• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
பகுதி _ 7


அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள்.


தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது.


புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து நின்ற செடிகள் குரோட்டன்ஸ் எல்லாம் ஒரு ஒழுங்கில் வெட்டப்பட்ட தோட்டம் அழகாக தலை வாரிய இளம் பெண் போல் ஜொலித்தது. தலையில் சில பல பூக்களுடன் .....


அன்று ஞாயிற்றுக் கிழமை ஆதலால் பூவிழியும் கடம்பனும் கூடவே சுற்ற தோட்டக்காரரின் உதவியுடன் தோட்டத்தின் ஒரு பக்கமாக கொத்தி சாரி நீர்விட்டு பதப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் முனியனிடம் சொல்லி வாங்கி வந்திருந்த கத்தரி வெண்டி என்று காய்கறிச் செடிகளின் விதைகளைத் தூவி கிளறி விட்டாள். பின் அவற்றின் மேல் சிறிது நீர் தெளித்தவள். ஒரு திருப்தியான முறுவலோடு கைகளைத்துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தவள் தோட்டத்தின் மத்தியில் இருந்த ரோஜாச் சாடிகளில் ஒன்று வரிசை மாறி இருப்பதைக் கண்டு அதை மாற்றி வைக்க சொல்லலாம் என முனியனைத் தேடினாள்.தேடிச் சுழன்ற அவள் விழிகளில்



அங்கிருந்த மாமரத்தின் கீழ் சாய்ந்து ஓய்வெடுத்த முனியன் தென்பட்டார். அவர் முகத்தில் களைப்பு அப்பட்டமாக தெரிந்தது. சம்பளம் வாங்கும் ஒரே காரணத்திற்காக அவர்களும் சக மனிதன் தான் என்று எண்ணாமல் அவர்களின் களைப்பினைப் பொருட்படுத்தாமல் வேலை வாங்குவது என்ன நியாயம்??


சுபியின் இதழ்களில் ஓர் கனிந்த புன்னகை மலர அவரை தொல்லை செய்யாமல் தானே அந்த வரிசையை மாற்றி வைக்க எண்ணி சாடியைத் தூக்கினாள்.சற்று பெரிய அளவுள்ள சாடி தான். முழுதும் மண் நிரப்பி உள்ளே ஒரு ரோஜாச் செடி வேறு இருந்தது.



சுபிக்கா இது ரொம்ப பாரம் அக்கா. நீங்க தூக்க மாட்டீங்க.இருங்க முனியன் தாத்தாவ எழுப்புறேன்..... என்று பூவிழி சொல்ல

இல்ல பூவிழி அவர் பாவம் ரொம்ப களைச்சுப் போய் இருக்கார்.விடு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும்...



ஹ்ம்ம்... அப்போ இத யாரு மாற்றி வைக்கிறது??

ஹேய்ய்...அக்காவோட பவர பத்தி என்ன நினைச்ச... பாரு இத நான் தூக்கி காட்டுறேனா இல்லையான்னு... என்று விளையாட்டாய் அந்த சிறுமியிடம் பேசியவாறு மூச்சை பிடித்து அதைத் தூக்கியவள் சிரமத்துடன் இரண்டடி எடுத்து வைக்கவும்


ஏய்.... அறிவில்லையா உனக்கு என்று தனாவின் அதட்டல் மிக அருகில் கேட்க அதை எதிர்பாராததால் அதிர்ந்தவளின் பிடி நழுவ அந்த பூச்சாடி அவள் காலில் விழுந்து காலைப் பதம் பார்த்தது.


அம்மா ..... என்று அலறியபடி அவள் கீழே அமர்ந்து காலினை அழுத்திப் பிடித்தாள்.அவள் விரல்களிடையே குருதி துளித்துளியாய் உருண்டு கீழே வழிந்தது.


அக்கா .... என்று கடம்பனும் பூவிழியும் அதிர ஏய் கடம்பா ஓடிப்போய் தண்ணி எடுத்துட்டு வா.. என்று கடம்பனை விரட்டிய தனா அவள் அருகில் கீழே மண்டியிட்டு அமர்ந்து அவள் காலைப் பார்க்க முயன்றான்.அவள் அதற்கு அனுமதிக்காமல் கரங்களால் இறுகப் பொத்தியபடி தலைகுனிந்து வேதனையில் முனக



ஏய்... கையை எடு.... காயம் பெருசான்னு பார்க்கணும்.. பெருசா இருந்தா தையல் போடணும் என்று அதட்டியவன் அவள் கையை வலுக்கட்டாயமாக விலக்கி பார்த்தான். அவள் கால் முழுதும் குருதியில் தோய்ந்திருந்தது. கடம்பன் கொண்டு வந்திருந்த நீரால் அவள் காலைக் கழுவினான். கழுவ கழுவ குருதி பெருகியது.



