• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 24

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 24

கீழே பேச ஆரம்பித்ததுமே தர்ஷினி தம்பிக்கு அலைபேசியில் அழைத்து வைத்திருக்க, ஆராத்யாவின் பேச்சு நன்றாய் கேட்டு மனம் இன்னும் கோபத்தில் கொதித்தது ரகுவிற்கு.

"இதை கேட்க கால் வேற பண்ணி வச்சிருக்கா!" என சகோதரியை திட்டி அமர்ந்திருந்தான் ரகு தன் அறையில்.

"போதும்.. டேமை திறந்து விட்ட மாதிரி ஆவூன்னா அழுகை.. இனிமே எங்க முன்னாடி அழுது பாரு!" என்று கூறி கல்பனா டீயை எடுத்து கொடுக்க, சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தது அந்த சூழ்நிலையை உள்வாங்கிக் கொள்ள நேரம் எடுத்து.

"என்கிட்ட பேசுவீங்க தான? நமக்குள்ள சண்டை இல்ல தான?" ஆராத்யா டீ குடித்து முடித்து கப்பை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று இருவரிடமும் கேட்க,

"நமக்குள்ள எந்த நேரத்திலயும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சண்டை வராது.. உனக்கே ஒரு நேரம் அது புரியும்.." என்று பூடகமாய் பதில் கூறினாள் தர்ஷினி.

கிளம்புவதாய் ஆராத்யா தலை அசைக்க, "எங்களுக்கு விளக்கம் குடுக்க மட்டும் தான் வந்தியா ஆரா? அதுவும் அத்தனை அழுகையோட போனை காதுல வச்சிட்டே?" கல்பனா கேட்டுவிட,

"ஆஹான்!" அப்படியா என்பதை போல கல்பனாவைப் பார்த்த தர்ஷினி சிரித்தபடி ஆராத்யா பக்கம் திரும்ப,

"நான் தான் சொன்னேனே! நீங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க.. உங்க வீடு எப்பவும் ஜாலியா ஹாப்பியா இருக்கும்.. அப்படியே இருக்கனும்.. நீங்க என்னோட பிரண்ட்ஸ்.. உங்களை ஹர்ட் பண்ணினேன்.. அதுக்கு மன்னிப்பு கேட்க வந்தேன்.. வேற யாரையும் நான் பார்க்க வரல.." என்று ஆராத்யா கூறும் பொழுது இறுதி வரிகளில் அவள் குரலில் இருந்தது என்னவோ..

"பணம் என்ன வேணா செய்யும் தர்ஷ்! என் அம்மா அப்பா அச்சிடேன்ட்ல எனக்கு இப்பவும் சந்தேகம் இருக்கு.. ஆனா நான் கோழை.. என்னால எதிர்த்து கேட்க முடியல.. என் வீட்டுல அம்மா அப்பா, அப்பாவோட அண்ணா என்னோட பெரியப்பா, பெரியம்மா, அவங்க பசங்கனு நிறைய பேர் இருந்தோம்.. என் வீட்டுக்கு போனா எப்பவும் சத்தமா தான் இருக்கும்.. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா இறந்த அப்புறம் பெரியப்பாவும் பெரியம்மாவும் பேசுறதை நான் கேட்டேன்.. வீடு என் அப்பா என் பேர்ல அவங்க சொந்த காசுல வாங்கி இருக்காங்க.. என்னை அந்த பரமசிவத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு அந்த வீட்டை அவங்க எடுத்துக்கனும் பேசிட்டு இருந்தாங்க.. அந்த பரமசிவம்.. அவன் அவன் பேர்ல அவன் மாமா பேர்லனு வீட்டை எழுதி வாங்க நினச்சான்.." என்று பேச பேச, ஆராத்யாவை பார்த்தபடி தர்ஷினியும் கல்பனாவும் நிற்க, மேலே முதல்படி அருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தான் ரகுவும்.

"அம்மா அப்பா இழந்தது ஒரு வலினா நமக்காக பெரியப்பா பெரியம்மா அவங்க குடும்பம் இருக்கேனு நினச்ச எனக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து யாருமே நம்மை பார்த்துக்க மாட்டாங்க.. எல்லாமே வேஷம்.. பணம் மட்டும் தான் எல்லாம்னு ஒரே நாள்ல செருப்பால அடிச்ச மாதிரி சொல்லி கொடுத்துச்சு இந்த வாழ்க்கை.."

