• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பிரியம் 25

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
அத்தியாயம் 25

வீட்டிற்குள் சோர்ந்த முகத்துடன் ஆராத்யா வரும் நேரம் ஹாலில் ஸ்ருதி அம்பிகா அமர்ந்திருக்க, அங்கே அஜய் ஸ்ருதியின் கணவன் மடியில்.

அவர்களைப் பார்த்ததும் முகத்தைத் துடைத்து புன்னகைக்க, "ஆரா! தூங்கிட்டு தானே இருந்த? எப்ப வெளில போன? இப்ப ஃபீவர் பரவால்லையா?" என்றாள் ஸ்ருதி.

"ரொம்ப டையார்ட்டா தெரியிற ஆரா.. காபி போட்டு தரவா?" என்றார் அம்பிகா.

"இப்ப தான் தர்ஷ் வீட்டுல குடிச்சேன் ம்மா.. நீங்க எப்ப வந்திங்க அண்ணா?" என்று ஆராத்யா ஸ்ருதி கணவனிடம் கேட்க,

"மார்னிங் பிளைட்ல டா.. நீ எப்படி இருக்க? ஃபீவர் அதிகமா இருந்தா ஹாஸ்பிடல் போலாமே?" என்றார் அவர்.

"இல்ல ண்ணா இப்ப கொஞ்சம் ஓகே தான்.. நீங்க பேசிட்டு இருங்க!" என்றவள் உள்ளே செல்ல, ஸ்ருதியும் எழுந்து சென்றாள்.

"நைட்டு தான் சர்ப்ரைசா போன் பண்ணி ஏர் போர்ட்ல நிக்கிறதா சொன்னார்.. நீ இருந்த சிடுவேஷன்ல உன்கிட்ட சொல்ல முடியல.." என்று ஸ்ருதி விளக்கம் கொடுக்க,

"குட் ஸ்ருதி.. நீ போய் அவரை பாரு.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்!" மென் புன்னகையோடு ஆரா சொல்ல,

"உன் கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு ஆரா.. இன்னும் அவனை நினைச்சு பயந்து போய் இருக்கியா? அதான் கம்பளைண்ட் பண்ணிருக்கியே! ரகு ராம் சார் மூலமா கம்பளைண்ட் பண்ணினதால எக்ஸ்ட்ரா வேல்யூ இருக்கும்.. அதை நினச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத!"

ஸ்ருதியிடம் அனைத்தையும் சொல்ல வேண்டும் அவள் மடி சாய்ந்து அழ வேண்டும் என தோன்றினாலும் அவள் கணவனின் வருகையில் மகிழ்ந்து இருப்பவளிடம் வேறேதையும் காட்டிக் கொள்ள விருப்பமில்லை.

"அதெல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் அவரை கவனி.. வெளில போய்ட்டு வாங்க.." ஆராத்யா சிரித்துக் கொண்டே சொல்ல,

"நீ இப்படி இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு டி.. உனக்கு எப்ப நல்ல நேரம் வரும்னு நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.. நேத்து நீ அழுத அழுகை அந்த ராஸ்கலை போலீஸ்ல குடுத்த சந்தோசத்துல வந்த அழுகை இல்ல.. வேற ஏதோ இருக்கு.. ஆனா அதை கேட்டு உன்னை சங்கடப்படுத்தவும் முடியல.."

"ப்ச் ஸ்ருதி அதையெல்லாம் விடு.. நீ அவரை போய் பாரு.. சொல்றேன்ல.. எனக்கு ஒரு கஷ்டம்னா நான் வேற யார்கிட்ட போக போறேன்.. நாம அப்புறமா பேசிக்கலாம்!" என்று பேசி பேசியே ஸ்ருதியை அனுப்பி வைத்துவிட்டு தன் அறைக்குள் வந்தாள் ஆரா.

யாரிடம் சொல்ல தன் மனதிலும் துளிர் விட்ட நேசத்தை? அதை தானே அழிக்க போராடும் கொடுமையை?

