• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 10

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 10


பக்கத்தில் நீயும் இல்லை!
பார்வையில் ஈரம் இல்லை!
சொந்தத்தில் பாஷை இல்லை!
வாசிக்க ஆசை இல்லை!

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை!
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை!
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !


ஒரு காதலனின் உணர்வுப்பூர்வமான வரிகள்.. மனதையும் இறுக்கிப் பிழியும் எஸ் பி பி யின் குரலில் அந்த பங்களாவில் மெல்லிசையாய் இசை நுழைந்து கொண்டிருந்தது.

தனது அலைபேசியில் பாடலை ஒலிக்க வைத்து விட்டு சற்று முன்பு நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் முன்பு புருஷோத்தமன் அவனுக்கு அழைத்திருந்தார்.. அவரின் பேச்சில் சற்று வித்தியாசம் தெரிந்தது.. இருந்தும் எதுவும் கூறாமல் அவர் சொன்னதுக்கு சரி என்றுவிட்டு அமைதியாய் இருந்து விட்டான்.. தன்னை அங்கு வரவைக்க அவர் ஏற்பாடு செய்கிறார் என்று புரிந்தும் எதுவும் கூறாமல் அவரின் போக்குக்கு விட்டு விட்டான்.

ஆம் அவனை அவர் கண்டு கொண்டார்.. அன்று பெண்ணவளை காப்பாற்றி அவளின் குடும்பத்துடன் அனுப்பி வைத்து விட்டு வந்து விட்டான் ஆணவன்.. ஆனால் மனம் என்னவோ அவளையே தேட சிறிது சிறிதாய் அவனின் மனதிற்குள் புகுந்து விட்டாள் மென்மை குணம் படைத்த ராட்சசி.

இதோ இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவளுடன் வாழும் வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்பதை அவனின் உள்ளுணர்வு உணர்த்தியது தான்.. ஆனாலும் அவனின் உடல் குறை அவளுக்கு பெரிதாக தெரிந்தால் அதை அவள் வாய்விட்டு கூறிவிட்டாள் அதை தாங்கும் உள்ளம் இல்லை.. எத்தனையோ வலிகளை தாங்கி வந்தவன் தான் ஆனால் பெண்ணவளின் வலி தாங்கிய வார்த்தையை தாங்கிய கொள்ளும் வலு மனதில் இல்லை என்பதை உணர்ந்ததாலே இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.

இங்கே ஆத்விக்கின் குடும்பம் அவளையும் தங்கள் வீட்டு பெண்ணாக்கி அவளுக்கு அத்தனை உரிமையும் அந்த வீட்டில் தந்தார்கள்.

இதில் தாமரை கோயம்புத்தூரில் உள்ள கல்லாரியில் எம் பி ஏ படிக்க ஆராதனா ஆராத்யா ஷிவானி மூவரும் அங்கேயே உள்ள தனியார் கல்லாரியில் படித்துக் கொண்டிருந்தனர்.

ஆரமுதன் ஒரு டிகிரியுடன் படிப்பை நிறுத்தி விட்டு தாத்தா மாமாக்கள் பார்த்துக் கொண்டிருந்த சோகோ பேக்ட்ரியை இவனின் மேற்பார்வையில் நிர்வாகம் நடந்தது.

பெண்கள் அனைவரும் வீட்டு நிர்வாகத்தை பார்த்துக் கொள்ள ஜானகிராமனும் ரகுராமனும் தோப்பு துரவை பார்த்துக் கொண்டனர்.

சிவராம் சிவநேசனுக்கு அவர்களின் தனிப்பட்ட தொழில் இருக்க அதை பார்த்துக் கொண்டனர்.


ஆரிணி அந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தாள்.. சிறிய வயதிலிருந்து கிடைக்காத மறுக்கப்பட்ட குடும்ப அமைப்பு அவளுக்கு கிடைத்தது.

இதில் கங்காவும் யமுனாவும் அவளை தாங்கள் பெற்ற மகளாக ஏற்றுக் கொண்டனர்.

அதிலிருந்து அந்த வீட்டின் செல்ல பிள்ளையானாள்.. எல்லோரையும் உறவு முறை வைத்து அழைத்தாள்.. அவர்களும் அவள் அப்படி அழைத்ததும் சந்தோஷப்பட்டனர்.

அன்று காலையில் எழுந்த ஆரிணி குளித்து விட்டு தன் அறையில் இருந்து வெளிவந்தாள்.

அந்த அதிகாலை வேலையில் யாரும் இன்னும் எழவில்லை.. யாரும் எழாததை கண்டு அமைதியாய் வெளியே தோட்டத்திற்கு சென்றவள் அங்கிருந்த பூக்களை பறித்து மாலைகளாய் தொடுத்தவள் பூஜையறைக்கு சென்று அங்கிருந்த பழைய காய்ந்த பூக்களை எல்லாம் அகற்றியவள் கொண்டு வந்த புதுப் பூவை சாமி படங்களுக்கு சாற்றி விட்டு பூஜையறையை அழகாய் அலங்காரம் செய்து பூஜை செய்ய ஆரம்பித்தாள்.


