அத்தியாயம் 29
அடுத்த நாளும் ரகு அலுவலகம் செல்லவில்லை. விஷாலிடம் அழைத்து நடப்பவற்றை கேட்டுக் கொண்டும் அவனுக்கு சிலவற்றை தெளிவுபடுத்திக் கொண்டும் இருந்தான்.
புது ப்ராஜெக்ட் வேலைகளும் கொஞ்சம் தாமதமாகி இருக்க, தங்களுடன் இணையும் புதிய குழுவிற்கு அந்த தொழில் சம்மந்த வேலைகளை கற்று கொடுப்பதற்காக என இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுடன் ரகுவுமே வெளிநாடு செல்ல வேண்டிய நிலை.
ஆராத்யா வருகை குறித்து ரகுவும் இன்னும் எதுவும் பேசாமல் இருக்க, ஆராத்யாவும் அதை பேசவில்லை என்றதும் விஷாலும் எதுவும் பேசவில்லை ரகுவிடம் அதைப் பற்றி.
ஆனால் வேலைகள் மட்டும் கொஞ்சம் அதிகமாகி இருக்க, அதில் மற்றவர்களை பிஸியாக்கி இருந்தான் தொடர்பில் இருந்தே.
முடிந்தவரை வீட்டில் இரவு நேரத்தில் என்று வேலையை கவனித்தாலும் தர்ஷினி வீடு திரும்பும் வரையாவது குடும்பத்துடன் நேரம் செலவிட கணக்கிட்டு அதற்கேற்றபடி வேலையையும் பகிர்ந்து இருந்தான் விஷால் மூலம்.
மாலை நான்கு மணி அளவில் கலந்தாய்வு இருப்பதாக விஷால் ஆபீஸ் மெயில் மூலம் தகவல் அனுப்பியவன் "நியூ ப்ராஜெக்ட் கேண்டிடெட்ஸ் ஒன்லி" என்றும் அனுப்பி வைத்தான்.
"அதை நேர்ல கூப்பிட்டு அவங்களுக்கு மட்டும் சொல்றது தானே? இதுக்கு ஒரு மெயில் வேற!" என்ற விக்ரமிற்கு,
"அது ஒன்னும் இல்ல டா.. நாளைக்கு ராம் சார் வந்து நேத்து என்ன பண்ணீங்கனு கேட்டா இந்த மெயிலை தூக்கி காட்டி எஸ்கேப் ஆகிடலாம் இல்ல.. அதுக்கு தான் டி எல் அனுப்பி இருப்பார்!" என்று சொல்லி இருவரும் சிரித்தனர்.
"ஆமா ஆரா ப்ராஜெக்ட்ல ஜாயின் பண்ண போறதா சொன்னாளே என்னாச்சு?" பிரேம் கேட்கவும் தான் விக்ரமும் நியாபகம் வந்தவனாய்,
"எனக்கும் எதுவும் தெரியல.. கார்த்திகிட்ட தான் கேட்கணும்!" என்றான்.
"அதான் ஆரா வந்துட்டாளே! அவகிட்டயே கேட்டுடலாம்.." என்று சொல்லி இருவரும் அவள் அருகே வர,
"என்ன டா ரன் பண்ணிட்டிங்களா என்ன? பிரீயா சுத்துறீங்க?" என்று பார்த்ததும் கேட்டாள் கார்த்திகா.
"விஷால் சார் வெளில போய்ட்டார்.. அதான் நாங்க எழுந்துட்டோம்!"
"அதானே பார்த்தேன்.. பிரேம்! இங்க என்ன எரர்னு பாரேன்!" என்று கார்த்திமா தன் கணினி முன் அழைக்க,
"விஷால் சார் வந்த அப்புறம் என்கிட்ட கேளு.. இதை வச்சு கூட கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்குவோம்" என்றவன் அமைதியாய் வேலையில் இருந்த ஆரா அருகே வந்தான்.
"ஆரா!" என்று அழைக்கவும்,
"சொல்லு டா!" என்றவள் கவனம் முழுதும் கணினியில் இருக்க,
" நியூ ப்ராஜெக்ட் என்னாச்சு?" என்றதில் வேலையை நிறுத்தி அவர்கள் புறம் திரும்பினாள்.
