அத்தியாயம் 28
"என்ன டா சொல்ற?" கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரித்தபடி நந்தா கேட்க,
"அய்யோ சிரிக்காதிங்க மாமா.. நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன்!" என்றவன் பால்கனியில் நின்று எதிர்வீட்டை தான் பார்த்தபடி நின்றிருந்தான் காதில் ப்ளூடூத்துடன்.
ஆரா இறங்கியதும் வீட்டிற்குள் வந்த ரகுவின் எதிரே அகிலன் மருத்துவமனைக்கு செல்ல தயாராய் வர,
"இந்த காரை எடுத்துட்டு போ அகி! வரும் போது என் பைக் எடுத்துட்டு வா.. மாமாகிட்ட கீ இருக்கட்டும்!" என்று சொல்லி வேகமாய் மொபைலை எடுத்து நந்தாவிற்கு அழைத்தபடி மேலே சென்றவன் தான். அவன் பேசிய பேச்சில் நந்தாவே அதிசயித்தான் ரகுவை நினைத்து.
இன்னுமே நந்தா சிரிப்பை அடக்க முடியாமல் நிற்க, "நிஜமா தான் சொல்றேன் மாமா.. என் காதலை பிரச்சனைனு சொல்றா.. அவ எப்படி அப்படி சொல்லலாம்? இன்னொன்னு என்னவோ உளறினாளே! ஹான், மத்ததை தூக்கி போடுன்றா.. அவ மத்ததுன்னு சொன்னது என் மனசு மாமா.. விஷ் வேற தாய்மாமான்னு!" என்று சொல்ல,
"டேய் ரகு!" என்று சிரித்த நந்தா,
"அதுக்காக அவ்வளவு பேசுனியா அந்த பொண்ணுகிட்ட.. பாவம் டா.. பார்த்தாலே தெரியுது.. இன்னஸண்ட் ரகு!" என்று ஆராத்யாவிற்கு ஆதரவாய் பேசியவன் உறங்கும் மனைவி அருகில் வந்து ட்ரிப்ஸ் முடிந்ததா என பார்த்துவிட்டு மீண்டும் வெளியே வந்தான்.
"எது இன்னஸண்டா? அவ பேசின பேச்சுக்கு..." என்று கோபமாய் முடிக்காமல் விட,
"சொல்லு! பேசின பேச்சுக்கு.. இப்பவே வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தோணுதா?" என்று நந்தா புன்னகையை அடக்கிக் கொண்டு கேட்க,
"அப்படி தோணுச்சுனா கூட பரவாயில்லயே.. அவளையே தூக்கிட்டு போய் தாலி கட்டிட்டா என்னனு தோணுது!" என்றவன் பேச்சில் 'அவ்வா' என வாயில் கை வைத்துவிட்டான் நந்தா.
"அடப்பாவி! உன்னை எவ்வளவு நல்லவன்னு நான் நினச்சேன்.. நீ விட்டா மாமான்னு கூட பாக்காம என்னையே பொண்ணை கடத்த சொல்லுவ போலயே! ஒரு பிசினஸ்மேன் பண்ற வேலையா இது? இது மட்டும் உன் அக்காக்கு தெரிஞ்சது...."
"மாமா!" என்று தலையசைத்து தன் பேச்சை நினைத்து தானே அசடாய் சிரித்து, அதை மாமாவிடம் கூறியதற்கு வேறு தனியாய் வெட்கம் கொண்டு நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு நீவி மென்னகை சிந்த,
"சரி அதான் பேசிட்டியே! அப்புறம் என்ன? போய் தூங்க வேண்டியது தானே?" என்றான் நந்தா.