அதற்குள் பூவிழி ஓடிச் சென்று தகவல் சொன்னதில் பிரபாவதியும் வந்திருக்க
அம்மா காயம் கொஞ்சம் பெருசு .... தையல் போடணும் போல இருக்கு. நா இவள கூட்டிட்டு நம்ம டாக்டர் வீடு வரைக்கும் போயிட்டு வாறன். முகில்கிட்ட சொல்லிடுங்க என்றவன்


அவள் கரத்தைப் பற்றி எழுப்பினான்.
பாத்துடா சுபிம்மா என்று பிரபாவதி அவள் மறுபுறம் பிடிக்க அத்தையின் தோளை அழுத்திப் பிடித்து எழுந்தவள் மெதுவாக மறுபுறம் பற்றியிருந்த தனாவின் கையை விலக்கினாள். தனஞ்சயன் எதையும் கண்டுகொள்ளவில்லை.



ஆனால் பிரபாவதியின் தோளைப் பிடித்தபடி மெல்ல அடியெடுத்து வைத்தவளின் முகத்தில் தெரிந்த வேதனையையும் ஒவ்வொரு அடிக்கும் காலில் பெருக்கெடுத்த குருதியையும் கண்டவன் அடுத்த கணம் எதையும் சிந்திக்காமல் விலகுங்கம்மா என்றவன் சட்டென அவளை கைகளில் தாங்கினான்.



அதை எதிர்பாராமல் திகைத்த சுபாங்கி இல்லை நானே வருவேன் என தடுமாறியபடி முணுமுணுக்கவும் வாயை மூடிட்டு இருடி.... என்று உறுமியவன் வேகமாக விரைந்தான். வேறு வழியின்றி பிடிப்புக்காக அலைந்த சுபியின் கைகள் அவன் தோளில் பதிந்தன. அந்தக் கணம் உடல் சிலிர்க்க வேதனையையும் மீறி சுபியின் கலங்கிய விழிகள் அவன் முகம் பார்க்க அவன் முகத்தில் அவள் எதிர்பார்த்த எந்த உணர்வும் இல்லை. இவனுக்கு அந்த நினைவே இல்லையா?? இதே போல் அவன் தோளைக் கட்டியபடி அவள் அவனில் பாதுகாப்பு தேடிய அந்த தருணம்!!!!!!





இத்தனை வருடங்களாய் அதை நெஞ்சில் சுமந்து அதனுடனே வாழ்வது அவள் மட்டும் தானா?? விழிகளை இறுக மூடியவளின் விழியோரம் வழிந்த கண்ணீர் அவன் மார்பைச் சுட்டது.


ரொம்ப வலிக்குதா?? அழாதே இதோ டாக்டரிடம் போய்விடலாம். அவர் தையலும் போட்டு கூடவே வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசியும் போடுவார். எல்லாம் சரியாகிவிடும்.


ஏதோ குழந்தையை சமாதானப் படுத்துவது போல் கூறிக்கொண்டே அவளை காரினுள் இருந்தினான்.


அவன் பேச்சில் கோபம் சுர்ரென்று ஏற நான் ஒன்றும் அழவில்லை என்று சீறியவள் கண்களை அழுந்த தேய்த்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அவளை குழப்பத்துடன் திரும்பி பார்த்தவன் எதுவும் பேசாமல் காரை எடுத்தான்.அவன் பார்வை அவ்வப்போது சுபி மீது படிந்து மீண்டது. அவள் முகத்தில் வலியின் வேதனை தெரிந்த போதும் அவள் விழிகளில் கண்ணீர் வரவில்லை. ஆனால் சிவந்து கலங்கிய விழிகளும் வலியில் சுணங்கிய முகமும் அவள் வேதனையை அவனுக்கு சொல்லியது.



திமிர்..... மொத்தமும் திமிர்.... என் முன் அவள் வலியைக் காட்டி அழுதால் அவள் தன்மானம் என்னாவது..... முகம் இறுக காரினை விரைந்து செலுத்தினான் தனஞ்சயன்.



தனாவைக் கண்டதுமே வாப்பா தனா.... உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.... வர சொல்லி ஆள் அனுப்பலாமா என்று கூட நினைத்தேன் என்று பேசிக்கொண்டு போன டாக்டரை..


அதை பொறுமையாய் பேசுவோம் டாக்டர். இப்போ இவளைக் கொஞ்சம் பாருங்க..மேடம் தன்னோட முருங்கக்காய் கையால பூச்சாடியைத் தூக்கி காலில் போடுட்டாங்க... நிறைய ப்ளட் போயிடுச்சு...



