அத்தியாயம் 26
இரண்டு நாள் விடுமுறைக்கு பின் ஆராத்யா அன்று அலுவலகம் கிளம்பி செல்ல, அவள் செல்வதை தன் அறை ஜன்னல் வழி பார்த்து தான் நின்றான் ரகு ராம்.
நந்தாவும் டில்லியில் இருந்து ஒரு வாரம் விடுப்பில் நேற்று தான் வந்திருந்தான் மனைவி பார்க்க வேண்டும் என்று ஆசையாய் கூறியதை மறுக்க முடியாமல்.
தர்ஷினி சென்று முதல் நாள் ஆராத்யா வீட்டிற்கு போய் பேசி இருக்க, அடுத்த நாள் நந்தா வருவதை பற்றி சொல்லி இருந்ததால் ஆராத்யாவும் தர்ஷினியை அன்று எதிர்பார்க்கவில்லை.
மூன்றாம் நாள் காலை ஆராத்யா கிளம்பி செல்வதை பார்த்துவிட்டு ரகு தானும் கிளம்பி கீழே வர, வயிற்றைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் தர்ஷினி.
அருகே நந்தா, அகிலன் இருக்க மகேஸ்வரி கையில் எதையோ கொண்டு வர பின்னோடே வந்தாள் கல்பனா.
"என்னாச்சு மாமா?" என்று அவர்கள் அருகில் வேகமாய் வந்தான் ரகு.
"அப்பவே லைட்டா வலிக்குற மாதிரி இருக்குதுன்னு சொன்னா ரகு.. ஃபால்ஸ் பெயின்னு வாட்டர்ல என்னவோ கலந்து குடிச்சா.. இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா வலிக்குதாம்.." என்றான் நந்தாவும் கவலையுடன்.
"டாக்டர்கிட்ட போகாம இங்க என்ன பண்றீங்க? நான் கார் எடுக்குறேன்!" என்று ரகு சொல்ல,
"போகனும் டா.. இன்னும் ஒரு மாசம்கிட்ட இருக்கே.. சூட்டு வலினா உடனே போயிடும்! அதான்!" என்று மருந்தினை கொடுக்க, அதை விழுங்கிவிட்டு இன்னும் வயிற்றைப் பிடித்திருந்த தர்ஷினி கண்கள் கலங்கி பயமும் அப்பட்டமாய் தெரிந்தது.
"தர்ஷிம்மா! இப்ப ஓகேவா?" நந்தா கேட்க,
"இல்லங்க.. இன்னும் வலிக்குது!" என்றாள் பாவமாய்.
"ம்மா! என்ன வலியாவும் இருக்கட்டும்.. வாங்க ஹாஸ்பிடல் போய்டலாம்!" என்று ரகு சொல்லி,
"அகி! தர்ஷி ஃபைல்?" என்று கேட்க,
"ரூம்ல இருக்கு!" என்றான் நந்தா.
"நீங்க காருக்கு போங்க.. நான் எடுத்துட்டு வர்றேன்!" என்று கல்பனா வேகமாய் செல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் முழு குடும்பமும் மருத்துவமனையில்.
"வலிக்குது பா!" நந்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அலறினாள் தர்ஷினி.
"ஒன்னும் இல்லைடாம்மா.. இப்ப பார்த்துடலாம்.." என அவளுக்கு இணையான வேதனையுடன் நந்தாவும் அவளருகில் நின்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஆனாலும் பேசிக் கொண்டே இருந்தான்.
காரிலேயே தர்ஷினியின் வலியை அவள் சொல்வதை கண்டு, கண்டு கொண்டார் மகேஸ்வரி இது பிரசவவலி என்று.. இருந்தும் யாரிடமும் சொல்லி பயமுறுத்தாமல் இருக்க, மருத்துவரும் அட்மிட் என்று கூறிவிட,
"ஆனா ம்மா ஒரு மாசம் இருக்கே!" என்றான் அகிலன் தாயிடம்.
"இத்தனை நாள்னு கணக்கு எல்லாம் இல்லை பா.. முன்னபின்ன இருக்கும் தான்.." என்றார் மகேஸ்வரி.
