• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பாலைவன ரோஜா 16

kkp49

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 4, 2023
30
9
8
Tamilnadu
பாலைவன ரோஜா 16
அமைதியாய் பூஜையறையில் ஒலிக்கும் மணியோசையில் அந்த வீடே பக்தி மயமாய் வீற்றிருந்தது.. பூஜையறையில் அழகாய் பெண்குரல் மந்திரத்தை ஒலித்தது.
ஆரிணி தான் பூஜையறையில் இருந்தாள்.. கண்கள் மூடி இருந்தவளின் மனம் ஏனோ நிலை கொள்ளாமல் தவித்தது.. ஏதோ தவறாய் நடக்க போவது போல் தோன்றியது.. ஆனால் இன்னதென்று தான் விளங்கவில்லை.
அதே நேரம் அந்த வீட்டின் சமையலறையில் இருந்த சீதாவின் அலைபேசி அடித்தது.. அதை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி சீதாவின் அலறல் சத்தம் அந்த வீடெல்லாம் எதிரொலித்தது.
எல்லோரும் நடுஹாலிற்கு வர அங்கே அழுதபடி சீதா நின்றிருந்தார்.
அங்கே வந்த புருஷோத்தமன் சீதாவை பார்த்து,
"அம்மாடி சீதா என்னாச்சும்மா.. எதுக்கு மா அழற.. வதி என்னம்மா ஆச்சு.." என்று மனைவியையும் மருமகளையும் கேட்டார்.
" எனக்கும் தெரியலைங்க.. சீதா அழுகை சத்தம் கேட்கவும் தான் நானும் வந்தேன்.. அம்மாடி ஆரிணி என்னாச்சுமா.." என்று கணவனிடம் ஆரம்பித்து ஆரிணியிடம் முடித்தார்.
ஆரிணியோ சீதாவை பார்த்தபடி,
"பாட்டி சீதாம்மாவோட தம்பி பையன் கால் பண்ணிருந்தான்.. சீதாம்மாவோட அம்மாவுக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம் பாட்டி.." என்றாள் சீதாவை அணைத்தபடி.
அதை கேட்ட புருஷோத்தமன் தன் மகனை பார்த்தபடி,
"ஜானகிராமா ஏன் இப்படி நின்னுட்டு இருக்க.. முதல்ல சீதாவை கூட்டிட்டு போப்பா.. என்ன தான் இருந்தாலும் சீதாவோட பெத்த தாய் அவங்க.. ஆயிரம் மனஸ்தாபம் இருந்தாலும் ஒரு தாயால பெத்த குழந்தையை வெறுக்க முடியாது..அது போல தான் மகளுக்கு தன் தாயை வெறுத்து போக முடியாது..
இடையில வர்ற பிரச்சனைகள் எல்லாம் மழைக்கால மேகம் போலத் தான் கொட்டி தீர்த்து போச்சின்னா வெளிச்சம் பிரகாசிக்கும்.. இப்ப கூட ஒரு மகளா சீதா போய் அவங்களை பார்க்கலைனா அவங்க பெத்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிடும்.. சீதாம்மா போமா போய் அவங்களை பாரு.. நிச்சயம் அவங்களுக்கு உன் மேல கோபம் இருக்காது.. அப்படி இருந்து திட்டினாலும் கொஞ்சம் பொறுத்து போவதில் தப்பில்லைமா.. உன் புருஷனை கூட்டிட்டு போயிட்டு வாமா.." என்றார் தீர்வாய்.
