பரிதி - 1
ரேனும்மா
விக்ரம் - நிசப்தி
தசிரா
தன்வந்த்
தயானந்த்
ரவி சங்கர்- கிருத்திகா
நித்திலன்
நிலா
நரேன் - உஷா லட்சுமி
இனியன்
இளந்தளிர்
முகுந்தன் - ரஞ்சனி
அர்ஜூன்
அக்ஷிதா
மக்களே விக்ரம் 2வது பார்ட்ல இவங்கதான் வருவாங்க. குழப்பம் வேண்டாம்னு முன்னாடியே உங்களுக்கு னேம் எல்லாம் மென்சன் பண்ணிருக்கேன்.
----------------------------
சென்னை வடபழனி முருகன் கோவில்.
பனித்தூவும் முன்காலை பொழுது.. விடிந்தும் விடியா அந்த காலைப் பொழுதில் கோவில் பிரகாரம் மிகவும் பரபரப்புடன் காட்சியளித்தது.
பரபரப்பிற்கு காரணம் தமிழ்நாட்டின் மல்டி மில்லினியர் ரவி மற்றும் கிருத்திகாவின் மகனும், கார்பரேட் உலகின் சானக்கியன் எனப்படும் விக்ரம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிசப்தியின் மருமகனுமான நித்திலனின் திருமணம்தான் நடக்க இருக்கிறது.
ஐயர் மந்திரம் படிக்க, அதை இறுகிய முகத்துடன் சொல்லிக் கொண்டிருந்தான் மணமகன். அவன் இறுகிய முகத்தைப் பார்த்தாலே தெரியும் இந்த திருமணத்தில் அவனுக்கு துளியும் விருப்பம் இல்லையென்று.
ஆனாலும் பாட்டியின் ஆசை. அவர் பேச்சை அவனால் எப்போதும் தட்டிச்செல்ல முடியாது.
அவர் ஆசைக்கு ஒத்துக்கொண்டவன் தானும் ஒரு கண்டிசன் வைத்தான் அந்த பெரியவருக்கு.
திருமணம் மிகவும் எளிமையாக கோவிலில்தான் வைக்க வேண்டும் என்றுவிட்டான்.
யார் எடுத்து சொல்லியும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவே இல்லை.
எதை வேண்டாம் என வெறுத்து ஒதுக்குகிறோமோ, அதுதான் தன் வாழ்வில் வழுக்கட்டாயமாக திணிக்கப்படும் என்பதற்கு இந்த திருமணம் ஒரு சாட்சி நித்திலனுக்கு.
நேரம் நெருங்க நெருங்க அவன் உடலும் இறுக ஆரம்பித்தது. நித்திலனின் அருகே நின்றிருந்த அவன் தங்கை நிலாவிற்கு அவன் நிலை புரிய, அண்ணனின் தோளைத் தட்டியவாறு நின்றிருந்தாள்.
மறுபக்கம் நித்திலனின் பெற்றோர் ரவியும் ரித்தியும் பதட்டத்தில் நின்றிருக்க, அவர்களுக்கு அருகில் விக்ரமும் நிசாவும் நின்றிருக்க அதில் நிசப்தியின் முகம் வெறுமையாக இருக்க, விக்ரமின் முகம் உணர்வுகளைத் தொலைத்திருந்தது.
வழக்கம்போல அவனுக்கருகில் நரேனும் உஷாவும் ஆறுதலாக நிற்க, முகுந்தனும் ரஞ்சியும் இன்னும் வந்திருக்கவில்லை. பெண் வீட்டாருடன் வருவதாக ஏற்பாடு.
ரஞ்சனியின் சொந்தத்தில்தான் பெண். ரவியின் தொழில்முறை நண்பர். தொழிலில் அடுத்து நடைபெறப் போகும் ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்தத் திருமணம்.
இதில் பெரியவர்களுக்கு விருப்பமே இல்லை. திருமண வாழ்க்கையே வேண்டாம் என்றிருந்தவனை ரேனுகாவின் பேச்சும் செயலும் அதிரடியாக முடிவெடுக்க வைக்க, வேறுவழியில்லாமல் அவனேதான் இந்த திருமணத்தை நடத்த வீட்டில் பேசினான்.
எதற்கோ பயந்து எதிலோ விழுந்த கதைதான் இப்போது.
