அத்தியாயம் 11
"உங்களுக்கெல்லாம் கூறுன்னு ஒண்ணு இருக்கா இல்லையா? ஏன் டி! அவ தான் புரியாம பேசுதான்னா அவகிட்ட எடுத்து சொல்லுதத விட்டுட்டு என்கிட்ட வந்துட்ட கல்யாணத்தை நிறுத்துங்கன்னு!" என்று வீடு எதிரொலிக்க கத்த ஆரம்பித்தார் வினோதன்.
கோவிலில் இருந்து வந்ததும் மாலா மகளை தேட, அவளறையில் பேசாமல் சென்று படுத்திருந்தாள் மகிமா.
வினோதன் மாலை ஆறு மணிக்கு நடைபயிற்சி சென்றவர் ஏழு மணி அளவில் திரும்பி வர, அவருக்காகவே காத்திருந்த மாலாவும் வந்ததும் அவருக்கு தண்ணீரை கொடுத்துவிட்டு பேச தயாராகி இருந்தார்.
"எங்க அவளை? இன்னைக்கும் ஆபீஸ் போகலை! கோவிலுக்கு போய்ட்டு எப்போ வந்திங்க?" என்று வினோதன் ஆரம்பிக்க,
"அவளுக்கு இந்த கல்யாணம் வேண்டாமாம். அந்த பையன் என்னவோ சொல்லிருக்கும் போல. நீங்க கொஞ்சம் விசாரிச்சா...." என்று சொல்லும் முன்பே வசைபாட ஆரம்பித்து விட்டார் வினோதன்.
"அவ்வளவு தூரமா இருந்து வேலை பாக்குறவனுக்கு தான் அவன் கஷ்டம் தெரியும். அங்க இருக்குற நிலைமைக்கு பார்த்து சூதனமா இருக்கனும்னு சொல்லிருக்கும். அதுக்குன்னு நிறுத்த சொல்லுவியளோ அம்மாவும் பொண்ணும். அவளுக்கு தான் ஒன்னும் தெரியல. உனக்கு என்ன டி?"
"சும்மா சும்மா கத்தாதீங்க" முதல் முறையாய் கணவனை எதிர்த்து பேசுவது ஒருபுறம். அவரையும் மிஞ்சிய மாலாவின் சத்தம் ஒருபுறம்.
தாய் தந்தை பேசுவது காதில் கேட்டாலும் அசையாமல் படுத்திருந்த மகிமா அன்னையின் அதீத சத்தத்தில் எழுந்து வெளியே வந்தாள்.
"அவன் கஷ்டம் என்னனு கூடவே இருந்து பார்த்த மாதிரி பேச தெரியுது இல்ல? அவங்க வந்துட்டு போய் ரெண்டு நாளா வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குறா. வீட்டுல இவ சத்தம் இல்லாம இருந்திருக்கா இத்தனை நாளும்? ஆனா இப்ப இல்ல.. என்ன ஏதுன்னு கேட்டிங்களா?" என்ற மாலா,
"வேலை பாக்குறான்னா பாத்துட்டு போவட்டும். சம்பளம் அதிகமா வாங்குறானா வாங்கட்டும். அவனுக்கு பிடிச்சிருக்குன்னு குடும்பத்தை கூட்டிட்டு வந்தான் சேரி! நீங்க கேட்டீங்களா உங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னு? கல்யாணம் வேண்டாம்னு சொன்னவ தான் ஆனா மாப்பிள்ளை வாராவனதும் உங்க மரியாதையை காப்பாத்த வந்து நின்னா இல்ல? நமக்காக கல்யாணம் பண்ணிக்குற முடிவுக்கு வந்தவ தான். ஆனா இப்ப அந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லுதா.. காரணம் என்னனு இப்பவுமா உங்களுக்கு கேட்க தோணல?" என்று கேட்க,
"இப்போ என்ன? நான் மாப்பிள்ளை பார்த்தது தப்புன்னு சொல்லுதியா?"
"உங்க பிள்ளைக்கு நீங்க தான் பாக்கணும். அதுல எந்த தப்பும் இல்ல. ஆனா அவ வேண்டாம்னு சொன்னா வேற பாக்க வேண்டியது தான? உக்காந்து அவகிட்ட என்னனு கேட்க வேண்டியது தான?"
