அத்தியாயம் 10
"சொல்லுங்க மாமா! நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? நீங்க, நான், அம்மா, அத்தை ஏன் உங்க அப்பாவும் என் அப்பாவும் கூட ஒன்னாகிடலாம். சரி தான மாமா?" என்ற கேள்வியில் முதலில் அதிர்ந்து நின்றவன் அவள் பேச பேசவே குழம்பி அன்னையையும் அத்தையையும் பார்க்க, அவர்கள் எழுந்து கிட்டத்தட்ட ஓடி தான் வந்தனர் மகிமா போல.
"மகி!" என்ற மாலாவிற்கு கோபத்திற்கு மாறாய் குழப்பமும் கவலையும் நடக்காததை ஏன் பேசுகிறாள் என்ற ஆதங்கமும் தான் முன் நின்றது.
"ம்மா!" என்றவனே அவள் கூறியதை அவர்களிடம் கூறிட முடியாமல் நிற்க,
"அம்மாக்கும் அத்தைக்கும் சம்மதம் தான். வாழவந்தான் மாமாவும் அப்பாவும் என்ன சொல்லுவாங்களோனு பயப்படுறாங்க. அதெல்லாம் சரி பண்ணிக்கலாம். நீங்க சொல்லுங்க மாமா. உங்களுக்கு என்னை கட்டிக்க சம்மதம் தானே?" என மீண்டும் கேட்க,
"ம்மா! இவ என்ன பேசிட்டு இருக்குறா? என்ன ம்மா இது?" என்றான் பேச்சே வராமல்.
"சிவா! அவ ஏதோ புரியாம பேசுறா. நான் அவகிட்ட பேசிக்குறேன். நீ எதுவும் நினைச்சுக்காத!" என்றார் மாலா.
"ம்மா நான் நல்லா யோசிச்சு தான் சொல்றேன். நான் சிவா மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்! எனக்கு டெல்லி எல்லாம் வேண்டாம்." என்ற மகிமாவை சிவா அதிர்ந்து பார்க்க, கைகளைப் பிசைந்தபடி சிவாவைப் பார்த்தார் மாலா.
"ஹேய் லூசு! என்ன பேசுற நீ?" என்றான் சிவா தெளிந்த பின் அவள் பேச்சில் கோபம் வந்து.
அதன்பின் தான் மகிமாவிடம் அதிர்வும் அதிர்ச்சியும். அதுவரையுமே பெரிதாய் நம்பிக்கை இருந்தது அனைவர்க்கும் சம்மதம் என்பதில்.
அன்னையும் அத்தையும் சம்மதித்தாலே போதும் சிவாவுடன் சேர்ந்து எப்படியும் தந்தையையும் மாமாவையும் சம்மதிக்க வைத்துவிடலாம் என நினைத்திருக்க, அவனே இப்படி கோபம் கொள்வான் என நினைக்கவில்லை.
"எதுல விளையாடுறதுன்னு இல்ல?" என்றவன்,
"நீ எதாவது சொன்னியா அத்தை இவகிட்ட?" என்றான் அதே அழுத்தமான முகம் கொண்டு.
"அய்யயோ இல்ல இல்ல சிவா" என்ற மாலாவிற்கு இது எங்கே சென்று முடியுமோ என்ற பதட்டம் வேறு வந்தது சிவாவின் இந்த முகம் கண்டு.
"ப்ச்!" என்று தன்னை சமன்செய்தவன்,
"அம்மு! கல்யாணம் எல்லாம் ரொம்ப பொறுமையா பார்த்து பேசி நடக்க வேண்டியது. சும்மா எதாவது யோசிச்சு குழம்பி ஒரு முடிவுக்கு வர இது ஒன்னும் விளையாட்டு இல்ல" என்று சொல்ல,
"இல்ல மாமா. நான் யோசிச்சு தான்..."