அழுது, சண்டையிட்டு போராடி என பெரியவர்களின் எந்த செயலுக்கும் அவனிடம் மதிப்பில்லை. இதோ திருமணம் வரை கொண்டுவந்தாயிற்று.
நிலாவுக்கு அருகில் அக்ஷிதாவும், இளந்தளிரும் நின்றிருக்க, அர்ஜுனும் இனியனும் வந்தவர்களை வரவேற்றபடி இருக்க, கீழே ரேனுகா வீல்சேரில் அமர்ந்திருக்க, அவரைப் பிடித்தபடி தன்வந்த் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் தன் அக்காவின் மகன் ருத்ரனை வைத்தபடி தயானந்த்தும் நின்றிருக்க, இங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் ரேனுகாவின் கைகளைப் பிடித்தபடி தன் மொபைலில் அழ்ந்திருந்தாள் தசிரா.
ரேனுகாவின் பார்வை பேரனையேத் தொடர, அவனோ அவரைப் பார்க்காமல் அவருக்கு அருகிலிருந்த தசிராவையே பார்த்திருந்தான்.
வெண்பட்டில் அரக்கு கலரில் பார்டர். அரக்கு நிற ப்ளவுஸ்.. இடைவரை இருந்த கூந்தலை இருப்பக்கமும் எடுத்து ஒரு கேட்ச் கிளிப்பில் அடக்கியிருந்தாள். நெற்றியில் சிறுபொட்டு. அதிலும் கருப்பு வண்ண ஸ்டிக்கர் பொட்டு. எப்போதும் அணியும் நகைகள். அவ்வளவுதான் அலங்காரம்.
பேரழகி என்பதில் பொய்யே இல்லை. ஆனால் அவள் வாழ்க்கை, மகளைப் பார்த்த விக்ரமிற்கு மனம் உலைக்களமாக எரிந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளில் நிசப்திக்கு தான் செய்த பாவம்தான் தன் மகளை வதைக்கிறதோ என்று அவன் எண்ணி வருந்தாத நாட்களே இல்லை.
நிசப்தியை சொல்லவே வேண்டாம். சிறு எறும்புக்கும் கூட தீமை செய்யாதவள். உண்மை, நேர்மை, ஒழுக்கம் என்று இருந்தவளுக்கு, மகள் வாழ்க்கையைத் தொலைத்து வந்தபின் எதிலும் நம்பிக்கையுமில்லை. ஈடுபாடுமில்லை.
இந்த இரண்டு ஆண்டுகளில் விக்ரமின் வீடு மொத்தமாக கலையிழந்து போயிருந்தது.
தசிரா பிசினஸ் மேனேஜ்மென்டில் எம்பிஏ முடித்துவிட்டு ரித்திக்குப் பிறகு அவர்கள் கம்பெனியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
தன்வந்த் முகுந்தனைப் பின்பற்றி மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்க, இப்போது கடைசியாண்டில் இருக்கிறான்.
அவனின் இரட்டையான தயானந்த் தன் தந்தையைப் பின்பற்றி சட்டப்படிப்பை முடித்து, இப்போது நிசப்திக்கு உதவியாக இருக்கிறான்.
அங்கிருந்த அனைவரும் எதுவும் பேசமுடியாமல் நடப்பதை வேடிக்கைப் பார்த்தபடி இருக்க, முகுந்தனின் மகன் வேகமாக வந்து விக்ரமின் காதில் ஏதோ சொல்ல, உடனே விக்ரமின் முகம் பதட்டத்தைக் காட்டியது.
அதை உணர்ந்து “என்ன என்ன விக்ரம்..” என ரவி வர
“நத்திங்க் நீ இங்க பாரு.. நான் ஒரு கால் பேசிட்டு வரேன்..” என்றுவிட்டு நரேனைப் பார்த்தபடியே வெளியில் செல்ல, புரிந்தது போல நரேனும் விக்ரமின் பின்னே சென்றான் குழப்பமாக.
