“காலைல டிபன் சாப்பிட்டுப் போக சொன்ன அப்படியே ஆபிஸ்க்குக் கிளம்புற? அப்படி என்னடி வேலை உனக்கு? ஒழுங்கா சாப்பிட்டுப் போடி” என்றுக் கத்தினாள் ரத்னா.
“அம்மா, இன்னிக்கு மீட்டிங் இருக்கும்மா. அதான். பால் மட்டும் குடிச்சிட்டுக் கிளம்பறேன். சாப்பாட லஞ்ச் பாக்ஸ்ல போட்டு வைமா. ப்ளீஸ்” என்றாள் நந்தினி.
“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என்றுப் பேசிக்கொண்டே நந்தினியின் லஞ்ச் பாக்ஸில் உணவைப் போட்டு வைத்தாள் ரத்னா.
“என் செல்ல அம்மா. உம்ம்ம்ம்ம்ம்மா” என்று அன்பைப் பொழிந்துவிட்டு அலுவலகம் சென்றாள் நந்தினி.
அலுவலகம் நுழைந்தவுடன்,
“ஹாய் நந்தினி, ஹாப்பி மார்னிங்” என்றுக் குரல் கொடுத்தான் கதிர்.
“ஹாய் கதிர். குட் மார்னிங். என்ன இன்னிக்கு இவ்வளவு ஹாப்பி? எதாவது விசேஷமா?” என்றாள் நந்தினி.
“ஏய் இந்த கிண்டல்தான வேண்டாம்னு சொல்றது! நீ என்னைக்கு என் காதலுக்கு ஓகே சொன்னியோ அன்னையிலிருந்தே எல்லா நாளுமே விசேஷமான நாளுதான்” என்றான் கதிர்.
“சரி, சரி. மீட்டிங் டைமாச்சு. நாம போகலாம் வா. அப்பறம் மேனேஜர் கத்துவாரு” என்று இருவரும் மீட்டிங்குச் சென்றனர்.
மொத்த டீமும் மீட்டிங் ஹாலில் இருந்தது.
“குட் மார்னிங் கைய்ஸ். ரியலி ஹாப்பி டூ இன்ஃபார்ம் ஆல் அவர் டீம் இஸ் கோயிங்க் வெரி குட் லெவல்” என்றார் மேனேஜர்.
“இந்த மாசத்தோட பெஸ்ட் பர்பாமர் அவார்டு கோஸ் டூ கதிர்” என்று அறிவித்தார் மேனேஜர்.
அனைவரின் பாராட்டு மழையிலும் கதிர் நனைந்துக் கொண்டிருந்தான்.
“இதேபோல் அடுத்தடுத்து வருகின்ற மந்த்ஸ்லையும் நல்ல ரிசல்ட் தருவீங்கனு நம்பறேன். சோ கேரியான் அண்டு ஆல் தி பெஸ்ட்” என்றுக் கூறி விடைப்பெற்றார் மேனேஜர்.
வழக்கம்போல தங்களைப் பணிகளை மேற்கொண்டிருந்தனர் அலுவலக ஊழியர்கள்.
“நந்தினி உன் லவ்வர்க்கு அவார்டுல்லாம் கொடுத்து இருக்காங்க. இன்னிக்கு நீ டீரிட் தந்தே ஆகனும்” என்றனர் நந்தினியின் ப்ரண்ட்ஸ்.
“ஓகே” என்று நந்தினியும் நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றாள்.
அனைவரும் அவரவருக்குப் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இரவு நேர விருந்து இனிமையாய் முடிந்த மகிழ்ச்சியில் அனைவரும் அங்கிருந்துக் கிளம்பினர்.
மறுநாள் வழக்கம்போல அவரவர் பணிகளைத் தொடர்ந்தனர்.
கதிர் மட்டும் ஏனோ விடுமுறையில் இருந்தான்.
