாரணி மேகலாவின் செய்கையை பார்த்து கிளுக்கென சிரித்துவிட்டு அவசரமாக வாயைப் பொத்திக்கொண்டாள்.மித்திரனின் பார்வை மின்வெட்டாய் அவளிடம் பாய்ந்து மீண்டது. பூவினி சிரிப்பை எல்லாம் அடக்க முயலவில்லை கலகலவென சிரித்தவள் அத்தான் நனைந்தது வெளியே பெய்த மழையில் இல்லையம்மா வீட்டினுள் பெய்த மழையில் என்றாள்.





மேகலா புரியாது பார்க்கவும் மேனகா என்ன நடந்தது வினி என்றார் கண்டிப்புடன்.தாரணியின் முகக்கலக்கத்தைப் பார்த்தபடியே அது ஒன்றுமில்லை சித்தி நான் வெளியே தண்ணியடிச்சு அ...என்ன சொன்னேன்னா செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேனா அந்த நேரம் இவர் வரவும் அது தெரியாமல் மாறி இவர் மேல் பட்டுவிட்டது என்றாள் குறும்புச் சிரிப்புடன்.



மித்திரன் சிரிப்புடனும் சிறு வியப்புடனும் அவளைப் பார்க்கவும் கண்களைச் சிமிட்டி முறுவலித்தவள் நடந்தது தெரிந்தால் தாரணிக்கு சித்தி திட்டுவார்கள் அதான் என்று முணுமுணுத்தாள்.



ஒ..என்று புன்னகைத்தான் அவன்.



சரி சரி மித்திரா இப்படியே ஈரத்துடன் எவ்வளவு நேரம் தான் நிப்பாய்.போய் குளித்து உடைமாற்றிவிட்டு வாப்பா சாப்பிடலாம்.பூவினி அறையை காட்டு.



ம்ம் சரிம்மா.வாருங்கள் மிஸ்டர் ஆனந்த அதிர்ச்சி



பூவினி உனக்கு எத்தனை தடவை சொல்லுவது.அவன் உன்னைவிட பெரியவன் அத்தான் என்று அழைத்து மரியாதையாக பேசிப்பழகு.



பூவினியின் உடலில் ஓர் அதிர்வு ஓடியது.இன்னொருத்தனை அத்தான் என்றழைக்க முடியுமா அவளால்!!!!!!!!!!!!!



அதெல்லாம் முடியாதும்மா.அத்தான் பொத்தான் என்றெல்லாம் அழைக்க முடியாது. மித்து என்று அழைக்கிறேன்.வேண்டுமென்றால் அந்த மித்துவுடன் மரியாதைப் பன்மையை சேர்த்துக்கொள்கிறேன்.



ஏய் வினி....



விடுங்கத்தை அவள் அப்படியே கூப்பிடட்டும்.அது தான் எனக்கும் பிடித்திருக்கிறது.அத்தான் என்றழைத்தால் ரொம்பவும் வயசானமாதிரி இருக்கும்.





என்னவோ செய்யுங்கள் உங்கள் இஷ்டம் என்றபடியே மேகலா சமையல் அறை நோக்கி சென்றார்.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:-15



ஹே ..வினிக்கா தருக்கா எங்கே இருக்கீங்கள்..



இங்கே தோட்டத்தில் இருக்கிறோம் தமிழ். இங்கே வா



வந்துட்டனே என்றபடியே ஓடிவந்து தாரணிக்கும் வினிக்கும் இடையில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள்



என்ன தமிழ் இவ்ளோ உற்சாகம்??



நாளைக்கு திருவிழாக்கு போறோம்ல.அதான்.



அடிப்பாவி அது உனக்கு சந்தோசமா??



பின்ன இல்லையா?? ரொம்ப நாளுக்கு பிறகு நாம எல்லோரும் சேர்ந்து போறோம்ல. நான் சிவப்பு நிற சல்வார் போடுறன்.நீங்கள்???