"ஆரா!" என்ற தர்ஷினிக்கு கண்ணீர் வந்துவிட,

"அச்சோ! நீங்க இந்த நேரத்துல எல்லாம் அழ கூடாது.. நான் இதை ஏன் சொன்னேனா எனக்கு யாருமே வேண்டாம்.. பணம் யாரை எப்ப அப்படி மாத்தும்னு தெரியாது.. அதுவும்..." என்றவள் அந்த வீட்டை வீட்டின் செல்வ செழிப்பை சுற்றிப் பார்த்த பொழுது அந்த கண்களின் மிரட்சியை நன்றாய் புரிந்து கொள்ள முடிந்தது அங்கிருந்த மூவருக்கும்.

வீட்டை சுற்றி வந்த ஆராவின் கண்கள் ரகுவை அங்கே மாடியில் கண்டு மிரட்சியில் இருந்து கெஞ்சலாய் மாற, அதையும் ஒரு கூர்மையோடு பார்த்து நின்றான் ரகு.

"என்னை கடத்தி வச்சு சித்ரவதை பண்ணி நான் தப்பிச்சு இந்த ரெண்டு வருஷமா இங்க வந்து இருந்து... இவ்வளவு நடந்தும் இன்னும் என்னோட பெரியப்பா என்னை தேடவே இல்ல.. அந்த வீட்டுலயும் அவங்க இல்லனு கேள்விபட்டேன்.. அப்படியே தேடினாலும் என் பேர்ல இருக்க அந்த வீட்டை அவங்க பேருக்கு மாத்திக்க வேணா தேடிட்டு இருப்பாங்க.." என்றவள்,

"நான் யாரோடவும் இவ்வளவு கிளோஸ் ஆனது இல்ல.. ஆனா உங்களை மிஸ் பண்ண எனக்கு தோணல.. அதனால தான் இவ்வளவும் சொன்னேன்.. என்னை புரிஞ்சிப்பிங்க தானே?" என்று தர்ஷினி கைகளைப் பிடித்துக் கொண்டு ஆராத்யா கேட்க,

"ஹேய்! என்ன ஆரா நீ? வாழ்க்கைல முடிவுகள் எல்லாம் நம்மோடதா இருக்கனும்.. உன் முடிவு சரினு உனக்கு தோணுச்சுனா நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்!" என்று தர்ஷினி ஆராத்யா கன்னம் தட்ட,

"உலகம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா இருக்கு.. உனக்கானது சீக்கிரமே உனக்கு கிடைக்கட்டும் ஆரா! பி ஸ்ட்ரோங்!" என்றாள் கல்பனா.

அவர்களிடம் சொல்லிக் கொண்டு ஆராத்யா கிளம்பி வெளியே வர, படிக்களில் இறங்கி வேகமாய் வெளியேறினான் ரகு.

"ரகு எங்க போற?" என்ற தர்ஷினியின் கேள்வி எல்லாம் காதில் விழாதது போல அவன் வேகமாய் செல்ல, தர்ஷினியும் அவன் பின்னே செல்ல போக,

"விடு தர்ஷி! ரெண்டு பேரோட வாழ்க்கை.. அவங்களே பேசி முடிவெடுக்கட்டும்.. ரகு மேல இருந்து எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தார்.." என்று கல்பனா சொல்ல, தர்ஷினிக்கும் அது சரி என்று தோன்றவே அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.

ஆராத்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறி தன் வீட்டின் படிகளில் கால்களை வைக்க, காரை எடுத்துக் கொண்டு அங்கே வந்திருந்தான் ரகு.

"ஆரா கார்ல ஏறு!" என்று ரகு சொல்லவும் திரும்பிய ஆராத்யா அசையாமல் நிற்க,

"மிஸ் ஆராத்யா! கார்ல ஏறுங்க!" என்றான் தன் பொறுமையை பிடித்து இழுத்து.

"நான் இன்னைக்கு லீவ் சார்.. மெயில் பண்ணிட்டேன்!" மிக பொறுமையாய் வந்தது ஆராத்யாவின் பதில்.

தள்ளி வைத்து உன் எல்லைக்குள் நான் இல்லை என்பதை போல தெளிவாய் வந்தது ஆராத்யாவின் குரலும் பதிலும். தர்ஷினியிடம் குழந்தையாய் பேசியவள் ரகுவின் பார்வைக்குள் தான் இருப்பதை அழிக்க முயன்றாள்.

"ஓகே!" என்று கூறியவன்,

"தர்ஷினி பிரதரா பேசுறேன்.. உன் பிரண்ட்டோட பிரதரா பேசுறேன்.. ரெண்டு நிமிஷம் பேசணும்.. அடுத்து நான் உன் வழியில இந்த ஜென்மத்துக்கும் வர மாட்டேன்.." ரகு சொல்ல, இரு நொடி நின்றவள் சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

வழி முழுதும் அமைதி நிரம்பி இருக்க நேர்மாறாய் இருவர் மனங்களும் அமைதியின்றி தவித்தது.