சீதாவோ தயக்கமாய் தன் கணவரை பார்த்தார்.. அதில் இருந்த யாசகத்தில் ஒரு காதல் கணவனாய் அவரை பாதித்தது.. இதுவரை எதற்காகவும் தன் மனைவியை கண்ணீர் சிந்த விட்டதில்லை.. ஆனால் இன்று அவரின் யாசகம் நிறைந்த பார்வை அவரை வதைத்தது.
இத்தனை நாள் இவளின் குடும்பத்தை பிரிந்து இருந்ததை பற்றி இதுவரை ஒரு முறை கூட தான் யோசித்ததில்லையே.. இவளின் புன்னகை முகத்தினுள் அனைத்து வலிகளையும் ஒலித்து வைத்துள்ளாளா என்ன.. இதை அறியாமலா பெண்ணவளுடன் இணைந்து இல்லறம் நடத்தியதை நினைத்து இதயம் வலித்தது.
தன் மனைவியின் அருகே சென்றவர்,
"சீதா என்னை மன்னிச்சிடு மா.. இத்தனை நாள் நீ என்னோடு சந்தோஷமா வாழ்ந்ததும் நீ எனக்கு மட்டுமே சொந்தம்னு நினைச்சு உன் குடும்பத்தை உன்கிட்ட சேர்க்காத விட்டுட்டேன்.. நான் சுயநலமா யோசிச்சிட்டேன் மா.. என்னை மன்னிச்சிடு டா.." என்றார் தன் மனைவியை அணைத்தபடி.
அய்யோ இல்லைங்க.. என் குடும்பத்தோட நினைப்பே என்கிட்ட நெருங்காத அளவுக்கு எனக்கு இன்னொரு அப்பா அம்மாவா அத்தை மாமா இருந்தாங்க.. அதுக்கு மேல என் பார்வையை வெச்சே என்னை புரிஞ்சி நடந்த நீங்க.. இதோ என் மகன் ஆத்விக் எனக்கு அம்மான்னு முதல்ல உறவை தந்தவன் என்னை கூட பிறந்த அக்காவா நினைக்கிற கோதை என்னோட பொண்ணுங்க இதோ என்னை அம்மா ஸ்தானத்துல வச்சி பாக்குற என்னோட நாத்தனார் இத்தனை பேரு சேர்ந்து எனக்கு உறவா இருக்கும் போது எப்படிங்க எனக்கு என் குடும்பத்தை மட்டும் நினைக்க தோன்றும்..
ஏதோ அவங்களுக்கு உடம்புக்கு முடியலைன்னு சொல்லவும் கொஞ்சம் பதட்டமாயிடுச்சி.. ஏனா இத்தனை வருஷத்துல அம்மா உடம்பு முடியலைன்னு இதுவரை படுத்ததில்லை.. ஆனா இப்போ படுத்தது தான் ரொம்ப கஷ்டமா இருக்குங்க.." என்றார் தன்னவரை சமாதானப்படுத்தும் வகையாய்.
இருவரின் பாசத்தையும் கண்ட மற்றவர்களுக்கு மனம் நிறைந்து வழிந்தது.
அதே நேரம் அங்கே வந்த ஆத்விக்,
"சீதாம்மா வாங்க பாட்டியை போய் பார்த்துட்டு வரலாம்.. யாரு வந்தாலும் உங்க பையன் நான் இருக்கேன்.. என் தங்கை ஆசைப்பட்ட படி தான் பார்த்திபன் மாமா பையன் மகிழ்வேந்தனுக்கு தான் என் தங்கையை கட்டி கொடுப்பேன்.. இப்போ வாங்க போலாம்.. அப்பா அம்மாவை கூட்டிட்டு வாங்க.." என்றான் ஜானகிராமனை பார்த்து.
சீதா ஆத்விக்கை பார்த்தவர், "ஆத்விக் கண்ணா எனக்கு இது போதும் பா.. நீ தான் என்னோட மூத்த பையன்.. இந்த குடும்பத்தோட சந்தோஷம் இனி நீதான் எப்போதும்.. போலாம் பா.. இனி யாரு தடுத்தாலும் எங்க அம்மாவை பார்க்காம என்னால இருக்க முடியாது.. போலாம் ஆத்விக்.." என்றார் சந்தோஷமாக.