அடிப்பாவி இது அநியாயம் அக்கிரமம் என்னைவிட ரெண்டே வயது குறைஞ்ச நீ சல்வார் போடணும் நான் மட்டும் அம்மா மாதிரி புடவையை சுத்திட்டு வரணுமா??? முடியாது முடியாது



ஹ ஹ தருக்கா நீங்கள் புடவை கட்டுறீங்களா?? யார் சொன்னது.



ஹ ஹ ..யாருமே சொல்லல தமிழ் இவள் தன் வாயாலேயே சொந்தச் செலவில் சூனியம் வைச்சுக்கிட்டாள்.என்று கூறி கலகலவென சிரித்தாள் வினி.அந்தச் சிரிப்பை இரு விழிகள் பொக்கிஷமாய் பதிந்துகொண்டிருந்தது.









நிலவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.முடிந்தளவு வினியை நேரில் சந்திப்பதை தவிர்த்து அவன் விலகி விலகி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படி ஒரு திருவிழா வந்து அவனைச் சோதிக்கிறதே.என்ன செய்வது.போகாமல் விடுவோம் என்றால் அதற்கும் வழியில்லைப் போல் இருக்கிறதே.தாத்தா குடும்பத்தின் பெரியவர் அவரே அவ்வளவு உறுதியாய் சொன்ன பின்பும் அவன் போகாமல் இருக்க முடியாது.ஆனால் போனால் அவளை காண வேண்டுமே.அதுவும் கிட்டத்தட்ட நாள் முழுதும் ஒன்றாகவே இருக்க நேரிடும்.அவ்வளவு நேரமும் அவனால் நடிக்க முடியுமா?? அன்று அந்த கால் மணிநேரம் அவள் முன்னால் நின்று கோபமாய் கடுமையாய் பேசுவதற்கே அவன் எவ்வளவு சிரமப்பட்டான்.அதுவும் அவ்வளவு பயிற்சி எடுத்தும்.



நிலவா



ம்ம் என்னம்மா ??



பெரியத்தை வீட்டுக்கு சென்று அவர்கள் எந்த வண்டியில் வருகிறார்கள்.என்று கேள்.இடம் பத்தாது என்றால் உன் வண்டியிலும் இடம் இருக்கும்.அதிலும் வரலாம் என்று சொல்லிவிட்டு அப்படியே கொண்டு போகவேண்டிய பூசைப் பொருட்கள் எல்லாம் தவறாமல் எடுத்துக்கொண்டார்களா என்றும் நினைவு படுத்திவிட்டு வா.



அம்மா இதை தமிழிடம் சொல்லுங்களேன்.



அந்த சோம்பேறி இப்போது தான் குளித்துவிட்டு வந்து உடை மாற்றுகிறது டா.அவள் உடை மாற்றி அலங்காரம் முடித்து வர அரை மணி நேரமாகும்.நீ தான் தயாராகி விட்டாயே சிரமம் பார்க்காமல் நீ போய் சொல்லுப்பா.எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்கிறது என்று கூறியபடியே சாந்தா உள்ளே செல்லவும்.



ஹ்ம்ம்...என்று நீண்ட பெரு மூச்சை வெளியேற்றிய நிலவன் இன்று காலையிலேயே சோதனை ஆரம்பிக்கிறது போல என்று மனதினுள் எண்ணமிட்டபடியே வினி வீடு நோக்கி சென்றான்.

அன்று நிஜமாகவே அவனின் மனஉறுதிக்கு மிகப்பெரிய சோதனை வரப்போகிறது என்று தெரியாமல்....





நீல வர்ணப் பட்டுடுத்தி அதே வர்ணத்தில் கழுத்தாரமும் காதணியும் அணிந்து கை இரண்டிலும் கண்ணாடி வளையல்கள் குலுங்க தலையில் சூடிய மல்லிகைப் பூச்சரம் தோளின் இரண்டு புறமும் வழிய நெற்றியில் கருஞ்சாந்துப் பொட்டிட்டு விண்ணுலக தாரகை மண்ணில் இறங்கியதைப் போல கால்கொலுசு சத்தமிட பழக்கமில்லாத புடவை தட்டி விடாமல் இருக்க அதை லேசாக கையில் தூக்கியபடி படியிறங்கிய பூவினி எதிரே அசைவுணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.பார்த்தவள் திகைத்தாள்.