நந்தினி போன் செய்தும் எடுக்கவில்லை. அவளின் மனமும் ஒருநிலையில் இல்லை!
மிகவும் பதட்டத்துடனே நந்தினி ஒருவாரமாய் இருந்தாள்.
கதிரின் வீடும் பூட்டி இருந்தது.
பசி, தூக்கம் என அனைத்தையும் மறந்து கதிரையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு இவனுக்கு? ஏன் ஒரு போன் கூட பண்ணல? வீடும் பூட்டி இருக்கு? எதாவது பிரச்சனையா? இல்ல உடம்புக்கு எதும் பிரச்சனையா?” என்று தனக்குள்ளே பேசி நொந்துப் போனாள்.
ஒரு மாதம் கடந்தது.....?
மூன்று மாதம் கடந்தது.....?
ஒரு வருடமே கடந்தது........?
காத்திருந்து, காத்திருந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டாள் நந்தினி.
“ஒரு நொடி கூட என்னைய பிரிஞ்சி இருக்க மாட்டானே! ஒருநாளும் என் கிட்ட பேசாம இருக்க மாட்டானே! இப்பப் ஒரு வருஷமாச்சு. என்னத்தான் ஆச்சு இவனுக்கு?” என்ற புலம்பலுடனே ஒவ்வொரு நாளையும் நகர்த்தினாள்.
அவளின் பெற்றோரோ அவளைத் திருமணம் செய்ய சொல்லிக் கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
பதில் எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
ஒருநாள் கதிரிடம் இருந்து போன் வந்தது.
அதுவும் ஒரு வருடம் கழித்து.....
“டேய் கதிரு? என்னாச்சுடா? எங்கடா போனா? இப்ப எங்க இருக்க?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள் நந்தினி.
“நாளைக்கு நம்ம மீட் பண்ணலாம்” என்று ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அந்த போனை வைத்தான் கதிர்.
ஒருவருடம் கழித்து போன் செய்ததால் இன்னமும் குழம்பிப் போனாள் நந்தினி.
சரி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாளை போய் நேரில் பேசிவிட்டு வந்திடலாம் என்று முடிவெடுத்தாள் நந்தினி.
அடுத்த நாள் காலை கதிர் சொன்ன இடத்திற்கு வந்தாள் நந்தினி.
நந்தினிக்கு முன்னாடியே கதிர் அங்குக் காத்திருந்தான்.
ஒருவருடம் கழித்து, ஒருவரை ஒருவர் சந்தித்ததால் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
"ஏன் கதிர் இப்படி பண்ண? என்னாச்சு? ஒருவருஷம், எப்படி என்கூட இத்தனை நாளா பேசாம உன்னால இருக்க முடிஞ்சது? உங்க வீடும் பூட்டியே இருந்தது? என்னதாண்டா ஆச்சு?” என்றுக் கேள்விகளை எழுப்பினாள்.
“என்னைய மன்னிடுச்சு நந்தினி. நான் வெளிநாட்டில் வேலைக் கிடைச்சி ஒரு வருடமா அங்கத்தான் இருந்தேன். என் கையில இருந்த போனும் தொலைஞ்சிப் போச்சு” என்றான் கதிர் பொறுமையாக.
“என்னது வெளிநாடா? அது எப்படி கையில் இருந்த போன் தொலைஞ்சிப் போச்சு. போன் போனா என்ன? என்னுடைய போன் நம்பர்தான் உனக்குத் தெரியுமே. வேற போன் வாங்கி நீ போன் பண்ணிருக்கலாமே” என்றாள் நந்தினி.
“நீ சொல்றதுல்லாம் குழந்தைத் தனமாக இருக்கு கதிர். சரி உங்க அப்பா, அம்மால்லாம் எங்கே? உங்க வீடும் பூட்டியே தான் இருந்தது. அவங்க எங்கப் போனாங்க?” என்றவளிடம் “அவங்களையும் என்னோடவே கூட்டிட்டுப் போயிட்டேன்” என்றான் கதிர்.
