• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 23

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 23

"ஹலோ!" மீண்டும் குரல் மெல்லிதாய் வந்தது ஆராத்யாவிற்கு.

"ஒரு பிரச்சனைனா ஃபேஸ் பண்ணனும்னே தோணாதுல்ல உனக்கு?" என்ற ரகுவின் குரலில்,

"ராம் சார்!" என்றவள் அதிர்ந்த குரல் அரைகுறையாய் அவனையும் எட்டியது.

"அந்த நாய்கிட்ட இருந்து தப்பிக்க இங்க வந்த, இப்ப என்கிட்ட இருந்து ஓடி ஒழிஞ்சுக்க வேற இடம் தேடுற.. அவனும் நானும் ஒன்னா போய்ட்டோம் இல்ல? என்னை அவ்ளோ சீப்பா நினைச்சுட்ட இல்ல?" என்று கேட்ட ரகுவிற்கு,

"இல்ல சார் இல்லவே இல்ல.." என்ற கலங்கிய குரல் ரகுவிற்கு கேட்டாலும் தர்ஷினி கூறியது இன்னமும் மறக்காமல் வலியை கொடுத்தது.

"தர்ஷி என்ன பண்ணினா உன்னை? உன்னை உனக்காக புடிச்சு தான உங்கிட்ட பேசினா?.. ஒரே நாள்ல அவளை தூக்கி எரிஞ்சுட்ட.. எப்படி முடிஞ்சது உனக்கு? என் அக்காவா உன்கிட்ட அவ வந்திருந்தா நானே தடுத்திருப்பேன்.. நீ புரிஞ்சிக்கல இல்ல?"

"அப்படிலாம் இல்ல சார்.." ஆராத்யா அழுகையில் மனம் கரைய, தன்னை இத்தனை கீழாய் நினைத்துவிட்டாளே என்ற எண்ணமும் சேர்ந்து பேச வைத்தது ரகுவை.

"என்ன பண்ணிட்டேன் நான்? எனக்கு புடிச்சிருந்தது சொன்னேன்.. அது தப்பா? இதை சொல்ல நான் எத்தனை வருஷம் வெயிட் பண்ணேன்னு தெரியுமா டி உனக்கு?" என்று குரலை இன்னும் உயர்த்தி ரகு கேட்கவும்,

"ரகு!" என்று அழைத்து தர்ஷினி வரவும் சரியாய் இருந்தது.

"என்ன டா பண்ணிட்டு இருக்க?" என்றவள் பேச்சை கேட்டாலும்,

"என்ன உனக்கு? போகணும்.. தூரமா போகணும்.. அவ்வளவு தானே? போ.. போய்டு... ஆனா இனி என் கண்ல பட்ட.." பல்லைக் கடித்து ரகு பேச பேசவே ஆராத்யா தான் என உறுதி செய்த தர்ஷினி,

"டேய் என்ன உளறுற நீ? போனை குடு!" என பறிக்க முயல,

"க்கா! நீ என்ன பேச போற? உன்கிட்ட பேசுற அளவுக்கு எல்லாம் அவங்க ஒர்த் இல்ல.." என்று கூற, அது அங்கே ஆராத்யாவிற்கும் கேட்டது.

"ப்ச் ரகு!" என்று கண்டிப்பு மட்டும் கலந்த குரலில் அழைத்து ஆராத்யா அழைப்பில் இருப்பதை தர்ஷினி கண்ணால் காட்ட,

"தர்ஷ்! வீட்டுல இருந்துட்டே நீ போனப்போ இல்லைனு சொல்ல சொன்னவங்க இப்ப நான் பேசினது கேட்டா வருத்தப்பட போறாங்க?" என்றான் அத்தனை கோபத்தையும் சேர்த்து.

"லூசா டா நீ? அவ என்ன மாதிரி மைண்ட் செட்ல இருக்கானு தெரியாம நீ வேற! குடு முதல்ல போனை!" என்று கேட்க, கொடுக்கவே இல்லை ரகு.