அத்தை என்றழைத்தபடி கூடத்துக்குள் நுழைந்த நிலவன் கொலுசொலியில் தலை நிமிர்த்தி எதேச்சையாக மாடிப் படியினை நோக்கியவன்.நோக்கியது நோக்கியபடியே நின்றுவிட்டான்.அவன் மூளை மரத்துப் போனது.விழிகள் இரண்டும் அவள் மேலேயே பதிந்திருக்க அவளையே விழியகற்றாது பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் இதுவரை அவளை புடவையில் பார்த்ததில்லை.முதன் முறை அவளைப் புடவையில் பார்க்கிறான்.



பெண்மையின் ஒட்டு மொத்த அழகையும் சுமந்து பூங்கொடியென தன்னெதிரே நின்றவளை கண்டு உள்ளே எதுவோ செய்தது அவனுக்கு.உச்சி முதல் பாதம் வரை அழுத்தமாய் படிந்து ரசித்தது அவன் பார்வை.கூந்தல் இழையில் ஒரு கற்றை இழை வெண்பிறை நெற்றியோரம் சுருண்டிருக்க கறுப்பு வானவில்லாய் வளைந்த இரு புருவங்களின் கீழ் கருவண்டு விழிகள் இரண்டும் அசையாது நேரே எதையோ நோக்கியபடியிருந்தது.அவை எதை நோக்குகின்றன என்று ஆராயுமளவிற்கு அவன் மூளை செயற்படவில்லை.அவன் விழிகள் அவள் விழிகளில் இருந்து முருக்கம் பூ நாசி மேல் பாய்ந்து ரோஜாப்பூக் கன்னத்தில் குதித்தது.கன்னம் வருடிய பார்வை மெல்ல பனிரோஜா இதழ்களின் மேல் அழுத்தமாக பதிந்தது.இதழ் வருடிய பார்வை மெல்ல மெல்ல கீழிறங்கியது.வெண்சங்கு கழுத்தையொட்டி நீலவர்ண கழுத்தாரம் அமர்ந்திருக்க பெண்மையின் செழுமையை புடவை தழுவியிருந்தது.லேசான ஏமாற்றத்துடன் கீழிறங்கிய பார்வை உடுக்கென சிறுத்திருந்த இடையில் சற்று தங்கி பின் மெல்ல மெல்ல கீழிறங்கி புடவைக்கு வெளியே தெரிந்த வெண்பஞ்சுக் கால்விரல்களில் நிலைத்துப் பின் மீண்டும் முக மலருக்கு தாவியது.



முதன் முறையாக அவளைப்பார்க்கும் அவன் பார்வையில் காதலுடன் காமமும் தாபமும் கலந்து கிடந்தது.அவன் அவளைக் காதலித்தவன் தான்.ஆனால் அவன் அவள் மீதான தன் காதலை உணர்ந்த போது அவள் பள்ளிச்சிறுமி.அதனால் அவனுக்கு அவள் மேல் வேறுவித எண்ணங்கள் எதுவும் தோன்றவில்லை.அதன் பிறகும் அவள் படித்து முடிக்கும் வரை தான் அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என மனதிலேயே முடிவெடுத்ததனால் அவன் அவளை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.வினி என்னவள்.அவளது அனைத்து பொறுப்பும் என்னது.என்றோ ஒருநாள் அவள் அவனுக்கு சொந்தமாகப் போகிறாள் என்ற நினைவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.அதற்கு மேல் அவன் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை.ஆனால் இன்று அவனுக்கு அவளைத்தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.கண்களில் காதலும் தாபமும் போட்டியிட அவளையே வெறித்துக்கொண்டு நின்றிருந்தான்.



