பாலைவன ரோஜா 24
தன்னவளின் நினைவுகளில் மூழ்கியிருந்த பார்த்திபனின் தோளில் அழுத்தமான கரம் பதிய திரும்பி பார்த்தவரின் முன்னே ஆத்விக் குடும்பமும் அவரின் குடும்பமும் நின்றிருந்தது.. ஆத்விக்கை கண்டதும் அவனின் தோளில் சாய்ந்தபடி,
"அன்னைக்கு தான் என்னோட துகியை கடைசியா பார்த்தேன் ஆத்விக்.. அதுக்கப்புறம் அவ எங்க போனா என்ன ஆனா எதுவும் எனக்கு தெரியாது.. எங்களோட காதலை பத்தி நல்லா தெரிஞ்ச சிலரும் அவளை பத்தி என்கிட்ட தப்பா தான் சொன்னாங்க.. ஆனா கடைசி வரைக்கும் நான் நம்பலை..
எத்தனையோ இடங்கள்ல தேடியும் அவ எனக்கு கிடைக்கலை.. அவளுக்காக காத்திருந்தேன்.. ஆனா அவ கடைசி வரைக்கும் வரலை.. என்னோட வாழ்க்கையே அவளோட முடிஞ்சி போச்சி.. அவளோட நினைவோட தான் வாழ ஆரம்பிச்சேன்.. கொஞ்ச வருஷத்துக்கு பிறகு அம்மா தான் ராதாவோட கல்யாணம் செஞ்சு வச்சாங்க.. ஆனா என்னோட துகி என்னை விட்டு விலகனுதுக்கு பின்னாடி எங்க அப்பா இருப்பாருன்னு எனக்கு தெரியாம போயிடுச்சி ஆத்விக்..
ஆத்விக் என்னோட பொண்ணு எங்க பா.. என் துகிக்கு என்ன ஆச்சி.." என்றார் தவிப்புடன்.
அவரின் தவிப்பு ராதாவின் கண்களில் பயத்தை தோற்றுவித்தாலும் அவரும் பெண் என்பதால் தன் கணவனின் கேள்விக்கு ஆத்விக்கின் பதிலை எதிர்பார்த்தார்.
ஒரு பெருமூச்சுடன் அனைவரையும் திரும்பி பார்த்தவன், "மாமா உங்க துவாரகா இப்போ உயிரோடு இல்லை.. அவங்க பொண்ணு யாருன்னு இப்போ ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் எனக்கு தெரியும்.. அந்த பொண்ணை உங்களுக்கும் தெரியும்.. ஆனா அவ இப்போ எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது.. " என்றான் மனபாரத்துடனே.
அதில் உடைந்து போன பார்த்திபன் மனதில் வலியுடன் துவண்டு போய் அமர்ந்தவர்,
"ஆத்விக் என்னோட அப்பா தான் எங்களோட பிரிவுக்கு காரணம்னு மட்டும் தெரியுது.. ஆனா எப்படின்னு இன்னமும் விளங்கலை.. எல்லாமே தெரிஞ்ச அம்மாவும் முழுசா சொல்லலை.. அப்படி என்ன தான் ஆத்விக் ஆச்சி.." என்றார் பாரமாய்.
"மாமா உங்க மனசை தேத்திக்கோங்க.. அன்னைக்கு நீங்க அப்படி இருந்ததை பார்த்த யாரோ உங்க அப்பாவோட ஆள் ஒருத்தர் அதை உங்க அப்பாகிட்ட சொல்ல எப்பவும் போல ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர் துவாரகா அத்தையை பத்தி விசாரிச்சிருக்கார்.. அவங்களோட பிறப்பு அவரை அறுவறுக்க வச்சிருக்கு.. அதுமட்டுமில்லாம ஒரு தாசி குலத்தில பிறந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா ஆகக்கூடாதுன்னு அவரே நேரடியா இன்வால்வ் ஆகி உங்களுக்கு சொந்தமானவங்களை அந்த ஊரை விட்டே இரவோடு இரவா விரட்டியிருக்காரு.. அதுவும் அவங்களை வேசியா இந்த சமூகத்துக்கு காட்டி.. அதுக்கு மேலேயும் இந்த மனித மிருகங்கள் அவங்களை விடுமா என்ன.. அவங்க தப்பிக்க நினைச்சும் வெளியே வரமுடியாத அளவுக்கு அவங்களை சேர்த்த இடம்.. தான் தான் இந்த குலத்தில பிறந்திட்டு தன்னோட வாழ்க்கையே நாசமாகி போச்சு.. தன்னோட உண்மையான காதலுக்கு பிறந்த தன்னோட பொண்ணாவது நல்லா இருக்கனும்னு நினைச்சி அவங்க செஞ்ச ஒரு விஷயம் அவங்களோட பொண்ணையும் அதிலேயே தள்ளிடுச்சி.. ஆமா மாமா உங்க பெண்ணையும் உங்க அப்பா ஒரு விபச்சாரி கிட்ட கொடுத்து வளர்க்க சொல்லிட்டாரு.." என்றான் கண்களை மூடியபடி.
