பார்வை - 24
சத்யா புகுந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்களாகிருந்தது. அவள் பயந்ததை போல எந்த பிரச்சினையும் நடக்கவில்லை.
ஊர்தலைவர் சொன்னது போலவே இரண்டு அக்காக்களும் வீட்டிற்கு அதிகமாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சத்யாவிடம் பெரிதாக பிரச்சினை செய்வதில்லை.
முனியாண்டியும் காலையில் சென்றால் இரவுதான் வருவார். அவருமே சத்யாவிடம் பேசுவதை நிறுத்தியிருந்தார்.
நந்தகுமாருக்கு வாழ்க்கை மிகவும் சுமூகமாகத்தான் சென்றது. மனைவி குழந்தை என ஒரு இணக்கமான வாழ்க்கையை அவன் வாழ ஆரம்பித்திருந்தான்.
இரவுகளில் கூட மனைவியை தொந்தரவு செய்யாமல், மகனோடு அமைதியாக தூங்கினான். சத்யாவையும் அடிக்கடி அம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவன் ஒரு நல்ல கணவனாக இருக்க பெருமளவில் முயற்சித்தான்தான்.
ஆனால் சத்யாவால் ஏனோ அவனிடம் ஒன்ற முடியவில்லை. அவளும் இதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் சமரசமாகி கணவனுடன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிக்கிறாள் ஆனால் முடியவில்லை.
வீட்டில் இப்போதும் வேலைகள் இருக்கத்தான் செய்தது. இருந்தும் முன்னைப்போல் அழுத்தம் இல்லை. அவளுக்கான நேரங்கள் கிடைத்தது. அதில் அவளும் பரணியும் கரைந்து கொண்டிருந்தனர்.
இந்த இடைப்பட்ட நாட்களில் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு நல்ல பழக்கமாகியிருந்தாள். நந்தகுமாரின் சித்தியும் கூட சத்யாவை நன்றாகவே பார்த்துக்கொண்டார். கணவன் மனைவி இடையேயான உறவும் மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தது.
நாட்கள் இப்படியே கடக்க, பரணியின் முதல் பிறந்தநாள் விழாவும் வந்துவிட்டது. அவன் பிறக்கும் போது உடனில்லாததை இப்போது பூர்த்தி செய்வது போல, மகனின் பிறந்தநாளை அனைவரையும் அழைத்து மிகவும் ஆர்ப்பாட்டமாக நடத்தினான் நந்தகுமார்.
தன் சொந்தங்கள், தன்னுடன் வேலை செய்பவர்கள், சத்யாவின் சொந்தங்கள் என அத்தனை பேரையும் அழைத்திருந்தான்.
சத்யாவின் முகத்திலும் வாழ்க்கையை ஜெயித்து விட்டதாக ஒரு புத்துணர்வு தோன்றியது. தான் பயந்தது போல் இல்லை இந்த வாழ்க்கை என்ற எண்ணமும் அவளை மகிழ்வாக்கியிருந்தது.
அந்த மகிழ்வு அவள் முகத்திலும் செய்கையிலுமே தெரிய, பெற்றவர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் அதைவிட வேறென்ன வேண்டும்.
மகளை மீண்டும் இங்கு விட்டு சென்ற பிறகு, மகன்களும் கணவரும் அவரை பேசியே ஒருவழி செய்திருந்தனர். அதனால் ‘தவறு செய்துவிட்டோமோ’ என்று பல நேரங்களில் யோசித்திருப்பார் காமாட்சி.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று மகளின் வாழ்க்கையை நேரில் பார்க்கும் போது புரிந்தது. இனி மகள் பிழைத்துக்கொள்வாள் என்ற எண்ணம் வந்த பிறகுதான், மகன்களுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று எண்ணமே வந்தது காமாட்சிக்கு. அதை மறக்காமல் கணவரிடமும் கூறினார்.
வரதராஜனுக்குமே மாப்பிள்ளையின் மேல் கொஞ்சம் கோபம் இறங்கி மரியாதை வந்திருந்தது.