"ஆனாலும் ஒரு மாசம் இருக்கே த்த?" என்று நந்தா கேட்க, அதை கேட்டபடி தான் வந்திருந்தார் மருத்துவர்.
"இதெல்லாம் நார்மல் தான் சார்.. சுகப்பிரசவம் வாய்ப்பு இருக்கு.. ட்ரை பண்ணலாம்.. ஆனால்..." என்று சொல்லவுமே அனைவரும் பயமாய் பார்க்க,
"தொப்புள் கொடி குழந்தையோட கழுத்தை சுத்தி இருக்கு.." என்று தர்ஷினியை பரிசோதித்து சொல்லவும் மகேஸ்வரிக்கு திக்கென்று ஆனது.
"ட்ரை பண்ணலாம் இல்லைனா சிஸ்ஸேரியன் பண்ணிடலாம்!" என்றவர் கணவர் என கேட்டு கையொப்பமும் பெற்றுக் கொள்ள, வெளியே பதட்டம் அனைவர்க்கும் தான்.
"சம்மந்திக்கு போன் பண்ணி சொல்லிடுங்களேன்!" என மகேஸ்வரி நந்தாவிடம் சொல்ல, அதன்பின் தான் அவனுக்கும் அந்த நியாபகம்.
மொபைலை கையில் எடுக்கவே கைகள் நடுங்க, "மாமா நான் சொல்றேன்.." என்று அகிலன் அதை தனது பொறுப்புக்கு கொண்டு வந்துவிட்டான்.
ரகுவும் நந்தா அருகிலேயே நிற்க, சில நிமிடங்களில் செவிலியர் வந்து சொல்லி சென்றார் ஆபரேஷன் தான் என்று.
"நான் அவளை பார்க்கலாமா மேடம்?" ஏன நந்தா கேட்க,
"இல்ல சார்! ஆல்ரெடி ஆபரேஷன் தியேட்டர் ரெடியா தான் வச்சிருந்தோம்.. சோ அங்க மாத்திட்டாங்க.." என்று சொல்லி செல்ல,
"ஒன்னும் இல்ல மாமா.. இப்ப பார்த்திடலாம்.." என்றான் ரகு நந்தாவின் கைகளை ஆறுதலாய் பிடித்து.
தர்ஷினியை கவலையாய் பார்த்த நியாபகம் கூட இல்லை எனும் போது தன் கைகளை பிடித்து வலி என்று அழுத அந்த முகம் நினைத்து கைகள் சில்லிட்டது பயத்தில் நந்தாவிற்கு.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் எல்லாம் செய்தி வந்தது பெண் குழந்தை என்று.
"தர்ஷி?" என்று நந்தா கேட்க,
"மயக்கத்துல இருக்காங்க.. இப்ப குழந்தையை கொண்டு வந்திடுவாங்க.. அரை மணி நேரத்துல ரூம்க்கு ஷிப்ட் பண்ணினதும் அவங்களையும் நீங்க பார்க்கலாம்!" என்று சென்றார் மருத்துவர்.
குழந்தையை முதலில் நந்தா கைகளில் வாங்க, பூரித்தவன் அதன் அழகில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மகேஸ்வரி கைகளில் கொடுத்தான்.
"இளவரசி வந்துட்டீங்களா?" என்று கல்பனா கொஞ்ச, சில நிமிடங்களில் ஆராத்யாவிற்கு தர்ஷினி அலைபேசியில் இருந்து செய்தி அனுப்பிவிட்டான் ரகு "பிளெஸ்டு பேபி கேர்ள்!" என்று கூடவே ஒரு கண்கள் சிரிக்கும் இதயம் சுமந்த பொம்மையும்.
அடுத்த நிமிடமே அழைப்பு ஆராத்யா மொபைலில் இருந்து தர்ஷினிக்கு வர, அதை எதிர்பார்க்கவில்லை ரகு.
எடுத்து காதில் வைக்கவும், "வாழ்த்துக்கள் தர்ஷ்! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்!" என பட்டாசாய் குதூகளித்தவள் பேச்சில் சிறு புன்னகை தாங்கி ரகு அமைதியாய் இருக்க,
"என்ன பன்றாங்க எஞ்சேல்? எந்த ஹாஸ்பிடல் தர்ஷ்? ச்ச! இன்னைக்கு பார்த்தா நான் ஆபீஸ் வரணும்.. லீவ் போட்ருக்கலாம்.." என்ற பிணத்தல் வேறு அவளிடம்.