“நரேன்.. அந்த பொண்ணை காணோமாம். இங்க வரும் போது பொண்ணு வந்த கார் மிஸ்ஸாகிடுச்சாம். அங்க எல்லாம் தேடிட்டு இருக்காங்க போல. நீ நம்மாட்களை வச்சு கொஞ்சம் என்னனு பாரு. நான் அம்மாக்கிட்ட சொல்லிட்டு என்ன செய்யன்னு கேட்கறேன்.” என்றபடியே ரேனுகாவிடம் செல்ல,
“ஓக்கே பாஸ்..” என்றவன் தன் மகன் இனியனைப் பார்க்க, அவனோ அர்ஜூனுடன் சேர்ந்து தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
“இனியா..” என்று சத்தமாக அழைக்க,
“எஸ்ப்பா..” என்று வந்தவனிடம், அடுத்து செய்ய வேண்டியதை சொல்ல, அவன் பார்வை மின்னலாக விக்ரமையும், தசிராவையும் தொட்டு மீண்டது.
“ஓக்கேப்பா..” என்றவன் அடுத்த வேலைகளை கடகடவென செய்ய, அதற்குள் ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுக்க ஆரம்பிக்க, ரவி மகனை முறைத்துக் கொண்டிருந்தார்.
பெரியவர்களின் பேச்சை கேட்டால் இதெல்லாம் நடக்குமா, எல்லாம் அவன் இஷ்டம் என மனதுக்குள் மகனை கடித்துக் குதறியபடியே இருந்தவர், மனைவியைப் பார்க்க அவரோ விட்டால் இப்போதே மயங்கி விழுந்துடுவேன் எனும் நிலையில் இருந்தார்.
“நிசாம்மா.. உங்க அண்ணியை கொஞ்சம் உட்கார வை. விட்டா விழுந்து புதையல் எடுப்பா போல..” என மனைவியை கடிந்து நிசாவோடு அனுப்ப,
“அக்கா எதுக்கு இவ்வளவு டென்சன். பயப்படுறமாதிரி ஒன்னும் இருக்காது..” என ரித்தியை சமாதானம் செய்தபடியே மாமியாருக்கு அருகில் அமரவைத்தாள்.
மொபைலில் கவனமிருந்தாலும், இங்கு நடப்பதையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் தசிரா.
நடப்பது ஒன்றும் அவளுக்கு சரியாகப்படவில்லை.
அதனால் வேகமாக எழுந்து “ம்மா நான் கொஞ்சம் வெளிய இருக்கேன். வாமிட் வர மாதிரி இருக்கு..” என நிசாவிடம் சொல்லிவிட்டு நகர,
“என்ன என்னாச்சு அம்மு.. நைட் சாப்பிட்டியா இல்லையா.? தனு அக்காவுக்கு என்னனு பாரு..” என ரித்தி தன் பயத்தையெல்லாம் ஒதுக்கி, மருமகளுக்காக பதற,
“ஒன்னுமில்லத்த, வாமிட்டிங்க் சென்ஷேசன் அவ்ளொதான். வெளிக்காத்து பட்டா நல்லாருக்கும். ப்ளீஸ்.” என முகத்தைச் சுருக்கினாள்.
யாரும் எதுவும் கேட்காமல் தன்னை விட்டால் போதும் என்ற நிலையில் இருந்தாள் பெண்.
ரேனுகா அதை உணர்ந்தாரோ என்னவோ மணவறையில் இருந்த பேரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “விடு ரித்திம்மா, கொஞ்ச நாளாவே அவளுக்கு ரொம்ப வேலை. டென்சன் வேற. நீ போடாம்மா.. நிசாம்மா விக்ரமை வரச்சொல்லு,” என மகளிடம் ஆரம்பித்து, பேத்தியைக் காப்பாற்றி, மருமகளிடம் முடித்தார்.
அதுவரை மணவறையில் அமர்ந்து அழுத்தமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நித்திலன் தசிரா எழவும், தானும் சட்டென்று எழுந்தான்.
“மாங்கல்ய தாரணம் முடியாம அப்படியெல்லாம் எழுந்துக்கக்கூடாது தம்பி, சித்த நேரம் உட்காருங்கோ” என்ற ஐயரின் பேச்சைக் காதில் வாங்காமல் நடந்தவனை, அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, அவனோ யாரையும் கண்டுகொள்ளாமல் தசிராவிற்கு முன்னால் வந்து நின்றான்..
“ம்ச் என்ன..” என்றாள் சலிப்பாக, அவளுக்கு இப்போது இங்கிருந்து போகவேண்டும் அவ்வளவுதான்.
அதிலும் தனக்கு எதிரில் நிற்கும் அவனைவிட்டு தூரமாக ரொம்ப தூரமாக போகவேண்டும்.