விழா முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும், மிகவும் சோகமாக வீட்டுக்கு வந்திருந்தான் நந்தகுமார். உள்ளே வரும்போதே மகனை கேட்டுக்கொண்டே வருபவன் இப்போது அமைதியாக அறைக்குள் சொல்ல, யோசனையாக பரணியை இடுப்பில் இடுக்கிக்கொண்டு அவனிடம் சென்றவள், “என்னாச்சுங்க..” என்றாள் பதட்டமாக.
மனைவியின் பதட்டமான முகம் பார்த்தவன் “ஹேய் ஒன்னுமில்லப்பா.. ஆஃபிஸ் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். டீ எடுத்துட்டு வா சொல்றேன்.” என்றவன் மகனை வாங்கிக்கொண்டான்.
அப்போதுதான் சத்யாவிற்கும் மூச்சு சீராக, டீயை கொண்டு வந்து கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தாள்.
“ஆபிஸ்ல சீனியாரிட்டி பார்த்தா நானும் இன்னொரு சாரும்தான் இருக்கோம். அவருக்கு இன்னும் இரண்டு மாசம்தான் சர்வீஸ் இருக்கு. அதனால அவரை கணக்குல எடுக்க மாட்டாங்க. அவருக்கு அப்புறம் நான்தானே இருக்கேன். சோ என்னை கம்பெல் பன்றாங்க…” என்றான் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்.
“என்ன? எதுக்கு கம்பெல் பன்றாங்க.?” என்றாள் புரியாத பாவனையுடன்.
“வேறெதுக்கு.. ட்ரான்ஸ்ஃபருக்குத்தான். மதுரைக்கு பக்கத்துல ஒரு ஊர். ஒரு வருசமாவது அங்க இருக்கனும் சொல்றாங்க. போஸ்டிங்க் வாங்கினதுல இருந்து சொந்த ஊர்லயே இருக்கேன்னு யாரோ ஹையருக்கு இன்ஃபார்ம் வத்தி வச்சிருக்காங்க. அதனால அவங்க இப்படி ஒரு முடிவை எடுத்துருக்காங்க..” என்றான் வருத்தமாக.
“ஓ..” என்று இழுத்தவள், “உங்களுக்கு இஷ்டமில்லையா.?” என்றாள் கேள்வியாக.
“ம்ச்.. இத்தனை வருசம் ஒரே இடத்துல இருந்துட்டோம். இனி புது இடம்னா கொஞ்சம் கஷ்டம்தானே. அடுத்து இப்போதான் நாமளும் ஓரளவுக்கு லைஃபை அண்டர்ஸ்டேண்ட் பண்ணிட்டு இருக்கோம். இப்போ போய் ட்ரான்ஸ்ஃபர் அது இதுன்னா..” என முடிக்காமல் விட, அது சத்யாவிற்கும் புரிந்தது.
“மதுரைன்னா நீங்க வீக்லி ஒன்ஸ் வரலாம்தானே. இல்லைன்னா நாங்க அங்க வர்ரோம்.. வேற ஒன்னும் பண்ண முடியாதில்லையா.?” என சத்யா நிதர்சனத்தை கூற,
“ம்ச்.. நான் உங்களை விட்டுட்டு போறதை நினைச்சு ஃபீல் பண்றேன்.. நீ பரவாயில்லன்னு சொல்ற.. அப்போ உனக்கு இன்னும் என்மேல் கோபம் போகலையா? இல்ல இன்னும் அந்த லவ் வரலையா.?” என கோபமாக கேட்க, சத்யாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.
இவர்கள் இருவரிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் சத்யா இப்படி சிரிப்பது இதுவே முதல்முறை. அது இருவருக்குமே புரிந்தது.
“உன்னோட இந்த சிரிப்பை நான்தான் நிறுத்திட்டேன்ல. சாரி..” என மனம் வருந்தி கேட்டான் நந்தகுமார்.