"நம்மள வேண்டாம்னு சொன்னவங்க நமக்கும் வேண்டாம்.. அப்படி ஒன்னும் தேவை இல்ல.." ரகு சொல்ல, இவர்கள் பேச்சு தெளிவாய் கேட்டு மனதோடு ரத்தக் கண்ணீரை வடிய வைக்க, கண்களில் வழியும் நீரை துடைக்கவும் தோன்றாமல் அமர்ந்திருந்தாள் ஆராத்யா.

"சரி! அம்மா ஒரு பொண்ணு பார்த்து வச்சுருக்காங்க.. நாளைக்கே நிச்சயதார்த்தம்.. சரினு சொன்னா மட்டும் அடுத்த வார்த்தை போன்ல பேசு!" தர்ஷினி ரகுவின் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் விழித்தவள், பின் ஒரு முடிவுடன் கூற, அந்த சொல்லில் சட்டென அமைதியாகிவிட்டான் ரகு.

"என்ன சொன்ன? தேவை இல்லையா? ஆரா உனக்கு தேவை இல்லையா? இதுக்காக தான் ரெண்டு வருஷமா தவம் இருந்தியா? ஈசியா தூக்கி போடுற? ஆராக்கு உன்னை என்னனு தெரியும்? அவ ஒர்க் பண்ற கம்பெனி எம்டி! அவ உன்னை வேண்டாம்னு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்.. உனக்கு என்ன டா? ரெண்டு வருஷமா பேசாம இப்ப சேர்த்து வச்சு பேசுறியா? அவளுக்கு உன்னை புரிய வைக்க தான் நீ டைம் எடுத்துக்குறனு நான் நினச்சேன்.. ஆனா நீ உன் கோபத்தாலேயே எல்லாத்தையும் முடிச்சுக்க பாக்குற!" தர்ஷினி கோபமாய் பேச,

"அவ ஃபாரின் ப்ராஜெக்ட்க்கு போக போறாளாம் க்கா.. போக சொல்லவா? என் மூஞ்சில முழிக்க கூடாதுன்னு தான் போறா! என் அக்காவா போய்ட்டியே அதான் உன்னையும் அவாய்ட் பண்ணி அனுப்பி இருக்கா.. என்ன செய்யணும் நான்?" என்றான் ரகு தர்ஷினி முன் நின்று.

"ரகு! சைல்டிஷா பேசுற.. ஏன் ஃபாரின் போனா என்ன? அவ ஒர்க் அவளுக்கு முக்கியம் இல்லையா? நீ காதலிக்குறது உண்மைனா அது உன்னை தேடி வர தான் செய்யும்.."

"சினிமா டயலாக் எல்லாம் பேசாத! கடுப்பாகுது!" என்ற ரகு மொபைலை பார்க்க, இன்னும் ஆரா இணைப்பில் தான் இருந்தாள்.

"அதான் அப்ரூவ் பண்ணிட்டேனே! பின்ன என்ன? போ! எங்க வேணா போ!" என்று அலைபேசியில் கூறியவன் மொபைலை தூக்கி கட்டிலில் எறிய,

"தர்ஷ்...." என்று அழுத குரலோடு தர்ஷினியை கட்டி அணைத்திருந்தாள் ஆராத்யா.

"ஆரா!" என்ற தர்ஷினியோடு ரகுவுமே ஒரு நொடி தடுமாறினர் அந்த கணம்.

ரகுவின் அறையில் தான் இவ்வளவும் நடந்திருக்க, சுத்தமாய் ஆராத்யாவை எதிர்பார்க்கவில்லை இங்கே இருவருமே!.

"சாரி தர்ஷ்! ஐம் ரியால்லி சாரி தர்ஷ்!" என்று தர்ஷினி மேலே சாய்ந்து ஆராத்யா அழ,

"அச்சச்சோ பாப்பா பாவம்!" என்று கல்பனா சொல்லவும் தான் வேகமாய் தர்ஷினியிடம் இருந்து பிரிந்தாள் கல்பனா.

அழுகையோடு மொபைலை காதில் வைத்தபடி வந்த ஆராத்யாவை முதலில் பார்த்த கல்பனா என்னவோ என்று பதறி அவள் அருகே வர, "தர்ஷ் எங்க?" என்றாள் அழுகையோடு.

தர்ஷினி அறையை புரியாமலேயே கல்பனா பார்க்க, அவளுக்கு முன் ஆராத்யா அந்த அறைக்கு செல்ல, கல்பனாவும் சென்றாள் பின்னோடு.