"நானும் அவள புரிஞ்சிக்கல தான். இன்னைக்கு தான் அம்மாவா நான் என்ன பண்ணிட்டேன்னு தோணுது. பிள்ளையை கட்டி குடுத்த அப்புறமா அப்பாவா நான் என்ன செஞ்சி வச்சுருக்கேன்னு நீங்க நினைக்குற நிலைமை வந்துர கூடாதுன்னு பேசுதேன்" என்று சொல்ல வினோதன் மகளைப் பார்த்தார்.
தனக்கு வேண்டாம் என்றாலோ பிடிக்கவில்லை என்றாலோ நேரடியாய் ஒருமுறையாவது தந்தையிடம் சொல்லி விடுவாள். அவர் மறுக்க தான் செய்வார் என தெரிந்தாலுமே முயற்சி செய்ய தவறுவதில்லை அவள்.
அன்னையும் தந்தையும் இவ்வளவு வாக்குவாதம் செய்யும் நேரம் அமைதியாய அவள் பார்த்து நிற்பதும் புதிது தான்.
"காசு பணம் உள்ளவனா இருந்தா மட்டும் போதுமா? இவ்வளவு பேசுதேன் கிட்ட நிக்கவகிட்ட என்னனு கேட்க தோணுதா உங்களுக்கு? அப்படியே நிக்கிங்க? நீ அங்க சொன்னத தான் இங்க சொல்லேன் டி!" என்ற மாலா,
"இது தான் இங்க தான்னு விதி இருந்தா தான் சேர முடியும். இவ்வளவு நடந்தும் அந்த டெல்லிக்காரன் தான் மாப்பிள்ளைனு இவ தலையில எழுதி இருந்தா யார் என்ன பண்ணிட முடியும்? கடமையை முடிக்கணும்னு கடமைக்கு செஞ்சு வச்சுட்டு நிக்காதீங்க! அவ்வளவு தான் நான் சொல்லுவேன்!" என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் மாலா.
அடுத்த நாள் காலை மாடியில் தனியாய் நின்றிருந்தாள் மகிமா. இப்படி எல்லாம் அவள் இருந்ததே இல்லை. ஆனால் இந்த நான்கே நாட்களில் அதிகமாய் தனக்குள் திணித்துக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு அவளை அழுத்தியது.
எப்பொழுதும் எதாவது ஒரு விஷயத்தில் தன்னை புகுத்தி மற்றவர்களையும் அதில் சேர்த்து என்று தான் அவள் இருந்து பழக்கம்.
இந்த மாதிரியான தனிமை எல்லாம் அவள் தேடியதே இல்லை. அதுவும் நேற்று மாலை அன்னை தந்தை இருவருக்கும் தன்னால் ஆன வாக்குவாதம்.
அன்னை புரிந்து கொண்டது ஒரு விதத்தில் நிம்மதியை தந்தாலும் தந்தை அதன்பிறகு இன்னும் தன்னிடம் எதுவும் கேட்டு கொள்ளாதது மனதை பாதிக்கதான் செய்தது.
இது தான் வாழ்க்கையா என்றளவுக்கு நினைக்க ஆரம்பித்திருந்தாள் மகிமா. சிவாவைப் பற்றிய எண்ணமோ கோபமோ இப்பொழுது இல்லை.
தான் தான் அதிகமாய் சிந்தித்து இதில் அனைவரையும் இழுத்து விட்டுவிட்டோமோ என்று தான் நினைக்க தோன்றியது.
அந்த மாப்பிள்ளையுடன் திருமணம் நிற்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த சமயம் சிவாவின் பெண் பார்க்கும் படலம் தோல்வியுற்ற செய்தி காதில் விழ, தன்னைப் போல பல சிந்தனைகள் அவளிடம்.
திருமணம் வேண்டாம் என்றால் அப்படியே தன்னை யாரும் விட்டுவிட போவதில்லை என தெரிந்த பின் ஏன் வேறு யாரையோ திருமணம் செய்து எங்கோ கண் காணாத மூலைக்கு செல்ல வேண்டும். சிவா மாமாவை திருமணம் செய்தால் என்ன என்று தான் சிந்திக்க ஆரம்பித்து இவ்வளவும் நடந்திருந்தது.
