பாலைவன ரோஜா 13
மங்கையவளின் வார்த்தையில் தெறித்த வலிகள் ஆடவனின் இதயத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது.. அவனுக்கு மட்டுமல்ல அவனின் குடும்பத்தின் உள்ள ஒட்டு மொத்த உறுப்பினர்களுக்கும் அந்த வலி தாக்கியது.
அவள் பாடலை கேட்டு அவளையே ரசித்தவன் விழிகள் ஏனோ அவளருகில் செல்ல ஏக்கம் கொள்ள காதல் கொண்ட மனதை அடக்கும் வழியறியாமல் கேமிராவை அணைத்தவனுக்கு ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்க மீண்டும் கேமிராவை ஆன் செய்து பார்க்க அவளை சுற்றி தன் குடும்பம் நின்றிருக்க அவளோ அழுதபடி நின்றது மனதில் வலியை தோற்றுவித்தது.
ஏனோ அப்பொழுதே அவளருகில் சென்று அவளின் கண்ணீரை துடைக்க அவனின் கைகள் பரபரத்தது.
அதன் பின்பு அங்கே நடந்த விஷயத்தை வைத்து ஓரளவுக்கு யூகித்தவன் தன் அன்னையின் சொல்லில் வெகுவாய் காயப்பட்டுப்போனான்.. தன்னவளுக்கு தன் குடும்ப விஷயத்தில் தலையிட உரிமையில்லையா என்ன.. ஆனாலும் தன் தாயை தவறாய் நினைக்கவும் தோன்றவில்லை.. அவரின் பேரன்பை அறிந்தவன்.. எதற்காக அப்படி கூறினார் என்று தான் யோசித்தானே தவிர வேறு எதுவும் அவனுக்கு தவறாய் நினைக்க தோன்றவில்லை.
அதே நேரம் அதற்கு தன்னவள் கூறிய பதிலில் இனம்புரியா வலி தோன்றியது.. இத்தனை உறவுகள் இருந்தும் இப்படி கூறிவிட்டாளே பைத்தியக்காரி என்று தான் தோன்றியது.
அத்தோடு மட்டுமல்லாமல் அவளின் வார்த்தையில் இருந்த வலி ஆடவனை உயிரோடு இறக்கச் செய்தது.
எந்த நொடியில் எந்த நேரத்தில் அவளின் மேல் நேசம் முளைத்ததோ அவனே அறியவில்லை.. ஆனால் அவனின் மனம் போன போக்கில் தான் அங்கிருந்து ஓடி வந்தான்.. இன்னும் தன் ஊருக்கு கூட அவனால் போக முடியவில்லை.
ஆனால் அவள் கூறிய வார்த்தையில் உடனே அவளிடம் சென்று அவள் கண்ணத்தில் அறைந்து நான் தான் உன் உறவு இதோ இவர்கள் தான் உன் சொந்தம் பந்தம் என உறக்க கூற வேண்டும் போல் இருந்தது.
எப்படி அவள அப்படி கூறலாம் என்று அவளின் மேல் கட்டுக்கடங்கா கோபமும் வந்தது.
அதற்கு மேலும் அங்கே தங்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு கிளம்பினான் தன்னவளுக்கு தன் குடும்பம் இருக்கிறது என்பதை நிருபிக்க.. ஆனால் ஏதோ உந்துதலில் செல்கிறானே ஒழிய அவனால் அவளிடம் சென்று அவன் காதலை கூறிட முடியுமா என்ன..? பொருத்திருந்து தான் பார்ப்போமே..!
இங்கே அவளின் வார்த்தைகள் அனைவருக்கும் வலிக்க செய்ய புருஷோத்தமனோ ஆரிணியிடம் திரும்பி,
"ஆரிணி இதுவரைக்கும் உன்னை நாங்க யாரும் வேறுபடுத்தி நீ பாத்துருக்கியா.. இது என்ன புதுபழக்கம்.. சீதாவுக்கு அங்கே போய் நீ அவமானபட்டு வந்துருக்கியேன்னு ஆதங்கம்.. அது தான் அப்படி பேசியிருக்கா.. என் மருமகளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. யாரோட மனசையும் புண்படுத்த தெரியாதவ.. ஆனா இன்னைக்கு நீ அனுபவிச்ச வலி தான் அவளை அப்படி பேச வச்சிருக்கு.. அதுக்காக எப்படி நீ இந்த வார்த்தையை சொல்லலாம்.." என்றார் கோபமாய்.