அங்கே இல்லை என்றதும் "ராம் சார்.." என்ற குரல் கூட காற்றாய் ஆராத்யாவிடம் வர, புரிந்த கல்பனா,

"வா!" என்று கூறி ரகு அறைக்கு வந்தபோது அங்கே தான் இருவரும் இருக்க, அந்த நேரம் தான் ரகு போனில் கோபமாய் பேசி தூக்கி எறிந்தது.

"சாரி தர்ஷ்! பாப்பாக்கு வலிச்சுட்டா?" என்றாள் ஆராத்யா பாப்பாவாய்.

"இல்லையே! பாப்பாக்கு ஆரா தொட்டதும் சந்தோஷமாம்!" என்ற தர்ஷினி ஆராத்யா கைகளை எடுத்து தன் வயிற்றில் வைக்க, குழந்தையின் அசைவு நன்றாய் உணர முடிந்தது.

"ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல? சாரி! என்ன பண்ணனு தெரியாம.. எனக்கு எதுவுமே தெரில.. சாரி தர்ஷ்!" ஆராத்யா மீண்டும் கண்ணீரோடு மன்னிப்பு கேட்க,

"டேப் ரெகார்டர் ஒன்னு என் ரூம்ல இருக்கு நான் வேணா எடுத்துட்டு வரவா? சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கஷ்டப்பட வேண்டாம்ல?" என்றாள் கல்பனா.

"உங்களுக்கு தெரியுமா? நான் இவங்களை ஹர்ட் பண்ணிட்டேன்.. என்னை தேடி வீட்டுக்கு வந்தவங்ககிட்ட நான் இல்லைனு சொல்லி அனுப்பி விட்டுட்டேன்.. நான் தப்பு தான? எனக்கு யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னே தெரியல.." கல்பனாவிடம் ஆராத்யா சொல்ல,

"பார்டா! குழந்தை கதை சொல்லுது!" என சிரித்தபடி தர்ஷினி பார்க்க,

"கதையா! நான் கூட உண்மையோன்னு நினச்சுட்டேன்!" என்றாள் கல்பனா கிண்டலாய்.

"இல்ல நிஜம் தான்.." ஆராத்யா சொல்ல, தர்ஷினியும் கல்பனாவும் நன்றாய் சிரித்தனர் ஆராத்யா வெகுளித்தனத்தில்.

"போதும் ஆரா! எவ்ளோ அழுகை? மூணு நாளா ஒரே அழுகாச்சி தான் உனக்கு.. கொஞ்சம் ரெஸ்ட் குடு அந்த கண்ணுக்கு.." என்று ஆராத்யா கண்களை தர்ஷினி துடைத்துவிட, பொத்தென்ற சத்தத்தில் அனைவரும் திரும்ப, ரகு தான் அங்கே நடப்பதை பார்த்து இன்னும் கடுப்பானவன் கட்டிலில் கோபமாய் அமர்ந்திருந்தான்.

"அடடே நார்! நீங்க எப்ப வீட்டுக்கு வந்திங்க? என்ன நடக்குது இங்க? ஏன் என்னை மட்டும் டீல்ல விட்டிங்க?" கல்பனா சாதாரணம் போல கேட்க,

"அவர் கோபமா இருக்காராம்! வாங்க நாம ஹாலுக்கு போவோம்!" என்று தர்ஷினி அழைத்து செல்ல, திரும்பி திரும்பி ரகுவைப் பார்த்தபடி சென்றாள் ஆராத்யா.

"அம்மா எங்க அண்ணி?" தர்ஷினி சோபாவில் தானும் அமர்ந்து ஆராத்யாவையும் அமர வைத்து கேட்கவும்,

"அத்தை நம்ம சதாசிவம் தாத்தாவுக்கு உடம்பு சரி இல்லைனு பார்த்துட்டு வர்றதா சொல்லிட்டு போயிருக்காங்க தர்ஷி.. நீங்க பேசிட்டு இருங்க நான் டீ போட்டு கொண்டு வர்றேன்!" என்ற கல்பனாவிடம் ஆராத்யா மறுக்க,

"கொஞ்சம் பிரெஷ் ஆகலாம்.. நீங்க கொண்டு வாங்க அண்ணி!" என்றாள் தர்ஷினி.