“ம்ச்.. போனதை விடுங்க.. எனக்குமே அப்போ பக்குவம் இல்ல. இந்த லைஃபை எதிர்கொள்ள பயந்துட்டு இருந்தேன். அதுதான் என்னென்னமோ நடந்துடுச்சு. இப்போ நீங்க என்ன முடிவு எடுத்துருக்கீங்க..” என்றாள் சத்யா சமாதானமாக.
“ம்ம் கண்டிப்பா போய்த்தான் ஆகனும். ஆரம்பத்துல வீக்லி ஒன்ஸ் வர முடியுமா தெரியல. ஆனா நீங்க வரலாம். அங்க ஊர் எல்லாம் எப்படின்னு நான் பார்த்துட்டு சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் வந்துட்டு வாங்க..” எனவும்,
“ம்ம் சரி.. நீங்க வந்ததுமே விமலாத்தை கூப்பிட சொன்னாங்க. நான் போய் அழைச்சிட்டு வரேன். நீங்க தம்பியை பார்த்துக்கோங்க..” என்ற நேரம் சரியாக அவரே வெளியில் இருந்து சத்தம் கொடுத்தார்.
“வாங்க அத்த.. இப்போதான் அவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். டீ இருக்கு கொண்டு வரவா.?” என்றதும்
“எடுத்துட்டு வாயேன் சத்தியா.. நானும் இப்போதான் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு வரேன்..” என தரையில் காலை நீட்டி அமர்ந்தார்.
“வாங்க சித்தி.. என்னாச்சி சித்தப்பாவுக்கு உடம்பு சரியில்லையா? காலைல பெரியாஸ்பத்திரிக்கிட்ட பார்த்தேன்..” என்றபடி மகனை தரையில் விளையாட விட்டு அவனும் அருகில் அமர்ந்தான்.
“என்ன சொன்னாலும் கேட்குறது இல்ல சாமி மனுசன். இனிப்பு உப்புன்னு ஒன்னை குறைக்கிறது இல்ல.. பிறகு ஆஸ்பத்திரி படி ஏறாம இருக்க முடியுமா.?” என அங்கலாய்த்தவர்,
“இன்னைக்கு காட்டுல இருந்து வரும்போது நம்ம பள்ளிக்கூட எட்மாஸ்டர பார்த்தேன் நந்து, நம்ம பள்ளிக்கூடத்துல டீச்சர் வேலை காலியாகுதாமே, சத்யாவுக்கு அது உபயோகப்படுமோ என்னமோன்னுதான் சொல்ல வந்தேன்..” என்றவாரே சத்யா கொடுத்த டீயை குடிக்க ஆரம்பித்தார்.
“அப்படியா அத்தை.!” என்றவளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நந்தகுமாரிடமும் பரவியது.
“நேத்துக்கூட பார்த்தேன் சித்தி.. சொல்லவே இல்லையே.. நாளைக்கு கேட்டுப்பார்க்குறேன். சத்யா உன்னோட ரெஸ்யூம், செர்டிஃபிகேட்ஸ் எல்லாம் ஒரு செட் எடுத்து என் பேக்ல வச்சிடு. நான் பார்க்கும் போது பேசிட்டு கொடுத்துடுறேன்..” என்றதும் சத்யாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
“அப்புறம் தம்பி… வீடு கட்டணும்னு சொல்லிட்டு இருந்தேன் இந்த வீட்டை இடிச்சிட்டு கட்டுற மாதிரியா.. இல்ல இடம் வாங்கி கட்ட போறியா.?”
“இப்போதைக்கு வீடு கட்ட ஐடியாவே இல்ல சித்தி எனக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்துடுச்சு.. எப்படியும் ஒரு வருஷம் அங்க தான் இருக்கணும். மறுபடியும் நம்ம ஊருக்கே கேட்டா பணம் செலவாகும். அதுக்கு அஞ்சு ஆறு லட்சம் கேப்பாங்க. இடம் வாங்கி கட்டுற மாதிரியெல்லாம் ஐடியா இல்ல சித்தி இந்த வீட்டை இடிச்சுதான் கட்டணும்..”