"என்ன யோசிச்ச?" என்று அவள் முடிப்பதற்குள் கோபமாய் கேட்டவனைப் பார்த்து அவள் மீண்டும் அதிர்ந்து விழிக்க,
"குழந்தை மாதிரி பேசாத மகி. இதுக்கு தான் அத்தை உன்னை நினைச்சு பயந்துட்டே இருக்காங்க. யாருகிட்ட என்ன பேசுறதுன்னு தெரியனும். அத்தை அழுவுது பாரு!" என்று சொல்ல மாலாவிற்கு கண்ணீர் கட்டி இருந்தது கண்களில்.
மகனின் கோபத்தில் அப்படியே அதிர்ந்து நின்றிருந்தார் வள்ளி கூட. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் சொன்னதற்கு நேர்மாறாய் அவன் இப்பொழுது நிற்க, அவன் பேசியது எல்லாம் தாமதமாய் தான் காதுகளில் ஒலித்தது.
"அந்த மாப்பிள்ளை ஏன் பிடிக்கல? மாப்பிள்ளை சரி இல்லையா? அப்ப உன் அப்பாகிட்ட ஸ்ட்ரோங்கா பேசு. அவர் பொண்ணு நல்லாருக்கணும்னு தான் நினைப்பார். ஏன் அத்தைக்கும் மாமாக்கும் தெரியாது உனக்கு என்ன பண்ணனும்னு? இப்படி ஒரு இடத்துல இருந்து தப்பிக்க இன்னொரு இடம்னு தான் யோசிச்சிருக்க நீ!"
"சிவா!" என்று வள்ளி மகன் அருகில் வந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டார்.
"பாரு ம்மா! எல்லாமே விளையாட்டாப் போச்சா இவளுக்கு?" என்று சொல்ல, இப்பொழுது முறைப்புடன் அத்தனை கோபமாய் அவனை தான் பார்த்து நின்றாள் மகிமா.
நான்கு நாட்கள் தான் ஆகிறது ஒரு பெண்ணைப் பார்க்க சென்று வந்து. அங்கே நடந்த நிகழ்வில் இருந்தே அவன் இன்னும் முழுதாய் மீளவில்லை.
மற்றவர்களுக்காக தன்னை சாதாரணமாய் காட்டிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறான்.
மாலா நேற்று கூட சிவாவிடம் சொல்லி இருந்தார் அலைபேசியில் "அவளுக்கு அந்த மாப்பிள்ளையை எதுக்கோ பிடிக்கல போல சிவா. என்ன பேசினார்னு தெரியல. வேண்டாம்னு சொல்றா. அவங்க அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்!" என்று.
தன் அத்தை மகளே அந்த பெண்ணைப் போல மீண்டுமாய் அதுவும் தான் பார்க்க வளந்த பெண் இப்படி ஒருவனை வேண்டாம் என்று சொல்லி என்னென்னவோ யோசித்து தன்னிடமே வந்து கேட்கிறாளே என்ற கோபம்.
"அவ சின்ன பொண்ணு டா. அவகிட்ட போய் கோவமா பேசிகிட்டு.. அதுவும் நீ!" என்றார் அன்னை மெதுவாய் மகனிடம்.
"அன்னைக்கு நீங்களும் கூட வந்திங்க இல்ல? எதுக்காக அழுதிங்க? அந்த பொண்ணு வீட்டுல கூப்பிட்டு வச்சு அசிங்கபடுத்திட்டாங்கனு தான? இப்ப இவ என்ன பண்ணிட்டு இருக்கிறா? இவ்வளவு ஏன் யோசிக்கனும்? டெல்லி போக முடியாதுன்னா ஊருக்குள்ள பாருங்கன்னு அவங்க வீட்டுல சொல்ல வேண்டியது தான? இவ இஷ்டத்துக்கு முடிவெடுப்பாளா?" என்றான் அன்னையிடமும்.
"அத்தை! நீ ஏன் அழுற? இவ எப்ப தான் சரியா பேசி இருக்கிறா? இதுக்கெல்லாம் அழுதுகிட்டு!" என மாலாவை அவன் சமாதானம் செய்ய, மகிமா பார்த்தபடி நின்றாள்.
