• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 11

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 11


கண்ணத்தில் கை வைத்தபடி அப்படியே அவள் நிற்க அவளின் முன் நின்றவனோ அரக்கனாய் நின்றிருந்தான்.

"ஏய் ரங்கநாயகி அவளை பாதுகாக்க தான் இத்தனை வருஷமா நீ கேட்ட பணத்தை அள்ளி இறைச்சேன்.. ஆனா இன்னைக்கு உன்னோட உருப்படாத போன ஆட்கள் அவளை தப்பி வச்சிட்டு வந்துருக்கானுங்க.. அவ மேல சின்ன கீரல் கூட விழாம அவ எனக்கு கிடைக்கனும்.. அதுக்கு நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது.. அவளை இன்னும் ரெண்டு நாள்ல கண்டு பிடிச்சி என் முன்னாடி நிறுத்தலை உன்னோட அழிவு என் கையில தான் பாத்துக்கோ.." என்று ஆக்ரோஷமாய் கொக்கரித்து விட்டு சென்றான்.

அவன் சென்ற ஒரு மணி நேரம் ஆன பின்பும் அவள் அதே இடத்தில் தான் நின்றிருந்தாள்.. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அவளிடம் அவன் இது போல் நடந்ததில்லை.. ஆனால் இன்று அவளுக்கு கீழே உள்ளவளால் அவளை கை நீட்டி விட்டான்.. அதை ஏத்துக்க முடியாமல் அந்த கோபம் அத்தனையும் ஆரிணியின் மேல் திரும்பியது.

" டேய்.." என்று தன் ஆட்களை அழைத்தவள் அவர்களின் முன்னே ஐந்து விரலும் கண்ணத்தில் தன் தடத்தை பதித்திருக்க நின்றிருந்தவள்,

"அந்த தே****வை எங்க இருந்தாலும் கொண்டு வாங்கடா.. அவ சேட்டு கைக்கு போறதுக்குள்ள அவளை ஒரு வழியாக்கி தான் அனுப்பனும்.. நான் அனுபவிச்ச அவமானத்துக்கு அவ பதில் சொல்லாம போக முடியாது.." என்றாள் ஆக்ரோஷமாய்.

அவளின் கட்டளையை சிரமேற்கொண்டு அதை நிறைவேற்ற சென்றனர்.

இங்கே ஆத்விக்கின் தாய்களுடன் சமையலைறையில் சமையல் செய்து கொண்டிருந்தாள் ஆரிணி.

எல்லோரின் விருப்பம் அறிந்து அவர்களுக்காக தனித்தனியாக சமைத்துக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது சீதாலட்சுமி,


"ஏன்டாம்மா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இல்லை.. எதுக்கு இத்தனை வகை இப்போ செஞ்சிட்டு இருக்க.. அதுவும் உனக்கு சமைக்க தெரியும்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்குடா.." என்றார் அன்பாய்.

அதை ஆமோதிப்பது போல் கோதையும், "அதானே ஏன்ம்மா எல்லாரும் சாப்பிடற மாறி சமைப்ப தானே.. ஏன்னா இந்த காலத்து பிள்ளைங்களுக்கு சமையல் கட்டுக்கே வழி தெரியலை.." என்றார் கிண்டலாய்.

அதில் புன்னகையை சிந்தியவள், "ரெண்டு பேரும் கிண்டல் பன்றிங்களா என்ன.." என்றாள் பொய்யாய் முறைத்தபடி.

"அதுதானே ஏன் அண்ணி என் பொண்ணை கிண்டல் பன்றிங்க.." என்று சொல்லியபடி கங்காவும் யமுனாவும் அங்கே வந்தனர்.

"அடடே வாங்க வாங்க நாத்திங்களா.. என்ன பொண்ணுக்கு சப்போர்ட்டுக்கு வந்துட்டீங்களா என்ன.." என்றார் சீதாலட்சுமி.


" ஆமா அண்ணி இப்போலாம் எங்க பொண்ணு கையால ஆசை தீர சாப்பிடறோமே.. அப்போ அவளுக்கு தானே சப்போர்ட் பண்ணுவோம்.. ஆரிணி கண்ணு இன்னைக்கு என்ன டா சமையல்.." என்றார் யமுனா நாக்கை சப்புக் கொட்டியபடி.