பூவினி அவன் பார்வையைக் கண்டு திகைத்தாள்.அவள் அவனிடம் இப்படிப்பட்ட பார்வைகளைக் கண்டதில்லை.அவன் பார்வையில் கண்டிப்பை உணர்த்தியிருக்கிறான்.கனிவை உணர்த்தியிருக்கிறான்.பாசத்தை உணர்த்தியிருக்கிறான்.கோபத்தை உணர்த்தியிருக்கிறான். ஏன் சமீபத்தில் வெறுப்பைக் கூட உணர்த்தியிருக்கிறான். ஆனால் இது??? இந்தப் பார்வை ஒரு ஆணின் அப்பட்டமான வேட்கைப்பார்வை.அவள் நெஞ்சு படபடத்தது.எதுவும் செய்யத்தோன்றாமல் அவளும் உறைந்து அப்படியே நின்றுவிட்டாள்.அவர்கள் இருவரையும் பார்வையில் ஆராய்ச்சியுடன் இரு விழிகளும் நோக்கியபடி இருந்ததை இருவருமே அறியவில்லை. இருவரும் அப்படியே எவ்வளவு நேரம் நின்றார்களோ!!!!!!!!!



ஹே ..... வினி நீயா இது !!!!!!!!!!!! நம்ப முடியவில்லை இல்லை இல்லை...என்ற மித்திரனின் குரலில் இருவரும் சட்டென கலைந்தனர்.அப்போது தான் இடுப்பில் நிற்காத வேஷ்டியை பெல்ட் கொண்டு இறுக்கி ஒருவழியாக கட்டி முடித்து வெளியே வந்த மித்திரனின் கண்களில் பட்டது மாடிப்படியில் நின்ற வினி தான்.அவன் கூடத்தின் வாயில் ஓரம் நின்ற நிலவனைக் கவனிக்கவில்லை.



அவள் அருகே வந்தவன் ஏம்மா பொண்ணு இங்க வினி வினி என்று ஒரு வாண்டு இங்கும் அங்கும் திரியுமே அதைக் கண்டாயா நீ??? என்றான் கேலியாக.



ஆனால் அவனின் கேலிக்கு பதில் கொடுக்கும் நிலையில் வினி அப்போது இல்லை.ஏதாவது சொல்ல வேண்டுமே என்று வாயைத்திறந்தவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.வார்த்தைகள் மறந்து போனது போல இருந்தது.அவளின் திகைத்த தோற்றத்தைக் கண்ட அவன் ஏய் வினி எதுக்கு இப்படி பேய் அறைஞ்சதைப் போல நிக்கிறாய் என்று உலுக்கவும் அவனின் உலுக்கலில் நிமிர்ந்து அவனை ஒருகணம் பார்த்தவளின் பார்வை மீண்டும் தன்னைத் தாண்டிச் செல்லவும்.மித்திரனின் பார்வையும் அவளின் பார்வையைத் தொடர்ந்தது.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
அதுவரை அவர்களையே கண்களில் பொறாமையுடனும் கோபத்துடனும் முறைத்துக்கொண்டிருந்த நிலவன் மித்திரனின் பார்வை தன்னை நோக்கி திரும்பவும் சட்டென அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.மித்திரன் குழப்பத்துடன் வினியை பார்க்க அவளும் எதுவும் பேசாது மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.அவன் அறிந்த வினி இப்படி அமைதியாக இருப்பவள் இல்லை.என்னவாயிற்று இவளுக்கு!!!!!!!!! அவன் எதற்கு என்னை முறைத்தான்!!!!!!!!!!!!! மித்திரனின் புருவ மத்தியில் முடுச்சு விழுந்தது.