ஆரிணி அதை சந்தோஷமாக பார்த்தாள்.. ஏனோ ஆத்விக் இப்பொழுது அவளின் பார்வைக்கு புதிதாய் தெரிந்தான்.. அவளையறியாமல் அவளின் பார்வை அவனை ரசித்ததை பெண்ணவளால் தடுக்க முடியவில்லை.. அவளும் வயது வந்த பெண் தானே.
அவனின் பார்வையில் இருக்கும் காந்த ஈர்ப்பு சக்தி அவளை அவனுக்குள் உள்ளிழுத்துக் கொண்டிருந்ததை மங்கையவள் அறியவில்லை. அறியும் நொடியில் அவளின் மனதை அவனிடம் வெளிப்படுத்துவாளா என்ன..?
அவளின் சிந்தனைக்கு நடுவே புர்ஷோத்தமன்,
"ஆத்விக் கண்ணா உன் அம்மா அப்பாவை கூட்டிட்டு போயிட்டு வாப்பா.. அம்மாடி ஆரிணி உன் சீதாம்மாக்கு துணையா நீயும் போ.."என்றார் புருஷோத்தமன்.



ஆத்விக்கோ சரியென்று தலையசைத்து விட்டு தன் தாயையும் தகப்பனும் அழைத்துக் கொண்டவன் தன்னவளின் பக்கம் பார்வையை திருப்பி கண்ணால் வரும்படி சைகை செய்தான்.


அவனின் பார்வை வீச்சில் வஞ்சியவளோ அவனின் பின்னே சென்றாள்.. அதைக் கண்ட புருஷோத்தமனின் இதழில் புன்னகை சிந்தியது.


கோதை தாமரை ஆராத்யா ஷிவானி என அனைவரையும் அழைத்து சென்றவர் அவர்களை சாப்பிட வைத்து அவர்களை கல்லூரிக்கு அனுப்பும் வேலையை கையிலெடுத்துக் கொண்டார்.


இங்கே புனிதவதியும் புருஷோத்தமனும் தோட்டத்தில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்திருந்தனர்.


தன் கணவனின் முகத்தை பார்த்த புனிதவதி,


"ஏனுங்க அவங்க நம்மோட சம்பந்தி தானே.. நம்ம போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோமாங்க.." என்றார் அவரின் பதிலுக்காக அவரின் முகத்தை பார்த்தபடியே.


"ம்ம் போகனும் வதி மா.. ஆனா இப்போ வேணாம்.. நரசிம்மன் நம்ம மேல கோபமா இருப்பாரு.. அதுமட்டுமில்லாம சம்பந்தி அம்மாவுக்கு டென்சன் கொடுக்க வேணாம்.. எல்லாம் கொஞ்சம் சரி ஆகட்டும் போலாம் மா.. ஆமா உன்னோட பேரனோட பார்வை ஆரிணி மேல அதிகமா விழற மாறி இருக்கே.. என்ன பையன் கவுந்துட்டானா என்ன.." என்றார் சிரித்தபடி.


" அய்யோ போங்க நீ ஒரு தாத்தா மாறியா பேசுறீங்க.. ஏன் அவன் ஆசைப்படக் கூடாதா என்ன.. நாமளும் இதை முன்னவே யோசிச்சோம் தானே.. இப்போ என்ன கிண்டல் பண்றீங்க.." என்றார் புன்னகை முகமாய்.


அந்த புன்னகையில் தன் பேரனின் வாழ்வு சீரானதை உணர்ந்த புருஷோத்தமன் மனதிற்குள்,


'எனக்கும் இது சந்தோஷம் தான் வதி ம்.. ஆனா உன்னோட பேரனோட தற்போதைய முடிவு நிரந்தரமானது இல்லையே.. அவன் எப்போ எப்படி யோசிப்பானுன்னே தெரியாதே..' என்றார் எதையோ சிந்தித்து பார்த்தபடி.


இங்கே ஆராத்யா ஷிவானி ஆரமுதன் ஆராதனா என இளையப் பட்டாளங்கள் அனைவரும் தாமரையின் அறையில் அடைக்கலமாகியிருந்தனர்.