சிவாவுடன் திருமணம் என்றால் சாதக பாதகங்கள் என யோசித்த போது தந்தை மாமா இருவரின் எதிர்ப்பு தாண்டி பெரிதாய் பாதகம் எதுவும் இல்லை என்றே தோன்றியது.
சாதகம் என்றால் முதலில் தோன்றியது சிவா தனக்கு தரும் சுதந்திரம். நிச்சயம் அதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்ததாய் இரு குடும்பங்களும் இணையும்.
இந்த இரண்டுமே அவ்வளவு பெரிதாக தெரிய வேறு எதுவுமே அவள் சிந்திக்கவில்லை. அதன்பின் அவள் எண்ணம் எல்லாம் இதை எப்படி கூறுவது என்று இருந்தது.
சிவாவின் மறுப்புக்கு முன்பு வரை எல்லாம் தன் கைக்குள் என்பதை போல அத்தனை வேகமாய் அன்னையிடமும் அத்தையிடமும் பேசியவளுக்கு அவன் பேச்சிற்கு பின் மொத்தமாய் துவண்டு போனாள்.
அதுவும் அவனே தன்னை தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாததை போல பேசி வைக்க, அடுத்து எல்லாம் கைவிட்டு சென்ற தோற்றம்.
"அம்மு!" என்று மாடிப்படியின் மேல் வந்து அழைத்திருந்தார் மாலா.
நினைவுகளில் இருந்து திரும்பி அன்னையைப் பார்க்க,
"இன்னைக்கு சனிக்கிழமை தான? ஆபீஸ் போகலையா நீ?" என்று அருகில் வந்தார்.
அவள் அமைதியாய் இருக்க அருகில் வந்துவிட்டவர்,
"இப்படி இருக்காத அம்மு! வீடு வீடா இல்ல உன் சத்தம் கேட்காம!" என்ற மாலாவிற்கும் குற்ற உணர்வே!
"அதெல்லாம் ஒண்ணுமில்ல ம்மா. சும்மா ஏதேதோ யோசனை!" என்றாள் மகிமா.
"இந்த கல்யாணம் நடக்காது. அதை நான் பார்த்துக்குறேன். நீ எப்பவும் போலயே இரு!" என்று சொல்ல, மெல்லிய புன்னகை கொடுத்தாள்.
"நீ ஆபிஸ் போய் சகஜமா இரு அம்மு! நான் தான் சொல்றேன்ல?" என மீண்டும் அன்னை கூற,
"ம்மா! இப்படி தான் இருக்குமா ம்மா இந்த லைஃப்?" என்று கேட்க, புரியாமல் பார்த்தார் மாலா.
"அதான் ம்மா! கல்யாணம் பண்ணினா ஹஸ்பண்ட்க்காகன்னு மாறி தான் ஆகணுமா? அது நார்மல் தானா? நான் தான் ரொம்ப யோசிச்சு குழப்பி விட்டுட்டேனோ?" என்று கேட்க, ஆமாம் என்றும் கூற முடியவில்லை இல்லை என்றும் கூற முடியவில்லை மாலாவிற்கு.
"எனக்கு சட்டுன்னு எப்பவும் போல இருக்க முடியல. கல்யாணப் பேச்சு எடுத்த உடனே இப்படி இருக்கேன். அப்போ இது தான் நார்மலா?"
"அம்மு! அப்படிலாம் இல்ல. நான் தான் எல்லாத்துக்கும் காரணம். நான் கவனிச்சிருக்கணும் உன்னை!" என்று தவித்த மாலா,
"ப்ச்! சிவா மேல் இருந்த பாசத்துல அன்னைக்கு அவனை எப்படி ஒரு பொண்ணு இப்படி கூப்பிட்டு வச்சு மரியாதை இல்லாம நடந்துக்கலாம்னு அவ்வளவு கோவப்பட்டேன். கொஞ்சமாவது உன்னையும் நான் அன்னைக்கே கவனிச்சு கேட்ருக்கனும்"
"அதெல்லாம் விடுங்க ம்மா! மாமாகிட்ட வேற தேவை இல்லாம பேசி வச்சுட்டேன்!" என்றாள் கவலையோடு.