"ப்ச்! ரொம்ப பேசிட்டோமோனு எனக்கே ஹர்ட் ஆகுது மாமா.. பாவம் ஆரா! ஆனா நான் சாஃப்ட்டா சொல்லி இருந்தாலும் அவளுக்கு புரியாது.. அவ மனசுல வேற என்னவோ இருக்குமோனு தோணுது.. என்னனு சொன்னா தானே தெரியும்? ப்ச்! அந்த கோபத்துல தான் அதிகமா பேசிட்டேன்.. அழுதாளா என்னனு தெரியல.." என்று ஆரா வீட்டைப் பார்க்க, அங்கே மேலே முழுதாய் அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
"ம்ம் நீ இப்ப கொஞ்ச நாளாவே அதிகமா தான் பேசுற! ஆனா பேச வேண்டிய இடத்துல பேசி தானே ஆகணும்?" என்ற நந்தா,
"ஏன்டா நான் பாவம்னு சொன்னேன் முறைச்ச.. இப்ப பாவம் ஆரான்ற! ஷ்யப்பா! லவ் பண்றவனுக்கு பிரண்ட்டா மட்டும் இல்ல மாமனாவும் இருக்க கூடாது போலயே!" என்று கிண்டல் பேச,
"ம்ம் ஏன் பேச மாட்டிங்க? வேற யார்கிட்ட நான் ஷேர் பண்ண முடியும்? அதான் கூப்பிட்டேன்.. தர்ஷி, பேபி எல்லாம் என்ன பன்றாங்க? அகி கிளம்பிட்டான் இப்ப சாப்பாடு கொண்டு வந்திடுவான்.." என்று பேச்சை திசை திருப்ப, நந்தாவும் அதற்கு ஒத்து வந்தான்.
யாரிடமாவது பேசி விட்டால் தன் பாரம் கொஞ்சம் குறையாதா என நினைத்த ரகுவிற்கு நொடியும் தாமதம் இன்றி மனதிற்குள் நந்தா முகம் தோன்ற, அழைத்து பேசி வைத்த பின் நிஜமாய் கொஞ்சம் இலகுவாய் தான் இருந்தது.
'ஆரா பேசினத்துக்கு வேற என்ன பதில் பேச முடியும்? யாரா இருந்தாலும் கோபம் வர தான் செய்யும்.. எனக்கு கோபம் வந்தது எல்லாம் தப்பு இல்ல.. புரிஞ்சு வான்னு சொன்னா பிரச்சனை மன்னாங்கட்டினு வாய்க்கு வந்ததை பேசுறா.. இனி பேசுவ!' என மீண்டுமாய் தனக்கு தானே ஒரு புலம்பலை போட்டுவிட்டு தான் தூங்கவே முடிந்தது ரகுவிற்கு.
ஆராத்யாவிற்குமே ஒரு பொட்டு தூக்கமில்லை. அவள் நினைப்பிற்கும் நினைத்ததற்கும் மாறாய் ரகு அவள் முன் இருக்க, அவன் பேச்சுக்கள் யாவும் பெரும் பயத்தை மனதுள் இழுத்தது.
அவன் பேசிய பேச்சுக்களை விட அவன் மனம் அந்த வார்த்தைகளில் தெரிந்திருக்க, இவன் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை சொன்னதை செய்வான் என்பதை புரிய வைத்தது. அது மேலும் நடுக்கத்தை தான் கொண்டு வந்தது.
எத்தனை யோசித்தாலும் அவனிடமே சென்று விடேன் என்று கெஞ்சும் மனதின் பேச்சை மட்டும் கேட்பதாய் இல்லை ஆராத்யா.
மனம் தனக்கு வேண்டியதை மட்டும் தான் நினைத்துக் கொண்டிருக்கும்.. மூளை தான் நிஜத்தை எடுத்து சொல்லும்.
ஆசைக்கு செய்துவிட்டு பின் அனைவரின் பார்வைக்கும் தான் கேலிக்கு உள்ளாகி நிற்பதை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நந்தா தர்ஷினி அருகே அமர்ந்து ரசித்து பார்த்திருந்த அந்த தருணம் இப்பொழுதும் கண்களுக்குள் நிற்க, அவரை எப்படி சந்தேகம் கொள்ள முடியும்? என்று கேள்வி கூடவே ரகுவின் நியாயமான கேள்வியும் நியாபகத்தில்.