பின்னே இருக்காதா என்ன வந்த ஒரு நாளிலே தன் கைமணத்தால் அனைவரையும் தன் சமையலுக்கு அடிமையாக்கி இருந்தாளே ஆரிணி.

ரங்கநாயகியிடம் இருந்ததற்கு சமையலை முழுவதுமாய் கற்றுக் கொண்டாள்.

" ஆமா இப்போ எதுக்கு நீங்க எல்லாரும் என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க மா.." எல்லாரையும் பார்த்து சொன்னவளின் கரங்கள் சமையலில் தான் இருந்தது.

" அய்யோ தங்கமா கிண்டல்லாம் இல்லை டா மா.. அம்மா உண்மையா கேட்குறேன் சொல்லுடா.. ஏன்க்கா நீங்களும் தான் சொல்லுங்களேன்.." தன் தமக்கையையும் இதில் சேர்த்துக் கொண்டார் யமுனா.

அதை கேட்டு சிரித்தவள், "அய்யோ அம்மா நான் சும்மா தான் சொன்னேன்.. இன்னைக்கு வென்பொங்கல் இடியாப்பம் பூரி மசாலா தோசை இட்லி எனக்கு தெரிஞ்சதை செஞ்சிருக்கேன் மா.." என்றாள் சிரித்தபடி.

அதை வாஞ்சையுடன் பார்த்த தாய்மார்கள் இருவரும் அவளின் கண்ணத்தை வழித்து நெட்டி முறித்து,

"உன் முகத்தை பார்த்தாவே மனசுல ஒரு புத்துணர்ச்சி வருது தாயி.. நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் தாயி.." என்றார் யமுனா.

அதே நேரம் அங்கே வந்த ஆராதனா, "அம்மா நம்ம ஆரிணி அக்காவை என்ன நினைச்சீங்க.. அவங்க செம்ம டேலண்ட் தெரியுமா.. நல்லா பாடறாங்க.. டான்ஸ் பண்றாங்க.. ஆனா ரொம்பவே மென்மையானவங்க.." என்றாள் ஆரிணியை பின்னிருந்து அணைத்தபடி .

அவளின் அணைப்பு அத்தனை இதமாய் இருந்தது..புண்பட்ட மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.

ஆராதனா மட்டுமல்லாமல் ஆராத்யா சிவானி ஆரமுதன் தாமரை என எல்லோருமே அவளுக்கு அரணாய் நின்றிருந்தனர்.

இங்கே ஆராணியை தேடி அலைந்த ரங்கா மீண்டும் ரங்கநாயகியின் முன்பு கைகட்டி நின்றிருந்தான்.


வாய் நிறையை வெத்தலையை போட்டு குதப்பிக் கொண்டிருந்தவள் அவன் கூறியதை கேட்டு கோபத்தில் அந்த எச்சிலை அவனின் மூஞ்சியிலே துப்பினாள்.

" தூத்தெரிக்க இதை சொல்லவா உன்னை அனுப்புனேன்.. அந்த நாதாரி நாய் எங்க இருக்கோ கண்டு பிடிச்சி கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட வேலை.. நீ யாரை கூப்பிட்டுக்குவியோ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது.. ஆனா அந்த சிறுக்கி நாய் இங்கே வரணும்.. என் கையால அவளை அடிச்சே கொன்னாலும் பரவாயில்லை.. அவளோட பொனாமாவது அந்த சேட்டு கையில கிடைக்கனும்.. போடா இங்கிருந்து.." என்று அவனை துரத்தினாள்.

அவனுக்கும் தன்னை அலைகழித்தவளின் மேல் தீராத வன்மம் கொண்டுள்ளான்.. அதுவும் ரங்கநாயகியிடம் எச்சில் அபிஷேகம் வாங்கிய பின்பு ஆரிணியின் மேல் அதிகமாய் கோபம் வந்தது.

ஆனால் அரக்கர்கள் அவர்கள் செய்ய நினைக்கும் செயல் கேவலமானது என்பதை சுத்தமாய் உணரவில்லை.. பணமிருந்தால் பிணத்தை கூட விட்டு வைக்காத உலகத்தில் இது போல சாக்கடைகள் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

இவர்கள் உடலுக்காய் பெண்ணின் உணர்வுகளை கொல்லும் கொலைகாரர்கள்.. கத்தியின்றி ரத்தமின்றி பெண்ணின் உணர்வுகளையும் மனதையும் கொல்லும் கொலைகாரர்களுக்கு இன்னும் தண்டனை நிர்ணயிக்கப்படவில்லையோ.