"நான் லூசா?" என்ற மகிமா கேள்வியில் மூவரும் அவளிடம் திரும்ப,
"அப்போ நீயும் என்னை அப்படி தான் நினைக்கிற இல்ல மாமா?" என்று கேட்க, முறைத்தான் சிவா.
'புரிந்து கொள்ளாமல் என்ன பேச்சு இது?' என்ற அர்த்தத்தில் தான் அவன் கூறியது.
"நீ இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ த்தை. நான் அப்புறமா பேசுறேன் உன்கிட்ட!" சிவா சொல்ல,
"நான் போக மாட்டேன்!" என்றாள் மகிமா பிடிவாதமாய்.
அதில் கோபம் கொண்டவன் சுற்றிலும் பார்க்க, மாலை நேரம் என்பதால் ஆட்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர் கோவிலினுள்.
"மகி! நீ வா போலாம்!" மாலா அழைக்க,
"நான் லூசு. பேச தெரியாது. இல்ல?" என்று மகிமா மீண்டும் சொல்ல,
"டேய்! என்ன அம்மு! அதெல்லாம் சிவா ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டான். நீ வீட்டுக்கு போ. மெதுவா பேசுவோம்!" என்றார் வள்ளியும்.
"த்த! அந்த டெல்லில இருந்து வந்தவனும் அப்படி தான் சொன்னான்!" என்று சொல்லவும் சிவாவும் புரியாமல் பார்க்க,
"என்னை பத்தி வெளில விசாரிச்சானாம். எல்லாம் ஓகே தான்.. ஆனா எனக்குன்னு டெல்லில ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. இந்த மாதிரி பேசுறதை விட்டுட்டு ஆறு மாசம் வீட்டுல இரு. மெச்சுரிட்டியை வளத்துக்கோ. ஆபீஸ் எல்லாம் போக வேண்டாம்னு சொல்றான்" என்று சொல்லவும் அனைவருமே பேச்சச்சு தடுமாறி நின்றுவிட்டனர்.
"எனக்கு எங்க எப்படி பேசணும்னு தெரியாதா? அப்படி தான் சொல்லி இருக்காங்க அவன்கிட்ட என்னைபத்தி! இவ்வளவு நாளும் ஏன் அப்ப நீங்க யாரும் என்னை கண்டிக்கல?"
"அம்மு!" என்று வள்ளி வர,
"போங்க த்தை! அம்மா சொன்ன மாதிரி நீங்க எனக்கு செல்லம் கொடுத்துட்டிங்க. அதான் ரொம்ப உரிமை எடுத்துட்டேன். நீங்க சொல்லி என்னை திருத்தி இருக்கலாம்ல ம்மா? அப்படி என்ன ம்மா எனக்கு தெரியாது?"
"மகி!" என்று அவளருகில் சிவா வர,
"வேண்டாம் மாமா! அதான் சொல்லிட்டீங்க இல்ல நான் பேசுறது தப்புன்னு. நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். அப்போ அவன் சொன்னதும் சரி தான். நான் வாயை கண்ட்ரோல் பண்ணனும். இனிமேல் பேச மாட்டேன். உங்ககிட்ட பேசினதுக்கு சாரி!" என்றவள் விறுவிறுவென்று கோவில் வாசலை நோக்கி நடக்க துவங்கிவிட்டாள்.
அன்று பெண் பார்க்க வந்து மாப்பிள்ளை தனியே பேசிவிட்டு சென்றதில் இருந்து இதோ இந்த கோவிலுக்குள் நுழையும் வரை பிரம்மை பிடித்ததை போல தான் இருந்தாள் மகிமா.
இரு நாட்களாக அலுவலகம் கூட செல்லவில்லை. மாப்பிள்ளை என்றவன் பேசி சென்றது அவள் மனதினை அவ்வளவு பாதித்திருந்தது.
அவன் கூறியது போல தான் இந்த இரண்டு நாட்களும் வீட்டிற்குள் இருந்தாள். ஆனால் அவள் அவளையே இழந்திருந்தாள் இந்த இரு நாளில்.
இன்னொன்றும் தெளிவாய் கூறினான். அவன் வேலை எத்தனை முக்கியம் என்பதோடு அவள் எப்படி எல்லாம் இனி இருக்க வேண்டும் என்பது பற்றியும்.