கடந்த ஒரு மாதத்தில் தன் மனதின் அலைப்புறுதல்களின் அளவிலும் அதன் முடிவிலும் பயமாய் இருக்க, தன்னால் முடிந்த மட்டும் விலக நினைத்த பொழுது விலக முடியாமல் இவ்வளவு தூரம் கொண்டு வந்துவிட்ட இந்த விதியை என்னவென்று சொல்ல?

இரண்டு வருட காதல்.. அப்படி தானே தர்ஷினி கூறினாள்? ரகு ராம் என்ற ஒருவனின் மனதில் தான் இருப்பதை நினைத்து எவ்வளவு மகிழ வேண்டும்? அதை கொடுக்க மறுக்கும் கடவுள் இந்த உணர்வை ஏன் தனக்கு கொடுக்க வேண்டும்? என்று நினைக்கும் பொழுதே நெஞ்சை அறுத்தது ஒரு உணர்வு.

அவன் பார்த்த பார்வை, பேசிய வார்த்தை, கெஞ்சலும் தவிப்புமாய் பார்த்த விழிகள், என ரகுவின் கோபம் தாண்டிய அத்தனை உணர்வுகளையும் தன்னால் புரிந்து கொள்ள முடிந்ததில் திணறி தடுமாறி எதிர்த்து பேச பட்ட கஷ்டங்கள் எல்லாம் யாரிடம் சொல்லி அழுதிட? எந்த மருந்தினை எடுத்து பூசிட?

எப்படி முடிந்தது அவனுக்கு தன்னை அவனில் பாதியாய் நினைத்திட? இந்த விதியின் வேலையே இது தானோ? சேர முடியாத இருவரை இடைப்பட்ட காலத்தில் உணர்வுகளால் துடிக்க வைப்பதில் அப்படி என்ன சந்தோசமோ?

நிச்சயம் தன் நேசத்தை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் அறவே இல்லை.. அவன் காதலை ஏற்றுக் கொள்ள சக்தியும் இல்லை.

எதுவுமே இல்லாத தன் அளவில் உள்ள ஒருவன் என்னை இந்த அளவிற்கு காதலித்து இருக்க கூடாதா? என்றெல்லாம் அவள் ஏக்கங்கள் கூடிக் கொண்டே செல்ல, படுக்கையில் விழுந்தவள் கண்களில் வழிந்த கண்ணீரெல்லாம் தடம் இன்றி படுக்கையுள் புதைந்து கொண்டிருந்தது.

இறுதியாய் அந்த பரமசிவத்தை உள்ளே சிறைக்கு அழைத்து செல்லும் முன் இவளை அவன் பார்த்த அந்த பார்வையும் கேட்ட கேள்வியும்.. வாழும் காலம் முழுக்க மறக்க முடியாத ஒன்று.

"ஒய்யாரத்துல இருக்குற ஒருத்தனை உன் கைக்குள்ள வச்சுட்டு என்னையவே இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்ட இல்ல.. நல்லா தான் புடிச்சிருக்க.. கேட்க நாதி இல்லாத உனக்கு நல்ல வாழ்வு தான்..." இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ அந்த இன்ஸ்பெக்டர் ஹரிஷ் கூடுதலாய் அடி வெளுத்து உள்ளே அனுப்பி இரா விட்டால்.

அப்படி அவன் பேசும் பொழுது கூசிப் போன தன்னை, ரௌத்திர பார்வையில் சினம் அடக்கி நின்ற ரகு பாதுகாப்பாய் பிடிக்க வர, அவனிடம் இருந்து விலகிய நியாபகமும் மனக்கண்ணில் தோன்றி கதறி அழ வைத்தது.

இந்த ஒருவனின் பொய் பேச்சை தான் உண்மை என நிரூபிப்பது போல ஆகாதா தன் காதலை வெளிப்படுத்துவதும் ரகுவின் காதலை ஏற்பதும்?

அப்படி மட்டும் நடந்தால் இவன் ஒருவனின் பேச்சு தானே நாளை அலுவலகம் முதல் இந்த ஊரெங்கும் பரவும்?