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள்

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்


அவளின் கொஞ்சும் வண்ணக் குரலில் வீட்டிலிருந்த அனைவரும் எழுந்து வந்தனர்.

அந்த பாடல் சரஸ்வதி தேவியின் அருளை நாடிய பாரதியாரின் பாடல்.

ஏனோ அவளின் பாடல் அந்த இல்லத்தை மேலும் அழகாக்கியது போல் அனைவரும் சந்தோஷமான மனநிலையில் இருந்தனர்.

புனிதவதி சீதாலட்சுமி இருவரும் குளித்து விட்டு வந்து அவளுடன் பூஜையில் கலந்து கொண்டனர்.

அதை பார்த்த அனைவரும் அவசர அவசரமாய் குளிக்க சென்றனர்.. அவள் பூஜையை முடிப்பதற்குள்ளாகவே அனைவரும் குளித்து விட்டு வந்தவர்களின் முன்னே தீப தட்டை காமிக்கவும் எல்லோரும் அவளையே பார்த்தபடி எடுத்து கொண்டனர்.

புருஷோத்தமனிடம் வந்தவள் தம்பதிகள் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினாள்.

பூஜையை முடித்து விட்டு வந்தவளை தன் அருகில் அழைத்தார் புருஷோத்தமன்.. பயந்தபடியே அவரின் முன்னே போய் நிற்க அவரோ சிரித்தபடியே தன் மனைவியை பார்த்தார்.

கணவனின் பார்வையை உணர்ந்த புனிதவதியும் தன் கையில் வைத்திருந்த தங்க வளையலை தன் கணவரின் கையில் கொடுத்தார்.

பார்வையாலே தன் மனைவியை மெச்சியவர் அதை சந்தோஷத்துடன் ஆரிணியின் கையில் கொடுத்தார்.. என்னவென்று புரியாமல் வாங்கியவள் அந்த தங்க வளையலின் அழகில் மனம் பறி கொடுத்தவள் அவரை கேள்வியாக பார்த்தாள்.. அவரோ புன்னகை சிந்திய முகத்துடன்,

"ஆரிணி மா இது எதுக்குன்னு பாக்குறியா.. உன்னோட குரலுக்கு இந்த வம்சத்தோட பரிசு.. என்னடா வம்சத்தோட பரிசுன்னு சொல்றான்னு பாக்குறியா.. ஆமா இப்போ உனக்கு கொடுத்துருக்கற இந்த வளையல் இந்த வம்சத்துக்கு வர்ற மூத்த மருமகளுக்கு கிடைக்க வேண்டிய பரிசு.. இது பாக்க என்னவோ சாதாரண தங்க வளையலா இருக்கலாம்..ஆனா இதுக்குள்ள இருக்கறது வைரத்துக்கு நிகரான பவள முத்துக்கள்.. அந்த காலத்திலேயே என் பாட்டன் தனக்கு வரப்போற மனைவிக்கு வாங்கி வச்ச பரிசு.. இது வழி வழியா இந்த வீட்டு மருமகளோட சொத்து.. இது எல்லாரோட கைக்கும் போயி இப்போ உன்னோட கைக்கு வந்துருக்கு.." என்றார் பெருமையாய்.

" ஆனா தாத்தா நான் விருந்தாளி தானே.. எனக்கு எதுக்கு இவ்வளவு பெரிய விலைமதிக்க முடியாத பரிசு.. அதுமட்டுமில்லாம இது அடுத்ததா சேர வேண்டிய இடம் உங்க பேரனோட மனைவிக்கு தானே.." என்றாள் மற்றவர்களை சுற்றிலும் பார்த்தபடியே.

இத்தனை நாளாய் பாசமாய் பழகிய குடும்பம் எங்கே தன்னை தவறாக நினைத்து விடுமோ என்று எண்ணியே அவளின் பயம் இருந்தது.

ஆனால் அவளை சுற்றி உள்ள மற்றவர்களோ அதை எல்லாம் யோசிக்காமல் சந்தோஷமாய் பார்த்தார்கள்.

அவளின் என்னவோட்டத்தை அறிந்த புருஷோத்தமன், "என் பேரனோட மனைவிக்கும் கொடுக்கலாம்.. எங்க பேத்தியா நாங்க தத்தெடுத்த உனக்கும் போடலாம் சரியா.. வேற எதுவும் யோசிக்காத.. உன்னோட குரலுக்கு இந்த பரிசு ரொம்ப கம்மி மா.. கவலைபடாத சந்தோஷமா இரு.. நல்லா நினைவு வச்சிக்கோ இது உன்னோட சொந்த வீடு.. இங்கே நீ சுதந்திரமா நடமாட யாரும் உனக்கு தடைவிதிக்க போறதில்லை சரியா.." என்றவர் அவளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்.


அவளை ஆசிர்வதித்து விட்டு அவர்கள் சென்று விட பெண்ணவள் தான் பேசா மடந்தை ஆகிப் போனாள்.