அவளோ அழுதுகொண்டே அவரின் கால்களில் விழுந்து எழுந்தவள்,
"ஐ ஆம் சாரி தாத்தா.. நான் யாரையும் காயப்படுத்த அப்படி சொல்லலை.. நானும் இந்த குடும்பத்தை என் குடும்பமா ஏத்துக்கிட்டேன் தாத்தா.. அது தான் தாமரையோட ஆசை நடக்கனும்னு நினைச்சு தான் பேசனும்னு போனேன்.. ஆனா அங்கே இப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கலை தாத்தா.. நானும் இந்த வீட்ல ஒருத்திங்கிற உரிமையோட தான் பேசப்போனேன்.. அதுமட்டுமில்லை சீதாம்மா நீங்களும் காதலிச்சி கல்யாணம் செஞ்சவங்க தான்.. பிரிவோட வலி உங்களுக்கே தெரியுமே.. அது முடியாததால தான நீங்க உங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டீங்க.. அதே இப்போ உங்க பொண்ணுக்குன்னு வரும் போது மட்டும் தடுக்குறீங்களே.. என்னம்மா இது நியாயம்..
ஏன்ம்மா அவளுக்குன்னு தனிப்பட்ட விருப்பம் இருக்க கூடாதா என்ன.. அவளுக்கு பிடிச்சவனை அவள் கல்யாணம் செய்துக்க கூடாதா என்ன.. உங்க தம்பி மகன்னு தெரியறதுக்கு முன்னாடியே அவ விரும்பிட்டா.. தெரிஞ்சதுக்கு அப்புறம் மனசை மாத்திக்க முடியுமா சொல்லுங்கம்மா.. அவளுக்கும் மனசு இருக்கு.. அவ ஆசைப்பட்டவனை கட்டிக்கிட்டு வாழனும்னு தோனாதா.. நடந்த எதுக்கும் அவ பொறுப்பு இல்லை.. ஆனா அவளோட மனசு விரும்பினவனை விட்டு வர முடியாம தடுமாறினா.. பெத்தவங்களுக்கு எந்த தலைகுனிவும் வரக்கூடாதுன்னா தன்னோட காதலை விடறது தான் வழின்னு யோசிச்சி விடவும் தான் முயற்சி பண்ணா.. ஆனா அவளால முழுசா விடமுடியாம ரொம்பவே தடுமாறினா.. அந்த சமயம் தான் எனக்கு தெரிஞசிது.. அவளோட காதல் பிரிவை ஏற்காதுன்னு..
இந்த வீட்டு இளவரசி அவ.. அப்போ அவளோட சந்தோஷம் தானே உங்க எல்லோரோட சந்தோஷம்.. அவ கஷ்டப்பட்டா உங்க யாராலேயும் தாங்க முடியாது இல்லை.. உங்க எல்லாரோட சந்தோஷத்துக்கு தான் இதை பண்ணேன் சீதாம்மா.. வேற எந்த ரீசனும் இல்லை.. ப்ளீஸ் நீங்க என்னை வெறுத்துறாதீங்க.. நான் தப்பு பண்ணிருந்தா என்னை திட்டுங்க.. ஆனா என்னை தலையிட உரிமையில்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க மா.." புருஷோத்தமனிடம் ஆரம்பித்து சீதாவிடம் முடித்தாள் இரு கரம் கூப்பி.
அவளின் குவித்த கரத்தை கீழே தட்டிய சீதா அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.
"யாருடி நீ எங்கிருந்து வந்தே.. என் பொண்ணுக்காக இந்த அவமானம் உனக்கு தேவையா.. என் குடும்ப சந்தோஷத்தை பெருசா பாக்குறியே.. அப்படி உனக்கு என்னடி நாங்க பெருசா செஞ்சோம்.. நீ தங்க இடம் கொடுத்து உனக்கு மூனு வேளை சோறு போட்டிருக்கோம்.. இது தவிர நாங்க என்னடி செஞ்சோம்.. உனக்கு எப்படி நன்றி சொல்ல போறோம்னே தெரியலைடா கண்ணம்மா.. நீ தீர்க்காயுசா நல்லாருப்ப டா தங்கம்.." என்று அழுது கொண்டே மனதார அவளை ஆசிர்வதித்தார் சீதா.