“மேடம் எங்க கிளம்பிட்டீங்க..” என்றான் கூர்பார்வையோடு.
“உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை” என வெடுக்கென்று சொன்னவள், அவனைச் சுற்றிக்கொண்டு நடக்கப்போக, அவளை வளைத்துப் பிடித்தவன், முறைத்துக் கொண்டிருந்த தன்வந்தைப் பார்த்து “போய் மாமா அப்பா எல்லாரையும் கூப்பிட்டு வா..” என்றான் கட்டளையாக.
ஆனால் தன்வந்தோ நித்திலனின் கையிலிருந்து தன் தமக்கையை இழுத்து தனக்குப் பின்னே நிறுத்திக்கொண்டு “இப்படி கையைப் பிடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம். உங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகப்போகுது, அதைவிட்டுட்டு ஏன் இங்க வந்து அக்காக்கூட வம்பு பன்றீங்க.” என திமிராக பேச, தயானந்தும் குழந்தையோடு வந்து தமக்கையின் அருகில் நின்றுகொண்டான்.
இதைப் பார்த்த மற்ற சிறியவர்களும் வந்துவிட, அதற்குள் ரவியே எல்லாரையும் அழைத்து வந்திருந்தான்.
“என்ன என்ன நித்தி.. அம்முவை விடு. எதுக்கு அவக்கூட வம்பு..” என ரவி வர, அவனை முறைத்துப் பார்த்த நித்திலன் விக்ரமைப் பார்த்து “ஸாரி மாமா” என்றான்.
பார்வையில் மட்டுமே அந்த மன்னிப்பு கேட்கும் பாவம். மத்தபடி திமிராகத்தான் நின்றிருந்தான்.
பதிலேதும் கூறாத விக்ரம் இப்போது மகளைப் பார்க்க, அந்தப் பார்வைக்காகவே காத்திருந்ததைப் போல “ப்பா.. ப்பா” என்றாள் வார்த்தைக்கு பஞ்சம் போல.
“என்ன அம்மு…” எனவும்
“ஐம் ஐம் நாட் வெல்ப்பா. ஐ ஃபீல் ஐ ஃபீல் ட்ரவுசி..” என்றுத் திணறியவள், அப்படியே விக்ரமின் தோள்மீது சாய,
“ப்பா.. அக்கா நேத்து ஸ்லீப்பிங்க் டோஸ் எடுத்துருக்காங்க.. மார்னிங்க் ருத்துக்குட்டியை வாங்க போகும்போதுதான் கவனிச்சேன். ரெஸ்ட் எடுக்க சொன்னேன். எல்லாருக்கும் தெரிஞ்சா கஷ்டம் அதனால நான் வரேன்னு வந்தாங்க..” என்றான் தன்வந்த்.
“வாட் இஸ் திஸ் தனு.? இதெல்லாம் ஏன் சொல்லல. எப்போ இருந்து எல்லாம் நீங்களே பார்க்க ஆரம்பிச்சீங்க. அப்போ வீட்டுல பெரியவங்கன்னு நாங்க எதுக்கு.?” என நிசா மகனை கத்த, “சாரிம்மா..” என்றான் மகன். வேறு என்ன சொல்வதென்று தெரியாமல்.
“ம்ச் நிசா இப்போ அதுதான் உனக்கு முக்கியமா.? அம்முவ கூப்பிட்டு கிளம்பு. அவ ரெஸ்ட் எடுக்கட்டும். இங்க நாங்க பார்த்துக்குறோம்..” என்ற ரவியிடம் சரியெனத் தலையாட்டியபடி மகளைப் பிடிக்க வர,
இதையெல்லாம் பார்த்து கொதிநிலைக்குச் சென்ற நித்திலன், தன் மாமன் தோளில் சாய்ந்திருந்தவளை, வெடுக்கென தன்னிடம் இழுத்து, மற்றவர்கள் சுதாரிக்கும் முன்னே தன் கையில் வைத்திருந்த மாங்கல்யம் கோர்த்திருந்த செயினை அவள் கழுத்தில் போட்டுருந்தான்.