"ஆமா டி! நானும் மறந்துட்டேன்.. அன்னைக்கு ராம் சார் எங்க டிஎல்லை கடிச்சிடுவாரோனு பார்த்தேன்.. அவ்ளோ கத்தினார் நீ வர்றனு சொன்னதும்.." என்று இரு பொருளாய் கார்த்திகா கூற,
"சார் ஓகே சொல்லிட்டாரா ஆரா? அப்ப நீ ஃபாரின் போறியா?" என்றான் விக்ரம்.
"ம்ம்ஹும்.. போகல!" என்றவள் மீண்டும் வேலையில் திரும்ப,
"சார் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா?" என்றாள் கார்த்திகா.
"இல்ல.. நானே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நான் இப்ப போனா அவனுக்கு பயந்து போற மாதிரி இருக்குமே! அதான்.. " இவர்கள் புறம் திரும்பாமலே அவள் பதில் சொல்ல,
"என்ன டி உன் சொந்த கம்பெனி மாதிரி வர்றேன் வரலனு விளையாடுற.. ராம் சார் நீ வர்றனு நினைச்சுட்டு இருந்தா? அதுக்கான ப்ரோசீஜர் பார்ப்பாங்க தானே?" கார்த்திகா கேட்க,
"அவங்க தான் எதுவும் சொல்லலனு டிஎல் சொன்னாரே!" ஆராத்யா.
"சரி தான்.. ஆமா நீ தெளிவா தானே இருக்க?" என்று கேட்கவும் ஆரா அமைதியாய் இருக்க,
"எங்கேயோ இடிக்குதே!" என்றாள் கார்த்திகா பிரேம் விக்ரமைப் பார்த்து.
"உனக்கு அடிக்கடி இடிச்சிக்கும்.." விக்ரம் சொல்லிவிட்டு,
"எதுக்கும் டிஎல்கிட்ட ஒரு டைம் பேசிடு ஆரா! அப்புறம் ராம் சார் மறுபடியும் அவரை தான் வச்சி செய்வார்!" என்று சொல்லி,
"கார்த்தி! காபி போலாமா?" என்று கார்த்திகாவிடம் கேட்க,
"ஆரா! வா போலாம்!" என்று அவளையும் அழைத்துக் கொண்டு நால்வருமாய் சென்றனர்.
எப்படியும் ரகு சம்மதம் சொல்லி இருக்க மாட்டான் என்றொரு நம்பிக்கை ஆராத்யாவிற்கு. அன்று குழப்பத்தில் கோபத்தில் பயத்தில் தானும் வருவதாய் சொல்லியிருக்க, இப்பொழுது ரகு சொன்னதை போல ஓடி ஒழிந்து என்ன ஆக போகிறது என்றொரு மனநிலை.
ஆராத்யா நினைத்ததை போல தான் ரகுவும் ஆராத்யாவை அந்த குழுவினுள் நுழைக்கவில்லை. பெயர் பட்டியலுடன் அனைவரும் கிளம்ப தேவையானவை என சில குறிப்பு அவன் விஷாலிடம் கொடுக்கும் பொழுது அதில் நால்வருடைய பெயர்களோடு ரகு பெயரே இருக்க, ஆராத்யா கேட்கவில்லை என்றதும் விஷாலும் அதை பெரிதுபடுத்தவில்லை.
தர்ஷினி குழந்தை பிறந்த மூன்றாம் நாள் அன்று மாலை கல்பனா அகிலனுடன் வீட்டிற்கு கிளம்பி இருக்க, நந்தா தாய், தந்தையை ஊருக்கு அனுப்பி வைக்க தர்ஷினியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். ரகுவும் மகேஸ்வரியும் இருக்க, தர்ஷினி எழுந்து அமர்ந்து தாயுடன் பேசிக் கொண்டிருந்தாள் குழந்தையைப் பற்றி.