தனிமை தேடி தன் அறைக்குள் நுழைந்த வினிக்கு தலை விறைத்தது.ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் நெஞ்சில் முட்டி மோதி எழுந்தது.எல்லாவற்றையும் தடுத்து அவன் பார்வையே மேலெழுந்து அவள் இதயத்தை முழுதும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.அவன் பார்வை !!!!! அதை எண்ணும் போதே உள்ளே சிலிர்த்தது.அவனின் பார்வையில் தெரிந்த தாபம்!!!! எப்படி?? சற்றும் காதல் இல்லாமல் உரிமையற்ற ஒரு பெண்ணை ஒரு ஆண் இப்படி ஒரு பார்வை பார்ப்பது சாத்தியமா??? மற்ற ஆண்கள் எப்படியோ அவளின் அத்தானால் அது முடியுமா??? அவள் மனம் குழம்பியது.



பொன்வண்ண பட்டுடுத்தி செம்பவள பாவையென திகழ்ந்த தாரணி பூசைப் பொருட்கள் எடுத்து வைப்பதில் பெரியன்னைக்கு உதவிக்கொண்டிருந்தாள்.அவள் மதி முகம் மட்டும் ஏதோ யோசனையில் சுருங்கி இருந்தது.ஏதோ யோசனை என்ன எல்லாம் அவள் தமக்கையைப் பற்றியும் நிலவனைப் பற்றியதுமான சிந்தனை தான்.



காலையிலேயே தயாராகி வினியை காண்பதற்காக வந்தவளை வினி தயாராகி கொண்டிருப்பதாகவும் நேரமாவதால் தோட்டத்தில் பூப் பறித்துவர முடியுமா என்று கேட்ட பெரியன்னைக்காக தோட்டத்தில் சென்று பூக்கூடையில் மலர்களைப் பறித்து நிரப்பிக் கொண்டு கூடத்தின் பக்கவாட்டுக் கதவின் மூலம் உள்ளே நுழைந்தவள் வினி மாடிப்படியில் நிற்பதைக் கண்டு வினிக்கா என அழைக்க முற்படும் போது தான் வினியின் பார்வை திகைப்புடன் நேரெதிரே வெறித்திருப்பதைக் கண்டு தன் பார்வையையும் திருப்பினாள்.அங்கே நிலவன் நிற்பதைக்கண்டு சட்டென திரைச்சீலையின் மறைவினில் மறைந்து கொண்டாள்.



இப்படி இவர்கள் இருவரும் சந்திக்கும் ஒரு தருணத்திற்க்காகத்தானே அவள் காத்திருந்தது.அவள் பார்வை இருவரையும் ஆராய்ந்தது.முக்கியமாக நிலவனை.பூவினியைப் பற்றி அவளுக்கு தெரியும்.அவள் மனவுணர்வுகளை அவள் முகம் பளிங்கு போல வெளிப்படுத்திவிடும்.ஆனால் நிலவன் அழுத்தமானவன்.அவன் மனதில் என்ன எண்ணுகிறான் என்பதை அவன் முகத்தை பார்த்து அறியமுடியாது.ஆனால் அப்போது அவன் முகத்தில் தெரிந்த உணர்வு.பூவினியை நோக்கிய அவன் விழிகளில் தெரிந்த காதலுடன் கூடிய தாபம்.தாரணிக்கு ஆச்சரியமாக இருந்தது.அவன் பார்வையை கண்டு “அட அத்தானுக்கு இப்படி ரொமான்டிக் லுக் விடக்கூடத் தெரியுமா !!!!!!! “ என்று தோன்றியது. பூவினியைப் பார்த்தால் அவள் முகத்தில் அப்பட்டமான திகைப்பே தெரிந்தது.ஏன்?? அத்தானின் ரொமான்டிக் லுக் அவ்ளோ மோசமா இருக்கா என்ன!!!!! அவள் இயல்புக்கு ஏற்றபடி குறும்பாக மனதினுள் எண்ணியபடி அடுத்து என்ன நடக்கும் என்று அவள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தால் அதற்கிடையில் அந்த தடிமாடு இடையில் புகுந்து சொதப்பிவிட்டது.