“டேய் டேய் என்னடா பன்ற” என ரவி கத்த
“நித்தி.. என்னடா இதெல்லாம்..” என ரித்தி இயலாமையில் அழவே ஆரம்பித்துவிட,
“கண்ணா ஏண்டா இப்படி.” என நிசப்தி அதிர்ச்சியில் கேட்க, உஷா வந்து நிசப்தியைப் பிடித்துக்கொள்ள, நரேன் ரவியை சமாதானம் செய்ய, ஆனால் விக்ரமோ நித்திலனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் தன்வந்த் நித்திலனுக்கு முன்வந்து “என்ன? என்ன பண்ணிட்டு இருக்கீங்க.? என் அக்காவை பார்த்தா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா.? முதல்ல வேணும்பீங்க, அப்புறம் கல்யாணத்தை நிறுத்தி வேணாம்பீங்க. என்ன நீங்க என்ன செஞ்சாலும் யாரும் எதுவும் கேட்கமாட்டாங்கன்னு தைரியமா.? அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கும் போது எப்படி இப்படி கொஞ்சமும் அவளைப்பத்தி யோசிக்காம தாலியைக் கட்டுறீங்க..” எனத் திமிரிக்கொண்டு வர, அர்ஜூனும், இனியனும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
தன்வந்தைப் போல எல்லாம் கோபத்தைக் காட்டத் தெரியாது தயானந்திற்கு. ஆனால் தன் கோபத்தையும் மறுப்பையும் அமைதியாக அழுத்தமாக காட்டிவிடுவான்.
விக்ரம் போல தன்வந்த் என்றால், நிசாவைப் போல தயானந்த். மிகவும் பொறுமை நிதானம்.
தன்வந்தைப் போலத்தான் அவனுக்கும் கோபம், ஆனால் பெரியவர்கள் பேசட்டும் என்று குழந்தையை வைத்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.
இத்தனை நடந்தும் எதுவுமே தசிராவிற்கு தெரியவில்லை. அது மயக்கமா தூக்கமா? என்று இப்போது தன்வந்திற்கு பயம் வர, தன்னைப் பிடித்திருந்த இருவரையும் தள்ளிவிட்டு வேகமாக தசிராவின் அருகில் வந்து கையைப் பிடித்து பார்த்து, “ஷிட்” என்றான்.
“என்ன என்ன” என அனைவரும் பதற,
“அர்ஜூன்னா காரை எடுங்க. எமர்ஜென்சி” என கத்தியபடி அக்காவைத் தூக்கப்பார்க்க,
அதுவரை அவனை அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்த நித்திலன், அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு “மாமா மன்னிச்சிடுங்க மாமா? தாராதான் எனக்கு எல்லாம். அவளை எனக்கே எனக்குன்னு எடுத்துக்கிட்டேன் மாமா..” என்றவன் அதிர்ந்து நின்ற அனைவரையும் பொருட்படுத்தாது காரை நோக்கி ஓட, தன்வந்தும் இனியனும் பின்னாடியே விரைந்தனர்.
“என்னங்க இதெல்லாம்..” என அழுத மனைவியை சமாதானம் செய்யத் தோன்றாமல், அனைவரையும் பார்த்து பதட்டமாக நின்றிருந்த நிலாவைப் பார்த்து “உனக்கு இது முன்னாடியே தெரியுமா.? இதுக்கு அந்த கல்யாணப் பொண்ணும் ஹெல்ப் பண்ணிருக்கா அப்படித்தானே” என விக்ரம் கூர்மையாகக் கேட்க, பதில் சொல்ல முடியாமல், நிலா தலையைக் குனிந்து கொள்ள, அதைக்கேட்டு வேகமாக முன்னே வந்த ரித்தியோ மகளை ஓங்கி அறைந்தபடியே “மாமா சொன்னது உண்மையா சொல்லுடி, மாமா சொல்றது எல்லாம் உண்மையா.? அப்போ உன் அண்ணன் இதெல்லாம் தெரிஞ்சுதான் செஞ்சானா.?” எனக் கதறியழ,
“ம்மா.. ம்மா நான் எப்படி, எப்படி சொல்வேன். அவங்க ஆஸ்திரேலியால இருக்கும் போதே, அங்க ஒரு பிரச்சைனையால அவனுக்கும் அம்முவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, ருத்துக்குட்டி நம்ம நித்திக்கும் அம்முவுக்கும் பிறந்தவன்தான்..” என்றுவிட்டு அழ, அங்கிருந்த அத்தனைபேரும் அவள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.