“என்ன இடிக்க போறீங்களா.? அதெல்லாம் வேண்டாம் கொஞ்சம் ஆல்டர் பண்ணி மேல மாடி மட்டும் எடுக்கலாம்.. இதுவே இப்ப கட்டுன வீடு மாதிரிதான் இருக்கு.. வேணும்னா முன்னாடி கொஞ்சம் மாத்தி மேல மாடி எடுப்போம் கீழ இருக்கிற வீடு இதுவே போதும்..” என சத்யா சொல்ல, நந்தகுமாருக்கும் அதுவே சரியெனப்பட்டது.
“சரி என்ன பண்றதா இருந்தாலும், ரெண்டு வருஷம் கழிச்சுதான். இப்போதைக்கு எதிலும் கைவைக்க வேண்டாம். நானும் இருக்க மாட்டேன் நீயும் தம்பிய வச்சுட்டு கஷ்டப்படணும். அத பத்தி பொறுமையா பேசலாம்..” என முடித்து விட்டான் நந்தகுமார்
“ஏன் தம்பி இப்படி சொல்ற..? நாங்க எல்லாம் இருக்கோம்ல பாத்துக்க மாட்டோமா. சம்மந்தி வீட்ல சொன்னா, சத்யாவோட அண்ணனுங்க ரெண்டு பேருமே வந்து வேலையை முடிச்சு கொடுத்துடுவாங்க. வீடு கட்டணும்னு பேச்சு வந்திருச்சுன்னா அது எப்படியாவது முடிஞ்சிடும். உனக்கு இப்போதைக்கு அதுல காசு போட முடியும்னா வேலையை ஆரம்பிச்சிடு சாமி..” என்ற நேரம் சரியாக உள்ளே வந்தார் முனியாண்டி.
அவரே முனியாண்டி யிடம் இப்போது பேசியதைக் கூற, சத்யா டி கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கியவர், அக்காளுங்க ரெண்டு பேரு கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடு, நாளைக்கு பங்கு வேண்டும் என்று வந்து நிக்கப் போறாங்க.” எனவும் நந்தகுமாருக்கு கோபம் வந்துவிட்டது.
“அப்பா இப்படியெல்லாம் பிரச்சனை ஆகும்னு தெரிஞ்சிதான், முதல்ல கட்டும்போதே அவங்களுக்கு பணமா கொடுத்தாச்சு. இப்போ மறுபடியும் வந்து பங்கு கேட்பாங்களா?” என எரிச்சலாக கேட்டான்.
“அன்னைக்கே உன் அம்மா சொன்னா, எழுதி வாங்கிட்டு பணம் கொடுன்னு. நீதான் கேட்கல. இப்போ அவங்க பணம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏற்கனவே உன் மேலயும் உன் பொண்டாட்டி மேலயும் கோபமாதான் இருக்காளுங்க. இப்போ நீ வீடு கட்டறேன் தெரிஞ்சா வேணும்னே வந்து பங்கு கேட்பாளுங்க..” என முனியாண்டியும் நிதர்சனத்தை மெதுவாக எடுத்துச் சொன்னார்.
“ம்ச்..” என சலிப்படைந்து , “சரி அது நடக்கும்போது பார்ப்போம்..” ஏன்னா அதுவரை இருந்த உற்சாகம் எல்லாம் வடிந்த குரலில் பேச, அந்தக் குரல் சத்யாவை ஏதோ செய்தது.
அதனால் “அண்ணிங்க பணம் கேட்டா கொடுத்துடலாம், வீணா பிரச்சினை எல்லாம் வேண்டாம். நீங்க தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க…” என கணவருக்காக பேச,
“எத்தனை தடவை பணம் கொடுக்கிறது. இப்படி ஒவ்வொரு டைமும் பணம் கொடுத்தா, வாங்கி பழகுனவங்களுக்கு எதுவுமே பத்தாது.. விடு சத்யா இந்த பிரச்சனையை நானே பார்த்துக்கிறேன். அவங்ககிட்ட எப்படி பேசணுமோ அப்படி பேசிக்கிறேன்.” என அந்த பேச்சுக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தான் நந்தகுமார்.