நெடுஞ்சாலையின் ஓரம் காரை நிறுத்தியவன் பேசும் வார்த்தைகளை சேகரிக்கும் நேரம் அவன் பேசும் வரை மௌனமாய் காத்திருந்தாள் ஆராத்யா.

"சில கேள்விகள்.. அதுக்கான பதில் மட்டும் எனக்கு சரியா வந்தா போதும்!" ரகு இறுகிய முகமாய் சொல்ல, அவனைப் பார்க்கவே இல்லை ஆராத்யா.

"ரொம்ப சிம்பிள்! நான் உன்னை விரும்புறேன்.. இதை நேத்து ஒரு நாள்ல நீ பீல் பண்ணி உண்மையானு கேட்ட.. என்னை புரிஞ்சதால தான உன்னால பீல் பண்ண முடிஞ்சது?" ரகு கேட்க,

"நீங்க அப்படி நினைச்சிருக்கலாம் சார்! எப்பவும் ஆபீஸ்ல இருக்குற ரகு ராம் எம்டியை நேத்து நான் பார்க்கல.. ஸ்டேஷன் போகும் போது, ஸ்டேஷன்ல, வரும் போதுனு என்னால ஒரு பொண்ணா சில உணர்வுகளை புரிஞ்சிக்க முடிஞ்சது.. அதை தெளிவு பண்ணிக்க தான் கேட்டேன்.. ஆனா..." என்று ஆராத்யா அடுத்து சொல்ல வர, கைநீட்டி தடுத்திருந்தான் ரகு.

"எச்சரிக்கையா இருந்தேன்னு சொல்ற! ஓகே! பிடிச்சிருக்கு பிடிக்கலைனு சொல்லிட்டு போகலாம் தான? ஏன் என்னை அவாய்ட் பண்ணனும்? மொத்தமா இங்க இருந்து போக நினைக்கணும்? எனி பர்ட்டிகுலர் ரீசன்?" என்று ரகு கேட்க,

"அது என்னோட பெர்சனல் சார்!" என்று உடனே வந்தது அவளிடம் இருந்து பதில். அதில் ரகு நிறுத்தி நிதானமாய் அவள் புறம் திரும்ப,

"நான் யாருக்கும் எங்கேயும் தொல்லையா இருக்க விரும்பல.."

"ஓடி ஒழியுறது புத்திசாலித்தனம் இல்ல.."

"நான் கோழையாவே இருந்துக்குறேன்.. என்னால யாருக்கும் யாராலயும் எனக்கும் பிரச்சனை வேண்டாம்.. நான் என் வழில இருந்துக்குறேன்!"

"ஆரா! ஆரா! ஆரா!" பொறுமை என்பது குறைந்து கொண்டே செல்ல ஸ்டேயரிங்கில் குத்தியவன்,

"என்ன டி உன் பிரச்சனை? என் பணமா? அதுக்காக நான் அதையெல்லாம் தூக்கி எறிய முடியாது.. என் உழைப்பு அதெல்லாம்.. பணத்தை வச்சு என்னை என் கேரக்டரை எப்படி உன்னால தீர்மானிக்க முடிஞ்சது ஆரா? உனக்கு நான் என்ன நிரூபிக்கனும் சொல்லு!" என்று ரகு அவள்புறம் திரும்பி கெஞ்சல் போலவே கேட்க, வெளியே திரும்பிக் கொண்டவள் கண்கள் கலங்கியதை மறைத்துக் கொண்டாள்.

"சார் ப்ளீஸ்! உங்களுக்கு இருக்குற வசதிக்கு நான் எல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல.. நீங்க என் முன்னாடி இப்படி இருக்க வேண்டிய அவசியமே இல்ல.."

"தெரியுது இல்ல.. நான் உன் முன்னாடி இருக்க வேண்டிய அவசியம் இல்லை தான்.. ஆனா இருக்கேனே.. அதை புரிஞ்சிக்கோயேன்!" என்றவன்,

"ஆரா உனக்கு தேவை உன்னை புரிஞ்சி உனக்காக வாழுற ஒருத்தன்.. எனக்கு தெரியும்.. ஆனா உனக்கு தெரியாதது என்னைய தவிர யாராலயும் உன்னை என் மாதிரி பார்த்துக்க முடியாது.. பணம் பணம் பணம்னா.. பணம் இருக்கறவன் மட்டும் தான் எப்ப எப்படி மாறுவான்னு தெரியாதா.. மனுஷனா பொறந்தாலே அப்படி தான்.. இன்னைக்கு காலையில வரைக்கும் நான் எப்படி இருந்தேன் தெரியுமா உனக்கு? சந்தோசத்தோட உச்சில இருந்தேன்.. ஒரு நாள் கூட நிலைக்கல.. இதோ இப்ப கூட நீ என்னை கொஞ்சம் கொஞ்சமா தின்னுட்டு இருக்க.. உனக்கு புரியுதா?"