மித்திரன் வினியின் அருகே சென்று உரிமையுடன் பேசியபொழுது நிலவனின் முகத்தில் தெரிந்த உணர்வை நினைத்துப் பார்த்த தாரணிக்கு சட்டென சிரிப்பு வந்தது.கூடவே அத்தானின் மனதில் வினிக்கா மேல் காதல் இருக்கிறது. அதற்கு இந்தப் பார்வையே சாட்சி.வினிக்காக்கும் அத்தானைப் பிடிக்கும்.அது வினி வாயாலேயே அவள் அறிந்த விடயம்.அப்படி இருக்கையில் இந்தப் பிரிவுக்கான காரணம் தான் என்ன??? என்ற சிந்தனையில் தாரணியின் தலை சுழன்றது.



கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோத அதற்கிடையில் மனதில் இறைவனைத் துதித்தபடி அனைவரும் நடந்துகொண்டிருந்தனர்.திடீரென்று ஹ்ம்ம்ம்..என்று தமிழ் பெருமூச்சு விடவும் அவள் அருகில் நடந்துகொண்டிருந்த வினியும் தாரணியும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தனர்.





தாரணி என்னடி எனவும்



என்ன கொடுமை தருக்கா இது.என்றாள்.



எது??



ம்ம்ம் கொஞ்சம் எங்களைச் சுற்றிப் பாருங்கள்.ஏதோ புதையலைப் பூதம் காக்குறது போல ரவுண்டு கட்டிக் கூட்டிப்போறத.இங்க வரும் போதாவது கொஞ்சம் கட்டுப்பாடுகள் தளரும் ஜாலியா சைட் அடிக்கலாம்னு பாத்தா விடமாட்டேன்கிறாங்களே.என்று தமிழ் சோகமாகக் கூறவும் அதைக்கேட்டு புன்னகைத்தபடியே வினியும் தருவும் தங்களைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினர்.



சாந்தா கல்யாணி முன்னே செல்ல அடுத்து வினி தாரணி தமிழை விட்டு பின்னே மேகலாவும் மேனகாவும் நடந்தனர்.சாந்தா கல்யாணிக்கு முன்னே அவர்களின் கணவன்மார் நடக்க மேகலாவுக்கும் மேனகாவுக்கும் பின்னே அவர்களது கணவன்மார் வந்தனர்.இடையில் இரு கரையில் நிலவனும் மித்திரனும் நிவே சுவே செந்துவும் வந்தனர்.





முண்டியடிக்கும் கூட்டத்தில் பெண்கள் நசுங்கிவிடாமல் இருக்கவும்.கோவிலில் கூட பெண்களை இடிக்கவென்றே வரும் சில காவாலிகளிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கவுமே இந்த ஏற்பாடு என்று புரிந்தது.



வினிக்கா இந்த வாண்டுகளைப் பாருங்கள் தாங்களும் ஏதோ பெரிய ஆக்கள் போல நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வருவதை.என்று தாரணி கூறவும் புன்னகையுடன்



அருகில் நடந்துவந்தவர்களை திரும்பி பார்த்தாள்.அவள் அருகில் நிவே பெரியமனிதன் தோரணையில் வந்துகொண்டிருக்க அவனுக்கு அருகில் நிலவன் வந்துகொண்டிருந்தான்.இவள் பார்க்கவும் அவனின் பார்வையும் இவளைத்தீண்டியது சட்டென பார்வையை விலக்கிக்கொண்டாள்.



வருடத்தில் ஒரு தடவை நடக்கும் திருவிழா என்பதனால் கூட்டம் எப்போதும் அதிகமாகத்தான் இருக்கும்.அன்றும் ஜனசமுத்திரம் அலைபாய்ந்தது.அந்த சமுத்திரத்தில் நீந்தி மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தனர்.