“அத்தை நைட்டுக்கு நீங்க என்ன செய்றீங்க?” என சூழ்நிலையை மாற்ற எண்ணி, சத்தியா விமலாவிடம் கேட்க,
“எல்லாமே இருக்கு சத்யா. மாமாவுக்கு மட்டும் கோதுமை தோசை ஊத்துனா சரி. கொஞ்சமும் சாப்பாட்டுல கவனம் இல்ல. எது கொடுத்தாலும் உப்பு இல்லை, உரப்பு இல்லன்னு மனுஷன் நாயா கத்திக்கிட்டு இருக்காரு..” என்றவர் முனியாண்டியிடம் திரும்பி, “ஏன் மாமா நீங்கதான் கொஞ்சம் அவர அடக்குறது.. சுகரு நாநூறு இருக்கு. எப்பதான் வாயை அடக்குமோ தெரியல..” என புலம்ப,
“விடுங்க சித்தி நான் அவர்கிட்ட பேசுறேன். கொஞ்ச மிரட்டினால்தான் அமைதியா இருப்பார்…” என நந்தகுமார் கூறவும்தான் சற்றே அமைதியானார் விமலா.
இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருக்க, இரவு உணவை தயார் செய்ய கிளம்பினாள் சத்யா.
மருமகள் அந்தப் பக்கம் கிளம்பவுமே, ஆரம்பித்தார் முனியாண்டி.
“ஏற்கனவே அவங்க ரெண்டு பேரும், நீ பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு ஆடுறன்னு வன்மத்துல அலையுறாங்க. இதுல பணமும் தரமாட்டேன், என் வீட்டுக்கும் வரக்கூடாதுன்னு சொன்னா என்னடா அர்த்தம். நான் இந்த விஷயத்துல உன் பக்கமும் பேசமாட்டேன் அவங்க பக்கமும் பேசமாட்டேன். அதுதான் உன் பொண்டாட்டி பணம் கொடுக்கலாம்னு சொல்றாளே, உனக்கு என்னடா.. சம்பளமும் கிம்பளமும் சேர்ந்துதானே வருது. நான் உயிரோடு இருக்கும் போதே என் பொண்ணுங்களுக்கு செய்றதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற. நானெல்லாம் போயிட்டா என் பொண்ணுங்க அனாதையாத்தான் நிப்பாங்க போல..” என கோபமும் ஆத்திரமும் மிகுந்த குரலில் பேச, பதிலுக்கு நந்தகுமார் ஏதோ சொல்ல வர அவனை தடுத்து நிறுத்தினார் விமலா.
“விடு தம்பி! நீ தான் இப்ப வீடு கட்டலன்னு சொல்லிட்ட இல்ல. கட்டும் போது பார்த்து என்னமோ பண்ணிக்கலாம். ஆனா சத்திய சொன்ன மாதிரி அவங்களுக்கு பணம் கொடுத்து மொத்தமா முடிச்சு விட்டுடு. அதுதான் அப்பாவுக்கும் சந்தோசம். அக்காங்களுக்கும் தம்பி நம்மளை விட்டுடலன்னு ஒரு தைரியம் வரும்.” என எடுத்து சொல்ல அமைதியாக இருந்தான் நந்தகுமார்.
நந்தகுமாரின் இந்த அமைதியே அவன் யோசிப்பான் என்று மற்றவர்களுக்கு புரிய அந்த பேச்சை அதோடு விட்டு விட்டனர்.
அன்றைய நாளிலிருந்து சத்யாவிற்கும் நந்தகுமாருக்கும் ஒரு அன்னியோன்யமான வாழ்க்கை தொடங்கியது.
அனைத்தும் அழகாகத்தான் சென்று கொண்டிருந்தது, தமிழ்ச்செல்வனுக்கு பெண்பார்க்கும் படலம் வரை.