இந்த இரண்டு வருடங்களில் தன்னை தானே பார்த்துக் கொள்ள அவள் கண்ட போராட்டங்கள் ஏராளம்.. பெண் தனியாக உலகத்தில் வாழ்வது எல்லாம் சாதாரண காரியம் அல்ல.. தான் எவ்வளவு ஒழுக்கமாய் இருந்தாலும் அதற்கு மேல் பூச்சு பூச இங்கு பெரிய கூட்டமே உண்டு.

அத்தனையும் தாண்டி வாழும் பல பெண்களில் ஒருத்தி தான் ஆராத்யா.

யாரும் பேசும் இடத்தில் தான் இருக்க கூடாது என்பதில் அத்தனை கவனம் இருக்கும் அவளிடம். ஒரு ரூபாய் என்றாலும் அதை திருப்பி செய்யா விட்டால் அந்த நாளின் தூக்கம் பறிபோகும்.

இப்படி இருக்கையில் தன்னை விட உயரத்தில் இருக்கும் ஒருவன் மேல் தான் அன்பு வைக்க எப்படி தன் மனம் ஒத்துழைத்தது என்று தன்னையே கேட்டு பல முறை தானே தன்னை வலிக்கும்படி அடித்துக் கொண்ட இரவுகள் ஏராளம்.

முதல் முறையாய்.. என்ன! அது நடந்து பத்து நாட்கள் இருக்குமா? கையில் காயம் பார்த்து ரகுவோடு காரில் பயணம் செய்த நாள்.. அந்த முதல் நாள் தான் எல்லாவற்றிற்கும் வித்து.

அந்த நாளில் காலை மாலை என அவனோடு தான் வந்த நேரம் அவன் தன்னிடம் காட்டிய கரிசனம்.. ஆம் கரிசனம் என்று தான் அவள் நினைத்திருந்தாள். கூடவே அவனுடைய சில அறிவுரைகள் என அலுவலகத்தில் தான் கண்ட ரகு ராம் எம்டி என்ற மனிதனை தாண்டி, அவனை தனியாய் முகம் காண வைத்தது.

அன்று தோன்றிய மனதின் எண்ணத்திற்கு எல்லாம் உருவம் கொடுக்காமல் உணர்வுகள் மட்டும் உள்ளத்தில் சேர்ந்திருந்ததை அவள் அறியவில்லை.

அடுத்தடுத்த நாட்களில் தர்ஷினியோடு அவனை கண்டதும் அவனின் இயல்பான குடும்பத்துடனான நாட்களும் என மனதின் விதை வளர்வதை கண்டு கொண்டவள் அதை வெட்டிவிட தான் பார்த்தாள்.

இரண்டாவதாய் அவனோடு ஒன்றாய் காரில் செல்ல சொல்லி தர்ஷினி கூறிய போது மறுத்ததும் இவள் விழித்த விதம் கண்டு தர்ஷினி சந்தேகமாய் கேட்டதும் என எல்லாம் துளி மாறாமல் நியாபகம் இருந்தது ஆராத்யாவிற்கு.

கார்த்திகா வந்து ரகுவைப் பற்றியும் அவனின் நடத்தைகள் பற்றியும் கூறியதும் முதலில் அதிர்ந்தாலும் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என தானே தனக்கு சமாதானம் செய்திருக்க நேற்றைய நாளில் அவனை முழுதாய் கண்டு கொள்ள முடிந்தவளுக்கு அதனை நினைத்து சந்தோசம் கொள்ள தான் முடியவில்லை.

கனவிலும் நடக்காத ஒன்றை தான் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம் என தன் கனவை தானே அடித்து விரட்டிக் கொண்டிருக்க, அந்த கனவு கை சேருவதாய் நேரில் வந்து நின்றும் ஏற்க முடியாத நிலையில் இவள்.

அதுவும் அவன் குடும்பத்திற்கே தெரியும் அளவுக்கு ரகுவின் நேசம் இருக்க, அவனின் தூய்மையான அன்புக்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டுமாம்?

ஆனாலும் யார் என்ன நினைத்தாலும் சரி என்று அவனுடன் சேர்ந்திட மட்டும் மனம் இடம் தரவில்லை.