அதை கேட்ட அனைவருக்கும் இதயத்தில் வலி தோன்றியது.
அனைவரின் இதயமும் கனத்து தான் போனது.. உயிருக்கு உயிராய் காதலித்தவள் காலனின் கையில் சென்றது அறியாமல் இத்தனை காலமும் வாழ்ந்ததை நினைத்து மனம் குமைந்து தான் போனார்.. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மகளும் இழிநிலையில் வாழ்ந்ததை நினைத்து தந்தையாய் அவரின் மனம் தவித்து தான் போனது.
"ஆத்விக் என்னோட பொண்ணு எங்கப்பா இருக்கா.. " என்றவரின் கண்களில் தன் காதலின் சின்னத்தை காண வேண்டும் என்ற பேராசை மின்னியது.
ஆத்விக்கோ, "மாமா உங்க பொண்ணு யாருன்னு நான் சொல்றேன்.. ஆனா பதிலுக்கு நான் கேட்கறதை நீங்க எனக்கு கொடுக்கனும்.." என்று தன் தாயை பார்த்தபடி பேசினான்.
அவரின் முகமோ பதட்டத்தில் இருந்தது.. தன் மகனின் ஆசை எதுவென்று தெரிந்த பின்பும் அதற்கு தடைபோட்ட தன்னை நினைத்து கோபம் தான் வந்தது.
முந்தைய நாளின் ஆத்விக் வந்து தன்னிடம் பேசிய வார்த்தைகள் நினைவில் சென்று தாக்கியது.
இரவு கோதை தனியாக வேலை செய்து கொண்டிருந்த சமயம் அங்கே வந்த ஆத்விக், "அம்மா.." என்றான் மென்மையாய்.
அவனை பார்த்து புன்முறுவல் செய்தவர், "ஆது சொல்லுப்பா என்ன வேணும்.." என்றார் வேலையை செய்தபடி.
" நான் ஒன்னு உங்ககிட்ட கேட்கனும்.. கேட்கலாமா மா.." என்றான் தன் தாயை ஆழம் பார்த்தபடி.
"கேளுப்பா.." என்றார் சிரித்த படி.
"அம்மா நான் ஒரு பெண்ணை விரும்புறேன்.. நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசைப்படறேன்.." என்றான் அழுத்தமாய்.
அவன் சொன்னதை கேட்டதும் ஒரு தாயாய் கோதையின் மனம் ஆனந்தத்தில் திளைத்தது.
"ஆது யாருப்பா அந்த பொண்ணு.. என் மருமகளை எனக்கு இப்பவே காட்டு கண்ணா.." என்றார் ஆனந்தமாய்.
"அம்மா அந்த பொண்ணு யாருன்னு சொல்றேன்.. ஆனா அந்த பொண்ணு வளர்ந்த இடம் ஒரு விபச்சார விடுதியில.. ஆனா பிராஸ்டியூட் இல்லை.." என்றார் யோசனையாய்.
அவன் அவ்வாறு சொல்லவும் ஆனந்தத்தில் பொங்கிய அவரது முகம் வதங்கி தான் போனது.
"ஆது என்ன டா சொல்ற.. இது எப்படிபட்ட குடும்பம்.. இந்த குடும்பத்தோட மூத்த மருமக ஒரு பிராஸ்டியூட் ஆஆ.. என்ன தான் அந்த பொண்ணு அது போல இல்லைன்னாலும் அந்த இடத்துல வளர்ந்த பொண்ணுக்கு சரி தப்பு தெரியுமா என்ன.. வேணாம் பா நானே நம்ப சொந்தத்துல ஒரு நல்ல பொண்ணா பாக்குறேன்.. அந்த சாக்கடையில இருந்து வர பொண்ணு வேணாம் பா.." என்றவரின் ஆதங்கம் ஒரு தாயாய் சரி என்றாலும் ஒரு மனிதியாய் சுயநலமாய் இருந்தார்.