"ஆபீஸ் எம்டி நெத்தில என்ன பைத்தியம்னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கா?" என்ற ரகுவின் குரலில் தூக்கிவாரி போட கையில் இருந்த அலைபேசியே பறந்து சென்று அதை கேட்ச் பிடித்து என அலுவலகத்தில் பலர் பார்க்க சாகசம் நடத்தினாள் ஆராத்யா.
ரகு வரவில்லை என்றதும் ஏன் என்ற கேள்வியும் மூளையை ஆக்கிரமித்து இருக்க, ஏனோ தானோ என்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவிற்கு தர்ஷினி அலைபேசியில் இருந்து செய்தி வரவும், வந்த செய்தியும் மூளையை வேலை செய்யவிடவில்லை.
தர்ஷினி தான் அனுப்பி இருப்பாளா என்று யோசிக்க கூட இல்லாமல் தர்ஷி அலைபேசி அவளிடம் இருந்து செய்தி என்று பார்க்கவுமே சட்டென அழைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்க, ரகுவின் குரலில் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
கேட்ச் பிடித்த மொபைலை உடனே ஆராத்யா கட் செய்ய, சிரித்தபடி ரகுவும் அலைபேசி தூண்டிக்கப்பட்டதை பார்த்துவிட்டு மருத்துவமனை பெயரை அவளுக்கு அனுப்பி வைத்தவன் குழந்தையிடம் கவனம் வைத்தான்.
"போச்சு போச்சு மானம் போச்சு.. அய்யோ என்ன நினைச்சிருப்பாங்க.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?" என்று போனை வைத்ததும் அடுத்து புலம்ப ஆரம்பித்த ஆராத்யாவை, கார்த்திகா பிடித்து உலுக்க,
"என்ன டி?" என்றாள் சோர்வாய் ஆராத்யா.
"என்ன புலம்பிட்டு இருக்க? ரெண்டு நாள் ஏன் லீவ்னு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல.. அன்னைக்கு சாரோட போனியே என்னாச்சுன்னு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல.. இப்ப திடிர்னு சிரிச்சு ஏர்ல பல்டி எல்லாம் அடிச்சு மொபைலை கேட்ச் புடிச்ச.. திடீர்னு தனியா புலம்புற.. என்ன தான் டி உன் பிரச்சனை?" என்றாள் கார்த்தி.
"ப்ச் என்ன சொல்ல? என் லைஃப் என் கண்ட்ரோல்ல இல்லாம போற மாதிரி பீல் ஆகுது.." ஆராத்யா சொல்ல,
"பைத்தியமாவே ஆயிட்டியா?" என்று கார்த்திகா கேட்க,
'எம்டி நெத்தில என்ன பைத்தியம்னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கா?' என்று கேட்ட ரகுவின் நினைவில் ஆராத்யாவிற்கு புன்னகை எழ,
"அச்சடா பைத்தியமே தான்!" என்றாள் ஆராத்யாவைப் பார்த்து முகத்தை கோணலாய் வைத்து கார்த்திகா.
மருத்துவமனை பெயர் தாங்கிய செய்தி அதுவும் தர்ஷினி மொபைலில் இருந்து வர, தலையில் அலைபேசியை தட்டிக் கொண்டாள்.
சிறு இதம் ஒன்று மனதிற்கு கிடைக்க, தர்ஷினிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சி என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டாள் ஆராத்யா.
மாலை வேகமாய் அனைத்தையும் எடுத்து வைத்து கம்ப்யூட்டரை அணைத்து பேகை எடுத்துக் கொண்டு கார்த்திகாவிடம் கிளம்புவதாய் சொல்ல,
"என்னவோ சரி இல்ல ஆரா நீ.. சரி நாளைக்கு பேசலாம் பார்த்துப் போ!" என்று அனுப்பி வைத்தாள் கார்த்திகா.