என்ன பாசம் இவர்களுடையது.. என் மேல் எத்தனை பெரிய நம்பிக்கை கொண்டு வீட்டில் நடமாட விட்டுள்ளார்கள்.. ஆனால் உண்மையில் நான் யார் என்று தெரிந்தால் இவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா என்ன..? என்ற சந்தேகம் பெண்ணவளை வதைத்தது.

அவரு அப்படியும் சொன்னாரே உண்மையிலே நான் யாருன்னு இவங்ககிட்ட சொல்லிறாலாமா.. என்று யோசித்தவளின் சிந்தையை கலைத்தது வெளியே கேட்ட சத்தம்.


ரங்கநாயகியோ கோபத்தில் சிவந்த முகத்தில் முறைப்பை கொண்டு தன் எதிரிலிருந்தவனை பார்த்தாள்.

அவனோ கால்கள் தடதடக்க உடல் நடுநடுங்க அவளின் முன்னே நின்றான்.

"அவ எங்கே செபாஸ்டியன் கிடைச்சாளா.." என்றாள் ஆக்ரோஷமாய்.

அவனோ, "மேடம் நான் எல்லா எடத்துலேயும் விசாரிச்சிட்டேன்.. ஆனா அவ அங்கே இல்லை.. அவ எங்க போனான்னு யாருக்கும் தெரியலை.." என்றான் குரல் நடுங்க.

அதை கேட்டவள், "அடச்சீ தூ நீயெல்லாம் ஒரு ஆம்பளை.. எதுக்குடா ஆம்பளைன்னு சொல்லிட்டு திரியற.. அதுக்கு மட்டும் தான் ஆம்பளையா இருக்கனும்னு நினைச்சீங்களோ.. வா புடவை கட்டி விடுறேன்.. நீயும் வந்து நாளு ஆம்பளைங்கள சந்தோஷப்படுத்து.. நீயெல்லாம் அதுக்கு தாண்டா லாய்க்கு.. ஒரு பொட்ட சிறுக்கியை தட்டி தூக்கிட்டு வர துப்பில்லை.. ஆனா நானும் ஆம்பளைன்னு சொல்லிட்டு வேட்டி கட்டிட்டு வந்து நிக்குற.. ச்சீய் இந்தா நகரு.." என்று அவனை அருவருப்பாய் பார்த்தவள் அந்த இடத்தை விட்டே நகர்ந்தாள்.

அங்கிருந்த ஆட்களின் முகமோ செபாஸ்டியனை இளக்காரமாய் பார்த்தது.

அவனோ மற்றவர்களை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

உள்ளே வந்த ரங்கநாயகி அங்கே சட்டமாக்க அமர்ந்திருந்த சேட்டை பார்த்ததும் உடல் நடுங்க நின்று விட்டாள்.

அனைவரையும் ஆட்டம் காட்டுபவள் அவனிடம் பணிந்து போனாள்.. அதற்கும் இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று அவனின் பணபலம்.. மற்றொன்று அவனின் அரக்க குணம்.

ஆரிணி இல்லையென்று தெரிந்தால் அவனின் முழு அரக்க குணத்தையும் பார்க்கலாம்.. அந்தளவுக்கு ஆணவக்காரன் அசுரன்.

பிறந்தது முதல் பணத்திலேயே குளித்து அதிலேயே வளர்ந்த கர்வம் என அவனை முற்றிலும் அரக்கனாய் மாற்றியிருந்தது.

அவனின் பார்வை எப்போது ஆரிணி மேல் விழுந்ததோ அன்றிலிருந்து இன்று வரை அவளின் விலை நாளுக்கு நாள் அவனிடம் எகிறி கொண்டு சென்றது.

அவளின் அழகும் உடல் வனப்பும் கிரேக்க சிற்பம் கூட தோற்றுவிடும்.. ரசனை மிகுந்த சிற்பியொருவன் கையில் வடித்தெடுத்த சிற்பம் தான் வஞ்சியவள்.

அதற்காகத்தானே ரங்கநாயகி அவளை பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்ததும்.. ஆனால் அவள் அறியவில்லையே கிளிக்கு றெக்கை முளைத்ததும் கூண்டை விட்டு பறந்து சென்று விடும் என்று... என்ன தான் தங்கத்தாலான கூண்டு என்றாலும் சிறைபடவா முடியும்.. அது தான் ஆரிணியின் நிலையும்.

தன் முன்னே நின்றிருந்த ரங்கநாயகியை இகழ்ச்சியுடன் பார்த்தவன், "எங்க ஆரிணி.." என்றான் ஒற்றை வார்த்தையாய்.

அவளோ பயந்து பதட்டத்துடன், "அவ க.. க.. கச்சேரி போயிருக்கா சேட்டு.." என்று திக்கி திணறி அவள் சொல்லி முடிக்கவும் அவளின் கண்ணத்தில் அறை விழவும் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டாள் கைகேயி.


அவளின் முன்னே சேட்டு சிவந்த கண்களுடன் நின்றிருந்தான்.


அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. கொஞ்சம் வேலை பா.. அது தான் தினம் யூகி போட முடியலை.. மன்னிச்சு.. ஆனா போட்டி முடிவடையும் நாள் கண்டிப்பா முடிச்சிடுவேன் டா.