தனக்கு ஆதரவு அடைக்கலம் கொடுத்த ஸ்ருதியும் அவள் குடும்பமும், தனக்கென ஒரு தன்னம்பிக்கையை கொடுத்த அலுவலகம், நன்றாய் இரண்டு வருடத்தில் பழக்கமாகி இருந்த இந்த ஊர் என அத்தனையும் தனக்கு முக்கியமாய் தோன்ற வாழ்க்கையின் முக்கிய முடிவை அப்படி சட்டென ஏற்று கையில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

போகட்டும்.. ஒரே ஒரு காதல், அன்பு, பாசம், நேசம் தானே? என்ன செய்து விடும்? என்று நினைக்கும் பொழுதே நெஞ்சடைத்து பெரும் கேவல் வெளிவர, வாய் மூடி அதை தனக்குள் வைத்துக் கொண்டாள்.

வெறும் பத்து பதினைந்து நாட்களில் இப்படியான தன் வாழ்வின் மாற்றதை எதிர்பார்க்காமல் இருந்தவள் அதை எற்கவும் முடியாமல் மறுத்து வாழ்வை சாதாரணமாய் எதிர்கொள்ளவும் முடியாமல் என திண்டாடிய கொடுமையான நேரம் இது ஆராத்யாவிற்கு.

இப்பொழுது சொல்லி சென்றானே இனி உன்னை தேடி நான் வர மாட்டேன் என்று.. நினைக்கும் பொழுதே நெஞ்சம் வலிக்க, நீயாக வருவாய் என்ற அவன் வார்த்தைகளுக்கு அவள் செவி சாய்க்கவில்லை. அது நடக்காது என்பதில் அத்தனை திண்ணம் ஆராத்யாவிற்கு.

அடுத்த இரண்டு நாட்களும் அலுவலகம் செல்லவில்லை ஆராத்யா. பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆனாலும் கண்டு கொள்ளாத பாவனை ரகுவிடம்.

ஸ்ருதி கணவன் வந்திருக்கும் நேரம் என்பதால் அவனுடன் நேரத்தை செலவிடவே நேரம் போதவில்லை ஸ்ருதிக்கு.

இரண்டு நாட்களும் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடந்தாள் என்று தான் சொல்ல வேண்டும் பிடிக்கவே பிடிக்காத தனிமையை கட்டிக் கொண்டு.

முதல் நாளாவது ஆராத்யா வந்து சிறிது நேரம் அமர்ந்திருக்க, அடுத்த நாள் எல்லாம் வெறுமையாய் போனது.

எப்பொழுதும் பால்கனியில் நின்று ஊஞ்சலாடும் ஆராத்யாவை ரகு ரசிப்பது நின்று ஊஞ்சலில் அமர்ந்து அந்த பால்கனியை பார்த்தும் பாராமலுமாய் இருப்பது வழக்கமாகி இருந்தது ஆராத்யாவிற்கு.

இரண்டு நாட்களுக்கு மேல் முடியாமல் போகவே மூன்றாம் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்ற பெரும் கொள்கையோடு கிளம்பி விட்டாள் அலுவலகம்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
உறவை இழந்த எனக்கு
உறவாய் நட்பு இருக்க
உணர்வுகளை இழந்த எனக்கு
உரிமையாக அழைத்து வந்த
உன் வீட்டு சொந்தம் இருக்க
உன் காதல் அறிந்தும்
உன்னிடம் நான் மறைக்க
ஊர் பேச்சை கேட்க முடியாமல்
உள்ளம் உடைந்து விலகி நிற்க.....
😭😭😭😭😭
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
889
649
93
Chennai
உறவை இழந்த எனக்கு
உறவாய் நட்பு இருக்க
உணர்வுகளை இழந்த எனக்கு
உரிமையாக அழைத்து வந்த
உன் வீட்டு சொந்தம் இருக்க
உன் காதல் அறிந்தும்
உன்னிடம் நான் மறைக்க
ஊர் பேச்சை கேட்க முடியாமல்
உள்ளம் உடைந்து விலகி நிற்க.....
😭😭😭😭😭
அழகான வரிகள் ❤️❤️