ஆராத்யா வந்ததும் அறைக் கதவை திறக்க, உள்ளே அதன் அருகிலேயே மொபைலைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ரகு திரும்பிப் பார்த்துவிட்டு ஆராத்யா தான் என்றதும் குனிந்து கொள்ள,
"வா ஆரா!" என்ற தர்ஷினி அழைப்பில் தான் ரகுவிடம் இருந்து பார்வையை திருப்பினாள் ஆராத்யா.
"தூங்கிட்டாங்களா மேடம்!" என்று குழந்தையை பார்த்தபடி தர்ஷினி அருகே அமர்ந்து ஒரு கவரை நீட்ட,
"என்ன ஃபர்மாலிடி எல்லாம்?" என்றாள் தர்ஷினி.
"தர்ஷ்க்கெல்லாம் அதுல எதுவுமில்ல.. நான் ஏஞ்சேலுக்கு தான் ட்ரெஸ் வாங்கிட்டு வந்தேன்.." என்று குழந்தையைப் பார்த்தே கூறியவள்,
"அழுறாளா? உங்களுக்கு இப்ப ஓகேவா? இன்னும் வலி இருக்குதா?" என்று கேட்க,
"ஆமா நைட்னா தூங்குறதே இல்ல.. பகல்ல ஓரளவு ஓகேவா இருக்குறா..!"
"நீ ஏன் டா இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அலையுற?" என்று மகேஸ்வரி கேட்க,
"இதுல என்ன ம்மா இருக்கு? நான் வேற யாரை இப்படி எல்லாம் பார்க்க போறேன்?" என்று சாதாரணமாய் சொல்லி தர்ஷினியைப் பார்த்து கண் சிமிட்ட, மகேஸ்வரியோடு, ரகுவுமே ஆராவின் புறம் திரும்பி இருந்தனர் அவள் பதிலில்.
"என்ன பேச்சு ஆரா இதெல்லாம்?" என்ற தர்ஷினி,
"ஆமா பிரியாணி என்னாச்சு?" என்று கேட்டு வைக்க,
"நான் என்ன பண்றது? அதுக்குள்ள ஏஞ்சல் அவசரப்பட்டு வெளில வந்துட்டாங்களே! விடுங்க.. இன்னொரு ஆறு மாசம் தானே? அப்புறம் எல்லாம் சாப்பிடலாம்ல?" என்று கேட்டு சிரிக்க,
"அது சரி! ஒரு பிரியாணிக்கு நான் ஆறு மாசம் வெயிட் பண்ணனுமா?" என்று சிரித்தாள் தர்ஷினி.
ஆராத்யா அங்கே இருந்த ரகுவை கண்டு கொள்ளவே இல்லை. அவள் கவனம் முழுதும் தர்ஷினியோடு குழந்தையிடம் மட்டுமே இருக்க, ரகுவும் பேசவில்லை என்றாலும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் அவர்கள் பேச்சை.
"இரு டா ம்மா.. நான் போய் உனக்கு எதாவது வாங்கிட்டு வர்றேன்..!" என்று மகேஸ்வரி எழுந்து கொள்ள,
"இல்ல ம்மா.. நான் வரும் போது தான் காபி சாப்பிட்டேன்!" என்று ஆராத்யா மறுக்க,
"அடடா நம்பிட்டேன்.. காபி தானே? சாப்பிடலாம்.. ம்மா நீங்க இருங்க.. ரகு நீ போய் வாங்கிட்டு வா!" என்று தர்ஷினி சொல்ல,
"அய்யோ தர்ஷ் ப்ளீஸ்!" என்றாள் ஆராத்யா.
இடையே மருத்துவர் வருவதாக சொல்லி செவிலியர் வந்து அனைவரையும் வெளியே இருக்க சொல்ல, மகேஸ்வரி மட்டும் உள்ளே இருக்க அனுமதி தரவும்,
"ரகு! இந்த பிளாஸ்க்ல பால் வாங்கிட்டு வா.. சக்கரை வேண்டாம்.. தர்ஷிக்கு குடுக்கணும்.. ஆரா நீயும் கூட போய் எதாவது குடிச்சுட்டு வா!" என்று மகேஸ்வரி சொல்ல, மருத்துவரும் வந்துவிட்டார்.
வெளியே வந்து ஆரா சுவர் ஓரமாய் நின்று கொள்ள,
"வா!" என்று அழைத்தான் ரகுவே.