மங்கையோ சீதாவின் முகத்தை பார்த்து, "பெரிய வார்த்தை சொல்லாதீங்க மா.. என்ன பெருசா செஞ்சோம்னு கேட்டிங்களே.. நான் சொன்னதை நம்பி யாரு என்னன்னு தெரியாத ஒரு பொண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து அவ அனுபவிக்காத பாசத்தை காட்டினிங்களே.. இதை விடவா உசத்தி இந்த உலகத்துல இருக்க போகுது.. நீங்க செஞ்ச இந்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேனோ தெரியலை மா.. காலம் பூரா உங்க காலடியில கிடக்க தவம் இருக்கேன் மா.." என்றாள் அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள்.
அவளின் கையை தட்டி விட்டவர், "யாருடி சொன்னா உனக்கு யாருமில்லைன்னு.. நாங்க இருக்கோம் டி.. நாங்க தான் உன்னோட உறவுகள் சொந்தம் பந்தம் எல்லாம்.. புரியுதா இனி ஒரு முறை யாரும் இல்லைன்னு சொல்லாத டா தங்கம்.." என்றார் கோதை.
எல்லோரின் கண்களில் கண்ணீரில் மிதந்தது.. தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்துக் கொண்ட புனிதவதி, "அம்மாடி மருமகள்களே என் பேத்தியை கூட்டிட்டு போய் அந்த பூஜை ரூம்ல விளக்கேத்திட்டு சமைக்க ஆரம்பிங்க.. சீதா தாமரையோட கல்யாண விஷயத்தை நாம உங்க வீட்ல பேசலாம் மா.. எங்க பேத்தியோட சந்தோஷத்துக்காக நாங்க பேசுறோம் மா.. ஏங்க நான் சொன்னது சரிதானே.." என்றார் தன் கணவரை பார்த்து.
" சரிதான் வதி.." என்றார் மனைவிக்கேத்த கணவனாய்.
"சரி சரி போங்க.. யம்மா ஆரிணி போம்மா போய் பூஜையை முடிச்சிட்டு வேலையை பாருங்க.. ஆத்தா தாமரை போ சாமி.. போயி அம்மாவுக்கு உதவி பண்ணுடா மா.." என்று அனைவரையும் அனுப்பி வைத்தவர் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தார்.
அவரருகே வந்தமர்ந்த புனிதவதி , "ஏங்க நான் ஒரு விஷயம் சொல்லட்டுங்களா.." என்றார் தன் கணவரின் முகத்தை பார்த்த படி.
"நம்ம ஆத்விக்குக்கு பொண்ணு பாத்துட்டே.. அந்த பொண்ணு ஆரிணி.. என்ன வதி சரியா சொல்லிட்டேனா.." என்றார் மனைவியின் மனமறிந்த கணவனாய்.
" ஆமாங்க அந்த புள்ளையை பார்த்ததுல இருந்தே இந்த நினைப்பு தான் மனசுல ஓடுது.. ஆனா உங்க பேரன் இதுக்கு ஒத்துப்பானான்னு தெரியலையே.. கல்யாணம் னா இங்கே வரவே மாட்டான்.. இப்போ பொண்ணு பாத்துட்டோம்னு சொன்னா என்ன சொல்லுவான்னே தெரியலை.." என்றார் சோகமாய்.
அதை கேட்டு சிரித்தவர், "வதி உனக்கு என்னை தெரிஞ்ச அளவுக்கு நம்ம பேரனை தெரியலை.. என்னை விட அழுத்தக்காரன் அவன்.. ஆனாலும் அவனுக்கானதை எப்பவும் விட்டுக் கொடுக்கமாட்டான்.. நீ நினைச்சது கூடிய சீக்கிரம் நடக்கும்.. உன் பேரனோட கல்யாணம் நடக்கும்.. அதுவும் அவன் விரும்பியபடி.." என்றார் யோசனையாய் எங்கோ பார்த்தபடி.
"என்னங்க சொல்றீங்க.. அப்போ அவன் யாரையாவது காதலிக்குறானா என்ன.. யாருங்க பொண்ணு.." என்றார் பரபரப்பாய்.