அதை கேட்டவனுக்கு வலி தான் தோன்றியது. என்ன தான் முன்னேற்றமான குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்ந்தாலும் சில நேரத்தில் சுயநலமாய் தான் யோசிக்க தோன்றுகிறது.. அது தவறென்று இல்லை தான்.. ஆனால் ஒரு பெண்ணாய் இருந்தும் அவரை அப்படி யோசிக்க வைத்தது அவர் வளர்ந்த வாழ்ந்த சூழலும் தான்.
கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அதேபோல ஊரே மதிக்கும் குடும்பத்தில் வாழ்க்கைபட்டவர் அதனாலோ என்னவோ அவரின் சிந்தனையும் எண்ணங்களும் மரியாதையை சுற்றியே வந்தன.
அவர் கூறியதை கேட்ட ஆத்விக்கிற்கு சிரிப்பு தான் வந்தது.. என்றோ நடக்குமா இல்லையா என்றே அறியாத ஒன்றுக்காக இன்று மனதார நேசித்தவளை பிரிய வேண்டுமா என்ன.
"அம்மா நீங்க பாக்குற அந்த சொந்தக்கார பொண்ணு என்னை கல்யாணம் செய்துப்பாளா என்ன.. அவ்வளவு பெரிய மனசு அந்த பொண்ணுக்கு இருக்கா என்ன.." என்றான் வேதனையாய்.
"ஆது கண்ணா என்ன பேசுற நீ.. உன்னை கல்யாணம் செய்துக்க அந்த பொண்ணு தான்யா குடுத்து வச்சிருக்கணும்.." என்றார் அவசரமாய்.
"அம்மா ஒரு பழமொழி இருக்கு தெரியுமா.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தான்.. உங்களுக்கு நான் நிறைவானவன் தான்.. ஆனா மத்தவங்களுக்கு நான் அப்படி இல்லையேம்மா.. உங்களுக்கே தெரியும்.. நான் ஏன் அதிகமா இங்கே வரலைன்னு.. இப்போ நான் இங்கே வந்ததுக்கும் ஒரு பொண்ணு தான் காரணம்.. என்னோட இந்த குறையை பெருசா கண்டிப்பா நினைக்கமாட்டா.. அவ ரொம்பவே நல்ல பொண்ணு.. நிச்சயம் நம்ப குடும்பத்தை உங்களை போலவே பாத்துப்பா மா.." என்றான் அவருக்கு புரிய வைக்கும் நோக்கத்துடன்.
"ஆது நீ சொல்ற எல்லாம் சரி தான்.. ஆனா அந்த பொண்ணு அப்படிபட்ட இடத்துல இருந்து வரவ எப்படி இந்த குடும்பத்துக்கு சரி வருவா.. இந்த குடும்பத்தோட மானம் மரியாதை எனக்கு ரொம்பவே முக்கியம்.. நாளைக்கு அவளோட சொந்தம்னு சொல்லிகிட்டு இந்த மாதிரி இடத்துல இருந்து தானே வருவாங்க.. அவங்களை போய் சொந்தம்னு சொல்லிக்க முடியுமா என்ன.. ஏன் அந்த பொண்ணு நம்ப வீட்டு ஆம்பளைங்கிட்ட தப்பா.." என்றவர் முடிக்க முடியாமல் "அம்மா.." என்றான் அழுத்தமாய்.
அவனின் கத்தலில் சுயநினைவு பெற்றவரின் முன்னே ருத்திரமூர்த்தி அவரின் முன்னே நின்றிருந்தான் அவரின் மைந்தன்.
" அம்மா உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை.. நீங்களும் ஒரு பொண்ணு தானே.. நீங்களே இப்படி தப்பா பேசலாமா என்ன.. ச்சீய் என்ன மாதிரி வார்த்தை இது.. என்னை நம்பி வர்றவ வீட்ல இருக்கற ஆம்பளைங்கள வளைச்சி போட வருவான்னு சொல்றீங்க.. இது உங்களுக்கே அசிங்கமா இல்லை.. அந்த பொண்ணு வளர்ந்த இடம் இப்படின்னு சொன்னதும் இப்படி அசிங்கமா பேசுறீங்க.. அந்த பொண்ணு உங்களுக்கு நல்லா தெரிஞ்சவ தான்.. அது வேற யாரும் இல்லை.. இத்தனை நாளா நம்ம வீட்ல இருந்த ஆரிணி தான்.. அவளை பாத்து எப்படிம்மா இப்படி நினைச்சீங்க.. ச்சீய் .." என்றான் அறுவறுப்பாய்.