"இல்ல பரவால்ல சார்! நான் கிளம்பனும்.. டாக்டர் போகவும் சொல்லிட்டு கிளம்புறேன்.." என்று சொல்ல,
"ஒன்னும் பிரச்சனை இல்ல.. உன் காசுலயே காபி சொல்லிக்கோ.. அதான் மெக்கானிக் காசுக்கு ட்ரெஸ்ஸோட வந்துட்டியே!" என்றவன் முன்னே செல்ல, சட்டென்று புரிந்ததில்,
"அச்சோ அதெல்லாம் இல்ல சார்! நான் தர்ஷி பாப்பாக்காக தான் நானா வாங்கினேன்.. அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல!" என்றபடி அவன் பின்னே ஓடினாள்.
"எப்பவும் இப்படி தான் பேசுவியா?" என்று கேட்டபடி நடையை நிறுத்தாமல் வேகமாகவே சென்றான் ரகு..
அவளுக்கு அது வேகம் தான். அவன் நடைக்கு இவள் ஓட வேண்டி இருந்தது.
"என்ன?"
"அதான் என்னவோ சொன்னியே வேற யாரை பார்க்க போறேன் இந்த மாதிரின்னு!"
"நிஜம் தானே? நான் வேற யாரை..." என்று சொல்ல வந்தவள், இவனிடம் ஏன் சொல்ல வேண்டும் என்பதை போல பேச்சை நிறுத்த, திரும்பிப் பார்த்தவனும்,
"இவனெல்லாம் ஒரு ஆளா.. இவனுக்கு பதில் சொல்லனுமா? ஆபீஸ்ல தானே இவன் எம்டி.. இதானே உன் மண்டையில ஓடுது?" என்று கேட்டும் நடக்க,
"அய்யோ அப்படிலாம் இல்ல சார்.." என்றவள் அவனின் பேச்சில் பேச முடியாமல் தவித்தாள்.
"சிட்!" என்று ஒரு இடத்தை காண்பித்துவிட்டு, பிளாஸ்க்குடன் அவன் உள்ளே செல்ல,
"வாயில சனி தான் டி உனக்கு.. இன்னைக்கு வராமலே இருந்திருக்கலாம்!" என தனக்கு தானே சொல்லிக் கொண்டவள்,
"இல்ல இல்ல! தர்ஷ்காக தானே வந்தேன்.. பேபியை பார்க்க தான் நான் வந்தேன்.." என்றும் தனக்கே சொல்லிக் கொள்ள, எதிரே இருந்த டேபிளுக்கு அடுத்து இருந்த சேரில் வந்து அமர்ந்தான் ரகு.
"சோ! ஹாப்பி தானே? இன்னும் ஒரு ஒரு மாசம் என் தொந்தரவு இருக்காது.." என்று ரகு ஆரம்பிக்க,
"சார்?" என்றாள் புரியாமல்.
"விஷால் சொல்லல?" ரகு கேட்க, இல்லை என்று அவள் தலையாட்டவும்,
"நியூ ப்ராஜெக்ட் விஷயமா நானும் அப்ராட் போறேன்.. அதான் உனக்கு ஹாப்பியா இருக்குமே?" என்று அவன் சொல்லவும், புதிய தகவல் தான் என்றாலும் பதில் கூறவில்லை அவள்.
காபி வரவும் அவள் எடுத்துக் கொள்ள, தானும் தன்னுடையதை எடுத்துக் கொண்டவன் அமைதியாய் பருகி முடித்தனர்.
ஆராத்யா எழுந்து கொள்ள, "ஆரா!" என்றவன் அழைப்பில் அவள் நிமிர்ந்து பார்க்க,
"நீ எதாவது...." என்று கேட்க வந்து,
"ப்ச்! நத்திங்!" என்று கிளம்பிவிட்டான்.
பேச என்னென்னவோ இருந்த போதும் பேசும் காலம் நெருங்கிடாமல் இருக்க, இப்படி நேரமும் இருவரையும் சோதித்துக் கொண்டிருந்தது சந்திக்க வைத்து.
தொடரும்..