பூவினிக்கு நடப்பது மிகவும் சிரமமாய் இருந்தது. பலரின் மூச்சுக்காற்று மல்லிகைப் பூவின் மணம் வாசனைத்திரவியங்கள் என்று எல்லாம் சேர்ந்து அவளுக்கு வயிற்றைப் புரட்டியது.கூடவே நடக்க முடியாமல் பழக்கமற்ற சேலை வேறு காலைத்தட்டியது.முகமெல்லாம் வேர்த்துக்கொட்ட நா வறண்டது.தண்ணீர் கேட்கலாம் என்று தாயைத்திரும்பிப் பார்த்தால் முண்டியடித்த கூட்டத்தில் அது சாத்தியப்படும் போலத் தோன்றவில்லை.



அடுத்தகட்டம் மயங்கிக் கீழே விழுந்துவிடுவோம் என்று அவள் எண்ணும் போது மெல்ல அவள் கையைப் பற்றி யாரோ ஒரு ஓரத்தில் அமர வைத்தனர்.அது யாரென்று உணரும் நிலையில் அவள் அப்போது இல்லை.கையில் ஒரு தண்ணீர்ப் போத்தல் திணிக்கப்பட்டது.நிமிர்ந்து பார்த்தால் நிலவன் தான் குடி என்பதாய் சைகை செய்தான்.எதையும் சிந்திக்க முடியாமல் அவள் மளமளவென்று நீரை அருந்தவும் கையில் இருந்த சால்வையினால் மெல்ல விசிறிவிட்டான்.அவள் சற்று தெம்பாய் உணரவும் கையில் ஒரு புளிப்பு மிட்டாயைத் திணித்தவன்.இதை வாயில் போடு இல்லாவிட்டால் உனக்கு வாந்தி வரும் என்றவன். உனக்குத் தான் கூட்டத்தில் போனால் வாந்தி மயக்கம் வரும் என்று தெரியும்ல.நீ என்ன சின்னப்பிள்ளையா?? கையிலேயே ஒரு புளிப்புமிட்டாயையும் தண்ணீர்ப் போத்தலையும் வைத்திருப்பதற்கு என்ன என்று கடிந்தான்.



மறந்து விட்டேன் என்று மெல்ல முனுமுனுத்தாள் பூவினி.



ம்ம் சரி சரி இப்போது சரியாகி விட்டதல்லவா??



ம்ம்ம்



நடக்க முடியுமா?? தலைசுற்றல் இல்லையே???



இல்லை



சரி வா போகலாம்.



மற்றவர்கள் எல்லோரும் எங்கே??



அவர்களுக்கு நாம் பின் தங்கியது தெரியாது.நீ மயங்கி விழப்போவது போல் தோன்றவும் எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.சட்டென உன்னைப் பற்றி இங்கே அமரவைத்துவிட்டேன்.கூட்டத்தின் மத்தியில் அவர்களும் நம்மைக் கவனிக்கவில்லை.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
ஒ ..எப்படி நாம் அவர்களுடன் போய் சேர்வது.



இந்தக்கூட்டத்தில் அவர்களைத் தேடிக்கண்டு பிடிப்பது சிரமம் தான்.போன் பண்ணிப் பார்க்கலாம்.ஆனால் இங்கே அலைவரிசை கிடைப்பது கடினம் முயற்சிப்போம்.



எனக்கு பயமாய் இருக்கு அத்தான்.இப்படியே நாங்கள் தொலைஞ்சு போனா??



தன் கருவிழிகளில் பயத்தைத் தேக்கி அவள் அவன் முகம்பார்த்து வினவிய போது நிலவன் தன்னை மறந்தான்.தன் நிலையை மறந்தான்.



மென்மையாகப் புன்னகைத்து நாம என்ன சின்னப்பிள்ளைகளா வினு தொலைந்து போக.சரி அப்படியே தொலைந்தாலும் என் கார்ச்சாவி என்னிடம் தான் இருக்கு.பாதை தெரியும்.நாங்களே வீட்டுக்கு போய்விடலாம் அப்புறம் என்ன பயம் ஹ்ம்ம்??? என்று மென்மையாக வினவி அவள் தலையை வருடினான்.