“அப்போ நான் தான் ஏமாந்தவளா?” என்றுக் கேட்டாள் நந்தினி.
“இல்ல, உனக்குக் கிடைச்ச மாதிரியே பல வாய்ப்புகள் எனக்கும் கிடைச்சது. அப்போல்லாம் உன்னுடைய முடிவக் கேட்டுத்தான் எந்த செயலும் நான் செய்வேன். நீ சொன்னதால்தான் கிடைச்ச பல வாய்ப்புகளையும் நான் இழந்தேன். அதுவும் கை நிறைய சம்பளத்தோட”
“ஆனா நீ என்னையப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம, உன் சுயநலத்தை மட்டுமே யோசிச்சிட்டு, உன் இஷ்டத்துக்குப் போயிருக்க, அதுவும் ஒருவருஷமா எனக்கு ஒரு போன் கூட பண்ணாம் இருந்திருக்க?” என்றுக் கோவமாய் கத்தினாள் நந்தினி.
“இப்ப எதுக்குக் கத்தற? எனக்கு கிடைச்ச வாய்ப்பப் பயன்படுத்திக்கிட்டேன். நீ பயன்படுத்திகல. அதுக்கு நானா காரணம்? உனக்குப் புத்திசாலித்தனமா பொழைக்கத் தெரியல”
“அது மட்டுமில்லாம, இப்பக் கிடைக்கற சம்பளத்துக்கே நீ இத்தன கண்டிஷன்ஸ் போடுற. இதுல வெளிநாட்டு வேலைக்கெல்லாம் போயிட்டா உன்னைய கையிலையே பிடிக்க முடியாது. அதனால்தான் நான் வேண்டாம்னு சொன்னேன்” என்ற கதிரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள் நந்தினி.
“ஏண்டா, உன்னைய நம்பி, உன் காதலை நம்பி, நீயே என் உலகம்னு இருந்து, நீ சொன்ன பேச்சுக்கெல்லாம் தலையாட்டி, உனக்காகவே வாழ்ந்திட்டு வந்தா, நீ உன் சுயநலத்த மட்டும் நினச்சி, சொல்லாம கொல்லாமா வெளிநாட்டுக்கு போவ, கேட்டா எனக்குப் பொழைக்கத் தெரிலனு சொல்லுவியா?”
“உன்னையும், உன் காதலையும் நம்பி, ஒரு வருஷமா என் வாழ்க்கையும், எனக்கு வந்த பல வாய்ப்புகளையும் தொலச்சிட்டு, ஒரு பைத்தியம் மாதிரி வாழ்ந்திட்டு நான் நிஜமாகவே ஒரு முட்டாள் தாண்டா” என்று தன் ஆத்திரத்தைக் கொட்டினாள் நந்தினி.
“இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இனி நீ யாரோ, நான் யாரோ? நீ வெளிநாட்டு வேலைனாலும் பாத்துக்கோ, எத வேணும்னாலும் பாத்துக்கோ. என் வாழ்க்கைல உன்னைய மட்டும் நான் பாக்கவே கூடாது” என்றுக் கூறிச் சென்று விட்டாள்.
“அவன் என் மீது வைத்திருந்த காதலும், நம்பிக்கையும் பொய்யாக இருக்கலாம். ஆனால், நான் கதிர் மீது வைத்திருந்த காதலும் நம்பிக்கையும் ஒருபோதும் குறைந்ததில்லை”
தன் காதலுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் இதுவென்றும், இனி தன் வாழ்நாளில் கதிரைச் சந்திக்கவே கூடாது என்றும் முடிவெடுத்து, அழுதுக் கொண்டே அங்கிருந்துச் சென்றாள் நந்தினி.
உண்மையான அன்புக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு கண்ணீர் மட்டுமே!