ஏ கே இன்டஸ்டிரிஸ் பரபரப்பான அதன் வேலைகளுக்கு நடுவே கம்பீரமாய் தன் கையில் இருந்த ஸ்டிக்கை அழுத்தமாய் ஊன்றி தனது அறைக்கு சென்றவனை எப்பொழுதும் போல் அங்கிருந்த இளம் பெண்கள் விழிவிரித்து ஆசையுடன் பார்த்தபடி நின்றிருந்தனர்.. ஆனால் அவனிடம் நெருங்கும் தைரியம் யாரிடமும் இல்லை.. எத்தனையோ பெண்கள் அவனிடம் நெருங்க முயன்று ஆசையுடன் பேச முனைந்தாலும் அவர்களை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்ப்பானே ஒழிய சிறு புன்னகை கூட அவனிடமிருந்து வராது.

அவனின் உடலில் குறையிருந்தாலும் அவனின் கம்பீரத்தில் எப்போதும் குறையிருந்தது இல்லை தான்.. ஆனாலும் அவனின் வசதி கண்ணை உறுத்த தானே செய்யும்.. அவனின் வசதிக்காக எத்தனையோ பெண்கள் அவனை அணுகினாலும் யாரிடமும் சரியாதவன் சமீப காலமாக வஞ்சியவளின் நினைவில் மனம் சுணங்கி தான் போகின்றான்.

அவளை நினைப்பது தவறு என அறிவுக்கு எட்டினாலும் மனம் என்னவோ பெண்மயிலையே நினைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை ஆயிரம் பெண்களை கடந்து வந்திருப்பான்.. ஆனால் பெண்ணரசியின் குரல் வடிவமோ என்னவோ கடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான் நித்தமும்.

அதுவும் தினமும் வீட்டில் பேசும் போது எல்லோரின் வாயிலிருந்தும் நங்கையவளின் நாமமே சுப்ரபாதமாய் ஒலிக்க ஆடவன் திணறித்தான் போனான்.


யாரை நினைக்கவே கூடாதென்று ஓடி ஒளிந்தானோ அவளின் பெயரே அவன் காதுகளில் ரீங்காரமிட அவனை தாண்டியும் அவன் மனதினுள் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் பாடும் கன்னிகை.

மனம் எங்கும் அவளின் விம்பமே ஓட அவளின் குரலாவது கேட்கலாம் என்ற ஆசையில் தன் அன்னைக்கு அழைக்கலாமா என்று யோசித்தவனுக்கு அப்பொழுது தான் ஒன்று நினைவு வந்தது நேற்று அவன் அன்னையிடம் பேசும் போது இன்று வீட்டில் வரலட்சுமி பூஜை இருப்பதாக கூறியது.

எப்பொழுதும் வீட்டில் பூஜை என்றால் அது அவர்கள் வீட்டின் ஹாலில் தான் நடைபெறும்.. பெண்ணவளின் உருவத்தையாவது பார்க்க வேண்டும் என்ற மன உந்துதலில் தன் வீட்டு ஹாலில் இருக்கும் கேமிராவை லாகின் செய்தான் தன் அலைபேசியில்.

வீட்டின் நடுஹாலில் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க தன் குடும்பத்தில் உள்ள அனைவரும் இருக்க அவன் தேடலுக்கு உரியவள் மட்டும் கண்களுக்கு சிக்காமல் இருந்தாள்.

அவன் வீட்டின் வழக்கம் தான் இது.. வியாபார விஷயமாக வெளியே செல்லும் ஆண்களுக்கு ஏதேனும் மனக்குழப்பமோ இல்லை இது போல பூஜையில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் கேமிராவை ஆன் செய்து அதை பார்த்துக் கொள்வார்கள்.. இவன் ராணுவத்தில் இருக்கும் வரையில் வீட்டிற்கு அதிகம் வராத காரணத்தால் எப்பொழுதும் பூஜை நேரத்தில் இவன் கேமிராவை பார்த்துக் கொள்வான்.

அதுவும் ராணுவத்திலிருந்து நிரந்தரமாய் வந்த பிறகு வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் இருந்தவன் தினந்தோறும் தன் குடும்பத்தை பார்க்காமல் இருந்ததில்லை.. ஆனால் இன்றோ தன் மனம் கவர்ந்தவளை காண்பதற்காகவே தன் விழிகளை சுற்றியும் தேடினான்.