எல்லாரும் எப்பவும் சரியா இருப்பாங்களா? என்று தான் கேட்டதன் விளைவு தான் நந்தாவை வைத்து ரகு அப்படி பேசியது என்று புரிந்தாலும் தன்னால் ரகுவுக்கு முழு மனதோடு சம்மதம் சொல்ல முடியும் என்று மட்டும் தோன்றவே இல்லை.
'இப்ப என்ன செய்யலாம்னு இருக்க ஆரா?' தன்னைத் தானே கேட்டுக் கொண்டவளுக்கு பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் தோன்றியது.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் மனது அவளை மாற்ற போராட, அதன் பேச்சை கேட்கவே மாட்டேன் என இருந்தவளுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாக தான் முடிந்தது.
உறக்கம் சரியாய் வராமல் இருந்த ஆராத்யா, அடுத்த நாள் காலை எழுந்ததும் பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்ற நினைவில் அம்பிகாவிற்கு முன்பே எழுந்து சமையலை தானே செய்துவிட்டு சீக்கிரமே கிளம்பியும் வந்துவிட்டாள்.
ஸ்ருதி கணவன் வந்திருக்கும் நேரம் என்பதால் அந்த நேரங்களில் அவர்களுடன் பெரும்பாலும் இருப்பதில்லை ஆராத்யா. அவர்களுக்கான தனிமையில் தலை கொடுப்பதில்லை.
இப்பொழுதும் அம்பிகாவிடம் கூறிவிட்டு கிளம்ப தயாராக, "இன்னும் மூணு மாசத்துல மாப்பிள்ள வந்து ஸ்ருதியையும் அஜயையும் அங்கேயே கூட்டிட்டு போறாராம் ஆரா! அது விஷயமா தான் வெளில கிளம்பிட்டு இருகாங்க நினைக்குறேன்.. இன்னும் ரூம்ல இருந்து வெளில வரல!" என்ற அம்பிகாவிற்கு சந்தோசம் தான் என்றாலும் மகளை பிரிவதில் கவலை இல்லாமல் இல்லை.
"ஏற்கனவே எதிர்பார்த்தது தானே ம்மா? அவங்க சந்தோசமும் முக்கியம் இல்லையா? உங்களையும் தானே கூப்பிடுறாங்க!" என்று புன்னகையுடன் ஆராத்யா கேட்க,
"நமக்கெல்லாம் அங்க சரிப்பட்டு வராது டா.. நம்ம சாவு நம்ம இடத்துல தான் இருக்கனும்.. என்னவோ வயசாகிட்டு இல்ல.. அதுல எல்லாம் மனசு ஒத்து வரல.. அதான் சொந்த ஊருல ஒரு ஓட்டு வீடு இருக்கே! என் ஒருத்திக்கு அது போதும்.. இந்த பய அஜய் தான் காலுக்குள்ளயே சுத்தி வருவான்.. எப்படி தான் பார்க்காம இருக்க போறேனோ?" என்றவரின் ஏக்கமும் புரியாமல் இல்லை.
"அஜய் இல்லாம எனக்குமே என்ன பண்ண போறேன்னு தெரியல ம்மா.. உங்க கஷ்டம் புரியுது!" என்றவளுக்கு இன்னும் மூன்றே மாதத்தில் தனிமை என்ற நினைவு கலக்கத்தை கொடுக்காமல் இல்லை.
"நான் ஒருத்தி! வெளில கிளம்புன பொண்ணை புடிச்சு பேசிகிட்டு இருக்கேன்.. சாப்பிட்ட தான? பார்த்து போய்ட்டு வா!" என்று சொல்லவும் சரி என தலையசைத்தவள் அம்பிகாவைப் பற்றிய நினைவோடு வெளியே வந்தாள்.