"சும்மா இப்பவே பழகிக்கோ மகிமா. டெல்லில குவார்ட்டார்ஸ் இருக்கு. அங்க இப்படி தான் இருக்கனும்"
நீண்ட சிந்தனைக்கு பின் இப்படி இருக்க முடியாது அது தனக்கு வராது என்ற முடிவிற்கு வந்து தான் அந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்றதே மகிமா.அத்தனை உற்சாகத்தோடு ஓரிடத்தில் நில்லாமல் பார்க்கும் இடத்தில் எல்லாம் இருப்பவள்.
இவன் தன்னை அடக்கி வைக்கப் பார்க்கிறானா என்பதை விட நான் நானாக இருக்க கூடாது என்பவனோடு எப்படி திருமணம் என்று தான் யோசித்தாள்.
அந்த மாப்பிள்ளையானவன் பேசியதை வீட்டில் கூறலாம் என்று நினைத்தாள் தான். ஆனால் அவள் கூறியது நிஜம் தானே? அவன் பதவி, நிலை என்று யாரும் அவனுக்காக மட்டுமே தன்னிடம் தழைந்து போக கூறுவார்கள். தன் விருப்பம் என்று யாரும் சொல்ல போவதில்லை என்று தான் அதிகமாய் சிந்தித்தாள் இந்த திருமண விஷயத்தில்.
திருமணமே வேண்டாம் என்று அவள் சொன்னது இல்லை. இன்னும் சில வருடங்களுக்கு வேண்டாம் என்ற மகிமாவின் பேச்சை யாரும் காது கொடுக்கவில்லை.
சரி நடப்பது நடக்கட்டும் என்ற முடிவிற்கு வந்தால் இப்படி அவசரகதியாய் ஒருவனை அழைத்து வந்து அவன் விருப்பதிற்கு ஆடும் பொம்மையாய் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அதன்பின் தான் சிவா பெண் பார்க்க சென்றதை பற்றி அன்னை கூற கேட்டவளுக்கு இப்படி ஒரு சிந்தனை வந்ததே!
சிவாவை தெரியுமே அவளுக்கு. அவனுக்கும் அவளை தெரியுமே! முகம் வாடாத புன்னகையோடு இருப்பவன் தன்னையும் இதுவரை அலுவலகத்தில் மட்டுமல்லாமல் எங்கேயும் யாரிடமும் விட்டுக் கொடுத்ததில்லை. கண்டிக்க வேண்டிய இடத்தில் கோபம் இல்லாமல் கண்டிக்க தவறியதும் இல்லை.
அவளுக்கு அவனை பிடிக்கும். இந்த பிடித்தம் போதும் திருமணத்திற்கு என்ற அளவில் தான் சிந்தித்திருந்தாள்.
இப்பொழுது அவனே நீ செய்த அனைத்தும் தவறு. உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் பொழுது அதை எதிர்பாராமல் இருந்ததனாலோ என்னவோ அதிகமாய் வலிக்க, தனக்கு தோன்றியதை கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
"இதெல்லாம் அவ சொல்லவே இல்லை சிவா. நான் அவளை பாக்குறேன். அண்ணி! சிவாவைப் பார்த்துக்கோங்க!" என்று சொல்லி சென்றுவிட்டார் மாலாவும்.
சட்டென அப்பொழுது போல இப்பொழுதும் பேசவோ நினைக்காவோ முடியாமல் சிவா நிற்க,
"என்ன சிவா நீ? அந்த பொண்ணு மேல இருந்த கோவத்தை நம்ம மகிகிட்ட நீ காட்டி இருக்க!" என்று அன்னை சொல்லவும் அதிர்ந்தவன் சிந்தித்த போது தான் அவனுக்கே உரைத்தது.
அது தான் உண்மை. தனக்குள் அழுத்தி வைக்கப்படிருந்த உணர்வு. அதே போலோரு நிலை என்றதும் தன்னையும் மீறி பேசவைத்திருந்தது.
தொடரும்..