அடக் கடவுளே.... இங்கே உட்காரும்மா.... எங்கே காலைக் காட்டு....என்று பரிசோதித்தவர் அடடா.... கொஞ்சம் பெரிய காயம் தான். குறைந்தது நான்கு தையலாவது போட வேண்டும் போல இருக்கே என்றவர்...



அங்கிருந்த ஒரு பெண்ணிடம் அவள் காலைச் சுத்தம் செய்ய சொல்லி விட்டு தையல் போடுவதற்கான பொருட்களை எடுத்தார். அவர் கையில் எடுத்த ஊசியைக் கண்டவளின் விழிகள் மிரட்சியுடன் தனாவை நோக்கின..



தையல் போடும் போது ரொம்ப வலிக்குமோ??? தன்னை மீறி அவனிடம் பயத்துடன் வினவினாள்.


அவனுக்கு சிரிப்பு வந்தது...காரில் தன்னிடம் சீறிய சீறல் என்ன..இப்போது குழந்தை மாதிரி மிரள்வது என்ன??


ச்சே.. ச்சே.. வலிக்கவே வலிக்காது... அப்படியே மயிலிறகால வருடுற போல இருக்கும் என்றான். முயன்று வருவித்த மென்மைக் குரலில்.


அவனின் கேலி புரிந்து கோபத்துடன் முகம் திருப்பிக் கொண்டாள் சுபி. ஆனால் தையல் போடும் போது ம்மா...என்று முனகியவள் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு கரங்களை இறுக மூடி வலியை சகித்துக் கொள்ள அதைக் கண்ட தனஞ்சயன் அவள் அருகில் வந்து அவள் கரத்தை பற்றி தன் கரத்துள் அடக்கியபடி அவள் தோளை லேசாக அணைத்தபடி நின்றான்.



அவள் காயத்துக்கு கட்டுப்போட்டு முடித்த மருத்துவர்.. வலிதெரியாமல் இருக்க சில மாத்திரைகளையும் எழுதிக் கொடுத்தார்.


நன்றி டாக்டர்..

நன்றி எல்லாம் இருக்கட்டும்.
ஆனா தனா.... உனக்குள்ள ஒரு ரோமியோ ஒளிஞ்சிருக்கிறத இன்னைக்கு தான் பார்த்தேன் பா. இவ தான் உன் வைப் னு நீ சொல்லாமலே தெரிஞ்சுக்கிட்டேன்.. ஹப்பா.... என்ன ஒரு அக்கறை , பதட்டம்...


அப்படி எல்லாம் இல்ல டாக்டர்... அவ ரொம்ப பயந்திருந்தா அதான்.....


ஹ ஹ.... எந்த விளக்கமும் வேணாம்டா... தனாப்பயலே... நீ இப்படி இருக்கிறத பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு... என்றவர் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றிருந்த சுபாங்கியிடம் உன் பேரு என்னம்மா என்று வினவினார்.


அவள் மெல்ல சுபாங்கி என்று சொல்லவும்..... ரொம்ப நல்ல பேரு... தனா ரொம்ப நல்லவன்மா இவனைப் போல ஒரு புருஷன் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும்.. கொஞ்சம் முன் கோபம் ஜாஸ்தி....மற்றும்படி....என்று சொல்லிக்கொண்டு போனவர்



அட கொல்ல தெருவில வந்து ஊக்கு விக்கிறேன் பாரேன்!!!!! நீங்க லவ் மரேஜ் என்று கேள்விப்பட்டேன். அதுவும் உன் குடும்பத்தையே மீறி இவன் தான் வேணும்னு வந்திருக்கன்னா உனக்கு இவனப் பற்றி தெரியாததா... என்று சிரித்தார்.

தனஞ்சயன் கஷ்டப்பட்டு முகம் மாறிவிடாமல் காத்தபடி சுபியைப் பார்க்க அவள் வெட்கம் போல தலையைக் குனிந்து கொண்டாள்.

நிச்சயம் அது வெட்கமாய் இருக்காது. தன முகத்தின் கடுப்பை இப்படி மறைக்கிறாள்.. தனா மனதுக்குள் எண்ணிக் கொண்டான்.









இது எதையும் அறியாத டாக்டரோ தொடர்ந்து
ஹ்ம்ம்.... இந்த பய தான் ஒரு ரிசெப்ஷன் கூட வைக்கல. வைச்சிருந்தா நேர வீட்டுக்கே வந்து உன்னைப் பார்த்திருப்பேன்மா. anyway ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும். ஐ விஷ் யு போத் வெரி ஹாப்பி மர்ரிட் லைப்...என்று வாழ்த்தினார்.