இதில் ஆரமுதன் தாமரையிடம், "ஹேய் லோட்டஸ் இப்போ ஏன் பீல் பன்ற..உனக்கு என்ன உன்னோட வேந்தன் வேணும் அவ்ளோ தானே.. பேசாமா அந்த நரசிம்மன் தாத்தா முன்னாடி போய் தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டலாமா.." என்றான் அவளிடம் சந்தோஷமாக.
" ஏன்டா உனக்கு இவ்ளோ கொலைவெறி.. அவரு நீ செத்தா எனக்கென்னன்னு போவாரு டா.." என்றாள் கோபமாய்.
"ஆமா இல்லை.." என்றான் தாவாயை தடவியபடி.
"ஆமா தாண்டா எருமை.. அடியே ஆராத்யா உங்க அண்ணனை சும்மா இருக்க சொல்லுடி.. இல்லை இவனை கொன்னே போட்டுடுவேன்.." என்றாள் தாமரை கோபமாக.
அதை கேட்ட ஷிவானி ஆராத்யா ஆராதனாவும் சிரித்தனர்.
நால்வரையும் திரும்பி முறைத்தவன், "இதோ பாரு என்னை கிண்டல் பண்றியா நீ.. இப்படியே நீ இரு.. உன்னை என் தலையில கட்டி வச்சிட்டு வேடிக்கை பாக்க போறாங்க.." என்றான் சிரிக்காமல்.
அதை கேட்டதும் இரு கண்கள் கலங்கி தவித்து துடித்தது.. அதை உணர்ந்த தாமரை,
"அடேய் உனக்கு கொஞ்சமும் அறிவில்லையா.. எதுக்குடா இப்போ என் தங்கச்சியை அழ வைக்குற.. நீ என்னை விட மூனு மாசம் பெரியவன் எருமை.. ஏய் ஆரா இவனை ரூம்ல விட்டு அடிடி.. இந்த லூசு சொல்லுதுன்னு நீ கண் கலங்கி போற.." என்றாள் ஆராதனாவிடம் திரும்பி.
ஆரமுதனோ ஆராதனாவை வைத்த விழி வாங்காமல் பார்த்திருந்தான்.
அதில் இருந்த காதலில் நங்கையவள் நாணிப் போனாலும் அது எப்படி என்னை வைத்து இவன் கிண்டல் செய்யலாம் என்று யோசித்தவள் மூஞ்சியை திருப்பியபடி அங்கிருந்து சென்றாள்.
அவள் அங்கிருந்து செல்லவும் தாமரையின் தலையில் கொட்டியவன்,
"எருமை என்ன வேலை டி பாத்து வச்சிருக்கே.. விளையாட்டுக்கு பண்ணா விஷமாறி கோத்து விட்டுட்டு போற.." என்று அவளை திட்டியவன் தன்னவளின் பின்னே சென்றான் அவளை சமாதானம் செய்வதற்காக.
ஷிவானியும் ஆராத்யாவும் அதை பார்த்து சிரித்தபடி,
"ஏன் தாமரைக்கா இப்போ எதுக்கு ரெண்டு பேரையும் காத்து விட்டு அனுப்பிருக்கீங்க.. அவ வேற சீக்கிரமே சமாதானம் ஆக மாட்டாளே.. அன்னைக்கு நடந்த விஷயத்தையே அவ இன்னும் மறக்கலை.. இப்போ இது வேறயா.. எப்படியோ என் அண்ணன் நொந்து போய் தான் வருவான்.." என்று சிரித்தபடி கூறினார்கள்.
"ஏய் விடுங்கடி அதெல்லாம் அவன் சமாதானம் செஞ்சிடுவான்.. இப்போ அப்பா அம்மா அங்கே போய் பாட்டியை பாக்க தாத்தா அலோவ் பண்ணுவாரா என்ன.." என்றாள் கவலையாய்.
" அய்யோ அக்கா அதெல்லாம் ஆத்விக் மாமா போயிருக்காங்க.. அவரு பாத்துப்பாரு விடுங்க.." என்றாள் ஆராத்யா.
"அது தாண்டி எனக்கு பெரிய நம்பிக்கை..பாக்கலாம் டி.." என்றார் பெருமூச்செறிந்தபடி.
அந்த அறையில் சூரியன் கூட உள்ளே போக முடியாமல் இருட்டாய் இருந்தது.. அந்த அறையின் சுவற்றில் ஒரு பெண்ணின் அழகான புகைப்படம் மாற்றப்பட்டிருந்தது நான்கு திசையிலும்.
அந்த அறையின் நடுவே இருந்த கட்டிலில் ஒரு உருவம் தன் மார்பில் எதையோ அழுந்த பிடித்த படி ஒரு கையை தலையில் வைத்து பிடித்தபடி படுத்திருந்தது.
சற்று நேரத்தில் அந்த அறையின் கதவு தட்டப்பட தள்ளாடியபடி எழுந்த உருவம் கதவை திறக்கும் முன்னே வேட்டி அவிழ்ந்து கீழே விழுந்திருந்தது.. அது யாரோ..?
இங்கே மருத்துவனைக்கு வரும் வழியெங்கும் தன்னவளின் மேலே பார்வையை பதித்து வந்தவனுக்கு ஏனோ மனம் சரியில்லாமல் தான் இருந்தது.. அதன் காரணம் தான் அவன் அறியவில்லை.
ஆனால் மருத்துவமனையில் நடந்த விஷயம் வஞ்சியவளின் நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாய் அறுத்தது.
அப்படி என்ன தான் நடந்ததுவோ.. அடுத்தடுத்த பாகத்தில் காண்போம் மக்களே.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் எனது அன்பான வாசகர்களே.