ஆம் அவனின் ஆழ்மனதிற்குள் அவனறியாமல் நுழைந்துவிட்டாள் காரிகையவள்.. அவனின் மனமும் விழிகளும் அவளை தேடி தவித்து துடித்தன.

இந்த அனுபவம் புதிது.. யாரிடமும் இதுபோல் தோன்றியது இல்லை.. எந்த பெண்ணையும் இது போல தேடியது இல்லை.. ஆனால் இவளிடம் தோன்றும் இந்த உணர்வு சுகமாய் இருந்தது.

மனதோரம் சில்லென்று வீசும் வாடைக்காற்றின் இனிமையாய் தோன்றியது.

இதோ ஒரு பெண்ணிற்கான தேடல் புதிது.. இத்தனை ஆண்டுகளாய் இல்லாத குறுகுறுப்பை சலனமில்லாமல் ஏற்படுத்தியிருந்தாள் பெண்ணவள்.

விழிகள் நான்கு திசையிலும் தேடி அலைய அவன் தேடலுக்கு விடையானவளோ அழுது கொண்டே சீதாவின் முன்பு தலைகுனிந்த படி நின்றிருந்தாள்.

சீதாலட்சுமியோ கோபமாய் அவளை முறைத்தபடி பார்த்தார்.

" இப்போ நான் சொன்னதை உன்னால செய்ய முடியுமா முடியாத ஆரிணி.." என்றார் கோபமாய்.

அவளோ அதற்கு எதுவும் சொல்லாமல் கண்களில் வழியும் கண்ணீருடன் நின்றிருந்தாள்.

"ஆரிணி முதல்ல அழறதை நிறுத்து இப்போ எதுக்காக தலைகுனிஞ்சி நிக்குற.." என்றவருக்கு ஆற்றாமை தாளவில்லை.

தங்கள் வீட்டு பெண் போல நினைத்தவளை அதட்டவும் மனம் வரவில்லை.. அதற்காக அவள் மறைத்த விஷயமும் சிறியது இல்லையே என நினைத்தவருக்கு அவளின் மேல் கோபம் சுத்தமாய் குறையவில்லை.

இருவரும் பேசிக் கொண்டு நிற்கும் போது அங்கே வந்த ஆராதனா சீதாவிடம்,

"பெரியம்மா தாத்தா பாட்டி பெரியப்பா கூப்பிடறாங்க.. பூஜைக்கு நேரமாச்சு.. ஆரிணி கா நீங்களும் வாங்க போலாம்.." என்று அவளின் கையை பற்றி இழுக்க பெண்ணவளோ ஆராதனா அறியாமல் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரித்தபடி அவளுடன் சென்றாள் சீதாவை திரும்பி பார்த்தபடி.

ஒரு பெருமூச்சுடன் சீதாவும் அவர்களின் பின்னே சென்றாள்.

அனைவரும் வரவும் பூஜை ஆரம்பமாக புனிதவதியே அதை ஆரம்பித்தார்.. நித்ய சுமங்கலி அவரின் கையால் பூஜையை தொடங்கி வைத்தவர் ஆரிணியிடம் திரும்பி அவளை பாட சொன்னார்.

அவளோ சீதாவை பார்த்து தயங்கியபடியே நின்றாள்.

பெண்ணவளின் வதனத்தை கண்ட காளையவனின் முகமோ அழகான புன்சிரிப்பை தத்தெடுத்துக் கொண்டது.


யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனை சேரும் பெண்ணென்னும் பிறப்பல்லவோ..

கொடி அரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ..





ஹாய் மக்களே எல்லாருக்கும் ஒரு பெரிய சாரி பா.. நான் புது வேலையில ஜாயின் பண்ணிருக்கேன்.. அந்த வொர்க் டென்சன் என்னால எழுத முடியலை.. ஆனா இன்னும் ஒன்பது நாள் தான் இருக்கு.. போட்டி முடிய.. சோ முடிஞ்ச வரைக்கும் முடிக்க டிரை பண்றேன்.. யாருக்கும் கோபம் வேணாம் பா.. இன்று இரவு இன்னும் ஒரு எபி வர வாய்ப்பு இருக்கு மக்களே.

சோ இந்த பாகத்தை படிச்சிட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க பா.