தன்க்யூ என்று சுபி முணுமுணுக்க.... நம்மள ரொம்ப புகழ்ந்துட்டீங்க டாக்டர் சார். இன்னைக்கு இரவு குளிர் ஜுரம் தான் போங்க என்று சிரித்தவன்..கிளம்புறேன் டாக்டர்... ஆ... அப்புறம் தேவையான லிஸ்ட் எடுத்து வையுங்க இன்னைக்கு இனிப் போக முடியாது. வாற ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் போவேன்..மொத்தமா வாங்கிடலாம் என்று விட்டு அவரின் “ சரிப்பா” என்ற பதிலைப் பெற்று ஒரு சிறு தலையசைவுடன் சுபாங்கியை “வா” என்று எழுப்பி அழைத்துச் சென்றான்.



அவள் மெது மெதுவாய் வரவும்.... என்ன கால் வலிக்குதா? வலித்தால் சொல்லு தூக்கிட்டே போகிறேன் என்றான் அக்கறையுடன்... அவன் குரலில் அக்கறை தான் இருந்தது.


ஆனால் சுபி... இல்லை.. இல்லை.. வேணாம்.. நானே நடப்பேன்.... என அவசரமாய் சொல்லவும் அவன் முகத்தில் சிறு குழப்பம் தோன்றி பின் அந்த இடத்தை கோபம் ஆக்கிரமித்தது.ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் ...


ஓகே உன்னால் முடியுமென்றால் பிரச்சினை இல்லை என்றவன்... அவள் அமர உதவி செய்து பின் கதவை சாத்தி விட்டு சுற்றி வந்து காரை எடுத்தான்.


வீட்டு வாசலிலேயே பிரபாவதி காத்திருந்தார்... சுபிக்குட்டி இப்போது எப்படி டா இருக்கிறது?? வலிக்கிறதா?? என்று அக்கறையுடன் வினவியபடியே அவள் காரை விட்டு இறங்க உதவி செய்தவர் அவள் காலை எடுத்து வைக்க சிரமப்படவும்


தனா என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? அவள் பாவம் நடக்க எவ்வளவு சிரமப் படுகிறாள். என் அறை வரை தூக்கி வந்து விடுடா. பாவம் குழந்தை....என்றார்.


தனஞ்சயன் சுபாங்கியைப் பார்த்தான். அவள் மறுத்து சொல்ல ஏதோ வாய் எடுக்கவும் அவளை மேலே பேச விடாமல் சட்டென அவளைத் தூக்கியவன் விரைந்து சென்று பிரபாவதியின் அறைக்குள் நுழைந்து படுக்கையில் கிடத்தினான். ம்ஹும்.. கிட்டத்தட்ட போட்டான். அதே வேகத்தில் நிமிர்ந்தவன்.. உன்னை இப்படி தூக்கி வந்தது மனிதாபிமான அடிப்படையில் தான்.... ஏதோ உன்னைத் தொடும் ஆசையில் தான் என்று தப்புக்கணக்கு போட்டு ஓவராய் சீன் போடாதே !!!!!! என்று உறுமி விட்டு விரைந்து சென்றுவிட்டான்.


அவன் போன பாதையையே வெறித்த சுபாங்கி வேதனையுடன் விழி மூடினாள்.


இந்த கரிசனை தானே... அக்கறை கலந்த உரிமைப் பேச்சுத்தானே .... அன்று அவளை வீழ்த்தியது..... அவள் பருவ வயதில் விதையாய் அவள் நெஞ்சில் விழுந்து ஆலவிருட்சமாய் வேரூன்றி நிற்பவன் சிந்திவிட்டு போன சுடு சொல்லில் அவள் இதயம் வலித்துச் சுருண்டது.
 

Sivaranjani

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
2
அருமை👌👌👌. கதையோட தலைப்பே படிக்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. இருவரின் சின்ன சின்ன சண்டைகள் அழகு. சுபி மனதில் இருப்பதை இந்த இராவணன் ஆகிய ராமன் எப்போது அறிவான். இருவரின் காதல் பயணத்திற்கு waiting. அப்புறம் உண்மையில் இவன் ராமன் தான். 😍😍😍nice story.... Waiting for next ud.
 

Tharsan Thanu

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
72
அருமை👌👌👌. கதையோட தலைப்பே படிக்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. இருவரின் சின்ன சின்ன சண்டைகள் அழகு. சுபி மனதில் இருப்பதை இந்த இராவணன் ஆகிய ராமன் எப்போது அறிவான். இருவரின் காதல் பயணத்திற்கு waiting. அப்புறம் உண்மையில் இவன் ராமன் தான். 😍😍😍nice story.... Waiting for next ud.
Thanks much dr...
 
Top