பட்டு முறிந்து போனதாய் நினைத்த தன் பேரனின் வாழ்க்கை மீண்டும் துளிர்க்க போவதில் பேரானந்தம் கொண்டார் அந்த வயதானவர்.
"வதி அவன் இன்னும் அவனுக்குள்ளே போராடிட்டு இருக்கான்.. தெளிஞ்சதும் வருவான் வெயிட் பண்ணு.." என்றார் தன் மனைவியின் தோளை தட்டியபடி.
இங்கே கோதை சீதா ஜானகிராமன் ரகுராமன் இவர்களுக்குள்ளும் இதே பேச்சு தான்.
" ஏங்க நம்ம ஆத்விக்குக்கு ஆரிணியை கல்யாணம் செஞ்சு வைக்கலாமா.. அக்கா மாமா நீங்க என்ன சொல்றீங்க.. ஏனா ஆத்விக் உங்களுக்கும் பையன்.. என்னைவிட உங்களுக்கு தான் உரிமையிருக்கு.. பெத்தது நானா இருந்தாலும் அவனை வளர்த்தது நீங்க தானே.." என்றார் கோதை புன்னகை முகமாய்.
எதற்காகவும் இதுவரை பொறாமை இருவரிடையே வந்ததில்லை.. ஒட்டிப்பிறந்த உடன்பிற்ப்பை போல் இருவரிடையே ஒற்றுமை தான் இந்த குடும்பத்தை இன்னும் வலிமையாக்கியது.
கோதையின் கரத்தை பிடித்த சீதா, "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கோதை.. உன் பையன்னு பிரிச்சி பேசாத அவனோட கல்யாண வாழ்க்கையில எங்களோட சம்மதத்தையும் கேட்டே இல்லை.. அதுவே ரொம்ப சந்தோஷம் மா.." என்றார் நா தழுதழுக்க.
"அய்யோ அக்கா அவன் உங்களுக்கும் பையன் தான்.. எனக்கு தெரியாத அக்கா நீங்க அவன் மேல வச்சிருக்கற பாசம்.." என்றார் பெருந்தன்மையாய்.
"என் பையனுக்கு ஏத்த பொண்ணுன்னா அது ஆரிணி தான் கோதை.. அவ வந்தா தான் இந்த குடும்பம் இதே போல எப்பவும் ஒத்துமையா இருக்கும்.. எனக்கும் இந்த ஆசை இருக்கு கோதை..ஏங்க தம்பி நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்க.." என்றார் ஆண்கள் இருவரையும் பார்த்து.
"உங்க ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கற போது எங்களுக்கும் விருப்பம் தான் சீதா.. நீ என்னடா தம்பி சொல்ற.." என்றார் தன் தம்பியை பார்த்தபடி.
" நீங்க சொன்ன சரி தான் அண்ணா.."
என்றார் அவரும் சந்தோஷமாய்.
தோட்டத்தின் நடுவே அரண்மனையாய் இருந்த அந்த வீட்டின் ஹாலில் அனைவரும் குழுமியிருக்க அங்கே ஷோபாவின் நடுவே அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயதுக்காரர் தன் எதிரே நின்றிருந்த ஆடவனை தன் கரம் கொண்டு சப்பென அறைந்திருந்தார்.
"அந்த கேடுகெட்டவளை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வரப் பாக்குறியோ.. என்னடா உன்னோட நினைவுல வச்சிட்டு இருக்க.. கொன்னு புதைச்சிடுவேன் பாத்துக்கோ.." என்றார் கோபமாய்.
அடிவாங்கியவனோ அவரை கோபமாய் முறைத்தபடி நின்றிருந்தான்.
மாமன் வாங்கி தந்த
வண்ண சேலை தான்..
இந்த வேலை தான்..
சேலை உடுத்தறப்போ
அவன் மோகந்தான்..
புது ராகந்தான்..
பொட்டோடு பூ முடிச்சி..
பொன் மஞ்சள் பூசிவச்சி..
வந்திடும் மகராசி..
நகை சிந்திடும் முகராசி..
கண் விழி மை பூசி..
வரும் கொண்டவன் புகழ் பேசி..
அடுத்த பாகத்துல பாக்கலாம் மக்களே.. இந்த கதையை பத்தின உங்க பொன்னான கருத்துக்களை சொல்லிட்டு போங்க மக்கா..