மாலாவிற்கு அதில் பதில் கூற முடியவில்லை. அவர் பார்த்த பார்வையில்,
"ம்மா! மாமாவை பிடிக்கும் தான். ஆனா லவ்லாம் இல்ல. நான் ஒண்ணு நினச்சேன். அது வேற மாதிரி இருக்கும் போல. மாமாகிட்ட சாரி கேட்டுடுறேன்..." என்று மகள் புன்னகைக்க, தன் எண்ணத்தை தனக்குள் வைத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது மாலாவிற்கு.
"சரி போய் ஆபீஸ் கிளம்பு!"
"வேண்டாம் ம்மா! இன்னைக்கு ஒரு நாள்! ப்ளீஸ்!" என்றவள் குழந்தையாய் தெரிய, சிரித்தபடி கீழே அழைத்து சென்றார்.
அலுவலகத்தில் தன் கணினி முன் அமர்ந்திருந்த சிவா அவ்வபோது தலை சாய்த்து தனக்கு வலப்புறம் பார்த்துக் கொண்டிருந்தான்.
காலை ஏழு மணி வேலை நேரம் அவனுக்கு. மணி பத்தாகிவிட்டது. இன்னமும் மகிமா வந்திருக்கவில்லை.
பாதி கவனம் வேலையில் செலுத்தவே பெரும் பாடாய் போனது சிவாவிற்கு. அவளின் வேலை நேரமும் சரியாய் தெரியவில்லை இந்த வாரத்திற்கு.
"எங்க இந்த பொண்ணை காணும்? ரெண்டு மூணு நாளா வரல!" என்று கார்த்திக் சொல்லி தன் இடத்தில் அமர,
"யாரை தேடுற?" என்றான் தன் கணினியைப் பார்த்தபடி சிவா.
"வேற யாரு? உன் மாமன் மகளை தான்!" என்றதும் கார்த்திக் பக்கம் சிவா திரும்ப,
"ஷிப்ட்டை மாத்திட்டாங்களா அவளுக்கு? ஒரு ஆயிரம் ரூபா அவளுக்கு குடுக்கணும். இன்னைக்கு கொடுத்துட்டா நான் தப்பிச்சுட்டேன்!" என்றான் கார்த்திக்.
"ஓஹ்!" என்ற சிவா மீண்டும் திரும்பிக் கொண்டான்.
"ஓஹ் வா? பகல் கொள்ளையடிக்குறா டா அவ. கைமாத்தா போன வாரம் தான் வாங்குனேன். அன்னைக்கு நீ லீவ்ல இருந்தப்ப வட்டினு அம்பது ரூபாயை ஆட்டையை போட்டுட்டா. இன்னும் நாளு நாள் போச்சுன்னா ஆயிரத்துக்கு ஆயிரம்னு வட்டி போட்டாலும் போடுவா" என்று சொல்ல, சிறு மென்னகை சிவாவிற்கு.
அதே புன்னகையுடன் மீண்டுமாய் அவள் எண்ணிற்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை.
நேற்று கோவிலில் இருந்து வந்தது முதல் அவ்வபோது அழைத்துப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். பேச வேண்டும் என நினைத்திருந்தால் உடனே மாலா எண்ணிற்கு அழைத்து பேசி இருக்கலாம் தான்.
"நாளைக்கு சண்டே! ஒரு நாள் நிம்மதியா இருக்கலாம் டா!" கார்த்திக் புலம்பல் காதில் விழ, மீண்டுமாய் சிவாவின் பார்வை மகிமா இடத்திற்கு சென்றது.
'இனி இப்படி கோவமா பேசுறதா இருந்தா நீ அம்முகிட்ட பேசவே வேண்டாம். நான் அவகிட்ட சொல்லிக்குறேன்!' அன்னை காலையில் கண்டிப்புடன் கூறியது நியாபகம் வந்தது சிவாவிற்கு.
தொடரும்..