நேராய் மருத்துவமனைக்கு தான் வந்து சேர்ந்தாள். தர்ஷினி பெயரைக் கூறி அறையைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே செல்ல, கண்மூடி தர்ஷினி படுத்திருக்க அருகே கைகால்களை உதைத்தபடி குழந்தை இருக்க, தர்ஷினி கைகளைப் பிடித்துக் கொண்டும் அவளையும் குழந்தையையும் பார்த்தும் ரசித்துக் கொண்டும் அருகே நந்தா.
அழகாய் இருந்தது பார்க்கவே. பார்த்ததும் ஒரு புன்னகை எழ நின்றவளை "வா ஆரா!" என்று அழைத்தபடி ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தாள் கல்பனா.
அதில் கலைந்து நந்தாவும் திரும்பியவன், "வாங்க!" என் புன்னகைக்க, பதிலுக்கு புன்னகை கொடுத்தவள் தர்ஷினியை பார்த்தாள் அருகில் சென்று.
"சிஸ்ஸேரியன் தான் ஆரா.. பெயின் அதிகமா இருக்குனு அழுதா.. அதான் இன்ஜெக்ஷன் போடவும் தூங்குறா.." என்று கல்பனா சொல்ல,
"ஓஹ்! ரொம்ப அழுதாங்களா? எப்ப வந்திங்க ஹாஸ்பிடல்?" என்று கேட்டபடி சிரித்துக் கொண்டே குழந்தையின் விரல்களைப் பிடிக்க, குழந்தையும் கெட்டியாய் பிடித்துக் கொண்டது அவள் விரல்களை.
"நீங்க பேசிட்டு இருங்க.. நான் வர்றேன்!" என்று நந்தா வெளியேற, கல்பனாவும் அனைத்தையும் கூறிக் கொண்டு இருந்தாள்.
ஈவ்னிங் எல்லாரும் அல்லோவ்டு இல்லைனு சொல்லிட்டாங்க.. அதான் நான் பார்த்துக்குறேன்னு அத்தையை வீட்டுக்கு அனுப்பிட்டேன்.. அகிலன் சாப்பாடு கொண்டு வருவார்!" என்று சொல்ல, ஆராத்யாவும் கேட்டபடி குழந்தையைப் பார்க்க, அது தூங்க ஆரம்பித்தது.
"க்யூட்ல?" என்று ஆராத்யா புன்னகைக்க,
"ஆமா ஆமா அவங்க அப்பா மாதிரி!" என்று கல்பனா.
"அப்ப அம்மா மாதிரி இல்லைனு சொல்றிங்க? இருங்க தர்ஷ் எழுந்ததும் சொல்றேன்!" என்று ஆராத்யா சிரிக்க, சிரித்த கல்பனாவும்,
"ஆமா உங்களுக்கு யார் சொன்னாங்க?" என்று கேட்ட நொடி திருதிருவென ஆராத்யா விழித்தாள்.
மற்ற நேரம் என்றாள் ராம் சார் என்று வெளிப்படையாய் சொல்லி இருப்பாள் இப்பொழுது அப்படி சொல்ல முடியாமல் விழிக்க, அதனை பார்த்து தான் சந்தேகமாய் பார்த்து வைத்தாள் கல்பனாவும்.
"என்ன ஆரா! யார் சொன்னாங்க? வீட்டுக்கு போனீங்களா அத்தை சொன்னாங்களா?" என்று கேட்கவும்,
"அண்ணி!" என்று வந்திருந்தான் ரகு.
உள்ளே வந்த பின் தான் ஆராத்யாவை ரகு பார்க்க, அவனைப் பார்த்ததும் எழுந்தவளை உட்கார் என கையசைத்தவன்,
"இதுல மெடிசின் இருக்கு அண்ணி! பார்த்துக்கோங்க.. நான் கீழ தான் இருப்பேன்.. எதுவும் வேணும்னா கூப்பிடுங்க!" என்றவன் தர்ஷினியைப் பார்க்க,
"இப்ப தான் இன்ஜெக்ஷன் போட்டதும் தூங்குறா!" என்றாள் கல்பனா.
"ம்ம்!" என்றவன் கல்பனாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
தொடரும்..