அந்தந்த வயதில் துணை என்று இல்லை என்றால் தன் இஷ்டம் என்று சந்தோஷப்பட முடிவதில்லை.. இதோ அம்பிகா கூறினாரே! 'இருக்கும் வரை அங்கே இருந்துவிட்டு போகிறேன்!' என்று.
வாழ்க்கை குறித்த ரசனையை அனுபவிக்க ஆணோ பெண்ணோ தன் வாழும் காலம் வரை ஒரு துணை தேவை தானே என தோன்ற, அம்பிகாவை நினைத்து கவலை கொண்டவளுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு பின் தான் என்ன செய்ய போகிறோம் என தோன்றவில்லை.
அந்த நினைவில் வெளியே வர, அவளது வண்டி அங்கே நிற்கவும் அதை எதிர்பாராதவள் எதுவோ தோன்ற திரும்பிப் பார்க்க அங்கே நந்தா நின்றான்.
தர்ஷினியோடு இரவு மருத்துவமனையில் இருந்தவன் காலை அகிலனோடு அம்மாவும், அத்தை மகேஸ்வரியும் சாப்பாடு எடுத்து வரவும் அவர்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு குளித்து கிளம்பி வரலாம் என வந்திருக்க,
ரகு வந்ததும் சொல்லி இருந்தான் ஆராத்யா வண்டியை எடுத்து வந்ததை.
வீட்டின் வாசலில் நின்ற நந்தா ஆராத்யா வெளியே வருவதை பார்த்ததும் தானும் கேட் அருகே வர, அவள் பார்க்கவும் அனைத்தும் கூறினான்.
"வண்டி சரி ஆகிடுச்சு மா.. நைட்டே மெக்கானிக் எடுத்துட்டு வந்துட்டான்.. லேட் நைட் ஆகிடுச்சு.. அதான் உன்கிட்ட சொல்ல முடியல!" ரகு சொல்லியதை அப்படியே நந்தா சொல்ல,
"தேங்க்ஸ் ண்ணா!" என்றவள் மறக்காமல்,
"எவ்வளவு ஆச்சு?" என்று கேட்க,
"அது தெரிலயே! ரகுகிட்ட தான் கேட்கணும்!" என்று அவள் முகம் பார்க்க,
"ஓஹ்! ஓகே ண்ணா! நான் சார்கிட்ட கேட்டுக்குறேன்.. தர்ஷ், ஏஞ்சேல் எப்படி இருக்காங்க!"
"ம்ம் நல்லா இருக்காங்க!" என்று புன்னகையோடு சொல்ல, அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள் வண்டியில்.
நந்தாவும் ரகுவிடம் சொல்ல, "எப்ப பாரு இதே வேலையா போச்சு இவளுக்கு! எவ்வளவு கேட்டாலும் குடுத்துடுவாளாமா?" என்று ரகு பொங்க,
"அடேய் யப்பா! காலையிலே உங்க ஆட்டத்துக்கு நான் வரல டா சாமி.. சும்மா அந்த பொண்ணுகிட்ட வம்புக்கு நீக்காத.. அது சொந்த பைக்.. தன்மானம், சுயமரியாதை இருக்குற எல்லாரும் கேட்குறது தான்.. அதுவும் இவ்வளவு அந்த பொண்ணை பத்தி தெரிஞ்சும் நீ குதிக்கலாமா? ரிலாக்ஸ்சா டீல் பண்ணு டா!" என்று சொல்லி இருந்தான் நந்தா.
'ப்ச்! இவ என்னை என்ன பண்ணிட்டு இருக்குறா தெரியுமா?' என முணுமுணுத்துக் கொண்டவனுக்கு அதை நந்தாவிடம் சொல்ல முடியவில்லை.