"இந்த காதல் கல்யாணம் மேல எல்லாம் எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல சார்.. எனக்கு வேண்டாம்.. என்னை விட்ருங்க ப்ளீஸ்!"

"பொய் சொல்ற! பொய் சொல்ற ஆரா! உனக்கு சந்தோசமா வாழனும்னு ஆசை இருக்கு.. என் பேமிலியையும் புடிச்சிருக்கு.. ஏன் என்னையும் கூட புடிச்சிருக்கலாம்.. ஆனா பயப்படுற.. திரும்ப வாழ்க்கைல யாரும் இல்லாம ஏமாந்துடுவோமோன்னு பயப்படுற.. அதுக்கு காரணமா நீ என்னென்னவோ நினைச்சுட்டு எல்லாரையும் சந்தேகத்தோட பாக்குற.." ரகு சொல்ல, மனம் பேசினாலும் மௌனமாய் அமர்ந்திருந்தவள் அவன் புறம் திரும்பிடவில்லை.

"ஆபீஸ் அவுட்டிங்ல உன் ட்ரீம்னு சொன்னதை நானும் கேட்டேன் ஆரா.. அது உன் மனசுல இருந்து வந்த வார்த்தை.. உன்னை உனக்காகவே உன் பேக்கிரௌண்ட் எதுவும் தெரியாமலே விரும்பினவன் டி நான்.. நான் எப்படி பாதில விட்டுட்டு போவேன்.. இப்ப என்ன இந்த வீடு வாசல்னு எல்லாத்தையும் விட்டுட்டு வரணுமா? சரி வா.. மூட்டை தூக்கணுமா? அதையும் பண்றேன்.. என்ன செய்யணும்னு சொல்லு ஆரா!"

"சார் ப்ளீஸ்! நீங்க என்னை மிரட்டிட்டு இருக்கீங்க.. பிடிக்கலைன்னா விட்டுடுங்க சார்.. எனக்கு பயமா இருக்கு.. நீங்க நல்லவர் தான்.. உங்க குடும்பம் பிடிக்கும் தான்.. ஆனா நான்... எனக்கு என் மேல நம்பிக்கை இல்ல.. என்னால எதையும் நம்ப முடியலை.. என் அம்மா அப்பா அளவுக்கு எனக்கு யார் மேலயும் நம்பிக்கை வரல.. ப்ளீஸ்! நான் வேண்டாம்.. ப்ளீஸ் சார்!" என்றவள்
முகத்தை கைகளால் மறைத்து கால்களில் ஊன்றிக் கொள்ள, சில நிமிடங்கள் அமைதியாய் அவளைப் பார்த்திருந்தவன் காரை எடுத்துவிட்டான்.

நேராய் இருவரின் வீட்டின் முன்பாய் நிறுத்தியவன்,

"என்னால என்னை மாத்திக்க முடியாது.. நீயும் மாற மாட்டேன்னு சொன்னா நோ ப்ரோப்லேம்.. உன்னோட இஷ்டம்.. ஆனா நான் இப்படி தான் இருப்பேன்.. என்னோட இந்த வாழ்க்கைல கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ஆராத்யாவோட மட்டும் தான்.. எந்த நம்பிக்கையும் இல்லாம ரெண்டு வருஷம் காத்திருந்த எனக்கு உனக்கும் என் காதல் தெரியுன்ற சந்தோசத்தோட காலம் முழுக்க காத்திருக்க முடியும்!" என்று சொல்ல,

"இதெல்லாம் வீண் பிடிவாதம் சார்.. உங்களுக்கு ஏத்த பொண்ணா..." என்று ஆராத்யா பேசும் முன்,

"நீங்க கிளம்பலாம் ஆராத்யா!" என்றுவிட, ஒரு கலங்கிய பார்வை பார்த்தவள் இறங்கும் நேரம்,

"உன் அம்மாவாவும் அப்பாவாவுமா உன் கூடவே இருப்பேன் என் ஆயுசுக்கும்.. அதை நீயே உணர்ந்து ஒரு நாள் வருவ அதுவரை இனி நான் உன்னை தேடி வர மாட்டேன்.." அவளை நேருக்கு நேராய் பார்த்து கூறியவன் அவள் திணறி துக்கத்தை விழுங்கி பார்த்தபடி கதவடைக்கவும் தன்னுடைய வீட்டினுள் காரை செலுத்திவிட்டான்.

தொடரும்..
 
  • Love
  • Sad
Reactions: prikar and sivaguru

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே....


உன் புன்னகை
நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே....


உன் புன்னகை
நான் சேமிக்கின்ற செல்வம்மடி
நீ இல்லையென்றால்
நானும் இங்கே ஏழையடி
😍😍😍😍