சற்று நேரம் அதிர்ச்சியாய் இருந்தவர் அதில் தெளிந்து தன் மகனின் முகத்தை பார்த்த கோதை,
"ஆத்விக் அந்த பொண்ணா அப்போ நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு சொல்லு பார்ப்போம்.. இங்கே வந்து இருந்த கொஞ்ச நாளிலே உன்னை அவள் வசம் இழுத்துட்டாளே.. அதுமட்டுமில்லை இந்த வீடே அவளை ஏத்துகிச்சே.. ஏன் நானும் அவள் யாரு என்னன்னு தெரியாம தானே இந்த வீட்ல ஏத்துகிட்டேன்.. ஆனா இப்போ அவள் பிறப்பும் சரியில்லை.. அவ வளர்ந்த இடமும் சரியில்லை.. அவ அம்மா பார்த்திபன் அண்ணாவை மயக்கினா.. இவ உன்னை மயக்க வந்தாளா.. ஒரு தாசி பொண்ணு என்னோட மருமகளா.. ச்சீய் கேட்கவே அசிங்கமா இருக்கு.." என்றார் முகம் சுழித்தபடி.
தன் தாயின் மற்றொரு முகத்தை கண்டவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
" அம்மா நீங்களா இது.. என்னோட கோதை அம்மாவா இது.. இது தான் நீங்களா.. உங்களோட குணமே இது தானா.. என்னால நம்பவே முடியலை மா.. உங்களுக்கும் சீதாம்மா அப்பாவுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்லை.. ஆனா நீங்க இவ்வளவு மோசமா இருக்க வேணாமா.. என்னோட வாழ்க்கை என்னோட விருப்பப்படி தான் அமையனும்.. அமைச்சிப்பேன்.." என்றவன் அவரை வித்தியாசமாய் பார்த்தபடி சென்றான்.
அதை நினைத்து பார்த்த கோதைக்கு எங்கே ஆரிணி தன் வீட்டின் மருமகளாகி விடுவாளோ என்ற பயம் தான் மனதை அரித்தது.
ஆனால் வெளியே சொல்லாமல் பதட்டத்துடன் தன் மகனை பார்த்தபடி நின்றிருந்தார்.
அவனோ அவரை அலட்சியமாய் தாண்டி பார்த்திபனிடம்,
"உங்க பொண்ணு ஆரிணியை எனக்கு கல்யாணம் செய்து கொடுப்பீங்களா.. அவளுக்கு விருப்பம் இருந்தா.." என்றான் கேள்வியாய்.
"இதுல என்னப்பா உனக்கு சந்தேகம்.. அவ என் பொண்ணு.. உன்னை போல ஒரு பையன் அவளுக்கு புருஷனா சந்தோஷமா கட்டி வைப்பேன் பா.. என் பொண்ணு எங்கேப்பா.." என்றார் படபடப்பாய்.
" உங்க பொண்ணு என்கிட்ட தான் மாமா இருக்கா.. அவளை நான் கடத்தி தான் வச்சிருக்கேன்.. உங்க அப்பா அவளை கொல்ல ஆள் அனுப்பியிருக்காரு.. அது தான் அவருக்கு தெரியாம கடத்த சொன்னேன்.. அதுமட்டுமில்லாம அவளை தேடி இப்போ நிறைய பேரு கிளம்பியிருக்காங்க.. அவளை கொல்ல.. வாங்க உங்க பொண்ணுகிட்ட அழைச்சிட்டு போறேன்.." என்று பார்த்திபனை அழைத்து செல்லும் போது அவனின் முன்னே வந்து நின்றார் கோதை.
ஆரிணி துவாரகவை பற்றி தெரிந்ததும் சீதாவுக்கு மனமெங்கும் வலித்தது.. ஏதோ இன்றாவது தன் தம்பியின் வாழ்க்கை முழுமை பெற்றதே என்ற மகிழ்ச்சி அவரின் மனதோரம் தோன்றியது.
அவரின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளியாய் கோதையின் கேள்வி அமைந்தது.
கோதையின் கேள்வியில் நிலைகுலைந்து போனது சீதா மட்டுமல்ல ஆத்விக்கும் தான்.
அதேநேரம் இங்கே ஆரிணியை அடைத்து வைத்திருந்த இடத்தில் கையில் கத்தியுடன் ஒரு உருவம் அவளை நெருங்கியது.
சாரி பா கதை விரைவில் முடிக்கிறேன் மக்களே.