"அய்யோ! உங்களுக்கும் என்னால கஷ்டம்.. நான் வேணா டீ போடவா?" என கல்பனாவிடம் ஆராத்யா கேட்க,

"அதான் இந்த வீட்டுக்கு டீ போட வர உனக்கு இஷ்டம் இல்லைனு சொல்லிட்டியே ஆரா!" என்ற தர்ஷினி பேச்சில் மீண்டும் ஆராத்யா முகம் அதிர்ந்து கசங்க, அதில் ஓரளவு புரிந்த கல்பனாவும் உள்ளே சென்றாள்.

"சாரி தர்ஷ்! உங்களுக்கும் என் மேல கோபம் தான?"

"எவ்வளவு சாரி தான் சொல்லுவ ஆரா? முதல்ல எதுக்கு சாரி சொல்லணும்? உனக்கு புடிக்காததை புடிக்கலைனு சொல்லி இருக்க.. அது சரி தானே? பின்ன ஏன் இத்தனை சாரி?" என்ற தர்ஷினி கேள்விக்கு ஆராத்யா மௌனம் காக்க, மொபைலில் என்னவோ செய்தபடி

"நமக்கு தோணுறதை தைரியமா சொல்லணும் ஆரா! தப்பு சரி எல்லாம் செகன்ரி தான்.. இதுல நீ பீல் பண்ண என்ன இருக்கு சொல்லு?" என மீண்டும் தர்ஷினி கேட்க,

"ம்ம்ஹும் நான் தப்பு தான்.. ராம் சார் சொன்ன மாதிரி எனக்கு எதையுமே ஃபேஸ் பண்ண தெரியல.."

"ஓஹ்! அதை சொல்ல ராம் சார் வேணுமா? உனக்கு தெரியாதா?"

"தர்ஷ்! எனக்கு நீங்க எல்லாரும் வேணும்.. ஆனா இப்படியே மட்டும் போதும்.. என்கிட்ட வந்தா நான் தொலைச்சிடுவேன்.. இல்ல அந்த கடவுளே பிரிச்சுடுவாங்க.. பார்த்தீங்க தானே? இவ்வளவு நாளும் எவ்வளவு ஜாலியா இருந்தோம்? இப்ப பாருங்க.. இந்த ரிலேஷன்ஷிப் எப்பவுமே ஆபத்து தான்! அது மட்டும் இல்ல அதுக்கெல்லாம் எனக்கு குடுத்து வைக்கல தர்ஷ்!" என்று ஆராத்யா சொல்ல,

"எதை குடுத்து எங்க வைக்கணும்?" என்று கல்பனா கேட்டு டீ கொண்டு வர,

"பார்த்தீங்க இல்ல? இவங்க எவ்வளவு ஜாலியா பேசுறாங்க? இதே மாதிரி நீங்க எனக்கு எப்பவும் வேணும்!" என்றாள் ஆராத்யா.

"சரி! இப்ப என்ன பண்ணலாம்?" கல்பனா கேட்க,

"ராம் சார் ரொம்ப பாவம்.. அவருக்கு போய் நான்.. அந்த தகுதி எல்லாம் எனக்கு இல்ல.. உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.. சாரை எனக்கும் தெரியும்.. நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.. வேண்டாம்.. நிறைய அனுபவிச்சுட்டேன்.. சொந்தம்னு சொல்றவங்க எனக்கு யாரும் கூட வரல.. இனி அவங்க வந்தாலும் வேண்டாம்.. எனக்கு யாருமே வேண்டாம் தர்ஷ்.. நீங்க சொல்லுங்க.. ரெண்டு வருஷமா வெயிட் பண்ற அளவுக்கு நான் ஒன்னும்..." என்று நிறுத்திய ஆராத்யாவின் முக பாவனையில் கல்பனாவும் தர்ஷினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இன்னும் பல்ஸ் எகிறியது ரகுவிற்கு ஆராத்யாவின் பேச்சை கேட்டு.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
அட கடவுளே....
ஆரா உன் பயத்திருக்கு
அளவே இல்லை யா....
அடேய் ராம்....
 
  • Haha
Reactions: Rithi