அந்தக்கணத்தில் இருவருமே தம் நிலைக்கு மீண்டனர்.வினி வட்டமாய் விழிவிரிக்க நிலவன் அதிர்ந்து நின்றான்.என்ன காரியம் செய்துவிட்டான் அவன்.ச்சே ..இப்படி தடுமாறிவிட்டானே.அவன் சிந்தனையை கலைத்தது அலைபேசி ஓசை.அவசரமாய் அதை எடுத்து காதில் வைத்தவன்.



ம்ம்.. சற்று பின் தங்கிவிட்டோம்.



................



ம்ம் என்னுடன் தான் இருக்கிறாள்.



.......................



சரி வந்து விடுகிறோம்.



.................



இல்லப்பா ஒன்றும் பிரச்சனை இல்லை.



....



சரி



அலைபேசியை அணைத்தவன். அவள் முகம்பார்க்காமல் உள் மண்டபத்தில் எல்லோரும் நமக்காக காத்திருக்கிறார்கள் வா என்றபடி நடந்தான்.

வினியும் எதுவும் பேசாமல் அவனைப் பின் தொடர்ந்தாள்.அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் தாறுமாறாக ஓடின.





உள்ளே சென்று பூசைப் பொருட்களைப் பிரதான பூசாரியிடம் வழங்கி வழிபட்டனர்.இவர்களின் விசேட பூசை ஆரம்பித்தது.பெண்கள் ஒரு புறமும் ஆண்கள் ஒரு புறமும் அமர்ந்திருந்தனர்.அந்தப் பூசையின் முடிவில் அந்தக் குடும்பத்து மூத்த ஆண் வாரிசிற்கு மரியாதை செய்யப்படும்.அதாவது அர்ச்சகரின் கையினால் அவருக்கு தலைப்பாகை கட்டப்பட்டு இறைவனுக்கு சாற்றிய மாலை ஒன்று அணிவிக்கப்படும்.கடந்த பத்து வருடங்களாக அந்த மரியாதை நடப்பது ஜெகநாதனுக்கு தான்.அன்றும் பூசை முடிய அர்ச்சகர் “மரியாதைக்குரியவா வாங்கோ” எனவும் ஜெகநாதன் எழுந்து செல்வார் என நிலவன் காத்திருக்க நிலவா வா என ஜெகநாதன் அழைத்தார்.



திகைப்புடன் நான் எதுக்குப்பா என அவன் வினவவும் இன்றிலிருந்து இந்த மரியாதை இந்தக் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் மூத்த வாரிசான உனக்கு தான்.என்றார்.



நிலவன் திகைத்தான்.அவன் இதை எதிர்பார்க்கவில்லை.



இல்லை வேண்டாம்.உங்களுக்கு தான் அந்த மரியாதை உரியது.



சாமி காரியம் நிலவா வேண்டாம் என்று சொல்லாதே.எத்தனை வருடம் தான் நானே இந்த மரியாதையை ஏற்றுக்கொள்வது. அடுத்த தலை முறைக்கு அதை தர வேண்டாமா???



அப்படியாயின் நிவேக்கு அந்த மரியாதை செல்லட்டும் எனவும் நாகநாதன் என்ன பேசுகிறாய் நிலவா.அவன் சின்னப் பையன்.இந்தக் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு நீ இருக்கும் போது அவனுக்கு எப்படி இந்த மரியாதை செய்ய முடியும்.சும்மா பேசிக்கொண்டிருக்காமல் இங்கே வா அர்ச்சகர் எவ்வளவு நேரம் தான் காத்துக்கொண்டிருப்பார்.என்று அதட்டினார்.



குமாரசாமியும் போப்பா எனவும் வேறு வழியின்றி அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டான்.அவன் காதுக்குள் இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசு நீ என்ற வார்த்தைகள் எதிரொலிக்க அனைவர் முகத்திலும் தெரிந்த கலப்படமற்ற மகிழ்ச்சியைக் கண்டவன் குற்றவுணர்ச்சியுடன். விழிகளை இறுக மூடிக்கொண்டான்.